Aggregator

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 10 hours ago
இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நமீபியா அணி, ஜான் நிகொல் லொஃப்டி-ஈட்டனின் 42 (38 பந்துகளில்) ஓட்டங்களுடன் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு 157 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, பஸ் டீ லீட்டின் ஆட்டமிழக்காத 72 (48 பந்துகளில்) ஓட்டங்களின் உதவியுடன் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 06 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமீரகம் அணி, முஹமட் வஸீம் ஆட்டமிழக்காமல் எடுத்த 66 (45 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் 55 (47 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டிம் செய்ஃபேர்ட் மின்னல்வேக 89 (42 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஃபின் அலென் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 84 (50 பந்துகளின்) ஓட்டங்களுடன் 15.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 175 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி சஹிப்ஸடா பர்ஹானில் அதிரடியான 73 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், பாபர் அஸாமின் 46 (32 பந்துகளில்) ஓட்டங்களுடனும், ஷடாப் கான் மின்னல் வேகத்தில் எடுத்த 30 (12 பந்துகளில்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணியில் ஷுபம் ரஞ்சனே 51 (30 பந்துகளில்) ஓட்டங்களையும், ஷயான் ஜஹங்கிர் 49 (34 பந்துகளில்) ஓட்டங்களையும் எடுத்திருந்தாலும், இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல் மூன்று நாட்கள் முதல்வராக இருந்த @செம்பாட்டான் 13வது இடத்திற்கு சறுக்கிவிட்டார்!

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

2 days 10 hours ago
இப்படி இன்னுமொரு கதையும் அக்காலத்தில் கூறினார்கள். ஏதோவொரு வகைப் பாம்பு இரவு உணவுதேடிச் செல்லும்போது தனது வாயில் எப்போதும் வைத்திருக்கும் முத்தினை வெளியே துப்பிவிட்டு, அவ்வெளிச்சத்தில்த்தான் தனது இரையை வேட்டையாடுமாம். ஆகவே பாம்பு இரைதேடச் செல்லும்போது அந்த முத்தினை எடுக்க அதன் பின்னால் போய், பாம்பு முத்தினை துப்பிவிட்டு இரைதேட ஆரம்பிக்கும்போது ஓடிச்சென்று அம்முத்தின் மேல் சாணியையோ அல்லது களி மண்ணையோ போட்டு மூடிவிட்டு வந்துவிட வேண்டுமாம். இருட்டினுள் தனது முத்தினைத் தேடிக் களைத்துவிட்ட பாம்பு காலையில் இறந்துவிடுமாம். பின்னர் தாராளமாகச் சென்று சாணிக்குள் புதைந்துப்போன‌ முத்தினை எடுத்து வரமுடியுமாம். யாராவது இப்படிக் கேளவிப்பட்டிருக்கிறீர்களா? என்ன மாதிரி அளந்துவிட்டிருக்கிறார்கள்??

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

2 days 10 hours ago
அச்சொட்டாக இக்கதையினை கேட்டிருக்கிறேன். கரவெட்டி - நாவலர் மடத்தில் தோட்டக்காணியில் அமைந்திருந்த குடிசைக்குள் படுத்திருந்த ஒரு குடும்பத்தில் தகப்பன், பிள்ளைகள் இருவர் என்று மூவரை பாம்பு தீண்டி இறந்துபோனார்கள். 80 களின் நடுப்பகுதியிலாக இருக்கலாம். இரு பாம்புகள் தோட்டத்தில் பிணைந்தபோது தகப்பனார் மண்வெட்டியால் அவற்றை அடித்ததாகவும், அப்போது ஒன்று இறந்துவிட‌ , மற்றையது தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறினார்கள். உயிர் தப்பிய பாம்பே அன்றிரவு வீட்டினுள் நுழைந்து அக்குடும்பத்தில் தகப்பானாரைக் கொல்லவந்ததாகவும் ஆனால் அவர் கடிபட்டதும் பாம்பைத் தூக்கி எறிந்துவிட அப்பாம்பு அருகில் படுத்திருந்த இருபிள்ளைகளையும் கடித்துவீடுச் சென்றதாகவும் கூறினார்கள். மரண ஊர்வலம் நடக்கும்போது அருகில் இருந்த வீதியில் நின்ற பனையில் அப்பாம்பு ஏறியிருந்ததை சிலர் கண்டதாக கூறினார்கள். மயானத்தில் அந்த மூவரும் எரிக்கப்பட்ட பின்னரே அப்பாம்பு இறங்கிச் சென்றதை இன்னும் சிலர் கண்டதாகவும் கூறினார்கள். அந்தவயதில் எவர் என்ன சொன்னாலும் உண்மையென்று நம்பியதால் (இப்போதும் சிலவேளைகளில் அப்படித்தான்) சிலகாலம் பாம்பென்றால், அதுவும் கொம்பேறி மூக்கன் என்றால் கெட்ட பயம். என்ன மாதிரி எங்களைப் பேய்க்காட்டி வைச்சிருக்கிறாங்கள் எண்டு இப்பத்தான் தெரியுது!

அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?

2 days 11 hours ago
இந்தக் கொம்பேறி மூக்கன் பாம்பு குறித்து என்னிடம் ஒரு கதை இருக்கிறது. இது புனைந்தது இல்லை, மாறாக நேரில்க் கண்டது. 1986 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். பாடசாலை நாட்களில் ஒன்று. பிற்பகல் பாடசாலை முடிந்து நானும் தம்பியும் சைக்கிளில் டெம்பிள் ரோட் ஊடாக கோண்டாவில் நோக்கி வந்துகொண்டிருந்தோம். பக்கத்தில் நண்பன் விஜயரூபனும் வந்துகொண்டிருந்தான். நல்லூர்க் கோயிலைத் தாண்டி ஆடியபாதம் வீதிச் சந்திக்குச் செல்வதற்கு சில மீட்டர்கள் தூரத்தில், வீதியின் இடதுபக்கத்தில் வீதியை அடைத்து மூடி பெருஞ்சனத்திரள். எங்களால் தொடர்ந்து பயணிக்கமுடியாததால் சைக்கிள்களை விட்டு இறங்கிக்கொண்டோம். வீதியோரத்தில் இருந்த பாரிய காணியொன்றிற்குள் இருந்தது மண்ணால் கட்டப்பட்ட, ஓலையினால் வேயப்பட்ட கூறையைக் கொண்ட வீடு. நடுத்தரவர்க்கத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லாத குடும்பம் ஒன்று வாழும் வீடுபோலக் காட்சியளித்த அவ்வீட்டின் முற்றத்தில் இரு சாரைகள் பிணைந்தபடி முற்றமெங்கும் அரைந்து கொண்டிருந்தன. சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்க்க, அவ்வீட்டின் பெண்மணியோ கையில் ஒரு சாக்குடன் பாம்புகளுக்குக் கிட்டச் செல்வதும் பின்னர் பாம்புகள் (பிணைந்தபடி) அவர் அருகில் வரும்போது விலகி ஓடுவதுமாக இருந்தார். எங்களுக்கோ அவர் அப்படி கையில் சாக்குடன் நிற்பதன் காரணம் தெரியவில்லை. அருகில் நின்ற பெரியவர்களிடம் என்ன நடக்கிறது என்று பேச்சுக் கொடுத்தோம். அப்போதுதான் சாக்கின் மகிமை தெரிந்தது. பிணைந்த பாம்புகளில் ஒன்று கொம்பேறி மூக்கனாம். விசமுள்ளது என்று கூறினார்கள். அதனை அடிப்பதற்கு அப்பகுதியில் நின்றவர்கள் முயன்றபோது, அவ்வீட்டின் பெண்மணி அவர்களை மறித்துவிட்டாராம். ஏனென்று கேட்டால், பாம்புகள் பிணையும்போது அவற்றின் மீது துணியினையோ அல்லது சாக்கினையோ போர்த்து மூடி, பின்னர் பாம்புகள் கலைந்து சென்றவுடன் அச்சாக்கினை கவனமாக எடுத்துக்கொண்டுபோய் வீட்டின் அலுமாரிக்குள் வைத்துவிட்டால் அவ்வீட்டில் செல்வம் கொழிக்குமாம் என்று அப்பெண்மணி கூறியிருக்கிறார். இதனாலேயே பாம்புகளை அடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். சிறிதுநேரத்தில் சுற்றியிருந்த ஆட்களின் சத்தத்தினால் பாம்புகள் கலைந்து ஒவ்வொரு பக்கமாகச் சென்றுவிட, அப்பெண்மணியும் அச்சாக்கினை கவனமாக மடித்து வீட்டிற்குள் எடுத்து சென்றார். ஆனால் என்ன, அதற்குப் பிறகும் அதே வீதியினால் குறைந்தது 2 வருடங்களாவது சென்று வந்திருப்பேன், வீட்டின் நிலையோ மாறாமல் அப்படியே இருந்தது.

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

2 days 11 hours ago
வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு 10 Feb, 2026 | 06:45 PM (எம்.மனோசித்ரா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 தொடக்கம் 2031 வரையான 6 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல் வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைச்சு தனது ஏனைய ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/238349

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

2 days 11 hours ago

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

10 Feb, 2026 | 06:45 PM

image

(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 தொடக்கம் 2031 வரையான 6 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல் வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைச்சு தனது ஏனைய ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/238349

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 days 11 hours ago
வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ......! --- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---

சோதனைகளை கடந்து பாராலிம்பிக்கில் சாதித்த கதை - Deepa Malik Interview

2 days 11 hours ago

பிபிசியின் இந்தாண்டுக்கான ISWOTY விருதின் தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் தீபா மாலிக் அளித்த நேர்காணல்.

#BBCISWOTY #Changethegame

Report: Sumedha Pal | Shot: Sandeep Yadav & Prabhat Tiwari

Edit: Shaad Midhat

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

சோதனைகளை கடந்து பாராலிம்பிக்கில் சாதித்த கதை - Deepa Malik Interview

2 days 11 hours ago
பிபிசியின் இந்தாண்டுக்கான ISWOTY விருதின் தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் தீபா மாலிக் அளித்த நேர்காணல். #BBCISWOTY #Changethegame Report: Sumedha Pal | Shot: Sandeep Yadav & Prabhat Tiwari Edit: Shaad Midhat இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 days 11 hours ago
சீபேர்ட் - அலென் ஜோடியின் உலகக் கிண்ண இணைப்பாட்ட சாதனையுடன் ஐ.அ.இராச்சியத்தை இலகுவாக வென்றது நியூஸிலாந்து Published By: Vishnu 10 Feb, 2026 | 08:29 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் டிம் சீபேர்ட் - பின் அலன் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை 10 விக்கெட்களால் நியூஸிலாந்து இலகுவாக வெற்றிகொண்டது. அப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சார்பாக டிம் சீபேர்ட், பின் அலென் ஆகிய இருவரும் 15.2 ஓவர்களில் சாதனைமிகு 175 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். இந்த இணைப்பாட்டமானது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சகல விக்கெட்களுக்குமான சாதனையாகும். இதன் மூலம் நான்கு வருடங்களுக்கு முன்னர் அடிலெய்டில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 170 ஓட்ட இணைப்பாட்ட சாதனை முறியடிக்கப்பட்டது. டிம் சீபேர்ட் 42 பந்துகளில் 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 89 ஓட்டங்களுடனும் பின் அலன் 50 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 84 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர் ஆரியன்ஷ் ஷர்மா (8) குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தபோதிலும் அணித் தலைவர் முஹம்மத் வசீம், அலிஷான் ஷராபு ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். முஹம்மத் வசீம் 45 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களையும் அலிஷான் ஷராபு 47 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களை விட மயான்க் குமார் 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மெட் ஹென்றி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: டிம் சீபேர்ட் https://www.virakesari.lk/article/238352

உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?

2 days 11 hours ago
'கழுத்தில் 2 முறிவு' - ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் இறந்த போது என்ன நடந்தது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் கட்டுரை தகவல் ஷயன் சர்தாரிசாதே, மாட் மர்பி, பிபிசி வெரிஃபை 5 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தச் செய்தியில் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத இந்தப் புகைப்படங்கள், அவரது உடல் ஒரு ஸ்ட்ரெச்சரில் இருப்பதையும், மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதையும் காட்டுகின்றன. எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது நிகழ்ந்த மரணம் குறித்த எஃப்.பி.ஐ விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக இருபது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பல படங்கள் பார்ப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனுடன் பிரேதப் பரிசோதனை மற்றும் சிறையின் உள் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் உள்ள மில்லியன் கணக்கான ஆவணங்களில் இந்தப் புகைப்படங்களும் அடங்கும். எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று அவரது சிறை அறையில் இறந்து கிடந்தார். பாலியல் தேவைகளுக்காக கடத்தல் மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முன்னதாக, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் சீர்திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தார். படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் 23 பக்க அறிக்கை "ஜெப்ரி எப்ஸ்டீன் மரண விசாரணை" என்ற தலைப்பில் புதிதாக வெளியிடப்பட்ட இந்த எஃப்.பி.ஐ அறிக்கை, நியூயார்க்கில் உள்ள எஃப்.பி.ஐ ஏஜென்சியின் கள அலுவலகத்தால் நடத்தப்பட்ட விசாரணையாகத் தெரிகிறது. இந்த 23 பக்க அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் "ரகசியமற்றது" என்ற முத்திரை இடப்பட்டுள்ளது. பிபிசி வெரிஃபையால் பார்க்கப்பட்ட இந்த மறைக்கப்படாத ஆவணங்கள், எப்ஸ்டீனின் கழுத்து மற்றும் அதில் உள்ள காயங்களின் நெருக்கமான புகைப்படங்களைக் காட்டுகின்றன. மேலும், இதில் எப்ஸ்டீனின் பிரேதப் பரிசோதனை விவரங்கள் மற்றும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாட்களில் அவரது மனநலம் குறித்த உளவியல் அறிக்கையும் இடம்பெற்றுள்ளன. பல புகைப்படங்களில் எப்ஸ்டீன் ஒரு ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் காணப்படுகிறார். அவரை மீண்டும் உயிர்ப்பிக்க மருத்துவர்கள் முயற்சி செய்யும் காட்சிகளும் அதில் உள்ளன. இந்தப் படங்கள் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று, உள்ளூர் நேரப்படி காலை 06:49 மணிக்கு எடுக்கப்பட்டதாக தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது சிறை அறையில் உணர்விழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து சுமார் 16 நிமிடங்கள் கழித்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எப்ஸ்டீன் காலை 06:39 மணிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது, அந்தப் புகைப்படங்கள் அங்கே எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது. மற்ற மூன்று புகைப்படங்களில் அவை மருத்துவமனையில் எடுக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளன. அவை அவரது தலையின் நெருக்கமான காட்சியையும், கழுத்தில் உள்ள ஒரு காயத்தையும் காட்டுகின்றன. ஒவ்வொரு புகைப்படத்திலும் எப்ஸ்டீனின் பெயர் உள்ளது, ஆனால் சில படங்களில் அவரது முதல் பெயர் Jeffrey என்பதற்குப் பதிலாக Jeffery எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Department of Justice படக்குறிப்பு,எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று அவரது சிறை அறையில் இறந்து கிடந்தார். தன்னைக் கொல்ல முயற்சி என எப்ஸ்டீன் குற்றச்சாட்டு எப்ஸ்டீனின் உடல் குறித்து சமீபத்தில் புதிதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களை பிபிசி வெரிஃபை ரிவர்ஸ் இமேஜ் முறையில் ஆய்வு செய்தபோது, ஜனவரி 30-ஆம் தேதிக்கு முன்பாக இணையத்தில் அவற்றின் முந்தைய பதிப்புகள் எதையும் கண்டறிய முடியவில்லை. மேலும், அந்த புகைப்படங்களை உறுதிப்படுத்தும் பிற ஆவணங்களையும் அந்த கோப்புகளில் இருந்ததை கண்டுபிடித்தோம். அமெரிக்க நீதித்துறை மற்றும் நியூயார்க் தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் தாக்கல் செய்த 89 பக்க பிரதேச பரிசோதனை அறிக்கையும், அதே படங்களை (மறைக்கப்பட்ட) கொண்ட எஃப்.பி.ஐ. நியூயார்க் அலுவலகத்தின் மின்னஞ்சல்களும் அடங்கும். தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட எப்ஸ்டீன் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் சில பகுதிகளும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதில் எப்ஸ்டீனின் கழுத்தில் உள்ள தைராய்டு குருத்தெலும்பில் ஏற்பட்ட இரண்டு முறிவுகளின் ஸ்கேன் நகல்களும் அடங்கும். 2019ம் ஆண்டு 6ம் தேதி ஜூலை அன்று பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது முதல் அவர் இறக்கும் வரை, நியூயார்க் மெட்ரோபொலிட்டன் திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தது குறித்த ஆறு பக்க காலவரிசையை எஃப்.பி.ஐ அறிக்கை உள்ளடக்கியுள்ளது. 23 ஜூலை 2019 அன்று எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்ற பிறகு, அவர் தற்கொலை கண்காணிப்பில் வைக்கப்பட்டதை இது வெளிப்படுத்துகிறது. அந்த நேரத்தில், கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்த முன்னாள் போலீஸ் அதிகாரியும், அவரது சிறையில் தங்கியிருந்தவருமான நிக்கோலஸ் டார்டாக்லியோன் தன்னைக் கொல்ல முயன்றதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டினார். மறுநாள் ஒரு உளவியலாளருடனான சந்திப்பில், எப்ஸ்டீன் தனக்கு "தற்கொலை செய்துகொள்வதில் ஆர்வம் இல்லை" என்றும், உயிரை மாய்த்துக் கொள்வது "பைத்தியக்காரத்தனமாக இருக்கும்" என்றும் கூறியதாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. ஜூலை 25 அன்று, "எனது வழக்கை எதிர்த்துப் போராடுவதில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன், எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, நான் மீண்டும் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்" என்று அவர் கூறியதாக உளவியலாளர் அறிக்கை தெரிவிக்கிறது. நீதித்துறை வெளியிட்ட பிற ஆவணங்கள், எப்ஸ்டீனை தனியாக தங்க வைக்கக்கூடாது என்று சிறைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியதையும், அவரது சிறை அறையில் "30 நிமிடங்களுக்கு ஒருமுறை சோதனைகள்" மற்றும் "அறிவிக்கப்படாத கண்காணிப்புகள்" மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதையும் காட்டுகின்றன. எப்ஸ்டீன் இறப்பதற்கு முந்தைய நாள் அவருடன் சிறையில் இருந்த நபர் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 9 அன்று இரவு, சிறைக்காவலர்கள் அதிகாலை 03:00 மற்றும் 05:00 மணிக்கு திட்டமிடப்பட்ட சோதனைகளைச் செய்யத் தவறிவிட்டனர் என்பதையும், அந்தப் பிரிவில் உள்ள கேமரா அமைப்பு செயலிழந்திருந்ததையும் சிறை ஆவணங்கள் காட்டுகின்றன. சிறை ஊழியர்கள் மேற்கொண்ட காலை நேர சோதனையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளின் ஒரு பகுதியாக, அதே எஃப்.பி.ஐ. அறிக்கையின் மறைக்கப்பட்ட இன்னொரு பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிப்பு 17 பக்கங்கள் மட்டுமே கொண்டது இதில் உளவியலாளர் அறிக்கையும், எப்ஸ்டீன் காவலில் இருந்த காலவரிசையும் இடம்பெறவில்லை. மேலும், அந்த கோப்பில் உள்ள படங்களும் மறைக்கப்பட்டுள்ளன. ஏன் மறைக்கப்பட்ட பதிப்பும், மறைக்கப்படாத பதிப்பும் இரண்டும் ஒரே நேரத்தில் இந்த கோப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க நீதித்துறையை தொடர்பு கொண்டுள்ளோம். எஃப்.பி.ஐ கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. கூடுதல் தகவல்: ஜோஷ் ஷீதம் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqj9r7jvqr0o

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

2 days 11 hours ago
இ.போ.ச பஸ்களில் பெண் நடத்துநர்கள் இன்று முதல் கடமையில்! Published By: Digital Desk 1 10 Feb, 2026 | 06:20 PM அண்மையில் நியமனம் பெற்ற 19 பெண் பஸ் நடத்துநர்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இன்று செவ்வாய்க்கிழமை (10) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றனர். கொட்டாவையில் உள்ள மகும்புர பன்முக போக்குவரத்து நிலையத்திலிருந்து பெண் நடத்துநர்கள் தங்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர். பத்தொன்பது பெண்கள் பஸ் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டமையானது போக்குவரத்து துறையில் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த நியமனங்கள் பாலின சமத்துவம் மற்றும் பாதுகாப்பான பொது இடங்களை நோக்கிய பரந்த உந்துதலை பொதுப் போக்குவரத்தில் பிரதிபலிப்பதாக அமைவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238344

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 days 11 hours ago
அனுமதிப் பத்திரம் இல்லாமல் லஞ்சத்தை மட்டும் நம்பி வண்டி ஓட்டியிருக்கிறார். இலங்கைப் பொலிசிடம் மேற்கு நாட்டுத் தராதரத்தை எதிர்பார்த்து (வண்டியின் பதிவைப் பார்த்து வீடு தேடி வந்து கைது செய்வார்கள் என்று) நிறுத்தாமல் சென்றிருக்கிறார். விதிகளை மீற நினைக்கும் ஏனையோருக்கு இது தான் பாடம்: விதிகளை இப்படிப் பட்ட பிரச்சினைகள் வரும் வரை மீறலாம், ஒரு விக்கினமும் இல்லை, ஆனால், இப்படி எங்காவது மாட்டுப் பட்டால் உயிரே போய் விடும்.

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

2 days 11 hours ago
மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு Feb 10, 2026 - 05:29 PM உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை குறித்து மீன் வியாபாரிகள் தெரிவிக்கையில், சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கமைய, இன்று (10) பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் 3,600 ரூபாவுக்கும் பாறை மீன் 3,000 ரூபாவுக்கும் கெலவல்லா மீன் 2,700 ரூபாவுக்கும் பலயா மீன் 2,000 ரூபாவுக்கும் மற்றும் லின்னா மீன் 900 ரூபாவுக்கும் மற்றும் சாளையா மீன் 700 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களின் இந்தப் போராட்டம் மேலும் நீடித்தால், வரும் நாட்களில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmlgiy4vk0007356nvzktwbgi

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

2 days 11 hours ago
இலங்கை போன்ற நாடுகளில் அரசு மிகவும் கவனமெடுக்க வேண்டிய ஒரு விடயம் இந்த விசேட உடல் தேவையுடையோர் இயன்றளவு சுதந்திரமாக நடமாடும், பயணம் செய்யும் வசதியை உருவாக்குவது. சில அரச கட்டிடங்களில், சக்கர நாற்காலி செல்வதற்கான சாய்தளப் பாதை (ramp) கூட இல்லாமல் இருப்பதை 2016 இல் வந்த போது கவனித்தேன். இப்போது எப்படியோ தெரியாது. பஸ்களில் kneeling bus என்றொரு வகை இருக்கிறது. வயதானோர், கைத்தடியோடு வருவோர், இலகுவாக ஏறும் வகையில், ஒரு hydraulic gear மூலம் பஸ்ஸின் முன்பகுதி நிலத்தோடு பதியும் படி செய்வார்கள். ஏறும் படிகளின் கீழேயே மடிக்கப் பட்ட சக்கர நாற்காலிக்குரிய சாய்தளம் இருக்கும். இந்தப் புதிய பஸ்களில் இவை இருக்கும் என நம்புகிறேன்.