Aggregator

“எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்” -அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

1 month 1 week ago
நோபல் பரிசு கிடைக்காததைப்பற்றி கவலைப்படாதவர், ஏன் அது பற்றி விவரிக்கிறார்? அப்போ நோபல் பரிசினை எதிர்பார்த்தா இதெல்லாம் செய்தார்? பரிசு என்பது கேட்டு வாங்கப்படாது, அவர்களாகவே உங்களது செயற்பாடுகள் அந்த பரிசுக்கு தகுதியாய் இருந்தால் தருவார்கள் சேர்! கவலை வேண்டாம், தொடர்ந்து நல்லது செய்ய முயற்சியுங்கள்.

பொப்பி என்பது புனைபெயர் - ஷோபாசக்தி

1 month 1 week ago
பொப்பி என்பது புனைபெயர் ஷோபாசக்தி பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி. அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டுமே அவளுக்கு ‘பொப்பி’ என்ற புனைபெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால், அவளைக் குறித்து மூன்று விவரங்களை முன்கூட்டியே வாசகர்களுக்குச் சொல்லிவைக்க முடியும். அவளுக்கு அப்போது இருபது வயது. ஆங்கில மொழி பேசக்கூடியவள். ஆங்கில மொழியைப் பேசும்போது, B மற்றும் V ஒலியை அவளால் உச்சரிக்க முடியாது. கலே நகரத்தில் இருந்த ‘ஜங்கிள்’ அகதி முகாமில் அவள் காணப்பட்டாள். கருமையான சுருள் தலைமுடியும் வெளிறிய சருமமும் கொண்ட பொப்பி சற்றுக் குள்ளமானவள். அவளது முழுவட்ட முகத்தில் தலைமுடி சுருள் இழைகளாய் விழுந்து பேரிச்சம் பழங்கள் போன்றிருக்கும் அவளது கண்களின் ஓரங்களை மறைக்கும். அவள் பேசும்போது, சிவந்து தடித்த கீழுதடு ஒருபுறமாகக் கோணிக்கொள்வது போலிருக்கும். எப்போதுமே அவளுடைய குரல் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல் அவளுடைய குரலில் எதிரொலியும் கலந்திருக்கிறது. அவளுடைய தங்கையும் உருவத்தில் ஏறக்குறைய பொப்பியைப் போலவே இருந்தாள். தங்கைக்குப் பதினைந்து வயதிருக்கும். சகோதரிகள் இருவரும் ஆந்ரே பணியாற்றிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைக்கு முதன்முதலாக வந்தபோது, ஆந்ரே கைகளில் விரித்து வைத்திருந்த செய்தித்தாளுடன் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தான். பிறந்ததிலிருந்தே உற்சாகமற்ற மனநிலையுடனும், நான் ஏன்தான் எப்போதுமே சோகமாக இருக்கிறேன் எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டுச் சோகத்தைப் பெருக்கியவாறும் இருக்கும் ஆந்ரே காலையில் ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்து வைத்துக்கொண்டு, மதியம் பன்னிரண்டு மணிவரை ஒரேயொரு வாடிக்கையாளர்கூட வராத இடத்தில் தூங்குவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும்! சில மாதங்களுக்கு முன்புவரை கலே நகரத்தின் இந்தக் கடற்கரை உல்லாசப் பயணிகளால் நிரம்பித் ததும்பியது. அவர்களைக் குறிவைத்துக் கடற்கரை வீதியில் நான்கைந்து ‘பணப் பரிவர்த்தனை’ கிளைகள் இருந்தன. இப்போது, ஆந்ரே பணியாற்றும் இந்தக் கிளை மட்டுமே இருக்கிறது. கலே கடற்கரை, அகதிகளாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தும் பிரெஞ்சு சிறப்புக் காவல்படையினராலும் மட்டுமே இப்போது நிறைந்துள்ளது. வடக்கு பிரான்ஸின் விளிம்பில் கலே நகரம் இருக்கிறது. இந்த நகரத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஆங்கிலக் கால்வாயில் விரிந்து கிடக்கும் டோவர் நீரிணையின் நீளம் முப்பத்து மூன்று கிலோ மீட்டர்கள். இந்த நீரிணை மிக ஆழமானது. வருடம் முழுவதும் குளிர்ந்த நீரைக் கொண்டது. இந்த அபாயமான நீரிணையைக் கடந்து இங்கிலாந்துக்குச் செல்வதற்காகப் பத்தாயிரம் அகதிகள் கலே நகரத்தில் காத்திருக்கிறார்கள். திடீரெனக் குவிந்த இந்த அகதிகளால் நகரத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது. நகரத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் ஒரு அகதி இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பாக அந்த நகரம் சந்தித்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடி இதுவே என்று நகர மக்கள் பேசிக்கொண்டார்கள். சுற்றுலாப் பயணிகள் கலே நகரத்திற்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அவர்களை நம்பியிருந்த பல தங்கும்விடுதிகளும் உணவகங்களும் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. இதனால் நகரத்து மக்கள் பலருக்கு வேலைகள் பறிபோயின. ஆந்ரே வேலை செய்யும் கிளை எப்போது மூடப்படுமோ என்ற கிலியிலும் அதனால் பெருகிய துக்கத்துள்ளும் ஆந்ரே மூழ்கியிருந்தான். காற்று நிரப்பிய சிறிய ரப்பர் படகுகளில் மூட்டைகள் போல அகதிகளை அள்ளிப் போட்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் குழுக்கள் நகரத்தின் பல இடங்களிலும் மறைந்திருந்தார்கள். இதைத் தவிர, பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பல்களில் ஏற்றப்பட்டுக் கொண்டுசெல்லப்படும் சரக்குந்துகளைப் பயன்படுத்தி நீரிணையைக் கடந்து செல்லும் முயற்சியிலும் அகதிகள் இறங்கியிருந்தார்கள். நெடுஞ்சாலையில் வரும் சரக்குந்துகளின் முன்னால் வீதித் தடைகளை ஏற்படுத்தி அவற்றை வேகம் குறைக்கச் செய்து, சரக்குந்துகளுக்குள் திருட்டுத்தனமாக அகதிகள் நுழைந்துகொண்டார்கள். அந்த நீரிணைக்குக் கீழாக அமைக்கப்பட்டிருக்கும் அய்ம்பது கிலோ மீட்டர்கள் நீளமான ரயில் சுரங்கப் பாதைக்குள் இறங்கி நடந்துசெல்ல முற்பட்ட பல அகதிகள் ரயில் மோதி இறந்து போனார்கள். அவர்களின் பிணம் கூட இங்கிலாந்தைச் சென்றடையவில்லை. கலே நகரத்து மக்கள் மட்டுமல்லாமல், பிரான்ஸ் – இங்கிலாந்து இருநாட்டு அரசாங்கங்கள், காவல்துறையினர், கடற்படையினர், எல்லைப்படையினர் எல்லோருமே குழப்பத்தில் இருப்பது போலத்தான் தோன்றியது. தெளிவாக இருந்தவர்கள் அந்தப் பத்தாயிரம் அகதிகள் மட்டுமே. எப்படியாவது கடலைக் கடந்து இங்கிலாந்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். ரப்பர் படகுகள் கடலில் மூழ்கி அகதிகள் நாளாந்தம் இறப்பதாலோ, சரக்குந்துகளில் மறைந்திருந்து சென்றவர்கள் மூச்சுத் திணறிக் கொத்தாக இறப்பதாலோ, சுரங்கப் பாதையில் ரயில் மோதி இறப்பதாலோ இந்த அகதிகள் தங்களது பயணத்தைக் கைவிட ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. எப்படியாவது ஒருநாள் உயிரோடு கடலைக் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கலே நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள். அவ்வாறு அலைந்துகொண்டிருந்த பொப்பியும் அவளது சகோதரியும் ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைக் கூண்டுக்கு முன்னால் வந்துநின்று, கூண்டின் முகப்புக் கண்ணாடியில் தட்டியபோது, ஆந்ரே தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் திறந்து பார்த்துவிட்டு, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டான். அவனது முக்கோண வடிவ முகத்திற்கு அந்த வட்டமான மூக்குக் கண்ணாடி பொருத்தமில்லாமல் இருந்தது. செந்நிற ஆட்டுத்தாடியைச் சொறிந்துகொண்டே கண்களைத் தாழ்த்தி, தெருவின் எதிர்ப் பக்கத்திலிருந்த காவல் கூண்டைப் பார்த்தான். அந்தக் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் அந்தப் பெண்களையே கவனித்துக்கொண்டிருந்தார். பொப்பி தனது குளிரங்கிக்குள் கையை நுழைத்து ஒரு பொதியை எடுத்துப் பிரித்தாள். இரண்டு பிளாஸ்டிக் பைகளுக்குள் பத்திரமாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து முகப்புக் கண்ணாடியில் இருந்த அரைவட்டத் துளை வழியாக உள்ளே தள்ளிக்கொண்டே “மிஸ்டர்! நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?” என்று ஆந்ரேயிடம் கனத்த குரலில் கேட்டாள். “ஆம். பேசுவேன்” என்றான் ஆந்ரே. “எங்களுடைய தந்தை ‘வெஸ்டர்ன் யூனியன்’ மூலமாக எங்களுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைக் கொடுங்கள்.” பொப்பியின் பாஸ்போர்ட்டை ஆந்ரே எடுத்து விரித்துப் பரிசீலித்துவிட்டு, கணினியைத் தட்டி உசுப்பியவாறே “ட்ரான்சக்ஸன் நம்பர்?” என்று கேட்டான். பொப்பி தன்னுடையை சகோதரியைப் பார்த்தாள். அந்தச் சிறுமி பத்து இலக்கங்களை மனப்பாடமாகச் சொல்லச் சொல்ல, ஆந்ரே கணினி விசைப்பலகையில் மெதுமெதுவாகத் தட்டினான். பொப்பியிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ஆந்ரே பச்சைநிற ஈரோத் தாள்களை எடுத்து அரைவட்டத் துளை வழியாக வெளியே தள்ளிவிட்டான். பொப்பி அந்தப் பணத்தை எடுத்து நிதானமாக மூன்று தடவைகள் எண்ணிப் பார்த்துவிட்டுத் தனது குளிரங்கிக்குள் நுழைத்துக்கொண்டாள். ‘நன்றி’ என்பது போலச் சகோதரிகள் இருவரும் ஆந்ரேக்குத் தலையைத் தாழ்த்தினார்கள். ஆந்ரே சோர்வுடன் தலையை மெதுவாக அசைத்தான். இரண்டு நாட்கள் கழித்து, மாலை அய்ந்து மணிக்கு ஆந்ரே கணினியை அணைத்துவிட்டு, தனது குளிர் மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு கிளையை மூடுவதற்குத் தயாரானபோது, கிளையின் முகப்புக் கண்ணாடியில் படபடவெனத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சகோதரிகள் இருவரும் தெருவில் நின்றிருந்தார்கள். ஆந்ரே கைகளைக் கத்தரிக்கோல் போல் குறுக்கே வைத்து அசைத்து ‘மூடியாகிவிட்டது’ எனச் சைகை காட்டினான். பொப்பி பதிலுக்கு மீண்டும் முகப்புக் கண்ணாடியைப் பலமாகத் தட்டினாள். ஆந்ரே அரைவட்டத் துளையை மூடியிருந்த மறைப்பை நீக்கிவிட்டு, அந்தத் துளையை நோக்கிக் குனிந்து “மூடியாகி விட்டது. நாளைக்கு வாருங்கள்” என்று சொன்னான். இன்று தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருவதாக அவன் சொல்லியிருந்தான். சந்தை மூடுவதற்கு முன்பாக அங்கே சென்று தாயாருக்குப் பிடித்தமான நத்தைகளையும் தாயாருக்கு அந்த வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்கிச் செல்ல வேண்டும். நகரம் முழுவதும் குழப்பமான முறையில் அகதிகள் நடமாட்டம் இருப்பதால், அவனது தாயார் பயந்துகொண்டு சந்தைக்குப் போவதில்லை. சென்ற வாரம் ஆந்ரே தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தாயார் தனது வற்றிப் போன உடம்பை ஆடாமல் அசையாமல் வைத்துக்கொண்டு, கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். “இந்த நகரத்தை விட்டு நாங்கள் போய்விட வேண்டும்” என்றார். அந்தச் சகோதரிகள் அங்கிருந்து நகருவதாக இல்லை. “மிஸ்டர்! எங்களுக்குப் பணம் வந்திருக்கிறது. அவசரமாக எங்களுக்குப் பணம் தேவை. தயவு செய்து கொடுத்துவிடுங்கள்” என்றாள் பொப்பி. “கிளையை மூடியாகி விட்டது. கணினியை அணைத்துவிட்டேன். நாளைக்குக் காலையில் ஒன்பது மணிக்கு வாருங்கள்!” அதைக் கேட்டதும் பொப்பியின் சகோதரி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாள். தெருவின் எதிர்ப் பக்கம் காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் இங்கேயே கவனித்துக்கொண்டிருந்தார். பொப்பி ஏதோவொரு மொழியில் உரக்கக் கத்தியதும் அழுதுகொண்டிருந்த சிறுமி தனது உதடுகளை இறுக மடித்து வாயை மூடிக்கொண்டே சத்தம் வராமல் விம்மினாள். அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. விம்மியவாறே தனது கால்களைத் தரையில் மாறி மாறி உதைத்துத் தெருப் புழுதியைக் கிளப்பிகொண்டிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து ஆந்ரே உண்மையிலேயே பதறிவிட்டான். “பொறுங்கள்…பொறுங்கள்…” எனச் சொல்லியவாறே நாற்காலியில் அமர்ந்து கணினிப் பொத்தானைச் சொடுக்கினான். விம்மிக்கொண்டிருந்த பெண் விம்மலுக்கிடையே பத்து எண்களைச் சொன்னாள். ஆந்ரே பணத்தை எடுத்துக் கொடுத்ததும், பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே சுருட்டி பொப்பி தனது உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு, தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினாள். எதிர்ப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் ‘என்ன?’ என்பது போல ஆந்ரேயைப் பார்த்தார். ஆந்ரே அவரைப் பார்த்து ஒரு சமாதானமான புன்னகையைச் செய்துவிட்டு, கிளையை மூடிவிட்டு, தனது சைக்கிளை மிதித்துக்கொண்டு சந்தைக்குப் போனான். அடுத்த நாள் காலையில், செய்தித்தாள் வாங்குவதற்காக வீதியோரப் பத்திரிகைக் கடையில் ஆந்ரே நின்றிருந்தபோது, அவனது தோளை யாரோ தட்டினார்கள். ஆந்ரே திடுக்கிட்டுத் திரும்புவதானால் கூட மிக மெதுவாகவே திரும்புவான். அதற்குள் தோளில் தட்டுவது யாராக இருக்கும் என யோசித்தான். அவனுக்குத்தான் நண்பர்கள் என்று யாருமே இல்லையே. வேலை! வேலையை விட்டால் மலிவு விலைச் சந்தை! சந்தையை விட்டால் அவனுடைய சிறிய அறை! வாரத்திற்கு ஒருமுறை தாயாரின் வீடு என்பதுதானே அவனது சிறிய வாழ்வு. ஆந்ரேயின் தோளைத் தட்டியவள் பொப்பி. “மிஸ்டர் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நேற்று உங்களுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல் ஓடிவிட்டேன்.” ஆந்ரே மங்கலான புன்னகையைச் செய்தவாறே “உங்களது சகோதரி எங்கே? தனியாக வரமாட்டீர்களே” என்று சும்மா கேட்டு வைத்தான். உடனேயே பொப்பியின் வட்ட முகம் மலர்ந்து விரிந்துபோனது. “நேற்று இரவே அவள் படகில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள். படகில் அனுப்பிவைக்கும் கடற்காகங்களுக்கு – அந்தக் குழுவை அப்படித்தான் எங்களது ஜங்கிள் முகாமில் குறிப்பிடுவார்கள் – பணம் கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேற்று உங்களைத் தொந்தரவு செய்துவிட்டோம். நீங்கள் சிரமம் பாராமல் பணத்தை எடுத்துக் கொடுக்கவில்லையென்றால், நேற்று அவளால் போயிருக்கவே முடியாது. நன்றி மிஸ்டர்” என்றாள். “பரவாயில்லை… என்னுடைய பெயர் ஆந்ரே. நீங்கள் தங்கையுடன் போகவில்லையா?” “இல்லை. ஆனால், சீக்கிரமே நானும் போய்விடுவேன். அப்பா அனுப்பிவைத்த பணம் அவளை அனுப்ப மட்டுமே போதுமானதாக இருந்தது. அவள் சின்னப் பெண். அவளைத்தானே முதலில் அனுப்ப வேண்டும். வரும் வியாழக்கிழமை அப்பா மீண்டும் பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள உங்களிடம்தான் வருவேன். அடுத்த படகில் நான் இங்கிலாந்துக்குப் போய்விடுவேன். உங்கள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்…மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்…” இரவு படுக்கையில் கிடந்து புரண்டுகொண்டிருந்த ஆந்ரே புகை பிடிப்பதற்காக எழுந்துசென்று, கடற்கரையை நோக்கியிருந்த ஜன்னலைத் திறந்தான். அந்த நேரத்திலும் கடற்கரையில் அகதிகள் உரக்கப் பேசியவாறே கூட்டம் கூட்டமாக அலைந்துகொண்டிருந்தார்கள். இன்று இரவும் ரப்பர் படகுகள் கடலைக் கடக்கவிருக்கின்றன என ஆந்ரே நினைத்துக்கொண்டான். பொப்பியும் இரண்டு நாட்களில் போய்விடுவாள் என்ற நினைப்பு அவனுள் வந்தபோது, அவனுக்குள் ஏனோ துயரம் பெருகியது. இது பொப்பிக்கான உபரித் துயரமா அல்லது எப்போதுமே தன்னோடு ஒட்டியிருக்கும் பெரும் துக்கம்தானா எனப் புரியாமல் அவன் குழம்பிப்போனான். உண்மையில், அவனில் துக்கம் மெல்ல மெல்லக் கரைந்துகொண்டிருக்கிறது என்பதைச் சற்றுச் நேரத்திலேயே உணர்ந்துகொண்டான். அவனுக்குள் பெரும் உளக் கொந்தளிப்பு ஏற்படவும், அந்தப் பதைபதைப்பைத் தாங்க இயலாமல் எழுந்து கட்டிலில் நின்றுகொண்டான். பொப்பியின் முகம் அவனுள் மெதுமெதுவாக நுழைந்து வெள்ளி முத்திரை போன்று பதிந்துகொண்டது. அவன் இதுவரை காதல் வயப்பட்டதில்லை. தனக்குள் தோன்றியிருக்கும் உணர்வு காதல்தானா? இது எப்படிச் சாத்தியம்? என்று அடுத்துவந்த நாட்களில் அவன் தத்தளித்துக்கொண்டிருந்தான். வியாழக்கிழமை காலையிலிருந்து அவன் பொப்பிக்காகக் காத்துக்கொண்டிருந்தான். மதிய உணவுக்குக்கூட கிளையை மூடாமல் பக்கத்துக் கடையில் ஒரு வரட்டு ‘சாண்ட்விச்’ வாங்கிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியைத் தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். வெறுமனே கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். பொப்பியின் பாஸ்போர்ட் விவரங்கள் கணினியில் இருந்தன. கிளையை மூடும் நேரமாகியும் பொப்பி வரவில்லை. ஆந்ரே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாகவே கிளையை மூடினான். பொப்பி ஏன் வரவில்லை? என்ன நடந்திருக்கும்? என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கியவாறே தனது சைக்கிளில் ஏறி ஆந்ரே அமர்ந்தபோது, காவல் கூண்டுக்குள் இருந்த பொலிஸ்காரர் “என்ன தம்பி இன்று கிளையைத் தாமதமாக மூடுகிறாய்? அய்ந்து மணிக்குமேல் ஒரு விநாடிகூட நீ இங்கே இருக்கமாட்டாயே…” என்று கேட்டார். ஆந்ரே ஏதோ ஒரு யோசனையில் சைக்கிளை மிதித்தான். மூன்று மிதிகளில் அது தெருவைக் கடந்து காவல் கூண்டருகே போய் நின்றது. “மிஸியூ. ஜோன் மிஷெல்… ஏன் இன்று நகரம் வழமையைவிட அமைதியாக இருக்கிறது? தெருவில் மனித நடமாட்டமே இல்லையே. ஏதாவது அகதிகள் பிரச்சினையா?” என்று ஆந்ரே பொலிஸ்காரரைக் கேட்டான். “கெட்டது போ! தம்பி நீ கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே கனவு காண்பவன். தெருவில் எப்போதும் போல அகதிகள் அலைந்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களை யாருமே ஒன்றும் செய்துவிட முடியாது. ஒரு மனிதனிடம் வதிவிட அனுமதி இல்லை என்ற காரணத்திற்காக அவனைச் சிறையில் அடைக்கக்கூடாது என்றொரு பாழாய்ப்போன சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்தச் சட்டம் மட்டும் ஒழிக்கப்பட்டால், நீ சொல்வது போல உண்மையிலேயே இந்த நகரம் அமைதியாகத்தான் இருக்கும்” என்றார் பொலிஸ்காரர். சைக்கிளை மிதித்துக்கொண்டிருக்கையில் பொப்பியின் ஞாபகமே ஆந்ரேயை முழுவதுமாக நிறைத்திருந்தது. சைக்கிள் அவனது அறையைச் சிறிய தயக்கத்துடன் கடந்து, ஜங்கிள் முகாமை நோக்கிச் சென்றது. 2 ஜங்கிள் முகாம், கலே நகரத்தை ஒட்டியிருந்த சிறு காட்டில் தோன்றியிருந்தது. இந்த முகாம் பிரெஞ்சு அரசாங்கத்தாலோ அல்லது வேறெந்தத் தொண்டு நிறுவனங்களாலோ அமைக்கப்பட்டதல்ல. அகதிகளால் உருவாக்கப்பட்ட இந்த முகாமை ‘அய்ரோப்பாவின் மிகப் பெரிய சேரி’ என்றுதான் ஊடகங்கள் வர்ணித்தன. முகாமில் காணப்பட்ட தேசிய இனங்களையும் மொழிகளையும் கணக்கெடுப்பது அரசாங்கங்களாலேயே இயலாத காரியம். விவிலியக் கதையில் வரும் அழிந்த பாபேல் கோபுரம் போல அந்த முகாம் இருந்தது. அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், சீனர்கள், ஆபிக்கர்கள், வங்காளிகள், இந்தியர்கள், இலங்கையர்கள், அல்பேனியர்கள் எனப் பல இனத்தவர்கள் அங்கே இருந்தார்கள். ஆயிரக்கணக்கான ஒழுங்கற்ற சிறு கூடாரங்கள் அந்தச் சிறு காட்டில் அகதிகளால் அமைக்கப்பட்டிருந்தன. மின்சாரம், சூடேற்றும் கணப்புகள், சுகாதாரம் எதுவுமற்ற அந்தக் கூடாரங்களில் பசி பட்டினியும் கடுங்குளிரும் நோயும் நிறைந்திருந்தன. மனிதக் கடத்தல்காரர்களைத் தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, நள்ளிரவில் கூடாரங்களுக்குள் நுழைந்து அகதிகளின் முகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சித் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும் பிரெஞ்சுக் காவல்துறையின் தொல்லை ஒவ்வொரு நாளுமே இருந்தது. தங்களுடைய நிம்மதியான உறக்கம் முப்பத்துமூன்று கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, அதை ஒருநாள் கண்டடைவோம் என்று அகதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தத் திடீர் முகாமில் முனைப்புள்ள சில அகதிகளால் சிறிய மளிகைக் கடைகளும் உணவகங்களும் கூட அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவகங்களுக்கு முன்னால் ‘காபூல் ரொஸ்ரோரண்ட்’, ‘தாஜ்மகால் தர்பார்’, ‘இஸ்தான்புல் கஃபே’ என்றெல்லாம் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. பொரித்த கோழிக்கால் விற்கும் கடையொன்றுக்கு ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. மரத் தூண்களாலும் தடிகளாலும் பலகைகளாலும் சிறிய மசூதி, கிறிஸ்தவ தேவாலயம், இந்துக் கோயில் போன்றவையும் முகாமில் அமைக்கப்பட்டிருந்தன. அகதிகளிலேயே மதகுருமார்களும் இருந்ததால் அந்த வழிபாட்டிடங்கள் குழப்பமில்லாமல் இயங்கி வந்தன. அந்த முகாமில் ஏழாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களில் ஆயிரம் குழந்தைகளும் இருந்தன. முகாமிலிருந்த அகதிகளுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்களையும் குளிர்காப்பு ஆடைகளையும் மருந்துகளையும் விநியோகித்தன. என்றாலும், அவை அகதிகளுக்குப் போதுமானவையாக இருக்கவில்லை. விநியோகம் நடக்கும் நாட்களிலெல்லாம் அகதிகளிடையே தள்ளுமுள்ளுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதுண்டு. முகாமில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். இவ்வாறான ஒரு அகதி முகாம் இதற்கு முன்பு உலகில் எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் ஒரே நாட்டை அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டுதான் அகதி முகாம்கள் அமைக்கப்படும். அந்த முகாம்களை ஓர் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்துவதாக இருக்கும். ஆனால், இந்த அகதி முகாம் அவ்வாறனதல்ல. பெருமழை, பெரும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போல் தோன்றிய முகாம் இது. ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இரண்டு இனத்தவரோ அல்லது இரண்டு மதத்தவரோ நேருக்குநேர் போர் புரிந்திருப்பார்கள். அவர்களிடையே காலங்காலமாகப் பகையுணர்ச்சியும் வெறுப்பும் மண்டிக் கிடக்கும். ஆனால், ஜங்கிள் முகாமிலோ இந்த இரண்டு பிரிவினரும் சேர்ந்து தங்கியிருக்க வேண்டியிருந்தது. பல நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகள் கூடாரங்களின்மீது ஏற்றப்பட்டு அலங்கோலமாக இருந்தன. அந்தக் கொடிகள் எதிர்த் தரப்பால் இரவுகளில் கிழித்து எறியவும்பட்டன. இதனால், அங்கே அடிக்கடி மோதல்களும் கைகலப்புகளும் ஏற்பட்டன. இதற்கொரு முடிவு கட்டுவதற்காக அங்கே பேச்சுவார்த்தைகளும் அகதிகளால் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து கடைசியில் ஒரு முடிவும் எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி, கூடாரங்களில் பறந்த எல்லா நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகளும் இறக்கப்பட்டு, முகாமின் நடுவில் ஒரேயொரு கொடி மட்டும் உயரமான கம்பத்தில் ஏற்றப்பட்டது. அது பிரித்தானியாவின் ‘யூனியன் ஜாக்’ கொடி. ஜங்கிள் முகாமின் உச்சியில் யூனியன் ஜாக் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்ட பிரெஞ்சு அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த யூனியன் ஜாக் கொடியை பிரெஞ்சு மண்ணில் நாட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலம் போர் செய்தும் அது நடக்காமல் போனது. ஆனால், இந்த அகதிகள் அதை நிமிடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஆந்ரே வீதியோரத்தில் சைக்கிளை நிறுத்திவைத்து, அந்தக் கொடியைக் கொஞ்ச நேரம் அண்ணாந்து பார்த்தவாறே இருந்தான். உண்மையில், அவன் இப்போதுதான் அந்தக் கொடியை நேரில் பார்க்கிறான். அவன் இதுவரை இங்கிலாந்துக்குச் சென்றதில்லை. ஜங்கிள் முகாம் மாரிகாலக் கடல் போன்று இரைந்துகொண்டிருந்தது. காடு முழுவதும் மனிதர்கள் திரிந்துகொண்டிருந்தார்கள். இதில் எங்கே போய், எப்படிப் போய் பொப்பியைக் கண்டுபிடிப்பது என ஆந்ரேக்குப் புரியவில்லை. வீதியிலிருந்து கிளைத்த ஒரு ஒற்றையடிப் பாதை புற்களுக்குள்ளால் ஜங்கிள் முகாமை நோக்கித் தாழ்வாகச் சென்றது. ஆந்ரேயின் சைக்கிள் அந்த ஒற்றையடிப் பாதையால் இறங்கிச் சென்றது. ஆந்ரே அகதிக் கூடாரங்களை நெருங்கியபோது, அங்கே ஏற்கெனவே தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒரு திறந்த வாகனத்திலிருந்து அகதிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே மிக நீண்ட வரிசை வளைந்து வளைந்து நின்றுகொண்டிருந்தது. பொப்பி ஏதாவது நோயில் விழுந்து, அந்த வரிசையில் நின்றிருப்பாளோ என்றுகூட ஆந்ரேக்குக் கற்பனை வந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே போனான். ஒரு தேநீர்க் கடையைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு, அங்கேயிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டான். தேநீர்க் கடையை நடத்திக்கொண்டிருந்த கிழவர் நீண்டதாடி வைத்து, தலையில் தொப்பி அணிந்திருந்தார். பிரெஞ்சு மொழி நன்றாகப் பேசினார். “நீங்கள் மருத்துவக் குழுவோடு வந்தவர் என நினைக்கிறேன். உங்கள் முகத்தைப் பார்த்தாலே மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாமே. தேநீர் அருந்துகிறீர்களா? புதினாவும் ஏலக்காயும் கலந்த கறுப்புத் தேநீர் உள்ளது.” ஆந்ரே தேநீரைப் பருகியவாறே அந்தக் கிழவரிடம் “அய்யா… நான் பொப்பி என்ற ஒரு பெண்ணைத் தேடி வந்தேன்” என ஆரம்பித்து, அவளது பாஸ்போர்ட்டில் அவன் பார்த்து ஞாபகத்தில் வைத்திருந்த அவளது வயது, நாடு போன்ற விவரங்களையும் சொல்லிவிட்டு “அவளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான். கிழவர் வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக்கொண்டார். பிறகு “பொப்பி… இந்தப் பெயரை இங்கேதான் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே. எனக்கு எழுபது வயதாகிறதல்லவா…காலையில் கேட்டது மதியம் மறந்துவிடுகிறது” என்றவாறே கண்களைச் சுருக்கினார். “அவளது தங்கைகூட சமீபத்தில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள்…” என்றான் ஆந்ரே. “நீங்கள் நாளைக்கு வாருங்களேன். நான் விசாரித்து வைக்கிறேன். நாளைக்கு கறுவாப்பட்டையும் எலுமிச்சை இலைகளும் போட்டுத் தேநீர் தயாரிக்கவுள்ளேன்.” ஆந்ரே தனது மேலங்கிப் பைக்குள் இருந்து சதுர வடிவமான ‘வெஸ்டர்ன் யூனியன்’ அட்டையை எடுத்து அந்தக் கிழவரிடம் கொடுத்தவாறே “ஒருவேளை நான் சொல்லும் பொப்பியை நீங்கள் கண்டுபிடித்தால், இந்த அட்டையிலுள்ள அலைபேசி இலக்கத்திற்கு அழைக்கச் சொல்லுங்கள்” என நம்பிக்கையில்லாமலேயே சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். இரவு கவிந்துகொண்டிருந்ததால் அந்தக் காடு முழுவதும் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஆந்ரே வீதிக்கு வந்ததும் ஜங்கிள் முகாமை ஒருதடவை திரும்பிப் பார்த்தான். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் இறங்கியிருப்பது போல் அந்தக் காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் காலையிலிருந்தே அய்ந்து நிமிடத்துக்கு ஒருமுறை தனது அலைபேசியை எடுத்து ஆந்ரே பார்த்தவாறேயிருந்தான். அன்றைக்கென்று ஆங்கிலேய மாலுமிகள் கூட்டமொன்று நாணய மாற்றுச் செய்வதற்காக வந்து அவனை மொய்த்துப் பிடித்துக்கொண்டது. அதைப் பெரிய தொந்தரவாகக் கருதிக்கொண்டே தனது கவனம் முழுவதையும் ஆந்ரே அலைபேசியிலேயே வைத்திருந்தான். மாலையாகி, கிளையை மூடும் நேரமும் வந்தபோதுதான், முகப்புக் கண்ணாடியில் பொப்பி மெல்லத் தட்டினாள். “ஆந்ரே… என்னைத் தேடி முகாமுக்கு வந்தீர்களா என்ன! இந்த அட்டையைத் தேநீர்க்கடை அய்யா எனது கூடாரத்திற்கு வந்து கொடுத்தார்.” “ஆம். எனக்கு அந்தப் பக்கம் ஒரு வேலையிருந்தது. அப்படியே முகாமுக்கும் வந்து எட்டிப் பார்த்தேன்.நேற்று வியாழக்கிழமை. பணம் பெற்றுக்கொள்ள நீங்கள் வரவில்லை…” “கடவுள் உங்களுக்கு நன்மை செய்வார் ஆந்ரே! அப்பா அலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளார். அவரால் பணம் அனுப்ப முடியவில்லையாம். எங்கள் பகுதியில் போர் இப்போது மிக உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதால், எங்களது பழத்தோட்டத்தை விலைக்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தவர்கள் பின்வாங்கிவிட்டார்களாம். அப்பா என்னை இன்னும் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார். எப்படியும் பணம் அனுப்பிவிடுவார். நீங்கள் கிளையை மூடும் நேரத்தில் வந்து பணத்தைத் தருமாறு உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டேன்” என்றவாறே தலையைச் சாய்த்து வணக்கம் சொல்லிவிட்டு, பொப்பி அங்கிருந்து புறப்பட்டாள். ஆந்ரே கிளையை மூடும்போது, பொப்பி கடலைக் கடந்துவிடுவாள் என்ற எண்ணம் அவனுக்குள் மீண்டும் துக்கத்தைப் பெருக்கலாயிற்று. இது என்ன மாதிரியான பைத்தியகாரத் துக்கம் என்றே அவனுக்குப் புரியவில்லை. அவன் சைக்கிளில் ‘தேசிய வீரர்கள் நினைவுச் சின்னம்’ அமைந்திருந்த சதுக்கத்தைக் கடந்தபோது, பொப்பி வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவளருகே ஆந்ரேயின் சைக்கிள் தானாகவே நின்றது. “ஆந்ரே என்ன இந்தப் பக்கம்?” என்று பொப்பி கீழுதட்டைக் கோணிக்கொண்டே கேட்டாள். “எனது அறை இந்த வீதியில்தானே இருக்கிறது. அதைக் கடந்துதான் நீங்கள் ஜங்கிள் முகாமுக்குப் போக வேண்டும்” என்றான் ஆந்ரே. சைக்கிளைத் தள்ளியவாறே பொப்பியோடு சேர்ந்து நடந்துகொண்டே கேட்டான்: “உங்களின் தங்கை இங்கிலாந்தில் எப்படியிருக்கிறாள்? உங்களுக்காகக் காத்திருப்பாளே…” “உண்மைதான். அவள் எனக்காகக் காத்திருப்பாள். அவள் என்னைப் போல் தைரியமானவள் கிடையாது. எங்களது அம்மா போல் எல்லாவற்றுக்கும் பயந்தவள். அதுதான், அன்று அவள் தெருவில் நின்று எப்படிக் குழறி அழுதாள் என்று நீங்கள் பார்த்தீர்களே! இங்கிலாந்துக்குப் போவதற்கு அவள் படு உற்சாகமாகத்தான் இருந்தாள். ஆனால், அன்றிரவு கூடாரத்திலிருந்து அவள் கடற்காகங்களோடு கிளம்பும்போது, என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவறவிடக்கூடாது எனச் சொல்லி, அவளைத் தைரியப்படுத்தி அனுப்பிவைத்தேன். ஒரு அகதியின் எதிர்காலத்தை அந்த அகதி தீர்மானிப்பதில்லை. சந்தர்ப்பங்கள்தானே அதைத் தீர்மானிக்கின்றன. இல்லையா ஆந்ரே… அவள் அந்தக் கரையைப் போய்ச் சேர்ந்ததும் இங்கிலாந்து அரசாங்கம் அவளைப் பொறுப்பெடுத்து மான்செஸ்டர் நகரத்திலுள்ள ஒரு விடுதியில் வசதியாகத் தங்க வைத்திருக்கிறது எனக் கடற்காகங்கள் என்னிடம் சொன்னார்கள். இங்கிலாந்து எண்ணிலிருந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்திருந்தன. ஜங்கிள் முகாமில் அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காததால் அழைப்பைத் தவறவிட்டுவிட்டேன். அவள் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து அழைத்திருக்க வேண்டும்…” என்று பொப்பி பேசிக்கொண்டே போக, ஆந்ரேக்கு ஒரேயொரு யோசனைதான் அப்போது மூளைக்குள் ஓடியது. பொப்பி எவ்வளவு தெளிவாக, அர்த்தமாகப் பேசுகிறாள். எனக்கு இவ்வளவு வயதாகியும் இதெல்லாம் வரவில்லையே. கிளையைத் திறந்து வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த வேலை போய்விடுமா? போனால் என் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் இரவு முழுவதும் பினாத்திக்கொண்டு இருக்கிறேனே. இருவரும் பேசிக்கொண்டே ஆந்ரேயின் அறையை நெருங்கியபோது “பொப்பி எனது அறைக்கு வந்து என்னோடு தேநீர் அருந்திச் செல்வீர்களா?” என்று ஆந்ரே சட்டெனக் கேட்டான். “ஆந்ரே!” என்று வியப்புடன் கண்களை விரித்த பொப்பி “போகலாம்” என்றாள். இருவரும் எதிரெதிரே அமர்ந்து தேநீர் அருந்தும்போது, பொப்பி நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, தேநீர் மேசையில் முழங்கைகளை ஊன்றிக்கொண்டாள். அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள்.”உங்களது அறை மிகச் சுத்தமாகவும் கதகதப்பாகவும் இருக்கிறது ஆந்ரே. எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு என்னுடைய தேகம் கதகதப்பாகிறது” என்றாள். “பொப்பி உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். எனக்கு அந்த விஷயம் புரியவே இல்லை. ஜங்கிள் முகாமிலுள்ளவர்கள் பிரான்ஸிலேயே அகதியாகப் பதிவு செய்து இருக்கலாமே. ஏன் உயிரைப் பணயம் வைத்து ரப்பர் படகுகளில் கடலைக் கடக்கிறீர்கள்?” “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் ஆந்ரே. சிலருக்கு இங்கிலாந்தில் உறவுகள் இருப்பதால் அவர்களிடம் போகிறார்கள். பிரான்ஸை விட இங்கிலாந்தில் அகதிகளுக்கான சலுகைகள் அதிகம், இலகுவாக வேலை கிடைக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சிலர் கடலைக் கடக்கிறார்கள். ஆனால், நான் போகும் காரணம் வேறு.” “உங்கள் தங்கை அங்கே இருக்கிறாள்…” அது மட்டும் இல்லை. எங்களது கிராமத்திலிருந்து கிளம்பும்போதே இங்கிலாந்துதான் இறுதி நிலம் என்ற உறுதியான முடிவோடுதான் புறப்பட்டேன். யாராவது ஒருவர் என்னைப் பிரெஞ்சுக் குடிமகள் ஆக்குகிறேன் என்று சொன்னால்கூட அதை மறுத்துவிட்டு, நான் இங்கிலாந்துக்குத்தான் போவேன்.” ஆந்ரேக்கு ஏமாற்றம் தலைக்கேறி அடித்தது. அவன் ஒரு பரிதாபமான புன்னகையைச் செய்து அதைச் சமாளித்தவாறே “ஏன் அப்படி ஒரு உறுதியான தீர்மானம்? என்று கேட்டான். “உங்களிடம் அதைச் சொல்லலாம் ஆந்ரே… தவறில்லை. எங்களது குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். சொந்தமாகப் பழத் தோட்டங்கள் இருந்தன. காய்கறி விவசாயமும் உண்டு. பெற்றோருக்கு நாங்கள் இரண்டு பிள்ளைகள்தான். எங்களது வீடு கிராமத்திற்குச் சற்று ஒதுக்குப்புறமாகப் பழத் தோட்டங்களுக்கு நடுவே இருக்கிறது. யுத்தம் எங்களது பகுதிக்கு வந்தபோது எல்லாமே குலைந்துபோயின. பத்துப்பேர் ஆயுதங்களுடன் அணிவகுத்து வந்து ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தூக்கிச் செல்வதை நினைத்துப் பாருங்கள். பயந்து போய்விடுவீர்கள். ஆனால், அவர்களிடம் உதைவாங்கித் தரையில் இரத்தத்திற்குள் விழுந்து கிடந்த அப்பா “தைரியமாக இரு! பொப்பி தைரியமாக இரு!’ என்று கத்தினார். தங்கை அப்போது பாடசாலைக்குப் போயிருந்ததால் தப்பித்துக்கொண்டாள். என்னைத் தூக்கிச் சென்றவர்களுக்கு அவர்களது முகாம் வரை என்னைக் கொண்டு செல்லப் பொறுமையில்லை. வழியிலேயே புதர்களைக் கண்ட இடத்திலெல்லாம் என்னை உள்ளே தூக்கிப்போட்டு என்மீது படுத்துக்கொண்டார்கள். அவர்கள் என்னை முகாமுக்குக் கொண்டு சென்றபோது, எனது உடலின் எல்லாத் துவாரங்களிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! எல்லாத் துவாரங்களிலிருந்தும்!” ஆந்ரேயின் கால்கள் நடுங்கத் தொடங்கின. அவன் சட்டென மேசைக்கு அடியில் கால்களை நுழைத்துக்கொண்டான். ஏன் இவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்? இவள் எப்போது பதிலை நிறுத்துவாள்? என மருகத் தொடங்கினான். பொப்பி தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள்: “அவர்கள் யாருக்கும் எங்களுடைய மொழி தெரியாது. எங்களுக்கும் அவர்களுடைய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலமும் பேசத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் போலவே பிடித்து வரப்பட்டிருந்த பெண்கள் சாறு பிழிந்த சக்கைகளானதும் அவர்களை ஒவ்வொருவராகச் சுட்டுக் கொன்றார்கள். என்னையும் இரண்டொரு நாட்களில் சுட்டுவிடுவார்கள் என நான் எண்ணினேன். ஆனால், நான் தைரியமாகவே இருந்தேன். எனது உடலில் சக்தி, இரத்தம், வெப்பம் எல்லாமே போயிருந்தாலும் தைரியம் மட்டும் என்னோடிருந்தது. அந்த முகாமுக்குப் புதிதாக ஓர் அதிகாரி வந்தான். அவன் இளைஞன். அவன் எனது முகத்தைக் கைகளால் நிமிர்த்திப் பார்த்தபோது, நான் ஆங்கிலத்தில் அவனிடம் பேசினேன். அந்த இளைஞன்தான் என்னைக் காப்பாற்றினான் என்பதைக் காட்டிலும் ஆங்கிலமே என்னைக் காப்பாற்றியது என்றுதான் சொல்வேன். இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன்.” ஆந்ரே முழுவதுமாகத் துக்கத்துள் மூழ்கியிருந்தான். இப்படியான கதைகளைக் கேட்கும் சக்தி அவனுக்கு இல்லை. அழுகையைப் பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்தான். 3 அதற்குப் பின்பு ஆந்ரே, பொப்பியைச் சந்திக்கவேயில்லை. அவள் வருவாள் என அவன் காத்துக்கொண்டிருக்கவுமில்லை. பொப்பி அவனது கழுத்துவரை துக்கத்தை நிரப்பிவிட்டுப் போயிருந்தாள். அவன் கண்களை மூடியவாறே துக்கத்தில் அமிழ்ந்திருந்தான். பொப்பி என்னவானாள் என எப்போதாவது யோசனை வரும். அவள் தெளிந்த புத்தியுள்ள பெண், கண்டிப்பாக ஏதோவொரு வழியில் இங்கிலாந்துக்கு -அவளது இறுதி நிலத்திற்கு – போய்ச் சேர்ந்திருப்பாள் என நினைத்துக்கொள்வான். மூன்று மாதங்கள் கழிந்தபோது, குளிர் மடிந்து வசந்தம் தொடங்கியது. ஜங்கிள் அகதி முகாமை முற்றாக அகற்றப் பிரெஞ்சு அரசாங்கம் முடிவெடுத்தது. அதிரடிக் காவல்படை ஜங்கிள் முகாமுக்குள் இறக்கப்பட்டு, அகதிகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக பிரான்ஸின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். முகாமில் அமைக்கப்பட்டிருந்த அகதிக் கூடாரங்கள் பிரிக்கப்பட்டு, குப்பை வண்டிகளில் ஏற்றப்பட்டன. அகதிகளால் அமைக்கப்பட்டிருந்த தேவாலயமும் பள்ளிவாசலும் கோவிலும் கடைகளும் புல்டோசர்கள் வைத்து உடைத்துத் தள்ளப்பட்டன. அந்தச் சிறு காட்டில் அதீத மனித நடமாட்டத்தால் செத்துக் கிடந்த புற்கள் இயந்திரங்களால் ஆழ உழுது புரட்டப்பட்டபோது, நிலத்துக்குள் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. ‘அந்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் அங்கே புதைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று சட்ட மருத்துவ நிபுணர்களின் அறிக்கை தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆந்ரே காலை ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்துவிட்டு, தனது நாற்காலியில் அமர்ந்தவாறே பத்திரிகையை விரித்தபோதுதான் அந்தச் செய்தியை அறிந்தான். புதைக்கப்பட்டிருந்த உடல் பொப்பியுடையதாக இருக்குமோ என ஆந்ரேக்கு ஏனோ சந்தேகம் எழுந்தது. அவளாக இருக்காது என்றும் மனம் சொன்னது. அவன் தடுமாறினான். மெல்ல நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து, மெதுவாக நடந்து வீதியைக் கடந்து காவல் கூண்டை நோக்கிச் சென்றான். காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் “ஏய் தம்பி! சாலையில் வாகனங்களைக் கவனி! தூக்கத்தில் நடக்கும் வியாதியும் உனக்கு வந்துவிட்டதா?” என்று சத்தம் போட்டார். “மிஸியூ.ஜோன் மிஷெல்…ஜங்கிள் முகாமில் ஒரு பெண்ணின் உடல் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்தி படித்தேன். என்னதான் நடக்கிறது கலே நகரத்தில்? உங்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?” அந்தப் பொலிஸ்காரர் சற்றே குரலைத் தாழ்த்தியவாறே “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன் தம்பி… விஷயம் உன்னோடேயே இருக்கட்டும். கொலையாளிகளில் ஒருவனை இன்று அதிகாலையில் பெல்ஜியத்தில் வைத்து நமது ஆட்கள் கைது செய்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். அவன் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டானாம். ஜங்கிள் முகாம் விஷயமென்றால் எங்களது ஆட்கள் வேகமாகத்தான் செயற்படுகிறார்கள் பார்த்தாயா” என்றார். ஆந்ரே மறுபடியும் வீதியைக் கடந்து, கிளைக்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வெறுமனே கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மூளை ஜங்கிள் முகாமில் அலைந்துகொண்டிருந்தது. அப்போது, அலைபேசி மணி ஒலித்தது. சோர்வுடன் அலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு “வணக்கம்! வெஸ்டர்ன் யூனியன்” என்றான். அவனது காதிற்குள் கனத்த குரல் எதிரொலியுடன் கேட்டது: “ஆந்ரே! நான் பொப்பி. லண்டனிலிருந்து பேசுகிறேன்…” ஆந்ரே எதுவும் பேசாமல் அலைபேசியைக் காதுக்குள் வைத்தவாறே முகப்புக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது சிறிய விழிகள் அங்குமிங்குமாக அசைந்துகொண்டிருந்தன. “ஆந்ரே…பொப்பி பேசுகிறேன். கேட்கிறதா?” “பொப்பி! உண்மையிலேயே நான் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். உங்களைக் கொன்று புதைத்துவிட்டார்கள் என்று இப்போதுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.” “அது என்னுடைய தங்கை. நான் இங்கிலாந்து வந்தவுடனேயே அவளைத் தேடியலைந்துவிட்டு, அவளைக் காணவில்லை என இங்கிலாந்துக் காவல்துறையிடம் முறையீடு செய்திருந்தேன். இப்போதுதான் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்துத் தகவலைச் சொன்னார்கள். என்னால் பிரான்ஸுக்கு வர முடியாது. அங்கே எனக்குத் தெரிந்தவர் நீங்கள் ஒருவர்தான். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக் கொஞ்சம் விசாரித்து எனக்குச் சொல்கிறீர்களா?” “நிச்சயம் விசாரித்துச் சொல்கிறேன். இந்தத் துயரம் நிகழ்ந்தே இருக்கக்கூடாது” எனச் சொன்ன ஆந்ரே ஒரு விநாடி நிறுத்தி “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் பொப்பி?” என்று கேட்டான். “தைரியமாக இருக்கிறேன்” என்றாள் பொப்பி. Art : meithu https://thadari.com/poppy-is-a-nickname-shobasakthi/

பொப்பி என்பது புனைபெயர் - ஷோபாசக்தி

1 month 1 week ago

பொப்பி என்பது புனைபெயர்

ஷோபாசக்தி

பொப்பி என்பது புனைபெயர்

பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி.

அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டுமே அவளுக்கு ‘பொப்பி’ என்ற புனைபெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால், அவளைக் குறித்து மூன்று விவரங்களை முன்கூட்டியே வாசகர்களுக்குச் சொல்லிவைக்க முடியும். அவளுக்கு அப்போது இருபது வயது. ஆங்கில மொழி பேசக்கூடியவள். ஆங்கில மொழியைப் பேசும்போது, B மற்றும் V ஒலியை அவளால் உச்சரிக்க முடியாது. கலே நகரத்தில் இருந்த ‘ஜங்கிள்’ அகதி முகாமில் அவள் காணப்பட்டாள்.

கருமையான சுருள் தலைமுடியும் வெளிறிய சருமமும் கொண்ட பொப்பி சற்றுக் குள்ளமானவள். அவளது முழுவட்ட முகத்தில் தலைமுடி சுருள் இழைகளாய் விழுந்து பேரிச்சம் பழங்கள் போன்றிருக்கும் அவளது கண்களின் ஓரங்களை மறைக்கும். அவள் பேசும்போது, சிவந்து தடித்த கீழுதடு ஒருபுறமாகக் கோணிக்கொள்வது போலிருக்கும். எப்போதுமே அவளுடைய குரல் கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பதுபோல் அவளுடைய குரலில் எதிரொலியும் கலந்திருக்கிறது. அவளுடைய தங்கையும் உருவத்தில் ஏறக்குறைய பொப்பியைப் போலவே இருந்தாள். தங்கைக்குப் பதினைந்து வயதிருக்கும்.

சகோதரிகள் இருவரும் ஆந்ரே பணியாற்றிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைக்கு முதன்முதலாக வந்தபோது, ஆந்ரே கைகளில் விரித்து வைத்திருந்த செய்தித்தாளுடன் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தான். பிறந்ததிலிருந்தே உற்சாகமற்ற மனநிலையுடனும், நான் ஏன்தான்  எப்போதுமே சோகமாக இருக்கிறேன் எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டுச் சோகத்தைப் பெருக்கியவாறும் இருக்கும் ஆந்ரே காலையில் ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்து வைத்துக்கொண்டு, மதியம் பன்னிரண்டு மணிவரை ஒரேயொரு வாடிக்கையாளர்கூட வராத இடத்தில் தூங்குவதைத் தவிர வேறென்னதான் செய்ய முடியும்!

சில மாதங்களுக்கு முன்புவரை கலே நகரத்தின் இந்தக் கடற்கரை  உல்லாசப் பயணிகளால் நிரம்பித் ததும்பியது. அவர்களைக் குறிவைத்துக்  கடற்கரை வீதியில் நான்கைந்து  ‘பணப் பரிவர்த்தனை’ கிளைகள் இருந்தன. இப்போது, ஆந்ரே பணியாற்றும் இந்தக் கிளை மட்டுமே இருக்கிறது. கலே கடற்கரை, அகதிகளாலும் அவர்களைத் தடுத்து நிறுத்தும் பிரெஞ்சு சிறப்புக் காவல்படையினராலும் மட்டுமே இப்போது நிறைந்துள்ளது.

வடக்கு பிரான்ஸின் விளிம்பில் கலே நகரம் இருக்கிறது. இந்த நகரத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஆங்கிலக் கால்வாயில் விரிந்து கிடக்கும் டோவர் நீரிணையின் நீளம் முப்பத்து மூன்று கிலோ மீட்டர்கள். இந்த நீரிணை மிக ஆழமானது. வருடம் முழுவதும் குளிர்ந்த நீரைக் கொண்டது. இந்த அபாயமான நீரிணையைக் கடந்து இங்கிலாந்துக்குச் செல்வதற்காகப் பத்தாயிரம் அகதிகள் கலே நகரத்தில் காத்திருக்கிறார்கள்.

திடீரெனக் குவிந்த இந்த அகதிகளால் நகரத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்படத்தான் செய்தது. நகரத்தின் ஒவ்வொரு சதுர மீட்டரிலும் ஒரு அகதி இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பாக அந்த நகரம் சந்தித்திருக்கும் மிகப் பெரிய நெருக்கடி இதுவே என்று நகர மக்கள் பேசிக்கொண்டார்கள். சுற்றுலாப் பயணிகள் கலே நகரத்திற்கு வருவதை நிறுத்திக்கொண்டார்கள். அவர்களை நம்பியிருந்த பல தங்கும்விடுதிகளும் உணவகங்களும் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. இதனால்  நகரத்து மக்கள் பலருக்கு வேலைகள் பறிபோயின. ஆந்ரே வேலை செய்யும் கிளை எப்போது மூடப்படுமோ என்ற கிலியிலும் அதனால் பெருகிய துக்கத்துள்ளும் ஆந்ரே மூழ்கியிருந்தான்.

காற்று நிரப்பிய சிறிய ரப்பர் படகுகளில் மூட்டைகள் போல அகதிகளை அள்ளிப் போட்டு இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் குழுக்கள் நகரத்தின் பல இடங்களிலும் மறைந்திருந்தார்கள். இதைத் தவிர, பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்குக் கப்பல்களில் ஏற்றப்பட்டுக் கொண்டுசெல்லப்படும் சரக்குந்துகளைப் பயன்படுத்தி நீரிணையைக் கடந்து செல்லும் முயற்சியிலும் அகதிகள் இறங்கியிருந்தார்கள். நெடுஞ்சாலையில் வரும் சரக்குந்துகளின் முன்னால் வீதித் தடைகளை ஏற்படுத்தி அவற்றை வேகம் குறைக்கச் செய்து, சரக்குந்துகளுக்குள் திருட்டுத்தனமாக அகதிகள் நுழைந்துகொண்டார்கள். அந்த நீரிணைக்குக் கீழாக அமைக்கப்பட்டிருக்கும் அய்ம்பது கிலோ மீட்டர்கள் நீளமான ரயில் சுரங்கப் பாதைக்குள் இறங்கி நடந்துசெல்ல முற்பட்ட பல அகதிகள் ரயில் மோதி இறந்து போனார்கள். அவர்களின் பிணம் கூட இங்கிலாந்தைச் சென்றடையவில்லை.

கலே நகரத்து மக்கள் மட்டுமல்லாமல், பிரான்ஸ் – இங்கிலாந்து இருநாட்டு அரசாங்கங்கள், காவல்துறையினர், கடற்படையினர், எல்லைப்படையினர் எல்லோருமே குழப்பத்தில் இருப்பது போலத்தான் தோன்றியது. தெளிவாக இருந்தவர்கள் அந்தப் பத்தாயிரம் அகதிகள் மட்டுமே. எப்படியாவது கடலைக் கடந்து இங்கிலாந்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதில் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். ரப்பர் படகுகள் கடலில் மூழ்கி அகதிகள் நாளாந்தம் இறப்பதாலோ, சரக்குந்துகளில் மறைந்திருந்து சென்றவர்கள் மூச்சுத் திணறிக் கொத்தாக இறப்பதாலோ, சுரங்கப் பாதையில் ரயில் மோதி இறப்பதாலோ இந்த அகதிகள் தங்களது பயணத்தைக் கைவிட ஒருபோதுமே தயாராக இருக்கவில்லை. எப்படியாவது ஒருநாள் உயிரோடு கடலைக் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கலே நகரத்தில் அலைந்துகொண்டிருந்தார்கள்.

அவ்வாறு அலைந்துகொண்டிருந்த பொப்பியும் அவளது சகோதரியும் ‘வெஸ்டர்ன் யூனியன்’  கிளைக் கூண்டுக்கு முன்னால் வந்துநின்று, கூண்டின் முகப்புக் கண்ணாடியில் தட்டியபோது, ஆந்ரே தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் திறந்து பார்த்துவிட்டு, மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டான். அவனது முக்கோண வடிவ முகத்திற்கு அந்த வட்டமான  மூக்குக் கண்ணாடி பொருத்தமில்லாமல் இருந்தது. செந்நிற ஆட்டுத்தாடியைச் சொறிந்துகொண்டே கண்களைத் தாழ்த்தி, தெருவின் எதிர்ப் பக்கத்திலிருந்த காவல் கூண்டைப் பார்த்தான். அந்தக் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் அந்தப் பெண்களையே கவனித்துக்கொண்டிருந்தார்.

பொப்பி தனது குளிரங்கிக்குள் கையை நுழைத்து ஒரு பொதியை எடுத்துப் பிரித்தாள். இரண்டு பிளாஸ்டிக் பைகளுக்குள் பத்திரமாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாஸ்போர்ட்டை எடுத்து முகப்புக் கண்ணாடியில் இருந்த அரைவட்டத் துளை வழியாக உள்ளே தள்ளிக்கொண்டே “மிஸ்டர்! நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா?” என்று ஆந்ரேயிடம் கனத்த குரலில் கேட்டாள்.

“ஆம். பேசுவேன்” என்றான் ஆந்ரே.

“எங்களுடைய தந்தை ‘வெஸ்டர்ன் யூனியன்’ மூலமாக எங்களுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைக் கொடுங்கள்.”

பொப்பியின் பாஸ்போர்ட்டை ஆந்ரே எடுத்து விரித்துப் பரிசீலித்துவிட்டு, கணினியைத் தட்டி உசுப்பியவாறே “ட்ரான்சக்ஸன் நம்பர்?” என்று கேட்டான்.

பொப்பி தன்னுடையை சகோதரியைப் பார்த்தாள். அந்தச் சிறுமி பத்து இலக்கங்களை மனப்பாடமாகச் சொல்லச் சொல்ல, ஆந்ரே கணினி விசைப்பலகையில் மெதுமெதுவாகத் தட்டினான்.

பொப்பியிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு, ஆந்ரே பச்சைநிற ஈரோத் தாள்களை எடுத்து அரைவட்டத் துளை வழியாக வெளியே தள்ளிவிட்டான். பொப்பி அந்தப் பணத்தை எடுத்து நிதானமாக மூன்று தடவைகள் எண்ணிப் பார்த்துவிட்டுத் தனது குளிரங்கிக்குள் நுழைத்துக்கொண்டாள். ‘நன்றி’ என்பது போலச் சகோதரிகள் இருவரும் ஆந்ரேக்குத் தலையைத் தாழ்த்தினார்கள். ஆந்ரே சோர்வுடன் தலையை மெதுவாக அசைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து, மாலை அய்ந்து மணிக்கு ஆந்ரே  கணினியை அணைத்துவிட்டு, தனது குளிர் மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு கிளையை மூடுவதற்குத் தயாரானபோது, கிளையின் முகப்புக் கண்ணாடியில் படபடவெனத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சகோதரிகள் இருவரும் தெருவில் நின்றிருந்தார்கள். ஆந்ரே கைகளைக் கத்தரிக்கோல் போல் குறுக்கே வைத்து அசைத்து  ‘மூடியாகிவிட்டது’ எனச் சைகை காட்டினான். பொப்பி பதிலுக்கு மீண்டும் முகப்புக் கண்ணாடியைப் பலமாகத் தட்டினாள். ஆந்ரே அரைவட்டத் துளையை மூடியிருந்த மறைப்பை நீக்கிவிட்டு, அந்தத் துளையை நோக்கிக் குனிந்து “மூடியாகி விட்டது. நாளைக்கு வாருங்கள்” என்று சொன்னான்.

இன்று தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருவதாக அவன் சொல்லியிருந்தான். சந்தை மூடுவதற்கு முன்பாக அங்கே சென்று தாயாருக்குப் பிடித்தமான நத்தைகளையும் தாயாருக்கு அந்த வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வாங்கிச் செல்ல வேண்டும். நகரம் முழுவதும் குழப்பமான முறையில் அகதிகள் நடமாட்டம் இருப்பதால், அவனது தாயார் பயந்துகொண்டு சந்தைக்குப் போவதில்லை. சென்ற வாரம் ஆந்ரே தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, தாயார் தனது வற்றிப் போன உடம்பை ஆடாமல் அசையாமல் வைத்துக்கொண்டு, கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். “இந்த நகரத்தை விட்டு நாங்கள் போய்விட வேண்டும்” என்றார்.

அந்தச் சகோதரிகள் அங்கிருந்து நகருவதாக இல்லை. “மிஸ்டர்! எங்களுக்குப் பணம் வந்திருக்கிறது. அவசரமாக எங்களுக்குப் பணம் தேவை. தயவு செய்து கொடுத்துவிடுங்கள்” என்றாள் பொப்பி.

“கிளையை மூடியாகி விட்டது. கணினியை அணைத்துவிட்டேன். நாளைக்குக் காலையில் ஒன்பது மணிக்கு வாருங்கள்!”

அதைக் கேட்டதும் பொப்பியின் சகோதரி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கிவிட்டாள். தெருவின் எதிர்ப் பக்கம் காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் இங்கேயே கவனித்துக்கொண்டிருந்தார்.

பொப்பி ஏதோவொரு மொழியில் உரக்கக் கத்தியதும் அழுதுகொண்டிருந்த சிறுமி தனது உதடுகளை இறுக மடித்து வாயை மூடிக்கொண்டே சத்தம் வராமல் விம்மினாள். அவளது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

விம்மியவாறே தனது கால்களைத் தரையில் மாறி மாறி உதைத்துத் தெருப் புழுதியைக் கிளப்பிகொண்டிருந்த அந்தச் சிறுமியைப் பார்த்து ஆந்ரே உண்மையிலேயே பதறிவிட்டான். “பொறுங்கள்…பொறுங்கள்…” எனச் சொல்லியவாறே நாற்காலியில் அமர்ந்து கணினிப் பொத்தானைச் சொடுக்கினான். விம்மிக்கொண்டிருந்த பெண் விம்மலுக்கிடையே பத்து எண்களைச் சொன்னாள். ஆந்ரே பணத்தை எடுத்துக் கொடுத்ததும், பணத்தை எண்ணிப் பார்க்காமலேயே சுருட்டி பொப்பி தனது உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு, தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடத் தொடங்கினாள். எதிர்ப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பொலிஸ்காரர் ‘என்ன?’ என்பது போல ஆந்ரேயைப் பார்த்தார். ஆந்ரே அவரைப் பார்த்து ஒரு சமாதானமான புன்னகையைச் செய்துவிட்டு, கிளையை மூடிவிட்டு, தனது சைக்கிளை மிதித்துக்கொண்டு சந்தைக்குப் போனான்.

அடுத்த நாள் காலையில், செய்தித்தாள் வாங்குவதற்காக வீதியோரப் பத்திரிகைக் கடையில் ஆந்ரே நின்றிருந்தபோது, அவனது தோளை யாரோ தட்டினார்கள். ஆந்ரே திடுக்கிட்டுத் திரும்புவதானால் கூட மிக மெதுவாகவே திரும்புவான். அதற்குள் தோளில் தட்டுவது யாராக இருக்கும் என யோசித்தான். அவனுக்குத்தான் நண்பர்கள் என்று யாருமே இல்லையே. வேலை! வேலையை விட்டால் மலிவு விலைச் சந்தை! சந்தையை விட்டால் அவனுடைய சிறிய அறை! வாரத்திற்கு ஒருமுறை தாயாரின் வீடு என்பதுதானே அவனது சிறிய வாழ்வு.

ஆந்ரேயின் தோளைத் தட்டியவள் பொப்பி. “மிஸ்டர் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். நேற்று உங்களுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லாமல் ஓடிவிட்டேன்.”

ஆந்ரே மங்கலான புன்னகையைச் செய்தவாறே “உங்களது சகோதரி எங்கே? தனியாக வரமாட்டீர்களே” என்று சும்மா கேட்டு வைத்தான்.

உடனேயே பொப்பியின் வட்ட முகம் மலர்ந்து விரிந்துபோனது. “நேற்று இரவே அவள் படகில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள். படகில் அனுப்பிவைக்கும் கடற்காகங்களுக்கு – அந்தக் குழுவை அப்படித்தான் எங்களது ஜங்கிள் முகாமில் குறிப்பிடுவார்கள் – பணம் கொடுக்க வேண்டும் என்பதால்தான் நேற்று உங்களைத் தொந்தரவு செய்துவிட்டோம். நீங்கள் சிரமம் பாராமல் பணத்தை எடுத்துக் கொடுக்கவில்லையென்றால், நேற்று அவளால் போயிருக்கவே முடியாது. நன்றி மிஸ்டர்” என்றாள்.

“பரவாயில்லை… என்னுடைய பெயர் ஆந்ரே. நீங்கள் தங்கையுடன் போகவில்லையா?”

“இல்லை. ஆனால், சீக்கிரமே நானும் போய்விடுவேன். அப்பா அனுப்பிவைத்த பணம் அவளை அனுப்ப மட்டுமே போதுமானதாக இருந்தது. அவள் சின்னப் பெண். அவளைத்தானே முதலில் அனுப்ப வேண்டும். வரும் வியாழக்கிழமை அப்பா மீண்டும் பணம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொள்ள உங்களிடம்தான் வருவேன். அடுத்த படகில் நான் இங்கிலாந்துக்குப் போய்விடுவேன். உங்கள் பெயர் என்னவென்று சொன்னீர்கள்…மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்…”

இரவு படுக்கையில் கிடந்து புரண்டுகொண்டிருந்த ஆந்ரே புகை பிடிப்பதற்காக எழுந்துசென்று, கடற்கரையை நோக்கியிருந்த ஜன்னலைத் திறந்தான். அந்த நேரத்திலும் கடற்கரையில் அகதிகள் உரக்கப் பேசியவாறே கூட்டம் கூட்டமாக அலைந்துகொண்டிருந்தார்கள். இன்று இரவும் ரப்பர் படகுகள் கடலைக் கடக்கவிருக்கின்றன என ஆந்ரே நினைத்துக்கொண்டான். பொப்பியும் இரண்டு நாட்களில் போய்விடுவாள் என்ற நினைப்பு அவனுள் வந்தபோது, அவனுக்குள் ஏனோ துயரம் பெருகியது. இது பொப்பிக்கான உபரித் துயரமா அல்லது எப்போதுமே தன்னோடு ஒட்டியிருக்கும் பெரும் துக்கம்தானா எனப் புரியாமல் அவன் குழம்பிப்போனான். உண்மையில், அவனில் துக்கம் மெல்ல மெல்லக் கரைந்துகொண்டிருக்கிறது என்பதைச் சற்றுச் நேரத்திலேயே உணர்ந்துகொண்டான். அவனுக்குள் பெரும் உளக் கொந்தளிப்பு ஏற்படவும், அந்தப் பதைபதைப்பைத் தாங்க இயலாமல் எழுந்து கட்டிலில் நின்றுகொண்டான்.

பொப்பியின் முகம் அவனுள் மெதுமெதுவாக நுழைந்து வெள்ளி முத்திரை போன்று பதிந்துகொண்டது. அவன் இதுவரை காதல் வயப்பட்டதில்லை. தனக்குள் தோன்றியிருக்கும் உணர்வு காதல்தானா? இது எப்படிச் சாத்தியம்? என்று அடுத்துவந்த நாட்களில் அவன் தத்தளித்துக்கொண்டிருந்தான்.

வியாழக்கிழமை காலையிலிருந்து அவன் பொப்பிக்காகக் காத்துக்கொண்டிருந்தான். மதிய உணவுக்குக்கூட கிளையை மூடாமல் பக்கத்துக் கடையில் ஒரு  வரட்டு ‘சாண்ட்விச்’ வாங்கிப் பாதியைச் சாப்பிட்டுவிட்டு மீதியைத் தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். வெறுமனே கணினியைத் தட்டிக்கொண்டிருந்தான். பொப்பியின் பாஸ்போர்ட் விவரங்கள் கணினியில் இருந்தன. கிளையை மூடும் நேரமாகியும் பொப்பி வரவில்லை. ஆந்ரே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாகவே கிளையை மூடினான். பொப்பி ஏன் வரவில்லை? என்ன நடந்திருக்கும்? என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கியவாறே தனது சைக்கிளில் ஏறி ஆந்ரே அமர்ந்தபோது, காவல் கூண்டுக்குள் இருந்த பொலிஸ்காரர் “என்ன தம்பி இன்று கிளையைத் தாமதமாக மூடுகிறாய்? அய்ந்து மணிக்குமேல் ஒரு விநாடிகூட நீ இங்கே இருக்கமாட்டாயே…” என்று கேட்டார்.

ஆந்ரே ஏதோ ஒரு யோசனையில் சைக்கிளை மிதித்தான். மூன்று மிதிகளில் அது தெருவைக் கடந்து காவல் கூண்டருகே போய் நின்றது. “மிஸியூ. ஜோன் மிஷெல்… ஏன் இன்று நகரம் வழமையைவிட அமைதியாக இருக்கிறது? தெருவில் மனித நடமாட்டமே இல்லையே. ஏதாவது அகதிகள் பிரச்சினையா?” என்று ஆந்ரே பொலிஸ்காரரைக் கேட்டான்.

“கெட்டது போ! தம்பி நீ கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே கனவு காண்பவன். தெருவில் எப்போதும் போல அகதிகள் அலைந்துகொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களை யாருமே ஒன்றும் செய்துவிட முடியாது. ஒரு மனிதனிடம் வதிவிட அனுமதி இல்லை என்ற காரணத்திற்காக அவனைச் சிறையில் அடைக்கக்கூடாது என்றொரு பாழாய்ப்போன சட்டம் இந்த நாட்டில் இருக்கிறது. அந்தச் சட்டம் மட்டும் ஒழிக்கப்பட்டால், நீ சொல்வது போல உண்மையிலேயே இந்த நகரம் அமைதியாகத்தான் இருக்கும்” என்றார் பொலிஸ்காரர்.

சைக்கிளை மிதித்துக்கொண்டிருக்கையில் பொப்பியின் ஞாபகமே ஆந்ரேயை முழுவதுமாக நிறைத்திருந்தது. சைக்கிள் அவனது அறையைச் சிறிய தயக்கத்துடன் கடந்து, ஜங்கிள் முகாமை நோக்கிச் சென்றது.

2

ஜங்கிள் முகாம், கலே நகரத்தை ஒட்டியிருந்த சிறு காட்டில் தோன்றியிருந்தது. இந்த முகாம் பிரெஞ்சு அரசாங்கத்தாலோ அல்லது வேறெந்தத் தொண்டு நிறுவனங்களாலோ அமைக்கப்பட்டதல்ல. அகதிகளால் உருவாக்கப்பட்ட இந்த முகாமை ‘அய்ரோப்பாவின் மிகப் பெரிய சேரி’ என்றுதான் ஊடகங்கள் வர்ணித்தன.

முகாமில் காணப்பட்ட தேசிய இனங்களையும் மொழிகளையும் கணக்கெடுப்பது அரசாங்கங்களாலேயே இயலாத காரியம். விவிலியக் கதையில் வரும் அழிந்த பாபேல் கோபுரம் போல அந்த முகாம் இருந்தது. அரபுக்கள், ஈரானியர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், சீனர்கள், ஆபிக்கர்கள், வங்காளிகள், இந்தியர்கள், இலங்கையர்கள், அல்பேனியர்கள் எனப் பல இனத்தவர்கள் அங்கே இருந்தார்கள்.

ஆயிரக்கணக்கான ஒழுங்கற்ற சிறு கூடாரங்கள் அந்தச் சிறு காட்டில் அகதிகளால் அமைக்கப்பட்டிருந்தன. மின்சாரம், சூடேற்றும் கணப்புகள், சுகாதாரம் எதுவுமற்ற அந்தக் கூடாரங்களில் பசி பட்டினியும் கடுங்குளிரும் நோயும் நிறைந்திருந்தன. மனிதக் கடத்தல்காரர்களைத் தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, நள்ளிரவில் கூடாரங்களுக்குள் நுழைந்து அகதிகளின் முகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சித் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும் பிரெஞ்சுக் காவல்துறையின் தொல்லை ஒவ்வொரு நாளுமே இருந்தது. தங்களுடைய நிம்மதியான உறக்கம் முப்பத்துமூன்று கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது, அதை ஒருநாள் கண்டடைவோம் என்று அகதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்தத் திடீர் முகாமில் முனைப்புள்ள சில அகதிகளால் சிறிய மளிகைக் கடைகளும் உணவகங்களும் கூட அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவகங்களுக்கு முன்னால் ‘காபூல் ரொஸ்ரோரண்ட்’, ‘தாஜ்மகால் தர்பார்’, ‘இஸ்தான்புல் கஃபே’ என்றெல்லாம் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. பொரித்த கோழிக்கால் விற்கும் கடையொன்றுக்கு ’10 டவுனிங் ஸ்ட்ரீட்’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

மரத் தூண்களாலும் தடிகளாலும் பலகைகளாலும் சிறிய மசூதி, கிறிஸ்தவ தேவாலயம், இந்துக் கோயில் போன்றவையும் முகாமில் அமைக்கப்பட்டிருந்தன. அகதிகளிலேயே மதகுருமார்களும் இருந்ததால் அந்த வழிபாட்டிடங்கள் குழப்பமில்லாமல் இயங்கி வந்தன.

அந்த முகாமில் ஏழாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களில் ஆயிரம் குழந்தைகளும் இருந்தன. முகாமிலிருந்த அகதிகளுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்களையும் குளிர்காப்பு ஆடைகளையும் மருந்துகளையும் விநியோகித்தன. என்றாலும், அவை அகதிகளுக்குப் போதுமானவையாக இருக்கவில்லை. விநியோகம் நடக்கும் நாட்களிலெல்லாம் அகதிகளிடையே தள்ளுமுள்ளுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்படுவதுண்டு.

முகாமில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். இவ்வாறான ஒரு அகதி முகாம் இதற்கு முன்பு உலகில் எங்கும் இருந்ததாகத் தெரியவில்லை. பெரும்பாலும் ஒரே நாட்டை அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டுதான் அகதி முகாம்கள் அமைக்கப்படும். அந்த முகாம்களை ஓர் அரசாங்கமோ அல்லது தொண்டு நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்துவதாக இருக்கும். ஆனால், இந்த அகதி முகாம் அவ்வாறனதல்ல. பெருமழை, பெரும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் போல் தோன்றிய முகாம் இது.

ஒரு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் இரண்டு இனத்தவரோ அல்லது இரண்டு மதத்தவரோ நேருக்குநேர் போர் புரிந்திருப்பார்கள். அவர்களிடையே காலங்காலமாகப் பகையுணர்ச்சியும் வெறுப்பும் மண்டிக் கிடக்கும். ஆனால், ஜங்கிள் முகாமிலோ இந்த இரண்டு பிரிவினரும் சேர்ந்து தங்கியிருக்க வேண்டியிருந்தது. பல நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகள் கூடாரங்களின்மீது ஏற்றப்பட்டு அலங்கோலமாக இருந்தன. அந்தக் கொடிகள் எதிர்த் தரப்பால்  இரவுகளில் கிழித்து எறியவும்பட்டன. இதனால், அங்கே அடிக்கடி மோதல்களும் கைகலப்புகளும் ஏற்பட்டன. இதற்கொரு முடிவு கட்டுவதற்காக அங்கே பேச்சுவார்த்தைகளும் அகதிகளால் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து கடைசியில் ஒரு முடிவும் எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி, கூடாரங்களில் பறந்த எல்லா நாடுகளினதும் இயக்கங்களினதும் கொடிகளும் இறக்கப்பட்டு, முகாமின் நடுவில் ஒரேயொரு கொடி மட்டும் உயரமான கம்பத்தில் ஏற்றப்பட்டது. அது பிரித்தானியாவின் ‘யூனியன் ஜாக்’ கொடி.

ஜங்கிள் முகாமின் உச்சியில் யூனியன் ஜாக் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்ட பிரெஞ்சு அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த யூனியன் ஜாக் கொடியை பிரெஞ்சு மண்ணில் நாட்டுவதற்கு ஆங்கிலேயர்கள் நூறாண்டு காலம் போர் செய்தும் அது நடக்காமல் போனது. ஆனால், இந்த அகதிகள் அதை நிமிடத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆந்ரே வீதியோரத்தில் சைக்கிளை நிறுத்திவைத்து, அந்தக் கொடியைக் கொஞ்ச நேரம் அண்ணாந்து பார்த்தவாறே இருந்தான். உண்மையில், அவன் இப்போதுதான் அந்தக் கொடியை நேரில் பார்க்கிறான். அவன் இதுவரை இங்கிலாந்துக்குச் சென்றதில்லை.

ஜங்கிள் முகாம் மாரிகாலக் கடல் போன்று இரைந்துகொண்டிருந்தது. காடு முழுவதும் மனிதர்கள் திரிந்துகொண்டிருந்தார்கள். இதில் எங்கே போய், எப்படிப் போய் பொப்பியைக் கண்டுபிடிப்பது என ஆந்ரேக்குப் புரியவில்லை. வீதியிலிருந்து கிளைத்த ஒரு ஒற்றையடிப் பாதை புற்களுக்குள்ளால் ஜங்கிள் முகாமை நோக்கித் தாழ்வாகச் சென்றது. ஆந்ரேயின் சைக்கிள் அந்த ஒற்றையடிப் பாதையால் இறங்கிச் சென்றது.

ஆந்ரே அகதிக் கூடாரங்களை நெருங்கியபோது, அங்கே ஏற்கெனவே தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒரு திறந்த வாகனத்திலிருந்து அகதிகளுக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னே மிக நீண்ட வரிசை வளைந்து வளைந்து நின்றுகொண்டிருந்தது. பொப்பி ஏதாவது நோயில் விழுந்து, அந்த வரிசையில் நின்றிருப்பாளோ என்றுகூட ஆந்ரேக்குக் கற்பனை வந்தது. சைக்கிளைத் தள்ளிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே போனான். ஒரு தேநீர்க் கடையைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு, அங்கேயிருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

தேநீர்க் கடையை நடத்திக்கொண்டிருந்த கிழவர் நீண்டதாடி வைத்து, தலையில் தொப்பி அணிந்திருந்தார். பிரெஞ்சு மொழி நன்றாகப் பேசினார்.

“நீங்கள் மருத்துவக் குழுவோடு வந்தவர் என நினைக்கிறேன். உங்கள் முகத்தைப் பார்த்தாலே மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாமே. தேநீர் அருந்துகிறீர்களா? புதினாவும் ஏலக்காயும் கலந்த கறுப்புத் தேநீர் உள்ளது.”

ஆந்ரே தேநீரைப் பருகியவாறே அந்தக் கிழவரிடம் “அய்யா… நான் பொப்பி என்ற ஒரு பெண்ணைத் தேடி வந்தேன்” என ஆரம்பித்து, அவளது பாஸ்போர்ட்டில் அவன் பார்த்து ஞாபகத்தில் வைத்திருந்த அவளது வயது, நாடு போன்ற விவரங்களையும் சொல்லிவிட்டு “அவளை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

கிழவர் வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக்கொண்டார். பிறகு “பொப்பி… இந்தப் பெயரை இங்கேதான் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதே. எனக்கு எழுபது வயதாகிறதல்லவா…காலையில் கேட்டது மதியம் மறந்துவிடுகிறது” என்றவாறே கண்களைச் சுருக்கினார்.

“அவளது தங்கைகூட சமீபத்தில் இங்கிலாந்துக்குப் போய்விட்டாள்…” என்றான் ஆந்ரே.

“நீங்கள் நாளைக்கு வாருங்களேன். நான் விசாரித்து வைக்கிறேன். நாளைக்கு கறுவாப்பட்டையும் எலுமிச்சை இலைகளும் போட்டுத் தேநீர் தயாரிக்கவுள்ளேன்.”

ஆந்ரே தனது மேலங்கிப் பைக்குள் இருந்து சதுர வடிவமான ‘வெஸ்டர்ன் யூனியன்’ அட்டையை எடுத்து அந்தக் கிழவரிடம்  கொடுத்தவாறே “ஒருவேளை நான் சொல்லும் பொப்பியை நீங்கள் கண்டுபிடித்தால், இந்த அட்டையிலுள்ள அலைபேசி இலக்கத்திற்கு அழைக்கச் சொல்லுங்கள்” என நம்பிக்கையில்லாமலேயே சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டான். இரவு கவிந்துகொண்டிருந்ததால் அந்தக் காடு முழுவதும் மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஆந்ரே வீதிக்கு வந்ததும் ஜங்கிள் முகாமை ஒருதடவை திரும்பிப் பார்த்தான். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் இறங்கியிருப்பது போல் அந்தக் காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அடுத்தநாள் காலையிலிருந்தே அய்ந்து நிமிடத்துக்கு ஒருமுறை தனது அலைபேசியை எடுத்து ஆந்ரே பார்த்தவாறேயிருந்தான். அன்றைக்கென்று ஆங்கிலேய மாலுமிகள் கூட்டமொன்று நாணய மாற்றுச் செய்வதற்காக வந்து அவனை மொய்த்துப் பிடித்துக்கொண்டது. அதைப் பெரிய தொந்தரவாகக் கருதிக்கொண்டே தனது கவனம் முழுவதையும் ஆந்ரே அலைபேசியிலேயே வைத்திருந்தான். மாலையாகி, கிளையை மூடும் நேரமும் வந்தபோதுதான், முகப்புக் கண்ணாடியில் பொப்பி மெல்லத் தட்டினாள்.

“ஆந்ரே… என்னைத் தேடி முகாமுக்கு வந்தீர்களா என்ன! இந்த அட்டையைத் தேநீர்க்கடை அய்யா எனது கூடாரத்திற்கு வந்து கொடுத்தார்.”

“ஆம். எனக்கு அந்தப் பக்கம் ஒரு வேலையிருந்தது. அப்படியே முகாமுக்கும் வந்து எட்டிப் பார்த்தேன்.நேற்று வியாழக்கிழமை. பணம் பெற்றுக்கொள்ள நீங்கள் வரவில்லை…”

“கடவுள் உங்களுக்கு நன்மை செய்வார் ஆந்ரே! அப்பா அலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளார். அவரால் பணம் அனுப்ப முடியவில்லையாம். எங்கள் பகுதியில் போர் இப்போது மிக உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதால், எங்களது பழத்தோட்டத்தை விலைக்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தவர்கள் பின்வாங்கிவிட்டார்களாம். அப்பா என்னை இன்னும் சில நாட்கள் காத்திருக்கச் சொன்னார். எப்படியும் பணம் அனுப்பிவிடுவார். நீங்கள் கிளையை மூடும் நேரத்தில் வந்து பணத்தைத் தருமாறு உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கமாட்டேன்” என்றவாறே தலையைச் சாய்த்து வணக்கம் சொல்லிவிட்டு, பொப்பி அங்கிருந்து புறப்பட்டாள்.

ஆந்ரே கிளையை மூடும்போது, பொப்பி கடலைக் கடந்துவிடுவாள் என்ற எண்ணம் அவனுக்குள் மீண்டும் துக்கத்தைப் பெருக்கலாயிற்று. இது என்ன மாதிரியான பைத்தியகாரத் துக்கம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

அவன் சைக்கிளில் ‘தேசிய வீரர்கள் நினைவுச் சின்னம்’ அமைந்திருந்த சதுக்கத்தைக் கடந்தபோது, பொப்பி வீதியில் நடந்து போய்க்கொண்டிருப்பதைக் கண்டான். அவளருகே ஆந்ரேயின் சைக்கிள் தானாகவே நின்றது.

“ஆந்ரே என்ன இந்தப் பக்கம்?” என்று பொப்பி கீழுதட்டைக் கோணிக்கொண்டே கேட்டாள். “எனது அறை இந்த வீதியில்தானே இருக்கிறது. அதைக் கடந்துதான் நீங்கள் ஜங்கிள் முகாமுக்குப் போக வேண்டும்” என்றான் ஆந்ரே. சைக்கிளைத் தள்ளியவாறே பொப்பியோடு சேர்ந்து நடந்துகொண்டே கேட்டான்:

“உங்களின் தங்கை இங்கிலாந்தில் எப்படியிருக்கிறாள்? உங்களுக்காகக் காத்திருப்பாளே…”

“உண்மைதான். அவள் எனக்காகக் காத்திருப்பாள். அவள் என்னைப் போல் தைரியமானவள் கிடையாது. எங்களது அம்மா போல் எல்லாவற்றுக்கும் பயந்தவள். அதுதான், அன்று அவள் தெருவில் நின்று எப்படிக் குழறி அழுதாள் என்று நீங்கள் பார்த்தீர்களே! இங்கிலாந்துக்குப் போவதற்கு அவள் படு உற்சாகமாகத்தான் இருந்தாள். ஆனால், அன்றிரவு கூடாரத்திலிருந்து அவள் கடற்காகங்களோடு கிளம்பும்போது, என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று சொல்லிவிட்டாள். சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவறவிடக்கூடாது எனச் சொல்லி, அவளைத் தைரியப்படுத்தி அனுப்பிவைத்தேன். ஒரு அகதியின் எதிர்காலத்தை அந்த அகதி தீர்மானிப்பதில்லை. சந்தர்ப்பங்கள்தானே அதைத் தீர்மானிக்கின்றன. இல்லையா ஆந்ரே… அவள் அந்தக் கரையைப் போய்ச் சேர்ந்ததும் இங்கிலாந்து அரசாங்கம் அவளைப் பொறுப்பெடுத்து மான்செஸ்டர் நகரத்திலுள்ள ஒரு விடுதியில் வசதியாகத் தங்க வைத்திருக்கிறது எனக் கடற்காகங்கள் என்னிடம் சொன்னார்கள். இங்கிலாந்து எண்ணிலிருந்து எனக்கு இரண்டு அழைப்புகள் வந்திருந்தன. ஜங்கிள் முகாமில் அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காததால் அழைப்பைத் தவறவிட்டுவிட்டேன். அவள் பொதுத் தொலைபேசிக் கூண்டிலிருந்து அழைத்திருக்க வேண்டும்…” என்று பொப்பி பேசிக்கொண்டே போக, ஆந்ரேக்கு ஒரேயொரு யோசனைதான் அப்போது மூளைக்குள் ஓடியது. பொப்பி எவ்வளவு தெளிவாக, அர்த்தமாகப் பேசுகிறாள். எனக்கு இவ்வளவு வயதாகியும் இதெல்லாம் வரவில்லையே. கிளையைத் திறந்து வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கும் இந்த வேலை போய்விடுமா? போனால் என் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் இரவு முழுவதும் பினாத்திக்கொண்டு இருக்கிறேனே.

இருவரும் பேசிக்கொண்டே ஆந்ரேயின் அறையை நெருங்கியபோது “பொப்பி எனது அறைக்கு வந்து என்னோடு தேநீர் அருந்திச் செல்வீர்களா?” என்று ஆந்ரே சட்டெனக் கேட்டான்.

“ஆந்ரே!” என்று வியப்புடன் கண்களை விரித்த பொப்பி “போகலாம்” என்றாள்.

இருவரும் எதிரெதிரே அமர்ந்து தேநீர் அருந்தும்போது, பொப்பி நாற்காலியில் சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு, தேநீர் மேசையில் முழங்கைகளை ஊன்றிக்கொண்டாள். அறையைச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள்.”உங்களது அறை மிகச் சுத்தமாகவும் கதகதப்பாகவும் இருக்கிறது ஆந்ரே. எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு என்னுடைய தேகம் கதகதப்பாகிறது” என்றாள்.

“பொப்பி உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். எனக்கு அந்த விஷயம் புரியவே இல்லை. ஜங்கிள் முகாமிலுள்ளவர்கள் பிரான்ஸிலேயே அகதியாகப் பதிவு செய்து இருக்கலாமே. ஏன் உயிரைப் பணயம் வைத்து ரப்பர் படகுகளில் கடலைக் கடக்கிறீர்கள்?”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் ஆந்ரே. சிலருக்கு இங்கிலாந்தில் உறவுகள் இருப்பதால் அவர்களிடம் போகிறார்கள். பிரான்ஸை விட இங்கிலாந்தில் அகதிகளுக்கான சலுகைகள் அதிகம், இலகுவாக வேலை கிடைக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சிலர் கடலைக் கடக்கிறார்கள். ஆனால், நான் போகும் காரணம் வேறு.”

“உங்கள் தங்கை அங்கே இருக்கிறாள்…”

அது மட்டும் இல்லை. எங்களது கிராமத்திலிருந்து கிளம்பும்போதே இங்கிலாந்துதான் இறுதி நிலம் என்ற உறுதியான முடிவோடுதான் புறப்பட்டேன். யாராவது ஒருவர் என்னைப் பிரெஞ்சுக் குடிமகள் ஆக்குகிறேன் என்று சொன்னால்கூட அதை மறுத்துவிட்டு, நான் இங்கிலாந்துக்குத்தான் போவேன்.”

ஆந்ரேக்கு ஏமாற்றம் தலைக்கேறி அடித்தது. அவன் ஒரு பரிதாபமான புன்னகையைச் செய்து அதைச் சமாளித்தவாறே “ஏன் அப்படி ஒரு உறுதியான தீர்மானம்? என்று கேட்டான்.

“உங்களிடம் அதைச்  சொல்லலாம் ஆந்ரே… தவறில்லை. எங்களது குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். சொந்தமாகப் பழத் தோட்டங்கள் இருந்தன. காய்கறி விவசாயமும் உண்டு. பெற்றோருக்கு நாங்கள் இரண்டு பிள்ளைகள்தான். எங்களது வீடு கிராமத்திற்குச் சற்று ஒதுக்குப்புறமாகப் பழத் தோட்டங்களுக்கு நடுவே இருக்கிறது.

யுத்தம் எங்களது பகுதிக்கு வந்தபோது எல்லாமே குலைந்துபோயின. பத்துப்பேர் ஆயுதங்களுடன் அணிவகுத்து வந்து ஒரு பெண்ணை அவளது வீட்டிலிருந்து தூக்கிச் செல்வதை நினைத்துப் பாருங்கள். பயந்து போய்விடுவீர்கள். ஆனால், அவர்களிடம் உதைவாங்கித் தரையில் இரத்தத்திற்குள் விழுந்து கிடந்த அப்பா “தைரியமாக இரு! பொப்பி தைரியமாக இரு!’ என்று கத்தினார். தங்கை அப்போது பாடசாலைக்குப் போயிருந்ததால் தப்பித்துக்கொண்டாள்.

என்னைத் தூக்கிச் சென்றவர்களுக்கு அவர்களது முகாம் வரை என்னைக் கொண்டு செல்லப் பொறுமையில்லை. வழியிலேயே புதர்களைக் கண்ட இடத்திலெல்லாம் என்னை உள்ளே தூக்கிப்போட்டு என்மீது படுத்துக்கொண்டார்கள். அவர்கள் என்னை முகாமுக்குக் கொண்டு சென்றபோது, எனது உடலின் எல்லாத் துவாரங்களிலிருந்தும் இரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்! எல்லாத் துவாரங்களிலிருந்தும்!”

ஆந்ரேயின் கால்கள் நடுங்கத் தொடங்கின. அவன் சட்டென மேசைக்கு அடியில் கால்களை நுழைத்துக்கொண்டான். ஏன் இவளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்? இவள் எப்போது பதிலை நிறுத்துவாள்? என மருகத் தொடங்கினான். பொப்பி தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள்:

“அவர்கள் யாருக்கும் எங்களுடைய மொழி தெரியாது. எங்களுக்கும் அவர்களுடைய மொழி தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலமும் பேசத் தெரிந்திருக்கவில்லை. என்னைப் போலவே பிடித்து வரப்பட்டிருந்த பெண்கள் சாறு பிழிந்த சக்கைகளானதும் அவர்களை ஒவ்வொருவராகச் சுட்டுக் கொன்றார்கள். என்னையும் இரண்டொரு நாட்களில் சுட்டுவிடுவார்கள் என நான் எண்ணினேன். ஆனால், நான் தைரியமாகவே இருந்தேன். எனது உடலில் சக்தி, இரத்தம், வெப்பம் எல்லாமே போயிருந்தாலும் தைரியம் மட்டும் என்னோடிருந்தது.

அந்த முகாமுக்குப் புதிதாக ஓர் அதிகாரி வந்தான். அவன் இளைஞன். அவன் எனது முகத்தைக் கைகளால் நிமிர்த்திப் பார்த்தபோது, நான் ஆங்கிலத்தில் அவனிடம் பேசினேன். அந்த இளைஞன்தான் என்னைக் காப்பாற்றினான் என்பதைக் காட்டிலும் ஆங்கிலமே என்னைக் காப்பாற்றியது என்றுதான் சொல்வேன். இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன்.”

ஆந்ரே முழுவதுமாகத் துக்கத்துள் மூழ்கியிருந்தான். இப்படியான கதைகளைக் கேட்கும் சக்தி அவனுக்கு இல்லை. அழுகையைப் பெரும்பாடுபட்டு அடக்கிக்கொண்டிருந்தான்.

3

அதற்குப் பின்பு ஆந்ரே, பொப்பியைச் சந்திக்கவேயில்லை. அவள் வருவாள் என அவன் காத்துக்கொண்டிருக்கவுமில்லை. பொப்பி அவனது கழுத்துவரை துக்கத்தை நிரப்பிவிட்டுப் போயிருந்தாள். அவன் கண்களை மூடியவாறே துக்கத்தில் அமிழ்ந்திருந்தான். பொப்பி என்னவானாள் என எப்போதாவது யோசனை வரும். அவள் தெளிந்த புத்தியுள்ள பெண், கண்டிப்பாக ஏதோவொரு வழியில் இங்கிலாந்துக்கு -அவளது இறுதி நிலத்திற்கு – போய்ச் சேர்ந்திருப்பாள் என நினைத்துக்கொள்வான்.

மூன்று மாதங்கள் கழிந்தபோது, குளிர் மடிந்து வசந்தம் தொடங்கியது. ஜங்கிள் அகதி முகாமை முற்றாக அகற்றப் பிரெஞ்சு அரசாங்கம் முடிவெடுத்தது. அதிரடிக் காவல்படை ஜங்கிள் முகாமுக்குள் இறக்கப்பட்டு, அகதிகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக பிரான்ஸின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். முகாமில் அமைக்கப்பட்டிருந்த அகதிக் கூடாரங்கள் பிரிக்கப்பட்டு, குப்பை வண்டிகளில் ஏற்றப்பட்டன. அகதிகளால் அமைக்கப்பட்டிருந்த தேவாலயமும் பள்ளிவாசலும் கோவிலும் கடைகளும் புல்டோசர்கள் வைத்து உடைத்துத் தள்ளப்பட்டன. அந்தச் சிறு காட்டில் அதீத மனித நடமாட்டத்தால் செத்துக் கிடந்த புற்கள் இயந்திரங்களால் ஆழ உழுது புரட்டப்பட்டபோது, நிலத்துக்குள் ஒரு பெண்ணின்  சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. ‘அந்த பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் அங்கே புதைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று சட்ட மருத்துவ நிபுணர்களின் அறிக்கை தெரிவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

ஆந்ரே காலை ஒன்பது மணிக்குக் கிளையைத் திறந்துவிட்டு, தனது நாற்காலியில் அமர்ந்தவாறே பத்திரிகையை விரித்தபோதுதான் அந்தச் செய்தியை அறிந்தான். புதைக்கப்பட்டிருந்த உடல் பொப்பியுடையதாக இருக்குமோ என ஆந்ரேக்கு ஏனோ சந்தேகம் எழுந்தது. அவளாக இருக்காது என்றும் மனம் சொன்னது. அவன் தடுமாறினான். மெல்ல நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து, மெதுவாக நடந்து வீதியைக் கடந்து காவல் கூண்டை நோக்கிச் சென்றான். காவல் கூண்டுக்குள் நின்றிருந்த பொலிஸ்காரர் “ஏய் தம்பி! சாலையில் வாகனங்களைக் கவனி! தூக்கத்தில் நடக்கும் வியாதியும் உனக்கு வந்துவிட்டதா?” என்று சத்தம் போட்டார்.

“மிஸியூ.ஜோன் மிஷெல்…ஜங்கிள் முகாமில் ஒரு பெண்ணின் உடல் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகச் செய்தி படித்தேன். என்னதான் நடக்கிறது கலே நகரத்தில்? உங்களுக்கு இதுபற்றி ஏதாவது தெரியுமா?”

அந்தப் பொலிஸ்காரர் சற்றே குரலைத் தாழ்த்தியவாறே “நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன் தம்பி… விஷயம் உன்னோடேயே இருக்கட்டும். கொலையாளிகளில் ஒருவனை இன்று அதிகாலையில் பெல்ஜியத்தில் வைத்து நமது ஆட்கள் கைது செய்துவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். அவன் குற்ற ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துவிட்டானாம். ஜங்கிள் முகாம் விஷயமென்றால் எங்களது ஆட்கள் வேகமாகத்தான் செயற்படுகிறார்கள் பார்த்தாயா” என்றார்.

ஆந்ரே மறுபடியும் வீதியைக் கடந்து, கிளைக்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு வெறுமனே கணினியைத் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மூளை ஜங்கிள் முகாமில் அலைந்துகொண்டிருந்தது. அப்போது, அலைபேசி மணி ஒலித்தது. சோர்வுடன் அலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு “வணக்கம்! வெஸ்டர்ன் யூனியன்” என்றான். அவனது காதிற்குள் கனத்த குரல் எதிரொலியுடன் கேட்டது:

“ஆந்ரே! நான் பொப்பி. லண்டனிலிருந்து பேசுகிறேன்…”

ஆந்ரே எதுவும் பேசாமல் அலைபேசியைக் காதுக்குள் வைத்தவாறே முகப்புக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது சிறிய விழிகள் அங்குமிங்குமாக அசைந்துகொண்டிருந்தன.

“ஆந்ரே…பொப்பி பேசுகிறேன். கேட்கிறதா?”

“பொப்பி! உண்மையிலேயே நான் ஒரு கடைந்தெடுத்த முட்டாள். உங்களைக் கொன்று புதைத்துவிட்டார்கள் என்று இப்போதுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.”

“அது என்னுடைய தங்கை. நான் இங்கிலாந்து வந்தவுடனேயே அவளைத் தேடியலைந்துவிட்டு, அவளைக் காணவில்லை என இங்கிலாந்துக் காவல்துறையிடம் முறையீடு செய்திருந்தேன். இப்போதுதான் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்துத் தகவலைச் சொன்னார்கள். என்னால் பிரான்ஸுக்கு வர முடியாது. அங்கே எனக்குத் தெரிந்தவர் நீங்கள் ஒருவர்தான். அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனக் கொஞ்சம் விசாரித்து எனக்குச் சொல்கிறீர்களா?”

“நிச்சயம் விசாரித்துச் சொல்கிறேன். இந்தத் துயரம் நிகழ்ந்தே இருக்கக்கூடாது” எனச் சொன்ன ஆந்ரே ஒரு விநாடி நிறுத்தி “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் பொப்பி?” என்று கேட்டான்.

“தைரியமாக இருக்கிறேன்” என்றாள் பொப்பி.

Art : meithu

https://thadari.com/poppy-is-a-nickname-shobasakthi/

அம்மனும் அமிர்தமும் (நாடகம்)

1 month 1 week ago
🤣.................... 'மூக்குத்தி அம்மன்' படம் வருவதற்கு சில வருடங்கள் முன்னரேயே இதை நான் எழுதிவிட்டேன்.................... ஆர். ஜே. பாலாஜி மேல் ஒரு வழக்கு போடலாம் போல் தெரிகின்றதே....................🤣. புதுமைப்பித்தன் இறங்கி வந்து அவருடைய கதையை திருப்பி திருப்பி எழுதும் எல்லோருக்கும் ஒரு போடு போடப் போகின்றார்...................🤣.

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

1 month 1 week ago
"தந்தை புக்கரின் கட்டளையை சிரமேற்கொண்டு, கம்பண்ணர் காஞ்சியிலிருந்து தன் படையுடன் புறப்பட்டார். வழியில் ஶ்ரீரங்கத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தானின் பிரதிநிதியைத் தோற்கடித்து விட்டு அங்கே தன்னுடைய பிரதிநிதிகளை நிறுத்திவிட்டு மதுரை நோக்கிச் சென்றார். பொயு 1371ம் ஆண்டு மதுரையை அடைந்த கம்பண்ணரின் படைகளோடு அங்கே காத்திருந்த சுல்தானின் படைகள் மோதின. இதில் கம்பண்ணரோடு போரிட்ட சுல்தானின் பெயர் பற்றிய பல சர்ச்சைகள் இருந்தாலும், மதுரை வரலாற்றின் படி சிக்கந்தர் ஷா என்பதே மதுரை சுல்தானகத்தின் கடைசி சுல்தானின் பெயர் என்பதால், சிக்கந்தரே விஜயநகர கம்பண்ணரோடு போர் செய்தவன் என்று கொள்ளலாம்." https://i.ibb.co/N6rcw4Kg/sikkandar.jpg Jumpsharesikkandar.jpgShared with Jumpshare "அறுபடை ஐம்படைவீடு கொண்ட திருமுருகா.. திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா.." மதசார்பற்ற திராவிட அரசு இப்படித்தான் முடிவு எடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

1 month 1 week ago
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடை 04 Dec, 2025 | 03:54 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, இன்று (04) HUTCH நிறுவனம் 600 இலட்சம் ரூபா நிதி நன்கொடையை வழங்கியது. ஹச்ஸன் ஆசியா டெலிகொம் ஹொங்கொங் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏன் சென் மற்றும் ஹட்ச் நிறுவனத்தின் இலங்கைப் பிரதான நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா ஆகியோர் இதற்கான காசோலையை இன்று வியாழக்கிழமை (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கி வைத்தனர். பின்னர், ஹட்ச் நிறுவன அதிகாரிகளுடன் உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச அழைப்புகள், டேட்டா மற்றும் குறுஞ்செய்தி வழங்குதல், நடமாடும் சார்ஜிங் நிலையங்களை நிறுவவும், தகவல் தொடர்பு கோபுரங்களை அவசரமாக சீர்செய்யவும் விமானப் பொறியியலாளர்களை பணியமர்த்தியவும் HUTCH நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) தலைவர் வருண ஸ்ரீ தனபால, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பந்துல ஹேரத், ஹட்ச் (பதில் பிரதான நிதி அதிகாரி) ஷகில விஜேசிங்க, ஹட்ச் சந்தைப்படுத்தல் தொடர்பு முகாமையாளர் திலானி பொன்சேகா, ஹட்ச் இன் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி திசர நிபுன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/232445

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

1 month 1 week ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 100 இலட்சம் ரூபா நிதி நன்கொடை. Published By: Vishnu 04 Dec, 2025 | 07:10 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு அன்றாடம் நன்கொடைகள் கிடைத்துக்கொண்டிருப்பதுடன், அதன்படி, வியாழக்கிழமை (04) Royal Electronics மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிதி நன்கொடைகளை வழங்கின. அதன்படி, Royal Electronics நிறுவனத்தின் தலைவர் பெட்ரிக் பெர்னாண்டோ, 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலை மற்றும் SITREK SECURITY SOLUTIONS நிறுவனத்தின் இணைத் தலைவர் ஜீவக விஜேசிங்க, பிரதான நிறைவேற்று அதிகாரி மேஜர் (ஓய்வு) ஆனந்த ரொட்ரிகோ ஆகியோர் 50 இலட்சம் ரூபாவுக்கான காசோலையையும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தனர். https://www.virakesari.lk/article/232463

புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன?

1 month 1 week ago
புதின் வருகை: இந்தியா, ரஷ்யாவின் நல்லுறவில் குறுக்கிடப் போகும் சிக்கல்கள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல சிரமங்களுக்கு மத்தியிலும் இந்தியாவும் ரஷ்யாவும் உறவில் இணக்கத்தைப் பேணி வருகின்றன. கட்டுரை தகவல் ஜுகல் புரோஹித் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்தப் பயணத்தில் இருந்து இந்தியா அதிகம் எதிர்பார்ப்பது என்ன?" - இந்தக் கேள்வியை நான் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டேன். "நாங்கள் ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறோம். தற்போது நாங்கள் ரஷ்யாவிடம் அதிகமாக வாங்குகிறோம், ஆனால் மிகக் குறைவாகவே விற்கிறோம். இது ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது. அதைச் சரிசெய்ய விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். சற்று நேரத்திற்குப் பிறகு, செய்தியாளர்களுடனான வேறொரு உரையாடலில், ரஷ்யாவும் இதை ஒப்புக்கொண்டது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், "எங்கள் இந்திய நண்பர்கள் கவலைப்படுவது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை வாங்க விரும்புகிறோம்," என்றார். இதுவொரு தற்செயல் நிகழ்வா அல்லது இந்தியாவும் ரஷ்யாவும் முற்றிலும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? அல்லது உலகுக்கு எதைக் காட்ட வேண்டும் என்பதில் இரு நாடுகளின் சிந்தனையிலும் வேறுபாடு உள்ளதா? பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவம் பற்றி இந்திய அதிகாரிகள் அதிகம் பேசாவிட்டாலும், பெஸ்கோவ் அது குறித்து வெளிப்படையாகப் பேசினார். எஸ்யு-57 போர் விமானம் பற்றிய விவகாரம் இந்தப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும் என்று அவர் கூறினார். எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்புகள் குறித்து இரு நாடுகளின் 'உயர்மட்ட தலைவர்கள்' இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். எனவே, புதினின் இந்தப் பயணம் மூலம் இந்தியா இழப்பதும் பெறுவதும் என்ன? ரஷ்யா எதை அடைய விரும்புகிறது? அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை எவ்வாறு சமநிலைப்படுத்தும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மூலோபாய உறவுகளில் இருந்து தொடக்கம் இரு நாடுகளும் தங்கள் உறவுக்கு 'சிறப்பு மூலோபாய கூட்டாண்மை' என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளன. இதன் கீழ், இந்தியா மற்றும் ரஷ்யா இடையே 'வருடாந்திர உச்சி மாநாடு' நடத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. இதில், இரு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் சுழற்சி முறையில் ஒருவர் மற்றொருவர் நாட்டில் சந்தித்து வருகின்றனர். இந்திய அரசின் கூற்றுப்படி, இதுவரை 22 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும், ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), ஐக்கிய நாடுகள் சபை போன்ற பலதரப்பு அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதாக இந்தியா கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் ரஷ்யாவும் இருப்பதாக இந்தியா கூறுகிறது. இருப்பினும், 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவது இதுவே முதல் முறை. 2023இல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், இரு நாடுகளின் தலைவர்களும் 2022இல் ஐந்து முறையும், 2023இல் இரண்டு முறையும் தொலைபேசியில் பேசினர். ஜூலை 2024இல் பிரதமர் நரேந்திர மோதியும் மாஸ்கோவுக்கு சென்றிருந்தார். முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் கூற்றுப்படி, இரு நாடுகளின் மீதும் அழுத்தம் இருப்பதால் தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், சஷாங்க், "யுக்ரேன் பிரச்னையில் தீர்வு காணப்படாததால் ரஷ்யா மேற்கு நாடுகளின் அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரிகள் காரணமாக இந்தியாவும் அழுத்தத்தில் உள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் அதிக நம்பிக்கையுடன் பணியாற்ற விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அமெரிக்காவை கோபப்படுத்தாமல் இருக்க, அதை ஒரு பெரிய விஷயமாக மாற்ற விரும்பவில்லை. எனவே, பல புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், பழைய ஒப்பந்தங்களில் மாற்றங்கள் செய்யப்படுவதைப் போல விஷயங்கள் காட்டப்படலாம்," என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புதினின் இந்திய பயணத்திற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யா சென்றிருந்தார். பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பாதுகாப்பு ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு குறைவு என்று இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு அதிகாரி, "தலைவர்கள் எதைப் பற்றி விவாதிப்பார்கள் என்று நாங்கள் சொல்ல விரும்பவில்லை. ஆனால் வழக்கப்படி, உச்சி மாநாட்டில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்படுவதில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அதற்கு நேரம் ஆகலாம்," என்று கூறினார். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு நடக்கும் முதல் உச்சி மாநாடு இது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த மோதலின்போது, இந்திய விமானப் படை ரஷ்யாவின் எஸ்-400 விமானத் தடுப்பு அமைப்பின் செயல்பாட்டை வெளிப்படையாகப் பாராட்டியது. இந்தியா-ரஷ்யாவின் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸின் துல்லியமான செயல்பாட்டையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். இன்றும் ரஷ்ய வடிவமைப்பில் உருவான சுகோய்-30 எம்.கே.ஐ. விமானம்தான் இந்திய விமானப் படையின் முக்கிய போர் விமானமாக உள்ளது. ஆனால், அந்த மோதலுக்குப் பிறகு, சீனா 40 ஐந்தாம் தலைமுறை ஜே-35 ஸ்டெல்த் போர் விமானங்களைத் தருவதாக உறுதியளித்து இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்தத் தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் இந்தியாவிடம் இல்லை. இது தவிர, இந்திய விமானப் படை தனது '42 ஸ்க்வாட்ரன்' பலத்தை முழுமையாகப் பெற உடனடியாக அதிக போர் விமானங்கள் தேவை. இந்திய விமானப் படையில் தற்போது 30 ஸ்க்வாட்ரன்கள் உள்ளன. பொதுவாக, ஒரு ஸ்க்வாட்ரனில் 18 போர் விமானங்கள் இருக்கும். இந்தக் காரணங்களால் மேம்பட்ட ரஷ்யாவின் எஸ்யு-57 ஜெட் பற்றிய விவாதங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட எஸ்-400 பாதுகாப்பு அமைப்பை இந்திய விமானப் படை பாராட்டியுள்ளது (கோப்புப் படம்) பாதுகாப்புக் கூட்டணியில் நிலவும் சிக்கல்கள் ஆனால், இந்தியா, ரஷ்யாவின் பாதுகாப்புக் கூட்டணியில் சில குறைபாடுகளும் வெளிப்பட்டுள்ளன. "எஞ்சியுள்ள எஸ்-400 விநியோகங்களை விரைவுபடுத்துமாறு இந்தியா ரஷ்யாவை வலியுறுத்தும்," என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலை வழங்குவது குறித்து ரஷ்யாவிடம் உறுதியான வாக்குறுதியை இந்தியா எதிர்பார்க்கிறது. "இது இந்த ஆண்டு வர வேண்டியிருந்தது, ஆனால் நீர்மூழ்கிக் கப்பலின் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகள்படி, இந்தியாவின் ஆயுதங்களுக்கான மிகப்பெரிய ஆதாரமாக இன்னமும் ரஷ்யாதான் உள்ளது. 2020 முதல் 2024 வரை இந்தியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36% ஆக இருந்தது. இருப்பினும், இது 2010-2014 உடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவு. அப்போது அதன் பங்கு 72% ஆக இருந்தது. "இந்தியா இப்போது ஆயுத விநியோகத்திற்காக மேற்கு நாடுகளை, குறிப்பாக பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து வருகிறது," என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இவை அனைத்துக்கும் மத்தியில் மற்றொரு மாற்றம் நடந்து வருகிறது. முன்னர் வாங்குபவர் மற்றும் விற்பவர் என்ற அளவில் உறவு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டின் கூட்டறிக்கைப்படி, இப்போது இந்தக் கூட்டாண்மை கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கி நகர்கிறது. இந்தியாவில் உதிரி பாகங்களின் கூட்டு உற்பத்திக்கு ஊக்கமளிப்பதற்கும், பின்னர் அவற்றை நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் ஒருதலைபட்சமானது. ஏனெனில் இந்தியா மிகக் குறைவாகவே விற்கிறது, ஆனால் அதிகமாக வாங்குகிறது. வர்த்தக உறவுகள் அரசு புள்ளிவிவரங்களின்படி, 2024-25ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை அளவை எட்டியது. இதில் ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 4.9 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இதில் மருந்துகள், இரும்பு, எஃகு ஆகியவை அடங்கும். மீதமுள்ளவை அனைத்தும் எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள் போன்றவை அடங்கிய இறக்குமதிகள். "இந்திய பொருட்களின் இறக்குமதியைப் பொருத்தவரை, வரிகள் போன்ற தடைகள் இருப்பதால், தற்போது எங்களால் அதிக பொருட்களை ரஷ்யாவுக்கு அனுப்ப முடியவில்லை. நாங்கள் ரஷ்யா உள்பட யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளோம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்தச் சிக்கல்கள் குறையும்," என ஒரு இந்திய அதிகாரி தெரிவித்தார். "இந்தியாவின் மருந்துகள், விவசாயப் பொருட்கள், அன்றாடப் பொருட்கள், கடல் உணவுகள், உருளைக் கிழங்கு, மாதுளை ஆகியவை ரஷ்யாவை அடைய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இது தவிர, இந்திய தொழிலாளர்கள் அங்கு செல்வது குறித்து ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது," என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியவுள்ளதாக ரஷ்யா கூறுகிறது அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனில் பணிபுரியும் ராஜோலி சித்தார்த்த ஜெயபிரகாஷ், ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை ஆய்வு செய்து வருகிறார். அவர் பிபிசி ஹிந்திக்கு அளித்த பேட்டியில், ஒப்பந்தங்கள் தவிர, "ரஷ்யாவில் தனக்கான சந்தையைக் கண்டறிய இந்தியா கடினமாக உழைக்க வேண்டும். ரஷ்யாவுக்கு நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தேவைப்படுகின்றன. மேற்குலகத் தடைகள் காரணமாக அவை எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் சீனா ஏற்கெனவே அங்கு உள்ளது மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் என்பதால், அதன் நிலைமை வலுவாக உள்ளது," என்று கூறினார். எண்ணெய் கொள்முதல் மற்றும் இந்தியா மீதான அழுத்தம் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்தது ஒரு பெரிய மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதலின் கதை. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் அமைப்பின்படி (GTRI), 2021 வரை ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது. ஆண்டு இறக்குமதி சுமார் இரண்டு முதல் மூன்று பில்லியன் டாலர்கள் என்றும் இந்தியாவின் எண்ணெய் தேவைகளில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம் என்ற அளவிலும் மட்டுமே இருந்தது. இது 2024ஆம் ஆண்டில் 52.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. மேலும் ரஷ்யாவின் பங்கு மொத்த இறக்குமதியில் 37.3%ஐ எட்டியது. யுக்ரேன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவின் எண்ணெய் வருமானத்தைக் குறிவைத்தார். இதனால் அமெரிக்கா, இந்தியா மீது கூடுதலாக 25% வரி விதித்தது. அதன் பிறகு மொத்த வரி 50 சதவிகிதம் ஆனது. இது இந்திய ஏற்றுமதியாளர்களின் போட்டித் திறனைப் பாதித்தது. இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று இந்தியா கூறியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா உரங்களை 'நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்' என்று இந்தியா விரும்புகிறது. (கோப்புப் படம்) ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்காது என்று பிரதமர் மோதி தனக்கு உறுதி அளித்ததாக சமீபத்திய மாதங்களில் டிரம்ப் கூறியுள்ளார். மறுபுறம், இந்த முடிவு வணிகரீதியான ஒன்றாக இருக்கும் என்று இந்தியா கூறியது. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் தரவுகளின்படி, தற்போது இந்தியாவில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 31.8% ஆகக் குறைந்துள்ளது. பெஸ்கோவ் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், ரஷ்யா 'எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியும்' என்று மாஸ்கோவில் பேசியபோது கூறினார். உரங்களுக்கு ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலை இந்தியா உரம் வாங்குவதற்கான ஒரு பெரிய ஆதாரமாக ரஷ்யா விளங்குகிறது. ரஷ்யாவின் அரசு வங்கியான ஸ்பெர்பேங்க் வங்கியின் தரவுகள்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியா ரஷ்யாவில் இருந்து 4.7 மில்லியன் டன் உரத்தை வாங்கியது. இது 2021ஆம் ஆண்டைவிட 4.3 மடங்கு அதிகம். இந்தச் சார்புநிலை விரைவில் முடிவுக்கு வரப் போவதில்லை. கடந்த உச்சி மாநாட்டின் கூட்டறிக்கைப்படி, ரஷ்யாவில் இருந்து உரங்களை "நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும்' என்று இந்தியா விரும்புகிறது மற்றும் இதற்காக 'நிறுவனங்களுக்கு இடையிலான நீண்ட கால ஒப்பந்தங்கள்" திட்டமிடப்பட்டுள்ளன. இவைபோக, நிபுணர்கள் கவனிக்கும் முக்கியமான பிரச்னைகள் என்ன? இந்தக் கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் வெளியுறவுச் செயலாளர் சஷாங்க், "பயணிகள் அல்லது ராணுவ விமானங்களை இணைந்து தயாரிப்பது போன்ற துறைகளில் ரஷ்யா இந்தியாவுக்கு தொழில்நுட்பம் வழங்கத் தயாராக இருந்தால், அது ஒரு வழியாக இருக்கலாம். இத்தகைய திட்டங்கள் இந்தியாவின் சுயச்சார்பு இலக்கிற்கு உதவும் மற்றும் ரஷ்யாவுக்கு ஒரு பெரிய சந்தையை வழங்கும். தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பார்த்தால், ரஷ்யா இந்தியாவுக்கு கொடுக்கக் கூடியதை மிகக் குறைவான நாடுகளால் மட்டுமே கொடுக்க முடியும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvgm0p54e2o

நாட்டில் அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479ஆக அதிகரிப்பு!

1 month 1 week ago
பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481 ஆக அதிகரிப்பு Dec 4, 2025 - 06:23 PM நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (04) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, 345 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmirfskkp02e0o29n9y4jozt4

கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

1 month 1 week ago
கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு Published By: Vishnu 03 Dec, 2025 | 05:51 PM சிரியாவின் கோலன் மலைப்பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை சட்டவிரோதமானது எனக் கூறி, அந்தப் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. எகிப்து முன்வைத்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 123 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. இதற்கெதிராக 7 நாடுகள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி புறக்கணித்தன. கோலன் பிராந்தியத்தின் சட்ட அந்தஸ்து மற்றும் நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், இந்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/232362

கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

1 month 1 week ago

கோலன் மலைப்பகுதி ஆக்கிரமிப்பு: இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

Published By: Vishnu

03 Dec, 2025 | 05:51 PM

image

சிரியாவின் கோலன் மலைப்பகுதி மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை சட்டவிரோதமானது எனக் கூறி, அந்தப் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

எகிப்து முன்வைத்த இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 123 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இதற்கெதிராக 7 நாடுகள் மட்டுமே வாக்குகளை பதிவு செய்துள்ளன. மேலும் 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி புறக்கணித்தன.

கோலன் பிராந்தியத்தின் சட்ட அந்தஸ்து மற்றும் நிலைமை குறித்து சர்வதேச மட்டத்தில் மீண்டும் கவனம் திரும்பிய நிலையில், இந்த தீர்மானம் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/232362

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
புதிதாக ஏதும் சொல்வீர்கள் என்று பார்த்தால் அதே பழைய கதை தான்: "இன்ரர்னெற்றில் இருந்து அமெரிக்கர்கள் அகற்றி விட்டார்கள் ( ரஷ்யாவிற்கு இன்ரர்னெற்றைத் தொடவே வசதியில்லை, இன்னும் ரின் பால் பேணியில் நூல் கட்டிய போன் தான்! எனவே ரஷ்யாவால் மீள ஏற்ற முடியாது ஆவணங்களை😂!) "இந்தி தெரியாது போடா!" என்பவனுக்கு உண்மையிலேயே இந்தி தெரியாமலும் இருக்கலாம்!

வரைபடங்களும் மனிதர்களும் ! உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

1 month 1 week ago
அவருடைய தரப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றார் ரவீந்திரன்................ ஒரு வக்கீல் போல ஒரு தரப்பிற்காக வாதாடியிருக்கின்றார். சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம். அந்தச் சொற்கள் இந்தக் கட்டுரையை ஒரு 'சமூக ஊடக அலட்டல்' என்ற அளவிற்கு தரமிறக்கி விடக்கூடும். குறிப்பிடப்பட்டிருக்கும் சில வருடங்களும் தப்பானவை என்றே தெரிகின்றது, உதாரணம்: அமெரிக்க உளவுத்துறையினால் அமெரிக்க - சீன யுத்தம் தொடங்கும் வருடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு.............................

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

1 month 1 week ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை Dec 4, 2025 - 06:15 PM ‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டிற்காக தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும், தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmirfi8vo02dzo29n31trnb01

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

1 month 1 week ago

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

Dec 4, 2025 - 06:15 PM

‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட்  நன்கொடை

‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட பாரிய சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழுவின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட், இந்தத் தீர்மானத்தின் ஊடாக மில்லியன் கணக்கான இலங்கையர்கள் நேசிக்கும் ஒரு விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் தனது பொறுப்பை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்துள்ளது. 

அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டிற்காக தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும், தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmirfi8vo02dzo29n31trnb01

இலங்கை: மண்சரிவில் புதைந்த சடலங்களை உறவினர்களே தேடி எடுக்கும் அவலம் - பிபிசி தமிழ் நேரில் கண்டவை

1 month 1 week ago
படக்குறிப்பு,தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என சாந்தகுமார் கூறுகிறார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள செய்திகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக காணாமல் போன பலரது சடலங்கள் இன்றும் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும் நிலையில், அவற்றை மீட்க முடியாத சூழலை உறவினர்கள் எதிர்கொண்டுள்ளனர். அப்படி மண்சரிவு ஏற்பட்ட பதுளை பகுதியில் என்ன நிலவரம் என்பதை அறிய பிபிசி தமிழ் களத்திற்கு டிசம்பர் 3ஆம் தேதி சென்றது. அங்கு பிபிசி நேரில் கண்டவை இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பதுளை பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பதிவான பகுதிகளுக்கு பிபிசி தமிழ் குழு சென்ற தினம் வரை மீட்புக் குழுவினர் செல்லவில்லை என்பதை அறிந்தோம். குறைந்தபட்சம் மண் அகழும் இயந்திரங்கள்கூட அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர். மண்சரிவு ஏற்பட்டு மண்ணில் பலர் புதைந்த பல இடங்களில், தமது உறவினர்களின் சடலங்களை உறவினர்கள், நண்பர்கள், பொது மக்களே தோண்டி எடுத்தனர். இது தவிர்த்து, மண்ணில் புதையுண்ட மக்களின் சடலங்களைத் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படைகளின் உதவியோ, மீட்புக் குழுக்களின் உதவியோ அல்லது அரசாங்கத்தின் வேறு உதவிகளோ கிடைக்கவில்லை என்று பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். உறவினர்களை தோண்டி எடுக்கும் பரகல்ல மக்கள் நாவலபிட்டி நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலை கிராமமே பரகல்ல. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பஷ்தூன் மக்கள் இந்தியாவை விடுத்து பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்தபோது நடந்தது என்ன? திருப்பரங்குன்றம்: 'மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்' - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு 'பேருந்துக்குள் 2 நாட்கள்' - இலங்கை சுற்றுலா சென்று சிக்கிய 29 பேர் சென்னை திரும்பியது எப்படி? யானைப் படையை ஒட்டகங்கள் மூலம் தந்திரமாக சிதறடித்து டெல்லியை வென்ற 'தைமூர்' End of அதிகம் படிக்கப்பட்டது பரகல்ல பகுதியில் பெரும்பாலும் தேயிலை தொழிலைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வாழ்ந்தவர்களில் பரகல்ல மேற்பிரிவில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் லயின் அறை தொகுதி ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த அந்த லயின் அறைகள் மீது கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாரிய கற்களுடன் கூடிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் இன்றும் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பரகல்ல பகுதியில் மண்ணுக்குள் புதையுண்ட மக்களை மீட்பதற்கு தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடும் மழையையும் பொருட்படுத்தாத, அதே பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தமது சொந்தங்களைத் தாங்களே தோண்டியெடுக்கும் முடிவை எடுத்துள்ளனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து தமது உறவுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு தேடிய தருணத்தில் பலரது சடலங்களை அவர்களால் மீட்டெடுக்க முடிந்தது. பின்னர், மீட்கப்பட்ட சடலங்கள் அந்தப் பிரதேசத்திலேயே மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு கோரிக்கை பரகல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு பிபிசி குழு டிசம்பர் 3ஆம் தேதி சென்றிருந்தது. லயின் அறைகள் மீது பாரிய கற்கள் வீழ்ந்த காட்சிகளை நாங்கள் பதிவு செய்தபோது, அங்கிருந்த கற்களுக்குள் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. பாரிய கற்கள் காணப்படுகின்றமையினால், கற்களைத் தம்மால் உடைக்க முடியாதுள்ளது என்று மீட்புப் பணிகளை மேற்கொண்ட பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இந்தக் கற்களை அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் மண் அகழும் இயந்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறிய பிரதேச மக்கள், "மண் அகழும் இயந்திரங்கள் கிடைக்குமாக இருந்தால் கற்களுக்குக் கீழுள்ள சடலங்களைத் தோண்டி எடுத்து, முறைப்படி அடக்கம் செய்ய முடியும்" என்று குறிப்பிடுகின்றனர் பிபிசி குழு அடையாளம் கண்ட சடலங்கள் பரகல்ல பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில், பிபிசி தமிழ் செய்தியாளர்களின் கால்களுக்குக் கீழே ரத்தம் கசிந்திருப்பதை அவதானித்திருந்தனர். அந்த இடத்தில் சற்று மண்ணை அப்புறப்படுத்திய தருணத்தில், அந்த இடத்தில் 25 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமொன்று மண்ணுக்குள் புதையுண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. அதையடுத்து, பிரதேச மக்களுக்கும், போலீசாருக்கும் பிபிசி செய்தியாளர்கள் தகவல் தெரிவித்தனர். பிரதேச மக்கள் அந்த இடத்தைத் தோண்டிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், யுவதியின் கால்களுக்கு அருகில் குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குழந்தையின் சடலத்தைத் தோண்டி எடுக்க முயன்ற தருணத்தில், மற்றுமொரு பெண்ணின் சடலமும் அந்த இடத்தில் மண்ணுக்குள் புதையுண்டிருந்தது. இவ்வாறு குறித்த இடத்திலிருந்து மூன்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைக்கப்பட்டன. பின்னர் அரச அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பிரதேசத்தில் குழியொன்று தோண்டப்பட்டு, முறைப்படி அடக்கம் செய்ய பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். மக்கள் கூறுவது என்ன? தமக்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த சாந்தகுமார், பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். ''அரசாங்கத்தில் சடலங்களை எடுக்க யாரும் இன்றும் எந்த உதவிகளையும் செய்யவில்லை. மேலே சாலை இருக்கின்றது. எங்களுக்கு இப்போது பெக்கோ (மண் அகழும் இயந்திரம்) ஒன்று தேவைப்படுகின்றது. பெக்கோ ஒன்று கொடுத்தார்கள் என்றால், மண்ணுக்கு அடியிலுள்ள ஆட்களை மீட்டெடுக்கலாம். நிதி, சாப்பாடு கிடைக்கின்றது. ஆனால், இதற்கு அரசாங்கம் சார்பில் பொறுப்பானவர்கள் யாரும் வரவில்லை. நாங்கள் முக்கியமாக கேட்பது பெக்கோ இயந்திரம் ஒன்று மாத்திரமே...'' என சாந்தகுமார் தெரிவித்தார். அயல் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பரகல்ல பகுதி மக்களுடன் இணைந்து சடலங்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படக்குறிப்பு,மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் சுதா அவ்வாறு மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் அயல் பிரதேச இளைஞரான சுதாவும், பிபிசி தமிழிடம் பெக்கோ உதவியோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''நாங்கள் பக்கத்து ஊரு. எங்களுடைய ஊரில் ஒரு பிரிவுதான் இது. இது நடந்து 7 நாட்கள் இருக்கும். அரசாங்கத்தால் ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை" என்று கூறினார். மேலும், "முதல் நாளே எங்களுக்குச் சொல்லியிருந்தால், எங்களுடைய பசங்களை (இளைஞர்கள்) வைத்து நாங்களே தோண்டி எடுத்திருப்போம். மூன்று நாட்கள் கழித்துதான் எங்களுக்குச் சொன்னார்கள். எங்களுடைய பசங்கள் வந்துதான் ஐந்து சடலங்கள் போலத் தோண்டி எடுத்தோம்" என்றார். பெக்கோ இயந்திரமோ அல்லது வேறு எந்தவொரு உதவியோ அரசிடம் இருந்து கிடைக்கவில்லை எனக் கூறிய சுதா, "அரசாங்கம் முடிவு ஒன்றை எடுத்து, இந்த இடத்தைச் சுத்திகரித்து தந்தால், நல்லதொரு உதவியாக இருக்கும். சடலங்களை நாங்களே தோண்டி எடுக்கின்றோம். போலீசாரிடமிருந்து எந்த உதவியும் இல்லை. நாங்களே குழியை வெட்டிப் புதைக்கின்ற நிலைமைதான் வந்திருக்கின்றது. இந்த மாதிரியான நிலைமை யாருக்கும் வரக்கூடாது'' எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq5q49pw0jzo