Aggregator
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?
ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?
"நான் இறந்து விடுவேன் என நினைத்தேன்" - ரத்தப் புற்றுநோயை மரபணு சிகிச்சை மாற்றியமைப்பது எப்படி?

படக்குறிப்பு,16 வயதான அலிசா டேப்லி எனும் இவர் தான் இந்த முறையில் சிகிச்சை பெற்ற முதல் நபர்.
கட்டுரை தகவல்
ஜேம்ஸ் கல்லாகர்
சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ஒரு சிகிச்சை முறை ஒன்று, சில நோயாளிகளில் மிக மோசமாகப் பாதித்த மற்றும் குணப்படுத்த முடியாத ரத்தப் புற்றுநோய்களை மாற்றியமைத்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சிகிச்சை, வெள்ளை ரத்த அணுக்களில் உள்ள டிஎன்ஏவை துல்லியமாக மாற்றி, அவற்றை புற்றுநோயை எதிர்த்துப் போராடும் "உயிருள்ள மருந்தாக" மாற்றுகிறது.
இதற்கு முன்பு இந்த சிகிச்சை பெற்ற முதல் சிறுமியைக் குறித்து 2022-இல் பிபிசி ஒரு செய்தி வெளியிட்டது. நோயில் இருந்து விடுபட்டுள்ள அவர், இப்போது புற்றுநோய் குறித்த விஞ்ஞானியாக மாறும் கனவுடன் உள்ளார்.
தற்போது இதே சிகிச்சை மூலம், டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவால் பாதிக்கப்பட்ட எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 64% பேர் நிவாரணம் பெற்றுள்ளனர்.
டி-செல்கள் சாதாரணமாக உடலைப் பாதுகாக்கும் காவலர்களாக செயல்பட்டு, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைத் தேடி அழித்துவிடுகின்றன. ஆனால் லுகேமியாவின் வடிவில், அதே டி - செல்கள் கட்டுப்பாட்டை இழந்து அதிக அளவு பெருகுகின்றன.
கீமோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகள் தோல்வியடைந்திருந்தன. எனவே பாதிப்பில் இருந்தவர்களுக்கு, பரிசோதனை மருந்தை தவிர எஞ்சிய ஒரே வழி, அவர்களுடைய மரணத்தை சற்று வசதியானதாக மாற்றுவதாக மட்டுமே இருந்தது.
"நான் உண்மையிலேயே இறந்து விடுவேன் என்று நினைத்தேன். வளர்ந்து, ஒவ்வொரு குழந்தையும் செய்யத் தகுதியான அத்தனை விஷயங்களையும் என்னால் செய்ய முடியாமல் போய்விடும் என நினைத்தேன்" என்கிறார் லெய்செஸ்டரைச் சேர்ந்த 16 வயது அலிசா டாப்லி.
கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் உலகிலேயே இந்தச் சிகிச்சை பெற்ற முதல் நபர் இவர் தான். இப்போது அவர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.

படக்குறிப்பு,அலிசா தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில், அவரது பழைய நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் அகற்றி, புதிய ஒன்றை உருவாக்கும் முறை இடம்பெற்றது. அவர் நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். தொற்று ஏற்படக்கூடும் என்பதால், அந்த சமயத்தில் அவரது சகோதரனைக் கூட அவரால் சந்திக்க முடியவில்லை.
ஆனால் இன்று, அவரது புற்றுநோய் முற்றிலும் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அவர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அலிசா தற்போது தனது ஏ -லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார். ஓட்டுநர் பயிற்சி பெறுவதையும், தனது எதிர்காலத்தை திட்டமிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார் அலிசா.
"நான் உயிரி மருத்துவ அறிவியலில் பயிற்சி செய்வது குறித்து யோசித்து வருகிறேன். ஒருநாள் ரத்தப் புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்," என்கிறார் அலிசா.

படக்குறிப்பு,அலிசா தற்போது தனது ஏ-லெவல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். டியூக் ஆஃப் எடின்பர்க் விருது திட்டத்தில் பங்கேற்கிறார்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (UCL) மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் குழு பேஸ் எடிட்டிங் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.
பேஸ்கள் (bases) தான் உயிரின் அடிப்படை. அடினைன் (A), சைட்டோசின் (C), குவானைன் (G), தைமின் (T) எனும் நான்கு பேஸ்களே நமது மரபணு குறியீட்டின் கட்டுமானத் தொகுதிகள். எப்படி எழுத்துக்கள் சேர்ந்து அர்த்தமுள்ள சொற்களை உருவாக்குகின்றனவோ, அதுபோல நமது டிஎன்ஏவில் உள்ள பில்லியன் கணக்கான பேஸ்கள், நமது உடல் இயங்க வேண்டிய வழிமுறைகளை எழுதுகின்றன.
பேஸ் எடிட்டிங் என்பது மரபணு குறியீட்டின் குறிப்பிட்ட இடத்துக்கு நேராகச் சென்று, ஒரு அடிப்படையின் மூலக்கூறு அமைப்பை மாற்றி, அதை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்ற உதவும் முறையாகும். இதனால் மரபணு கையேட்டையே புதிதாக எழுத முடியும்.
ஆரோக்கியமான டி-செல்களிடம் இயற்கையாக உள்ள சக்தியைப் பயன்படுத்தி, உடலுக்கு வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அழிக்கவும், அந்த சக்தியை டி-செல் அக்யூட் லிம்போபிளாஸ்டிக் லுகேமியாவுக்கு எதிராக பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர்.
ஆனால் இது மிகவும் சிக்கலான செயல்முறை. இந்த சிகிச்சை முறை தன்னைத் தானே அழித்துக்கொள்ளாமல் இருப்பதற்காக, கெட்ட செல்களை மட்டும் குறிவைத்து அழிக்க நல்ல டி -செல்களை மாற்றி வடிவமைக்க வேண்டியிருந்தது.
அதற்காக முதலில் ஒரு நன்கொடையாளரிடமிருந்து ஆரோக்கியமான டி -செல்களைப் பெற்று, அவற்றை மாற்றியமைக்கத் தொடங்கினர்.
முதல் பேஸ் எடிட்டிங் மூலம், டி -செல்களின் 'இலக்கு பொறிமுறை' (targeting) செயல்பாடு முடக்கப்பட்டது. இதனால் அந்த செல்கள் நோயாளியின் உடலைத் தாக்காது.
இரண்டாவது திருத்தம், அனைத்து டி -செல்களிலும் காணப்படும் சிடி7 என்றழைக்கப்படும் ஒரு வேதியியல் குறியை நீக்கியது. ஏனென்றால், அந்த சிகிச்சை தன்னை தானே சிதைத்துக் கொள்ளும் அபாயத்தைத் தடுப்பதற்கு இந்தக் குறியை நீக்குவது அவசியம்.
மூன்றாவது திருத்தம், செல்களைச் சூழ்ந்த "கண்ணுக்கு தெரியாத பாதுகாப்பு மேலங்கியைப்" போன்றது. இது கீமோதெரபி மருந்துகள் அந்த செல்களை அழிப்பதைத் தடுக்கிறது.
மரபணு மாற்றத்தின் இறுதி கட்டத்தில், சிடி7 (CD7) குறியுடன் இருக்கும் செல்களை தேடி அழிக்க டி-செல்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால் மாற்றியமைக்கப்பட்ட டி -செல்கள், புற்றுநோய் செல்லாக இருந்தாலும், ஆரோக்கியமானதாக இருந்தாலும், தங்கள் முன் வரும் மற்ற எல்லா டி-செல்களை அழித்து விடும். ஆனால் அவை ஒன்றையொன்று தாக்காது.
அதன் பிறகு இந்த சிகிச்சை நோயாளியின் உடலில் மேற்கொள்ளப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நான்கு வாரங்கள் கழித்து புற்றுநோய் கண்டறிய முடியாத அளவுக்கு குறைந்திருந்தால், நோயாளிக்கு புதிய நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
"சில ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு அறிவியல் புனைகதையாக இருந்திருக்கும்" என்கிறார் யூசிஎல் மற்றும் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த பேராசிரியர் வசீம் காசிம்.
தொடர்ந்து பேசிய அவர், "நாம் முற்றிலும் நோயெதிர்ப்பு மண்டலத்தையே அகற்ற வேண்டும். இது ஆழமான, தீவிரமான, நோயாளிகளுக்கு மிகவும் கடினமான சிகிச்சை. ஆனால் இது வேலை செய்தால், மிகச் சிறப்பாகச் செய்கிறது," என்றார்.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு, கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மற்றும் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற முதல் 11 நோயாளிகளின் முடிவுகளைப் பற்றி கூறுகிறது. அவர்களில் ஒன்பது பேர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யும் அளவுக்கு ஆழ்ந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளனர்.
சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஏழு பேர் முழுமையாக நோயின்றி உள்ளனர்.
நோயெதிர்ப்பு மண்டலம் அகற்றப்படும் காலத்தில் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் தான், இந்த சிகிச்சையின் பெரிய ஆபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இரண்டு நோயாளிகளில், புற்றுநோய் தனது சிடி7 அடையாளத்தை இழந்தது. இதனால் அது இந்த சிகிச்சையிலிருந்து தப்பித்து உடலில் மீண்டும் வளரத் தொடங்கியது.
"இந்த வகை லுகேமியா எவ்வளவு தீவிரமானது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த சிகிச்சை முடிவுகள் மிகச் சிறப்பானவையாக உள்ளன. நம்பிக்கையிழந்த நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்க முடிந்தது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையின் எலும்பு மஜ்ஜை மாற்றுத் துறையின் மருத்துவர் ராபர்ட் சீசா கூறினார்.
"குணப்படுத்த முடியாததாகத் தோன்றிய லுகேமியாவை அகற்றுவதில் கூட நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். இது மிகவும் சக்திவாய்ந்த சிகிச்சை முறை" என்று கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையின் ரத்தவியல் நிபுணரும் மருத்துவருமான டெபோரா யல்லோப் தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சி குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டன் ஸ்டெம் செல் தொண்டு நிறுவனமான அந்தோணி நோலனின் மூத்த மருத்துவ அதிகாரி, மருத்துவர் டானியா டெக்ஸ்டர், "சோதனைக்கு முன்னர் இந்த நோயாளிகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு பார்த்தால், தற்போது கிடைத்துள்ள இந்த முடிவுகள், இது போன்ற சிகிச்சைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, நோயாளிகளின் வாழ்வை மீட்டெடுக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தருகின்றன" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சியின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு
கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சியின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு
கொழும்பு மாநகர சபையில் ஆளுங்கட்சியின் வரவு - செலவுத் திட்டம் தோற்கடிப்பு
Published By: Vishnu
22 Dec, 2025 | 10:10 PM
![]()
கொழும்பு மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் வாக்கெடுப்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) தோல்வியடைந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாவிட்டாலும், சிறிய குழுக்களின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை அமைத்தது.
எனினும், கூட்டு எதிர்க்கட்சி எதிராக வாக்களித்ததையடுத்து சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
60 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும் 57 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம்
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ்
22 Dec, 2025 | 04:01 PM
![]()
இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும் என தமிழ்நாட்டில் இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இராமதாஸ் இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு விதி (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு) நிராகரிக்கப்பட்டு, தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக்கப்படவேண்டும்.
ஈழத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொ.ஐங்கரநேசன், செ.கஜேந்திரன், த.சுரேஸ், ந.காண்டீபன், க.சுகாஸ் ஆகிய தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் 20.12.2025 அன்று எனது இல்லத்திற்கு வந்து என்னைச் நேரில் சந்தித்திருந்தார்கள்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போர் கடந்த 2009 மே மாதம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் தமிழர் தேசத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் இன அழிப்பை தொடர்ந்து செய்து வருவதை தெளிவுபடுத்தினார்கள்.
இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமையை எண்ணிப் பார்க்கும்போது வேதனைக்குரியதாக உள்ளது. இந்நிலை இலங்கையில் தொடர்வதற்கு தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படாததே காரணமாகும்.
1987ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஒட்டி இதுவரை அதிகாரங்களை மாகாணங்களுக்கு இலங்கை அரசு வழங்கவில்லை. ஒற்றையாட்சி அரசியல் விதியில் 13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதனால் 38 ஆண்டுகளாக தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி தமிழர்கள் மீதான இன அழிப்பையும் தடுக்க முடியவில்லை. 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துமாறு இந்திய ஒன்றிய அரசு பல முறை இலங்கை அரசாங்கங்களை வலியுறுத்தி வந்துள்ளபோதும் ஒற்றையாட்சி முறைமைக்குள் அதிகாரங்கள் எதனையும் வழங்க முடியாதென இலங்கை உச்ச நீதிமன்றம் 32 தடவைகள் தீர்ப்பளித்துள்ளது. இதனால் இந்தியாவின் கோரிக்கைகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது. தமிழர்களின் இந்நிலையை போக்க தற்போது இலங்கையில் தொடரும் அரசியல் கட்டமைப்பை மாற்றவேண்டும். இன அழிப்பிலிருந்து தமிழர் தேசத்தை பாதுகாக்க, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட, தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறைமையின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படுவதே ஒரே வழியாகும்.
தமிழர்களுக்கு தீர்வு வழங்குகின்றோம் என்ற போர்வையில் கடந்த 2015 – 2019 காலப்பகுதியில் பதவி வகித்த அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஒற்றாட்சி அரசியல் விதியை (ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பை) தற்போது பதவியில் உள்ள அனுரகுமார அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு விதியை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.
அந்த அரசியல் அமைப்பு விதி வரைபானது கடந்த 76 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது போன்ற சிங்கள பௌத்த பெரும்பான்மையினரது கைகளில் அதிகாரத்தை வழங்கும் ஒருமித்த அரசியல் அமைப்பு விதி.
எனவே அத்தகைய ஓர் அரசியல் சட்டம் கொண்டு நிறைவேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு தடுத்து நிறுத்திட மேலே குறிப்பிட்டது போன்று கூட்டாட்சி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் நோக்கமும் நிறைவேறும். இதுவே பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகவும் உள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை அங்கீகரிக்கும் கூட்டாட்சி முறைமை உருவாக்கப்படவேண்டும் - பா.ம.க. தலைவர் இராமதாஸ்
‘டித்வா’ சூறாவளியால் இலங்கையில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதம் – உலக வங்கி அறிக்கை
19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்
கருத்து படங்கள்
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான்
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான்
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான்
Published By: Digital Desk 3
22 Dec, 2025 | 12:02 PM
![]()
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் இயங்க ஜப்பானின் நீகாட்டா மாநிலம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால் மூடப்பட்ட அணு மின் நிலையங்களில் டோக்கியோவிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் வடமேற்கே அமைந்துள்ள கஷிவஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) அணு மின் நிலையமும் ஒன்றாகும்.
தற்போது செயல்படக்கூடிய 33 அணு மின் நிலையங்களில் 14 மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. புகுஷிமா மின் நிலையத்தை இயக்கிய டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) மீண்டும் காஷிவசாகி–கரிவா அணு மின் நிலையத்தை இயக்க உள்ளது.
நீகாட்டா மக்களுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தை போலவே இம்முறை ஏற்படாது என்பதில் கவனம் செலுத்தப்படும் என டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் மசகத்சு தகதா தெரிவித்துள்ளார்.
அனுமதி கிடைத்தால், இந்த நிலையத்தில் உள்ள ஏழு அணு உலைகளில் முதலாவதைக் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அன்று மீண்டும் இயக்க டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் பரிசீலணை செய்து வருவதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு சேவை தெரிவித்துள்ளது. ஆனால் செயல்படுத்தும் திகதி தொடர்பில் எந்த தகவலையும் தகதா தெரிவிக்கவில்லை.
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு!
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு!
Dec 22, 2025 - 07:20 PM
அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதற் கட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளுக்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.
இதற்கமைய, தற்போது இத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்து இன்னும் நன்மைகளை பெறாதவர்கள் என அனைத்து தரப்பினரதும் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
தகவல்களை இதுவரை புதுப்பிக்காத அனைவரும் பின்வரும் முறைகளில் அதனைச் செய்துகொள்ள முடியும்:
https://www.eservices.wbb.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ஒன்லைன் (Online) மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
அந்தந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் கிராம உத்தியோகத்தர் அல்லது அஸ்வெசும திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரைச் சந்தித்து, தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தாம் வசிக்கும் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவில் ஒப்படைப்பதன் மூலம் தகவல்களைப் புதுப்பிக்கலாம்.
அருகில் உள்ள தகவல் தொடர்பு மையங்களுக்கு சென்று, அங்குள்ள தொழில்நுட்ப உதவியுடன் ஒன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.