Aggregator

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 2 hours ago
வாத்தியார் என பெயரை வைத்து கொண்டு தரவுகளுக்கு பிறழ்விளக்கம் கொடுப்பது அழகல்ல என்பதும்… சுமன் சொன்னார் என்பதால் ஒரு கருத்தை எதிர்ப்பதும் … ஒரே போன்ற விடயங்கள் அல்ல. இதை நீங்களும் அறிந்தபடியால்தான் விளக்கம் வேண்டாம் என்கிறீர்கள் 😂.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

1 day 2 hours ago
இந்த கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதால்தான்… பல மடைமாற்றுகளை செய்து இந்த கொள்கையை தவறு என அடம் பிடிக்கிறார்கள்.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

1 day 2 hours ago
ஓம் தெரியும்…ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் தட்டு தடுமாறினாலும்…சிலோன்கார அடையாளம் இருந்தாலும், அடுத்தடுத்த சந்ததிகள் இந்தியரால ஏற்கப்பட்டு விட்டனர். இன்னும் 10,20 வருடத்தில் இந்த வேறுபாடு அறவே அற்றுவிடும். போகும் வழியில் மன்னாரில் ரயிலில் இருந்து இறங்கி வன்னிக்குள் போனர்வர்கள் இன்னொரு சிறிய தொகை. மலையக தோட்டங்களில் தங்கியோரை விட இவ்விரு குழுக்களும் ஒப்பீட்டளவில் மேம்பட்டே உளர். உங்களுக்கு புத்தி கொஞ்சம் மந்தமா? எவ்வளவு விளக்கி சொல்லியும் மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள்? யாரும் வராமல் இருக்க காரணம் உங்களை போன்றவர்கள் இந்த திரியில் காட்டிய உங்கள் இந்த மையவாத குணத்தின் மீதான பயம், அருவருப்பு. அதை தூக்கி எறிந்து விட்டு சக தமிழராக அவர்களை நடத்துவோம் என்ற நம்பிகை வரும் படி அழையுங்கள். மடைமாற்று

நில உயிர்கள்

1 day 2 hours ago
மிக்க நன்றி கவிஞரே. இந்தப் படத்தை ஏஐ வரைந்தவுடன் இது ஒரு பிரபலமான படத்தின் பிரதி போல இருக்கின்றது என்றே நினைத்தேன். இப்பொழுது நீங்கள் சொன்னவுடன் அந்தப் பிரபலமான படம் ஞாபகம் வந்தது.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 3 hours ago
நாம் தமிழ்நாட்டு சீமான் பெரும் கட்சிகள் மீது தெலுங்கர் என்று இனவெறுப்பை கக்கினால் நாமும் சேர்ந்து கக்குவோம்

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

1 day 3 hours ago
ஒரு தமிழ் தேசிகர் சொல்கின்றார் கஜேந்திரகுமார் தமிழீழக் கோரிக்கையைத் தமிழ்நாட்டில் சவப்பெட்டியாக்கிவிட்டார் 😂

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

1 day 3 hours ago
கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்களின் பட்டியலின் பிண்ணனியில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதாக தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(20.12.2025) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கிளிநொச்சியில் கட்டப்பஞ்சாயத்து நடாத்திக் கொண்டு பல அரசியல்வாதிகள் நல்லவர்கள்போல் நடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள் எப்படி சொத்துக்கள் சேர்த்தனர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தம்மைத் தாக்கிய கூலித்தொழிலாளியிடம் எப்படி சொத்து வந்தது என்பனையும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்

1 day 3 hours ago

கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்களின் பட்டியலின் பிண்ணனியில்  தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதாக தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(20.12.2025) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கிளிநொச்சியில் கட்டப்பஞ்சாயத்து நடாத்திக் கொண்டு பல அரசியல்வாதிகள் நல்லவர்கள்போல் நடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள் எப்படி சொத்துக்கள் சேர்த்தனர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தம்மைத் தாக்கிய கூலித்தொழிலாளியிடம் எப்படி சொத்து வந்தது என்பனையும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

1 day 4 hours ago
பிரத்தியோகமாக என் நண்பர்கள் வட்டத்தில் மூவர் வட்டக்கச்சி, துணுக்காய் போன்ற பகுதியில் இருக்கும் விவசாய காணியை (ஒரு பிரிவில்) , கொட்டில் வீடோடு தரும் விருப்பத்தை தெரிவித்துள்ளார்கள் அண்ணண். நோர்வேயில் இருக்கும் எனது அண்ணனும் கம்பளை வெள்ளத்தில் அனைத்தையும் இழந்து பௌத்த துறவிகளிடம் தஞ்சம் புகுந்து இருக்கும் 2 குடும்பத்தாரை அவர்கள் விருப்பத்தோடு நாவற்குழி க்கு கொண்டுவரும் யோசனையில் உரையாடிக்கொண்டு இருக்கிறோம். பொதுமையாக புலம்பெயர் என்று எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்க வேணாமே. சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் ஏதாவது செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

1 day 4 hours ago
1930-1940 களில் இருந்தே அப்பாவி தமிழனை சிங்களவன் கலவரங்கள் பல உருவாக்கி தாக்குவதும், அழிப்பதுமாகவே வாழ்க்கை ஓட... எங்கோ இருந்து வந்த வண்டுப்பையன் (மேதகு) 1983 இல் நின்று அடித்து சிங்களத்தை ஒரு கணம் நிலை குழையவைத்தான். அப்போ அந்த செயலை நித்திரையில் இருந்து எழும்பிய ஒருவரின் செயலாக பார்த்தோமா ? இல்லை தானே. சுமந்திரனின் அந்த "கருத்து" வெறும் ஆறுதல் படுத்தல் அவ்வளவே. நமக்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் செத்தவீடு நடந்தால் அவர்கள் துயரத்தில் பங்கு கொண்டு ஏதாவது உதவி வெண்டுமானால் தயங்காமல் அழையுங்கள் என்று சொல்லும் பார்மாலிட்டி போன்றது. ஆனாலும் அந்த சொல்லில் ஒரு ஆற்றுப்படுத்தல், நம்பிக்கையூட்டல், இப்படி பல அம்சங்கள் இருக்கும். இதில் பெரும் தலைவர் மேதகுவையும், சுமந்திரனையும் தொடர்பு படுத்தி பேசியதாக நினைக்க வேண்டாம்.

நில உயிர்கள்

1 day 4 hours ago
நீங்கள் பதிவிட்டிருக்கும் படத்தைப் பார்த்தவுடன் 98இல் பிரபலமான Tank manநஆன் நினைவுக்கு வந்தது. அருமை. நல்ல கவிதை. அதிலும் கடைசி வரிகள் சுப்பர். சிலர் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என்ற நிலையில் இருந்து மாறவே மாட்டார்கள். அதற்காக பேசாமல் இருக்க முடியாது. இன்னும் எழுதுங்கள். எங்கள் வீட்டுக்குள் ஒரு பலசாலி வந்தால் எழுந்து ஓடிவிடுவோம் தூரப் போய் நின்று வீரம் பேசுவோம் வெட்டி வீழ்த்திவிடுவோம்

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

1 day 4 hours ago
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்ட மலையாகத் தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்காவது தெரியுமா ? அவர்களுடைய நிலை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டிலே வாழ்கின்றார்கள் என்பது தெரியும் சொந்த மக்களையே சிலோன்காரன் வந்துட்டான் என்று அலறிய தமிழ் நாட்டவர்கள் இருக்க....... அவர்களை இப்போது சுமந்திரன் இல்லை அனுர அனுப்பினாலும் அவர்களின் வெளியேற்றத்திற்கெதிரான பொறுப்புக்கு கூறலை யாரும் செய்யமாட்டார்கள். கோத்தா கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்ற முயன்று இப்போ அவரின் நிலையே கவலைக்கிடம் 😂 சுமனும் பாத்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் 😅

இரசித்த.... புகைப்படங்கள்.

1 day 4 hours ago
வெட்ட வெளி, பட்ட மரம், தகிக்கும் வெயில், ஒதுங்க இடமுமில்லை, நிழலுமில்லை, வயிற்றை நிரப்ப ஏதுமில்லை, கூடுகட்டி வாழ வசதியில்லை, என்ன செய்யலாமென கூடி ஆலோசிக்கின்றனவா? இருந்தாலும் கூடி சவாலை சமாளிக்க முயலும் பறவைகள்.

நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்

1 day 5 hours ago
அது சரி காணியும் வீடும் சொந்தமாக தங்கள் பெயரில் எழுதி தந்தால் தாங்கள் யாழ்ப்பாணம் வரை தயார் என்று சொல்லியும் எந்த புலம் பெயர் தமிழர்களும் அதற்கு சார்பாக பதில் தரவில்லையே. மடியில் கை வைத்ததாலோ???

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 day 5 hours ago
என்னாது ஒருவாட்டி நீங்க சொல்வீங்க..... கருத்தைப்பார் நல்லாயிக்கீதா ...... சொன்னவனா.... அது யாருன்னு பாக்காதே..... அப்பிடீன்னு... மறுக்காலை வந்து குந்திக்கின்னு ..... நீ ஏன் வாத்தின்னு பேரை வைச்சுக்கிட்டேனு கேக்கிறாப்பல...... என்னாய்யா இது ............ சாமி இதுக்கு எனக்கு விளக்கம் வேணாம்😂 சுமந்திரன் எந்தூண்டு பெரியாம் தலீவர்...... அவரு சும்மா அறிக்கை உடலாம்......... 😇நாம யாரு .......வரியக் கட்டி வாறீக 🤣