Aggregator
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை
திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை
திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை

கட்டுரை தகவல்
ரஞ்சன் அருண் பிரசாத்
பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது.
எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது.
பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வீடுகளுக்கு சென்ற மலையக தமிழர்களில் பலர் இன்று மீண்டும் லைன் அறைகளில் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளமை கவலையளிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்ட அபாயகர நிலைமையே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இந்த வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு விதமான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.
வீட்டுத் திட்டம் அமையப் பெறும் முழு காணிக்கான ஆய்வு அறிக்கை மற்றும் தனி வீடுகளை அமைக்கும் காணிகளுக்கான ஆய்வு அறிக்கை என இரண்டு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன.
எனினும், அபாயகரமற்ற, அதிவுயர் பாதுகாப்பு பகுதிகளையும் திட்வா புயல் அபாயகரமான பகுதிகளாக இப்போது மாற்றியுள்ளது.
லைன் அறைகளுக்கு மீண்டும் சென்ற மலையக மக்கள்

வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய திட்வா
மாத்தளை - ஹூன்னஸ்கிரிய பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் எலிஸ்டன் மற்றும் ஜூலியட் தம்பதியின் குடும்பம். மூன்று பிள்ளைகளின் பெற்றோராகிய இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தமையினால், இந்த குடும்பத்திற்கு வீட்டுத் திட்டம் கிடைத்துள்ளது.
தலைமுறையின் 200 வருட லைன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தனி வீட்டு வாழ்க்கைக்கு சென்ற அவர்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு வகையிலும் சிந்தித்ததாக கூறுகின்றனர்.
தனது கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து தோட்ட தொழிலுக்கு செல்வதை தான் தவிர்த்ததாக ஜூலியட் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜூலியட்டின் கணவர் எலிஸ்டன், கூலித் தொழிலை செய்வதற்காக தோட்டத்திலிருந்து வெளியில் சென்றுள்ளார். எலிஸ்டனின் தொழில் முன்னேற்றம் காரணமாக வாழ்க்கை படிப்படியாக முன்னேறிய வந்த நிலையில், திட்வா புயல் தாக்கியது.
பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் லைன் வீட்டிலிருந்து தனி வீட்டுக்கு சென்ற தம்மை, திட்வா புயல் மீண்டும் லைன் வாழ்க்கைக்கே திரும்பியனுப்பியதாக எலிஸ்டன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

படக்குறிப்பு,200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம் என்கிறார் எலிஸ்டன்
''நாங்கள் சாப்பிட போகும் போது பின்நேரம் 4.30 (மாலை) இருக்கும். எங்களுடைய வீட்டின் பின்னால் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்து விட்டது. சாப்பாடு கூட சாப்பிடாமல் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு மாமா விட்டுக்கு வந்து விட்டோம். 200 வருட வாழ்க்கைக்கு திரும்பவும் வந்து விட்டோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு ஆசையை காட்டி மோசம் பண்ணி விட்டோம். திரும்புவும் அந்த வீட்டில் இருக்க முடியாது.
திரும்பவும் ஒரு அனர்த்தம் வந்தால் எங்களுடைய பிள்ளைகளை நாங்களே குழியில் தள்ளுற மாதிரி தான். லைன் வாழ்க்கையை தொடரக்கூடாது என்பதே எமது ஆசை. இதையும் விட்டு வெளியில் போக வேண்டும். 200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம்.'' என எலிஸ்டன் குறிப்பிடுகின்றார்.
மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார்.
''கதைக்க இயலாது. சரியான கவலையாக இருக்கு. அப்பாவுடைய வீடு இருந்ததால் அங்கு வந்திருக்கிறோம். நான் தோட்டத்தில் வேலை செய்தேன். விழுந்து கையில் மூட்டு ஒன்று விலகியதனால் தோட்டத்தில் வேலை இல்லை. கணவர் மட்டும் தான் வேலை பார்க்கிறார். 3 பிள்ளைகள் படிக்கின்றார்கள். லைன் வீட்டை விட்டுவிட்டு தான் நாங்கள் அங்கே போனோம். பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றே நாங்கள் புதிய காணிக்கு போனோம். மறுபடியும் இந்த நிலைமைக்கு வந்தது கவலை தான்.'' என ஜூலியட் தெரிவிக்கின்றார்.
இந்த திட்வா புயல் எலிஸ்டன், ஜூலியட்டை மாத்திரம் 200 வருடங்களை நோக்கி பின்தள்ளவில்லை. அதே இடத்தில் வாழ்ந்த பலரையும் மீண்டும் லைன் வாழ்க்கைக்கு அனுப்பியுள்ளது.

படக்குறிப்பு,மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார்.
ஹூன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த நடராஜாவும் இதே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்.
''எங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் அந்த வீட்டிற்கு போய் இரண்டு வருடங்கள் இருக்கும். எங்களுடைய பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும் என்றே அந்த காணியை நாங்கள் வாங்கினோம். இப்போது அந்த காணிகளில் வாழ இயலாமல் இருக்கு. எங்களுடைய வீட்டிற்கு 20 அடி கீழே மண் சரிவு போயிருக்கு. அன்றைக்கே தோட்ட நிர்வாகம் சொல்லி விட்டார்கள். இங்கே இருக்க வேண்டாம். லயின் அறைக்கே போகுமாறு சொல்லிவிட்டார்கள். இந்த வீட்டில் இருக்க எங்களுடைய பிள்ளைகள் விருப்பம் இல்லை.'' என அவர் கூறுகின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்கள் மாத்திரமன்றி, இந்திய வீட்டுத் திட்டங்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

படக்குறிப்பு,புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர்
இந்தியாவிலிருந்து வருகைத் தந்த தமது முன்னோர், இலங்கையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்த அதே லைன் அறைகளில் மீண்டும் தற்போதைய தலைமுறையும் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஹூன்னஸ்கிரிய பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டத்தின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்களை சந்தித்துள்ளன.
ஒரு சில வீடுகளின் மீது மண்மேடுகள் சரிந்துள்ளதுடன், சில வீடுகளுக்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளன. அத்துடன், பெரும்பாலான வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்த வீடுகளுக்கு கீழ் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமையினால், தமது வீடுகள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை, வீடுகள் தாழிறங்கியுள்ளமை, மண்மேடுகள் சரிந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து, அதிகாரிகள் தம்மை மீண்டும் லைன் அறைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

படக்குறிப்பு,ஆபத்தற்றது என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன
எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை
மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்துடன் நெருங்கி செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான பாரத் அருள்சாமியிடம் பிபிசி தமிழ் இந்த விடயம் தொடர்பில் வினவியது.
''எந்த வீட்டுத் திட்டமாக இருந்தாலும், தனியான காணியை தேர்வு செய்து வீடுகளை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான சரியாக திட்டம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையோடு தான் இதை செய்வார்கள். இந்த நடைமுறை இந்திய வீட்டுத் திட்டத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இருந்தால் மாத்திரமே அந்த இடத்தில் வீடுகளை கட்ட முடியும். அது இல்லாமல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாக காணிகளுக்கும் பெற்று, அதே போன்று வீடுகளை நிர்மாணிக்கும் இடத்திற்கும் எடுத்திருந்தோம்.
ஏனென்றால், கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மலைப்பாங்கான இடங்களில் இருப்பதனால், அந்த முறையை கொண்டு வந்தோம். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தம் யாருமே எதிர்பார்க்காத இடங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்றே உதவிகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் இந்த நாட்டு பிரஜைகளே. ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள், எமக்கும் உரித்தாகும். அந்த நிவாரண திட்டங்கள் எங்கள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.'' என பாரத் அருள்சாமி கோரிக்கை விடுக்கின்றார்.
''இவர்கள் இந்த இடத்திலிருந்து மீண்டும் லைன் அறைகளுக்குப் போவது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இவர்கள் தனிவீட்டிற்கு போய் விட்டார்கள். அப்படியென்றால் கிராம வாழ்க்கைக்கு போய்விட்டார்கள். அப்படியென்றால், அரசாங்கம் அறிவித்த அந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.'' எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார்.

படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்
அரசாங்கத்தின் பதில்
லைன் அறைகளிலிருந்து தனிவீட்டிற்கு சென்று திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பின்னணியில், மீண்டும் லைன் வீடுகளுக்கு சென்றவர்கள் குறித்து பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபனிடம் பிபிசி தமிழ் வினவியது.
''தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், தனி வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு மீண்டும் அதே வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என பிபிசி தமிழிடம் அவர் உறுதியளித்தார்.
பெருந்தோட்ட பகுதிகளில் லைன் அறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்க தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி
சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி
சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி
Dec 21, 2025 - 05:01 PM
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும்.
அதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.
இன்று (21) முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது.
இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்று தெரிவித்தார்.
ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக இங்கு தெரவித்தார்.
இன்று முற்பகல் தியதலாவ, இராணுவ கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும்.
வதிவிட கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 93, 94B குறுகிய கால பாடநெறி எண்23, வதிவிட பாடநெறி எண்62 மற்றும் தன்னார்வ பெண் கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண்19 ஆகியவற்றைச் சேர்ந்த 240 கெடட் உத்தியோகத்தர்கள் வெற்றிகரமான இராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு கௌரவ சின்னங்களையும், ஒவ்வொரு பாடநெறியிலும் முதலிடம் பெற்ற அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கினார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், அண்மைய சூறாவளியின் போது மக்களை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை வழங்குவதில் ஆற்றிய சிறந்த பணிக்கு நன்றி தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களாக தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியைப் பெற்ற நீங்கள், இன்று அதிகாரிகளாக மாறியுள்ளீர்கள்.
அரசாங்கத்திற்கும், ஜனாதிபதியாக எனக்கும், உங்கள் மீது பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. நமது நாடு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்த சவால்களை வெற்றிகொள்ள, இந்த தாய்நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் மக்களுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த உங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளனர்.
நீங்களும் நானும் இன்று கால்களை வைத்திருப்பது, கடந்த காலங்களில், வீரச் செயல்கள் மூலம், நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தில் உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பூமியில் ஆகும். எனவே, கைவிட முடியாத ஒரு பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இலங்கை இராணுவமாக, நமது தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அசைக்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விடயத்தில் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது.
சூறாவளியினால் நமது நாடு பேரழிவைச் சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சிலருக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் சிலரது உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய சவாலாக அமைந்தது.
அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு சவாலிலும் இலங்கை இராணுவம் பெரும் பங்காற்றியுள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். படையினர் மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.
உங்களுக்கு இருப்பது தொழில் ரீதியான பொறுப்பு மாத்திரமல்ல. பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. உங்கள் நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கே உரிய பொறுப்பு மற்றும் மதிப்பு உள்ளது. நீங்கள் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அதே நேரம் ஒரு பாரிய பொறுப்பு உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நான் நினைக்கிறேன்.
நமது தாய்நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமது தாய்நாடு பல தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ஒருபுறம், நமது அரச பொறிமுறை பலவீனமாகவும் வீழ்ச்சி அடைந்தும் இருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது பொருளாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகி சரிவடைந்து கொண்டிருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது சமூகத்தின் நல்வாழ்வு முற்றிலுமாக தோழ்வி கண்ட ஒரு சகாப்தம் இருந்தது. மனித உறவுகள் பெறுமதியற்ற உறவுகளாக மாறிக்கொண்டிருந்தன.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. மதஸ்தலங்களுக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. நமது நாடு அனைத்து மனித உறவுகளும் உடைந்த ஒரு சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருந்தது. அதன்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன? நாம் வரலாற்று பாரம்பரியத்தையும் வரலாற்று சாதனைகளையும் கொண்ட ஒரு நாடு. ஆனால் நமது நாடு எல்லா வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளானது.
இப்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, இந்த தாய்நாட்டை உலகில் உயர்ந்த, மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும். ஒவ்வொருவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும், நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான பொறிமுறையைத் தயாரிக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் ஒரு தொழிலாக அன்றி, மாறாக மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கும் அதே போன்ற பொறுப்புகள் உள்ளன. இங்கு கூடியிருக்கும் பெற்றோருக்கும் நமது நாட்டிற்கான பொறுப்புகள் உள்ளன. நமது மதஸ்தலங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுவதன் மூலமோ அல்லது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலமோ இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கான உறுதியான தீர்மானத்துடன் நாம் அனைவரும் செயல்பட்டால் மாத்திரமே நாம் ஒரு நாடாக முன்னேற முடியும்.
ஒரு நாடாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
மேலும் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுமாறு பொதுமக்களையும் நான் அழைக்கிறேன்.
நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் தைரியமாக தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடிந்தால், வரலாற்றில் நம் நாடு பெற்ற பெருமை மற்றும் கௌரவத்துடன் தாய்நாட்டை மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
நியூஸிலாந்து மெற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் செய்திகள்
நியூஸிலாந்து மெற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் செய்திகள்
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல்
18 Dec, 2025 | 06:27 PM
![]()
(நெவில் அன்தனி)
மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து பலமான நிலையில் இருக்கிறது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
முதலாவதாக ஆட்டம் இழந்த டொம் லெதம் 246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார்.

91ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் டொம் லெதம் பெற்ற 15ஆவது சதம் இதுவாகும்.
மறுபக்கத்தில் 279 பந்துகளை எதிர்கொண்ட டெவன் கொன்வே 25 பவுண்டறிகள் அடங்கலாக 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.
இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும்.

கொன்வேயுடன் களத்திலிருக்கும் ஜேக்கப் டவி 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந் நிலையில் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் களம் இறங்கியது.
ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை.
மைல்கல் சாதனைகள்
டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் ஜோடியாக 86.4 ஓவர்கள்வரை துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தனர்.
அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 323 ஓட்டங்களானது நியூஸிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜோர்ஜ்டவுனில் 1979இல் க்ளென் டேர்னர், டெரி ஜாவிஸ் ஆகிய இருவரும் பகிர்ந்த 387 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட்டுக்கான நியூஸிலாந்தின் முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாகும்.
டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் பகிர்ந்த 323 ஓட்டங்களானது சொந்த மண்ணில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகும்.
இதற்கு முன்னர் 1930இலும் பின்னர் 1999இலும் முதலாவது விக்கெட்டில் பகிரப்பட்ட 276 ஓட்டங்களே முந்தைய சாதனையாக இருந்தது.
கொன்வே பெற்ற ஆட்டம் இழக்காத 178 ஓட்டங்களானது முதலாம் நாளில் பெறப்பட்ட தனிநபருக்கான 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாகும்.
இலங்கைக்கு எதிராக 214இல் ப்றெண்டன் மெக்கலம் பெற்ற 195 ஓட்டங்களும் பங்களாதேஷுக்கு எதிராக 2022இல் டொம் லெதம் பெற்ற ஆட்டம் இழக்காத 186 ஓட்டங்களும் இதற்கு முன்னர் நியூஸிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது நாளில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கைகளாகும். இவை இரண்டும் கிறைஸ்ட்சேர்ச்சில் பதிவான மைல்கல் சாதனைகளாகும்.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!
25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!
25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!
Dec 21, 2025 - 01:25 PM
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டை - ஹிதாயத் நகர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, "நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், எங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள், " பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்டாது, அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குங்கள் ", " அரசாங்கம் கொடுத்த 25,000 ரூபாவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள்" இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
மேற்படி வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் 25,000 ரூபா பணத்தை வழங்குவதற்காக வீரபுர கிராம சேவகர் பிரிவில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் , உண்மையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்ததுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக ஒரு வழிப்பாதையாகவே வாகனங்கள் பயணித்தன.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன், அவர்களின் கருத்துக்களையும் அமைதியான முறையில் கேட்டறிந்துகொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முந்தல் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும், கணக்காளரும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் குறிப்பிட்டனர்.
மேலும், 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் போது பொய்யான தகவல்களை வழங்கி அரச பணத்தை பெற முயற்சி செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த கொடுப்பனவு வழங்குவதில் எவ்விதமான பாகுபாடுகளும் இன்றி, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் முயற்சி எடுப்பதாக இதன்போது முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் ஆகியோரினால் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் தெரிவக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக களைந்து சென்றனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-புத்தளம் நிருபர் ரஸ்மின்-
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி
Published By: Digital Desk 2
21 Dec, 2025 | 05:03 PM
![]()
தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
பெக்கர்ஸ்டாலில் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 12 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்,வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 63பேர் கொல்லப்பட்டதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.