1 month 1 week ago
05 Dec, 2025 | 05:28 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார். இதன் விளைவை அவர் வெகுவிரைவில் உணர்வார். பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்லாமல் புலம்பெயர் தேசத்தின் உறவுகளின் பணத்தில் கொழும்பில் தனி வீட்டில் சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டு இவர் ஏனையவர்களின் மீது குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார். இது எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனர்த்தத்தால் வடக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமைகளின் போது முப்படை வீரர்கள் இன, மத பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்கூட காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு தரப்பினருக்கு கௌரவமளிக்கிறோம். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ அல்லது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தராது, அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு மாடி வீட்டில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. அப்படிப்பட்டவர் தான் தற்போது யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார். யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத் தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்கவிளைவுகளை அவர் வெகுவிரைவில் உணருவார். எமது அமைச்சரையும் வாழ்த்த வேண்டும். அவர் மலையகத்தில் சேவை செய்ய வேண்டும். அங்கு அமைச்சர் இன்னும் உத்வேகத்தில் செயற்படுவார். சிலர் அரசியல் நோக்கத்திற்காக எமது அமைச்சரின் உடை தொடர்பில் கேலி செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு ஆடை கூட எடுக்காமலேயே யாழ்ப்பாணத்திற்கு விரைந்து வந்திருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் கூட உதவினர். மக்களுக்கான பணத்தை மக்களிடமே வழங்கி வருகின்றோம். ஆனால் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் தனது தனிப்பட்ட கணக்கிற்கே பணத்தை பெற்றிருப்பார். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என்றார். யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன் | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 05:28 PM

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்று வரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அனர்த்தத்தால் யாழ்ப்பாணத்துக்கு பாதிப்பில்லை என்று குறிப்பிட்டு அந்த மக்களையே தூற்றித் திரிகிறார். இதன் விளைவை அவர் வெகுவிரைவில் உணர்வார். பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்லாமல் புலம்பெயர் தேசத்தின் உறவுகளின் பணத்தில் கொழும்பில் தனி வீட்டில் சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டு இவர் ஏனையவர்களின் மீது குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார். இது எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனர்த்தத்தால் வடக்கு மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன. அனர்த்த நிலைமைகளின் போது முப்படை வீரர்கள் இன, மத பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைக்கூட காப்பாற்றியுள்ளனர். பாதுகாப்பு தரப்பினருக்கு கௌரவமளிக்கிறோம்.
உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கோ அல்லது இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையோ பார்க்க யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தராது, அந்த மக்களை கைவிட்டு கொழும்பில் புலம்பெயர் தேசத்தின் பணத்தில் அதிசொகுசு மாடி வீட்டில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் புலம்பெயர் தேச உறவுகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும்.
சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை. அப்படிப்பட்டவர் தான் தற்போது யாழ்ப்பாணத்தில் எந்த பாதிப்பும் இல்லையென்று கூறுகின்றார். யாழ்ப்பாண மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இப்போது அந்த மக்களைத் தூற்றியும், கேவலப்படுத்தியும் திரிகின்றார். இது எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளோ, அவர்களின் நிகழ்ச்சி நிரல்களோ தெரியாது. இதன் பக்கவிளைவுகளை அவர் வெகுவிரைவில் உணருவார்.
எமது அமைச்சரையும் வாழ்த்த வேண்டும். அவர் மலையகத்தில் சேவை செய்ய வேண்டும். அங்கு அமைச்சர் இன்னும் உத்வேகத்தில் செயற்படுவார். சிலர் அரசியல் நோக்கத்திற்காக எமது அமைச்சரின் உடை தொடர்பில் கேலி செய்கின்றனர். ஆனால் அவர் ஒரு ஆடை கூட எடுக்காமலேயே யாழ்ப்பாணத்திற்கு விரைந்து வந்திருந்தார். புலம்பெயர்ந்தவர்கள் கூட உதவினர்.
மக்களுக்கான பணத்தை மக்களிடமே வழங்கி வருகின்றோம். ஆனால் சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் தனது தனிப்பட்ட கணக்கிற்கே பணத்தை பெற்றிருப்பார். ஆனால் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என்றார்.
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சினையை வைத்து அரசியல் செய்து பாராளுமன்றம் வந்தவர் இன்றுவரை அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்ய செல்லவில்லை - இளங்குமரன் | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 05:21 PM வளிமண்டலவியல் திணைக்களத்தினர் 15 நாட்களாக முன்னறிவிப்பு விடுத்துக்கொண்டிருந்தவேளை, தூங்கிக்கொண்டிருந்த அரசாங்கம், இப்போது வானிலை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (5) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இந்த முன்னறிவிப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் வெளியிட்டு வந்தனர். வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஊடகங்கள் முன்வந்து, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்கிழக்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றமும் பலத்த காற்றும் வீசுவதோடு, இலங்கையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவித்தனர். இது பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடும் என்று முழு நாட்டிற்கும் தெரிவித்து வந்தனர். ஊடகங்களுக்கு முன்வந்து இது குறித்து தெரியப்படுத்திய காலப்பிரிவில் நாட்டில் மழை காணப்படவில்லை. வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதானிகள் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதானிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி, இந்த புயல் அவதானம் தொடர்பில் மக்களை தெளிவூட்டி வந்தனர். நவம்பர் 11, நவம்பர் 12, நவம்பர் 14 மற்றும் நவம்பர் 17 ஆகிய திகதிகளில் குறித்த அதிகாரிகள் இது தொடர்பாக வெளிக்கொணர்ந்து முன்னறிப்புச் செய்துகொண்டே வந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கூட நவம்பர் 21 மற்றும் நவம்பர் 22 ஆகிய திகதிகளில் இந்த விடயம் குறித்து நாட்டுக்கு அறிவித்தார். நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியைச் செய்து வந்தன. நவம்பர் 11 முதல் நவம்பர் 15 வரை இந்த மோசமான வானிலை நிலைமை தொடர்பிலான விடயங்கள் வெளிவந்தபோதும் கூட, இடர் முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைகளின் செயலற்ற தன்மைக்கான காரணங்கள் யாது என கேள்வி எழுப்புகிறோம். தற்சமயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினரை நோக்கி விரல் நீட்டாமல் இடர் முகாமைத்துவ செயல்பாட்டில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். இந்த சூறாவளி புயலால் இந்த நாட்டு மக்கள் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, அனாதைகளாக விடப்பட்டுள்ளனர். நாட்டில் பல துறைகள் சீர்குலைந்து, மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நேரத்தில், இந்த மோசமான வானிலை குறித்த விடயங்களைச் சரியாக முன்வைத்த அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்களை விடுக்காது, இந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொள்வதே மிக உயர்ந்த கடமையாக அமையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டாம். வெளித்தெரியும் விதமாக இந்த செயல்முறையை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும், விரைவான சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சி கோரியது. ஆனால் அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. இவ்வாறு ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாம் இந்த அவசரகால நிலையை கோரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வளிமண்டலவியல் திணைக்களத்தினர் முன்னறிவிப்பு விடுத்தபோது தூங்கிக்கொண்டிருந்த அரசு, இப்போது திணைக்கள அதிகாரிகளை குற்றஞ்சாட்டுகிறது - சஜித் | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 05:21 PM

வளிமண்டலவியல் திணைக்களத்தினர் 15 நாட்களாக முன்னறிவிப்பு விடுத்துக்கொண்டிருந்தவேளை, தூங்கிக்கொண்டிருந்த அரசாங்கம், இப்போது வானிலை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (5) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், இந்த முன்னறிவிப்பை உரிய தரப்பினர் நவம்பர் 11 முதல் வெளியிட்டு வந்தனர்.
வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஊடகங்கள் முன்வந்து, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்கிழக்கு கடல் பகுதிகளில் கடல் சீற்றமும் பலத்த காற்றும் வீசுவதோடு, இலங்கையின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று தெரிவித்தனர்.
இது பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறக்கூடும் என்று முழு நாட்டிற்கும் தெரிவித்து வந்தனர்.
ஊடகங்களுக்கு முன்வந்து இது குறித்து தெரியப்படுத்திய காலப்பிரிவில் நாட்டில் மழை காணப்படவில்லை. வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதானிகள் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதானிகள் ஊடக சந்திப்புகளை நடத்தி, இந்த புயல் அவதானம் தொடர்பில் மக்களை தெளிவூட்டி வந்தனர்.
நவம்பர் 11, நவம்பர் 12, நவம்பர் 14 மற்றும் நவம்பர் 17 ஆகிய திகதிகளில் குறித்த அதிகாரிகள் இது தொடர்பாக வெளிக்கொணர்ந்து முன்னறிப்புச் செய்துகொண்டே வந்தனர். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கூட நவம்பர் 21 மற்றும் நவம்பர் 22 ஆகிய திகதிகளில் இந்த விடயம் குறித்து நாட்டுக்கு அறிவித்தார்.
நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியைச் செய்து வந்தன.
நவம்பர் 11 முதல் நவம்பர் 15 வரை இந்த மோசமான வானிலை நிலைமை தொடர்பிலான விடயங்கள் வெளிவந்தபோதும் கூட, இடர் முகாமைத்துவ நிலையத்தின் நடவடிக்கைகளின் செயலற்ற தன்மைக்கான காரணங்கள் யாது என கேள்வி எழுப்புகிறோம்.
தற்சமயம் வளிமண்டலவியல் திணைக்களத்தினரை நோக்கி விரல் நீட்டாமல் இடர் முகாமைத்துவ செயல்பாட்டில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். இந்த சூறாவளி புயலால் இந்த நாட்டு மக்கள் தங்கள் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து, அனாதைகளாக விடப்பட்டுள்ளனர்.
நாட்டில் பல துறைகள் சீர்குலைந்து, மில்லியன்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் நேரத்தில், இந்த மோசமான வானிலை குறித்த விடயங்களைச் சரியாக முன்வைத்த அதிகாரிகள் மீது அச்சுறுத்தல்களை விடுக்காது, இந்தப் பேரழிவிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொள்வதே மிக உயர்ந்த கடமையாக அமையும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டாம். வெளித்தெரியும் விதமாக இந்த செயல்முறையை முன்னெடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகவும், விரைவான சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே, அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு எதிர்க்கட்சி கோரியது. ஆனால் அரசாங்கம் ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றது. இவ்வாறு ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த நாம் இந்த அவசரகால நிலையை கோரவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினர் முன்னறிவிப்பு விடுத்தபோது தூங்கிக்கொண்டிருந்த அரசு, இப்போது திணைக்கள அதிகாரிகளை குற்றஞ்சாட்டுகிறது - சஜித் | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 06:25 PM யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என கைதியின் சகோதரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (5) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள். எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார். மறுநாள் 7ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 8ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார். நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது, 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார். தலையில் காயம் ஏற்பட்டு 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள். அண்ணாவிடம் என்ன நடந்தது என கேட்டபோது “எனக்கு அடிச்சு போட்டாங்க” என்று சொன்னார். அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடாமல், என்னை அங்கிருந்து அனுப்பினார். மறுநாள் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்தபோது, அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது. பின்னர் மதியம் தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் எல்லாம் சரி என கூறி மாலையே வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது. நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று. நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு, முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன். யாழ்ப்பாணத்துக்கு சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்டபோது, மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர். பின்னர் அப்பா மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு பஸ் புறப்பட்டுவிடும் என சிறைச்சாலையில் இருந்து, அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார். மறுநாள் அதான். அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம். 11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 7 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர். வைத்தியர்களிடம் கேட்டால், மூளையில் உள்ள சில கலங்கள் இறந்துவிட்டன. அவற்றுக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டும். சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின், நோயாளி சுயநினைவுடன் இருக்கவேண்டும். அண்ணாவிற்கு சுயநினைவு திரும்பிய பின்னரே அதனை செய்ய முடியும். 5 வீதமே அதற்கு வாய்ப்புள்ளது என கூறிவிட்டனர். அண்ணாவிற்கு என்ன நடந்தது என வைத்தியர்களிடம் கேட்டபோது, அதனை தாம் அனுமானிக்க முடியாது என கூறினார்கள். முல்லைத்தீவில் இருந்து தினமும் வந்து போவது சிரமம் என கூறியபோது, அண்ணாவை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் என வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றார்கள். உண்மையில் அண்ணாவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வைத்தியர்களும் கூறுவதாக இல்லை. சிறைச்சாலை நிர்வாகமும் கூறாமல் இருக்கிறார்கள். எமக்கு இது தொடர்பிலான உண்மையை கூறவேண்டும் என தெரிவித்தார். யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா நிலையில்! - உண்மை வெளிப்படவேண்டும் என சகோதரி கோரிக்கை | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 06:25 PM

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேல் கோமா நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என கைதியின் சகோதரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் (5) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள். எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
மறுநாள் 7ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 8ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.
நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்றபோது, 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார்.
தலையில் காயம் ஏற்பட்டு 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள்.
அண்ணாவிடம் என்ன நடந்தது என கேட்டபோது “எனக்கு அடிச்சு போட்டாங்க” என்று சொன்னார்.
அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் விடாமல், என்னை அங்கிருந்து அனுப்பினார்.
மறுநாள் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்தபோது, அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது. பின்னர் மதியம் தலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் எல்லாம் சரி என கூறி மாலையே வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது.
நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.
நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு, முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன்.
யாழ்ப்பாணத்துக்கு சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்டபோது, மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர்.
பின்னர் அப்பா மாலை 6 மணிக்கு முல்லைத்தீவு பஸ் புறப்பட்டுவிடும் என சிறைச்சாலையில் இருந்து, அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார்.
மறுநாள் அதான். அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து, வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம்.
11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 7 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர்.
வைத்தியர்களிடம் கேட்டால், மூளையில் உள்ள சில கலங்கள் இறந்துவிட்டன. அவற்றுக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டும். சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின், நோயாளி சுயநினைவுடன் இருக்கவேண்டும். அண்ணாவிற்கு சுயநினைவு திரும்பிய பின்னரே அதனை செய்ய முடியும். 5 வீதமே அதற்கு வாய்ப்புள்ளது என கூறிவிட்டனர்.
அண்ணாவிற்கு என்ன நடந்தது என வைத்தியர்களிடம் கேட்டபோது, அதனை தாம் அனுமானிக்க முடியாது என கூறினார்கள்.
முல்லைத்தீவில் இருந்து தினமும் வந்து போவது சிரமம் என கூறியபோது, அண்ணாவை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் என வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றார்கள்.
உண்மையில் அண்ணாவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வைத்தியர்களும் கூறுவதாக இல்லை. சிறைச்சாலை நிர்வாகமும் கூறாமல் இருக்கிறார்கள். எமக்கு இது தொடர்பிலான உண்மையை கூறவேண்டும் என தெரிவித்தார்.
யாழ். சிறை விளக்கமறியல் கைதி கோமா நிலையில்! - உண்மை வெளிப்படவேண்டும் என சகோதரி கோரிக்கை | Virakesari.lk
1 month 1 week ago
மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிட்டால் உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி சிகிச்சை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் உடனே முதலுதவி செய்ய வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஈரோட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன், வாழைப் பழம் சாப்பிடும்போது, அது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 4 வயது சிறுவன், மாத்திரை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், இதற்குரிய முதலுதவியை உடனே செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மேலும், குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக உணவை ஊட்ட வேண்டுமென அறிவுறுத்தும் மருத்துவர்கள், யாராயினும் உணவை நன்கு மென்று கவனமாக உண்பதோடு, சாப்பிடும் நேரத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்த சிறுவன் ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதிக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று இரவு, தமது இரு குழந்தைகளுக்கும் மகாலட்சுமி வாழைப் பழத்தை ஊட்டியுள்ளார். அதைச் சாப்பிடும்போது சாய் சரணுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் இது குறித்து விளக்கிய ஈரோடு அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சசிரேகா, ''அந்தச் சிறுவனை வீட்டிலிருந்து 20 நிமிடங்களில் இங்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் இங்கு வரும்போதே உயிர் இல்லை. உணவுக் குழாய்க்குப் பதிலாக மூச்சுக் குழாயில் வாழைப்பழம் சென்றதால் ஆக்சிஜன் நுரையீரலுக்குப் போகாமல் சிறுவன் மூச்சுவிடச் சிரமப்பட்டுள்ளான்" என்று தெரிவித்தார். இந்தக் காரணத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறிய அவர், "உடற்கூராய்வு முடிந்துவிட்டது. சிறுவனுக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லை. சிறுவனின் வாய்க்குள் வாழைப் பழம் அடைத்து இருந்ததைக் கண்டறிந்தோம்'' என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள் (சித்தரிப்புப் படம்) ''இதுபோன்ற நேரங்களில் உடனடியாக முதலுதவி செய்வதுதான் உயிரைக் காக்க ஒரே வழி. இந்தச் சிறுவனுக்கே முதலில் முதலுதவியைச் செய்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். அப்படியில்லாமல், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வரை மூச்சுக்குழாய் அடைபட்டே இருந்தால், எந்த வயதினராக இருந்தாலும், காப்பாற்றுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு," என்று விளக்கினார் மருத்துவர் சசிரேகா. அதேவேளையில், உணவுக் குழாயில் பல்வேறு பொருட்கள் சிக்கியதாக வந்தவர்களை, சிறு சிறு சிகிச்சை முறைகள் மூலமாகவும், அறுவை சிகிச்சைகள் மூலமாகவும் காப்பாற்றியுள்ளதாக, ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லாமல் தடுப்பது எப்படி? கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரையை விழுங்கும்போது, அதுவும் இதேபோல தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தான். மாத்திரை, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கும்போது, சிறுவர்கள் உயிரிழப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை எப்படிக் கையாள்வது என்ற விழிப்புணர்வு இருந்தால் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,Getty Images கோவையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலகிருஷ்ணன் இதுகுறித்துப் பேசியபோது, "எந்த வயதினராக இருந்தாலும், உணவுக் குழாயில் செல்ல வேண்டிய உணவு மூச்சுக் குழாய்க்குச் செல்லும்போது, இந்த விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக" கூறுகிறார். மேலும், இதற்குக் கால தாமதமின்றி உரிய முதலுதவியை உடனே செய்துவிட்டால் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். மருத்துவ ஆராய்ச்சியாளர் எரின் காலமன் எழுதியுள்ள கட்டுரையின்படி, மனித உடலில் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் என கழுத்து மற்றும் மார்பு வழியாக இரு குழாய்கள் செல்கின்றன. அதில் உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு, காற்றுப் பாதையில் செல்வதே சுவாசம் தடைபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணம் என்று அவர் விளக்கியுள்ளார். மனித உடலின் இயக்கவியல் குறித்து விளக்கிய மருத்துவர் பாலகிருஷ்ணன், "மூச்சுக்குழாய் எப்போதும் திறந்திருக்கும், உணவுக் குழாய் மூடித்தான் இருக்கும். உணவு உள்ளே செல்லும்போதுதான் அது திறக்கப்படும், அப்போது மூச்சுக் குழாய் மூடிக்கொள்ளும்" என்றார். "ஆனால், உணவு வருவதை மூளை அறிவுறுத்தி, உணவுக் குழாய் திறக்கப்படுவதற்குள் அவசர அவசரமாக விழுங்கினால், மூடாமல் திறந்திருக்கும் மூச்சுக் குழாய்க்குள் உணவு சென்றுவிடும். அதனால்தான் சுவாசம் பாதிக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Getty Images அதோடு, குழந்தை முதலில் ஊட்டப்பட்ட வாழைப்பழத் துண்டினை விழுங்குவதற்குள் மேன்மேலும் பழத்தைக் கொடுக்கையில், அவற்றை மொத்தமாக விழுங்க எத்தனிக்கையில், இத்தகைய விபரீதம் நேரிட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார். குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் கவனத்துடன், சிறு சிறு அளவில் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் மருத்துவர் சசிரேகா. அதோடு, பல குழந்தைகள், நாணயம், மோமோஸ், பட்டாணி, பாதாம் போன்றவற்றை விழுங்கிவிட்டதாக அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும், ''வேகமாகச் சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது ஆகிய இரண்டு காரணங்களால்தான் இத்தகைய ஆபத்தைச் சந்திக்கிறார்கள். எனவே, அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம்" என்று கூறுகிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். இவை மட்டுமின்றி, சிக்கன் பீஸ் உள்படப் பசை போன்ற தன்மையைக் கொண்ட உணவுகள் தொண்டைக்குள் ஒட்டிக் கொள்வதால், தசைகளின் செயல்பாட்டு நேரம் மாறி, உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் விவரித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர் டிவி, போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது ஆபத்து யாராக இருந்தாலும் சாப்பிடும்போது உணவின் மீது கவனம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் தர்மேந்திரா. "சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் கவனமின்றிச் சாப்பிடும்போது, உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு மூச்சுக்குழாய்க்குச் சென்று புரையேறுதல் நடக்க வாய்ப்புள்ளது" என்கிறார் அவர். மேலும், எந்த உணவையும் நன்கு மென்று விழுங்கச் சொல்லி, குழந்தைகளைப் பழக்குவதும் மிக மிக அவசியமென்று அவர் வலியுறுத்துகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''வாழைப்பழம் அவ்வளவு எளிதில் அடைக்க வாய்ப்பில்லை. ஆனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சாப்பிடும்போது, கவனம் சிதறி மூச்சுக்குழாய் திறந்து அதில் அடைத்திருக்கலாம். குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும்'' என்கிறார். உணவுக் குழாயில் சிக்குவதை சிறு கால அவகாசத்திற்கு உள்ளாகவே எடுத்துவிடலாம் என்று கூறும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் பி.எஸ்.ராஜன், மூச்சுக்குழாயில் ஏதாவது சிக்கிவிட்டால் சில விநாடிகளுக்குள் முதலுதவி தராவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சையை விளக்கும் புகைப்படம் குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவது எப்படி? மாதக்கணக்கில் இருமிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது, அதன் மூச்சுக் குழாய்க்குள் பட்டாணி இருந்ததைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சையில் அகற்றியதாகச் சொல்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். பல்வேறு மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு பட்டாணி, பாதாம் போன்றவற்றை உணவாகக் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறும் அவர், குழந்தைகள் பொம்மைகளில் (Toys) பயன்படுத்தப்படும் பட்டன் பேட்டரிகளையும் வெளிநாடுகளில் தடை செய்துள்ளதாகக் கூறுகிறார். ''இருப்பதிலேயே பொம்மைகளில் பயன்படுத்தும் பட்டன் வடிவிலான பேட்டரிதான் மிக ஆபத்தானது. அதை விழுங்கிய பல குழந்தைகளுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். விழுங்கிய ஒரு மணிநேரத்தில் இருந்து அதிலுள்ள ரசாயனம் கசியத் தொடங்கிவிடும். அது குடல் உள்ளிட்ட பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதால் நம் நாட்டிலும் அது தடை செய்யப்பட வேண்டும்'' என்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன். இதுபோல, சாப்பிடும்போது உணவுப் பொருள் தொண்டையில் சிக்கினாலோ அல்லது வேறு ஏதேனும் பொருளை குழந்தைகள் வாயில் போட்டு அது சிக்கிக் கொண்டாலோ, உடனடியாக ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும். இந்த முதலுதவி குறித்து பிபிசி தமிழிடம் முன்பு விளக்கிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்று விவரித்தார். ஆனால், சிறு குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால், அவர்களைத் தங்கள் தொடை மீது வயிறு அழுத்தியிருப்பது போலப் படுக்க வைத்து, முதுகில் தட்ட வேண்டுமென்று மருத்துவர் அருண்குமார் விளக்கினார். இந்த மிகவும் எளிமையான முதலுதவி முறை பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுவதாகத் தெரிவித்த அவர், "பொது மக்களுக்கும் அதைக் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும்" என்றும் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czxpe0eqwr9o
1 month 1 week ago
05 Dec, 2025 | 01:42 PM கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார். குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தார். இதன்போது, பிரசவ வழி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். பின்னர் குறித்த பெண்ணும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண் | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 01:42 PM

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
குறித்த பெண் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மலேசியா, கோலாலம்பூருக்கு புறப்படுவதற்காக விமான நிலைய போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தார்.
இதன்போது, பிரசவ வழி ஏற்பட்டதால் உடனடியாக விமான நிலைய மருத்துவ சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் அவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
பின்னர் குறித்த பெண்ணும் குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் குழந்தையை பிரசவித்த வெளிநாட்டு பெண் | Virakesari.lk
1 month 1 week ago
5 Dec, 2025 | 02:01 PM டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு நுவரெலியாவில் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை (05) நடத்தப்பட்டது. பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளை நோய் நிலைமைகள் இருந்து பாதுகாக்க அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கால்நடை தீவனம் வழங்குவதற்காக இந்த விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் முதல் கட்டம் இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு இலங்கை குதிரை சங்கத்தால் வழங்கப்பட்டது. இந்த சேவைக்கு இலங்கை குதிரை சங்க உறுப்பினர்கள் மற்றும் விலங்கு பிரியர்கள் ஏராளமானோர் நிதி பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், பேரிடர் நிலைமை தணிந்து சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு மீண்டும் வருகை தரும் வரை இந்த மருத்துவ சேவைகள் பல கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுவரெலியா நகர எல்லை முழுவதும் குதிரை சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சத்தான விலங்கு உணவு மற்றும் மருந்துகள் 50 குதிரைவண்டி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வாறு கையளிக்கப்பட்ட விலங்கு உணவு பத்து நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு போதுமானது. எதிர்காலத்திலும் விலங்கு உணவு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை பேரழிவுகள் காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த ஒரு அளவு மருந்து மற்றும் தடுப்பூசிகளும் குதிரைவண்டி சவாரி செய்பவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாம் மற்றும் விலங்கு உணவு விநியோக நிவாரண சேவையில் பயனடைந்த குதிரை உரிமையாளர்கள், நாடு முழுவதும் பேரிடர் காலத்தில் பல்வேறு நிவாரண சேவைகள் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக இருக்கும் குதிரை உரிமையாளர்களை நாடு மறந்துவிட்டது. இலங்கை குதிரை சங்கம் செய்த உதவிகளுக்குபெரிதும் பாராட்டுகிறோம். நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களின் போது விலங்குகளைப் பராமரிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க நாங்கள் செலவிடும் அதே அளவு பணத்தை இந்த விலங்குகளுக்காக செலவிட வேண்டியிருந்தது, மேலும் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யாரும் இல்லாமல் தவித்தோம், அப்போதுதான் எங்களுக்கு சில ஆதரவை வழங்குமாறு இலங்கை குதிரை சங்கத்திடம் உதவி கோரினோம். சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வந்து எங்கள் பொருளாதாரம் வலுவடையும் வரை அவர்கள் எங்களுக்கு அளித்த உதவிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்காமைக்கு மிகவும் வருத்தம் அடைகிறோம். அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் உதவி கிடைத்தால், எங்களால் முடிந்த அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாடுபடுவோம். பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம் | Virakesari.lk
1 month 1 week ago
5 Dec, 2025 | 02:01 PM

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு நுவரெலியாவில் மருத்துவ முகாம் இன்று வெள்ளிக்கிழமை (05) நடத்தப்பட்டது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளை நோய் நிலைமைகள் இருந்து பாதுகாக்க அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கால்நடை தீவனம் வழங்குவதற்காக இந்த விசேட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் முதல் கட்டம் இன்றைய தினம் நுவரெலியா மாநகர சபையின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு இலங்கை குதிரை சங்கத்தால் வழங்கப்பட்டது.
இந்த சேவைக்கு இலங்கை குதிரை சங்க உறுப்பினர்கள் மற்றும் விலங்கு பிரியர்கள் ஏராளமானோர் நிதி பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பேரிடர் நிலைமை தணிந்து சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவுக்கு மீண்டும் வருகை தரும் வரை இந்த மருத்துவ சேவைகள் பல கட்டங்களாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுவரெலியா நகர எல்லை முழுவதும் குதிரை சுற்றுப்பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் 150க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சத்தான விலங்கு உணவு மற்றும் மருந்துகள் 50 குதிரைவண்டி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இவ்வாறு கையளிக்கப்பட்ட விலங்கு உணவு பத்து நாட்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு போதுமானது. எதிர்காலத்திலும் விலங்கு உணவு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை பேரழிவுகள் காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்த ஒரு அளவு மருந்து மற்றும் தடுப்பூசிகளும் குதிரைவண்டி சவாரி செய்பவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாம் மற்றும் விலங்கு உணவு விநியோக நிவாரண சேவையில் பயனடைந்த குதிரை உரிமையாளர்கள்,
நாடு முழுவதும் பேரிடர் காலத்தில் பல்வேறு நிவாரண சேவைகள் வழங்கப்பட்ட போதிலும், இலங்கை சுற்றுலாத் துறையின் மிகப்பெரிய பலமாக இருக்கும் குதிரை உரிமையாளர்களை நாடு மறந்துவிட்டது. இலங்கை குதிரை சங்கம் செய்த உதவிகளுக்குபெரிதும் பாராட்டுகிறோம்.
நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களின் போது விலங்குகளைப் பராமரிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது,
எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க நாங்கள் செலவிடும் அதே அளவு பணத்தை இந்த விலங்குகளுக்காக செலவிட வேண்டியிருந்தது, மேலும் எங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யாரும் இல்லாமல் தவித்தோம்,
அப்போதுதான் எங்களுக்கு சில ஆதரவை வழங்குமாறு இலங்கை குதிரை சங்கத்திடம் உதவி கோரினோம்.
சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வந்து எங்கள் பொருளாதாரம் வலுவடையும் வரை அவர்கள் எங்களுக்கு அளித்த உதவிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அரசாங்கத்தால் உதவிகள் கிடைக்காமைக்கு மிகவும் வருத்தம் அடைகிறோம்.
அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் உதவி கிடைத்தால், எங்களால் முடிந்த அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.




பேரிடரால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு மருத்துவ முகாம் | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 03:58 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மையின மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வாடி அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் படகுகள் கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார். இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது. அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகைதந்திருந்தனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர். அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார். அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார். மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு | Virakesari.lk
1 month 1 week ago
05 Dec, 2025 | 03:58 PM

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரியதரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பெரும்பான்மையின மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வாடி அமைக்கப்பட்டுள்ளமை மற்றும் படகுகள் கடற்கரையில் சட்டவிரோதமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.
இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கண்டறியமுடிந்துள்ளது.
அத்தோடு OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக்கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இருபடகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமானவகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் நாடாளுமன்ற உறுப்பினரால் இனங்காண முடிந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலக காணிஉத்தியோகத்தர் உள்ளிட்டவர்களுக்கு இந்த விடயங்களைத் தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த பகுதிக்கு அவர்களும் உடனடியாக வருகைதந்திருந்தனர். இந்நிலையில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக தம்மால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் ஆகியோரால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தனர்.
அதன் பிற்பாடு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடமும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவரும் இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் அவர்களையும் நேரடியாகச் சந்தித்து இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.
அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல் பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்த மாவட்ட செயலாளர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரியவகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் இதற்கு முன்னரும் பலதடவைகள் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அச்செயற்பாடுகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தலையீட்டை அடுத்து, உரிய சட்டநடவடிக்கைகளூடாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் மீண்டும் குறித்த சுற்றுலாத்தலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


புலிபாய்ந்த கல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலரால் சட்டவிரோத செயற்பாடு | Virakesari.lk
1 month 1 week ago
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு Dec 5, 2025 - 06:32 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmisvkj4v02f9o29nwa4khtn2
1 month 1 week ago
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு
Dec 5, 2025 - 06:32 PM

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
https://adaderanatamil.lk/news/cmisvkj4v02f9o29nwa4khtn2
1 month 1 week ago
புத்தரை வெள்ளமோ, சுனாமியோ அள்ளிக்கொண்டு போகும்வரை இந்தப்புத்தரால் தமிழருக்கு பதற்றந்தான். புத்தரை வைத்து கொழுத்தாடு பிடிக்கிறவர்களுக்கு, புத்தர் யார், அவரது போதனை, வாழ்வு முறை ஏதும் தெரியாது, அவரைவைத்து நாட்டை கொழுத்துவதும், காணி பிடிப்பதும், வயிறு வளப்பதுமே அவர்களது வேலை. பாராளுமன்றத்தை நாட்டை சுத்தம் செய்வதுபோல் மகாசங்கத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அவர்களது வேலை என்ன, எங்கே அவர்கள் தங்கவேண்டும், ஒழுக்கம், கட்டுப்பாடு, அன்பு, காருண்யம் போன்றவற்றை படிப்பியுங்கள். வளர்க்க முடியாமல் விகாரைகளில் தள்ளிவிடப்படும் சிறுவர்களுக்கு விடுதிகளை ஏற்பாடு செய்து கல்வியை கொடுங்கள், ஒழுக்கத்தை கற்பியுங்கள், புத்தரின் போதனைகளை எடுத்துக்கூறுங்கள். தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் பரீட்சித்து பிக்குகளாக அங்கீகரியுங்கள். சிறுவயதிலேயே என்னவென்று தெரியாத பிள்ளைகளுக்கு காவி தரித்து உலகை ஏமாற்றுவதை, நாட்டை கொழுத்துவதை நிறுத்துங்கள், அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும் சட்ட விலக்களிப்பதையும் நிராகரியுங்கள். இவற்றுக்கு பணிந்து சேவை செய்பவர்களை மட்டும் பிக்குகளாக அங்கீகரியுங்கள். பணிய மறுப்போரை வீட்டுக்கு அனுப்புங்கள். ஓசியில் சாப்பிட்டு திமிர் வளர்ப்பதை தடுத்து, உழைத்து சாப்பிட சொல்லுங்கள். இல்லையேல் புத்தமதம் ஒரு கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள் இந்த சோம்பேறிகள். இப்படியே சென்றால், புத்தமதம் இலங்கையை விட்டு துடைத்தெறியப்படும். அதற்கு இந்த ஒழுக்கமற்ற பிக்குகளும் அவர்களை வளர்ப்பவர்களும் அவர்களுக்குப்பின்னால் ஒளிந்திருப்பவர்களுமே காரணம். இவர்கள்புத்தன்மேல், மதத்தின் மேல்பயமோ, பற்றோ, பக்தியோ இல்லாதவர்கள். மதத்தை தமது சுய லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள். புத்த தர்மம், புனிதம் தெரியாதவர்களே இலங்கையில் பௌத்தர் என்று தம்மை அடையாளப்படுத்துகின்றனர். பௌத்த போதனை அன்பையும் கருணையையும் போதிக்கிறது. ஓடும் குருதியிலும் வடிந்தொழுகும் கண்ணீரிலும் தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதில்லை என்றான் புத்தன். இவர்கள் செய்வதை பார்த்தால், சொல்வதை கேட்க முடிந்தால் அந்த புத்தனே தற்கொலை செய்வான் அல்லது இவர்களை விட்டு ஓடி ஒளிந்து விடுவான். பக்கதர்கள் இல்லாத இடத்தில் ஏக்கர் காணி வேண்டுமாம் புத்தருக்கு. இது ஒரு வேடிக்கை. எந்த மதமும் செய்யாத, விரும்பாத அருவெறுக்கும் செயல். மக்களை துரத்தியடித்துவிட்டு புத்தருக்கு காணி பிடிக்கும் பிக்குகள். இதுக்கு சாதாரண மனிதரை விட, மரியாதை அதிகம் வேண்டுமாம். இல்லையென்றால் சண்டித்தனம் காட்டி, எதிலும் மரியாதை, முன்னுரிமை கேட்குதுகள், இப்படி ஒரு மத குருமாரை கேள்விப்படவே முடியாது.
1 month 1 week ago
இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அலெக்ஸ் டெய்லர் பிபிசி செய்தியாளர் 5 டிசம்பர் 2025, 01:18 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும். பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா? மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார். பட மூலாதாரம்,Getty Images எந்த மருந்து? பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம். இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார். மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. தண்ணீரின் முக்கியத்துவம் பட மூலாதாரம்,Getty Images மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம். இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம். இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார். உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை. மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது. அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது. அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா? பட மூலாதாரம்,Getty Images தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும். சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார். இருமல் வெளியேறட்டும் பட மூலாதாரம்,Getty Images இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது. இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும். "வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும். நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்". பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo
1 month 1 week ago
இருமலின் போது வரும் சளியை விழுங்கினால் ஆபத்தா?

பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
குளிர்கால வைரஸ்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நேரத்தில், இருமலின் சத்தம் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து என எங்கும் நிறைந்திருக்கும்.
பெரும்பாலும் மக்கள் நிவாரணம் பெற இருமல் மருந்துகளை நாடுகிறார்கள். ஆனால் இவை உண்மையில் வேலை செய்யுமா, அல்லது தேன் மற்றும் எலுமிச்சை போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கைவைத்தியங்கள் அதே அளவு பயனுள்ளவையா?
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் சுவாச மருத்துவப் பேராசிரியர் ஜாக்கி ஸ்மித், ரேடியோ 4-இன் 'ஸ்லைஸ்டு பிரெட்' நிகழ்ச்சியில் இதைப்பற்றி விரிவாகப் பேசினார்.

பட மூலாதாரம்,Getty Images
எந்த மருந்து?
பெரும்பாலான இருமல் சளியிலிருந்து (ஜலதோஷத்திலிருந்து) வருகிறது. மேலும் சளி வைரஸ்கள் பொதுவாகத் தானாகவே உங்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். இருமல் மருந்துகள் அடிப்படை வைரஸுக்குச் சிகிச்சை அளிக்க முடியாது, ஆனால் அவை உங்கள் தொண்டைக்கு இதமளித்து, இருமலை வரவழைக்கும் அரிப்பு உணர்வுகளைக் குறைக்கலாம்.
இது வறட்டு இருமலாக இருந்தால், பால்சம்கள் அல்லது கிளிசரால் போன்ற மிகவும் இனிப்பான பாகு (சிரப்) அடிப்படையிலான மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் தொண்டையை இதமளித்து வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.
ஆனால், மலிவான தயாரிப்புகளும் பெரிய பிராண்டுகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இவற்றிற்காக அதிக பணம் செலவழிப்பது பயனற்றது என்றும் அவர் கூறுகிறார்.
இருப்பினும், லேபிளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் சர்க்கரையின் அளவு தான்; இனிப்பான சிரப்புகளில் இது அதிகமாக இருப்பது வழக்கம். இது கவலையளித்தால், சர்க்கரை இல்லாத இருமல் மருந்துகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
இருமலின் அனிச்சை தன்மையை கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் (dextromethorphan) போன்ற சில "உள்ளீடுகள்" (active ingredients) இருமல் மருந்துகளில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இதன் தாக்கம் மிகக் குறைவு என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.
மருந்தின் அளவைப் பின்பற்றுவது எப்போதும் முக்கியம் என்று அவர் மேலும் கூறுகிறார், குறிப்பாக டெக்ஸ்ட்ரோமெதோர்பான் அடிமையாக்கும் வாய்ப்புள்ளதால் இது மிகவும் முக்கியம். "லேபிளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை நீங்கள் நிச்சயமாக மீறக்கூடாது," என்று அவர் அறிவுறுத்துகிறார்.
மறுபுறம், மார்புச் சளிக்கான சில இருமல் மருந்துகளில் காணப்படும் ஒரு மூலப்பொருளான லெவோமெந்தோல் (Levomenthol), தொண்டையின் பின்னால் ஒரு "குளிரூட்டும் உணர்வை" வழங்குகிறது, இது எரிச்சல் உணர்வை மறைத்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது.
தண்ணீரின் முக்கியத்துவம்

பட மூலாதாரம்,Getty Images
மார்புச் சளியாக இருந்தால், பலர் அதிகப்படியான சளியுடனும், இறுக்கமான நெஞ்சுடனும் போராடுவதாக உணரலாம்.
இது சுவாசப் பாதைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற இரண்டாம் நிலை தொற்றுகள் அல்லது மூக்கு மற்றும் சைனஸ்களில் அதிகப்படியான சளி சேர்வதால் வரலாம்.
இதற்கு கடைகளில் கிடைக்கும் சிரப் மருந்துகளை நாடுவது இயல்பானது, ஆனால் அவற்றின் தாக்கம் குறித்து ஐயத்துடன் இருக்குமாறு பேராசிரியர் ஸ்மித் அறிவுறுத்துகிறார்.
உதாரணமாக, குவைஃபெனெசின் என்ற மூலப்பொருள் சளியை தளர்த்தும் என்று கூறப்பட்டாலும், இதற்குத் திட்டவட்டமான ஆதாரம் இல்லை.
மேலும், டிஃபென்ஹைட்ரமைன் போன்ற மயக்கமூட்டும் ஆன்டிஹிஸ்டமின்கள் (ஒவ்வாமைகளை போக்கும் மருந்துகள்) இரவில் நீங்கள் தூங்க உதவலாம் என்றாலும், அவை இருமலுக்குச் சிகிச்சை அளிக்காது.
அதேபோல், தைம் மற்றும் ஸ்குவில் போன்ற தாவரச் சாறுகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஆதாரம் சொற்பமாகவே உள்ளது.
அதற்குப் பதிலாக, மக்கள் "அது சரியாகும் வரை காத்திருக்க" வேண்டும், உடலில் நீர் இருக்கும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு "இருமலைத் தடுக்கும்" மாத்திரைகளை (lozenges) எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே சிறந்த அணுகுமுறை என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார்.
தேன் மற்றும் எலுமிச்சை பயன்படுத்தலாமா?

பட மூலாதாரம்,Getty Images
தேவையான அளவு தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடிய ஒரு சூடான, வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவையானது, வறட்டு இருமலுக்கு கடைகளில் கிடைக்கும் பல மருந்துகளுக்குச் சமமான இதமளிக்கும் விளைவைத் தரும்.
சுதந்திரமான ஆய்வான கோக்ரேன் ரிவியூ, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் இருக்கும்போது, தேன் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்துவது "ஓரளவு பயன் அளிக்கலாம்" என்று பரிந்துரைத்ததாக பேராசிரியர் ஸ்மித் மேலும் கூறுகிறார்.
இருமல் வெளியேறட்டும்

பட மூலாதாரம்,Getty Images
இருமுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம். நமது உடலில் இருந்து சளியை வெளியேற்றுவது அப்படித்தான் நடக்கிறது.
இது சளி கலந்த இருமல் என்றால், அதிகப்படியான சளியை வெளியே துப்புவது சுவாசப் பாதைகளை எளிதாக்கும்.
"வெளியேற்றவேண்டியவற்றை நான் இருமி வெளியேற்றுவேன்," என்று பேராசிரியர் ஸ்மித் கூறுகிறார். "நான் அதை அடக்க முயற்சிக்க மாட்டேன், வெளியே வரட்டும்." நீங்கள் இருமும்போது, கண்டிப்பாக ஒரு டிஸ்யுவை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால் நீங்கள் அதை விழுங்கினாலும், எந்தத் தீங்கும் இல்லை. உங்கள் வயிறு அதை எளிதாகச் செரித்துவிடும்.
நீங்கள் இருமி வெளியேற்றும் சளி அடர் பழுப்பு நிறமாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டும், ஏனெனில் அதில் "சிறிதளவு ரத்தம் இருக்கலாம்".
பெரும்பாலான மார்புச் சளிகள் பொதுவாகச் சில வாரங்களுக்குப் பிறகு ஆன்டிபயாடிக் மருந்துகள் இல்லாமலே சரியாகிவிடும், ஆனால் அது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், மருத்துவரை அணுகுமாறு பேராசிரியர் ஸ்மித் வலியுறுத்துகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/clyx3zv71zlo
1 month 1 week ago
Published By: Digital Desk 3 05 Dec, 2025 | 04:10 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம். சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/232530
1 month 1 week ago
Published By: Digital Desk 3
05 Dec, 2025 | 04:10 PM

(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கடும் மழை காரணமாக மலைப்பாங்கான பிரதேசங்கள் ஈரப்பதனுடையதாகவுள்ளன. இன்று முதல் வடகீழ் பருவ பெயர்ச்சி மழை எதிர்பார்க்கப்படுவதால் அப்பிரதேசங்களில் மண் சரிவு அபாய எச்சரிக்கை நீங்கவில்லை. எனவே அவ்வாறான பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் இருப்பவர்கள் தற்போது தமது இருப்பிடங்களுக்கு திரும்ப வேண்டாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 44 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கண்டியில் கங்காவத்த கோரளை, தெல்தோட்டை, தொலுவ, தொம்பே, தும்பனை, மெததும்பர, மினிப்பே, பஹதஹேவாஹெட்ட, ஹட்டிநுவர, கங்கா இஹல கோரள, அக்குரணை, உடுநுவர, பன்வில, பஹதும்பர, குண்டசாலை, பஸ்பாகே கோரள, ஹதரலியத்த, உடுதும்பர, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ மற்றும் உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, அரநாயக்க, கேகாலை, மாவனல்ல, ரம்புக்கனை, வரக்காபொல, யட்டியாந்தோட்டை மற்றும் புளத்கொஹூபிட்டிய ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் நாரம்மல, பொல்கஹாவெல, மாவத்தகம, ரிதீகம, மல்லவபிட்டிய மற்றும் அலவ்வ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், மாத்தளையில் அம்பன்கங்க கோரளை, நாவுல, மாத்தளை, பல்லேபொல, உக்குவெல, லக்கல பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை மற்றும் வலிகமுவ பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர பதுளை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள 29 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 26 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான நிலைமை இன்னும் நீங்கவில்லை. எனவே, வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தற்போது தங்கியிருக்கும் பாதுகாப்பான இடங்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாறை விழுதல், நிலச்சரிவு மற்றும் அச்சுறுத்தும் நிலைமைகள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், 50 மி.மீ அல்லது 100 மி.மீ மழையைத் தாண்டினால், ஏற்கனவே நிலச்சரிவுக்கான அறிகுறிகள் உள்ள இடங்களில் ஆபத்து மீண்டும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், அந்தப் பகுதிகளில் ஆய்வு நிறைவடையும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆய்வுகள் மாவட்ட செயலாளர்களின் முன்னுரிமைப்படி நடைபெறுவதால், இதற்குச் சில நாட்கள் ஆகலாம்.
சுவர்களில் விரிசல் போன்ற சேதங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டால், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிறுவனங்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவார்கள் என்றார்.
https://www.virakesari.lk/article/232530