1 month ago
ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்? மனோஜ் முத்தரசுலெ. ராம்சங்கர் 6 Min Read ‘மக்களிடம் செல்... மக்களுடன் வாழ்... மக்களிடம் கற்றுக்கொள்... மக்களுக்குச் சேவையாற்று’ என்ற பேரறிஞர் அண்ணாவின் சொற்களை மைக்கில் வாசித்தால் மட்டும் போதாது விஜய். செயலிலும் அது பிரதிபலிக்க வேண்டும். Published:Today at 1 AMUpdated:Today at 1 AM விஜய் Join Our Channel 238Comments Share ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்? Listen to Vikatan stories on our AI-assisted audio player வணக்கம் விஜய். நீங்கள் `தமிழக வெற்றிக் கழகம்’ எனும் கட்சியைத் தொடங்கிய நாளிலிருந்து உங்களையும், உங்கள் கட்சிச் செயல்பாடுகளையும் தொடர்ந்து மிகக் கூர்மையாக கவனித்து வருகிறோம். நீங்கள் நடத்திய மாநாடுகள், சுற்றுப்பயணக் கூட்டங்கள் என அத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்று அவதானித்திருக்கிறோம். அவ்வளவு ஏன், 41 அப்பாவிகள் இறந்துபோன உங்களின் கரூர் பிரசாரக் கூட்டத்திலும், உங்களின் ரசிகர்களுக்கு நடுவே தள்ளு முள்ளுகளுக்குள் நசுங்கியபடியே நாங்கள் செய்தி சேகரித்தோம். அங்கு நடந்த சம்பவத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் வேதனையையும் நேரடியாக அனுபவித்தவர்கள்; பதிவுசெய்தவர்கள் என்கிற அடிப்படையில், ‘உங்களைக் குறித்து, உங்களின் கட்சிச் செயல்பாடுகள் குறித்து’ உங்களிடம் கேட்க, சில கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன விஜய்! விஜய் எதையும் பொருட்படுத்தாமல், ‘உங்களை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்’ என்கிற ஒரே ஆசையோடு, கரூரில் கூடியிருந்த அப்பாவிகளில் 41 பேர் கூட்ட நெரிசலில் உடல் நசுங்கி, மூச்சுத்திணறி இறந்துபோயிருக்கிறார்கள். கரூரே மரண ஓலத்தில் அதிர்ந்துபோன அந்த இரவில், உங்களால் மட்டும் எப்படி அவசர அவசரமாக சென்னைக்கு ஓடிப்போக முடிந்தது விஜய்? உங்களின் மீதான நம்பகத்தன்மை மொத்தமாக உடைந்தது அந்த நள்ளிரவில்தான். நீங்கள் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரெல்லாம் எத்தகைய போராட்டக் களத்தில்; எவ்வளவு ஆபத்துகளுக்கு மத்தியில்; உயிரைத் துச்சமாக நினைத்து மக்களுடன் நின்றவர்கள் தெரியுமா விஜய்? தலைவர்களைப் பூத்தூவி வழிபடுவது வேறு, நெஞ்சாரப் பின்தொடர்வது வேறு! துயரம் நடந்த இடத்துக்கும் செல்லவில்லை... மருத்துவமனைக்கும் செல்லவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவும் செல்லவில்லை... ஏர்போர்ட்டில்கூட செய்தியாளர்களிடம் நடந்தது குறித்து விளக்கமோ, துக்கமோ தெரிவிக்கவில்லை. நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி முதல்... கடைசிக் குடிமகன் வரை இரங்கல் தெரிவித்த பின்பு, கடைசி ஆளாகக் கடமைக்கு ஒரு ட்வீட் போட்டீர்கள். புதைக்கப்பட்டவர்களின் மேட்டில் புல் முளைக்கத் தொடங்கிவிட்ட மூன்றாவது நாளில், கிட்டத்தட்ட 68 மணி நேரத்துக்குப் பிறகு, நான்கு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிலும் அரசியல் செய்திருக்கிறீர்கள். இவ்வளவுதானா உங்கள் அரசியல்... இதைச் செய்யத்தான் சினிமாவைவிட்டு வந்தீர்களா விஜய்! விஜய் கட்சி தொடங்கியது முதல் கரூர் வரை... சொதப்பல்களும் அலட்சியமும்! கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நீங்கள் வெளியிட்ட அந்தக் குறு வீடியோவில் ‘கிட்டத்தட்ட ஐந்து மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கல. ஆனா, கரூர் மாவட்டத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துச்சு?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு நடந்தது எதுவும் தெரியாதா... அல்லது மறந்துவிட்டீர்களா விஜய்? சரி, உங்களுக்காக ஒரு ரீவைண்ட்! உங்களின் முதல் மாநாடான விக்கிரவாண்டி மாநாட்டுக்கு, உங்களைக் காண வந்தவர்களில் மாநாட்டுத் திடலில் ஒருவரும், விபத்தில் ஐந்து பேரும் பலியானார்கள். அந்த மாநாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 42 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள் விஜய். இரண்டாவதாக நடந்த மதுரை மாநாட்டில் இரண்டு பேரும், விருதுநகரில் பேனர் வைத்த ஒரு இளைஞர் மின்சாரம் தாக்கியும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். கிட்டத்தட்ட 14 பேருக்குப் படுகாயம். மதுரை மாநாட்டுக் கொடிக்கம்ப விபத்து உங்களுக்கு நினைவிருக்கும். அந்த ராட்சசக் கொடிக்கம்பம் மாநாடு நடக்கும்போது சரிந்து விழுந்திருந்தால்... ஐயோ, நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது. மாநாடுகள் முடிந்து, பிரசாரச் சுற்றுப்பயணம் என்கிற பெயரில் வீக் எண்ட் ட்ரிப் ஒன்றைத் திட்டமிட்டீர்கள். அது திருச்சியில் ஆரம்பித்தது. விமான நிலையத்துக்கு வந்த உங்களை வரவேற்க, ஆயிரக்கணக்கானோர் கூடினார்கள். நீங்கள் நடத்திய அந்த ரோடு ஷோவில், அன்று உங்களின் வாகனத்தைப் பின்தொடர்ந்த ரசிகர்கள் எத்தனை பேர் உங்கள் வண்டியில் மோதி விபத்தில் சிக்கினார்கள் தெரியுமா..? மயக்கமடைந்தது மட்டும் 12 பேர்! அன்றைய தினம் நீங்கள் அரியலூரில் பேசும்போதே 6 பேர் மயக்கமடைந்தார்கள். அடுத்த வாரம் திருவாரூரில் 17 பேர், நாகப்பட்டினத்தில் 5 பேர் என விபத்துக்கும் மயக்கத்துக்கும் உள்ளானார்கள். எனவே, நீங்கள் சொல்வதுபோல் கரூரில் மட்டும் முதன்முறையாக எதுவும் நடக்கவில்லை விஜய்! திருவாரூரில்... இப்படியாக, நீங்கள் செல்லுமிடமெல்லாம் உங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் எவ்வளவு பாதிப்பு தெரியுமா? சொன்ன நேரத்துக்கு நீங்கள் வராததால், எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை, சமூக வலைதளங்களில் தேடிப்பாருங்கள் விஜய். ‘காவல்துறை கடுமையாக நிபந்தனை போடுகிறார்கள்’ என்று உங்கள் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் போட்ட வழக்கில், ‘தலைவராக இருக்கும் நீங்கள்தான் உங்களுக்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் குட்டுவைத்ததே... அதுவாவது ஞாபகம் இருக்கிறதா? அதோடு, ‘அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும்விதமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில்’ விதிமுறைகளை வகுக்கச் சொன்னார்கள். இது போன்ற மோசமான நிலைக்கு, உங்கள் கட்சியும் நிர்வாகிகளும்தான் காரணம். இதெல்லாம் உங்கள் கவனத்துக்கே வரவில்லையா... அல்லது அறிந்தும் நீங்கள் பொருட்படுத்தவில்லையா? அப்படி இல்லையென்றால், ‘கரூர்போல வேறு எங்குமே இப்படி நடக்கவில்லை’ என்று முழுப் பூசணிக்காயை நான்கு நிமிட வீடியோவில் மறைக்கப் பார்ப்பீர்களா? எப்போதாவது எதிர்பாராமல் திடீரென நடப்பதுதான் விபத்து. ஆனால், உங்களின் எல்லா நிகழ்வுகளிலுமே அது நடந்திருக்கிறது என்றால் அதற்குப் பெயர் விபத்து அல்ல விஜய்... அலட்சியம்! பயணத் திட்டத்தில் மாற்றம்... ஈகோ அரசியலா விஜய்? உங்கள் சுற்றுப்பயண அறிவிப்பில், 27-09-2025 சனிக்கிழமையில் திருவள்ளூர், வடசென்னைப் பகுதிகளில்தான் பயணம் செய்வதாக இருந்தீர்கள். 13-12-2025 சனிக்கிழமைதான் சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்குச் செல்வதாகத் திட்டமிட்டீர்கள். ஆனால், திடீரென திருவள்ளூர், வடசென்னை சனிக்கிழமைப் பயணத் திட்டத்தை கேன்சல் செய்துவிட்டு, 14-வது சனிக்கிழமை செல்வதாக இருந்த நாமக்கல், கரூருக்கு ஏன், எதற்காக அவ்வளவு அவசரமாக மாற்றினீர்கள்..? செப்டம்பர் 17-ம் தேதி கரூரில் முப்பெரும் விழாவை நடத்திய தி.மு.க-வுக்காகவா? `கரூரில் தி.மு.க கூட்டத்தைக் காட்டிவிட்டது... அதைவிடப் பெரிதாக ஒரு கூட்டத்தைக் கூட்டி மாஸ் காட்டலாம்’ என்கிற ஈகோதானே? அதனால்தான், அவசர அவசரமாக கரூருக்குச் சென்றீர்களா விஜய்? ‘சுற்றுப்பயணத்துல எனக்காக வருகிற மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கணும் என்கிற எண்ணம், என் மனசுல எப்பவும் இருக்கும்’ என்று வீடியோவில் சொல்லியிருக்கிறீர்களே... வேலுச்சாமிபுரம் சரியான இடமில்லை என்று தெரிந்தும், ஏன் அங்கு செல்ல ஒப்புக்கொண்டீர்கள்? ‘மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்’ என்கிற எண்ணம், மனசுல இருந்து என்ன பிரயோஜனம்... அது செயல்பாட்டில் இல்லையே? உண்மையிலேயே உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால் நாமக்கல்லில் 8:45 மணிக்குக் கூட்டமென்று அறிவித்துவிட்டு, காலை 8:45 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்புவீர்களா..? மக்களைக் காக்கவைத்து, ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, மெல்ல மெல்ல உயரமான பீடத்தில் வந்து தேவதூதன்போல நிற்பதெல்லாம் மன்னராட்சிக்கால அரசியல் கோட்பாடு விஜய்! நீங்கள் நினைத்திருந்தால், கரூர் அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம். முதலில் நீங்கள் தாமதமாக வந்ததால், நாமக்கல்லிலேயே 35 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். கரூருக்கு வரும் வழியில் இரண்டு பேர் உங்கள் பிரசார வாகன டயருக்கு அருகில் விழுந்து உயிர் தப்பித்தார்கள். கரூரில் உங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், 250 மி.லி கொண்ட 12,000 வாட்டர் பாட்டில்களே ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதாவது வெறும் 3,000 லிட்டர் தண்ணீர்தான். உங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இதைவிட 10 மடங்கு அதிகமாகத் தண்ணீர் விநியோகிப்பீர்கள்தானே? சம்பவம் நடந்த அன்று ஆயிரக்கணக்கான உங்களின் `நண்பா, நண்பிகள்’ தண்ணீரின்றி தவித்துத் துடித்திருக்கிறார்கள். மற்றொரு புறம் இயற்கை உபாதைகளைக் கழிக்க வழியின்றி அவஸ்தையில் நெளிந்திருக்கிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு, கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல், நேர நிர்வாகம், கட்சியினருக்குள் தகவல் பரிமாற்றம் என அத்தனை வகையிலும் சொதப்பியிருக்கிறது உங்கள் கட்சி நிர்வாகம். உங்கள் கட்சியின் ஒரே முகமான நீங்கள்தானே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்? கரூர் செல்லும் வழியில்... வந்தால் ராஜ பவனி மட்டும்தானா விஜய்..? உங்களின் பிரசார வாகனம் வேலுச்சாமிபுரத்தை நெருங்கியபோதே மரண ஓலங்களையும், ஆம்புலன்ஸ் சத்தத்தையும் உங்கள் கட்சி நிர்வாகிகளும் நீங்களும் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். ஆனாலும் அவசரப்படாமல், பாயின்ட்டில் பேருந்தை நிறுத்திவிட்டு, 10 நிமிட ஓய்வுக்குப் பிறகுதானே நீங்கள் வெளியே வந்தீர்கள்... அப்போதே 10-15 பேர் மயக்கமாகி ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டார்கள். அந்தக் கூட்டத்தில் எல்லாரையும்விட உங்களால் மட்டும்தான், அந்தக் கூட்டத்தையும் அங்கு நடப்பதையும் நன்றாகப் பார்க்க முடிந்திருக்கும். ஏனென்றால், அங்கு அவ்வளவு உயரத்தில் நீங்கள்தான் நின்றிருந்தீர்கள். ஆனாலும் அங்கு எதுவுமே நடக்காததுபோல இயல்பாகப் பேசினீர்கள். சரியாக ஏழாவது நிமிடத்தில் ‘Sir, Crowd Burst Hogaya’ என்று பாதுகாப்பு அதிகாரி உங்களை எச்சரித்தார். ஆனாலும் நீங்கள் ஸ்கிரிப்ட்டில் இருந்த பாட்டைப் பாடிவிட்டுத்தான் பேச்சை முடித்தீர்கள். அந்தச் சமயத்திலேயே பலர் மூச்சின்றி சரியத் தொடங்கிவிட்டார்கள். உயிரிழப்புச் சம்பவங்கள் குறித்து உங்களுக்கு முழுச் செய்தி கிடைத்த பிறகும், உங்கள் மீதான அன்பில் வந்தவர்களைக் கைவிட்டு, உங்களின் வியூக வகுப்பாளர்களின் பேச்சைக் கேட்டு சென்னைக்கு ஓடினீர்கள். எந்திரன்’ படத்தில் சிட்டி அந்த டி.வி-யைப் போடு...’ எனச் சொன்னதும் டி.வி-யைக் கீழே போட்டு உடைக்கும் ரோபோவுக்கும் சுய முடிவெடுக்காத உங்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது விஜய்? இதன் நீட்சியாகவே, உங்களின் இரங்கல் வீடியோவும் இருந்தது விஜய். ‘உண்மை விரைவில் வெளியே வரும். சி.எம் சார் உங்களுக்குப் பழிவாங்க வேண்டும் எனில் என்னைப் பழிவாங்குங்கள்’ என சினிமாத்தனமாக வீடியோ வெளியிட்டிருக்கிறீர்களே... 41 உயிர்களின் மீதுதான் உங்களின் தி.மு.க Vs த.வெ.க என்ற அரசியலை எழுதப் பார்க்கிறீர்களா? இந்தச் சூழ்நிலையிலும் உங்கள் மேல் கோபப்படாமல் தங்களைத் தாங்களே நொந்துகொள்கிறார்கள் கரூர் மக்கள். அவர்களுக்கு இருக்கிற அந்தப் பெருந்தன்மையில் துளிக்கூட உங்களுக்கு இல்லாமல் போச்சே ஏன் விஜய்? மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், லட்சக்கணக்கான பேர் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி ‘உயிர் வணக்கங்கள்... உயிர் வணக்கங்கள்...’ எனக் கத்தினீர்களே... ஆனால், இறுதி மூச்சுவரை ‘த.வெ.க... த.வெ.க...’ என முழங்கியபடி, கரூரில் உயிரிழந்த ஒருவருக்குக்கூட நீங்களோ, உங்களின் கட்சி நிர்வாகிகளோ இறுதி அஞ்சலி செலுத்தக்கூட வரவில்லையே... நீங்கள் வி.வி.ஐ.பி., நீங்கள் வந்தால் கூட்டம் கூடும் என்பீர்கள். ஏன், உங்களின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்கூட அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை? தலைவன் எவ்வழியோ... தொண்டர்களும் அவ்வழி. பிரச்னை என்றால், `பேக்அப்’ சொல்லிவிட்டு வீட்டுக்குப் போவதற்கு இது ஒன்றும் சினிமா அல்ல விஜய். இது அரசியல்! பஸ்ஸில் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடும் விஜய்... பஸ்ஸில் லைட்டை ஆன்-ஆஃப் செய்து விளையாடும் விஜய்... சரி, இவ்வளவு நடந்தும், இன்னும் ஏன் நீங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கிறீர்கள் விஜய்? இன்னும் எத்தனை நாள் உள்ளேயே இருக்கப்போகிறீர்கள்? வந்தால் ராஜ பவனி மட்டும்தான் வருவீர்களா? சரி, உங்கள் நிர்வாகிகள் எங்கே? அவர்களும் ஏன் ஓடி ஒளிகிறார்கள்... உங்கள்மீது தப்பே இல்லை என்றால் ஏன் இந்த ஓட்டம்... த.வெ.க-வுக்கு என்று ஒரு கருத்தோ, தரப்பு நியாயமோ இருக்கிறதா இல்லையா... அதை நீங்கள் ஏன் பேசவில்லை... அதைச் சொல்ல உங்கள் கட்சியில் யாருமே இல்லையா? உங்கள்மீது தவறே இல்லை எனில், செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிப்பதில் உங்களுக்கு என்ன பயம்? யார் உங்களைத் தடுக்கிறார்கள்... இறந்தவர்கள் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லக்கூட இன்னும் நீங்கள் கதவைத் திறக்கவில்லையே. எப்போதுதான் வெளியே வருவீர்கள்? உங்கள் பிரசார வாகனத்துக்குள் அமர்ந்தபடி, லைட்டை ஆன் ஆஃப் செய்து நீங்கள் விளையாடும் காட்சி ஒன்று கண்களில் இக்கணம் வந்து போகிறது. நீங்களும், உங்கள் ரசிகர்களும் அரசியல்மயப்பட வேண்டிய அவசியம் குறித்து, அச்சமும் அக்கறையும் ஒருசேரக் கொள்கிறோம். டிரோன் ஷாட் மோக அரசியலிலிருந்து இறங்கி வாருங்கள் விஜய். ‘மக்களிடம் செல்... மக்களுடன் வாழ்... மக்களிடம் கற்றுக்கொள்... மக்களுக்குச் சேவையாற்று’ என்ற பேரறிஞர் அண்ணாவின் சொற்களை மைக்கில் வாசித்தால் மட்டும் போதாது விஜய். செயலிலும் அது பிரதிபலிக்க வேண்டும். பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டு, எதற்கெடுத்தாலும் வீட்டுக்குள் ஓடி ஓடி ஒளிந்துகொள்வது ஏன் விஜய்? உண்மையைக் கண்டு, கள அரசியலைக் கண்டு பயமா? நீங்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது, ‘வாழ்த்துகள் விஜய்’ என்று எழுதினோம். இப்போது ‘கொஞ்சம் நின்று நிதானித்து, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் விஜய்’ என்று சொல்கிறோம். ‘நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்’ என்கிற வள்ளுவன் வாக்கை, பொருளோடு திரும்பத் திரும்பப் படியுங்கள் விஜய்!https://www.vikatan.com/government-and-politics/special-story-tvk-leader-vijay-political-activities-about-karur-stampede-death TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க... டெல்லி பல்ஸ் என்ன? ந.பொன்குமரகுருபரன் 3 Min Read வரக்கூடிய தேர்தலில், ஜெயித்தாலும் தோற்றாலும், தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் விஜய். அதனால்தான்...! Published:Today at 4 PMUpdated:Today at 4 PM விஜய் Join Our Channel 22Comments Share தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்... அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ.க...” என்று பலவாறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சபாநாயகரான அப்பாவுகூட, “திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதுபோல, அரசியலில் நடிப்பதற்கு அமித் ஷாவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கட்சி தொடங்கியிருக்கிறார் விஜய்...” என்று காட்டமாகவே விமர்சித்திருக்கிறார். இப்படி, நாலாபுறமும் விஜய்யையும் பா.ஜ.க-வையும் இணைத்து வைத்து பேச்சுகள் எழுந்துள்ள சூழலில், த.வெ.க-வின் சீனியர் நிர்வாகிகளிடமிருந்து அக்கருத்துக்கு மறுப்போ, ஆதரவோ இதுவரையில் வெளிவரவில்லை. என்னதான் நடக்கிறது இவ்விவகாரத்தில்... டெல்லியின் பல்ஸ் என்ன..? பா.ஜ.க-வின் மையக்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “கரூரில் நடந்த விஜய்யின் சுற்றுப்பயணத்தில் 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் அளிக்கவும், சம்பவ இடத்தை ஆய்வு செய்து தனிப்பட்ட முறையில் ரிப்போர்ட் அளிக்கவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை கரூருக்கு அனுப்பிவைத்தது பிரதமர் அலுவலகம். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி கரூருக்கு வந்த அவர்கள் இருவரும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். 41 உயிர்களைப் பலிவாங்கிய வேலுசாமிப்புரம் சாலையிலும் ஆய்வு செய்தனர். ‘இவ்வளவு பேர் கூடியிருந்தபோது, சாலையின் இருபுறமும் ஏன் போலீஸார் தடுப்புகளைப் போட்டார்கள்... விஜய்யின் வாகனம் எங்கே நின்றது, எப்படி வெளியேறியது... கரன்ட் கட் ஏன் ஆனது...’ என்று பல்வேறு கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்ட நிர்மலா சீதாராமன், அவர்கள் சொன்ன பதிலை உள்வாங்கிக் கொண்டார். நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரித்து தகவல்களைச் சேகரித்தார். அடுத்தநாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிர்மலா சீதாராமான், கரூரில் நடந்த நிகழ்வு குறித்து விவரித்திருக்கிறார். ‘இறந்தவர்களில் 15 பேர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒன்றுமறியாத குழந்தைகளும் பெண்களும் இறந்திருக்கிறார்கள். காவல்துறைக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது...' என்று நிர்மலா சீதாராமன் சொல்லவும்தான், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்கு எட்டு பேர்கொண்ட பா.ஜ.க எம்.பி-க்கள் குழுவையும், தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவரையும் அனுப்ப முடிவானது. அமித் ஷா தி.மு.க வட்டாரங்களெல்லாம், கரூர் சம்பவத்தின் முழு பொறுப்பையும் விஜய் தலையின் மீது ஏற்றிவிட்டார்கள். அரசியல்ரீதியாக தனிமைப்பட்டு போனார் விஜய். 'இந்தச்சூழலில் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டினால், உங்கள் பக்கம் அவர் சாய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத்தியில் ஆட்சியில் இருப்பதால், நீங்கள் பேசி தைரியம் சொன்னால்தான் சரியாக இருக்கும்...’ என்று அமித் ஷாவுக்கு ஆலோசனை சொன்னது, கிண்டிக்காரர்தான். அதைத்தொடர்ந்தே, விஜய்யுடன் பேசுவதற்கான முன்னெடுப்பை எடுத்தது அமித்ஷா அலுவலகம். பேசுவதற்கு விஜய் சம்மதிக்கவும், தன் நம்பிக்கைக்குரிய சிலரை நீலாங்கரையிலுள்ள விஜய்யின் வீட்டுக்கு அனுப்பி, அவர்களின் போனில் விஜய்யுடன் பேசினார் அமித் ஷா. கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமித் ஷா, ‘நடந்தது பெரும் துயரம். இக்கட்டான இந்தத் தருணத்தில், உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம். அரசியல்ரீதியிலான தாக்குதல்களைப் பார்த்து கவலைப்படாதீர்கள்...’ என்று ஆறுதல் சொல்லவும், நடந்த சம்பவம் குறித்து விஜய்யும் சில விவரங்களை அமித் ஷாவிடம் சொல்லியுள்ளாராம். தான் சி.பி.ஐ விசாரணை கோரியிருப்பதையும் கூறியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்த டெலிபோன் பேச்சின் முடிவில், விஜய்க்கு நம்பிக்கைத் தரும் வார்த்தைகளும் அமித் ஷாவிடமிருந்து வெளிவந்துள்ளன. இவர்களின் உரையாடல் கசிந்ததைத் தொடர்ந்தே, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணையப்போகிறார்' என்ற தகவல் றெக்கைக்கட்டிப் பறக்கிறது. எடப்பாடி பழனிசாமி! பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியில் விஜய் இணைவது எங்களுக்கு பலம்தான். ஆனால், 'எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு அவர் கூட்டணிக்கு வருவாரா... வந்தால், எவ்வளவு சீட்டுகளை எதிர்பார்ப்பார்...’ என்பதெல்லாம் கேள்விக்குறி. விஜய்யை வளைப்பதற்கு, ஆறுதல் அஸ்திரத்தைக் கையில் எடுத்து வலையை விரித்திருக்கிறது டெல்லி. அரசியல் தாக்குதல்களால் தனிமைப்பட்டுப் போயிருக்கும் விஜய்க்கு, டெல்லியின் அனுசரணையான வார்த்தைகள் ஆறுதலைத் தந்திருக்கின்றன. கூட்டணியில் இணைவது குறித்தெல்லாம் அவர்தான் முடிவெடுக்க முடியும்...” என்றனர் விரிவாக. நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “தன்னுடைய கட்சியின் கொள்கைகளை பிரகடனப்படுத்தியபோதே, ‘என்னுடைய கொள்கை எதிரி பா.ஜ.க; அரசியல் எதிரி தி.மு.க' என்பதை அழுத்தமாகவே சொல்லியிருந்தார் விஜய். இந்தச் சூழலில், கரூர் துயரத்தில் விஜய் தனிமைப்பட்டுப் போயிருப்பதை உணர்ந்து, அவருக்கு பாசக்கரம் நீட்டியிருக்கிறது பா.ஜ.க. அ.தி.மு.க-வும்கூட, ஆறுதலான வார்த்தைகளை அள்ளி வீசுகிறது. விஜய்யின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து, மத்திய உள்துறையில் விவாதமெல்லாம் நடைபெறுகிறது. தன்னைச் சுற்றிலும் நடக்கும் அரசியலை விஜய் புரிந்துகொள்ளாமல் இல்லை. விஜய் கடந்தமாதம் நடந்த த.வெ.க-வின் செயற்குழுவிலேயே, ‘முதல்வர் வேட்பாளர் விஜய்தான்' என்பதை தீர்மானமாகவே போட்டிருக்கிறார்கள். இந்தச்சூழலில், அ.தி.மு.க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு பலம்கொடுக்க விஜய் தயாராக இல்லை. தவிர, தி.மு.க-விடம் இருக்கும் பா.ஜ.க-வுக்கு எதிரான சிறுபான்மையினர் வாக்குகளில்தான் விஜய் பெருமளவு பதம் பார்க்கிறார். இப்படியான சூழலில், பா.ஜ.க-வுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால், விஜய்க்கு கிடைக்க வாய்ப்புள்ள சிறுபான்மை சமூக வாக்குகள்கூட கிடைக்காது. வரக்கூடிய தேர்தலில், ஜெயித்தாலும் தோற்றாலும், தனக்கென ஒரு வாக்குவங்கியை உருவாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் விஜய். அதனால்தான், தனக்கு ஆறுதல் சொன்ன அமித்ஷாவுக்கு, தன் வீடியோ பதிவில் நன்றிகூட சொல்லவில்லை விஜய். அவருக்கு வயதும் இருக்கிறது காலமும் இருக்கிறது. ஆகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர் இணைவது என்பது, சாத்தியமில்லாத விஷயம்தான்" என்றனர். தனக்குள்ள வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ள, தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் விஜய் செல்லமாட்டார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், அவரை எப்படியாவது வளைத்து கூட்டணிக்குள் கொண்டுவர தீவிரமாகவே காய்நகர்த்தத் தொடங்கிவிட்டது டெல்லி. விஜய் மனதில் கொளுந்துவிட்டு எரியும், ‘தி.மு.க எதிர்ப்பு' நெருப்பின்மீது நெய்யை ஊற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது, விரைவிலேயே தெரிந்துவிடும்.
1 month ago
புரட்சி செய்வதற்கும் போராட்டங்கள் நடத்துவதிலும் தேர்ச்சி பெற்ற அதிக மக்களைக் கொண்ட நாடு பிரான்ஸ் நாடு.🤪
1 month ago
1 month ago
1 month ago
1 month ago
முதல் விளையாட்டில் கூட மழை பெய்து இலங்கை இந்தியா போட்டி சில மனி நேரம் பாதிக்கப் பட்டு சில ஓவர்கள் தான் குறைக்கப் பட்டது..........................
1 month ago
முதலில் தமிழரசுக்கட்சி ஒற்றுமையாக இருக்கிறதா?தமிழரசுக்கட்சிக்கு தலைவர் ,செயலாளர் பதவிகள் ஏன் வெற்றிடமாக இருக்கின்றன என்றுதலைவர் ,செயலாளர் இல்லாத தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சிவஞானம்கூறவேண்டும்.
1 month ago
நான் நினைத்தேன் பாக்கிஸ்தானுக்காகத்தான் இலங்கையில் போட்டிகள் வைத்தார்கள். மழைகாலம் இன்னும் முழுதாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் என்னமோ தெரியேல, போட்டி வைக்கிற அன்று சரியாகப் பெய்யும்.
1 month ago
தரமான பேரூந்து வண்டிகளை மட்டுமல்ல தரமான வண்டி ஓட்டிகளையும் தெரிவு செய்ய வேண்டும். தற்போது விமான ஓட்டிகளை பரிசோதனையின் பின்பு விமானப் பறப்புக்கு அனுமதிப்பது போல பேரூந்து வண்டி ஓட்டிகளையும் பரிசோதனையின் பின்புதான் ஓட்டவிட வேண்டும்.
1 month ago
02 Oct, 2025 | 06:19 PM அ. அச்சுதன் உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235 ற்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தில் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில், கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, கலாநிதி கெஹான் குணதிலக்க ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர். அதன் பின்னர், ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த அவதானிப்புகளும் பரிந்துரைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் திட்டமிட்ட வகையில் படுகொலைகள் நடந்திருப்பது தற்போது நிரூபணமாகி வரும் நிலையில், இது ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 1995 - -1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தகைய படுகொலைகள் அரங்கேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி பகுதியில் 300 முதல் 400 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக முன்னர் சாட்சியம் அளித்திருந்தார். அதன்பின் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டு 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு யாழ் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் அநுராதபுரம், கொழும்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது. தோண்டப்பட்ட சடலங்கள் மேலதிக பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை. இந்த நிலையில்தான், 2025 பெப்ரவரியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது, மனித எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த பெப்ரவரியிலிருந்து செம்மணி புதைகுழி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியம் தற்போது உண்மை என்று நிரூபணமாகி வருகிறது. செம்மணி விவகாரத்தில் சர்வதேச தரத்திலான விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், செம்மணிக்கு நேரடியாகச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர், உரிய விசாரணையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்தச்சூழலில், அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நீதி அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இந்தச் செயற்திட்டத்தில் விரைவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி உதவி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கி வருகிறது. அண்மையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியிருந்த சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலையில் சந்தித்து, காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் அவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றிருந்தமை இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய நகர்வாகும். மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகள் பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, கிழக்கு சமூக இயக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தன. அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்: • சர்வதேச விசாரணை : தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு உட்பட அனைத்துலகக் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதித்துறை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். • செம்மணி, மன்னார் புதைகுழிகள் : செம்மணி மற்றும் பிற மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச நிபுணர்களை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். • நில ஆக்கிரமிப்பு : தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் நடைபெறும் அரச ஆதரவுடனான குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி, நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும். • கலாசார அழிப்பு : தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்த வேண்டும். • காணாமல் போனோர் விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உடன் வெளிப்படுத்தி, நீதி வழங்க வேண்டும். • சட்டங்கள் நீக்கம் : பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசேட கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகுதியான 75 பேருடன் கூடிய 25 உப குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும் காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. முன்னர் அமைக்கப்பட்ட மெக்ஸ்வல்பரணகம ஆணைக்குழுவுக்கு 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. 1990களில் தென்னாபிரிக்காவில் 'உண்மை கண்டறியும்பொறிமுறை' உருவாக்கப்பட்டு, பல உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. அதன் மூலம், அந்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. இலங்கைக்கும் இதேபோன்ற ஒரு முறை தேவை என நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்திற்கான வேண்டுகோள் தற்போது புதிய அரசாங்கம் நியமித்துள்ள இந்த உப குழுக்களின் செயற்பாடுகள் சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடைபெறுவது அவசியம். செம்மணிப் புதைகுழியில் 90 வீதமான எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டிருப்பது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடந்திருப்பதற்கான சாத்தியத்தை உணர்த்துகிறது. இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே சர்வதேச நிபுணத்துவம் அவசியம் என வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது. மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு அரச சார்பு நிறுவனம் என்ற போதிலும், அது சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இத்தகைய ஆலோசனைகளை வழங்கியிருப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எனவே, காணாமல் போனோர் மற்றும் செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் ஒரு நீதியான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிய முன்வரவேண்டும். https://www.virakesari.lk/article/226724
1 month ago
02 Oct, 2025 | 06:19 PM

அ. அச்சுதன்
உலகிலேயே மிக அழகான தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதே இலங்கையின் வட பகுதியில் உள்ள செம்மணியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் இதுவரை குழந்தைகள் உட்பட 235 ற்கும் மேற்பட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இது, அழகிய இலங்கைத் தீவின் பின்னால் மறைந்துள்ள மனிதாபிமானமற்ற கடந்த கால கொடூரங்களை வெளிக்கொணர்வதாக உள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆழத்தைக் கருத்தில் கொள்ளும்போது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடைபெற்று, அந்த உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தில் கண்டறியப்பட்ட இந்த மனிதப் புதைகுழியில், கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, கலாநிதி கெஹான் குணதிலக்க ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
அதன் பின்னர், ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த அவதானிப்புகளும் பரிந்துரைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் திட்டமிட்ட வகையில் படுகொலைகள் நடந்திருப்பது தற்போது நிரூபணமாகி வரும் நிலையில், இது ஒரு சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. 1995 - -1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தகைய படுகொலைகள் அரங்கேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கிருசாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி பகுதியில் 300 முதல் 400 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக முன்னர் சாட்சியம் அளித்திருந்தார்.
அதன்பின் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டு 15 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கு யாழ் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு, பின்னர் அநுராதபுரம், கொழும்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது.
தோண்டப்பட்ட சடலங்கள் மேலதிக பரிசோதனைக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்ட பின்னர், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.
இந்த நிலையில்தான், 2025 பெப்ரவரியில் செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது, மனித எலும்புத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த பெப்ரவரியிலிருந்து செம்மணி புதைகுழி மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சோமரத்ன ராஜபக்ச தெரிவித்த சாட்சியம் தற்போது உண்மை என்று நிரூபணமாகி வருகிறது.
செம்மணி விவகாரத்தில் சர்வதேச தரத்திலான விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், செம்மணிக்கு நேரடியாகச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர், உரிய விசாரணையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இந்தச்சூழலில், அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நிபுணத்துவத்தைக் கோரி இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, நீதி அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இந்தச் செயற்திட்டத்தில் விரைவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அகழ்வுப்பணிகளுக்கு நிதி உதவி, கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கி வருகிறது.
அண்மையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியிருந்த சோமரத்ன ராஜபக்சவை சிறைச்சாலையில் சந்தித்து, காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் அவரிடம் இருந்து தகவல்களைப் பெற்றிருந்தமை இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய நகர்வாகும்.
மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கைகள்
பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, கிழக்கு சமூக இயக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தன. அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்:
• சர்வதேச விசாரணை : தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு உட்பட அனைத்துலகக் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதித்துறை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.
• செம்மணி, மன்னார் புதைகுழிகள் : செம்மணி மற்றும் பிற மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச நிபுணர்களை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்.
• நில ஆக்கிரமிப்பு : தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் நடைபெறும் அரச ஆதரவுடனான குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி, நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும்.
• கலாசார அழிப்பு : தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கும் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்த வேண்டும்.
• காணாமல் போனோர் விவகாரம் : காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உடன் வெளிப்படுத்தி, நீதி வழங்க வேண்டும்.
• சட்டங்கள் நீக்கம் : பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசேட கருத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகுதியான 75 பேருடன் கூடிய 25 உப குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.
2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும் காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. முன்னர் அமைக்கப்பட்ட மெக்ஸ்வல்பரணகம ஆணைக்குழுவுக்கு 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.
1990களில் தென்னாபிரிக்காவில் 'உண்மை கண்டறியும்பொறிமுறை' உருவாக்கப்பட்டு, பல உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டன. அதன் மூலம், அந்தப் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. இலங்கைக்கும் இதேபோன்ற ஒரு முறை தேவை என நீண்டகாலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கான வேண்டுகோள்
தற்போது புதிய அரசாங்கம் நியமித்துள்ள இந்த உப குழுக்களின் செயற்பாடுகள் சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் நடைபெறுவது அவசியம். செம்மணிப் புதைகுழியில் 90 வீதமான எலும்புக்கூடுகள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டிருப்பது, அங்கு சட்டவிரோதப் படுகொலைகள் நடந்திருப்பதற்கான சாத்தியத்தை உணர்த்துகிறது. இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே சர்வதேச நிபுணத்துவம் அவசியம் என வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.
மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு அரச சார்பு நிறுவனம் என்ற போதிலும், அது சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இத்தகைய ஆலோசனைகளை வழங்கியிருப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எனவே, காணாமல் போனோர் மற்றும் செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் ஒரு நீதியான விசாரணையை நடத்தி உண்மையைக் கண்டறிய முன்வரவேண்டும்.
https://www.virakesari.lk/article/226724
1 month ago
இட்லி கடை - பணத்திமிர் ஒரு உண்மைக் கதையைப் படியுங்கள். அதைத் தொடர்ந்து இட்லி கடைக்கு வருவோம். கிராமத்திலிருந்து சென்னை வந்த ஒருவர், அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு ஹோட்டலைத் திறக்கிறார். அவரின் வாழ்க்கையில் அவரின் அம்மாவின் சமையல் குறிப்புகள் பற்றிய பல செய்திகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்கிறார். இந்தியாவுக்கு வந்தால் அவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவரும், அவரின் அம்மாவும் சமையல் செய்கிறார்கள். அவர் பல தோல்விகளைச் சந்திக்கிறார். சவால்களை எதிர் கொள்கிறார். எல்லாவற்றிலும் வெற்றி கண்டு அமெரிக்கா மட்டுமல்ல, தற்போது திருப்பதியில் கூட ஒரு ஹோட்டல் துவங்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. அவர் யார் தெரியுமா? மைலாப்பூர் எக்ஸ்பிரஸ் ஹோட்டலின் உரிமையாளர் ஜெய். அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது அவரின் உணவுகள். ஏன் திரும்ப இந்தியாவில் அதுவும் திருப்பதியில் ஹோட்டல் ஆரம்பிக்கிறார்? அவருக்குத் தெரிந்திருக்கிறது அமெரிக்கா பற்றி. திட்டமிடல். ஒரு மாபெரும் ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். அவரின் குடிப் பெருமையை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்துகிறார். அவர் விற்பனை செய்யும் உணவுகளில் அவைகள் வெளிப்படுகின்றன. அவரிடம் வேலை செய்யும் பணியாளர்களிலிருந்து எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துகிறார். அவர் மிகச் சரியான வகையில் தன்னையும், தன் குடிப் பெருமையையும், தன்னைச் சார்ந்த நபர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். அதை எல்லோரும் வெறுக்கா வண்ணம் சாத்தியப்படுத்துகிறார். உணவு என்கிற போது சமூகநீதி உண்டு. உணவின் பெயர்களில் சாதி இருந்தாலும், அதன் சுவைக்கு முன்னால், அதன் வியாபாரத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாது. ஆனால் கல்வியில் அது இல்லை. அமெரிக்க கல்லூரி ஒன்றின் ஆய்வறிக்கையில் - பார்ப்பனர்கள் ஒரு பள்ளியின் பாடத்திட்டத்திலிருந்த தலித் என்கிற வார்த்தை இந்திய வரலாற்றில் இல்லை எனக் குறிப்பிட்டு, அதை நீக்க வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதை குழுவில் சமர்ப்பித்த போது, பார்ப்பனர்களின் சதியால் பொய்யான தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அந்த பாடத்திட்டத்தினை நிராகரித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியினர். https://scroll.in/article/808394/california-to-decide-today-whether-hindu-groups-can-dictate-what-dalits-call-themselves-in-textbooks மேலே இருக்கும் இணைப்பில் இருப்பதைப் படித்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு பிராமணர்கள் தலித் என்கிற வார்த்தையின் மீது வன்மம் கொண்டுள்ளனர் என அந்த நிகழ்வு காட்டுகிறது. இணைப்பை கிளிக் செய்து படித்துப் பாருங்கள். இதோ மற்றுமொரு ஆதாரம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்து என்ற ஒற்றை வார்த்தையின் பின்னால் மறைந்து கொண்டு நடக்கும் சதிகளைப் படித்துப் பாருங்கள். https://csrr.rutgers.edu/wp-content/uploads/2025/05/hindutva-in-america.pdf அமெரிக்காவில் தலித்துகளும் உள்ளனர். அவர்கள் ஜெய் நடத்தும் மைலாப்பூர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றால் அவர்களை யாரும் தடுப்பது இல்லை. பணத்திற்கு ஏது சாதி? ஒரு தாய் தன் மகனை தொழிலதிபராக மாற்றியது தான் இந்தக் கதை. இனி இட்லி கடைக்கு வருவோம். தனுஷ் பற்றி எல்லோருக்கும் அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும். அசுரன் படத்தையும் பார்த்திருப்பீர்கள். இந்த இட்லிகடை திரைப்படம் அவரின் கற்பனையில் உருவான படமாம். இயக்கமும் அவரே. என்ன கதை? ஒரு கிராமத்தில் சாலையோரமாய் இருக்கும் உணவகத்தினை தனுஷின் அப்பா ராஜ்கிரண் நடத்தி வருகிறார். சிறுவனாக இருந்த பொழுது முதற்கொண்டு அவருடன் உணவகத்துக்கு வரும் தனுஷ் வளர்கிறான். உணவு தயாரிப்பு பற்றிப் படிக்கிறான். ராஜ்கிரண் அவனை இங்கேயே இருந்து, இந்த உணவகத்தை நடத்தி வா என்கிறார். அவன் மறுத்து விடுகிறான். சென்னை செல்கிறான், பின்னர் அமெரிக்கா செல்கிறான். அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் மகளை விரும்புகிறான். திருமணம் நிச்சயமாகிறது. அப்பாவை திருமணத்துக்கு அழைக்கிறான். அவர் முடியாது என்கிறார். திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அடுத்த நாளில் ராஜ்கிரண் இறக்கிறார். இறுதிச்சடங்கிற்காக இந்தியா வருகிறான். பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னால் அப்பா விட்டுச் சென்ற இட்லிக் கடையை நடத்துகிறான். வில்லன் அமெரிக்க காதலியின் அண்ணன். லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது. அவனுடன் படித்த பெண்ணைத் திருமணம் செய்கிறான். எதிர்த்த அமெரிக்க மச்சானை அகிம்சா படி சமாளித்து அவனை இந்த இட்லிக் கடையில் மாவாட்ட வைக்கிறான். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா? ஊரில் பேசிக் கொல்(?)கிறார்கள் இப்படி. “அப்பன் பெயரை மகன் காப்பாற்றி விட்டான்” சுபம். இந்தப் படத்தைப் பார்த்த மாத்திரத்தில் புட் பிளாக்கர் குஞ்சாமணிகளுக்கு குஷி வந்திருக்கும். ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லி, அம்மிக்கல்லில் அரைத்து வைக்கும் சாம்பாரின் சுவைக்கு இந்த உலகில் ஈடு இல்லை. அந்தப் பாரம்பரியத்தை விட்டு விடலாமா? இதற்கு முன்னால் காசு, பணமெல்லாம் தூசு. சாதி,சனத்தை விட்டு விட்டு வெளி நாட்டுக்கு ஏன் போய் பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த இட்லியைச் சாப்பிட்டுச் செல்லும் மக்கள் பாராட்டும் வார்த்தைகளை விட உயர்ந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா? அனைவரும் இதற்குத்தானே பிறந்தோம். இதை விட ராக்கெட் விடுவது, டெக்னாலஜியில் வளர்வது, கோடிகளில் சம்பாதிப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் படம் அதைத்தான் சொல்கிறது. பாரம்பரியத்தினைக் காப்பாற்ற வேண்டுமாம். யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றுச் சொன்னார் கலியன் பூங்குன்றனார். இல்லையில்லை என் ஊரே எனக்குப் போதும் என்கிறது இட்லிகடை. மண் சுவர், ஓலைக்கூரை வேய்ந்த சிறு கடை, மரப்பெஞ்சுகள் இரண்டு, அடுப்பு, அம்மிக்கல், ஆட்டுக்கல் - பாரம்பரியம். 1800 களில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயனுக்கு, இந்தியாவில் இருந்த சாதி கொடுமைகள் பெருத்த அவமானத்தை தந்தது. பிராமண குலத்துக்குத்தான் கல்வி - எல்லோருக்கும் அன்று இல்லை. அக்ரஹாரத்துக்குள் தலித்துகள் வரவே கூடாது. தலித்துக்கு என சேர் என்ற பெயரில் ஊரை விட்டு ஒதுக்கிய இடத்தில் வீடுகள். தலித்துக்கு என சொத்துக்கள் கிடையாது. பரம்பரையான கூலிகள் அவர்கள். குளத்தில் குளிக்க அனுமதி இல்லை. தெருவில் நடக்க அனுமதி இல்லை. கோவிலுக்குள் கடவுளைக் கும்பிட அனுமதி இல்லை. முலையின் சைசுக்கு வரி கட்ட வேண்டும். கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை. மேல் துணி போட அனுமதி இல்லை. காலில் செருப்பு அணிய அனுமதி இல்லை. நீதிமன்றத்தில் நீதிபதியிடமிருந்து 16 அடி தள்ளி நிற்க வேண்டும். தென் தமிழகத்தில் பரவி இருந்த மனித வன் கொடுமைகள் இவை. பெரியார் தென் தமிழகத்தினை திராவிடக்குடும்பம் எனக் குறிப்பிட்டு மேலே குறிப்பிட்டுள்ள கொடுமைகள் செய்தோரை எதிர்த்தார். படிப்பறிவில்லாதவர்களைப் படிக்க சொன்னார், கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பெரியார், அண்ணா, கலைஞர் என இன்றும் தொடர்கிறது சாதிய வன் கொடுமைகள். இதோ தமிழ் நாட்டிலிருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பிராமணரைத் தவிர வேறு எவரும் கருவறைக்குள் சென்று கடவுளை வழிபட முடியாது. இப்படியான சூழல் இருக்கும் போது, இந்த இட்லி கடை. பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம், ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் ஆகியவை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் அல்லவா? இன்றைக்கும் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்விக்கான தொகையை தராமல் தடுத்துக் கொண்டிருக்கிறது பிஜேபி அரசு. இட்லி கடை என்ன சொல்ல வருகிறது? வண்ணான் மகன் வண்ணான் தோட்டி மகன் தோட்டி ஆசாரி மகன் ஆசாரி தோட்டக்காரன் மகன் தோட்டக்காரன் சாதியும் சனமும் தேவை (எதற்கு இட்லி தின்பதற்கு) அமெரிக்கா தேவையில்லை, பணம் தேவையில்லை. படிப்புத் தேவையில்லை. இப்படி எதுவும் தேவையில்லை. அப்பன் பெயரைக் காப்பாற்ற வேண்டும். குலப் பெருமையை விட்டு விடக்கூடாது. அந்த ஊரில் ராஜ்கிரண் மட்டும்தானே உணவகம் வைத்திருந்தார். அவரின் ஆசையை அவரின் மகன் நிறைவேற்றுவது எப்படி தவறாகும் என்று கேட்பீர்கள். அது தனிப்பட்ட ஒருவரின் ஆசை. அந்த ஆசையை மகன் நிறைவேற்றி இருக்கிறான், அதுதானே படம். அதை இப்படி விமர்சிக்க வேண்டுமா எனவும் கேட்பீர்கள். சினிமாக்காரர்களை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பக்கத்து மாநிலத்தில் ஒரு சினிமாக்காரர் துணை முதலமைச்சராக ஆக்கிய பெருமை தென் இந்தியாவுக்கு உண்டு. படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து மூளை மழுங்கச் செய்யும் தந்திர வித்தை கொண்டது சினிமா. இப்போது சொல்லுங்கள். நான் விமர்சிப்பது சரிதானே? சமூக நீதிக்காக இன்றைக்கும் இணையத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோருக்கு இந்தப்படம் மாபெரும் எரிச்சலைத் தந்தது. ஒரு பிராமணர் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களை அமெரிக்கா வரை கொண்டு சென்று, அவர்களின் வாழ்வியலை உயர்த்துகிறார். ஆனால் இவரோ அதெல்லாம் தேவையில்லை என தன் வாழ் நாளை சமூகநீதிக்காக வாழ்ந்தவர்களை அசிங்கப்படுத்தி, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் முன்னேற்றமடைவது தவறு எனப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார். சாதி சனம் முக்கியம் என்று பேசுகிறார். இதற்கு என்ன காரணமாக இருக்கும்? வேறென்ன பணம் வந்தால் பத்தும் பறந்து போகும். கொஞ்சமாவது மனித சமூகத்தின் மேன்மைக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் அதற்கான தகுதி இருப்பவர்களிடம் இதைக் கேட்கலாம். இல்லாதவர்களிடம் கேட்டு என்ன பலன்? சமூக நீதிக்கான போராட்டத்தைச் சீர்குலைக்கும் நயவஞ்சகமான படம் இது. இது கோடாலிப்படம். தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அவலம். இது படமல்ல, அசிங்கம். வளமுடன் வாழ்க. 04.10.2025 ஒரு குசும்பு விமர்சனம் : இட்லி கடைத் திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவு அரைப்பார். அதில் தான் சுவை அதிகமாம். ஒரு விஷயத்தை தனுஷ் மறந்து போனார். தனுஷ்க்கு ஆட்டுக்கல்லே தேவையில்லை. நித்யா மேனனே போதுமே? பின்னர் எதற்காக இன்னொரு ஆட்டுக்கல்? இந்த இடத்தில் இயக்குனர் தனுஷ் கொஞ்சம் ரசனை மறந்து விட்டார் என்பது அடியேனின் பார்வை. https://thangavelmanickadevar.blogspot.com/2025/10/blog-post.html
1 month ago
Tourism Directories (Bus Stands) Bus Depot - Karainagar 0212251854 0212251854 Address Karainagar (AB17) - Jaffna, Road, Karainagar, Jaffna, 40000, Sri Lanka Central Bus Stand - Jaffna 0212222281 0212222281 Address Hospital, Road, Jaffna Town, Jaffna, 40000, Sri Lanka Bus Depot - Kondavil 0212222207 0212222207 Address Palaly, Road, Kondavil, Jaffna, 40000, Sri Lanka Central Bus Stand - Mullaitivu 0212290139 0212290139 info@tourismnorth.lk Address SLTB, Mullaitivu Depot, Mullaitivu town, Mullaitivu, 42000, Sri Lanka Central Bus Stand - Mannar 0232222281 0232222281 info@tourismnorth.lk Address SLTB, Mannar Depot, Mannar town, Mannar, 41000, Sri Lanka Central Bus Stand - Vavuniya 0242223481 0242223449 info@tourismnorth.lk Address Kandy, Road, Vavuniya town, Vavuniya, 43000, Sri Lanka
1 month ago
இது மிக நியாயமான சந்தேகம்👍. அதான் அப்படி கறார் காட்டி இருக்கார் ஜட்ஜ் ஐயா.
1 month ago
04 Oct, 2025 | 02:17 PM கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார். இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன. முதலாம் நாளின் சனிக்கிழமை (04) முதலாவது அமர்வின் போது சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் போது 345, மூன்றாவது அமர்வின் போது 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாள் (05) நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/226874
1 month ago
04 Oct, 2025 | 02:17 PM

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார்.
இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன.
முதலாம் நாளின் சனிக்கிழமை (04) முதலாவது அமர்வின் போது சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் போது 345, மூன்றாவது அமர்வின் போது 400 பட்டதாரிகளுக்கும் முதுமாணி, இளங்கலைமாணி உட்பட விவசாயத்துறை, கலைத்துறை, வணிக முகாமைத்துவத்துறை மற்றும் அழகியல் கற்கைகள் துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானத்துறை மற்றும் சித்தமருத்துவத்துறைகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இரண்டாம் நாள் (05) நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
இரண்டாம் நாளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் அமர்வுகளின்போது முறையே 261, 365, 355 பட்டதாரிகளுக்கும் வணிக முகாமைத்துவத்துறை, தொழில்நுட்பத்துறை, அழகியல்கற்கைத்துறை, பிரயோக விஞ்ஞானத்துறை, தொடர்பாடல் முகாமைத்துவத்துறை, கலைத்துறை, மருத்துவத்துறை, வணிக முகாமைத்துவத்துறை ஆகியவற்றிலிருந்து உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளது.





https://www.virakesari.lk/article/226874
1 month ago
யாருக்காவது உதவும் பகிருங்கள் இலங்கை போக்குவரத்து சபை CTB 🔴திருகோணமலை 0262222201 ⭕️பேருந்து நிலையங்கள் யாழ்ப்பாணம் 0212222281 கிளிநொச்சி 0212283637 ⭕️முகாமையாளர்கள் யாழ்ப்பாணம் 0771058150 / 151 கிளிநொச்சி 0771058170 / 171 முல்லைத்தீவு 0771058190 / 191 வவுனியா 0771058160 / 161 மன்னார் 0771058140 / 141 ⭕️இ.போ.ச - வட பிராந்தியம் 0212222877 ⭕️பிரதம பிராந்திய முகாமையாளர் Chef Regional Manager (CRM) 07715058100 ⭕️பிராந்திய முகாமையாளர்கள் Operation Manager 0771058101 ⭕️சாலை யாழ்ப்பாணம் (கோண்டாவில்) 0212222207 காரைநகர் 0212283637 பருத்தித்துறை 0212262188 முல்லைத்தீவு 0212290139 தற்போது நாட்டு சூழ் நிலையினை கருத்தில் கொண்டு பயணம் தொடர்பான தகவல்களுக்கு பொது போக்குவரத்து தொடர்பான தொடர்பு இலக்கங்களை உங்கள் தொலைபேசியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். என்ன நேரம் பஸ் இருக்கு, இல்லை என்பதை அறிய அடுத்தவரை call எடுத்து அடிக்கடி தொந்தரவு செய்யாமல் நீங்களே உரிய சேவை தரப்பிடம் கேட்டு கொள்ளுங்கள். தகவல் தொகுப்பு: த. கிருஷ்ணா ஏனயவர்களுக்கும் உதவும் தகவல் என்பதால் இங்கே பகிர்ந்துள்ளேன்.
1 month ago
காசாவிற்கு 40 படகுகளில் நிவாரணம் : கிரேட்டா தன்பெர்க் குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல் கடற்படை 02 Oct, 2025 | 01:18 PM காசா முனையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற சுவீடனின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக அஷோத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணயக் கைதிகளாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் இல்லை என அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசாவில் மோசமான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க நடிகை சூசன் சாரண்டன், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், 40 படகுகளில் கடல்வழியாக நிவாரணப் பொருட்களை ஏற்றி காசாவை நோக்கிப் பயணித்தனர். அவர்கள் பயணித்த படகுகள், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர், அவர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், கிரேட்டா தன்பெர்க் மற்றும் குழுவினர் அனைவரும் இஸ்ரேலில் உள்ள அஷோத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226673
1 month ago
காஸாவில் அமைதி திரும்புகிறதா? - அமெரிக்காவின் புதிய திட்டத்திற்கு ஹமாஸின் பதில் என்ன? பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, இந்த வாரம் வெள்ளை மாளிகையில் டிரம்பும் நெதன்யாகுவும் சந்தித்து அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தை வெளியிட்டனர். கட்டுரை தகவல் ஜான் சுட்வொர்த் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அமைதி திட்டத்துக்கு பதிலளித்த ஹமாஸ், "டிரம்பின் திட்டத்தில் உள்ள கைதிகள் பரிமாற்ற விதிகளின்படி, பரிமாற்றத்துக்கு தேவையான நிலைகள் பூர்த்தியாக வேண்டும். அப்படி நடந்தால், உயிருடன் உள்ளவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் உள்ளடக்கிய அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிப்போம்" எனத் தெரிவித்தது. டிரம்ப் இந்த வாரம் வெள்ளை மாளிகையில் அறிவித்த அந்த திட்டம், மோதலை உடனடியாக நிறுத்தி, ஹமாஸிடம் உயிருடன் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்தவர்களின் உடல்களையும் 72 மணி நேரத்தில் விடுவிக்க வேண்டும் என்கிறது. இதற்கு பதிலாக, நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர். தற்போது பாலத்தீன பிரதேசத்தில் ஹமாஸிடம் 48 இஸ்ரேலியர்கள் இன்னும் கைதிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்தில் ஹமாஸ் ஏற்றுக்கொண்ட மற்றொரு முக்கிய அம்சம், காஸா பகுதியின் நிர்வாகத்தை சார்பில்லாத, திறன் கொண்ட பாலத்தீன வல்லுநர்களிடம் ஒப்படைப்பதாகும். அமெரிக்கா முன்வைத்த 20 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் கொடுக்கப்படவில்லை. குறிப்பாக, ஹமாஸ் தனது ஆயுதங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற நிபந்தனை குறித்துத் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இஸ்ரேல் அரசு, ஹமாஸின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து, அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது. இது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை உண்மையான நல்லெண்ணத்துடன் ஏற்கும் முயற்சியா, அல்லது நேரம் கடத்தி, நீண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் அரசியல் உத்தியா என்பதை அது தெரிந்துகொள்ள வேண்டும். ஞாயிறு மாலைக்குள் இந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் 'பெரும் அழிவு' உண்டாகும் என்று டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களில் ஹமாஸின் அறிக்கை வந்ததால், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமைச்சரவையில் சிலர் இதை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். காஸா மீது நடைபெறும் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. "ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தபோது, அவர்கள் நீடித்த அமைதிக்குத் தயாராக உள்ளனர் என்று நம்புகிறேன்," என ஹமாஸ் அறிக்கை வெளியான சிறிது நேரத்திலேயே டிரம்ப் கூறினார். மேலும், "பணயக்கைதிகளை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வெளியேற்றுவதற்காக, இஸ்ரேல் உடனடியாக காஸா மீதான குண்டுவீச்சை நிறுத்த வேண்டும். தற்போது அதைச் செய்வது மிகவும் ஆபத்தானது" என்றும் அவர் சொன்னார். காஸாவின் எதிர்காலம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் பங்கு வகிக்கலாம் என அவரது அறிக்கையின் கடைசி பகுதி கூறுவது, இஸ்ரேலியர்களுக்கு பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. ஹமாஸின் அறிக்கை முக்கியமானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. வெள்ளிக்கிழமை வெளியான வீடியோ செய்தியில், டிரம்ப் இதை ஒரு "முக்கிய நாள்" என்று கூறி, இந்த திட்டத்தை உருவாக்க உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும், பிராந்தியத்தில் அமைதி உருவாக, இன்னும் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டும். இது ஒரு நிறைவுற்ற ஒப்பந்தம் இல்லை என்பதையும் டிரம்ப் குறிப்பிட்டார். அதேபோல் "இது எங்கு சென்று எப்படி முடியும் என்பதைப் பார்ப்போம். இறுதி முடிவை தெளிவாகவும் உறுதியாகவும் எடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c39ren3x342o
1 month ago
ஆறு வித்தியாசங்கள்... கண்டு பிடியுங்கள். 😂