Aggregator

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
இன்னும் நாலுவருசம் ஐரோப்பிய யூனியன் பல்லை கடிச்சுக்கொண்டு இருக்கப்போயினம் போல கிடக்கு. ரம்ப் அடுத்த தேர்தலில் ஆட்சியை விட்டு போனால் எல்லாம் சுபம் எண்டு நினைக்கினம் போல...அதுக்கிடையிலை ரம்பர் உக்ரேனை ஒரு வழி பண்ணீட்டுத்தான் போவார் எண்டு நினைக்கிறன்.அடுத்தது புட்டின். புட்டின் போனாலும் இல்லை மண்டையை போட்டாலும் புட்டினை விட பெரிய ரஷ்ய விசுவாசிதான் ஆட்சிக்கு வருவார் என பலர் ஊகம் தெரிவிக்கின்றார்கள். எனக்கு இப்ப உக்ரேனையும் செலென்ஸ்கியையும் நினைக்கத்தான் கண்ணால தண்ணி தண்ணியாய் வருகுது.😋😂🤣😎

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

1 month 1 week ago
பாகிஸ்தான்காரருக்கு... லேபிள் மாத்துற "ரெக்னிக்" தெரியாது போலை இருக்கு. 😂 அவங்களை... தமிழ் கடைக்காரரிடம் "ட்ரெய்னிங்" எடுக்க விட வேணும். 🤣

ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்

1 month 1 week ago
இந்தளவுக்கு ஒரு முட்டாள் இலங்கை யின் எதிர் கட்சித் தலைவராக என்றும் இருந்ததில்லை. எதையாவது உளறிக் கொட்டி அதை மக்கள் நம்பி தன்னை சனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என நினைக்கின்றார். அப்பன் பெயரை கெடுக்க வந்த பிள்ளை.

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

1 month 1 week ago
இந்த விடயத்தில் எம் தமிழ் கடைக்காரர்களை யாரும் விஞ்ச முடியாது. காலாவதியான திகதி இருக்கும் label மேல் புது திகதி கொண்ட இன்னொரு label லை ஒட்டி சக தமிழருக்கே விற்று விடுவார்கள்.

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

1 month 1 week ago
பாகிஸ்தானியர்கள்... தம் நாட்டிலேயே, காலாவாதியான உணவுகளைத்தான் எப்போதும் சாப்பிடுவார்கள் போலுள்ளது. மகனுடன் வேலை செய்யும் ஒரு பாகிஸ்தான்காரன், தனது நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வரும் போது, அங்கிருந்து கொண்டு வந்த "கரம் மசாலா" பக்கற் ஒன்றை கொடுத்துள்ளான். மகனும் அதனை பெரிய புளுகத்துடன் கொண்டு வந்து, எமக்கு காட்ட, நாம் முன் எச்சரிக்கையுடன் அதன் திகதியை பார்க்க... அது, காலாவதியாகி இரண்டு வருடம் கடந்து இருந்தது. 😂 இத்தனைக்கும்... அந்தப் பாகிஸ்தான்காரன் பொறுப்புள்ள பதவியில் இருப்பவன். அப்படி இருந்தும்.... ஒரு பொருளை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, தரமானதாக கொடுக்க வேண்டும் என்ற அறிவு, இல்லாமல் போய் விட்டது.

படுபட்சி நாவல்: விசாரணை

1 month 1 week ago
இது வேறு பிரச்சினையல்லவா? இதற்கான ஆதாரங்கள் ந.செ சொல்வது போல அவரிடம் இருந்தால் அதை முன்வைத்துத் தான் பேச வேண்டும். தற்போதைக்கு ந.செ விடம் இருக்கும் "ஆதாரம்" கீழிருக்கும் வரிகளில்👇: இது ந.செ வின் அபிப்பிராயம் அல்லவா? இதை வைத்துக் கொண்டு முகநூலில் விவாதம் செய்யலாம். வேறெதுவும் செய்ய இயலாது. தற்கால இலக்கிய வாதிகளுக்கு (அல்லது அப்படியாகத் தம்மை அழைத்துக் கொள்வோருக்கு) காலை எழும்பியதும் "முகநூலில் என்ன விவாதிப்பது?" என்பது தான் யோசனை போல இருக்கிறது😂.

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம் - இந்த தற்குறித் தலைவர்களை எதிர்ப்போர் இலங்கையில் வாழாமல் அமெரிக்கா, ஐரோப்பா என்று வந்தது புரிந்து கொள்ளக் கூடியது தானே? புரின், கிம், சகோதரத் தோழர் கடாபி, குர்திஷ் மக்களைக் கொன்ற சதாம், இவர்களையெல்லாம் முன்னுதாரணத் தலைவர்களாகப் புகழும் ஒருவர் ஏன் அந்தந்த உதாரணத் தலைவர்களின் கீழிருக்கும் நாடுகளிலோ அல்லது ராஜபக்சக்களின் இலங்கையிலோ போய் வாழ முனையவில்லை என்பது நியாயமான கேள்வி தானே? இந்த வேறு பாடு புரியாமலா இவ்வளவு நாளும் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்?

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
அந்த எழுத்து வடிவ வாக்குறுதியை இங்கே இணைத்தால் நாம் புரிந்து கொள்ளலாமே மருதர்? "மேற்கில் தணிக்கை செய்து விட்டதால்" நம் போன்றவர்களுக்கு அது தெரியாமல் போயிருக்க கூடுமல்லவா😎?

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

1 month 1 week ago
கடந்த வருடம் காலவதியான அரிசியைத் தான் குடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இன்னும் கப்பலில் பொருட்கள் அனுப்ப பட இருக்கிறது என்று செயதிகளில் கேட்க முடிகிறது. கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப பட்டது என்றால். அவசர நிலையில் எப்படி இலங்கையின் இலச்சினை பைகளில் பொறிக்கப்பட்டது.?

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
"பேச்சுவார்த்தை நடத்தக்கூட ஐரோப்பாவில் யாரும் இருக்கமாட்டார்கள்!" - விளாடிமிர் புதின் அமெரிக்காவின் 28 அம்ச உக்ரைன் அமைதித் திட்டத்தை ஏற்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள், ”உக்ரைனுக்கு நியாயமற்ற சமாதானத்தை திணிக்கக் கூடாது,” எனக்கூறி சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். DW தமிழ் அப்படி போடு, அருவாளை.... 😂

படுபட்சி நாவல்: விசாரணை

1 month 1 week ago
"கற்பனை கலந்த சுய அனுபவம்" என்று லேபல் போட்ட பின்னர், "இது முற்றிலும் என் சுயசரிதை" என்று அவர் பேசி வந்தால் அது சவாலுக்குட்படுத்த வேண்டிய விடயம் தான். ஆனால், கற்பனை கலந்த சுய அனுபவத்தில் இல்லாத பாத்திரங்களைக் கொண்டு வரலாம், பாத்திரங்களின் உரையாடலை மாற்றலாம், நடந்த காலத்தையும் மாற்றலாம். மேலே சுட்டிக் காட்டியது போல, அவரது பேச்சுத் தான் பிரச்சினை, எழுத்தில் அவர் கொண்டு வந்திருக்கும் விடயம் அவரது படைப்புரிமை. அதைக் கால முரண்பாடு என்று சொல்ல முடியாது. வழமையாக, இது போன்ற ஆக்கங்களில் எழுத்தாளர்கள் வெளிப்படையாக தம் "அனுபவங்கள் இவை, கற்பனையில் உதித்தவை அல்லது மாற்றப் பட்டவை இவை" என்று புத்தகத்தின் பின்னுரையிலேயே (epilogue) தெரிவித்து விடுவர். அதன் பிறகு யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். இந்த விடயத்தில் அது நடக்கவில்லை என்று தெரிகிறது.

அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்.!

1 month 1 week ago

அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்!

153233804.jpg

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்..

கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களவழி நாற்பது:

''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது
கார்த்திகை சாற்றில் கழி விளக்குப்
போன்றனவை - களவழி நாற்பது

அகநானூறு:

''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை''

சீவக சிந்தாமணி:

குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன
கடிகமழ் குவளை பைந்தார்

நற்றிணை:

சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை.

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது - நற்றிணை 58

மலைபடுகடாம்


“கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” - பரிபாடல்
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” - மலைபடுகடாம்.

டிஸ்கி

image-2025-12-03-210945727.png

இன்று 3/12/2025 திருவண்ணாமலை அருள் மிகு அண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது,,

அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்.!

1 month 1 week ago
அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை - களவழி நாற்பது அகநானூறு: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை'' சீவக சிந்தாமணி: குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார் நற்றிணை: சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுது - நற்றிணை 58 மலைபடுகடாம் “கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” - பரிபாடல் அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” - மலைபடுகடாம். டிஸ்கி இன்று 3/12/2025 திருவண்ணாமலை அருள் மிகு அண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது,,

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

1 month 1 week ago
ரசிய உக்ரைன் போரில் இராணுவ தீர்வும் கிடையாது ........ அரசியல் தீர்வும் கிடையாது. உண்மையிலேயே உக்ரைன் மீது பற்று உள்ள ஒருவன் அதிபர் ஆகும்வரை அது நிகழ போவதே இல்லை. எரிந்து கொண்டிருக்கும் உக்ரைனை அமெரிக்காவோ அவர்கள் அருவருடிகளான ஐரோப்பிய ஒன்றியமோ நிறுத்த போவதில்லை அது எரியும் வரைதான் இவர்களுக்கு லாபம். உக்ரைன் போர் என்பதும் அரசியல் தீர்வு என்பதும் மேற்கு கிழக்கு ஜெர்மனி க்கு இடையிலான தடுப்பு சுவர் இடிந்த நாளில் இருந்து நடக்கிறது. அந்த சுவர் இடிக்கும்போது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சீனியர் ஜோர்க் புஸ் சோவியத் யுனினுக்கு ஒரு வாக்குறுதி எழுத்து வடிவத்திலேயே கொடுத்தார் அதாவது ...... ஜெர்மனியில் இருந்து ஒரு இன்ச் கூட நெட்டொ கிழக்கு பக்கம் வாராது என்பதுதான் அது. அன்றில் இருந்து இன்றுவரை இவர்கள் கொடுத்த ஒவ்வரு வாக்குறுதியும் ஒப்பந்தமும் இவர்களால் மீறப்பட்டுக்கொண்டே வருகிறது. இவர்களின் வாக்குறுதிகளோ ஒப்பந்தகளோ ரசியாவிற்கு புதிது அல்ல.

போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?

1 month 1 week ago
பொய்யைக் கூட ஒழுங்காக, நம்பக் கூடிய விதமாக சொல்லத் தெரியவில்லை பாகிஸ்தான் கடற்படைக்கு

“எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்” -அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

1 month 1 week ago
“இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நான் பேராசை கொள்ளவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசிலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது. கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். அத்துடன், ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும், 'அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. இப்போது அவர்கள், 'ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள். மற்ற எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தது பற்றி என்ன? நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பேராசைப்பட விரும்பவில்லை என கூறியுள்ளார். Tamilmirror Online || “எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்”

“எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்” -அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

1 month 1 week ago

“இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நான் பேராசை கொள்ளவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசிலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது.

கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். 

அத்துடன், ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும், 'அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

இப்போது அவர்கள், 'ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள். மற்ற எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தது பற்றி என்ன?

நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பேராசைப்பட விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Tamilmirror Online || “எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்”

ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்

1 month 1 week ago
அண்மைய பேரழிவையடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு திட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்தவகையில் சர்வதேச நாணய நிதியமுடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறும் புதியதொரு ஒப்பந்தத்துக்குச் செல்லுமாறும் கூறியுள்ளார். Tamilmirror Online || ஐ.எம்.எஃப்புடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுங்கள்: சஜித்