Aggregator

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

1 month 2 weeks ago

New-Project-74.jpg?resize=750%2C375&ssl=

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.

இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான சேவை தொடர்ந்தது.

இந்த நிலையில் 2025 செப்டம்பர் 23, 25 அன்று சேவை மீண்டும் தொடங்கியவுடன், டெல் அவிவ் – கொழும்பு வழித்தடம் விமான நிறுவனத்தின் குல்லிவேர் ஏர்பஸ் A330-200 விமானத்தின் மூலமாக இணைக்கப்படும்.

மீதமுள்ள கோடை காலத்திற்கு விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1442083

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 2 weeks ago
நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் இந்தியா, அதில் சந்தேகமில்லை. ஆனாலும் விமல் வீரவன்ச ஒரு காகம். அந்தாள் கிளறுவதற்கு கிட்டவும் போகமுடியாது. இருந்தும் நாங்கள் காகத்தை அழைத்து சோறு வைப்பதுபோல், புதிய உதயனும் அந்தாளை அழைத்து அவர் செய்தியைப் போட்டுள்ளது.🤧

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்

1 month 2 weeks ago
காஸா: நெதன்யாகு அரசின் புதிய திட்டம் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்டுரை தகவல் யோலண்ட் நெல் மத்திய கிழக்கு செய்தியாளர் யாங் டியன் பிபிசி நியூஸ் 41 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவை முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தினால் அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஐநா மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார். இத்தகைய நகர்வு "மிகவும் கவலையளிக்கும்" எனவும், இது மேலும் பல பாலத்தீனர்களின் உயிர்களையும், ஹமாஸால் பிணையாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் எனவும் ஐநா உதவி பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா ஐநா பாதுகாப்பு அவையில் கூறினார். நெத்தன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையுடன் இந்த வாரம் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் காஸா பகுதியை முழுமையாக கைப்பற்றி, ஹமாஸை தோற்கடிக்கப் போகிறோம்," என நெதன்யாகு அரசை சேர்ந்த ஒரு மூத்த நபர் கூறியதாக செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES ஆனால், வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் இத்தகைய நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டும். சமீபத்தில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியாக இந்தத் திட்டம் இருக்கலாம் அல்லது நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணியில் உள்ள கூட்டாளிகளின் ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காஸாவில் நடைபெறும் யுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்திருக்கிறது, காஸாவில் படிப்படியாக பஞ்சம் ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனது உரையில் ஜென்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எதிராக எச்சரித்தார். "இது பல மில்லியன் பாலத்தீனர்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் காஸாவில் மீதமுள்ள பணயக்கைதிகளின் உயிர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தலாம்," என்று அவர் கூறினார். சர்வதேச சட்டத்தின் கீழ், "காஸா எதிர்கால பாலத்தீனத்தின நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது, இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். இஸ்ரேலின் ராணுவம், தற்போது காஸாவின் 75% பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியது. ஆனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் வாழும் பகுதிகள் உட்பட முழு பகுதியையும் ஆக்கிரமிக்க புதிய திட்டத்தை இஸ்ரேல் பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது ராணுவத் தளபதி மற்றும் பிற ராணுவத் தலைவர்கள் இந்த உத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த முன்மொழிவுகள் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளன . இத்திட்டம் குறித்து ஊடகங்களில் பேசிய பெயர் குறிப்பிடாத அந்த மூத்த நபர், "இது ராணுவ தளபதிக்கு ஏற்புடையதில்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்," என்று பதிலளித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கூறியது இத்தகைய முடிவு தங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று பணயக்கைதிகளின் குடும்பங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 49 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது, அவர்களில் 27 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் ஆகியவற்றை ஜென்கா பாதுகாப்பு அவையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பாலத்தீனர்கள் எதிர்கொள்ளும் "அசுத்தமான" மற்றும் "மனிதாபிமானமற்ற" நிலைமைகளைக் குறிப்பிட்டு, உடனடியாக போதுமான மனிதாபிமான உதவிகளை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் வலியுறுத்தினார். "இஸ்ரேல், காஸாவிற்கு உள்ளே நுழையும் மனிதாபிமான உதவிகளை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது, மேலும் அனுமதிக்கப்படும் உதவிகள் முற்றிலும் போதுமானதாக இல்லை," என்று ஜென்கா கூறினார். மே 2023 முதல் உணவு மற்றும் பொருட்களைப் பெற முயன்றபோது 1,200-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி உணவு விநியோக மையங்களில் நடைபெறும் தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடுகளை அவர் கண்டித்தார். 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாகக் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியது. காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட, பரவலான பட்டினி நிலவுவதாக ஐநா முகமைகள் எச்சரித்துள்ளதுடன் இந்த மாதம் குறைந்தது 63 ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன. உதவி வழங்கப்படுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், காஸாவில் "பட்டினி இல்லை" என்றும் இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியிருந்தது. ஹமாஸ் 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது, அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காஸாவிற்கு பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் 60,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxg4d8jyn8o

மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட 'கருநிலம் பாதுகாப்பு' மண் மீட்பு போராட்டம்

1 month 2 weeks ago
06 AUG, 2025 | 02:21 PM மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (06) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது. 'மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவை வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கு சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்தேசிய நிறுவனங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இல்மனைட் மணல் அகழபட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் வாழ்நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களின் வாழ்விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்து விடும் அபாயம் உள்ளது. இந்த அழிவை தடுக்கவும், எமது பூர்வீக நிலங்களையும் மக்களின் இருப்பையும் பாதுகாக்கவும் 'கருநிலம் பாதுகாப்பு' என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (6) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட இளையோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பேரணி மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது. அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கணிய மணல் அகழ்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தின் ஒரு அங்கமாக விழிப்புணர்வு நாடகம், கையெழுத்து பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நாளை வியாழக்கிழமை (7) இடம் பெற்று இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221949

மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட 'கருநிலம் பாதுகாப்பு' மண் மீட்பு போராட்டம்

1 month 2 weeks ago

06 AUG, 2025 | 02:21 PM

image

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (06) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

'மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது.

இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவை வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கு சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்தேசிய நிறுவனங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இல்மனைட் மணல் அகழபட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் வாழ்நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களின் வாழ்விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்து விடும் அபாயம் உள்ளது.

இந்த அழிவை தடுக்கவும், எமது பூர்வீக நிலங்களையும் மக்களின் இருப்பையும் பாதுகாக்கவும் 'கருநிலம் பாதுகாப்பு' என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (6) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்ட இளையோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பேரணி மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து கணிய மணல் அகழ்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் ஒரு அங்கமாக விழிப்புணர்வு நாடகம், கையெழுத்து பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள்   நாளை வியாழக்கிழமை (7) இடம்  பெற்று  இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_2522.JPG

DSC_2533.JPG

DSC_2532.JPG

DSC_2526.JPG

DSC_2570.JPG

DSC_2537.JPG

DSC_2582.JPG

DSC_2574.JPG

DSC_2593.JPG

DSC_2605.JPG

DSC_2609.JPG

DSC_2598.JPG

https://www.virakesari.lk/article/221949

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 2 weeks ago
முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தமிழர்களை கொலை செய்த முஸ்லீம் பயங்கரவாதிகளை... நடு ரோட்டில் வைத்து வெட்டிக் கொல்ல வேண்டும்.

செம்மணி சித்துபாத்தி புதைகுழி: சர்வதேச பொறிமுறைகள் தேவை ; ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கடிதம்

1 month 2 weeks ago
"உங்கள் கரிசனைகளை மனித உரிமை பேரவைக்கான எனது அறிக்கை பிரதிபலிக்கும்; மனித புதைகுழிகள் மூலம் வெளிவரும் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டிய அவசிய தேவை உள்ளது" - தமிழ் அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினரின் கடிதத்திற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பதில் கடிதம் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 04:29 PM தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில்சமூகத்தினரும் மதத்தலைவர்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும்மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பிவைத்த கடிதத்திற்கு பதில் கடிதத்தை எழுதியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது அறிக்கை இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார். இலங்கைக்கான தனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது இலங்கை விஜயம் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் 60வது அமர்வு குறித்தும் 14ம் திகதி ஜூலை மாதமும் இஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியும் நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனது விஜயத்தின் போது உங்களில் சிலரை சந்திக்க முடிந்தமை குறித்தும் இ எனது விஜயத்தின் முன்னரும் பின்னரும் சிவில் சமூகத்திடமிருந்து கிடைம் பல மகஜர்கள் மற்றும் கடிதங்கள் குறித்தும் நான் நன்றியுடையவனாக உள்ளேன். கடந்தகால தற்போதைய மனித உரிமை மீறல்களிற்கான சர்வதேச குற்றங்களிற்கான பொறுப்புக்கூறல் எனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகவும்இஅரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய விடயமாகவும் காணப்பட்டதுமுன்னோக்கி செல்லும்போது இது தொடரும். எனது விஜயத்தின்போது எனது அலுவலகத்தின் முன்னைய அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்ட கரிசனைகளை வலியுறுத்தினேன்இதன்போது இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவித்தலின் அவசியம்வடக்குகிழக்கில் காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துதல்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைத்திருப்பவர்களை விடுதலைசெய்தல்கண்காணிப்பு துன்புறுத்தலை முடிவிற்கு கொண்டுவருதல்பொதுமக்களின் நினைவுகூரும் நடவடிக்கைகளை குற்றமாக கருதுவதை விடுத்து அதற்கு ஆதரவளித்தல் போன்றவற்;றையும் வலியுறுத்தினேன். இந்த விடயங்களிற்கு தீர்வை காண்பது பாதிக்கப்பட்ட மக்கள் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும் மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என்னுடைய இந்த விஜயங்கள் மனித புதைகுழிகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆதாரங்களை பேணவேண்டியது சுயாதீன விசாரணை குறித்து கவனத்தை திருப்பியுள்ளதுடன் அவசரதன்மையை கொடுத்துள்ளன. இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதுவரை சுயாதீனமான வலுவான நியாயமான பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை ஏற்படுத்த தவறிவிட்டனர் பொதுமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை பெறக்கூடிய உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான முழுமையான செயல்முறையை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தினை நான் கேட்டுக்கொண்டேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான எனது எதிர்வரும் அறிக்கை உங்களின் கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில் காணப்படுவதை நீங்கள் காண்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன். https://www.virakesari.lk/article/221941

AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

1 month 2 weeks ago
AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல். செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts institute of technology ) செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனாளர்களின் மூளையின் செயற்பாட்டை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக chatgpt பயனாளர்கள் பலருக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை என்றும் அதே வேளையில் AI பயன்படுத்தாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442117

ஒரு மாணவியின் மரணமும், நாட்டின் கல்வி முறைக்கு அது விடுத்த செய்தியும்

1 month 2 weeks ago

ஹோமாகமவில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் பதினோராம் வகுப்பு மாணவியின் அகால மரணம் இந்த நாட்டின் கல்வி முறை குறித்த ஒரு ஆழமான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பல மருந்து மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமையினால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. பாடசாலையில் ஓர் ஆசிரியரின் செல்வாக்கு காரணமாக தனது மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக அவரது முன்னாள் அதிபரான தந்தை தெரிவித்திருப்பது, இக்கட்டான சூழலில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் உளவியல் நிலையை ஒரு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனது மரணத்திற்கு முன்னர் அந்த மாணவி தான் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி தனது சகோதரியிடம் பகிர்ந்துகொண்டமை, பாடசாலைகள் குழந்தைகளின் உளநலன் குறித்து எவ்வளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உண்மையில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல, தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறையால் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயகரமான மன அழுத்தத்தின் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு.

இந்தத் துயரமான நிகழ்வின் தாக்கம் தனிப்பட்ட குடும்பத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக ஒரு குழந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்டமை, பாடசாலைக் கல்வியின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறியாகியிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு தொடருமாயின், அது சமூகத்தின் எதிர்கால தலைமுறையின் மனநல ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். அழகியல் பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு, அவை வெறும் கூடைப் பாடங்களாக மாற்றப்பட்டதனால், குழந்தைகள் கலை, இலக்கியம், மற்றும் வாசிப்பு இன்பங்களை இழந்து விடுகிறார்கள். இதனால், ஆளுமையையும், படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், வெறுமனே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே அவர்கள் உருமாறுகின்றனர். இந்தத் தேர்வு மையப்படுத்தப்பட்ட முறை, குழந்தைகளின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, கவனச்சிதறல், மற்றும் பல்வேறு அக்கறையின்மைகளை இது உருவாக்குகின்றது. இந்த எதிர்மறையான விளைவுகள், உலக அளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கைகளுடன் ஒத்திருக்கின்றன.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இறந்த மாணவியின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள், இந்தச் சம்பவம் எவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. "இனி ஒருபோதும் இதுபோன்ற பேரழிவுகள் நடக்காத வகையில் கல்வித் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என அவர் முன்வைத்த கோரிக்கை, பலரின் மனங்களில் எதிரொலித்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும், பொது விவாதங்களிலும் கல்வி முறை குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கல்வி நிபுணர்களும், மனநல மருத்துவர்களும் தேர்வு மன அழுத்தம் குறித்து அவ்வப்போது விவாதங்களை நடத்திய போதிலும், ஹோமாகம மாணவியின் மரணம் இந்த விவாதங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. வினாத்தாள்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும், யதார்த்தத்தில் தேர்வுகளின் கடினத்தன்மை அதிகரித்தே வருகின்றது.

இந்த நிலைமைக்கு அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள் பெரும்பாலும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பேச்சுகளிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் இந்த துயரத்தின் அடிப்படைக் காரணத்தை முழுமையாக நிவர்த்தி செய்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு பாடசாலை இடைவேளைகளோ, அல்லது விரிவுபடுத்தப்பட்ட பாடவேளைகளோ குழந்தைகளின் மன அழுத்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை. புதிய 'மோடியூலர் பை'கள் குறித்து பேசுகின்ற அதேவேளை, வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றலையும் வளர்ப்பதற்கான வழிகள் குறித்துப் பேசுவதில்லை. ஒருபுறம் நாட்டின் கல்வி முறையை மாற்றியமைப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் கல்வி முறைக்குள் ஏற்கனவே இருக்கும் அழகியல் பாடங்களைக் குறைத்து, அவற்றை வெறும் பெயரளவுக்கு மட்டுமே வைத்திருப்பது, இந்த அரசியல் பதில்கள் வெறும் கண்துடைப்பிற்கானவையாகவே இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

என்னுடைய பார்வையில், இந்த மாணவியின் மரணம் ஓர் அலறல்; அது நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறைக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தச் சோகத்திற்கு நேரடியாக ஆசிரியரையோ, பெற்றோரையோ அல்லது பாடசாலையையோ மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியானதல்ல. மாறாக, பல ஆண்டுகளாகத் தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு வழிவகுத்து, குழந்தைகளுக்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் மறுத்த அரசியல் தலைவர்களும், கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுமே இதற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். கல்வி என்பது மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமல்ல, ஆளுமையை வளர்த்துக்கொள்வது, படைப்பாற்றலுடன் சிந்திப்பது, சமூகத்துடன் இணைந்து வாழ்வது, மற்றும் வாழ்வின் அழகியலை ரசிப்பது போன்றவற்றை உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்த அபாயகரமான போக்கைத் தடுக்க, நடைமுறைச் சாத்தியமான சில தீர்வுகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலாவதாக, பாடசாலைக் கல்வியில் அழகியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அவை வெறும் கூடைப் பாடங்களாக இல்லாமல், கட்டாயப் பாடங்களாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம், குழந்தைகள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பெற முடியும். இரண்டாவதாக, பாடசாலைகளில் நூலக வசதிகளை மேம்படுத்தி, புதிய புத்தகங்களை வாங்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். வெறும் பாடத்திட்டப் புத்தகங்களுக்கு அப்பால் உலகத்தை அறியும் வாய்ப்பை அது உருவாக்கும். மேலும், கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று, பாடசாலைகளில் மாதாந்த பொது மாணவர் கூட்டங்கள், கலை விழாக்கள், நாடகங்கள் போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது, குழந்தைகளின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர உதவும். இந்த மாற்றங்கள் தனிநபர்கள், அரசாங்கம், மற்றும் ஆசிரியர்கள் என அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகளாகும்.

ஹோமாகம மாணவியின் அகால மரணம் நாட்டிற்கு அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது: நமது கல்வி முறைக்கு ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவை. இந்தத் துயர சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால், இது போன்ற சோகமான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழலாம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மதிப்பெண்களால் மட்டுமே தீர்மானிக்கும் இந்த முறையை கைவிட்டு, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான ஆற்றலுடன் சமூகத்தில் பங்களிக்கக்கூடிய ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான மனமாற்றத்தையும், நடைமுறை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான நேரம் இது. கல்வி சீர்திருத்தங்கள் என்பது வெறும் கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல, அது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை கட்டமைப்பதற்கான ஒரு பொறுப்பான கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_5.html

ஒரு மாணவியின் மரணமும், நாட்டின் கல்வி முறைக்கு அது விடுத்த செய்தியும்

1 month 2 weeks ago
ஹோமாகமவில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் பதினோராம் வகுப்பு மாணவியின் அகால மரணம் இந்த நாட்டின் கல்வி முறை குறித்த ஒரு ஆழமான விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பல மருந்து மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமையினால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக அறியப்படுகின்றது. பாடசாலையில் ஓர் ஆசிரியரின் செல்வாக்கு காரணமாக தனது மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக அவரது முன்னாள் அதிபரான தந்தை தெரிவித்திருப்பது, இக்கட்டான சூழலில் இருக்கும் பாடசாலை மாணவர்களின் உளவியல் நிலையை ஒரு கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தனது மரணத்திற்கு முன்னர் அந்த மாணவி தான் அனுபவித்த மன அழுத்தத்தைப் பற்றி தனது சகோதரியிடம் பகிர்ந்துகொண்டமை, பாடசாலைகள் குழந்தைகளின் உளநலன் குறித்து எவ்வளவு அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உண்மையில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல, தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறையால் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயகரமான மன அழுத்தத்தின் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு. இந்தத் துயரமான நிகழ்வின் தாக்கம் தனிப்பட்ட குடும்பத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக ஒரு குழந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்டமை, பாடசாலைக் கல்வியின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறியாகியிருப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு தொடருமாயின், அது சமூகத்தின் எதிர்கால தலைமுறையின் மனநல ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும். அழகியல் பாடங்கள் புறக்கணிக்கப்பட்டு, அவை வெறும் கூடைப் பாடங்களாக மாற்றப்பட்டதனால், குழந்தைகள் கலை, இலக்கியம், மற்றும் வாசிப்பு இன்பங்களை இழந்து விடுகிறார்கள். இதனால், ஆளுமையையும், படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டிய வயதில், வெறுமனே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகவே அவர்கள் உருமாறுகின்றனர். இந்தத் தேர்வு மையப்படுத்தப்பட்ட முறை, குழந்தைகளின் உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கமின்மை, கவனச்சிதறல், மற்றும் பல்வேறு அக்கறையின்மைகளை இது உருவாக்குகின்றது. இந்த எதிர்மறையான விளைவுகள், உலக அளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கைகளுடன் ஒத்திருக்கின்றன. இந்தத் துயரச் சம்பவம் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இறந்த மாணவியின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள், இந்தச் சம்பவம் எவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றன. "இனி ஒருபோதும் இதுபோன்ற பேரழிவுகள் நடக்காத வகையில் கல்வித் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்" என அவர் முன்வைத்த கோரிக்கை, பலரின் மனங்களில் எதிரொலித்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும், பொது விவாதங்களிலும் கல்வி முறை குறித்த கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கல்வி நிபுணர்களும், மனநல மருத்துவர்களும் தேர்வு மன அழுத்தம் குறித்து அவ்வப்போது விவாதங்களை நடத்திய போதிலும், ஹோமாகம மாணவியின் மரணம் இந்த விவாதங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. வினாத்தாள்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து ஒருபுறமிருந்தாலும், யதார்த்தத்தில் தேர்வுகளின் கடினத்தன்மை அதிகரித்தே வருகின்றது. இந்த நிலைமைக்கு அரசியல் தலைவர்களின் எதிர்வினைகள் பெரும்பாலும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த பேச்சுகளிலேயே மையப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் இந்த துயரத்தின் அடிப்படைக் காரணத்தை முழுமையாக நிவர்த்தி செய்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு பாடசாலை இடைவேளைகளோ, அல்லது விரிவுபடுத்தப்பட்ட பாடவேளைகளோ குழந்தைகளின் மன அழுத்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமையப் போவதில்லை. புதிய 'மோடியூலர் பை'கள் குறித்து பேசுகின்ற அதேவேளை, வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றலையும் வளர்ப்பதற்கான வழிகள் குறித்துப் பேசுவதில்லை. ஒருபுறம் நாட்டின் கல்வி முறையை மாற்றியமைப்பதாகக் கூறிக்கொண்டே, மறுபுறம் கல்வி முறைக்குள் ஏற்கனவே இருக்கும் அழகியல் பாடங்களைக் குறைத்து, அவற்றை வெறும் பெயரளவுக்கு மட்டுமே வைத்திருப்பது, இந்த அரசியல் பதில்கள் வெறும் கண்துடைப்பிற்கானவையாகவே இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. என்னுடைய பார்வையில், இந்த மாணவியின் மரணம் ஓர் அலறல்; அது நாட்டின் ஒட்டுமொத்த கல்வி முறைக்கும் விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை. இந்தச் சோகத்திற்கு நேரடியாக ஆசிரியரையோ, பெற்றோரையோ அல்லது பாடசாலையையோ மட்டும் குற்றஞ்சாட்டுவது சரியானதல்ல. மாறாக, பல ஆண்டுகளாகத் தேர்வு மையப்படுத்தப்பட்ட கல்வி முறைக்கு வழிவகுத்து, குழந்தைகளுக்கு ஓய்வையும், மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் மறுத்த அரசியல் தலைவர்களும், கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுமே இதற்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். கல்வி என்பது மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமல்ல, ஆளுமையை வளர்த்துக்கொள்வது, படைப்பாற்றலுடன் சிந்திப்பது, சமூகத்துடன் இணைந்து வாழ்வது, மற்றும் வாழ்வின் அழகியலை ரசிப்பது போன்றவற்றை உள்ளடக்கியது என்பதை நாம் உணர வேண்டும். இன்றைய நிலையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து வடிவமைக்கப்பட வேண்டும். இந்த அபாயகரமான போக்கைத் தடுக்க, நடைமுறைச் சாத்தியமான சில தீர்வுகளை உடனடியாக நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். முதலாவதாக, பாடசாலைக் கல்வியில் அழகியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், அவை வெறும் கூடைப் பாடங்களாக இல்லாமல், கட்டாயப் பாடங்களாக மாற்றப்பட வேண்டும். இதன் மூலம், குழந்தைகள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பெற முடியும். இரண்டாவதாக, பாடசாலைகளில் நூலக வசதிகளை மேம்படுத்தி, புதிய புத்தகங்களை வாங்குவதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும். வெறும் பாடத்திட்டப் புத்தகங்களுக்கு அப்பால் உலகத்தை அறியும் வாய்ப்பை அது உருவாக்கும். மேலும், கடந்த காலத்தில் இருந்ததைப் போன்று, பாடசாலைகளில் மாதாந்த பொது மாணவர் கூட்டங்கள், கலை விழாக்கள், நாடகங்கள் போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது, குழந்தைகளின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர உதவும். இந்த மாற்றங்கள் தனிநபர்கள், அரசாங்கம், மற்றும் ஆசிரியர்கள் என அனைவராலும் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகளாகும். ஹோமாகம மாணவியின் அகால மரணம் நாட்டிற்கு அனுப்பிய செய்தி மிகவும் தெளிவானது: நமது கல்வி முறைக்கு ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவை. இந்தத் துயர சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால், இது போன்ற சோகமான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழலாம். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மதிப்பெண்களால் மட்டுமே தீர்மானிக்கும் இந்த முறையை கைவிட்டு, ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான ஆற்றலுடன் சமூகத்தில் பங்களிக்கக்கூடிய ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான மனமாற்றத்தையும், நடைமுறை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான நேரம் இது. கல்வி சீர்திருத்தங்கள் என்பது வெறும் கொள்கைகளை உருவாக்குவது மட்டுமல்ல, அது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை கட்டமைப்பதற்கான ஒரு பொறுப்பான கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_5.html

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 2 weeks ago
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கொடுத்திருந்தால்... இப்படியான நிலை ஏற்பட்டிருக்காதே. சிங்களவருக்கு... நாடி நரம்பு எல்லாம் துவேசம் கொப்பளித்தால்... மற்ற நாட்டுக்காரன் வந்து நடு வீட்டில் குந்தி இருப்பான். சிங்கப்பூர் போல இருக்க வேண்டிய நாட்டை... நாசம் அறுத்ததே விமல் வீரவன்ச போன்ற மரமண்டைகள்தான். தொண்டை தண்ணி வத்து மட்டும் கிடந்து நல்லாய் கதறுங்கோ.... எங்களுக்கு, கேட்க சந்தோசமாக உள்ளது.

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 2 weeks ago
சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்ற

செம்மணி மனித புதைகுழி - சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெற வேண்டும் - உமா குமரன்

1 month 2 weeks ago
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் - உமா குமரன் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 11:51 AM செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு. அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். பிரிட்டன் மனித புதைகுழிதொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன். இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். அதனை வாசித்துக்கொண்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.. சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து நமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும். நாடாளுமன்றம் திரும்பியதும் நான் அவரைத் தொடர்புகொள்வேன். https://www.virakesari.lk/article/221936

செம்மணி மனித புதைகுழி - சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெற வேண்டும் - உமா குமரன்

1 month 2 weeks ago

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் - உமா குமரன்

Published By: RAJEEBAN

06 AUG, 2025 | 11:51 AM

image

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு.

அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.

பிரிட்டன் மனித புதைகுழிதொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன்.

இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன்.

அதனை வாசித்துக்கொண்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.. சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து நமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும்.

நாடாளுமன்றம் திரும்பியதும் நான் அவரைத் தொடர்புகொள்வேன்.

https://www.virakesari.lk/article/221936

தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்

1 month 2 weeks ago
6-6-6 நடை பயிற்சி நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்தும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 7 மணி நேரங்களுக்கு முன்னர் மிகவும் எளிதான உடற்பயிற்சியாகக் கருதப்படுவது நடைபயிற்சி செய்வது தான். அதை எப்படிச் செய்தாலும், அதனால் எந்தத் தீங்கும் கிடையாது. தினமும் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஏழாயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய், டிமென்சியா (Dementia) மற்றும் இதயம் தொடர்பான கடுமையான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வு கூறுகிறது. நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகளைக் குறித்து விளக்க பல்வேறு ஆய்வுகள் உள்ளன. ஆனால் எப்படி நடக்க வேண்டும், எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்பதற்கான விதிகள் மற்றும் முறைகள் வெவ்வேறாக இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக, சமூக ஊடகங்களில் ஒரு நடைப்பயிற்சி முறை குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறையில் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு 6-6-6 நடைப்பயிற்சி வழக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் (கோப்புப்படம்) சரி, இந்த 6-6-6 நடைப்பயிற்சி முறை என்றால் என்ன? இது நமது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும்? இந்த நடைப்பயிற்சி முறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும்? மிக முக்கியமாக, இதைப் பின்பற்றும்போது என்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, உணவியல் நிபுணர், ஆரோக்கிய சிகிச்சையாளர் மற்றும் ஆரோக்கிய தளமான மெட்டமார்போசிஸின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திவ்யா பிரகாஷிடமும், உத்தரபிரதேசத்தின் லக்ஷ்யா ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங்கின் நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கைலாஷ் மேனனுடனும், பிபிசி இந்தி சேவை பேசியது. 6-6-6 நடை பயிற்சி முறை என்றால் என்ன ? தினமும் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு 60 நிமிடங்கள் நடப்பதைத் தான், 6-6-6 நடைப்பயிற்சி எனக் கூறுகிறார்கள். அத்துடன், 6 நிமிட வார்ம்-அப் (உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக உடலைத் தயார்படுத்த உதவும் எளிமையான அசைவுகள்) மற்றும் 6 நிமிட கூல்-டவுனும் (உடற்பயிற்சி முடிந்தவுடன் உடலைத் தளர்வாக உணர வைக்க செய்யப்படும் அசைவுகள்) தேவை. இதை வாரத்தில் 6 நாட்கள் செய்ய வேண்டும் என்கிறார் திவ்யா பிரகாஷ். 6-6-6 எனும் நடைப்பயிற்சி முறை குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகக் கூறுகிறார் கைலாஷ் மேனன். "சிலர் 6 ஆயிரம் அடிகள் நடப்பது பற்றிப் பேசுகிறார்கள், சிலர் இந்த வழக்கத்தை 6 நாட்கள் பின்பற்றுவது பற்றிப் பேசுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்பது தான். அதனை, காலை 30 நிமிடங்களும் மாலை 30 நிமிடங்கள் எனப் பிரித்துக் கொண்டாலும் 60 நிமிடங்கள் நடக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். அதாவது, நடைப்பயிற்சியை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதே இதன் நோக்கம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 6-6-6 நடைப்பயிற்சி எவ்வாறு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் காலை 6 மணி அல்லது மாலை 6 மணிக்கு 60 நிமிடங்கள் நடப்பதைத் தான், 6-6-6 நடைப்பயிற்சி என நிபுணர்கள் கூறுகிறார்கள். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, ஒரு நாளைக்கு 7,000 அடி நடப்பது புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் கடுமையான இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது எனக் கூறுகிறது. 6-6-6 முறைப்படி நடைப்பயிற்சி செய்வது, உடலை ஆரோக்கியமாகவும், இதயத்தையும், மனதையும் உறுதியுடன் வைத்திருக்க உதவும் என திவ்யா பிரகாஷும், கைலாஷ் மேனனும் கூறுகிறார்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வாரத்திற்கு 150 நிமிடங்கள் நடப்பது நல்லது. அதே நேரத்தில் ஆசிய மக்கள் வாரத்திற்கு குறைந்தது 250 நிமிடங்கள் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்கிறார் திவ்யா பிரகாஷ். "நாம் வாரத்தில் 6 நாட்கள் 60 நிமிடங்கள் நடக்கும்போது, அது ஒரு வாரத்தில் மொத்தம் 360 நிமிடங்கள் ஆகும், இது நம் இதயத்திற்கு ஆரோக்கியமானது" என திவ்யா விளக்குகிறார். ஆனால், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக, இந்த முறையில் தினமும் 60 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்துகிறார். சுறுசுறுப்பாக நடைபயற்சி செய்யும்போது, உடலில் ஏற்படும் மாற்றங்களை விளக்கிய அவர், "இந்த நிலையில், உங்கள் இதயத் துடிப்பு, அதிகபட்ச இதயத் துடிப்பில் 60%-70% வரை இருக்க வேண்டும். இது ' 2ம் மண்டல இதயத் துடிப்பு' (Zone 2 Heart Rate) என்று அழைக்கப்படுகிறது" என்கிறார். நமது அதிகபட்ச இதயத் துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, திவ்யா பிரகாஷ் ஒரு கணக்கை முன்வைக்கிறார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் (கோப்புப்படம்) முதலில், உங்கள் வயதைக் 220-ல் இருந்து கழியுங்கள். இப்போது, உங்கள் 50 வயது என்று வைத்துக்கொள்வோம். அந்த 50 ஐ, 220 இலிருந்து கழித்தால் 170 கிடைக்கும். அதுதான் 50 வயதுடைய ஒருவரின் அதிகபட்ச இதயத் துடிப்பு. இந்த 170 இல் 60 முதல் 70 சதவீதத்தைக் கணக்கிட்டால், 102 முதல் 119 வரை வரும். அப்படியென்றால், 50 வயதுடைய ஒருவர், நிமிடத்திற்கு 102 முதல் 119 வரையிலான எண்ணிக்கையில் இதயத் துடிப்பு இருக்கும்படி நடக்க வேண்டும். உடற்பயிற்சியைக் கண்காணிக்கும் கருவிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்தியும் இதயத் துடிப்பைக் கண்காணிக்க முடியும். சாதாரணமாக, ஒரு நபரின் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்கும். வேகமாக நடைப்பயிற்சி செய்யும்போது, இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது, இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இது தான் இந்த நடைப்பயிற்சியின் நோக்கம். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது என்கிறார் திவ்யா பிரகாஷ். மன ஆரோக்கியத்திற்கு 6-6-6 நடைப்பயிற்சி எவ்வாறு நன்மை பயக்கும்? 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்வது, நமது மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையிலோ, மாலையிலோ சிறிது நேரம் திறந்தவெளியில் நடக்கும்போது, மூளைக்கு தளர்வு கிடைப்பது தான் இதற்குக் காரணம். "நல்ல நடைப்பயிற்சி மேற்கொள்வதும் ஒரு வகையான தியானம் தான் . நீங்கள் தனியாக ஒரு வேகத்தில் நடக்கும்போது, மனம் அமைதியாகிறது" என்கிறார் திவ்யா பிரகாஷ். காலையில் இந்த நடைப்பயிற்சி முறையைப் பின்பற்றும்போது, நாள் முழுவதும் நன்கு செயல்படுவதற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று அவர் கூறுகிறார். மாலையில் நடப்பது அன்றைய நாளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், உங்கள் முழு நாளையும் அசைபோட உதவும் என்று கைலாஷ் மேனன் குறிப்பிடுகிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம், நன்றாக தூக்கம் வருவதிலிருந்து மற்ற அனைத்தும் சரிவர ஒரு சுழற்சியில் நடக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் (கோப்புப்படம்) ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம் என்கிறார் திவ்யா பிரகாஷ். 1. சமநிலையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறை 2. உடல் இயக்கம் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் கடினமாகிவிட்டது. ஒரு வகையில், நம்மில் பெரும்பாலோர் உட்கார்ந்தபடியே இயங்கும் வாழ்க்கை முறையைத் தான் கொண்டுள்ளோம். "இப்போதெல்லாம் பல வசதிகள் கிடைப்பதால், நம் உடலைப் பயன்படுத்த முடியவில்லை. முதல் தளத்திற்குச் செல்லக்கூட லிஃப்ட் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, மக்கள் டிஜிட்டல் திரையை உபயோகிக்கும் நேரம் அதிகரித்து வருவதால், உடலின் இயக்கம் குறைந்து வருகிறது" என்று கைலாஷ் மேனன் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்றுக்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கிய ஒரு நேர்மறையான படியாக இருக்கும். உங்கள் வழக்கமான மற்றும் பரபரப்பான அட்டவணைக்கு ஏற்ப நீங்கள் இதில் ஈடுபடலாம் என்பதால் இது பின்பற்றுவதற்கும் எளிதானது. "6-6-6 நடைப்பயிற்சி முறையை அனைவரும் பின்பற்றலாம். இதற்கு நீங்கள் உடற்பயிற்சி கூடத்தில் (ஜிம்) சேர வேண்டிய தேவையில்லை. ஆடம்பரமான உபகரணங்களை வாங்கவும் தேவையில்லை. நடைபயிற்சி செய்ய காலணிகள் இருந்தால் மட்டும் போதும்" என்கிறார் கைலாஷ் மேனன். வயதானவராக இருந்தாலும் சரி, இளைஞராக இருந்தாலும் சரி, அனைவரும் இந்த வழக்கத்தைப் பின்பற்றலாம் என்கிறார் திவ்யா பிரகாஷ். "ஏற்கனவே அதிக எடை கொண்டவர்களுக்கு, ஓடுவது கடினமாக இருக்கலாம், ஆனால் நடப்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது" என்றும் அவர் குறிப்பிட்டார். இதைச் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு எந்த சாக்குப்போக்கும் தேவைப்படாது. உங்களுக்காக நேரம் ஒதுக்கினால் மட்டும் போதும் என்று கைலாஷ் மேனன் கூறுகிறார். மனதில் கொள்ள வேண்டியவை படக்குறிப்பு, நீங்கள் வேகமாக நடப்பவராக இருந்தால், நடப்பதற்கு முன் எளிமையான அசைவுகளைச் செய்து, உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், இதை உடனடியாகப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று இரு நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர். ஒருவர் படிப்படியாக இந்த வழக்கத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளலாம். "நாம் ஒரு இலக்கை நிர்ணயிக்கும்போது, முதன்முதலாக அதை முயற்சிப்பவர்களுக்கு அது கடினமாகிவிடும் என நான் நினைக்கிறேன். உதாரணமாக, ஒருவர் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் தொடர்ந்து நடக்க முடியாமல் போகலாம், எனவே அவர் 10 நிமிடங்களுடன் தொடங்கினால் கூட அது நல்லது தான்" என்று கைலாஷ் மேனன் கூறுகிறார். அதேபோல், உங்கள் நடைப்பயிற்சி வழக்கத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது, 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்வதன் சாராம்சம் என்னவென்றால், நீங்கள் காலையிலும் மாலையிலும் நடக்க வேண்டும் என்பது தான் என அவர் குறிப்பிடுகிறார். வாரத்தில் 6 நாட்கள், 6 மணிக்கு, 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்ற 6-6-6 நடைமுறை என்பது, மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் திவ்யா பிரகாஷ். ஆனால், ஒருவர் இதுவரை நடைப்பயிற்சி செய்ததே இல்லை என்றால், முதல் நாளிலேயே அவர் 60 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கிறார். "உங்கள் உடலையும் நீங்கள் கேட்க வேண்டும். 6-6-6 எனும் முறையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் நன்றாகத் தெரிகிறது, ஆனால் நடைமுறை வழிகாட்டுதல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார். 6-6-6 எனும் நடை பயிற்சி முறையில், 6 நிமிட வார்ம் அப் மற்றும் கூல் டவுன் செய்வது பற்றி கைலாஷ் மேனன் கூறுகையில், நடை பயிற்சிக்கு எந்தவிதமான வார்ம் அப்போ, அல்லது கூல் டவுனோ தேவையில்லை என்றாலும், நீங்கள் வேகமாக நடந்தால், நடைபயிற்சிக்கு முன்னும் பின்னும் ஸ்ட்ரெச்சிங் செய்யலாம் என்கிறார். குறிப்பிட்டுச் சொல்லப்போனால், 'வார்ம் அப்' மற்றும் 'கூல் டவுன்' என்பது, உடற்பயிற்சியை திடீரென்று தொடங்கவோ அல்லது திடீரென்று நிறுத்தவோ கூடாது என்பதற்காகத் தான் எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். நடைப்பயிற்சியைத் தொடங்கும் போது, முதலில் மெதுவாக நடப்பதன் மூலம் உடலை சுறுசுறுப்பாக்கி, அதன் பின் வேகத்தை அதிகரிக்கலாம். வேகமான நடைப்பயிற்சி முடிந்தவுடன், வேகத்தை படிப்படியாகக் குறைப்பது சிறந்த கூல் டவுன் முறையாக இருக்கும். இந்த வழக்கத்தை ஆரோக்கியமான உணவு முறையுடன் சேர்த்து நேர்மறையான முறையில் பின்பற்றினால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c206z7072zno

மோசடிகளுடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகள் நீக்கம் - வட்ஸ் அப்

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 06 AUG, 2025 | 03:29 PM இவ்வருடத்தின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 6.8 மில்லியன் கணக்குகளை வட்ஸ்அப் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் மோசடி மையங்களுடன் பலர் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளில் கட்டாயப்படுத்தி உழைப்பை பெற்றுள்ளதாக மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளம் தெரிவித்துள்ளது. பயனர்களை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத நபர் குழு ஒன்றில் இணைக்கும் போது ஏற்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை வட்ஸ்அப் அறிமுகப்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, குற்றவாளிகள் வட்ஸ்அப் கணக்குகளை அபகரிப்பது அல்லது போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளை ஊக்குவிக்கும் குழு அரட்டைகளில் பயனர்களைச் சேர்ப்பது அதிகரித்து வரும் பொதுவான தந்திரத்தை இலக்காகக் கொண்டுள்ளது. மோசடி மையங்கள் அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன்பே கணக்குகளை கண்டறிந்து அவற்றை நீக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில், போலியான ஸ்கூட்டர் வாடகை பிரமிட் திட்டத்தை விளம்பரப்படுத்த, சமூக ஊடக இடுகைகளில் லைக்குகளுக்கு பணத்தை வழங்கிய கம்போடிய குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய மோசடிகளை முறியடிக்க வட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா, ChatGPT-டெவலப்பரான OpenAI உடன் இணைந்து பணியாற்றியுள்ளது. மோசடி செய்பவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை உருவாக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பொதுவாக, மோசடி செய்பவர்கள், உரையாடலை சமூக ஊடகங்கள் அல்லது தனியார் செய்தியிடல் செயலிகளுக்கு மாற்றுவதற்கு முன்பு, குறுஞ்செய்தி ஒன்றின் மூலம் சாத்தியமான இலக்குகளைத் தொடர்புகொள்வார்கள் என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த மோசடிகள் பொதுவாக பணம் பெறுதல் அல்லது கிரிப்டோகரன்சி தளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது. மக்களிடம் பில்லியன் கணக்கான டொலர்களை ஏமாற்றி பெற்றுக்கொள்ள மியன்மார், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து மோசடி மையங்கள் செயல்படுவதாக அறியப்படுகிறது. இந்த மையங்கள் மக்களுக்கு வேலை த’ருவதாக கூறி அவர்களை மோசடிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றன. மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், தங்கள் கணக்குகள் திருடப்படாமல் பாதுகாக்க வட்ஸ்அப்பின் இரண்டு-படி சரிபார்ப்பு அம்சம் போன்ற மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் பிராந்திய அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில், செய்தியிடல் பயன்பாடுகளில் பயனர்கள் பெறும் எந்தவொரு அசாதாரண கோரிக்கைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221957

மோசடிகளுடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகள் நீக்கம் - வட்ஸ் அப்

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

06 AUG, 2025 | 03:29 PM

image

இவ்வருடத்தின் முதல் பாதியில் உலகெங்கிலும் உள்ள மக்களை குறிவைத்து மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 6.8 மில்லியன் கணக்குகளை வட்ஸ்அப் நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுப்படும் மோசடி மையங்களுடன் பலர் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளில் கட்டாயப்படுத்தி உழைப்பை பெற்றுள்ளதாக மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளம் தெரிவித்துள்ளது.

பயனர்களை அவர்களின் தொடர்பு பட்டியலில் இல்லாத நபர் குழு ஒன்றில் இணைக்கும் போது ஏற்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் புதிய மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை வட்ஸ்அப் அறிமுகப்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, குற்றவாளிகள் வட்ஸ்அப் கணக்குகளை அபகரிப்பது அல்லது போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளை ஊக்குவிக்கும் குழு அரட்டைகளில் பயனர்களைச் சேர்ப்பது அதிகரித்து வரும் பொதுவான தந்திரத்தை இலக்காகக் கொண்டுள்ளது.

மோசடி மையங்கள் அவற்றைச் செயல்படுத்துவதற்கு முன்பே கணக்குகளை கண்டறிந்து அவற்றை நீக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில், போலியான ஸ்கூட்டர் வாடகை பிரமிட் திட்டத்தை விளம்பரப்படுத்த, சமூக ஊடக இடுகைகளில் லைக்குகளுக்கு பணத்தை வழங்கிய கம்போடிய குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய மோசடிகளை முறியடிக்க வட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா, ChatGPT-டெவலப்பரான OpenAI உடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

மோசடி செய்பவர்கள் ChatGPT ஐப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை உருவாக்கியதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பொதுவாக, மோசடி செய்பவர்கள், உரையாடலை சமூக ஊடகங்கள் அல்லது தனியார் செய்தியிடல் செயலிகளுக்கு மாற்றுவதற்கு முன்பு, குறுஞ்செய்தி ஒன்றின் மூலம் சாத்தியமான இலக்குகளைத் தொடர்புகொள்வார்கள் என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்த மோசடிகள் பொதுவாக பணம் பெறுதல் அல்லது கிரிப்டோகரன்சி தளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது.

மக்களிடம் பில்லியன் கணக்கான டொலர்களை ஏமாற்றி பெற்றுக்கொள்ள மியன்மார், கம்போடியா மற்றும் தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து மோசடி மையங்கள் செயல்படுவதாக அறியப்படுகிறது.

இந்த மையங்கள் மக்களுக்கு வேலை த’ருவதாக கூறி அவர்களை மோசடிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றன.

மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், தங்கள் கணக்குகள் திருடப்படாமல் பாதுகாக்க வட்ஸ்அப்பின் இரண்டு-படி சரிபார்ப்பு அம்சம் போன்ற மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் பிராந்திய அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில், செய்தியிடல் பயன்பாடுகளில் பயனர்கள் பெறும் எந்தவொரு அசாதாரண கோரிக்கைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸாரினால் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/221957

மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.

1 month 2 weeks ago

மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.

written by admin August 3, 2025

IMG_1048.jpg?fit=1170%2C780&ssl=1

 

மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியானது வெறும் ஒப்பனைப் பொருட்களின் மாற்றமல்ல மாறாக, சமூகம், அறிவியல், பொருளாதாரம். மற்றும் மனிதர்களின் உளவியல் சார்ந்த புரிதல்களின் பிரதிபலிப்பாகும்.

நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவர்களாக கருதுகின்றனர். அவர்களின் அழகு முறைகள் பெரும்பாலும் இயற்கையோடு நெருங்கியதாகவும் எளிமையானதாகவும் இருந்தன. அவர்கள் வாழும் சூழலில் கிடைக்கும் மூலிகைகள், பழங்கள், காய்கறிகள், மண், நீர் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு தங்கள் சருமன், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணினார்கள்.

தங்கள் முகத்தின் அழகுக்காக இயற்கை சார்ந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றினார்கள். சந்தனம், மஞ்சள், முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை, கற்றாழை, தேங்காய் எண்ணெய், தயிர், எலுமிச்சை போன்றவற்றை முகத்தின் பளபளப்பு தன்மைக்காக பயன்படுத்தினார்கள். அங்கு அழகு என்பதை தாண்டி ஆரோக்கியம் பேணப்பட்டது.

தலையில் வைக்கும் எண்ணெய் முறைகள் என்ற ரீதியில் எங்கள் வீட்டில் என் அம்மா தேங்காய் எண்ணெய்க்குள் முருங்கை இலை. கருவேப்பிலை, நொச்சி, செவ்வரத்தை (காய வைத்தது) கற்றாழை, வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவற்றை விட்டு நன்றாக முறுகக் காய்ச்சி, அதன் பின்னர் சூடார வைத்து தலையில் வைத்து விடுவார்.

“அந்த காலத்தில நாங்க இப்படித்தான் குளிச்சம் இப்ப அப்படி ஒன்றும் இல்லை எல்லாம் மாறிவிட்டது” என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். மூலிகை வகைகளை சேர்த்து கொதிக்க வைத்து, சுத்தமான நல்லெண்ணெய் நன்றாக சூடாக்கி மெல்லிய சூட்டில் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதனை பூசி மசாஜ் செய்து அதன் பின்னரே குளிப்பம் என்று சொல்லுவார்கள்.

உணவு பழக்க வழக்கங்களில் என் அத்தைமார்கள் ஆரம்ப காலத்தில் வேறுபட்டு காணப்பட்டனர். அரிசி, ஓடியல் போன்ற அனைத்து பொருட்களையும் கையினால் உரல் உலக்கையை பயன்படுத்தி இடித்துத் தான் சமைப்பார்கள். உணவில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி உட்கொண்டார்கள்.

பாரம்பரியமாக காணப்பட்ட இவ்வாறான அனைத்து பழக்கவழக்கங்களும் இன்று தலைகீழாக மாறிவிட்டது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழியின் அர்த்தமே இன்று மாறிவிட்டது. இம்மாற்றத்தினை எடுத்துரைக்கும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எமது ஆசானான சி.ஜெயசங்கர் அவர்கள் பெற்றுத் தந்த வாய்ப்பிலும், வழிகாட்டலிலும் மருத்துவ பீடம் (MEDICAL FAUCITY) நடாத்திய “Holistic health camp” நிகழ்ச்சிக்காக “அழகினையும் உடல் ஆரோக்கியத்தையும் வைத்து” இன்றைய காலத்தில் அது இவ்வாறு மாறமடைந்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு காரணமாகின்றது” என்பதை பாடல் ஒன்றின் மூலம் அபிநயத்து அதற்கு இடையில் அது சார்ந்த உரையாடல்கள் மூலமும் ஆற்றுகை செய்திருந்தோம்.

பாடல்
நிறம் மாற வேண்டுமா சொல்
வெள்ளையாக வேண்டுமா சொல்
வெளிறிடக் கிறீம் இருக்கு – உன்னை
மாற்றிடக் கிறீம் இருக்கு

நிறம் மாற மாட்டோம் நாங்கள்
நோயில் விழவும் மாட்டோம் நாங்கள்
ஏமாற மாட்டோம் நாங்கள் – இனியும்
ஏமாற மாட்டோம் நாங்கள்

கருப்பு நிறமே காப்பாத்தும்
வெயிலில் வந்து எமை மூடும்
அதனை அழிக்க மாட்டோம் நாங்கள்
அழிந்து போக மாட்டோம்

இயற்கை தந்த நிறம் இதுவே
கடவுள் தந்த நிறம் இதுவே
மாற்றிட மாட்டோம் நாமே
இயற்கையை மாற்றிட மாட்டோம் தானே

திரிசா போல மாறனுமா
ஐஸ்வரியாராய் போல் ஆகணுமா
உங்களுக்காய் கொண்டு வந்தோம் – கிறீம்கள் உங்களுக்காய் கொண்டு வந்தோம்

அவர்கள் அழகு வேறு வேறு
எங்கள் அழகு வேறு வேறு
ஒன்றாக ஆக்க வேண்டாம் – எங்கள்
இயற்கை அழகு காப்போம்

ஒருவர் மாதிரி ஒருவர் மாறும் – அழகுப்
பொருள் விற்போர் உங்கள்
தந்திரம் புரியும் தானே – உங்கள்
வியாபாரம் தெரியும் தானே

வாயில் போட குலுசை உண்டு
வாங்கிக் கொள்ள கடைகள் உண்டு
தோலில் போட ஊசி உண்டு
போட்டுக் கொள்ள இடங்கள் உண்டு
வாங்க வெள்ளையாக்கலாம் – தோலை
வெள்ளை அழகு ஆக்கலாம்

எங்கள் பிறப்பே எம் அழகு
எம் உடலே எமக்கு நலம் – ஏமாற்ற
வேண்டாம் எம்மை
நாங்கள் ஏமாற மாட்டோம் தானே

(பாடலாசியரியர் :- கமலா வாசுகி)

இந்தப் பாடல் மூலம் இன்றைய காலத்தில் பாவனையில் உள்ள அழக சாதன பொருட்களின் பாதிப்பினை உரையாடல் பாங்கில் எடுத்துரைத்தோம்.

நம் தோலை புற ஊதா (UV) கதிர்வீச்சு போன்று தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து பாதுகாக்கும் முக்கியக் கருப்பொருள் மெலனின் (Melanin) ஆகும். மெலனின் என்பது நம் தோலில் உள்ள மெலனோசைட்டுகள் (Melanocytes) எனப்படும் சிறப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நிறமி (pigment) ஆகும். இது ஒரு பழுப்பு கலந்த கருப்பு நிறப் பொருள். நமது தோல், முடி மற்றும் கண்களின் நிறத்திற்கு மெலனின் தான் முக்கிய காரணம். மெலனின் குறைவாக இருக்கும்போது தோல் வெளுப்பாகவும், அதிகமாக இருக்கும்போது கருப்பாகவும் இருக்கும்.

மெலனின் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சி, அதை வெப்பமாக மாற்றுகிறது. இதனால் UV கதிர்வீச்சு தோலின் செல்களுக்குள் ஊடுருவி, அவற்றின் DNA-it சேதப்படுத்துவதைத் தடுக்கிறது.

இன்றைய நவ நாகரிக உலகில் அழகிற்காக (வெளிறல் நிறம்) ஊசிகள், மருந்துக்களின் பாவனை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளலாமல் வெளிறல் நிறமாக வேண்டும் எனும் நோக்கத்தோடு மட்டும் இவை உடம்பில் ஏற்றப்படுகின்றன. சருமத்தின் நிறத்தினை மென்மையாக்க “குளுட்டாதயோன் ஊசிகள்” (Glutathione Injections) பாவிக்கப்படுகின்றன.

குளூாட்டாதயோன் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கருமையான நிறத்தைத் தரும் ஈயூமெலனின் (Eumelanin) உற்பத்தியைக் குறைத்து, வெளிர் நிறத்தைத் தரும் பியோமெலனின் (Pheomelanin) உற்பத்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் செயல்பாடு, சருமத்தை வெளிர் நிறமாக்கி. ஒட்டுமொத்த நிறத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் இது நமது தோலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பின் சில முக்கிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குஞாட்டாதயோன் ஊசிகளைப் பயன்படுத்தும் நபர்கள் சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகின்றனர். அடிக்கடி சூரியக் கதிர் படுவதால் சருமத்தில் எரிச்சல், சிவத்தல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே வயதான அறிகுறி, தோல் புற்று நோய் அபாயம், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு. தோல் நோய்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதே வகையினை சார்ந்த இன்னும் சில ஊசி வகைகள் சந்தையில் காணப்படுகின்றன.

தோலின் நிறத்தினை மென்மையாக்குவதற்காக மருந்து பாவனையும் அதிகரித்தே வருகின்றது. அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் மருந்துக்கள் சருமத்தை வெண்மையாக்கும் அல்லது சுத்தப்படுத்தும் என நம்பி அதனை பாவித்து அநேகமான பக்க விளைவுகளுக்குள்ளாகின்றனர். பல ஹெமிக்கல் (Chemical) கலந்த கிறீம்களை பாவித்து தோல் அதிகம் மென்மையாகி கிழிந்து வரும் நிலை சமூகத்தில் அதிகம் நிலவிவருகின்றது.

இயற்கையின் எளிய பரிசுகளைப் பயன்படுத்திய பாரம்பரிய முறைகளில் தொடங்கி, இன்றைய அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொடும் மருத்துவ சிகிச்சைகள் வரை ஒரு நீண்ட மோசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவையாகக் கருதினர். மஞ்சள். சந்தனம். மூலிகைகள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அற்ற தீர்வுகளாக இருந்தன.

ஆனால், வேகமான வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, தீவிரமான சந்தைப்படுத்தல், மற்றும் சமூகத்தின் மாறிவரும் அழகு குறித்த வரையறைகள் போன்றவை இந்த மாற்றத்திற்கு வித்திட்டன. உடனடி முடிவுகளையும், குறிப்பிட்ட அழகியல் இலக்குகளையும் நோக்கிய தேடல், இரசாயனக் கலவைகள், லேசர் சிகிச்சை, ஊசி முறைகள் போன்ற நவீன அனுகுமுறைகளுக்கு வழிவகுத்தது. போடோக்ஸ், டெர்மல் ஃபில்லர்கள், மற்றும் குளூாட்டாதயோன் ஊசிகள் போன்ற சிகிச்சைகள் சில சமயங்களில் உடனடி மற்றும் வியத்தகு மாற்றங்களை வழங்கினாலும், அவற்றின் பக்க விளைவுகள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டியவை குறிப்பாக, சரும நிறத்தை வெண்மையாக்கும் குளூட்டாதயோன் ஊசிகள், தோலின் இயற்கைப் பாதுகாப்பான மெலனின் உற்பத்தியில் தலையிட்டு, தோல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கைகள் புறக்கணிக்க முடியாதவை.

அழகுப் சந்தனத்தின் வாசனையிலும், மஞ்சள் பூகம் குளுமையிலும் இருந்த நிதானமான பராமரிப்பிலிருந்து, லேசரின் துல்லியத்திற்கும், ஊசிகளின் வேகத்திற்கும் மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், ஒரு முக்கியமான உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது: அழகு என்பது வெளிப்புற பூச்சுகளையும், செயற்கையான மாற்றங்களையும் மட்டும் சார்ந்தது அல்ல. அது ஆரோக்கியமான உடல், தெளிவான மனம் மற்றும் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். எந்தவொரு அழகு முறையையும் தேர்வு செய்வதற்கு முன், அதன் நன்மைகள், அபாயங்கள், மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது இன்றியமையாதது.

“அழகு என்பது வெளிறல் நிறத்தில் மட்டுமல்ல.

உடல் நலத்தில் உண்டு.”

கோபிகா நடராசா,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
நுண்கலைத்துறை.


https://globaltamilnews.net/2025/218764/

மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.

1 month 2 weeks ago
மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா. written by admin August 3, 2025 மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகுமுறைகள் வரை ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பரிணாம வளர்ச்சியானது வெறும் ஒப்பனைப் பொருட்களின் மாற்றமல்ல மாறாக, சமூகம், அறிவியல், பொருளாதாரம். மற்றும் மனிதர்களின் உளவியல் சார்ந்த புரிதல்களின் பிரதிபலிப்பாகும். நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவர்களாக கருதுகின்றனர். அவர்களின் அழகு முறைகள் பெரும்பாலும் இயற்கையோடு நெருங்கியதாகவும் எளிமையானதாகவும் இருந்தன. அவர்கள் வாழும் சூழலில் கிடைக்கும் மூலிகைகள், பழங்கள், காய்கறிகள், மண், நீர் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு தங்கள் சருமன், கூந்தல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணினார்கள். தங்கள் முகத்தின் அழகுக்காக இயற்கை சார்ந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றினார்கள். சந்தனம், மஞ்சள், முல்தானி மெட்டி மற்றும் வேப்பிலை, கற்றாழை, தேங்காய் எண்ணெய், தயிர், எலுமிச்சை போன்றவற்றை முகத்தின் பளபளப்பு தன்மைக்காக பயன்படுத்தினார்கள். அங்கு அழகு என்பதை தாண்டி ஆரோக்கியம் பேணப்பட்டது. தலையில் வைக்கும் எண்ணெய் முறைகள் என்ற ரீதியில் எங்கள் வீட்டில் என் அம்மா தேங்காய் எண்ணெய்க்குள் முருங்கை இலை. கருவேப்பிலை, நொச்சி, செவ்வரத்தை (காய வைத்தது) கற்றாழை, வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவற்றை விட்டு நன்றாக முறுகக் காய்ச்சி, அதன் பின்னர் சூடார வைத்து தலையில் வைத்து விடுவார். “அந்த காலத்தில நாங்க இப்படித்தான் குளிச்சம் இப்ப அப்படி ஒன்றும் இல்லை எல்லாம் மாறிவிட்டது” என்று என் வீட்டு பெரியவர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். மூலிகை வகைகளை சேர்த்து கொதிக்க வைத்து, சுத்தமான நல்லெண்ணெய் நன்றாக சூடாக்கி மெல்லிய சூட்டில் உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை அதனை பூசி மசாஜ் செய்து அதன் பின்னரே குளிப்பம் என்று சொல்லுவார்கள். உணவு பழக்க வழக்கங்களில் என் அத்தைமார்கள் ஆரம்ப காலத்தில் வேறுபட்டு காணப்பட்டனர். அரிசி, ஓடியல் போன்ற அனைத்து பொருட்களையும் கையினால் உரல் உலக்கையை பயன்படுத்தி இடித்துத் தான் சமைப்பார்கள். உணவில் நல்லெண்ணெய், நெய் ஊற்றி உட்கொண்டார்கள். பாரம்பரியமாக காணப்பட்ட இவ்வாறான அனைத்து பழக்கவழக்கங்களும் இன்று தலைகீழாக மாறிவிட்டது. “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழியின் அர்த்தமே இன்று மாறிவிட்டது. இம்மாற்றத்தினை எடுத்துரைக்கும் வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எமது ஆசானான சி.ஜெயசங்கர் அவர்கள் பெற்றுத் தந்த வாய்ப்பிலும், வழிகாட்டலிலும் மருத்துவ பீடம் (MEDICAL FAUCITY) நடாத்திய “Holistic health camp” நிகழ்ச்சிக்காக “அழகினையும் உடல் ஆரோக்கியத்தையும் வைத்து” இன்றைய காலத்தில் அது இவ்வாறு மாறமடைந்து சமூகத்தின் சீர்கேடுகளுக்கு காரணமாகின்றது” என்பதை பாடல் ஒன்றின் மூலம் அபிநயத்து அதற்கு இடையில் அது சார்ந்த உரையாடல்கள் மூலமும் ஆற்றுகை செய்திருந்தோம். பாடல் நிறம் மாற வேண்டுமா சொல் வெள்ளையாக வேண்டுமா சொல் வெளிறிடக் கிறீம் இருக்கு – உன்னை மாற்றிடக் கிறீம் இருக்கு நிறம் மாற மாட்டோம் நாங்கள் நோயில் விழவும் மாட்டோம் நாங்கள் ஏமாற மாட்டோம் நாங்கள் – இனியும் ஏமாற மாட்டோம் நாங்கள் கருப்பு நிறமே காப்பாத்தும் வெயிலில் வந்து எமை மூடும் அதனை அழிக்க மாட்டோம் நாங்கள் அழிந்து போக மாட்டோம் இயற்கை தந்த நிறம் இதுவே கடவுள் தந்த நிறம் இதுவே மாற்றிட மாட்டோம் நாமே இயற்கையை மாற்றிட மாட்டோம் தானே திரிசா போல மாறனுமா ஐஸ்வரியாராய் போல் ஆகணுமா உங்களுக்காய் கொண்டு வந்தோம் – கிறீம்கள் உங்களுக்காய் கொண்டு வந்தோம் அவர்கள் அழகு வேறு வேறு எங்கள் அழகு வேறு வேறு ஒன்றாக ஆக்க வேண்டாம் – எங்கள் இயற்கை அழகு காப்போம் ஒருவர் மாதிரி ஒருவர் மாறும் – அழகுப் பொருள் விற்போர் உங்கள் தந்திரம் புரியும் தானே – உங்கள் வியாபாரம் தெரியும் தானே வாயில் போட குலுசை உண்டு வாங்கிக் கொள்ள கடைகள் உண்டு தோலில் போட ஊசி உண்டு போட்டுக் கொள்ள இடங்கள் உண்டு வாங்க வெள்ளையாக்கலாம் – தோலை வெள்ளை அழகு ஆக்கலாம் எங்கள் பிறப்பே எம் அழகு எம் உடலே எமக்கு நலம் – ஏமாற்ற வேண்டாம் எம்மை நாங்கள் ஏமாற மாட்டோம் தானே (பாடலாசியரியர் :- கமலா வாசுகி) இந்தப் பாடல் மூலம் இன்றைய காலத்தில் பாவனையில் உள்ள அழக சாதன பொருட்களின் பாதிப்பினை உரையாடல் பாங்கில் எடுத்துரைத்தோம். நம் தோலை புற ஊதா (UV) கதிர்வீச்சு போன்று தீங்கு விளைவிக்கும் காரணிகளிலிருந்து பாதுகாக்கும் முக்கியக் கருப்பொருள் மெலனின் (Melanin) ஆகும். மெலனின் என்பது நம் தோலில் உள்ள மெலனோசைட்டுகள் (Melanocytes) எனப்படும் சிறப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நிறமி (pigment) ஆகும். இது ஒரு பழுப்பு கலந்த கருப்பு நிறப் பொருள். நமது தோல், முடி மற்றும் கண்களின் நிறத்திற்கு மெலனின் தான் முக்கிய காரணம். மெலனின் குறைவாக இருக்கும்போது தோல் வெளுப்பாகவும், அதிகமாக இருக்கும்போது கருப்பாகவும் இருக்கும். மெலனின் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சி, அதை வெப்பமாக மாற்றுகிறது. இதனால் UV கதிர்வீச்சு தோலின் செல்களுக்குள் ஊடுருவி, அவற்றின் DNA-it சேதப்படுத்துவதைத் தடுக்கிறது. இன்றைய நவ நாகரிக உலகில் அழகிற்காக (வெளிறல் நிறம்) ஊசிகள், மருந்துக்களின் பாவனை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை கருத்தில் கொள்ளலாமல் வெளிறல் நிறமாக வேண்டும் எனும் நோக்கத்தோடு மட்டும் இவை உடம்பில் ஏற்றப்படுகின்றன. சருமத்தின் நிறத்தினை மென்மையாக்க “குளுட்டாதயோன் ஊசிகள்” (Glutathione Injections) பாவிக்கப்படுகின்றன. குளூாட்டாதயோன் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக கருமையான நிறத்தைத் தரும் ஈயூமெலனின் (Eumelanin) உற்பத்தியைக் குறைத்து, வெளிர் நிறத்தைத் தரும் பியோமெலனின் (Pheomelanin) உற்பத்தியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் செயல்பாடு, சருமத்தை வெளிர் நிறமாக்கி. ஒட்டுமொத்த நிறத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் இது நமது தோலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பின் சில முக்கிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குஞாட்டாதயோன் ஊசிகளைப் பயன்படுத்தும் நபர்கள் சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாகின்றனர். அடிக்கடி சூரியக் கதிர் படுவதால் சருமத்தில் எரிச்சல், சிவத்தல், வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் முன்கூட்டியே வயதான அறிகுறி, தோல் புற்று நோய் அபாயம், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு. தோல் நோய்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதே வகையினை சார்ந்த இன்னும் சில ஊசி வகைகள் சந்தையில் காணப்படுகின்றன. தோலின் நிறத்தினை மென்மையாக்குவதற்காக மருந்து பாவனையும் அதிகரித்தே வருகின்றது. அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் மருந்துக்கள் சருமத்தை வெண்மையாக்கும் அல்லது சுத்தப்படுத்தும் என நம்பி அதனை பாவித்து அநேகமான பக்க விளைவுகளுக்குள்ளாகின்றனர். பல ஹெமிக்கல் (Chemical) கலந்த கிறீம்களை பாவித்து தோல் அதிகம் மென்மையாகி கிழிந்து வரும் நிலை சமூகத்தில் அதிகம் நிலவிவருகின்றது. இயற்கையின் எளிய பரிசுகளைப் பயன்படுத்திய பாரம்பரிய முறைகளில் தொடங்கி, இன்றைய அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொடும் மருத்துவ சிகிச்சைகள் வரை ஒரு நீண்ட மோசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நம் முன்னோர்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் பிரிக்க முடியாதவையாகக் கருதினர். மஞ்சள். சந்தனம். மூலிகைகள் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பான, பக்கவிளைவுகள் அற்ற தீர்வுகளாக இருந்தன. ஆனால், வேகமான வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, தீவிரமான சந்தைப்படுத்தல், மற்றும் சமூகத்தின் மாறிவரும் அழகு குறித்த வரையறைகள் போன்றவை இந்த மாற்றத்திற்கு வித்திட்டன. உடனடி முடிவுகளையும், குறிப்பிட்ட அழகியல் இலக்குகளையும் நோக்கிய தேடல், இரசாயனக் கலவைகள், லேசர் சிகிச்சை, ஊசி முறைகள் போன்ற நவீன அனுகுமுறைகளுக்கு வழிவகுத்தது. போடோக்ஸ், டெர்மல் ஃபில்லர்கள், மற்றும் குளூாட்டாதயோன் ஊசிகள் போன்ற சிகிச்சைகள் சில சமயங்களில் உடனடி மற்றும் வியத்தகு மாற்றங்களை வழங்கினாலும், அவற்றின் பக்க விளைவுகள் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டியவை குறிப்பாக, சரும நிறத்தை வெண்மையாக்கும் குளூட்டாதயோன் ஊசிகள், தோலின் இயற்கைப் பாதுகாப்பான மெலனின் உற்பத்தியில் தலையிட்டு, தோல் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கைகள் புறக்கணிக்க முடியாதவை. அழகுப் சந்தனத்தின் வாசனையிலும், மஞ்சள் பூகம் குளுமையிலும் இருந்த நிதானமான பராமரிப்பிலிருந்து, லேசரின் துல்லியத்திற்கும், ஊசிகளின் வேகத்திற்கும் மாறிவிட்ட இந்த காலகட்டத்தில், ஒரு முக்கியமான உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது: அழகு என்பது வெளிப்புற பூச்சுகளையும், செயற்கையான மாற்றங்களையும் மட்டும் சார்ந்தது அல்ல. அது ஆரோக்கியமான உடல், தெளிவான மனம் மற்றும் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். எந்தவொரு அழகு முறையையும் தேர்வு செய்வதற்கு முன், அதன் நன்மைகள், அபாயங்கள், மற்றும் நீண்டகால விளைவுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது இன்றியமையாதது. “அழகு என்பது வெளிறல் நிறத்தில் மட்டுமல்ல. உடல் நலத்தில் உண்டு.” கோபிகா நடராசா, கிழக்குப் பல்கலைக்கழகம், நுண்கலைத்துறை. https://globaltamilnews.net/2025/218764/

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 2 weeks ago
அதென்றால் நூறு வீதம் உண்மை. தமிழரை நம்ப வைத்து கழுத்தறுத்ததும் இந்தியாதான். ஆனால் அதை சுட்டிக்காட்ட மாட்டார் விமல் வீரவன்ச.