Aggregator
இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு
இலங்கை வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு
Published By: Digital Desk 2
22 Dec, 2025 | 09:50 AM
![]()
(இணையத்தள செய்திப் பிரிவு)
சீன– இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும், நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) உயர்மட்ட குழு ஒன்று இலங்கைக்கு வருகை தர உள்ளது.
அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழுவின் உறுப்பினரும், ஜிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்ஷெங் தலைமையிலான இந்த குழு, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 23 முதல் 25 வரை இலங்கையில் தங்கியிருந்து அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தகம், முதலீடு, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்புகளின் போது, சீன–இலங்கை நட்புறவின் எதிர்கால நிலைவரம், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கிய விடயங்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சீன–இலங்கை உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான மைல்கல்லாக இந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவின் வருகை அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!
யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!
யாழில் வன்முறைக் குழு அட்டகாசம் - பல உடைமைகள் சேதம்!
Dec 22, 2025 - 10:14 AM
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக் குழுவொன்று நேற்று (21) இரவு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
கைக்குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் வருகை தந்த குழுவொன்றே கட்டைக்காடு கிழக்கு பகுதியில் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இத்தாக்குதலின் போது வீட்டிலிருந்த உழவு இயந்திரம், வாகனம், வீட்டுப் பொருட்கள் மற்றும் கதவுகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த வன்முறைக் குழுவினர் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ள போதிலும், சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் குற்றம் சுமத்தியுள்ளார்.
-யாழ். நிருபர் கஜிந்தன்-
இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு
இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு
இணையவழி விற்பனை மோசடிகள் அதிகரிப்பு
Dec 22, 2025 - 08:01 AM
இணையத்தளம் ஊடாக பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி செய்வது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தளம் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்வதாயின், சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பிரதமர் வழங்கினார்
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
கருத்து படங்கள்
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் திங்கட்கிழமை (22) அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
34 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு கொன்கிறீட் தடுப்பு சுவருடன் மோதி, பின்னர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தேடல் மற்றும் மீட்புக் குழுவின் தலைவர் புடியோனோ கூறியுள்ளார்.
தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உள்ள கிராப்யாக் சுங்கச்சாவடியின் வளைந்த வெளியேறும் பாதையில் நுழையும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அவர் கூறினார்.
விபத்து நடந்த சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆறு பயணிகளின் உடல்களை மீட்டனர்.
மேலும் 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது வழியிலும், சிசிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்தனர்.
சிகிக்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 18 பேரில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் புடியோனோ கூறினார்.