Aggregator

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

1 day 6 hours ago
சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் · Ranjini Kanna ·oeSosndtpr5t2o:09ict1c88gfbaml5gc529m1 911fi ta8251ag,rchoet · ஒரு நாள் பயணம்... கணவர் தூங்கிக் கொண்டிருந்தார். மகன்களை மட்டும் எழுப்பினார் பெர்த்தா. மூவருமாகச் சேர்ந்து, ஓசை எழுப்பாமல் ஷெட்டிலிருந்து காரைத் தள்ளிக் கொண்டு வந்தனர். பின்னர் தனது அன்னை வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினார் பெர்த்தா. கணவருடன் சண்டை போட்டு அம்மா வீட்டுக்குப் போகும் சாதாரணப் பயணம் அல்ல அது. பிறகு? ஜெர்மெனியில் வளமான குடும்பத்தில் பிறந்தார் பெர்த்தா. கார்ல் பென்ஸைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். கார்ல் பென்ஸ் திறமையான பொறியியலாளர். குதிரைகள் இல்லாமல், எந்திரத்தால் இயங்கும் வாகனத்தை உருவாக்கினார். அதுதான் காப்புரிமை பெறப்பட்ட முதல் பென்ஸ் மோட்டார் கார். ஆனால் அந்த பென்ஸ் மோட்டார் காரை மக்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. குதிரை வண்டிகள்தான் வசதியானவை என மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. மோட்டார் கார் குறித்து பகடிகளும் எதிர்மறை விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. கார்ல் பென்ஸால் இந்த விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிறையப் பணத்தை முதலீடு செய்து, பெரிய கனவுகளுடன் உருவாக்கிய மோட்டார் கார் தோல்வி அடைந்ததாக எண்ணிக் கலங்கிப் போனார். ஆனால் பெர்த்தா அதைத் தோல்வியாகக் கருதவில்லை. பிரச்சனை மோட்டர் காரில் இல்லை, மார்க்கெட்டிங்கில்தான் இருக்கிறது. முறையாக மக்களிடம் அறிமுகப்படுத்தினால், வெற்றிபெறக் கூடிய வாகனம்தான் என்று உறுதியாக நம்பினார். நம்பிக்கையை வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லாமல் செயலில் காட்ட முடிவெடுத்தார். காரை எடுத்துச் செல்கிறேன் என்று ஒரு குறிப்பு எழுதி வைத்தார். மூன்று சக்கரங்களைக் கொண்டு ரிக்ஷா வடிவிலிருந்த காரைத் தானே கிளப்பினார். தனது இரு மகன்களையும் ஏற்றிக் கொண்டார். சுமார் நூறு கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் பெற்றோர் வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினார். முறையான சாலைகள் அப்போது இல்லை. திசைகளைச் சுட்டும் பதாகைகளும் இல்லை. முழுப் பயணத்துக்கும் தேவையான எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி அந்தக் காரில் இல்லை. அத்தனை தூரம் அதற்கு முன்னர் யாரும் ஓட்டியதும் இல்லை. எல்லா இல்லைகளையும் துணிச்சலை மட்டுமே கொண்டு இட்டு நிரப்பினார் பெர்த்தா. வழியில் மருந்துக் கடையில் நிறுத்தி, அங்கிருந்த மொத்த லிகோரினையும் வாங்கிக் கொண்டார். பெட்ரோலியக் கரைப்பானான லிகோரின்தான் காரின் எரிபொருள். அந்த மருந்துக் கடைதான் உலகின் முதல் பெட்ரோல் ஸ்டேஷன். (அந்தக் கட்டடம் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இன்றளவும் இருக்கிறது) காருடைய சிறிய இன்ஜின் அடிக்கடி சூடானது. அதைத் தணிக்க வழியில் கண்ட ஆறுகள், நீரோடைகளில் காரை நிறுத்தி, இன்ஜின்மேல் தண்ணீர் ஊற்றினார். மேடுகளில் மூவருமாக இறங்கி வண்டியைத் தள்ளினர். அப்படியும் கார் பாதி வழியில் நின்று போனது. பெர்த்தா பதட்டப்படவில்லை. என்ன கோளாறு என்று ஆராய்ந்தார். எரிபொருள் செல்லும் குழாயில் தூசி அடைத்துக்கொண்டிருந்தது. தொப்பியில் சொருகியிருந்த ஊசியை வைத்து அடைப்பை நீக்கினார். இக்னிஷன் ஒயர் சூடானபோது, தான் அணிந்திருந்த பெல்ட்டினைக் கழற்றி ஒயரில் சுற்றி விட்டார். கோளாறுகள் இத்தோடு நிற்கவில்லை. சிறிது தூரம் சென்றதும் இணைப்புச் சங்கிலி அறுந்து விழுந்தது. சிறுவர்கள் இருவரும் கொல்லரைத் தேடி அழைத்து வந்தனர். இரும்பைப் பற்றவைத்து இணைத்தபின் பயணம் தொடர்ந்தது. அடுத்ததாக மரத்தால் செய்யப்பட்ட பிரேக் கட்டைகள் உடைந்து போயின. செருப்புத் தைப்பவரை அழைத்து பிரேக் கட்டைகளில் லெதர் வைத்துத் தைக்கச் சொன்னார். நூற்று ஆறு கிலோமீட்டர் தொலைவைக் கடந்து அன்று மாலை அன்னை வீட்டை அடைந்தார் பெர்த்தா. தனது பயணம் வெற்றிகரமாக நிறைவடந்ததைக் கணவருக்கு தந்தியடித்துச் சொன்னார். மெக்கானிக்குகளை உடன் வைத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டிச் சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. பெர்த்தாவின் நெடுந்தூரப் பயணம், மக்களிடத்தில் ஓர் ஆர்வத்தையும், இந்தக் காரைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்னும் எண்ணத்தையும், பென்ஸ் கார் குறித்த பரவலான அறிமுகத்தையும் ஏற்படுத்தியது. தானே ‘டெஸ்ட் டிரைவ்’ செய்திருந்ததால், அந்த அனுபவத்திலிருந்து பல பயனுள்ள குறிப்புகளைச் சொன்னார். மேடுகளில் ஏறுவதற்கு எனத் தனி கியர், பிரேக் கட்டைகளில் லெதர் லைனிங் என அவர் முன்வைத்த யோசனைகள் இன்றுவரை கார்களில் பொருத்தப்படும் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன. பெர்த்தா குறிப்பிட்ட வசதிகளைச் சேர்த்தார் கார்ல். புதுப் பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் பென்ஸ் கார் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில் மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் அடைந்த பெருவெற்றிக்கும், மோட்டார் கார்களின் பரவலான ஏற்புக்கும், பெர்த்தா துணிச்சலுடன் மேற்கொண்ட அந்த ஒரு நாள் பயணமே அஸ்திவாரமாக அமைந்தது. இன்று நாம் செல்லும் நீண்ட சாலைப் பயணங்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த முன்னோடியாக அறியப்படுகிறார் பெர்த்தா பெனஸ். Voir la traduction

கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்

1 day 6 hours ago
இதைத்தான் அழகு தமிழில் உள்மனக்கிடக்கை என்பார்கள்😂. பின்னாளில் மனோதத்துவ நிபுணர் சிக்மன்ட் ப்ரோட் தனது Freudian concept இல் ஓர் அங்கமாக முன்வைத்த Freudian Slip என்பதும் இதுவே😂. பிகு காலையில் அவசர வாசிப்பில் தலையங்கம் கண்ணில் பட்டது… நானும் கோஷான் என்றே வாசித்தேன். நம்மதான் யாழில் பிரபலமாச்சே😂, நம்ம (நியாபகார்த்தமா?😂) பெயரை ஏதோ ஒரு கப்பலுக்கு வச்சிருக்காங்க போல எண்டு விட்டுவிட்டேன்😂. மைன்ட்வாய்ஸ் அநியாயமா ஒரு எழுத்தில் எல்லாம் மாறிப்போச்சு. இல்லாட்டில் கப்பல் என்னதுதான், மம்மி டாடி எல்லாம் கனடாவிலதான் லிவிங்ஸ்டன் எண்டு ஏதாவது உருட்டி இருக்கலாம்😂

குட்டிக் கதைகள்.

1 day 6 hours ago
Natesan Natesan · ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது… சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’ சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா… இதை வெச்சுக்கோ… சீக்கிரம் கதவைத் திற… நான் உள்ளே போகணும்!’’ சித்ரகுப்தன் சிரித்தான். ‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்–& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது… அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’ ‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’ ‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’ ‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’ ‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’ ‘‘வேறே எப்படி வாங்கறது?’’ ‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’ ‘‘என்ன சொல்றே நீ?’’ ‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’ ‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’ ‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது… ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’ பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்…. அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’ ‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’ ‘‘என்ன உத்தரவு?’’ ‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’ ‘‘அப்புறம்?’’ ‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்: காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்! நன்றி : ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் ........! Voir la traduction

சிரிக்க மட்டும் வாங்க

1 day 6 hours ago
Dharshini KM vous invite à rejoindre ce groupe. 🎵🎼🎸💃🩵பாடும் வானம்பாடிகள்🩵💃🎸🎼 · சஷ்டி நேத்தே முடிஞ்சுதே மா, இன்னைக்கு எதுக்கு கேசரி பண்ணிருக்க..? ~ தீவாளிக்கு செஞ்ச ரவாலட்டு மீதி இருந்துச்சு, அத சூடாக்கி உலர போட்டு கிண்டி கேசரி பண்ணிட்டேன்... Voir la traduction

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 day 6 hours ago
ஜெமைமா பேட்டியில் சொன்னது: இயேசுவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் — நான் இதை தனியாக செய்யவில்லை. என் அம்மா, அப்பா, பயிற்சியாளர், என்மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த மாதம் மிகவும் கடினமாக இருந்தது, இது ஒரு கனவுபோல் உணர்கிறேன், இன்னும் நம்ப முடியவில்லை. (என்னை மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாட சொல்லியபோது) நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது. குளித்துக் கொண்டிருந்தேன், “சொல்லும்போது சொல்லுங்கள்” என்றேன். மைதானத்திற்குள் செல்வதற்கு ஐந்து நிமிடம் முன்பு, நான் மூன்றாவது இடத்தில் துடுப்பெடுத்தாடப் போகிறேன் என்று கூறினார்கள். இது எனக்காக அல்ல — இந்தியாவுக்காக இந்தப் போட்டியை வெல்லவேண்டும் என்பதற்காக எல்லாம் அமைந்தது (முன்பு கடினமான போட்டிகளில் தோற்ற அனுபவம் இருந்தது). இன்றைய நாள் எனது 50 அல்லது 100 பற்றி அல்ல, இந்தியா வெல்வது பற்றிதான். இதுவரை நடந்தது எல்லாம் இதற்கான முன்னோட்டம் போல. கடந்த வருடம் நான் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டேன். நன்றாக துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து பல விஷயங்கள் நடந்தன, எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் போது தினமும் கண்ணீர் விட்டேன். மனதளவில் நன்றாக இல்லை, கவலை நிறைந்த நாட்கள். ஆனால் எனக்கு தெரியும் — நான் மைதானத்தில் நிற்கவேண்டும், மீதியை கடவுள் கவனிப்பார். ஆரம்பத்தில் விளையாடிக்கொண்டே என்னுடன் பேசிக்கொண்டிருந்தேன். இறுதியில், பைபிளிலிருந்து ஒரு வசனம் நினைவு வந்தது — “நிமிர்ந்து நில்; கடவுள் உனக்காகப் போராடுவார்.” நானும் அப்படித்தான் நின்றேன், அவர் எனக்காகப் போராடினார். என்னுள் பல உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன, ஆனாலும் அமைதியாக இருக்க முயன்றேன். இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றபோது, என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஹாரி அக்கா வந்தபோது, நன்றாக ஒரு கூட்டணியை உருவாக்குவது மட்டுமே நினைத்தோம். தீப்தி ஒவ்வொரு பந்துக்கும் என்னுடன் பேசினார், ஊக்கமளித்தார். நான் முடியாவிட்டாலும், என் கூட்டாளிகள் என்னை ஊக்குவிக்கிறார்கள். எனக்காக எதையும் எடுத்துக்கொள்ள முடியாது — நான் ஒன்றும் தனியாக செய்யவில்லை. (பார்வையாளர்கள் பற்றி) ஒவ்வொரு ரசிகரும் கத்தி, ஆரவாரம் செய்து, நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் — அவர்கள் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் கத்தும்போது அது என்னை மேலும் ஊக்குவித்தது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 day 6 hours ago
ஏராள‌ன் அண்ணா தான் இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை போட்டியில் முத‌ல் இட‌ம் பிடிக்க‌ போகிறார் இந்தியான்ட‌ புன்னிய‌த்தில‌ ஆக‌லும் கீழ் ம‌ட்ட‌த்தில் நிக்காம‌ க‌வுர‌வான‌ புள்ளியுட‌ன் நிப்பேன்.........................

போதைப்பொருள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க துரித தொலைபேசி இலக்கம்!

1 day 7 hours ago

30 Oct, 2025 | 05:06 PM

image

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுடன் இணைந்த வகையில் 24 மணித்தியாலமும் செயற்படும் வகையிலான துரித தொலைபேசி இலக்கம் ஒன்றை  தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் வேண்டுகோளுக்கு இணங்க அறிமுகப்படுத்தியுள்ள ‘1818’ துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்களுக்கு நாடு பூராகவும் இயங்கும் போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கு இடமான செயற்பாடுகள் குறித்து சரியான தகவல்களை  வழங்க முடியும். 

https://www.virakesari.lk/article/229074

ஆஸ்திரேலியாவில் பயிற்சியின் போது உயிரிழந்த 17 வயது கிரிக்கெட் வீரர் – என்ன நடந்தது?

1 day 7 hours ago

கிரிக்கெட், பென் ஆஸ்டின்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, பயிற்சியின் போது கிரிக்கெட் பந்து தாக்கியதில் 17 வயதான பென் ஆஸ்டின் இறந்தார்

கட்டுரை தகவல்

  • லானா லாம்

  • பிபிசி செய்தியாளர்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மெல்போர்னில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய சிறார் ஒருவர் உயிரிழந்தார்.

செவ்வாயன்று கிரிக்கெட் வலை பயிற்சி செய்துகொண்டிருந்த 17 வயதான பென் ஆஸ்டின் கழுத்து பாதுகாப்பு இல்லாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்திருந்தார். அப்போது, கையடக்க பந்து லாஞ்சரைப் பயன்படுத்தி வீசப்பட்ட பந்து அவரது கழுத்தில் தாக்கியது.

தகவல் தெரிவிக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி மாலை 5:00 மணியளவில் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கிரிக்கெட்டர் பென், வியாழக்கிழமையன்று உயிரிழந்தார்.

மகனை இழந்த குடும்பம் "முற்றிலும் உடைந்துபோய்விட்டதாக" பென்னின் தந்தை ஜேஸ் ஆஸ்டின் கூறினார். நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் சமூகம் பென் ஆஸ்டினின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாக கிரிக்கெட் விக்டோரியா தெரிவித்துள்ளது.

மகனை இழந்து வாடும் தங்களது குடும்பத்தின் இழப்பு குறித்த விவரங்களை தந்தை ஜேஸ் ஆஸ்டின் அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

"டிரேசிக்கும் எனக்கும் அன்பான மகன், கூப்பர் மற்றும் சாக்கிற்கு பிடித்தமான சகோதரர் மற்றும் எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் ஒளிரும் விளக்காக இருந்தார் பென்," என்று அவர் கூறினார்.

"இந்த சோகமான சம்பவம் பென் ஆஸ்டினை எங்களிடமிருந்து பறித்துவிட்டது, அவர் பல கோடை காலங்களில் செய்து வந்தது போலவே, கிரிக்கெட் விளையாடுவதற்காக நண்பர்களுடன் சென்றார். அவர் கிரிக்கெட்டை நேசித்தார், அது அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சிகளில் ஒன்றாகும்."

விபத்து நடந்தபோது வலைகளில் பந்துவீசிக் கொண்டிருந்த பென்னின் சக வீரருக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாக ஆஸ்டின் கூறினார்.

"இந்த விபத்து இரண்டு இளைஞர்களைப் பாதித்துள்ளது, நாங்கள் அவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளோம்" என்று அவர் கூறினார்.

விபத்துக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட் சமூகத்தினர் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார், மேலும் தனது மகனுக்கு உதவிய மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு  பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

கிரிக்கெட் விக்டோரியாவின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது "மிகவும் சவாலான நேரம்" என்றார்.

"10 ஆண்டுகளுக்கு முன்பு பில் ஹியூஸ் சந்தித்ததைப் போன்ற விபத்து இது. பந்து அவரது கழுத்தில் பட்டது," என் கம்மின்ஸ் கூறியதாக ஏபிசி செய்தி தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் , 2014-ஆம் ஆண்டு பேட்டிங் செய்யும் போது கழுத்தில் பந்து தாக்கியதில் இறந்தார் .

அவரது மரணத்துக்கு யாரும் காரணம் அல்ல என்று பிரேத பரிசோதனை அதிகாரி கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

'திறமையான வீரர், அணியில் பிரபலமானவர்'

பென்னைத் தாக்கிய பந்து, பொதுவாகப் பயன்படுத்தப்படும் கையடக்க சாதனம் ஒன்றைப் பயன்படுத்தி வீசப்பட்டது என்பது தெளிவாகிறது.

"விக்டோரியாவிலும் - தேசிய அளவிலும் - முழு கிரிக்கெட் சமூகத்துக்கும் இந்த இழப்பு துக்கமளிக்கிறது. எங்களால் எப்போதும் இதை மறக்க முடியாது" என கம்மின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

பென் திறமையான வீரர், அணியில் பிரபலமானவர் மற்றும் கேப்டன் என்றும், மெல்போர்னின் தென்கிழக்கில் 18 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் என்றும் கம்மின்ஸ் தெரிவித்தார்.

"இளைஞர் ஒருவரின் வாழ்க்கை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவடைந்தது மனவேதனை அளிக்கிறது" என்று கம்மின்ஸ் கூறினார்.

ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பிற்காக பென் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த கிளப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், பலருக்கு மகிழ்ச்சியைத் தந்த அந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தியது.

ஹியூஸுக்கு செய்யப்பட்டதைப் போலவே, "put your bats out for Benny" என்ற முன்னெடுப்பை மேற்கொண்டு பென்னிக்கு அஞ்சலி செலுத்த நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களை கிளப் கேட்டுக் கொண்டது.

வேவர்லி பார்க் ஹாக்ஸ் ஜூனியர் கால்பந்து கிளப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய பென் பற்றி கூறிய கால்பந்து கிளப், அவர் "கனிவானவர்", "மரியாதைக்குரியவர்" மற்றும் "அருமையான கால்பந்து வீரர்" என்று கூறியது.

"எங்கள் கிளப்பும் சமூகமும் உண்மையிலேயே மிகச் சிறந்த இளைஞர் ஒருவரை இழந்துவிட்டன, சிறப்பான இளைஞராக வளர்ந்து கொண்டிருந்த அவரது இழப்பை எங்கள் கிளப் பல ஆண்டுகளுக்கு மிகவும் ஆழமாக உணரும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c77zd1ypyp3o