Aggregator

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 day 16 hours ago
வணக்கம் வாத்தியார்...........! ஆண் : { கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் } (2) சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது ஆண் : அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே ஆண் : நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே ஆண் : கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா ஆண் : நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே ஆண் : துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் .......! --- கல்யாண மாலை ---

எனது பயண நினைவுகளின் தொகுப்பு

1 day 16 hours ago
ஆயிரத்தில் ஒரு வசனம். அதுவும் நன்றாக சொன்னீர்கள். 👈🏽 👍🏼 அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை குணங்களை மாற்றினாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும்.

தமிழரின் உரிமை பறிப்பு சர்வதேசமே தலையிடுக!

1 day 19 hours ago
கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். -இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:- திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச) https://newuthayan.com/article/தமிழரின்_உரிமை_பறிப்பு_சர்வதேசமே_தலையிடுக! கிளர்ந்தெழ வைக்கும் அடக்குமுறைகள். உயிரிழந்த தனது உரித்துடையோரை நினைவேந்துவது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் கொடூரமான முறையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பலநாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 15 ஆண்டுகள் கடந்துபோயுள்ளன. போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை அஞ்சலித்து நினைவேந்துவதற்கு வழியின்றியே இலங்கையில் தமிழினம் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நல்லிணக்கம் ஒற்றுமை என்று பேசும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கத் தயாராக இல்லை. போரில் இறந்த தங்கள் உரித்துடையவர்களை அஞ்சலிப்பதற்கு நினைவில் கொள்வதற்கு தமிழ் மக்களின் முன்னெடுப்புகள் அரசின் ஆதரவுடனேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்தவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி கைக்கு வந்ததும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை உள்ளது என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மௌனமாக இருக்கின்றார். உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை மறுத்து -அதைத் தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற பிற்போக் குத்தனமான - அடக்குமுறைச் சிந்தனையுட னேயே தற்போதைய ரணில் அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கைத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான நிலை பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கிலேயே வாழவேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனை தொடர்ந்தால் ஒருபோதும் இந்தத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையினரின் இந்த மேலாதிக்கச் சிந்தனையே பல தசாப்த காலப் போரை ஏற்படுத்தியது. அந்தப் பட்டறிவின் பின்னரும் பெரும்பான்மையினரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாதது இந்தத் தீவின் சாபம் என்றே கூறவேண்டும். அடக்கு முறைகளின் மூலம் மக்களின் உணர்வுகளை மழுங் சுடித்துவிடலாம் என்று மேலாதிக்க ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சும். தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும்மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறே உலகம் முழுவதும் உள்ளது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அம்மக்களை கிளர்ந்தெழவே வைக்கும். அந்த நிலைமை இலங்கையை மீண்டும் பின்னோக்கியே இழுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். https://newuthayan.com/article/கிளர்ந்தெழ_வைக்கும்_அடக்குமுறைகள்

தமிழரின் உரிமை பறிப்பு சர்வதேசமே தலையிடுக!

1 day 19 hours ago

கிழக்குப் பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள்

 

போர் நிறைவுற்று 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன. தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசுக்கு பன்னாட்டுச் சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

-இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:-


திருகோணமலை சேனையூரில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பொலிஸாரின் இந்த அத்துமீறல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடாத்தாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உரிமையை வேண்டிப் போராடிய ஓர் இனத்தின்மீது இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய இனவழிப்பால் இறுதி எட்டு மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இந்த நிலையில் இலங்கை அரசாலும் அரச படைகளாலும் கொன்று குவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கைவைத்துள்ளது.

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை பன்னாட்டுச் சமூகம்  கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்க வேண்டும் - என்றுள்ளது. (ச)

https://newuthayan.com/article/தமிழரின்_உரிமை_பறிப்பு_சர்வதேசமே_தலையிடுக!

கிளர்ந்தெழ வைக்கும் அடக்குமுறைகள்.

உயிரிழந்த தனது உரித்துடையோரை நினைவேந்துவது ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம் கொடூரமான முறையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மௌனிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு பலநாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து 15 ஆண்டுகள் கடந்துபோயுள்ளன. போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளை அஞ்சலித்து நினைவேந்துவதற்கு வழியின்றியே இலங்கையில் தமிழினம் இன்னமும் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நல்லிணக்கம் ஒற்றுமை என்று பேசும் இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்கத் தயாராக இல்லை. போரில் இறந்த தங்கள் உரித்துடையவர்களை அஞ்சலிப்பதற்கு நினைவில் கொள்வதற்கு தமிழ் மக்களின் முன்னெடுப்புகள் அரசின் ஆதரவுடனேயே அடக்கி ஒடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்திலும் தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுத்தவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பலர் அச்சுறுத்தப்படுகின்றனர். பதவி கைக்கு வந்ததும் மக்கள் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை உள்ளது என்று கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது மௌனமாக இருக்கின்றார். உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் உரிமையை மறுத்து -அதைத் தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற பிற்போக் குத்தனமான - அடக்குமுறைச் சிந்தனையுட னேயே தற்போதைய ரணில் அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இலங்கைத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் அனைத்து மக்களும் தங்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். அவ்வாறான நிலை பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கிலேயே வாழவேண்டும் என்ற மேலாதிக்கச் சிந்தனை தொடர்ந்தால் ஒருபோதும் இந்தத் தீவில் இன நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையினரின் இந்த மேலாதிக்கச் சிந்தனையே பல தசாப்த காலப் போரை ஏற்படுத்தியது. அந்தப் பட்டறிவின் பின்னரும் பெரும்பான்மையினரின் மனப்போக்கில் மாற்றம் ஏற்படாதது இந்தத் தீவின் சாபம் என்றே கூறவேண்டும். அடக்கு முறைகளின் மூலம் மக்களின் உணர்வுகளை மழுங் சுடித்துவிடலாம் என்று மேலாதிக்க ஆட்சியாளர்கள் கருதுவார்களேயானால் அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சும். தொடர்ச்சியான அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும்மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறே உலகம் முழுவதும் உள்ளது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அம்மக்களை கிளர்ந்தெழவே வைக்கும். அந்த நிலைமை இலங்கையை மீண்டும் பின்னோக்கியே இழுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

https://newuthayan.com/article/கிளர்ந்தெழ_வைக்கும்_அடக்குமுறைகள்

கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும் : ஒப்புக்கொண்ட நிறுவனம் !

1 day 19 hours ago
‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்! 17 MAY, 2024 | 10:08 AM கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183749

“அரசாங்கத்தின் பயணம் சரியாக இல்லை. முடிவு எடுக்கப்படும்.”

1 day 19 hours ago
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார். தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/301842

“அரசாங்கத்தின் பயணம் சரியாக இல்லை. முடிவு எடுக்கப்படும்.”

1 day 19 hours ago

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும்
பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/301842

வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி

1 day 19 hours ago
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி Published By: DIGITAL DESK 7 17 MAY, 2024 | 11:15 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன. இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183751

வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி

1 day 19 hours ago
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி

Published By: DIGITAL DESK 7   17 MAY, 2024 | 11:15 AM

image
 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183751

த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!

1 day 19 hours ago
இன்றுவரை இந்தியா தான் செய்த தவறினை திருத்த கூட தயார் இல்லை. அந்தளவுக்கு எங்களது தேசியத்தலைவரின் ஆத்மாவிலும் கூட பயம் கொண்டுள்ளது. தான் எவ்வள்வு முயன்றும் தன்னால் அவரின் கால் ..... கூட தொடமுடியவில்லை என்ற தோல்விதான் இந்த தடையின் தொடர்ச்சி.

தேர்தல்களில் உண்மையை மறைக்கும் செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பங்கள்

1 day 19 hours ago
பட மூலாதாரம்,SCREENGRAB கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி நியூஸ், கொச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆண்டு நவம்பரில், முரளிகிருஷ்ணன் சின்னதுரை பிரிட்டனில் நடந்த தமிழ் மொழி நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரமான ஒன்றைக் கவனித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என்ற அறிமுகத்துடன் பெண் ஒருவரின் உரை ஒளிப்பரப்பானது. இதில் பிரச்னை என்னவென்றால், துவாரகா இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2009 இல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் ஒரு வான்வழித் தாக்குதலில் துவாரகா உயிரிழந்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் 23 வயதான துவாரகாவின் உடல் கண்டுபிடிக்கப் படவில்லை. அப்படியிருக்க, தற்போது ஒரு நடுத்தர வயதுப் பெண்ணாக தோன்றும் துவாரகா அந்த காணொளியில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் சுதந்திரத்திற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார். தமிழ்நாட்டில் போலிச் செய்திகளைக் கண்டறிவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் சின்னதுரை, அந்த வீடியோவை உன்னிப்பாகப் பார்த்தார், வீடியோவில் உள்ள குறைபாடுகளைக் கவனித்தார், அதன் பின்னர் அவருக்கு உண்மை புரிந்தது. அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உருவம் என்று முடிவுக்கு வந்தார். அந்தக் காணொளி ஏற்படுத்தும் சாத்தியமான சிக்கல்கள் சின்ன துரைக்கு தெளிவாகத் தெரிந்தன: "இது தமிழ்நாட்டில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிரச்னை சார்ந்த விஷயம், மேலும் தேர்தல் சமயம் என்பதால், தவறான தகவல் விரைவில் பரவக்கூடும்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த தொழில்நுட்பம் அதிநவீனமாகி எளிதில் கிடைப்பதால், இதை பயன்படுத்தி, பலர் போலி செய்திகளை உண்மையாக்கி பகிர்கின்றனர். இந்தியாவில் தேர்தல் சூழலில் இது போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பகிர்வுகளை தவிர்க்க முடியாது - பிரசார வீடியோக்கள், இந்திய மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட ஆடியோ செய்திகள் மற்றும் வேட்பாளர்களின் குரலில் வாக்காளர்களுக்கு செய்யப்படும் தானியங்கி அழைப்புகள் வரை கட்டுப்படுத்துவது சிரமம். ஷாஹித் ஷேக் போன்ற டிஜிட்டல் படைப்பாளிகள் இந்திய அரசியல்வாதிகளை நாம் இதுவரை பார்த்திராத அவதாரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேடிக்கையாக உருவகப்படுத்தி ரசிக்கின்றனர். பிரபலங்கள் விளையாட்டு வீரர்களின் உடைகள் அணிந்திருப்பது போன்றும், இசை மற்றும் நடனம் ஆடுவது போன்றும் காணொளிகள் உருவாக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. ஆனால் இந்த தொழில்நுட்பம் அதிநவீனமாகி எளிதில் கிடைப்பதால், இதை பயன்படுத்தி, பலர் போலி செய்திகளை உண்மையாக்கி பகிர்கின்றனர். போலி செய்திகளின் தாக்கங்கள் குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். "வதந்திகள் எப்போதுமே தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் சமூக ஊடகங்களின் யுகத்தில், வதந்திதள், போலி பகிர்வுகள் காட்டுத்தீ போல் பரவுகிறது. இது உண்மையில் நாட்டையே தீக்கிரையாக்கும்" என்கிறார் நாட்டின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி. பட மூலாதாரம்,SAHIXD படக்குறிப்பு,இந்தியாவின் பல்வேறு முன்னணித் தலைவர்களின் உருவங்களும் திரித்து பகிரப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்களை இந்திய அரசியல் கட்சிகள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நமது எல்லைக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தானில், சிறையில் இருக்கும் அரசியல்வாதி இம்ரான் கானின் உரை செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்தல் பேரணியில் ஒலித்தது. மேலும் இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோதி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை திறம்பட பிரசாரம் செய்ய பயன்படுத்துகிறார் - பார்வையாளர்கள் மத்தியில் இந்தியில் உரையாற்றுகிறார். ஆனால், அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவியான `பாஷினி’ மூலம் அவரின் உரை நிகழ் நேரத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிப்பரப்பாகிறது. அதே சமயம் இந்த தொழில்நுட்பம் வார்த்தைகளையும் செய்திகளையும் திரித்து கையாளவும் பயன்படுகிறது. கடந்த மாதம், பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங் மற்றும் அமீர்கான் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்காக பரப்புரை செய்வது போல் இரண்டு வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டது. இவை டீப் ஃபேக் (deepfakes) என்றும், தங்களின் அனுமதியின்றி செய்யப்பட்டவை என்றும் இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். பின்னர், ஏப்ரல் 29 அன்று, பிரதமர் மோதி, ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களின் பேச்சுகளை திரித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி காணொளிகள் உருவாக்கப்படுவதாக கவலை தெரிவித்தார். அவரின் பேச்சுகளும் மாற்றப்படுவதாக குறிப்பிட்டார். பிரதமர் வருத்தம் தெரிவித்த அடுத்த நாளே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் போலி வீடியோ தொடர்பாக எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். மோதியின் பாரதிய ஜனதா கட்சி மீதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிரச்னை என்னவென்றால் - கைது செய்யப்பட்ட போதிலும் - நிபுணர்களின் கூற்றுப்படி விரிவான ஒழுங்குமுறை எதுவும் உருவாக்கப்படவில்லை. பட மூலாதாரம்,SAHIXD படக்குறிப்பு,பிரதமர் மோதி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எடிட் செய்யப்பட்ட படங்கள் அதாவது, "இதுபோன்று ஏதாவது தவறு செய்து பிடிபட்டால், அவர்கள் மீது மிகவும் குறைவான தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தரவு மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கோடாலி கூறுகிறார். படைப்பாளிகள் பிபிசியிடம் பகிர்கையில், "ஒழுங்குமுறை இல்லாத நிலையில் தாங்கள் எந்த வகையான வேலையைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிக்க தனிப்பட்ட நெறிமுறைகளை நம்பியிருக்க வேண்டி உள்ளது” என்று கூறினார்கள். அரசியல்வாதிகள், அவர்களது போட்டியாளர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமான சித்தரிப்புகள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை மார்பிங் செய்தல் உள்ளிட்ட செயல்களுக்கு கோருவதாக படைப்பாளிகள் பிபிசியிடம் கூறுகின்றனர். "ஒருமுறை அரசியல்வாதி ஒருவரின் சர்ச்சை வீடியோ வைரலானது. அந்த உண்மையான வீடியோவையே டீப் ஃபேக் போல் உருவாக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது, ஏனெனில் அசல் வீடியோ, பரவலாகப் பகிரப்பட்டால், அரசியல்வாதி மீது மோசமான விமர்சனங்கள் வரும்” என்று திவ்யேந்திர சிங் ஜாடூன் நடந்ததை விவரித்தார். திவ்யேந்திர சிங் ஜாடூன், தி இந்தியன் டீப்ஃபேக்கரின் (TID) நிறுவனர். இவரின் நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கான பிரசார படைப்புகளை உருவாக்க AI மென்பொருளைப் பயன்படுத்துகிறது. இவர்கள் உருவாக்கும் வீடிபோக்களில், இது உண்மையானது அல்ல என்பதை குறிப்பிடும் `disclaimers’ சேர்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஒரு டீப் ஃபேக்கை உருவாக்குவது இப்போது மிகவும் எளிதானது. எங்களுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் எடுத்துக்கொண்ட வேலை, இப்போது மூன்று நிமிடங்களில் செய்துவிட முடியும்" என்கிறார் ஜாடூன். மேற்கு வங்கத்தில் ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சியில் பணிபுரியும் ஷேக், சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சி இணையத்தளங்களில் தன் அனுமதி இன்றி தனது படைப்புகளை பகிர்ந்துள்ளதை கண்டுள்ளார். "ஒரு அரசியல்வாதி நான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய மோதியின் புகைப்படத்தை என் பெயரை குறிப்பிடாமல் பயன்படுத்தினார், மேலும் அது AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடவில்லை," என்று அவர் கூறுகிறார். "ஒரு டீப் ஃபேக்கை உருவாக்குவது இப்போது மிகவும் எளிதானது. எங்களுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் எடுத்துக்கொண்ட வேலை, இப்போது மூன்று நிமிடங்களில் செய்துவிட முடியும். உங்களிடம் ஒரு கணினி இருந்தால் போதும்." என்று ஜாடூன் விளக்குகிறார். உண்மையில், இரண்டு நபர்களிடையே போலி தொலைபேசி அழைப்பை உருவாக்குவது எவ்வளவு எளிது என்பதை பிபிசி நேரடியாக கண்டது - இந்த விஷயத்தில், பிபிசி நிருபரும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பேசுவது போன்று வீடியோ உருவாக்கப்பட்டது அபாயங்கள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்துக்கான ஒழுங்குமுறை சட்டத்தை பரிசீலிக்கவில்லை என்று இந்தியா முதலில் கூறியது. எவ்வாறாயினும், இந்த மார்ச் மாதத்தில், "மோதி ஒரு பாசிசவாதியா?" என்ற வினவலுக்கு கூகுளின் ஜெமினி சாட்பாட் பதிலளிப்பது போன்ற நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் மீதான கோபத்திற்கு பிறகு இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஒவ்வொரு தகவலும் ஒரு மணி நேரத்திற்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கிறது" என்கிறார் தமிழகத்தில் ஊடக கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த முரளிகிருஷ்ணன். இது நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை மீறியுள்ளதாக அந்நாட்டின் இளநிலை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். "அப்போதிருந்து, இந்திய அரசாங்கம் "நம்பகமற்ற" அல்லது "சோதனை செய்யப்படாத" ஜெனரேடிவ் AI மாதிரிகள் அல்லது கருவிகளை பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன், அதன் வெளிப்படையான அனுமதியை பெறுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. ’தேர்தல் செயன்முறையின் நேர்மையை அச்சுறுத்தும்’ இந்த தொழில்நுட்பங்களின் பதில்களுக்கு எதிராகவும் அது எச்சரிக்கை விடுத்தது” ஆனால் இது போதாது. போலி செய்திகளை கண்டறியும் நிபுணர்கள், இதுபோன்ற உள்ளடக்கத்தை நீக்குவது ஒரு கடினமான பணியாகும், குறிப்பாக தேர்தல்களின் போது தவறான தகவல்கள் உச்சத்தைத் தொடும் போது யாராலும் கட்டுப்படுத்த முடியாது. "ஒவ்வொரு தகவலும் ஒரு மணி நேரத்திற்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கிறது" என்கிறார் தமிழகத்தில் ஊடக கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த சின்னதுரை. "ஆனால் நாங்கள் பரப்பும் தகவல்கள் மணிக்கு 20 கிமீ வேகத்தில் தான் மக்களை சேரும்." என்கிறார். மேலும் இந்த போலி படைப்புகள் முக்கிய ஊடகங்களில் கூட நுழைகின்றன என்கிறார் கோடாலி. இருந்தபோதிலும், "தேர்தல் ஆணையம் ஏஐ குறித்து மௌனமாக உள்ளது. பெரிய அளவில் விதிகள் எதுவும் இல்லை. அவர்கள் உண்மையான விதிமுறைகளை கொண்டு வருவதற்கு பதிலாக தொழில்நுட்பத் துறையை சுய-ஒழுங்குபடுத்த சொல்கிறார்கள்." என்கிறார். "ஆனால் இப்போதைக்கு போலி படைப்புகளை பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது சரிபார்க்கப்படாத தகவல்களை பகிரும் மக்களையும் பயமுறுத்தக்கூடும். ஏஐ பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் வேண்டும்" என்று குரேஷி கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cn0v004d254o

யாழில் முதியவர் உயிர்மாய்ப்பு

1 day 19 hours ago
Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 10:26 AM யாழ்ப்பாணம், ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (16) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மன விரக்தியடைந்த அவர் இன்றையதினம் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி கமராவில் பதிவாகியுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/183748