புதிய பதிவுகள்

மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்Published By: Vishnu15 Dec, 2025 | 09:32 PMimageமலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது. குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும், பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி15 Dec, 2025 | 05:34 PMimageநேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும்  இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் எனக்கூறியுள்ளார்.இதேவேளை, உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும்  ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு
யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்!Published By: Vishnu15 Dec, 2025 | 09:13 PMimageயாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று திங்கட்கிழமை (15) மதியம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி,  இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர்,  பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த கட்டடம் அமைப்பதன் மூலம் பயணிகளின் எதிர்நோக்கும் சிரமங்களை தீர்க்க முடியும் என எதிராபார்க்கப்படுதாறது.IMG-20251215-WA0036.jpg
மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்Published By: Vishnu15 Dec, 2025 | 09:32 PMimageமலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது. குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும், பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.5__3_.jpg5__6_.jpg5__4_.jpg5__5_.jpg5__1_.jpghttps://www.virakesari.lk/article/233450
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி15 Dec, 2025 | 05:34 PMimageநேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக  உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.இதனால் இரு நாடுகளுக்கும்  இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது.இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிடுவோம் எனக்கூறியுள்ளார்.இதேவேளை, உக்ரைன் நாட்டின் எந்த ஒரு நிலப் பகுதியையும்  ரஷ்யாவிற்கு தர முடியாது என்றும், தங்களது பாதுகாப்புக்கு மேற்கித்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என  உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுனார்.https://www.virakesari.lk/article/233437
யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது13 Dec 2025, 11:15 AMYouTuber Savukku Shankar arrestedபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினரை ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சவுக்கு சங்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர்.வழக்கு விபரம்ரெட் அண்ட் ஃபாலோ என்ற திரைப்படம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் புருஷோத்தமன், சவுக்கு சங்கர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.அப்போது அந்த வீடியோவை நீக்க 10 லட்சம் பணம் கேட்டதாகவும், இதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் சவுக்கு சங்கர் மற்றும் அவரது குழுவினர் தயாரிப்பாளர் புருஷோத்தமனை அடித்து அவர் கையில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை பறித்து
லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!13 Dec, 2025 | 10:23 AMimageஅரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த ஒருவர், மேற்கு லண்டனில் 15 வயது சிறுமியைக் கடத்தி, துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக வெளியான தகவல்களுக்கு குறித்த இலங்கை பிரஜை மறுப்பு தெரிவித்துள்ளார்.20 வயதான குறித்த நபர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார். இதன்போது, சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் சாட்சியம் அளித்த அவர், கடத்தல், துஷ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோக செயற்பாடு உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் தாம் குற்றமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த நவம்பர் முதலாம் திகதி மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. புகலிடம் கோருபவர்களை தங்க வைக்க அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் மூன்று நட்சத்திர செயிண்ட் கில்ஸ் விடுதியில்; வசித்து வரும் நிலையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், அவரை காவலில் வைக்க
மலையகத்தை நோக்கிப் போதல் - நிலாந்தன்facebook_1765650158563_74056735226632081டித்வா புயலால் தமிழ்த் தரப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது மலையகத்  தமிழர்கள்தான். மலையகத்தில் வெள்ளம்,புயல்,மண்சரிவு ஏற்படும்போது அங்கே உறக்கத்திலேயே மண்மூடி இறந்தவர்கள் அதிகமாக ஏழைகள்தான். மேல் நடுத்தர வர்க்கம் அவ்வாறு இறப்பது குறைவு. மலையகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகள்,தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் போன்றன இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுவது ஒப்பீட்டளவில் குறைவு. ஏனென்றால் செல்வந்தர்கள் தங்கள் வீடுகளையும் தொழிற்சாலைகளையும் பாதுகாப்பான இடங்களில் கட்டுகிறார்கள். ஆனால் ஏழைகள் மலை விளிம்புகளில்,மண் சரியக்கூடிய இடங்களில் வீடுகளைக்  கட்டுவதனால் இயற்கை அனர்த்தங்களின் போது முதற் பலியாகிறார்கள்.காலாகாலமாக இயற்கை அனர்த்தங்களின் போது மட்டுமல்ல, இன முரண்பாடுகளின் போதும் உடனடியாகச் சுற்றி வளைக்கப்படும் மக்களாக, இன அழிப்புக்கு உள்ளாகும் மக்களாக அவர்களே கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் காணப்படுகிறார்கள்.அவர்கள் மலிவான கூலிகளாக இச்சிறிய தீவுக்குள் கொண்டு வரப்பட்ட போதும் ஏறக்குறைய அடிமைகள் போலவே
ஆன்டிபயாடிக் மருந்துக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களால் இந்திய மருத்துவத் துறைக்கு புதிய சவால்ஆன்டிபயாடிக் மருந்துகளிடமிருந்து 'தப்பிப்பிழைக்கும்' பாக்டீரியா தொற்றுகள்பட மூலாதாரம்,Getty Imagesகட்டுரை தகவல்நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் 'ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட்' (antibiotic resistant) என்பது சுகாதாரத் துறையில் மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) சமீபத்தில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை இதுதொடர்பான எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.முதலில் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ட் என்பது என்ன?ஒரு நோய்த்தொற்று உங்களுக்கு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த தொற்றுகளில் இருந்து நீங்கள் குணமடைவதற்காக மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஆனால், நாளடைவில் அந்த மருந்தின் திறன் தன்னை பாதிக்காத வகையில் சில தொற்றுகள் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதாவது, அந்த மருந்து குறிப்பிட்ட தொற்றுக்கு எதிராக செயல்புரியாது. அதாவது, அந்த மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தொற்றுகள்
மின்னல் எச்சரிக்கை!!நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minuteடிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை  தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.image-1.png?w=392வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல்
நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 16, 2025 1 Minuteஅண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?,  மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது?மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்:பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர்.புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள்.சுண்ணாம்பு (Slaked Lime): புகையிலை மற்றும் பாக்கின் காரத்தன்மையை (alkalinity) மாற்றி, அதில் உள்ள நிக்கோடினை (Nicotine) உடல் வேகமாக உறிஞ்சிக்கொள்ள இது உதவுகிறது.சில நேரங்களில், கூடுதல் சுவைக்காக சில மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படலாம், ஆனால் மேற்கண்ட மூன்றுமே இதன் முக்கியப் பொருட்கள் ஆகும்.22-639ff73ed3765.jpeg?w=6002. மாவா பாக்கில் கஞ்சா இருக்கின்றதா?இல்லை.
581925393_10236519770008218_297368784632காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல்இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும்.நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது.Nuraichcholai boys
ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்பல்லப் கோஷ்அறிவியல் செய்தியாளர்7 மணி நேரங்களுக்கு முன்னர்"பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை.பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார்.அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாளர்கள், தங்கள் மத்தியில் இருக்கும் "துரோகிகளை" கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கேம் ஷோ தொடங்கி ஏழு எபிசோடுகள் கடந்த பிறகுதான் "விசுவாசமான" போட்டியாளர்கள் தங்கள் மத்தியில் இருந்த மூன்று பொய்யுரைக்கும் "துரோகிகளில்" ஒருவரையே கண்டுபிடித்துள்ளனர்.பெரும்பான்மையாக
அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.air_polu.png?w=447யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன?முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை  வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது.
"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம்சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம்பட மூலாதாரம்,Star Catcherகட்டுரை தகவல்ஜோனாதன் ஓ'கல்லகன்13 டிசம்பர் 2025சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன.கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க கால்பந்து மைதானத்தில் ஒரு வித்தியாசமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஒளிக்கதிர்கள் அனுப்பப்பட்டன.சில நிமிடங்கள் நீடித்த அந்த ஒளிக்கற்றைகள், ஜாக்சன்வில்லே ஜாகுவார்ஸ் மைதானத்தின் ஒரு பக்கத்தில் உள்ள எமிட்டரில் இருந்து பாய்ந்து, மறுபக்கத்தில் உள்ள திரையில் சேகரிக்கப்பட்டன.சூரிய ஒளியைச் சேகரித்து, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய லென்ஸ்கள் (அவை ஒவ்வொன்றும் சுமார் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் கொண்டது) மூலம் அவை அனுப்பப்பட்டது."லென்ஸ்களைத்
சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -- ஶ்ரீரஞ்சனி -சிறுகதை14 டிசம்பர் 2025women_meeting_at_temple2.jpgsriranjani_AI7.jpgஇதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன்.சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன்.“ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா.“ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.”“ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக்
மாவளி கண் பார்--------------------------large.Maavali.jpgசொக்கப்பானை தான் அதன் பெயர் என்று நினைத்திருந்தேன். ஐம்பது வயதில் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். முன்னர் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்த காலம் ஒன்றில் இப்படியான ஒரு நெருப்புக்குள் புகுந்து சொர்க்கத்திற்கு போகும் ஒரு வழி இருந்திருக்கின்றது போல என்று ஒரு கதையை எனக்கு நானே சொல்லியும் இருக்கின்றேன். அந்தக் காலங்களில் கடவுள் அடிக்கடி தோன்றி மனிதர்களை காப்பாற்றிய கதைகள் ஏராளம் உண்டு தானே. சொக்கப்பானையின் நெருப்புக்குள் புகும் மனிதர்களையும் கடவுள் காப்பாற்றினார் ஆக்கும் என்று நான் நினைத்ததில் பெரிய பிழை என்று எதுவும் இல்லை.நடுவில் பச்சை தென்னை மரம் ஒன்றையே வைத்திருந்தார்கள் என்று நினைக்கின்றேன். நீண்ட காலமாக இந்த நிகழ்வை நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நட்ட தென்னை மரத்தைச் சுற்றி கூம்பு வடிவில் பச்சை தென்னை ஓலைகளை கட்டியிருந்தார்கள். பின்னர் சடங்கு மற்றும் பூசைகளின் பின் அதை எரித்தார்கள். பச்சை ஓலைகள் வெடித்து
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே----------------------------------------------large.Attic.jpgஎன்ன சத்தம் அதுஎலியாக இருக்குமோஇரவிரவாக விறாண்டியதே என்றுபல வருடங்களின் பின்பரணுக்குள் ஏறினேன்எலி என்றில்லைஏழு எட்டு டைனோசர்கள் அங்கே நின்றாலும்கண்டே பிடிக்க முடியாதஒரு காடு அது என்றுஅங்கே நான் விக்கித்து நிற்க'என்ன, மேலே எதுவும் தெரியுதோ............' என்றார்காடு வளர்த்துஎலி பிடிக்க என்னை மேலே ஏற்றியஎன்னுடைய கங்காணிமுப்பது வருடங்களுக்கு முந்தி இருந்தவாழ்க்கையின் அடையாளம் கூடஅங்கே தெரிந்ததுபழைய சாமான்களாகவும் சட்டி பெட்டிகளாகவும்இந்தப் பூகம்ப தேசத்தில்தலைக்கு மேல கத்திபரண் தான் போலமொத்தத்தையும் அள்ளி விற்றாலும்சில பணம் கூட தேறாதுஅள்ளுகிற கூலி நூறுஅது அவ்வளவும் நட்டம்ஒரு மூலையில் கிடந்த முதலாவது சூட்கேசைஇன்னும் இது இருக்குதே என்றுநினைவில் உருகிமெல்லிதாக தொடஇரண்டு சாம்பல் எலிகள் பாய்ந்து பறந்தனசூட்கேசின் அடுத்த பக்கத்தில்அவை போட்டு வைத்திருந்த ஓட்டையால்'என்னப்பா, அங்கே சத்தம்............ஏதோ ஓடுதோ.................''காலில் தடக்கிஏதோ சாமான் உருளுது
வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணிDec 13, 2025 - 07:56 PMவெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணிடுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.https://adaderanatamil.lk/news/
அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்!153233804.jpgகார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்..கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.களவழி நாற்பது:''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கிலே - கார் நாற்பதுகார்த்திகை சாற்றில் கழி விளக்குப்போன்றனவை - களவழி நாற்பதுஅகநானூறு:''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்டதலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழிதூதொடு வந்த மழை''சீவக சிந்தாமணி:குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்னகடிகமழ் குவளை பைந்தார்நற்றிணை:சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை.வீரை வேண்மான் வெளியன் தித்தன்முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்கையற வந்த பொழுது - நற்றிணை 58மலைபடுகடாம்“கார்த்திகை காதில் கனமகர
 களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.written by admin November 1, 20251000173468.jpg?fit=1080%2C720&ssl=1பெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவள் இருக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள், அவளது தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவளது உரிமைகள் என அவளினுடைய பொறுப்பு பன்முகத்தன்மை கொண்டதாக தான் இருக்கின்றது. குழந்தைகளை பெற்றெடுக்கும், வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புள்ளவளாக பெண் பார்க்கப்படுகின்றாள். அதே மாதிரியாக மனைவி என்ற வகையில் கணவனுக்கு துணைவியாகவும், குடும்பத்தை நிர்வாகிப்பவளாகவும், குடும்பத்தின் நலன் காப்பவளாகவுமே கருதப்படுகின்றாள். பெண்ணானவள் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்துவதற்கு பல வழிகளில் முயற்சிகளை எடுக்கின்றாள். தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக எவ்வளவோ காலம் எடுக்கிறது.ஒரு பெண் தன்னை சமூகத்தில் அடையாளப்படுத்தி கொள்வதற்கு பல எதிர்ப்புகள்