Aggregator

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

1 day 12 hours ago
ஆப்கானிஸ்தானுடன் வங்கதேசம் இன்று மோதல் ரஷீத் கான். | படம்: சந்தீப் சக்சேனா. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று அபுதாபியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கும் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும். சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதேவேளையில் ஆப்கானிஸ்தான் அணி, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் வீழ்ந்திருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்த ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்கர் ஆப்கன் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி ஆகியோர் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://tamil.thehindu.com/sports/article25019654.ece

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.

1 day 12 hours ago
இவர் லெப். பரமதேவா இவர் மாத்திரம் கிழக்கின் தளபதியாக இருந்து இருந்தால் புலிகளின் கதை வேறு ஒரு கட்டத்துக்கு மாறியிருக்கும் தமிழரின் துரதிஸ்டம் முதலாவது தாக்குதலின் போதே அவரை இழக்க வேண்டி வந்தது .

`சட்டப்படி வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்' - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது!

1 day 12 hours ago
கருணாசுக்கு ஒக்டோபர் 5-ம் திகதி வரை விளக்கமறியல் தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்ட கருணாஸை ஒக்டோபர் 5-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். http://globaltamilnews.net/2018/96718/ கருணாஸ் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு?- கொலை முயற்சி பிரிவு நீக்கம்; அக்.5 வரை சிறை கருணாஸ் கைது செய்யப்பட்டபோது. | வீடியோ பிடிப்பு. வன்முறையைத்தூண்டும் பேச்சால் கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது போடப்பட்ட 307 வது பிரிவை நீக்க உத்தரவிட்ட நீதித்துறை நடுவர் வரும் அக்.5 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் தி.நகர் டிசி அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் பேசினார். பின்னர் தனது ஆட்களின் வீரப்பிரதாபங்களைப் பேசிய கருணாஸ், ''நீங்கள் எல்லாம் ஒரு ஆளை கொலை பண்ண வேண்டும் என்றால் பத்து ஆட்களை சேர்த்துக்கொண்டு குடித்துவிட்டு இரவு முழுவதும் திட்டமிட்டு பின்னர் கொலை செய்வீர்கள். நாங்கள் தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் செய்துவிடுவோம்'' என்று பேசினார். பின்னர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் தனது ஆட்களின் காலை ஒடி கையை ஒடி என்று உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்டவன் காலை ஒடி என்று பேசினார். பின்னர் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர் உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம் என்று திரும்பத் திரும்பப் பேசினார். நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன் என்றெல்லாம் பேசினார். இதையடுத்து அவரை கைது செய்ய கண்டனக்குரல் எழுந்தது. கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), கொலை மிரட்டல் (506(2)), வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153), இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153(A)(1)(a)) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது (504), தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது 505(i) பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது (b) உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது(c) தூண்டுவது, உருவாக்குவது (ii), கொலை முயற்சி 307, கொலைமிரட்டல் 506(i) சென்னை மாநகர போலீஸ் சட்டம் அனுமதியை மீறி கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவது (41(6)(a)(b)(c) MCP Act 1888) குற்றச்சதி (r/w 120(B))IPC ஆகிய பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யாமல் போலீஸார் காலம் தாழ்த்தினர். இந்நிலையில் நேற்று மதுரையில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி சட்டம் தன் கடமையைச் செய்யுமென்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென கருணாஸ் மற்றும் செல்வநாயகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவரை கைது செய்த போலீஸார் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை எழும்பூர் 13 வது குற்றவியல் நடுவர் கோபிநாத் வீட்டில் போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். அங்கு அவர்மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்குக்கு கருணாஸின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடுவரும் கொலை முயற்சி வழக்கை ரத்துச் செய்ய உத்தரவிட்டதை அடுத்து போலீஸார் அதை திரும்ப பெற்றனர். இதையடுத்து கருணாஸ், செல்வநாயம் இருவரையும் வரும் அக்.5 வரை சிறையில் அடைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கருணாஸ் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போராட்டத்தில் இரண்டு சம்பவங்களின் போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதும் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. https://tamil.thehindu.com/tamilnadu/article25019902.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

தியாக தீபம் தீலிபனுக்கு இன்று நினைவேந்தல்!!

1 day 12 hours ago
திலீபனின் நினைவிடத்தில் குருதித்தானம் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று குருதித்தானம் வழங்கப்பட்டது. https://newuthayan.com/story/11/திலீபனின்-நினைவிடத்தில்-குருதித்தானம்.html திலீ­ப­னின் நினை­வேந்­த­லில்- முதன்­மைச் சுடரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னரே ஏற்­று­வர்!! நல்­லூ­ரில் அமைந்­துள்ள தியாகி திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஏற்­பாட்­டில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் நினை­வேந்­த­லில் முதன்­மைச் சுடரை மாவீ­ரர் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­களே ஏற்­று­வார்­கள். மாவீ­ரர் குடும்­பங்­க­ளுக்கே நினை­வேந்­த­லில் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டும். இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை உறுப்­பி­னர்­கள் நேற்­றுத் தீர்­மா­னம் எடுத்­துள்­ள­னர். தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தல் நிகழ்­வு­களை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை நடத்­து­வ­தாக அறி­வித்­துள்­ளது. இந்த நிலை­யில், நினை­வேந்­த­லுக்­கான ஏற்­பா­டு­கள் தொடர்­பில் ஆரா­யும் கலந்­து­ரை­யா­டல் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் நேற்று இடம்­பெற்­றது. 24 உறுப்­பி­னர்­கள் பங்­கேற்­ற­னர். நல்­லூர் கந்த சுவாமி ஆல­யத்­துக்கு வட கிழக்கு மூலை­யில் – தியாகி திலீ­பன் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி உயிர்­நீத்த இடத்­தில், காலை 10.48 மணிக்கு அக­வ­ணக்­கம் செலுத்­தப்­ப­டும். நல்­லூர் சிவன் ஆல­யத்­தின் பின் புற­மாக – பருத்­தித்­துறை வீதி­யில் தியாக தீபம் திலீ­பன் நினை­வுத் தூபி அமைந்­தி­ருந்த இடத்­தில் அஞ்­சலி நிகழ்வு நடத்­தப்­ப­டும். நினை­வேந்­த­லின் போது, பொதுச் சுட­ரேற்­றல், ஈகச் சுட­ரேற்­றல், தியாகி திலீ­ப­னின் திரு உரு­வப்­ப­டத்­துக்கு மலர் மாலை அணி­வித்­தல் போன்­ற­வற்றை மாவீ­ரர் குடும்­பத்­த­வர்­க­ளைக் கொண்டு செய்­வது என்­றும், அதன் பின்­னர் வருகை தரும் அனை­வ­ரும் எது­வித பேதங்­க­ளு­மின்றி அஞ்­சலி செய்­வ­தற்கு ஒழுங்­கு­ப­டுத்­து­வ­தெ­ன­வும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. நினை­வேந்­தல் நிகழ்வு இடம்­பெ­றும் இடத்­துக்­குத் தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­ப­தற்­கும், நிகழ்வு இடம்­பெ­றும் நேரத்­தில், காலை 10 மணி முதல் நண்­ப­கல் 12 மணி வரை பருத்­தித்­துறை வீதி­யில் நல்­லூர் சிவன் கோவி­லுக்­குப் பின்­பு­ற­மாக போக்­கு­வ­ரத்­துக்­காக அரு­கில் உள்ள மாற்­றுப் பாதையை பயன்­ப­டுத்­தும் ஒழுங்கை அறி­விப்­ப­தெ­ன­வும் மேயர் தெரி­வித்­துள்­ளார். நேற்­றைய கூட்­டத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ், ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 24 உறுப்­பி­னர்­கள் பங்­கு­பற்­றி­னர். https://newuthayan.com/story/11/திலீ­ப­னின்-நினை­வேந்­த­லில்-முதன்­மைச்-சுடரை-மாவீ­ரர்-குடும்­பத்­தி­னரே-ஏற்­று­வர்.html வல்வெட்டித்துறையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!! யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சந்தியில் தியாகி தீலிபனுக்கு அன்று அஞ்சலி செலுத்தப்பட்டமு. ஐனநாயக போராளிகள், தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், வல்வெட்டிதுறை தவிசாளர் கோ.கருணாணந்தராசா, நகரசபை உறுப்பினர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வைத் தொடர்ந்து குருதித்தானம் வழங்கப்பட்டது. https://newuthayan.com/story/11/வல்வெட்டித்துறையில்-தியாகி-திலீபனுக்கு-அஞ்சலி.html

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள்!

1 day 13 hours ago
உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன்!…. முருகபூபதி. September 22, 2018 in: கட்டுரைகள் கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை உள்மனயாத்திரையில் இலக்கியம் படைக்கும் உமா வரதராஜன் முருகபூபதி பெயர்களுக்கு முதல் எழுத்து அவசியப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் எனது மகன், தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்குப்பெயர் வைத்து, அதன் முதல் பெயராக எனது பெயரைச்சூட்டி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறான்! யாருக்கு கிடைக்கும் இந்தப்பாக்கியம்! நாய் மனிதர்களை விட நன்றியுள்ளது என்பதனால் எனக்கும் பெருமைதான்! ஆறறிவு படைத்த மனிதர்கள் தந்தையின் பெயரில் வரும் முதல் எழுத்தையும் பயன்படுத்துவோம். பெண்கள் திருமணமானதும் கணவரின் பெயரையும் இணைத்துக்கொள்வார்கள். எங்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஒருவர் தனது தாத்தாவினதும் தந்தையினதும் முதல் எழுத்துக்களை இணைத்துக்கொண்டு வலம்வருகிறார். முன்பின் தெரியாத வாசகர்கள் அந்தப்பெயருக்குரியவர் பெண் என்றுதான் நினைப்பார்கள். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியையும் பல வாசகர்கள் முன்னர் அப்படித்தான் நினைத்தனர்! இந்தப்பதிவில் நான் குறிப்பிடும் கிழக்கிலங்கையில் கல்முனையிலிருந்து நீண்டகாலமாக எழுதிவரும் உமா வரதராஜனின் தாத்தாவின் பெயர் உடையப்பா. தந்தையின் பெயர் மாணிக்கம். இவர்களின் முதல் எழுத்துக்களை இணைத்து தனது பெயருடன் உமா வரதராஜனாக எம்மத்தியில் அறிமுகமானவர். சிறுகதை, கவிதை, நாவல், விமர்சனம், பத்தி எழுத்து, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, இதழியல் முதலான துறைகளில் ஈடுபடுபவர். காலரதம், களம் ஆகிய இதழ்களையும் நடத்தியிருப்பவர். இவரது படைப்புகள் சிங்களம், ஆங்கிலம். ஜெர்மன் மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. நான் எழுதத்தொடங்கிய கால கட்டத்தில் இவரும் இலக்கியப்பிரவேசம் செய்தமையாலும் அக்காலப்பகுதியில் கொழும்பில் சிங்கர் தையல் இயந்திர விற்பனை நிறுவனத்தில் இவர் பணியாற்றிக்கொண்டிருந்தமையாலும் அவ்வப்போது எங்கள் ஊருக்கும் வந்து என்னை சந்தித்திருப்பவர். மூத்த எழுத்தாளர் இளங்கீரன் அவர்களின் புதல்வர் மீலாத் கீரனுடன் இணைந்து இவர் நடத்திய காலரதம் வெளிவந்த காலத்தில் இவரது வயது 17 எனச்சொன்னால் எவருக்கும் வியப்பாகத்தானிருக்கும். காலரதம் சில இதழ்கள்தான் வெளிவந்தன. அதில் இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் இளங்கீரன், கே. டானியல் ஆகியோருக்கும் மற்றும் பல எழுத்தாளர்களுக்கும் தமிழ்நாடு – புதுச்சேரி எழுத்தாளர்களுக்கும் களம் வழங்கியவர். அதன்பின்னர் வியூகம் என்ற பெயரிலும் ஒரு இதழ் வெளியிட்டதாக அறியக்கிடைக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்த பின்னர் இவருடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்தாலும், அவ்வப்போது இவரது கதைகளைப்படித்து வந்திருக்கின்றேன். தனது வாழ்வின் தரிசனங்களையும் அனுபவங்களையும் தனது கதைகளில் பிரதிபலிக்கும் உமா வரதராஜனின் உள்மனத்தில் அவை தொடர்ந்து யாத்திரை செய்கின்றமையையும் இவரது கதைகளிலும் அவை எதிரொலிப்பதிலிருந்து அவதானிக்கமுடியும். இவர் எழுதிய உள்மனயாத்திரை என்ற கதைத்தொகுப்பிற்கு வடக்கு கிழக்கு மாகாண சபையின் விருதும் கிடைத்துள்ளது. இலங்கை இதழ்களிலும் தமிழ்நாட்டில் கணையாழி, இந்தியா டுடே மற்றும் இணைய இதழ்களிலும் எழுதியிருப்பவர். இந்தியா டுடேயில் வெளியான இவரது சிறுகதை அரசனின் வருகை இலக்கிய உலகில் புகழ்பெற்றது. மிகச்சிறந்த நூறு தமிழ்ச்சிறுகதைகளில் இதனையும் தெரிவுசெய்துள்ளார் தமிழகத்தின் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். ஜெயமோகனும் இதே சிறுகதையை சிறப்பித்து பதிவுசெய்துள்ளார். படிம உத்தியில் எழுதப்பட்டிருக்கும் அரசனின் வருகை, ஈழத்தின் நீடித்த இனரீதியான ஆக்கிரமிப்பு அதிகார அரசியலை சித்திரிக்கிறது. அதனை ஈழ அரசியலுடன் மாத்திரமில்லாது உலக அரசியலுடனும் ஒப்பிடலாம். அதனால் அதற்கு சர்வதேச தரமும் கிட்டியதுடன், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பிரபலமானது. நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இவரை கல்முனையில் சந்தித்தேன். நண்பர் ( அமரர்) கவிஞர் சண்முகம் சிவலிங்கம் இவருடைய இல்லத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். இலங்கையில் 1970 காலப்பகுதியில் இவரை இளைஞனாக சந்தித்த பின்னர் 2005 இல் குடும்பஸ்தனாகப்பார்த்தேன். பெரும்பாலான எழுத்தாளர்களின் இளமைப்பராயத்து தொடக்க கால வாசிப்பு அனுபவம் அம்புலிமாமா கதைகளிலிருந்துதான் உருவாகியிருக்கும். அல்லது வீட்டிலிருக்கும் பெரியவர்களிடமிருந்து மகாபாரத – இராமாயணக்கதைகளை கேட்டு வளர்ந்திருப்பார்கள். உமா வரதராஜன் தனது பாடசாலைப்பருவத்திலேயே ஜெயகாந்தனின் கதைகளை விரும்பிப்படித்து தனது வாசிப்பு அனுபவத்தை தேர்ச்சியடையச்செய்தவர் என்பதை அறியமுடிந்திருக்கிறது. ஜெயகாந்தனின் முக்கிய மான படைப்பு சிலநேரங்களில் சில மனிதர்கள். அதற்கு முன்னர் ஆனந்தவிகடனில் ஜெயகாந்தன் அக்கினிப்பிரவேசம் என்ற தலைப்பில் எழுதிய சிறுகதையின் நாவல் வடிவ நீட்சியாகும். அக்கினிப்பிரவேசம் இலக்கியஉலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு இந்திய சாகித்திய அகடாமி விருதும் கிடைத்து பின்னர் திரைப்படமாகியது. அதில் கங்கா பாத்திரம் ஏற்று நடித்த நடிகை லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசியவிருதும் கிடைத்தது. அந்த நாவலின் அடுத்த பாகமாக கங்கை எங்கே போகிறாள் என்ற பெயரில் விரிந்தது. இவ்வாறு அக்கினிப்பிரவேசம் இரண்டு நாவல்களாக தொடர்ந்திருப்பது இலக்கிய வரவில் அதிசயமல்ல. ஆனால், தனது 17 வயதில் சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலை படித்துவிட்டு தனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருப்பவர் உமா வரதராஜன்தான் என்பதே இங்கு வியப்புத்தரும் செய்தி. அதனை அக்காலப்பகுதியில் தமிழகத்தில் வெளியான தீபம் இலக்கிய இதழ் பிரசுரித்து உமா வரதராஜனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி. உமா வரதராஜனின் “அரசனின் வருகை” புதுடில்லியிலிருந்து வெளிவரும் Little magazine என்ற இதழில் The advent of the king என்ற பெயரிலும், “எலியம்” என்ற கதை A Lankan Mosaic என்ற தொகுப்பில் Rattology என்ற பெயரிலும் “முன் பின் தெரியா நகரில்” என்ற கவிதை கனடாவிலிருந்து வெளிவந்த “In our translated world ” என்ற தொகுப்பில் ஆங்கிலத்தில் “Alien city ” என்ற பெயரிலும் வெளிவந்துள்ளன. இவருடைய ‘எலியம் ‘ சிறுகதை பாடசாலைகளில் தரம் 10-11 இற்கான ‘தமிழ் இலக்கிய நயம் ‘ பாடத் திட்டத்திலும் சேர்த்துக் கொள்ளப் பட்டிருப்பதாக அறியக்கிடைக்கிறது. .இவரது படைப்புமொழியும் கதை சொல்லும் பாங்கும் மிகுந்த கவனத்தைப்பெற்றவை. அதனால் உமா வரதராஜன் இலங்கையிலும் தமிழகத்திலும் புகலிட நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட பெயர். கிழக்கிலங்கையில் சில கலை இலக்கிய அமைப்புகளிலும் இணைந்திருப்பவர். http://akkinikkunchu.com/?p=63774

ஐரோப்பா - ஜெயமோகன்

1 day 13 hours ago
ஐரோப்பா 8- காலத்தின் விழிமணி இந்தியத் தொன்மங்களில் வரும் அருமணி சியமந்தகம். இது ஒரு வைரம் என்பதை வர்ணனைகளிலிருந்து உணரமுடிகிறது. சூரியன் தன் கழுத்திலணிந்திருந்த இந்த வைரம் சத்ராஜித் என்னும் யாதவனுக்குக் கிடைத்தது. அங்கிருந்து அது கிருஷ்ணனின் கைக்கு வந்தது. இந்த மணியைப்பற்றிய வரலாற்றுக்குறிப்பு ஏதுமில்லை. பாகவதத்திலும் பின்னர் விஷ்ணுபுராணத்திலும் இதைப்பற்றிய கதைகள் உள்ளன. இந்த வைரம் எது, எங்குள்ளது என்பதைப்பற்றி ஏராளமான கதைகள் உள்ளன. இத்தகைய ஒர் அரிய வைரம் அப்படி தொலைந்துபோய்விடாது, எங்காவது இருக்கும் என்று சிலர் வாதிடுகிறார்கள். கோகினூர் வைரம்தான் அது என்று கதை உள்ளது. இன்னொருநாட்டில் என்றால் பல நாவல்கள், சினிமாக்கள் வந்திருக்கும். உண்மையில் இதற்கிணையான பல வைரங்களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கிருஷ்ணதேவராயர் அணிந்திருந்த பல வைரங்களைப் பற்றி பர்ப்போஸா [Duarte Barbosa] பயஸ் [Dominigo Paes] போன்ற அக்காலப் பயணிகளின் குறிப்புகளில் காணமுடிகிறது. அவருடைய குதிரையின் நெற்றியில் ஒரு பெரிய வைரம் அணிவிக்கப்பட்டிருந்தது என்கிறார் பர்போஸா. அவ்வைரங்கள் எவை என பெரும்பாலும் அடையாளம் காணப்படவில்லை. பொதுவாக அவ்வைரங்களைப்பற்றிய அறிவார்ந்த உரையாடல்களே இந்தியாவில் இல்லை. அவை எங்கோ தேடப்படுகின்றன, கண்டடையப்படுகின்றன, பொது அறிவுத்தளத்துக்கு வருவதேயில்லை. கிருஷ்ணதேவராயரின் வழிவந்தவர் என சொல்லப்படும் ஜி.வைத்யராஜ் என்பவரிடம் மிக அரிய வைரங்கள் பல உள்ளன என்றும் அவற்றில் ஒருபகுதி சர்வதேச ஏலத்துக்கு வந்தது என்றும் ஒரு வதந்தி காற்றில் அடிக்கடி உலவிக்கொண்டிருக்கிறது. விஜயநகரத்தின் வைரங்களைப்பற்றி அவ்வாறான கதைகள் அடிக்கடி செவியில் விழுவதுண்டு. வைரங்களைத் தேடி விஜயநகர் சார்ந்த பகுதிகளில் கோட்டைகளையும் ஆலயங்களையும் உடைப்பவர்கள் அடிக்கடி கைதாகிறார்கள் இன்றைய ஆந்திர-கர்நாடக எல்லையில் ஹோஸ்பெட் பகுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருந்தது விஜயநகரம். 1336 ல் ஹரிஹரர் ,புக்கர் என்னும் இரு படைத்தலைவர்களால் உருவாக்கப்பட்ட நகரம். டெல்லி சுல்தான்களின் ஆட்சி வலுவிழந்தமையால் தெற்கே ஒரு பேரரசாக எழுந்தது. பல குலங்களால் ஆளப்பட்டாலும் பொதுவாக இவர்களை நாயக்கர்கள் என்பது வழக்கம். கிருஷ்ணதேவராயர் இவர்களில் மிகச்சிறந்த மன்னர். அவர் காலத்தில் தென்னகமே விஜயநகரின் ஆட்சியில் இருந்தது 1565ல் தலைக்கோட்டை என்ற இடத்தில் நிகழ்ந்தபோரில் அன்றிருந்த பாமினி சுல்தான்களால் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது. [பிஜப்பூர், பீரார் ,பீதார் ,அஹமதுநகர், கோல்கொண்டா] விஜயநகரம் அழிக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சி அங்கிருந்து தெற்கேவிலகி கூத்தி என்னுமிடத்திலும் பின்னர் அனந்தபூரிலும் நீடித்து 1646 வரை நீடித்தது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நாயக்கர் ஆட்சிகள் தஞ்சை, மதுரை, செஞ்சி, அனந்தபூர், துவாரசமுத்திரம், சித்ரதுர்க்கா ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட வெள்ளையர் ஆட்சி வருவதற்கு முன்புவரை நீடித்தன. ஹைதர் அலி, திப்பு சுல்தான், சந்தாசாகிப் ஆகியோரால் 1730ல் அவை வெல்லப்பட்டன. இன்று விஜயநகரம் ஹம்பி என அழைக்கப்படுகிறது. ஒரு மாபெரும் இடிபாட்டுக்குவியல் அது. நான் பலமுறை அங்கே சென்றிருக்கிறேன். 1982ல் முதல்முறையாகச் சென்றபோது உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாகி மயங்கிவிழுந்திருக்கிறேன். ஹம்பியில் விரூபாக்ஷர் ஆலயத்திற்கு முன்னால் அந்நகரின் மாபெரும் வைரவணிகர் வீதி உள்ளது. இந்த சந்தையைப்பற்றி பர்போசா எழுதியிருக்கிறார். ஒரு குறிப்பிட்ட எடைக்குமேல் உள்ள வைரங்களை அரசர்களுக்கு மட்டுமே விற்கவேண்டும் என்றும், பிறர் அதை வாங்கினால் தண்டனை என்றும் சட்டமிருந்தது என்கிறார். அரசகுடியினர் அரிய மணிகளை விற்பதில்லை. அவற்றை அவர்கள் அணிகலன்களாகவும் தெய்வங்களுக்குரிய காணிக்கைகளாகவும் கருதினர் ஹம்பி வைரச்சந்தை கோஹினூர் இந்தச் சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஏனென்றால் அநத அருமணி அன்றைய கோல்கொண்டாவில் கிடைத்திருக்கலாம் என்பது நிலவியலாளர் கூற்று. அது அப்போது விஜயநகரத்தின் ஆட்சியில் இருந்தது. ஆந்திராவில் ஹைதராபாத் அருகே, பழைய கோல்கொண்டா நாட்டுக்குள், கிருஷ்ணா நதி பலவகையான பாறைகளை அரித்துக்கொண்டு ஓடும் கொள்ளூர் வைரச்சுரங்கம் நெடுங்காலமாகவே வைரங்களுக்குப் புகழ்பெற்றது. அங்கேதான் இந்தியாவின் புகழ்பெற்ற பல வைரங்கள் கிடைத்தன. கோஹினூர் அங்கே கிடைத்திருக்கலாம். அது கிருஷ்ணதேவராயரிடம் இருந்தது என்றும் விஜயநகர் வீட்சிக்குப்பின் பிஜப்பூர் சுல்தானின் கைக்குச் சென்றது என்றும் அங்கிருந்து பீஜப்பூரை வென்ற முகலாய ஆட்சியாளரான அக்பரிடமும் பின்னர் ஷாஜகானிடமும் சென்றது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. அன்று ஆப்ரிக்கா பிற உலகத்தால் கண்டடையப்படவில்லை. ஆகவே தரமான வைரங்கள் இந்தியாவில் மட்டுமே கிடைத்தன. மிகத்தொல்காலத்தில் எரிமலைக்குழம்புக்குள் அகப்பட்டு அழுத்தமும் வெப்பமும் கொண்டு இறுகும் கரியே வைரம். தென்னிந்தியா தொன்மையான எரிமலைப்பாறைகளாலானது. அந்தப்பாறைகளை நதி ஒன்று ஆழமாக வெட்டிச்செல்கையில் வைரம் வெளியே வருகிறது. கிருஷ்ணா ஆவேசமான ஆறு. பெருவெள்ளம் வடிந்தபின் அதன் கூழாங்கற்பரப்பு விரிந்துபரந்து கிடக்கும். அதில் அரிதாக வைரங்கள் கிடைத்தன. வாழ்நாளெல்லாம் அந்த மணலை அரித்துக்கொண்டிருப்பவர்களில் மிகச்சிலருக்கு மட்டும் அவை அகப்பட்டன. பின்னர் ஆப்ரிக்காவில் நிலக்கரிப்படிவங்களில் வைரங்கள் கிடைக்கத் தொடங்கியபோது வைரம் மதிப்பிழந்தது. இன்று கருவிகளைக்கொண்டு இருக்குமிடத்தை அறிந்து ஆழத்தில் தோண்டி அவற்றை எடுக்கிறார்கள். அருமணிகளில் எவற்றுக்கும் இன்று விலைமதிப்பு பெரிதாக இல்லை. வைரத்துக்கு மட்டும் அதன் மதிப்பு செயற்கையாக உருவாக்கி நிலைநிறுத்தப்படுகிறது கிருஷ்ண தேவராயர் ஷா ஜகான் நாதிர்ஷா அகமது ஷா துரானி ரஞ்சித் சிங் விக்டோரியா கோஹிநூர் பற்றிய குறிப்பிடத்தக்க பதிவுகள் ஏதுமில்லை. ஆனால் முகலாய ஆட்சியாளரான பாபர் 187 காரட் எடையுள்ள ஒரு அரிய வைரத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கோகினூர் 186 காரட் எடையுள்ளதென்பதனால் அது கோகினூர்பற்றிய குறிப்பே என சில ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காபூர் 1307ல் தென்னகப்படையெடுப்பின்போது கைப்பற்றிக் கொண்டுவந்த செல்வங்களில் ஒன்று அது என்றும், பெரும்பாலும் வரங்கலை ஆண்ட காகதீயர்களின் கையிலிருந்து கொள்ளையிடப்பட்டிருக்கலாமென்றும் அவர்கள் கூறுகிறார்கள். 1526 ல் சுல்தான்களை பாபர் வென்றபோது அவருக்கு பரிசாக இந்த வைரம் அளிக்கப்பட்டது. காகதீயர்களின் ஆட்சியில்தான் அன்றைய கோல்கொண்டா இருந்தது. வரலாற்றுக்கு முன்பாக கோகினூர் தோன்றுவது ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில்தான். அலங்காரப்பித்து கொண்டிருந்த ஷாஜகான் அமைத்த மயிலாசனத்தில் அவருடைய தலைக்குமேல் பதிக்கப்பட்டிருந்தது கோகிநூர். கோகி நூர் 196 மெட்ரிக் காரட் எடைகொண்டது.[38.2 கிராம்] ஷாஜகான் அவருடைய மைந்தரான ஔரங்கசீபால் சிறையிலடைக்கப்பட்டார். வைரங்களை அணியவிரும்பாதவரான ஔரங்கசீப் கோகிநூரை கருவூலத்தில் வைத்தார். 1739 ல் பாரசீக ஆட்சியாளரான நாதிர் ஷா டெல்லிமேல் படையெடுத்துவந்தார். டெல்லியை ஆண்ட முகம்மது ஷாவைத் தோற்கடித்து கருவூலத்தைக் கைப்பற்றினார். கோகிநூர் அவர் கைக்குச் சென்றது. அவருடைய அவைப்புலவர் ஒருவர் இவ்வாறு சொன்னதாகச் சொல்லப்படுகிறது. “ஒரு கல்லை நான்கு திசைகளுக்கும் எறிந்து முழுவிசையுடன் வானிலும் எறிந்து நடுவேயுள்ள இடத்தை முழுமையாக தங்கத்தால் நிரப்பினாலும் இந்த வைரத்தின் மதிப்புக்கு நிகராகாது” அந்த அருமணிக்கு பாரசீக மொழியில் மலையின் ஒளி அல்லது ஒளிகொண்ட மலை என்ற பொருளில் கோகி நூர் என பெயரிட்டதும் நாதிர்ஷாவின் அவையில்தான் நாதிர்ஷாவின் மகனிடமிருந்து ஆப்கன் மன்னர் அகமது ஷா துரானியிடம் இந்த வைரம் சென்றது. அவருடைய மகன் ஷூஜா ஷா துரானி ரஷ்யாவால் தாக்கப்பட்டபோது பஞ்சாபுக்கு தப்பி ஓடிவந்தார். அவருக்கு அடைக்கலம் அளித்த சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்குக்கு நன்றிக்கடனாக அந்த வைரத்தை அளிக்கவேண்டியிருந்தது. மகாராஜா ரஞ்சித் சிங் பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு கோகினூர் அளிக்கப்படவேண்டும் என இறுதிச்சாத்து எழுதியிருந்தார். ஆனால் 1849 ல் சீக்கிய அரசை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி தோற்கடித்து தன் நிலத்துடன் சேர்த்துக்கொண்டது. அவர்கள் அந்த வைரத்தையும் சீக்கிய அரசின் கருவூலத்தையும் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டார்கள். விக்டோரியா மகாராணிக்கு சீக்கிய அரசர் அதை அன்பளிப்பாக அளிப்பதாக போருக்குப்பின் எழுதப்பட்ட லாகூர் உடன்படிக்கையில் எழுதி கைச்சாத்து பெறப்பட்டது. 1850ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவரால் பக்கிங்ஹாம் அரண்மனையில் நிகழ்ந்த விழாவில் கோகினூர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அவ்வாறு கோகினூர் பிரிட்டிஷ் அரசின் உடைமையாக ஆகியது. கோகினூரை துரதிருஷ்டங்களின் கல் என்று சொல்வதுண்டு. அதை ஒருவர் அணிந்தால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் அவரோ அவர் வாரிசுகளோ பெருந்துயரை அல்லது அழிவைச் சந்திப்பார்.அதை வைத்திருந்த காகதீயர்கள் அல்லது நாயக்கர்களின் அரசு முற்றாக அழிந்தது. ஷாஜகான் மகனால் சிறையிடப்பட்டு நோயாளியாகி இறந்தார். அகமதுஷா அப்தாலி படையெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். துரானி நாடிழந்து ஓடினார். சீக்கியர்கள் அரசிழந்தனர். அதைக் கைப்பற்றிய கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆறாண்டுகளில் அதிகாரமிழந்தது. அந்தக் கல்லை லண்டனுக்கு கொண்டுபோன கப்பல் காலராவாலும் விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டது. அந்நம்பிக்கையால்தான் பிரிட்டிஷ் அரசியின் மணிமுடியில் சூட்டப்பட்ட அக்கல் அங்கிருந்து அருங்காட்சியகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சென்ற 2011ல் திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்திற்குள் இருக்கும் நிலவறைகளில் உள்ள பெருஞ்செல்வம் நீதிமன்ற ஆணைப்படி திறந்து கணக்கிடப்பட்டது. சமீபகாலத்தில் பெரிய வியப்பலைகளை உருவாக்கியது இந்நிகழ்வு. இச்செல்வம் சேரன் செங்குட்டுவன் காலம் முதலே இருந்துவரும் கருவூலம் என்றும் அதை 1731ல் இன்றைய ஆலயம் கட்டப்படும்போதே உருவாக்கப்பட்ட ஆலயத்தின் அடித்தள அறைகளில் பாதுகாத்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 1789ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர்மேல் படையெடுத்துவந்தபோது மேலும் செல்வம் அவ்வறைகளில் ஒளித்துவைக்கப்பட்டது. இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசகுடி மட்டுமே அறிந்த ரகசியமாக இருந்தது அச்செல்வம். ஆகவே பாதுகாப்பாகவும் இருந்தது, பிரிட்டிஷார் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. கப்பத்துக்காக திருவிதாங்கூர் பிரிட்டிஷாரால் கசக்கிப்பிழியப்பட்டது. ஆனால் அரசகுடியினர் அச்செல்வத்தைப்பற்றி மூச்சுவிடவில்லை. பத்மநாப சாமியின் செல்வம் பற்றிய செய்திகள் வெளியானபோது இந்தியா முழுக்க இருக்கும் ஆலயங்களைப்பற்றிய ஆர்வம் கிளம்பியது. ஸ்ரீரங்கம் , திருச்செந்தூர் உள்ளிட்ட ஆலயங்களில் அதேபோல அறைகள் இருந்தன. எதிலும் எந்தச் செல்வமும் இல்லை. அவை முழுக்கவே தொடர்ச்சியான படையெடுப்புகளாலும் பிரிட்டிஷாரின் திட்டமிடப்பட்ட முறையான சுரண்டலாலும் முழுமையாகவே கவர்ந்துசெல்லப்பட்டன. பத்மநாபசாமியின் கருவூலம் இன்று உலக அளவில் ஓரிடத்தில் இருக்கும் பெருஞ்செல்வங்களில் ஒன்று.ஏராளமான வைரங்கள், அருங்கலைப்பொருட்கள். அந்தக் கணக்கில் பார்த்தால் இந்தியா முழுக்க இருந்து கொள்ளைபோன செல்வத்தின் அளவு என்ன? 2014ல் நியூயார்க் சென்றிருந்தபோது அங்கு அருங்காட்சியகத்தில் முகலாயர்களின் நகைகள், வைரங்கள் ஆகியவற்றாலான தனிக்கண்காட்சி ஒன்றைக் காண வாய்ப்பு கிடைத்தது. [Treasures from India: Jewels from the Al-Thani Collection]மறைந்த கத்தார் இளவரசர் ஷேக் ஹமீது பின் அப்துல்லா அல்தானி[Sheikh Hamad bin Abdullah Al-Thani] யின் தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள நகைகள் அவை. அவர் உலகமெங்குமிருந்து ஏலத்தில் வாங்கிய நகைகள். ‘சட்டபூர்வமான’ சிக்கல்களால் அக்கண்காட்சி இந்தியா தவிர பிறநாடுகளில் மட்டுமே நடந்துவருவதாக அறிவிப்பு தெரிவித்தது . அருண்மொழி ஐந்தே நிமிடத்தில் “நான் வெளியே போயிடறேன். எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது… ஏன்னே தெரியலை” என்றாள். நான் சுற்றிச்சுற்றி வந்து அந்த வைரங்களையும் அருமணிகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பிரமைபிடித்ததுபோலிருந்தது. உறைந்த எரிதழல்கள், கல்மலர்கள், வெறித்த விழிகள், இறுகிய நீர்த்துளிகள், சொட்டுக்குருதிகள்… இந்த அருமணிகளின் பொருள்தான் என்ன? ஏன் இவற்றை மானுடர் இத்தனை ஆர்வத்துடன் சேர்த்தனர்? இவற்றை செல்வமாகக் கருதினர்? இவற்றுக்காக பேரரசுகள் போரிட்டிருக்கின்றன. ராணுவங்கள் செத்து அழிந்திருக்கின்றன. அழகா? எளிய கண்ணாடிக்கல்லுக்கு இதே அழகு உண்டு. அரிதென்பதனாலா? ஆனால் அரிதான எத்தனையோ இப்புவியிலுள்ளன. அழகானதும் அரிதானதுமான ஒன்று நிரந்தரமானதாக இருப்பதன் விந்தையால்தான் என தோன்றுகிறது. அதிகாரத்தின் அடையாளமாக அவை மாறின. பின் உலகை ஆளலாயின. எண்ண எண்ண விந்தைதான். உலகமே கூழாங்கற்களாலானது. அவற்றில் சில கூழாங்கற்கள் உலகை ஆள்கின்றன! சிறில் அலெக்ஸ் குடும்பத்துடன் கோகினூர் வைக்கப்பட்டிருக்கும் லண்டன் கோபுரத்திற்கு [The Tower of London] சென்றோம். லண்டன் நகருக்கு நடுவே தேம்ஸ் நதியின் கரையில் இந்த தொன்மையான கோபுரக்கோட்டை [castle] அமைந்துள்ளது. கிபி 1066ல் நார்மன் படையெடுப்பாளர்களால் அமைக்கப்பட்டது இக்கோட்டை. இதிலுள்ள வெள்ளைக்கோபுரம் வில்லியம் மன்னரால் 1078ல் கட்டப்பட்டது. இங்கிலாந்தின் மீதான படையெடுப்பாளர்களின் அடையாளமாக அன்றைய பிரிட்டிஷ் மக்களால் இது கருதப்பட்டது. நெடுங்காலம் நார்மன் மன்னர்களின் அரண்மனையாக இது இருந்தது. பின்னர் சிலகாலம் சிறையாகச் செயல்பட்டது. கடைசியாக 1950களில் குற்றக்கும்பலின் தலைவர்களான கிரே சகோதரர்கள் என்னும் இரட்டையர் இங்கே சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். அரசர்களான முதலாம் ரிச்சர்ட், மூன்றாம் ஹென்றி மற்றும் முதலாம் எட்வர்ட் காலகட்டங்களில் ,பன்னிரண்டாம் நூற்றாண்டுமுதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை, இந்த கோபுரக்கோட்டை விரிவாக்கிக் கட்டப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டு கட்டிடம் அமைப்பே இன்றுள்ளது. தொன்மையான கோட்டைகளில் உருவாகும் மெல்லிய படபடப்பை இங்கும் உணர முடிந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தி இந்திரா காந்தியின் இல்லத்துக்கு புபுல் ஜெயகருடன் சென்றபோது மயக்கம் வருமளவுக்கு பதற்றத்தை உணர்ந்தார் என்றும், அது அங்கே அவர் உணர்ந்த வன்முறையால்தான் என்றும் வாசித்திருக்கிறேன். எல்லா அதிகார மையங்களிலும் வன்முறை நுண்வடிவில் உறைந்திருக்கிறது. பலசமயம் உச்சகட்ட வன்முறை என்பது மென்மையானதாக, அமைதியானதாக மாற்றப்பட்டிருக்கும். சமயங்களில் அது உயர்கலையின் வடிவிலும் இருக்கும். லண்டன் கோபுரம் நெடுங்காலம் பலவகையான போர்களின், அரண்மனைச் சதிகளின் களமாக திகழ்ந்தது. அது அதிகாரச்சின்னம் என்பதனாலேயே அதைக் கைப்பற்ற தொடர்ச்சியான முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அத்துடன் அது ஒரு சிறை. சித்திரவதைகளும் மரணதண்டனைகளும் நிகழ்ந்த இடம். ‘டவருக்கு அனுப்புதல்’ என்ற சொல்லாட்சியே பிரிட்டிஷ் வரலாற்றில் இருந்திருக்கிறது. நான் பார்த்த முதல் ஐரோப்பியக் கோபுரக்கோட்டை இதுதான். இதற்குமுன்பு அமெரிக்காவில் சிகாகோ அருகே டியர்போர்ன் [ Fort Dearborn ] கோட்டையை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஐரோப்பியக் கோபுரக்கோட்டைகளின் பாணியில் கட்டப்பட்ட பிற்கால அரண்மனைகள் சிலவற்றை ஐரோப்பாவில் பார்த்ததுண்டு. லண்டன் டவர் முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது. இப்பகுதிக் கட்டிடங்கள் நதிகளில் உருண்டுவந்தமையால் உருட்சி பெற்றுள்ள சிறியகற்களை சேறுடன் கலந்து அடுக்கி கட்டப்பட்டவை. அடித்தளங்களும் பெருஞ்சுவர்களும் சேற்றுப்பாறை அல்லது சுண்ணப்பாறைகளை வெட்டி அடுக்கி எழுப்பப் பட்டவை. உருளைக்கற்கள் சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில்லை. ஏனென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் உருண்டு ஒவ்வொரு தனியாளுமையை அடைந்த கற்கள், அவற்றை ராணுவமாக்க முடியாது. ஆகவே சுவர்கள் பெரும்பாலும் மிகத்தடிமனானவை. இத்தகைய கற்களுக்கு வளைவுகள் மிக உகந்தவை. ஒன்றை ஒன்று கீழே தள்ள முயன்று அவ்விசையாலேயே அவை நிரந்தரமாக நின்றிருக்கும். இதுவே ஐரோப்பிய கோபுரக்கோட்டைகளின் அழகியல். தடித்த தூண்கள் எழுந்து வளைந்து கிளைபோல விரிந்து கோத்துக்கொண்டு வளைவாக ஆகி கூரையமைத்த கூடங்கள், இடைநாழிகள். குளிர்ந்த காற்று அச்சுறுத்தும் நினைவுபோலத் தோன்றியது. அரசர்களின் ஆடைகள், அவர்களின் படைக்கலங்கள். அங்கே வாழ்ந்த மன்னர்களை மானுடர் என்று நம்புவது மிகவும் கடினம். விந்தையான ஏதோ உயிர்வகை, தேவர்களும் அரக்கர்களும் கலந்த ஒன்று. ஆனால் அரசர்களும் அரசிகளும் சிறுகுழந்தைகளாக இருந்தபோது விளையாடிய பொருட்கள் அங்கே காட்சிக்கு உள்ளது. அவர்கள் விளையாடிய சிறு பொம்மை வீடு. அது அவர்களை மானுடர் என்று காட்டியது. அவர்கள் மானுடர்களாக இருப்பது சிற்றிளமையில் மட்டும்தான். முதலாம் ரிச்சர்ட் மேலே வெள்ளைக்கோபுரத்தில் ஏறும்படிகள் குறுகலானவை. அங்கே பல அறைகள் சிறைகளாகவும் தண்டனைக் கொட்டடிகளாகவும் பயன்பட்டவை. இரும்பு வளையங்கள், தளைகள். அதற்குள் எப்போதைக்குமாக வந்துசேரும் மனிதர்களின் உள்ளம் எப்படி இருக்கும்? எதிர்காலம் என்பது முற்றிலும் இல்லாமலாவதே மிகப்பெரிய வதை. மறு எல்லை இல்லாத இருண்ட சுரங்கங்களில் சென்றுகொண்டே இருப்பதுபோல. அதைவிட சகமனிதன் இரக்கம் அற்றவன் என உணர்வது, மானுடம் மீதான நம்பிக்கையை முற்றாக இழப்பது. அந்தக்கோடையிலேயே அந்த அறைகள் ஈரமாக இருட்டாக குளிராக இருந்தன. லண்டனின் புகழ்பெற்ற குளிர்காலத்தில் அவர்கள் உருவகம் செய்து வரைந்து வைத்திருக்கும் நரகங்களைப்போலவே இருந்திருக்கும் சுற்றிலும் அகழி. ஆழத்தில் லண்டனின் காட்சி. அப்போது கோடையானதனால் உற்சாகமான சூழல் நிலவியது. ஜப்பானிய, சீனப்பயணிகள் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் அங்கிருக்கும் எந்தக்குறிப்பையும் வாசிப்பதை நாம் பார்க்கமுடியாது. சற்று மண்ணுக்குக் கீழே செல்லும் அடித்தளத்தில் ஒரு ஒயின்கடையும் நினைவுப்பொருட்கள் விற்கும் கடையும் இருந்தன. ஒரு கோப்பை வரலாற்றை விழுங்கி ஒரு துண்டு வரலாற்றை வாங்கிக்கொண்டு கிளம்பவேண்டியதுதான். வரலாற்றுத் தலங்களுக்கு மேல் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக பேசியபடிச் சுற்றிவருவதைப் பார்க்கையில் வெடிமருந்துக்குமேல் ஈ ஏதுமறியாமல் அமர்ந்து எழுந்து அமர்வதுபோல ஒரு கற்பனை எழுந்தது. வெளியே கோட்டைவாயிலில் ஒரு இசைக்குழு அக்காலத்தைய ஆடைகளை அணிந்து இசைத்துக்கொண்டிருந்தது. எதிர்பாராமல் ஒரு கூச்சல். ஒரு பெண் வாளை உருவியபடி ஓடிவந்தாள். ஒருவர் வாளை உருவியபடி எதிர்த்துச் சென்றார். இருவருமே பழங்கால ஆடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு திறந்தவெளி நாடகக் காட்சி. அக்காலத்தைய வரலாற்று நிகழ்வொன்றை நடிக்கிறார்கள் எனத் தெரிந்தது. அந்த நாகரீகச் சுற்றுலாப்பயணிகளின் திரளில் வந்துசேர்ந்த அந்தக் கடந்தகாலம் சிலகணங்களுக்குப்பின் கேலிக்கூத்தாக மாறியது. சின்னக்குழந்தைகள் சில பயந்து அலறின. லண்டன் டவர் அருங்காட்சியகத்தில்தான் கோகினூர் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அரையிருள் பரவிய காட்சிக்கூடத்தில் பிரிட்டிஷ் அரசர்கள், அரசியரின் மணிமுடிகளும் அணிகளும் வைக்கப்பட்டுள்ளன. மணிமுடிகளிலிருந்து நகைகள் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தால் அவற்றின் மாதிரிவடிவங்கள் செய்துவைக்கப்பட்டிருந்தன. அந்த இருளில் வைரங்கள் நம்மை ஒளிரும் விழிகள் போலச் சூழ்ந்துகொள்கின்றன. எவை எங்கிருந்தவை என்றெல்லாம் அறியமுடியவில்லை. கோகினூர் பற்றி மட்டும்தான் என் சிந்தை குவிந்திருந்தது. எலிசபெத் ராணியின் மணிமுடியில் 1937 வரை அது இருந்திருக்கிறது. கோகினூர் கண்ணாடித்துண்டுபோலத்தான் இருந்தது. உண்மையில் அது 1852ல் அதை மக்களுக்குக் காட்சிக்கு வைத்தபோது அது எவரையும் பெரிதாகக் கவரவில்லை. ஆகவே அதை மறுவெட்டு செய்து இன்றைய அமைப்புக்குக் கொண்டுவந்தார்கள். ஒரு கண்ணாடிப்பேழைக்குள் தெரிந்த கோகினூர் மிகச்சிறிய விளக்கால் கச்சிதமாக ஒளியூட்டப்பட்டிருந்தது. அருகே சென்ற ஒருவரின் சிவப்புநிற ஆடை அதில் பல்லாயிரம் மடிப்புகளாக மாறி உள்ளே சென்று சுழன்றது. சூழ்ந்திருக்கும் அத்தனை காட்சிகளையும் தன் பட்டைகளால் அள்ளி பலகோடி உள்ளடுக்குகளுக்குள் செலுத்தியபடி இருந்தது. நாம் அங்கிருந்து விலகினாலும் உள்ளே எங்கோ அவையனைத்தும் இருக்கும், துளியாக, அணுவாக. வைரம் வெறும் படிகம் அல்ல, அது நாம் அறியமுடியாத ஒரு நிகழ்வு. ஆனால் அங்கிருந்தது கோகினூர்தானா? அது கோகினூரின் கண்ணாடியாலான தத்ரூப நகல் என்றார் நண்பர். இருக்கலாம், வரலாற்றை நாம் எங்கே பார்க்கிறோம்? நாம் அறிவதெல்லாம் புனைவைத்தானே?வெளியே வந்து அமர்ந்தபோது வாசித்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. கோகினூரை பஞ்சாபிலிருந்து விக்டோரியாவின் அவைக்குக் கொண்டுவரும் பொறுப்பில் இருந்தவர் ராணுவ அதிகாரியும் பஞ்சாப்பகுதி ஆளுநருமான சர் ஹென்றி லாரன்ஸ். அவர் அதை தன் கோட்டுப்பையில் வைத்திருந்தார், பத்திரமாக இருக்கட்டுமே என்று. அல்லது முடிந்தவரை கையிலேயே வைத்திருப்போமே என்று. அவர் தன் கோட்டை கவனக்குறைவாக வைரத்துடன் சலவைக்குப்போட்டுவிட்டார். அதன்பின் உயிர்பதைக்க அதைத்தேடி அலைய சலவைக்காரர் அது என்ன என்று தெரியாமல் திரும்பக்கொண்டுவந்து கொடுத்துவிட்டார். எனக்கு அத்தனை ஆட்சியாளர்களைவிடவும் ஹென்றி லாரன்ஸ்தான் அணுக்கமானவராகத் தோன்றினார். முயன்றிருந்தால் அவர் நல்ல நாவல்களை எழுதியிருக்கக் கூடும். https://www.jeyamohan.in/112643#.W6cwjxbTVR4

குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்

1 day 14 hours ago
குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉலகில் பிறக்கும் குழந்தைகளில் 18% இந்தியாவில் பிறக்கின்றன. (கோப்புப்படம்) இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations Inter-agency Group for Child Mortality Estimation) வெளியிட்டுள்ள அறிக்கை. உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப் ) மற்றும் ஐ.நா மக்கள் தொகை பிரிவு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கிய இந்தக் குழுவின் அறிக்கையில் குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைக்காததுதான், உலகெங்கும் நிகழும் இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. 2016இல் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 8,67,000. கடைசி ஐந்து ஆண்டுகளிலேயே 2017இல்தான் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனினும் அந்த அறிக்கையின் தரவுகளைப் பகுத்தாய்ந்தால், (ஓர் ஆண்டுக்கு உள்ள 3,15,36,000 வினாடிகளை 8,02,000ஆல் வகுத்தால்) 2017இல் சுமார் 39.3 வினாடிக்கு ஒருமுறை ஒரு வயதுக்கும் குறைவான ஓர் இந்தியக் குழந்தை உயிரிழந்துள்ளது தெரிய வருகிறது. உலகெங்கும் பிறக்கும் குழந்தைகளில் 18% குழந்தைகள் பிறக்கும் இந்தியாதான், உலகிலேயே ஒரு வயதை அடையும் முன்பு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடும் ஆகும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகில் பிறந்து 28 நாட்களுக்குள் இறக்கும் குழந்தைகளில் சுமார் கால் பங்கு இந்தியக் குழந்தைகள்தான். அதாவது உலகில் பிறக்கும் குழந்தைகளில் 18 சதவீதக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள். அதே நேரம் உலகில், பிறந்து 28 நாள்களில் இறக்கும் குழந்தைகளில் இந்தியக் குழந்தைகள் 24 சதவீதம். "இந்தியக் குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு, தடுப்பூசி எல்லா குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்கிற விவரம், பெண்கள் கல்வி விகிதம், மருத்துவ வசதிகள் எந்த அளவுக்கு எல்லோருக்கும் கிடைக்கிறது என்ற விவரம் ஆகியவற்றை குழந்தைகள் இறப்பு விகிதத்துடன் பொருத்தி பார்க்க வேண்டும்," என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரனாத். 1990-ல் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டத்தில் இறக்கும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை 1.26 கோடியாக இருந்தது. இது 2017-ல் 54 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் உலகளவில் 50% பங்கு வகிக்கும் ஆறு நாடுகளில் (இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, சீனா) இந்தியா முதன்மையான நாடாக உள்ளது. ஐந்து வயதுக்கு முன்னரே இறக்கும் குழந்தைகளில் 32% குழந்தைகள் இந்தியாவையும், நைஜீரியாவையும் சேர்ந்தவை. அதாவது இரு நாடுகளில் நடக்கும் இத்தகைய மரணங்கள் உலக அளவில் நடப்பதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு. "1990களுக்கு பிறகு இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதற்குக் காரணம் அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் உண்டாகியுள்ள முன்னேற்றங்கள். இதே காலகட்டத்தில் சீனா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் இந்தியாவைவிட மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. பொது சுகாதாரத்துக்கு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 - 6% ஒதுக்கப்படவேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், இந்தியா அவ்வளவு தொகை ஒதுக்குவதில்லை," என்கிறார் ரவீந்திரனாத். படத்தின் காப்புரிமைTORTOON/ISTOCK உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள உலக சுகாதார செலவீனங்களுக்கான தரவுகளின்படி அதிக வருமானம் உள்ள நாடுகள் 5.2%, உயர் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் 3.8%, கீழ் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் 2.5% மற்றும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் 1.4% எனும் விகிதத்தில் பொது சுகாதாரத்துக்காக செலவிடுகின்றன. ஆனால், இந்தியாவின் விகிதம் இவை அனைத்தையும்விடக் குறைவு. மத்திய புள்ளிவிவர அலுவலகத்தின் 2018ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி 2017-18ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.28% பொது சுகாதாரத்துக்காக செலவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% நிதியை பொது சுகாதாரத்துக்கு செலவிட வேண்டும் என்று 2017இல் மத்திய அரசு வெளியிட்ட தேசிய சுகாதாரக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2009-10இல் 1.12% ஆக இருந்த பொது சுகாதாரத்துக்கான செலவீனம், ஒன்பது நிதி ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதுதான் 1.28% ஆகியுள்ளது. இது 2025ல் அடையவேண்டிய இலக்கில் ஏறக்குறைய பாதி அளவுதான். https://www.bbc.com/tamil/india-45570174

டிஜிட்டல் மேடை : அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும்

1 day 14 hours ago
டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன. திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபடி அதைப் புசிக்கக் காத்திருக்கும் ரசிகனுக்கு இதுவே வரப்பிரசாதமாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் தனது பிரத்யேக சேவையை தொடங்கியபோது, இத்தனை அதிர்வுகள் இல்லை. இன்று ‘நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு அப்பால் இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடந்தவர்களைக் கிண்டலடித்த இளம் தலைமுறை, இன்று புதிய வெப்சீரிஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலாகிக்கிறது. மாறும் இந்த போக்குகள், புதிய வரவுகள் உள்ளிட்டவற்றை விவாதித்தபடி டிஜிட்டல் மேடையில் நாமும் நடைபோடலாம். திரைப்படங்களில் வரும் பேய்கள் வழக்கமாகப் பயமுறுத்தவோ திகிலூட்டவோ செய்யும். சிரிப்பூட்டும் பேய்கூட வந்திருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் இறுதியில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ வெளியிட்ட‘கௌல்’(Ghoul) தொடர் வெறுமனே பயமுறுத்துவதற்கு அப்பால் நடைமுறை அரசியல் அபத்தங்கள் பலவற்றையும் முகத்தில் அறையச் செய்கிறது. தேசத்தில் பாசிச ஆட்சி தலையெடுக்கும் காலக் கட்டத்தில் கதை நகர்கிறது. கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டு தேசபக்தியே பிரதானமாகப் புகட்டப்படுகின்றன. எதிர்ப்பவர்களும் சிறுபான்மையினரும் ராணுவ அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். இவர்களை ‘நல்வழிப்படுத்துவதற்கும்’ விசாரிப்பதற்கும் என ஆங்காங்கே அபாயகரமான விசாரணைக் கூடங்கள் செயல்படுகின்றன. அப்படியொரு இடத்துக்குத் தனது பயிற்சி முடியும் முன்னரே இளம் விசாரணை அதிகாரியாக நீதா ரஹீம் (ராதிகா ஆப்தே) அமர்த்தப்படுகிறார். தேசநலன் விரும்பியான இவர், மாணவர்களின் எதிர்காலத்துக்காகப் போராடும் பேராசிரியரான தன் தந்தையையே அரசிடம் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு அரச விசுவாசியாக இருக்கிறார். நீதா பணியேற்கும் இந்த விசாரணைக் கூடத்துக்கு முக்கியத் தீவிரவாதி ஒருவன் கொண்டுவரப்படுவதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது. பார்த்துச் சலித்த வழக்கமான பேய்களுக்கு மாற்றாகப் புதிய பயமுறுத்தலை இந்தத் தொடருக்காக இறக்குமதி செய்திருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்க காலத்துக்கு முன்பாக அரேபிய பாலைவனத்தில் அலையும் தீய ஆவியாக உருவகிக்கப்படும் கௌலும் மனித மனங்களில் மருகும் குற்றஉணர்வைப் பிடித்துக்கொண்டு அவை நடத்தும் கோரத்தாண்டவமுமே தொடரின் திகில் பக்கங்கள். ‘ஸோம்பி’ வகையறாவிலிருந்து கௌலை வித்தியாசப்படுத்துவதும், அதன் பின்னணிக்கு நம்பகத்தன்மை கூட்டுவதுமே கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. சராசரியாக, தலா 45 நிமிடங்களுடன் மூன்று அத்தியாயங்கள் அடங்கியதாகத் தொடரின் முதல் சீஸன் அமைந்திருக்கிறது. மும்பை வாழ் இங்கிலாந்துக் குறும்பட இயக்குநரான பாட்ரிக் கிரஹாம் தொடரை எழுதி இயக்கி உள்ளார். அமெரிக்க சி.ஐ.ஏ. வதை முகாம் ஆவணங்களின் அடிப்படையிலான கதையில், அரேபியப் பேயைக் கோத்து இந்தத் தொடரை உருவாக்கியதாக இவர் தெரிவித்துள்ளார். மாற்று முயற்சிகளை அரவணைக்கும் இயக்குநர் அனுராக் கஷ்யப் இத்தொடரின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவர். ராதிகா ஆப்தே பின்னணி தவிர்த்து பெரும்பாலான பாத்திரங்கள் அலட்சியமாகக் கையாளப்படுவதும் அவ்வப்போது இடறும் நாடகபாணி காட்சிகளும் இந்தத் தொடரின் சில நெருடல்கள். அதேநேரம், அடிப்படை உரிமைகளை நசுக்கிவிட்டு அதீத தேசபக்தியின் பெயரிலான அரச பயங்கரவாதத்தின் அபத்தங்களை தோலுரிக்கிறார்கள். இந்தித் தொடரான கௌல், ஆங்கிலத்துக்கு அப்பால் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளிலும் பார்க்கக் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு பல இடங்களில் படுத்துவதால், சப்-டைட்டில் உதவியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியிலே பார்க்கலாம். முதன் சீஸன் முடிவில் ராதிகா ஆப்தேவின் புதிய அவதாரத்தைக் கோடிட்டு காட்டியிருப்பது அடுத்த சீஸன் மற்றும் அத்தியாயங்களுக்கான எதிர்ப்பார்ப்புகளை விதைத்திருக்கிறது. அடுத்த வாரம் இந்திய சந்தையில் நெட்ஃபிளிக்ஸின் பிரதான போட்டியாளரான ‘அமேசான் பிரைம் வீடியோ’ தளத்தில் தொடங்கப்பட்டிருக்கும் ‘ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ தொடரை அடுத்த வாரம் பார்க்க https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24996671.ece

டிஜிட்டல் மேடை : அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும்

1 day 14 hours ago
டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும்

 

 
digitaljpg

டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன.

திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபடி அதைப் புசிக்கக் காத்திருக்கும் ரசிகனுக்கு இதுவே வரப்பிரசாதமாகி இருக்கிறது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் தனது பிரத்யேக சேவையை தொடங்கியபோது, இத்தனை அதிர்வுகள் இல்லை. இன்று ‘நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு அப்பால் இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடந்தவர்களைக் கிண்டலடித்த இளம் தலைமுறை, இன்று புதிய வெப்சீரிஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலாகிக்கிறது. மாறும் இந்த போக்குகள், புதிய வரவுகள் உள்ளிட்டவற்றை விவாதித்தபடி டிஜிட்டல் மேடையில்  நாமும் நடைபோடலாம்.

திரைப்படங்களில் வரும் பேய்கள் வழக்கமாகப் பயமுறுத்தவோ திகிலூட்டவோ செய்யும். சிரிப்பூட்டும் பேய்கூட வந்திருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் இறுதியில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ வெளியிட்ட‘கௌல்’(Ghoul) தொடர் வெறுமனே பயமுறுத்துவதற்கு அப்பால் நடைமுறை அரசியல் அபத்தங்கள் பலவற்றையும் முகத்தில் அறையச் செய்கிறது.

தேசத்தில் பாசிச ஆட்சி தலையெடுக்கும் காலக் கட்டத்தில் கதை நகர்கிறது. கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டு தேசபக்தியே பிரதானமாகப் புகட்டப்படுகின்றன. எதிர்ப்பவர்களும் சிறுபான்மையினரும் ராணுவ அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். இவர்களை ‘நல்வழிப்படுத்துவதற்கும்’ விசாரிப்பதற்கும் என ஆங்காங்கே அபாயகரமான விசாரணைக் கூடங்கள் செயல்படுகின்றன.

அப்படியொரு இடத்துக்குத் தனது பயிற்சி முடியும் முன்னரே இளம் விசாரணை அதிகாரியாக நீதா ரஹீம் (ராதிகா ஆப்தே) அமர்த்தப்படுகிறார். தேசநலன் விரும்பியான இவர், மாணவர்களின் எதிர்காலத்துக்காகப் போராடும் பேராசிரியரான தன் தந்தையையே அரசிடம் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு அரச விசுவாசியாக இருக்கிறார். நீதா பணியேற்கும் இந்த விசாரணைக் கூடத்துக்கு முக்கியத் தீவிரவாதி ஒருவன் கொண்டுவரப்படுவதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது.

பார்த்துச் சலித்த வழக்கமான பேய்களுக்கு மாற்றாகப் புதிய பயமுறுத்தலை இந்தத் தொடருக்காக இறக்குமதி செய்திருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்க காலத்துக்கு முன்பாக அரேபிய பாலைவனத்தில் அலையும் தீய ஆவியாக உருவகிக்கப்படும் கௌலும் மனித மனங்களில் மருகும் குற்றஉணர்வைப் பிடித்துக்கொண்டு அவை நடத்தும் கோரத்தாண்டவமுமே தொடரின் திகில் பக்கங்கள்.

‘ஸோம்பி’ வகையறாவிலிருந்து கௌலை வித்தியாசப்படுத்துவதும், அதன் பின்னணிக்கு நம்பகத்தன்மை கூட்டுவதுமே கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. சராசரியாக, தலா 45 நிமிடங்களுடன் மூன்று அத்தியாயங்கள் அடங்கியதாகத் தொடரின் முதல் சீஸன் அமைந்திருக்கிறது.

மும்பை வாழ் இங்கிலாந்துக் குறும்பட இயக்குநரான பாட்ரிக் கிரஹாம் தொடரை எழுதி இயக்கி உள்ளார். அமெரிக்க சி.ஐ.ஏ. வதை முகாம் ஆவணங்களின் அடிப்படையிலான கதையில், அரேபியப் பேயைக் கோத்து இந்தத் தொடரை உருவாக்கியதாக இவர் தெரிவித்துள்ளார். மாற்று முயற்சிகளை அரவணைக்கும் இயக்குநர் அனுராக் கஷ்யப் இத்தொடரின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவர்.

ராதிகா ஆப்தே பின்னணி தவிர்த்து பெரும்பாலான பாத்திரங்கள் அலட்சியமாகக் கையாளப்படுவதும் அவ்வப்போது இடறும் நாடகபாணி காட்சிகளும் இந்தத் தொடரின் சில நெருடல்கள். அதேநேரம், அடிப்படை உரிமைகளை நசுக்கிவிட்டு அதீத தேசபக்தியின் பெயரிலான அரச பயங்கரவாதத்தின் அபத்தங்களை தோலுரிக்கிறார்கள்.

இந்தித் தொடரான கௌல், ஆங்கிலத்துக்கு அப்பால் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளிலும் பார்க்கக் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு பல இடங்களில் படுத்துவதால், சப்-டைட்டில் உதவியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியிலே பார்க்கலாம்.

முதன் சீஸன் முடிவில் ராதிகா ஆப்தேவின் புதிய அவதாரத்தைக் கோடிட்டு காட்டியிருப்பது அடுத்த சீஸன் மற்றும் அத்தியாயங்களுக்கான எதிர்ப்பார்ப்புகளை விதைத்திருக்கிறது.

அடுத்த வாரம்

digital%202jpg

இந்திய சந்தையில் நெட்ஃபிளிக்ஸின் பிரதான போட்டியாளரான ‘அமேசான் பிரைம் வீடியோ’ தளத்தில் தொடங்கப்பட்டிருக்கும் ‘ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ தொடரை அடுத்த வாரம் பார்க்க

https://tamil.thehindu.com/cinema/cinema-others/article24996671.ece

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செய்திகள்

1 day 14 hours ago
இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறுவது யார்?: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை; மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் ரோஹித் சர்மா குழுவினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறின. லீக் சுற்றில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பலம் குறைந்த ஹாங்காங் அணிக்கு எதிராக கடைசி வரை போராடியே 26 ரன்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதையடுத்து ‘சூப்பர் 4’ சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி நேற்று முன்தினம் வங்கதேசத்துடன் மோதியது. இதில் 174 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 82 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 104 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவண் 40, அம்பதி ராயுடு 13, தோனி 33 ரன்கள் சேர்த்தனர். பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக செயல்பட்டு 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்கு உறுதுணையாக பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் செயல்பட்டனர். இந்நிலையில் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பரம வைரியான பாகிஸ்தான் அணியுடன் இன்று துபாயில் மீண்டும் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறும். இதனால் ரோஹித் சர்மா குழுவினர் கவனமாக செயல்படக்கூடும். முதல் ஆட்டத்தை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் இந்திய அணி குறைந்த அளவிலான இலக்கையே துரத்தி வெற்றி கண்டிருந்தது. அதிலும் இந்த இரு ஆட்டத்திலும் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கையே தேர்வு செய்தது. எதிரணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டி, அதன் பின்னர் பேட்டிங்கில் தொய்வில்லாமல் விளையாடி விரைவாக இலக்கை எட்டுவதை இந்திய அணி சிறப்பாக செய்திருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுமார் 13 ஓவர்களையும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக சுமார் 21 ஓவர்களையும் மீதம் வைத்து வெற்றியை வசப்படுத்தியிருந்தது இந்திய அணி. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என கருதப்படுகிறது. விராட் கோலி இல்லாத நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வலுவாகவே உள்ளது. பொதுவாக ரன்கள் குவிக்க சிரமமாக இருந்து வரும் துபாய் ஆடுகளத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாகவே பேட் செய்து வருகின்றனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடும் சோதனைக்கு உள்ளான ஷிகர் தவண் இந்தத் தொடரில் ரன்வேட்டை நிகழ்த்தி வருகிறார். ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவண், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டங்களில் முறையே 46 மற்றும் 40 ரன்கள் எடுத்து சிறந்த பங்களிப்பை வழங்கினார். அதேவேளையில் ரோஹித் சர்மா ஹாங்காங் அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக அரை சதங்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். அதிலும் ரோஹித் சர்மா விரைவாக ரன்கள் சேர்த்த விதம், எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கவும் தவறவில்லை. இதுபோன்று நடுகள வரிசையில் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இதில் அம்பதி ராயுடு, ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்திருந்தார். பார்மில் உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். மூத்த வீரரான தோனி, வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கி 37 பந்துகளை எதிர்கொண்டு 33 ரன்கள் சேர்த்தார். களத்தில் அவர், சிறிது நேரம் செலவிட்டுள்ளது அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த உதவுக்கூடும். லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்டுவதற்கு காரணமாக இருந்த கேதார் ஜாதவ், மீண்டும் மேஜிக் செய்யக்கூடும் என கருதப்படுகிறது. அவருடன் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா மற்றும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பாகிஸ்தான் பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்கக்கூடும். மேலும் தொடக்க ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் வேகக்கூட்டணி பாகிஸ்தான் வீரர்களுக்கு தொல்லை கொடுக்க ஆயத்தமாக உள்ளனர். சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எளிதாக வென்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து ‘சூப்பர் 4’ சுற்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாக போராடி வென்றது. 258 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனுபவ வீரரான ஷோயிப் மாலிக் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி வெற்றி தேடிக்கொடுத்தார். அஃப்தாப் ஆலம் வீசிய கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தை வீணடித்த ஷோயிப் மாலிக் 2-வது பந்தை பவுண்டரிக்கும், அடுத்த பந்தை சிக்ஸருக்கும் விளாச 49.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியது. வெற்றிக்கான இன்னிங்ஸை விளையாடிய ஷோயிப் மாலிக் 43 பந்துகளில், 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக இமாம் உல் ஹக் 80, பாபர் அசாம் 66 ரன்கள் சேர்த்து சிறந்த அடித்தளம் அமைத்து கொத்திருந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது. பேட்டிங்கில் இவர்கள் 3 பேரும் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கலாம். தொடக்க வீரர்களில் ஒருவரான பஹர் ஸமான் இந்தத் தொடரில் ரன்கள் சேர்க்க கடுமையாக திணறி வருகிறார். ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் சேர்த்த அவர், அடுத்த இரு ஆட்டங்களிலும் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஆட்டமிழந்தார். இதனால் அவர், நெருக்கடியுடன் களமிறங்குகிறார். இதேபோல் பந்து வீச்சில் முகமது அமிரின் சமீபத்திய பார்மும் அணியை கவலையடையச் செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் முகமது அமிர், கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த ஆட்டத்தில் 3 விக்கெட்களை கைப்பற்றிய அவர், அதன் பின்னர் நடைபெற்ற 9 ஆட்டங்களில் மொத்தமாக 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான ஹசன் அலி, உஸ்மான் கான் ஆகியோரும் ஆசிய கோப்பை தொடரில், லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த முகமது அமிர், இன்றைய ஆட்டத்தில் இழந்த பார்மை மீட்க முயற்சிக்கக்கூடும். https://tamil.thehindu.com/sports/article25019652.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!

1 day 15 hours ago
126. களையும் கலை பேருந்து எல்.ஐ.சி.யைத் தாண்டும்வரை யாரும் எதுவும் பேசவில்லை. எனக்கு லேசாகத் தூக்கம் வந்து கண்ணை மூடத் தொடங்கியபோது, ‘விமல், உனக்கு என்றைக்காவது குற்ற உணர்வு போல ஏதேனும் தோன்றியிருக்கிறதா?’ என்று வினோத் கேட்டான். எனக்கு எதற்குக் குற்ற உணர்வு ஏற்பட வேண்டும்? இந்த உலகில் பாவமே செய்யாத ஒரு பிறப்பு உண்டென்றால் அது நான்தான். என் சுதந்திரத்தின் பூரணத்துவத்தில் திளைப்பது எப்படி ஒரு குற்றமாகும்? ‘இல்லை. நீ சன்னியாசம் என்னும் புனிதமான தருமத்தை உன் வாயிற்கதவுத் தாழ்ப்பாளாக வைத்துக்கொண்டு உள்ளுக்குள் ஒரு சராசரியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது’. நான் புன்னகை செய்தேன். ‘நான் எதையும் துறந்ததாக என்றுமே சொன்னதில்லையே?’ ‘பிறகு எதற்கு உனக்கு தீட்சையும் காவியும்?’ ‘நல்ல கதையாக இருக்கிறதே. தீட்சை, நான் பயின்று எழுதிய தேர்வுக்கான சான்றிதழ். காவி எனக்குப் பிடித்த நிறம். ஒரு கோட் சூட் உடையைக் காட்டிலும் இது தருகிற சௌகரியங்களும் மரியாதையும் அதிகம்’. ‘எனக்கு இது சரியாகப் படவில்லை’. ‘அதனால் என்ன? நீ என் சகோதரன். நீ சொல்வதற்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன்’. அதன்பின் வினோத் நெடுநேரம் அமைதியாகவே இருந்தான். மீண்டும் திடீரென்று, ‘காமம் துறப்பதை நீ முக்கியமென்று நினைத்ததே இல்லையா?’ ‘ஐயோ, இயற்கையை நான் எவ்வாறு நிராகரிப்பேன்? என்னால் என் சிறுநீரைத் துறக்க முடியும்போது காமத்தையும் துறப்பேன் என்று நினைக்கிறேன்’. ‘ஹரே கிருஷ்ணா. நீ ஒரு தவறான மனிதரிடம் பயின்றிருக்கிறாய்’. நான் சிரித்துவிட்டேன். ‘வினோத் என் குருநாதர் எதையும் சொல்லிக் கொடுத்ததில்லை. நானும் அவரிடம் இருந்து எதையும் கற்கவில்லை. மாறாக நாங்கள் எங்கள் மனங்களின் இண்டு இடுக்குகள் வரை திறந்துவைத்து அடுத்தவர் நுழைந்து மீள அனுமதித்துக்கொண்டோம். அதுதான் என் படிப்பு. அதில் பெற்றதுதான் என் ஞானம்’. ‘தெய்வமும் ஒழுக்கமும் அற்ற ஒரு துறவை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை’ என்று வினோத் சொன்னான். ‘ஒழுக்கம் என்பதே அடுத்தவர் அபிப்பிராயம்தானே? அதற்கொரு பெயர் கொடுத்தால் தெய்வமாகிவிடுகிறது. எனக்கு அடுத்தவர் அபிப்பிராயம் முக்கியமாக இல்லை என்பதால் தெய்வமும் என்னிடத்தில் முக்கியத்துவம் இழந்துவிடுகிறது’. ‘நீ உன்னிடம் வரும் பெண்களைத் தவறாகப் பயன்படுத்துகிறாய் அல்லவா?’ ‘யார் சொன்னது?’ ‘எங்களுடைய பெங்களூர் கிளையில் அப்படியொரு பேச்சு ஒரு சமயம் எழுந்தது’. ‘கிருஷ்ண பக்தர்கள் பேசுவதற்கு வேறு சங்கதியே இல்லையா?’ ‘இல்லை. நீ அம்மாநிலத்தில் இருப்பவன். உனது புகழ் அம்மாநிலம் முழுதும் பரவியிருப்பது. உன்னைப் பற்றிய உரையாடல்கள் இயல்பானவை’. இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தேன். உண்மையில் நான் எந்தப் பெண்ணையும் என்னிடத்தில் அழைத்ததில்லை. விரும்பி வருகிற யாரையும் நிராகரித்ததும் இல்லை. ஒரு சமயம், எனது கூட்டத்துக்கு வந்திருந்த பெண்களுள் வெண் குஷ்டம் பாதித்த பெண்ணொருத்தி வந்திருந்தாள். அவளை நான் அதற்குமுன் சந்தித்ததில்லை. ஊருக்குப் புதியவள் என்று நினைத்தேன். பிறகு ஏற்கெனவே எனக்கு அறிமுகமான இன்னொரு பெண்தான் அவளை அழைத்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. ‘குருஜி, இவள் என் தோழி. மூன்று வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராமலே இருந்தவளை வலுக்கட்டாயமாக உங்களிடம் இழுத்து வந்தேன்’ என்று சொன்னாள். ‘மூன்று வருடங்கள்! எத்தனைக் கொடிய சிறைத்தண்டனை! ஏன் அப்படி இருந்தாய்?’ என்று அவளிடம் கேட்டேன். ‘என் நோய் என்னை வெளியே போகவிடாமல் செய்துவிட்டது’ என்று அவள் சொன்னாள். எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அன்றைய சொற்பொழிவு முடிந்ததும் நான் அந்தப் பெண்ணை என் அறைக்கு வரச் சொன்னேன். அவள் பேரழகி இல்லை. ஆனால் எளிதில் பிடிபடாததொரு லட்சணம் அவள் முகத்தில் இருந்தது. துரதிருஷ்டவசமாக அவளது நடு மூக்கு மட்டும் வெளுத்து, கன்னங்கள், நெற்றியெல்லாம் இயல்பான நிறத்தில் இருந்தன. காது மடல்கள் வெளுத்திருந்தன. கழுத்து, கைகள் வெளுத்திருந்தன. பின் கழுத்து வெளுத்திருந்தது. வெண் திட்டுகளின் இடையே பழுப்பு நிறத்தில் புள்ளிகள் நிறைய உண்டாகியிருந்தன. அவள் என்னைக் கண்டதும் விம்மி விம்மி அழுதாள். ஏனோ அழத் தோன்றுகிறது என்று இடையிடையே சொல்லிக்கொண்டே அழுதாள். அதனால் பரவாயில்லை; அழு என்று நானும் அமைதியாக இருந்தேன். அவள் அழுது முடித்துவிட்டு, ‘என் வீட்டில் எனக்குத் திருமணத்துக்குப் பார்க்கத் தொடங்கிய நேரம் எனக்கு இப்படியாகிவிட்டது. இதன்பின்பு எனக்குத் திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று என் பெற்றோர் முயற்சியைக் கைவிட்டுவிட்டார்கள்’ என்று சொன்னாள். ‘தொல்லை விட்டது என்று எண்ணிக்கொள். திருமணம் ஒரு மகிழ்ச்சியல்ல’. ‘ஆனால் குருஜி, நானும் ஓர் உயிரினம் அல்லவா? இயல்பான உணர்ச்சிகள் எனக்கும் உண்டல்லவா? என்னை நெருங்கி முத்தமிடும் ஒரு ஆண் மகனுக்காக என் வாழ்நாள் முழுதையும் நான் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறேன்’. ‘வாழ்நாள் முழுதும்?’ ‘ஆம். வாழ்நாள் முழுதும்’. பிறகு அவள் என் ஆசிரமத்தின் நிர்வாகப் பணிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைத் தானே எடுத்துக்கொண்டுவிட்டாள். ‘நீ அவளை முத்தமிட்டாயா?’ என்று வினய் கேட்டான். ‘ஆம். ஓரிரவு முழுவதும் அவளது தேகத்தின் ஒவ்வொரு அணுத்துகளிலும் படுவதுபோல முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன். விடியும்வரை முத்தமிட்டேன். விடிந்தபின் நாங்கள் கலவி கொண்டோம். அன்று பகல் முழுதும் அவள் நிம்மதியாகத் தூங்கினாள். நான் அவளுக்குக் கால் அமுக்கிவிட்டுக்கொண்டிருந்தேன்’. இதைச் சொன்னதும் வினோத் சற்று நகர்ந்து அமர்ந்துகொண்டான். எனக்குச் சிரிப்பு வந்தது. ‘நீ ஒரு காமாந்தகன்’ என்று வினய் சொன்னான். ‘இல்லை வினய். அந்தகம் என்பது தவறான சொல். காமம் அழிவல்ல. காமத்தால் ஆக்கத்தான் முடியுமே தவிர அழிக்க இயலாது. தவிர காமம் மட்டுமே என் நோக்கமும் அல்ல. உனக்குத் தெரியுமா? பதினேழு வருடங்கள் நான் காமம் துறந்து வாழ்ந்திருக்கிறேன்’. ‘மனத்தாலும் எண்ணாமல்?’ ‘ஆம். நான் துறந்திருக்கிறேன் என்ற நினைவையே அழித்துவிட்டு வாழ்ந்தேன். எனக்கு எதுவுமே வேண்டுமென்றால் வேண்டும். வேண்டாமெனில் வேண்டாம்’. ‘வினய், நீ அவனோடு சேராதே. அவன் சொல்கிற எதையும் கேட்காதே. அவன் வழி நமக்குச் சரிப்படாது’ என்று வினோத் சொன்னான். ‘டேய், இவன் வழியே உனக்குச் சரிப்படாதே?’ என்று நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். ‘ஆம். ஆனால் வினய்யை சரி செய்துவிட முடியும். அவனது சிக்கல்கள் எளியவை. பேரானந்தக் கடலின் ஒரு துளி அவன் உச்சந்தலையில் விழுந்தால் போதும்’. ‘உனக்கு விழுந்திருக்கிறதா?’ என்று கேட்டேன். வினோத் அதிர்ச்சியடைந்துவிட்டான். சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘கிருஷ்ண ஜபம் ஒன்றே என் ஆனந்தம்’ என்று சொன்னான். எத்தனை எளிய வாழ்க்கை! ஜபங்கள். நாம சங்கீர்த்தனங்கள். பண்டிகைகள், திருவிழாக்கள், தேரோட்டம். ஆனால் சகோதரா, என் கேள்வி இதுவல்ல. இவை எதுவுமல்ல. உன் கிருஷ்ணனை நீ பார்த்தாயா? ஏனெனில், என் கடவுளான என் சுதந்திரத்தை நான் ஒவ்வொரு கணமும் தரிசித்துக்கொண்டிருக்கிறேன். அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இதைத்தான் என் துறவு எனக்கு சாத்தியமாக்கியது. அந்த வகையில் உன் துறவு உனக்கு மூன்று வேளை சாதம்தான் இப்போதுவரை போட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வாயா? நான் கேட்கவில்லை. சிரித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன். அவன் வினய்க்கு எப்படியாவது மீட்சி கொடுத்துவிட வேண்டும் என்று தீவிரமாக எண்ணிக்கொண்டிருந்தான். ஒரு லட்சத்து எட்டு கிருஷ்ண ஜபத்தின் இறுதியில், வினய்யும் ஒரு கிருஷ்ண பக்தனாகிவிடுவான் என்று தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தான். வாழ்வில் எவ்வளவோ முயற்சிகளைச் செய்து பார்த்துவிட்டுத் தோற்றதாக முடிவுக்கு வந்திருந்த வினய், இன்னொரு முயற்சியாகக் கிருஷ்ணனைக் கூப்பிட்டுப் பார்க்க முடிவு செய்திருந்ததையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இவர்கள் இருவரும் சந்தித்திருக்கவே கூடாது என்று சொல்ல நினைத்தேன். குறைந்தபட்சம் வினய் தனது கதையையாவது அவனுக்குச் சொல்லாதிருந்திருக்கலாம். ‘ஏன்?’ என்று வினய் கேட்டான். ‘ஐம்பது வயது தாண்டிய அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு செத்தால் நன்றாக இராதல்லவா? அதனால் சொன்னேன். தவிர இரண்டு சன்னியாசிகள் வெட்டிக்கொண்டு இறந்தால் இந்த உலகம் அதைத் தாங்காது’. ‘நீ பேசாதே’ என்று வினோத் சொன்னான். சிரித்தேன். பிறகு அவனே என்ன நினைத்தானோ, ‘காமம் களைவது ஒரு கலை’ என்று சொன்னான். ‘ஆம். சந்தேகமில்லை. ஆனால் காமத்தினும் உயர்ந்ததாக அதைச் சொல்ல முடியாது’. ‘அப்படியா நினைக்கிறாய்?’ ‘உன்னை ஒன்று கேட்கிறேன். ராதை உடனில்லாத ஒரு கிருஷ்ணனை உன்னால் எண்ணிப் பார்க்க இயலுமா?’ ‘சேச்சே. அது வெறும் தத்துவம்’. ‘தத்துவத்துக்கே ஒரு பெண் வடிவம் வேண்டியிருக்கிறது வினோத். வாழ்க்கைக்கு இல்லாமல் எப்படி? ஒன்று கேட்கிறேன். இத்தனை ஆண்டுகள் நீ ஒரு பெண்ணைத் தொடாதிருந்திருக்கலாம். ஆனால் நினைக்காதிருந்திருப்பாயா?’ அவன் என்னை உற்றுப் பார்த்தான். பிறகு தலை குனிந்து, ‘ஆம். அது முடிந்ததில்லை. என் கட்டுப்பாட்டை மீறி எப்போதாவது நினைத்துவிடுகிறேன்’. ‘அதைத்தான் சொல்கிறேன். முகத்தை மட்டும் நினைத்தால் நீ பரமஹம்சராகிவிட முடியும். ஆனால் முலையைத்தான் உன்னால் நினைக்க முடியும்’. ‘இல்லை. இல்லை. நிச்சயமாக இல்லை’ என்று அவன் அலறினான். ‘என்ன இல்லை? நீ முலையை நினைத்ததே இல்லையா?’ ‘அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால் அது மட்டுமே அல்ல. பல வருடங்களுக்கு முன்னர், நான் பக்குவமடையாமல் இருந்த காலத்தில் அதெல்லாம் உண்டு. இப்போது இல்லை’. நான் அவன் கரங்களை அன்போடு பற்றிக்கொண்டேன். ‘வினோத்! கிருஷ்ணன் சந்தோஷங்களின் கடவுள். எளிய இச்சைகளின் மீது நிகழ்வதே அவனது காளிங்க நடனம். இச்சைகளை ஒழிக்க நினைப்பது கிருஷ்ண விரோதம். இச்சைகளைக் கடப்பதே அவனது தரிசனத்துக்கு வழி செய்யும்’. ‘புரியவில்லை’. ‘ஒழித்துவிட்ட ஒன்றை எப்படிக் கடக்க முடியும்? இருந்தால்தான் நுழைந்து வெளியேற முடியும்’ என்று நான் சொன்னதும், வினய் பாய்ந்து என்னைக் கட்டியணைத்துக்கொண்டு, ‘இதுதான். இதுதான் நான் முயற்சி செய்தது. இதில்தான் நான் தோற்றேன். இங்கேதான் நான் இறந்தேன்’ என்று சொன்னான். அவன் கண்கள் கலங்கிவிட்டிருந்தன. (தொடரும்) http://www.dinamani.com/junction/yathi/2018/sep/10/126-களையும்-கலை-2996602.html

ஜனாதிபதி கொலை சதி குறித்த உரையாடல்! வெளியாகும் பல அதிர்ச்சித் தகவல்கள்

1 day 15 hours ago
மைத்திரி, கோத்தா கொலைச்சதி இந்திய பிரஜையிடம் விசாரணை இ.சதீஸ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கொலை செய்ய மேற்­கொண்­ட­தாகக் கூறப்­படும் சதித்­திட்டம் தொடர்பில் கைது­செய்­யப்­பட்ட இந்­தி­யப்­பி­ரஜை வழங்­கிய தக­வல்கள் முன்­னுக்குப் பின் முர­ணாக இருப்­பதால் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் அவ­ரிடம் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கொலை செய்ய மேற்­கொண்ட சதித்­திட்டம் தொடர்பில் ஊழ­லுக்கு எதி­ரான படை அமைப்பின் பணிப்­பாளர் நாமல் குமார அண்­மையில் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார்“. இந்­த­நி­லையில் இவரை தொடர்­பு­கொள்ள முயற்­சித்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் இந்­தி­யப்­பி­ர­ஜை­யொ­ருவர் நேற்று முன்­தினம் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். அவ­ரிடம் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின்­போது அவர் வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் ஏற்­பட்ட முன்­னுக்குப் பின் முர­ணான தக­வல்­களின் கார­ண­மாக அவரை தொடர்ந்து தடுத்து வைத்து விசா­ரிக்க மேலும் கால அவ­காசம் கோரப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அவரை தொடர்ந்து விசா­ரிக்க நேற்­றை­ய­தினம் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது. குறித்த 53 வய­தான இந்­தி­யப்­பி­ர­ஜை­யிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது குறித்த நபர் இந்­தி­யாவில் சட்­ட­வி­ரோத அமைப்­பொன்றில் இணைந்து செயற்­பட்டு வந்­த­தா­கவும் இதன் கார­ண­மாக அங்கு உயிர் அச்­சு­றுத்தல் இருந்­ததால் இலங்­கைக்கு தப்­பி­யோடி வந்­த­தா­கவும் கூறி­யுள்ளார். இலங்­கையில் அவர் அகதி அந்­தஸ்து கோரி­ய­போதும் அது கிடைக்­க­வில்­லை­யென்றும் அண்­மையில் நாமல் குமார பகி­ரங்­கப்­ப­டுத்­திய விடயம் தொடர்பில் விளக்கம் பெறு­வ­தற்­கா­கவே வரக்­கா­பொ­லை­யி­லுள்ள அவ­ரு­டைய வீட்டில் வைத்து அவரைத் தொடர்­பு­கொள்ள முயற்­சித்­த­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்தியப்பிரஜையின் வாக்குமூலத்தில் முன்னுக்குப்பின் முரணான விடயங்கள் இருப்பதாக சந்தேகித்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-09-23#page-1

சுமந்திரனின் சமஷ்டி

1 day 15 hours ago
சுமந்திரனின் சமஷ்டி கடந்த சனிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சுமந்திரன் சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவுப் பேருரை ஆற்றினார். சமஷ்டியின் விஸ்தீரணம் என்ற தலைப்பிலான அந்த உரையை அவர் அதிகம் சிரத்தையெடுத்து தயாரித்து வந்திருந்தார். தமிழ் அரசியல்வாதிகளில் தமது பேச்சை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்து பேசுபவர்கள் குறைவு. அப்படி தயாரித்துக் கொண்டு வந்திருந்தாலும் பலபேச்சுக்கள் அவையில் இருப்பவர்களை புத்திசாலிகளாகக் கருதி தயாரிக்கப்பட்டவை அல்ல. ஆனால் சுமந்திரன் தான் கூறவரும் கருத்தை தர்க்க பூர்வமாக முன்வைப்பவர் அது தொடர்பான தொடர்ச்சியான பகிரங்க விவாதங்களுக்கும் தயாராகக் காணப்படுபவர். சனிக்கிழமை அவர் ஆற்றிய உரைக்காக அவர் பல்வேறு நாடுகளின் யாப்பு அனுபவங்களை தேடித் திரட்டிக் கொண்டு வந்திருந்தார். அவருடைய உரையின் பின் கேள்வி கேட்ட சயந்தனும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகளோடு வந்திருந்தார். சயந்தன் சுமந்திரனின் விசுவாசி எனினும் வீரசிங்கம் மண்டபத்தில் அவர் கேட்ட கேள்விகள் சுமந்திரனுக்குச் சங்கடத்தைத் தரக்கூடியவை. குறிப்பாக முகநூற்பரப்பில் சுமந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் கூரான கேள்விகளை சயந்தன் திரட்டிக்கொண்டு வந்து கேட்டார். அக்கேள்விகளுக்கு சுமந்திரன் வழங்கிய பதில் குறித்து தனியாக ஆராய வேண்டும். ஆனால் தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பல கேள்விகளை தனக்கு விசுவாசமான ஒருவர் மூலம் தொகுத்து ஒரு பகிரங்கத் தளத்தில் அக்கேள்விகளுக்கு பதில் கூற முன்வந்தமை துணிச்சலானது. அது ஒரு சிறந்த அறிவியல் ஒழுக்கம், அதில் ஒரு வெளிப்படைத்தன்மை உண்டு. தர்க்கத்தை தர்க்கத்தால் எதிர் கொள்ளும் அவ்வாறான துணிச்சலைப் பாராட்ட வேண்டும். வழமையாக அவருடைய கூட்டத்திற்கு வரும் ஆதரவாளர்களும் உட்பட சுமார் 300 பேருக்குக் குறையாதவர்கள் அரங்கில் காணப்பட்;டனர். எனினும் அவருடைய அரசியல் எதிரிகள் என்று கருதத்தக்க கூட்டத்துறை சார்ந்த மற்றும் சாராத அரசியல் பிரமுகர்களை அங்கு காணமுடியவில்லை. தனது நினைவுப் பேருரையில் சுமந்திரன் என்ன பேசினார்? அவர் வழமையாகப் பேசி வருபவற்றைத்தான் ஆதாரங்களுடன் பேசினார். அவருடைய பேச்சின் சாராம்சத்தை ஒரே வரியில் சொன்னால் சமஸ்ரி என்ற லேபல் முக்கியமல்ல எனலாம். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து அவர் உதாரணங்களை எடுத்துக் காட்டினார். சமஸ்ரி என்ற தலைப்புடன் யாப்பைக் கொண்டிருக்கும் பல நாடுகளில் நடைமுறையில் சமஸ்ரி இல்லை என்று எடுத்துக் காட்டினார். அதே சமயம் சமஸ்ரி என்று குறிப்பிடாத பல யாப்புக்கள் நடைமுறையிலுள்ள உலகின் மிக உயர்வான ஜனநாயக நாடுகளில் சமஸ்ரி ஒரு பிரயோகமாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார். எனவே சமஸ்ரி என்று பெயரோடுதான் ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்றில்லை என்பதே அவருடைய பேச்சின் அடித்தொனியாக இருந்தது. ஒரு சட்டத்தரணியாக சுமந்திரன் தனது கருத்துக்கு சில சட்டத்துறை சார்ந்த தீர்ப்புக்களையும் மேற்கோள் காட்டினார். யாப்பு எனப்படுவது ஒரு நாட்டின் அதியுயர் சட்டம் என்ற அடிப்படையில் அவர் சமஸ்ரியை அதிகபட்சம் ஒரு சட்டவிவகாரமாகவே அணுகியிருந்தார். ஆனால் சமஸ்ரி என்பது இலங்கையைப் பொறுத்தவரை ஓர் அரசியல்தீர்வு. அப்படியொரு தீர்வைக் கொடுப்பதற்கான அரசியல் திடசித்தம் (political will)சிங்களத் தலைவர்களிடம் உண்டா? அதைப் பெறுவதற்கான அரசியல் திடசித்தம் தமிழ்த் தலைவர்களிடம் உண்டா என்பதே இங்கு விவகாரம். அது ஓர் அரசியல் விவகாரம். அதைச் சட்டக்கண் கொண்டு மட்டும் பார்க்க முடியாது. அதை ஓர் அரசியல் விவகாரமாகப் பார்;க்க வேண்டும். எனவே அதனோடு சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளுக்கூடாகவும் அதைப் பார்க்க வேண்டும். சுமந்திரன் கூறுகிறார் பிரித்தானியாவின் யாப்பில் எழுத்தில் சமஷ்டி இல்லை என்று. அது எழுதப்படாத யாப்பு என்று அழைக்கப்படும் ஒரு யாப்பு. ஆனால் அங்கே ஸ்கொட்லாந்து பிரிந்து போவதா இல்லையா என்பதை முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டது. இப்படிப்பார்த்தால் அங்கு சமஷ்டிரியை விடவும் அதிகரித்த அதிகாரம் உண்டு என்பதே நடைமுறையாகும். ஆனால் இந்த உதாரணம் இலங்கைத்தீவுக்கும் பொருந்துமா? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்தார்கள். இவ்விஜயத்தை ஒழுங்குபடுத்தியது எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அசங்க வெலிகல என்று கூறப்பட்டது. அசங்க பின்னாளில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாப்புத் தெடர்பில் ஆலோசகராகச் செயற்பட்டதாக கருதப்படுகிறது. அசங்க பிரித்தானியா இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் ஒற்றையாட்சி முறைமைகளை ஒப்பிட்டுக் கூறிய ஒரு தகவலை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரான குமாரவடிவேல் குருபரன் ஓருமுறை மேற்கோள் காட்டியிருந்தார் ‘பிரித்தானியாவின் ஒற்றையாட்சி பேரினவாதத்தன்மை மிக்கது அல்ல’ என்பதே அது. ஆனால் அசங்க பின்னாளில் இக் கூற்றிலிருந்து பின்வாங்கியதாக அவரது டுவிட்டர் பதிவு ஒன்றிலிருந்ததாக குருபரன் தெரிவித்தார். எனினும் அசங்க முன்பு கூறியது சரிதான். பிரித்தானியாவிலிருப்பது ஒற்றையாட்சிதான். ஆனால் பெரிய பிரித்தானியா என்பது ஒரு யூனியன். அதாவது இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஜக்கிய இராஜ்ஜியம். இந்த சமூக உடன்படிக்கையின் பிhயோகவடிவமே பிரித்தானியாவின் எழுதப்படாத யாப்பு ஆகும். இது இலங்கைக்கு பொருந்துமா? இல்லை பொருந்தாது. பிரித்தானியாவின் ஜனநாயகம் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான தேர்த்லை நடத்துமளவிற்கு செழிப்பானதாய் இருந்தது. அசங்க கூறியது போல அது பேரினவாதத் தன்மை மிக்கது அல்ல. ஆனால் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு எனப்படுவது இந்த நாட்டில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சகநிர்மாணிகளாக ஏற்றுக்கொள்ளாத சிங்கள – பௌத்த மனோநிலையின் சட்ட ஏற்பாடுதான். எனவே பிரித்தானியாவின் ஜனநாயக நடைமுறை வேறு. இலங்கைத்தீவின் நடைமுறை வேறு. பிரித்தானியாவின் வரலாறு வேறு. இலங்கைத்தீவின் வரலாறு வேறு. இலங்கைத்தீவின் வரலாற்றனுபவம் ஜனநாயக நடைமுறை என்பனவற்றின் பின்னணியில் வைத்தே சமஸ்டி என்ற லேபல் தேவையா? இல்லையா? என்று முடிவெடுக்க வேண்டும். அப்படித்தான் இந்திய சமஸ்ரியும். அது ஓர் அரைச் சமஸ்ரி. ஆனாலும் அதற்கு ஒரு தேவை அங்குண்டு. குறிப்பாக பிராந்தியக் கட்சிகளின் எழுச்சியோடு இந்தியப் பேரரசு அதன் சமஸ்ரி நடைமுறையைப் பலப்படுத்த வேண்டிய தேவைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒருகட்சி ஏகபோகத்திலிருந்து பலகட்சிகளின் கூட்டரசாங்கம் என்ற ஒரு மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்தியாவின் சமஸ்ரியானது அதிகம் அவசியமான ஒரு நடைமுறையாகிவிட்டது. இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்த வரதராஜப்பெருமாள் ஒருமுறை என்னிடம் சொன்னார் 13 ஆவது திருத்தமானது இந்திய சமஷ்டியை மனதிலிருத்தி உருவாக்கப்பட்டது என்ற தொனிப்பட. எனவே மாகாணசபையின் சட்டவாக்க விஸ்தீரணத்தை அளந்தறிய அதற்குவேண்டிய சட்டப் பரிசோதனைகளை விக்கினேஸ்வரன் செய்திருக்க வேண்டும் என்றும் வரதராஜப்பெருமாள் கூறினார். ஆனால் மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரம் எனப்படுவது தனிய ஒரு சட்டப்பிரச்சினை மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் விவகாரம். இலங்கைத்தீவிற்கு மாகாண சபைகள் தேவை என்பதை எந்த நோக்கு நிலையிலிருந்து முடிவெடுப்பது? தமிழர்களையும், சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் இச்சிறியதீவின் சகநிர்மாணிகள் என்ற நோக்கு நிலையிலிருந்தா? அல்லது தமிழ் மக்களைப் பேய்க்காட்ட வேண்டும் என்ற நோக்கிலிருந்தா? அல்லது ஐ.நாவைப் பேய்க்காட்ட வேண்டும் என்ற நோக்கு நிலையிலிருந்தா? எந்த நோக்கு நிலையிலிருந்து என்பதுதான் இங்கு மாகாண சபையின் விஸ்தீரணத்தைத் தீர்மானிக்கிறது. எனவே மாகாண சபையின் அதிகாரங்கள் அல்லது சமஸ்ரியின் விஸ்தீரணம் என்பவையெல்லாம் சட்டப் பிரச்சினைகள் மட்டுமல்ல அதற்குமப்பால் அவை அரசியல் விவகாரங்கள். அவற்றைச் சட்டக்கண் கொண்டு மட்டும் பார்;க்கக்கூடாது. சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளும் இணைந்த ஒரு கூட்டு ஒழுக்கத்துக்கூடாக ஆராயும் போதே இலங்கைத்தீவிற்கேயான சமஸ்டியின் விஸ்தீரனத்தை கண்டுபிடிக்கலாம். தனியே சட்டக்கண் கொண்டு பார்க்கும் போது அது ஒரு முழுமையான பார்வையாக இருக்காது. சுமந்திரன் ஏன் அதை அதிகபட்சம் சட்டக்கண் கொண்டு பார்க்கிறார்? அவர் ஒரு வெற்றிபெற்ற சட்டத்தரணியாக இருப்பதால் மட்டுமல்ல அவர் கொழும்பு மையத்திலிருந்து சிந்திப்பதும் ஒரு காரணம்தான். மாறாக தனக்கு வாக்களித்த மக்களின் துன்ப, துயரங்களிலிருந்து சிந்திப்பாராகவிருந்தால் அதை ஒரு சட்டப்பிரச்சினையாக மட்டும் அணுக மாட்டார். இதற்கு ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தைக் கூறலாம். கடந்த செவ்வாய்க்கிழமை வடமராட்சி கிழக்கில் அதாவது சுமந்திரனின் ஊரில் நடந்த சம்பவம் அது. வடமராட்சி கிழக்குக் கடலில் சிங்கள மீனவர்கள் கடலட்டை பிடிப்பதைத் தடுக்குமாறு அப்பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்களில் சுமந்திரனும் சம்பந்தப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் பேசியுமிருக்கிறார். அரசாங்கத்திடமிருந்து வாக்குறுதிகளை வாங்கியுமிருக்கிறார். ஆனால் எல்லா வாக்குறுதிகளையும் மீறி சிங்கள மீனவர்கள் கடலட்டை பிடித்துவருகிறார்கள். இவர்களை கடந்த செவ்வாய் இரவு தமிழ் மீனவர்களை கையும் களவுமாக பிடித்து தடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் பொலிசார் வந்து அவர்களை மீட்டுச்சென்றிருக்கிறார்கள். அதோடு சம்பந்தப்பட்ட தமிழ் மீனவர்களை அச்சுறுத்தியுமிருக்கிறார்கள். இது ஒரு கடற்கொள்ளை. வடமராட்சி கிழக்கிலிருந்து முல்லைத்தீவுக் கரை வரை நடந்து கொண்டிருக்கிறது. தமது கடலையும், கடல் படு திரவியங்களையும் பாதுகாக்கும் சக்தியற்ற தமிழ் மீனவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சுமந்திரன் அரச உயர் இடத்திடமிருந்து பெற்ற வாக்குறுதிகளும் வேலை செய்யவில்லை. தனது வாக்காளர்களின் கவலைகளையும் அச்சங்களையும் சுமந்திரன் விளங்கிக் கொள்வாராக இருந்தால் இது வெறும் நிர்வாகப் பிரச்சினையோ அல்லது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ மட்டும் அல்ல என்பதைக் கண்டு பிடிக்கலாம். இது ஓர் அரசியற் பிரச்சினை என்பதையும் கண்டுபிடிக்கலாம். அப்படித்தான் யாப்புருவாக்கமும் அது தனிய ஒரு சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல. அதை ஓர் அரசியல் விவகாரமாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் ஒழுக்கங்களும் இணைந்த ஒரு கூட்டு ஒழுக்கத்துக்கூடாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் தான் அமெரிக்க யாப்பையும், பிரித்தானிய யாப்பையும், இந்திய யாப்பையும் பிரயோக வடிவத்தில் விளங்கிக் கொள்ளலாம். அப்பிரயோகத்திற்கு அடிப்படையாக உள்ள ஜனநாயகச் சூழலையும், வளர்ச்சியுற்ற முதலாளித்துவத்தின் பண்புகளையும், சமூக ஒப்பந்தங்களுக்கான வரலாற்றுப் பின்னணியையும் விளங்கிக் கொள்ளலாம். அப்படி விளங்கிக் கொள்வதற்கு ஒரு பல்துறைசார் கூட்டு ஒழுக்கம் தேவை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் விளங்கிக் கொள்வதற்கு முதலில் வாக்களித்த மக்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/

சுமந்திரனின் சமஷ்டி

1 day 15 hours ago
சுமந்திரனின் சமஷ்டி
 
sumanthiran-1.jpg

கடந்த சனிக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் சுமந்திரன் சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவுப் பேருரை ஆற்றினார். சமஷ்டியின் விஸ்தீரணம் என்ற தலைப்பிலான அந்த உரையை அவர் அதிகம் சிரத்தையெடுத்து தயாரித்து வந்திருந்தார்.

தமிழ் அரசியல்வாதிகளில் தமது பேச்சை முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்து பேசுபவர்கள் குறைவு. அப்படி தயாரித்துக் கொண்டு வந்திருந்தாலும் பலபேச்சுக்கள் அவையில் இருப்பவர்களை புத்திசாலிகளாகக் கருதி தயாரிக்கப்பட்டவை அல்ல.

ஆனால் சுமந்திரன் தான் கூறவரும் கருத்தை தர்க்க பூர்வமாக முன்வைப்பவர் அது தொடர்பான தொடர்ச்சியான பகிரங்க விவாதங்களுக்கும் தயாராகக் காணப்படுபவர்.

சனிக்கிழமை அவர் ஆற்றிய உரைக்காக அவர் பல்வேறு நாடுகளின் யாப்பு அனுபவங்களை தேடித் திரட்டிக் கொண்டு வந்திருந்தார். அவருடைய உரையின் பின் கேள்வி கேட்ட சயந்தனும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகளோடு வந்திருந்தார்.

சயந்தன் சுமந்திரனின் விசுவாசி எனினும் வீரசிங்கம் மண்டபத்தில் அவர் கேட்ட கேள்விகள் சுமந்திரனுக்குச் சங்கடத்தைத் தரக்கூடியவை. குறிப்பாக முகநூற்பரப்பில் சுமந்திரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் கூரான கேள்விகளை சயந்தன் திரட்டிக்கொண்டு வந்து கேட்டார்.

அக்கேள்விகளுக்கு சுமந்திரன் வழங்கிய பதில் குறித்து தனியாக ஆராய வேண்டும். ஆனால் தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பல கேள்விகளை தனக்கு விசுவாசமான ஒருவர் மூலம் தொகுத்து ஒரு பகிரங்கத் தளத்தில் அக்கேள்விகளுக்கு பதில் கூற முன்வந்தமை துணிச்சலானது.

அது ஒரு சிறந்த அறிவியல் ஒழுக்கம், அதில் ஒரு வெளிப்படைத்தன்மை உண்டு. தர்க்கத்தை தர்க்கத்தால் எதிர் கொள்ளும் அவ்வாறான துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

வழமையாக அவருடைய கூட்டத்திற்கு வரும் ஆதரவாளர்களும் உட்பட சுமார் 300 பேருக்குக் குறையாதவர்கள் அரங்கில் காணப்பட்;டனர். எனினும் அவருடைய அரசியல் எதிரிகள் என்று கருதத்தக்க கூட்டத்துறை சார்ந்த மற்றும் சாராத அரசியல் பிரமுகர்களை அங்கு காணமுடியவில்லை.

தனது நினைவுப் பேருரையில் சுமந்திரன் என்ன பேசினார்?

அவர் வழமையாகப் பேசி வருபவற்றைத்தான் ஆதாரங்களுடன் பேசினார். அவருடைய பேச்சின் சாராம்சத்தை ஒரே வரியில் சொன்னால் சமஸ்ரி என்ற லேபல் முக்கியமல்ல எனலாம். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து அவர் உதாரணங்களை எடுத்துக் காட்டினார்.

சமஸ்ரி என்ற தலைப்புடன் யாப்பைக் கொண்டிருக்கும் பல நாடுகளில் நடைமுறையில் சமஸ்ரி இல்லை என்று எடுத்துக் காட்டினார். அதே சமயம் சமஸ்ரி என்று குறிப்பிடாத பல யாப்புக்கள் நடைமுறையிலுள்ள உலகின் மிக உயர்வான ஜனநாயக நாடுகளில் சமஸ்ரி ஒரு பிரயோகமாக உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

எனவே சமஸ்ரி என்று பெயரோடுதான் ஒரு தீர்வைக் கொண்டு வரவேண்டும் என்றில்லை என்பதே அவருடைய பேச்சின் அடித்தொனியாக இருந்தது.

ஒரு சட்டத்தரணியாக சுமந்திரன் தனது கருத்துக்கு சில சட்டத்துறை சார்ந்த தீர்ப்புக்களையும் மேற்கோள் காட்டினார். யாப்பு எனப்படுவது ஒரு நாட்டின் அதியுயர் சட்டம் என்ற அடிப்படையில் அவர் சமஸ்ரியை அதிகபட்சம் ஒரு சட்டவிவகாரமாகவே அணுகியிருந்தார்.

ஆனால் சமஸ்ரி என்பது இலங்கையைப் பொறுத்தவரை ஓர் அரசியல்தீர்வு. அப்படியொரு தீர்வைக் கொடுப்பதற்கான அரசியல் திடசித்தம் (political will)சிங்களத் தலைவர்களிடம் உண்டா? அதைப் பெறுவதற்கான அரசியல் திடசித்தம் தமிழ்த் தலைவர்களிடம் உண்டா என்பதே இங்கு விவகாரம்.

அது ஓர் அரசியல் விவகாரம். அதைச் சட்டக்கண் கொண்டு மட்டும் பார்க்க முடியாது. அதை ஓர் அரசியல் விவகாரமாகப் பார்;க்க வேண்டும். எனவே அதனோடு சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளுக்கூடாகவும் அதைப் பார்க்க வேண்டும்.

சுமந்திரன் கூறுகிறார் பிரித்தானியாவின் யாப்பில் எழுத்தில் சமஷ்டி இல்லை என்று. அது எழுதப்படாத யாப்பு என்று அழைக்கப்படும் ஒரு யாப்பு. ஆனால் அங்கே ஸ்கொட்லாந்து பிரிந்து போவதா இல்லையா என்பதை முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டது.

இப்படிப்பார்த்தால் அங்கு சமஷ்டிரியை விடவும் அதிகரித்த அதிகாரம் உண்டு என்பதே நடைமுறையாகும். ஆனால் இந்த உதாரணம் இலங்கைத்தீவுக்கும் பொருந்துமா?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்தார்கள். இவ்விஜயத்தை ஒழுங்குபடுத்தியது எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அசங்க வெலிகல என்று கூறப்பட்டது.

அசங்க பின்னாளில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு யாப்புத் தெடர்பில் ஆலோசகராகச் செயற்பட்டதாக கருதப்படுகிறது. அசங்க பிரித்தானியா இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் ஒற்றையாட்சி முறைமைகளை ஒப்பிட்டுக் கூறிய ஒரு தகவலை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரான குமாரவடிவேல் குருபரன் ஓருமுறை மேற்கோள் காட்டியிருந்தார் ‘பிரித்தானியாவின் ஒற்றையாட்சி பேரினவாதத்தன்மை மிக்கது அல்ல’ என்பதே அது.

ஆனால் அசங்க பின்னாளில் இக் கூற்றிலிருந்து பின்வாங்கியதாக அவரது டுவிட்டர் பதிவு ஒன்றிலிருந்ததாக குருபரன் தெரிவித்தார்.

எனினும் அசங்க முன்பு கூறியது சரிதான். பிரித்தானியாவிலிருப்பது ஒற்றையாட்சிதான். ஆனால் பெரிய பிரித்தானியா என்பது ஒரு யூனியன். அதாவது இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஜக்கிய இராஜ்ஜியம். இந்த சமூக உடன்படிக்கையின் பிhயோகவடிவமே பிரித்தானியாவின் எழுதப்படாத யாப்பு ஆகும். இது இலங்கைக்கு பொருந்துமா?

இல்லை பொருந்தாது. பிரித்தானியாவின் ஜனநாயகம் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கான தேர்த்லை நடத்துமளவிற்கு செழிப்பானதாய் இருந்தது. அசங்க கூறியது போல அது பேரினவாதத் தன்மை மிக்கது அல்ல.

ஆனால் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு எனப்படுவது இந்த நாட்டில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சகநிர்மாணிகளாக ஏற்றுக்கொள்ளாத சிங்கள – பௌத்த மனோநிலையின் சட்ட ஏற்பாடுதான். எனவே பிரித்தானியாவின் ஜனநாயக நடைமுறை வேறு. இலங்கைத்தீவின் நடைமுறை வேறு.

பிரித்தானியாவின் வரலாறு வேறு. இலங்கைத்தீவின் வரலாறு வேறு. இலங்கைத்தீவின் வரலாற்றனுபவம் ஜனநாயக நடைமுறை என்பனவற்றின் பின்னணியில் வைத்தே சமஸ்டி என்ற லேபல் தேவையா? இல்லையா? என்று முடிவெடுக்க வேண்டும்.

அப்படித்தான் இந்திய சமஸ்ரியும். அது ஓர் அரைச் சமஸ்ரி. ஆனாலும் அதற்கு ஒரு தேவை அங்குண்டு. குறிப்பாக பிராந்தியக் கட்சிகளின் எழுச்சியோடு இந்தியப் பேரரசு அதன் சமஸ்ரி நடைமுறையைப் பலப்படுத்த வேண்டிய தேவைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒருகட்சி ஏகபோகத்திலிருந்து பலகட்சிகளின் கூட்டரசாங்கம் என்ற ஒரு மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இந்தியாவின் சமஸ்ரியானது அதிகம் அவசியமான ஒரு நடைமுறையாகிவிட்டது.

இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முதல்வராக இருந்த வரதராஜப்பெருமாள் ஒருமுறை என்னிடம் சொன்னார் 13 ஆவது திருத்தமானது இந்திய சமஷ்டியை மனதிலிருத்தி உருவாக்கப்பட்டது என்ற தொனிப்பட. எனவே மாகாணசபையின் சட்டவாக்க விஸ்தீரணத்தை அளந்தறிய அதற்குவேண்டிய சட்டப் பரிசோதனைகளை விக்கினேஸ்வரன் செய்திருக்க வேண்டும் என்றும் வரதராஜப்பெருமாள் கூறினார்.

ஆனால் மாகாண சபையின் சட்டவாக்க அதிகாரம் எனப்படுவது தனிய ஒரு சட்டப்பிரச்சினை மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் விவகாரம்.

இலங்கைத்தீவிற்கு மாகாண சபைகள் தேவை என்பதை எந்த நோக்கு நிலையிலிருந்து முடிவெடுப்பது? தமிழர்களையும், சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் இச்சிறியதீவின் சகநிர்மாணிகள் என்ற நோக்கு நிலையிலிருந்தா? அல்லது தமிழ் மக்களைப் பேய்க்காட்ட வேண்டும் என்ற நோக்கிலிருந்தா? அல்லது ஐ.நாவைப் பேய்க்காட்ட வேண்டும் என்ற நோக்கு நிலையிலிருந்தா? எந்த நோக்கு நிலையிலிருந்து என்பதுதான் இங்கு மாகாண சபையின் விஸ்தீரணத்தைத் தீர்மானிக்கிறது.

எனவே மாகாண சபையின் அதிகாரங்கள் அல்லது சமஸ்ரியின் விஸ்தீரணம் என்பவையெல்லாம் சட்டப் பிரச்சினைகள் மட்டுமல்ல அதற்குமப்பால் அவை அரசியல் விவகாரங்கள். அவற்றைச் சட்டக்கண் கொண்டு மட்டும் பார்;க்கக்கூடாது.

சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளும் இணைந்த ஒரு கூட்டு ஒழுக்கத்துக்கூடாக ஆராயும் போதே இலங்கைத்தீவிற்கேயான சமஸ்டியின் விஸ்தீரனத்தை கண்டுபிடிக்கலாம். தனியே சட்டக்கண் கொண்டு பார்க்கும் போது அது ஒரு முழுமையான பார்வையாக இருக்காது.

சுமந்திரன் ஏன் அதை அதிகபட்சம் சட்டக்கண் கொண்டு பார்க்கிறார்? அவர் ஒரு வெற்றிபெற்ற சட்டத்தரணியாக இருப்பதால் மட்டுமல்ல அவர் கொழும்பு மையத்திலிருந்து சிந்திப்பதும் ஒரு காரணம்தான்.

மாறாக தனக்கு வாக்களித்த மக்களின் துன்ப, துயரங்களிலிருந்து சிந்திப்பாராகவிருந்தால் அதை ஒரு சட்டப்பிரச்சினையாக மட்டும் அணுக மாட்டார்.

இதற்கு ஆகப்பிந்திய ஓர் உதாரணத்தைக் கூறலாம். கடந்த செவ்வாய்க்கிழமை வடமராட்சி கிழக்கில் அதாவது சுமந்திரனின் ஊரில் நடந்த சம்பவம் அது. வடமராட்சி கிழக்குக் கடலில் சிங்கள மீனவர்கள் கடலட்டை பிடிப்பதைத் தடுக்குமாறு அப்பகுதி மீனவர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள்.

இப்போராட்டங்களில் சுமந்திரனும் சம்பந்தப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அரச உயர்மட்டத்துடன் பேசியுமிருக்கிறார். அரசாங்கத்திடமிருந்து வாக்குறுதிகளை வாங்கியுமிருக்கிறார். ஆனால் எல்லா வாக்குறுதிகளையும் மீறி சிங்கள மீனவர்கள் கடலட்டை பிடித்துவருகிறார்கள்.

இவர்களை கடந்த செவ்வாய் இரவு தமிழ் மீனவர்களை கையும் களவுமாக பிடித்து தடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் பொலிசார் வந்து அவர்களை மீட்டுச்சென்றிருக்கிறார்கள். அதோடு சம்பந்தப்பட்ட தமிழ் மீனவர்களை அச்சுறுத்தியுமிருக்கிறார்கள்.

இது ஒரு கடற்கொள்ளை. வடமராட்சி கிழக்கிலிருந்து முல்லைத்தீவுக் கரை வரை நடந்து கொண்டிருக்கிறது. தமது கடலையும், கடல் படு திரவியங்களையும் பாதுகாக்கும் சக்தியற்ற தமிழ் மீனவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

சுமந்திரன் அரச உயர் இடத்திடமிருந்து பெற்ற வாக்குறுதிகளும் வேலை செய்யவில்லை. தனது வாக்காளர்களின் கவலைகளையும் அச்சங்களையும் சுமந்திரன் விளங்கிக் கொள்வாராக இருந்தால் இது வெறும் நிர்வாகப் பிரச்சினையோ அல்லது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ மட்டும் அல்ல என்பதைக் கண்டு பிடிக்கலாம். இது ஓர் அரசியற் பிரச்சினை என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

அப்படித்தான் யாப்புருவாக்கமும் அது தனிய ஒரு சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல. அதை ஓர் அரசியல் விவகாரமாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் ஒழுக்கங்களும் இணைந்த ஒரு கூட்டு ஒழுக்கத்துக்கூடாகப் பார்க்க வேண்டும்.

அப்படிப் பார்த்தால் தான் அமெரிக்க யாப்பையும், பிரித்தானிய யாப்பையும், இந்திய யாப்பையும் பிரயோக வடிவத்தில் விளங்கிக் கொள்ளலாம். அப்பிரயோகத்திற்கு அடிப்படையாக உள்ள ஜனநாயகச் சூழலையும், வளர்ச்சியுற்ற முதலாளித்துவத்தின் பண்புகளையும், சமூக ஒப்பந்தங்களுக்கான வரலாற்றுப் பின்னணியையும் விளங்கிக் கொள்ளலாம்.

அப்படி விளங்கிக் கொள்வதற்கு ஒரு பல்துறைசார் கூட்டு ஒழுக்கம் தேவை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். இப்படி எல்லாவற்றையும் விளங்கிக் கொள்வதற்கு முதலில் வாக்களித்த மக்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/