| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 174 online users. » 0 Member(s) | 172 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,074
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| கூடுதல் ரத்தப் போக்கை நிறுத்த ஒரு புது வழி |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:06 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
சில பெண்களுக்கு மாத விலக்கு காலத்தில் அதிகமான ரத்தப் போக்கு காணப்படும். சிலருக்கு வரைமுறை இல்லாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இதற்கு தற்போதுள்ள முறைகளைப் பயன்படுத்தி தீர்வு காண்பது முடியாது. கருத்தடை மாத்திரைகள் குறிப்பிட்ட காலம் வரையில் தான் ரத்தப் போக்கை நிறுத்தும். அதன்பிறகும் அப்படியே செயல்படும் என்று சொல்ல முடியாது. சில பெண்களுக்கு இந்த மாத்திரைகளை அவ்வளவாக நம்புவதில்லை. அதனால் பயன்படுத்துவதும் இல்லை.
இதை விட்டால் அறுவை சிகிச்சை முறைகளை நாடலாம். அந்த வகையில் ழலளவநசநஉவடிஅல அல்லது கருக்குழாய் பாதையின் உள்ளே காணப்படும் சில முக்கிய பகுதிகளை நீக்கும் அறுவை சிகிச்சைகள் கை கொடுக்கும் தான். ஆனால் இந்தப் பெண்கள் பின்னாளில் குழந்தை பெற நினைத்தால் இவை கைகொடுக்காது. இதுதவிர அறுவை சிகிச்சைகளின் போது ஏற்படும் வேண்டாத சில விளைவுகளை யும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஆசைநயே என்று ஒரு நவீன கருவி வந்துள்ளது. iவேசயரவநசiநே னநஎiஉந என்று இந்தக் கருவி, டநஎடிnடிசபநளவசநட என்ற ஹhர்மோனை வெளி யிடுகிறது. இந்த ஹhர்மோன்கள் குறைந்த அளவிலான சில பக்க விளைவுகளுடன் ரத்தப்போக்கு அளவை 80 முதல் 96 சதவீதம் வரை குறைக்கிறது. இந்தக் கருவியைப் பொருத்திக் கொள்ளும் பெண்கள் மீண்டும் கருத்தாpக்க நினைத்தால் அதில் ஒரு பிரச்சினையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| நிமோனியாவை உண்டு பண்ணும் பற்சிதைவு |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:04 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
பல் சிதைவு மற்றும் காரை ஆகியவற்றில் காணப்படும் நுண் கிருமிகள் நுரையீரலுக்குள் சென்று மிகக் கடுமையான நிமோனியா நோயை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமொpக்க ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வில் இந்த உண்மை தொpய வந்துள்ளது.
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட 49 நோயாளிகளை பாpசோதனை செய்து பார்த்த போது, அவர்களில் சாpப் பாதி பேருக்கு பல்சிதைவு மற்றும் காரையில் காணப்படும் நுண் கிருமிகளே நிமோனியா பிரச்சினைக்கு காரணமாக இருந்தது தொpய வந்தது. மீதிப் பேருக்கு வேறு காரணங்களால் நிமோனியா வந்திருந்தது.
நிமோனியா எப்படி வருகிறது? என்று கூர்ந்து கவனித்த போது பல்நோய்களுக்கு காரணமான நுண் கிருமிகள் மெல்ல மெல்ல நுரையீரலுக்குள் புகுந்து பிரச்சினையை உண்டு பண்ணுவது கண்டுபிடிக்கப்பட்டது. பல்சிதைவுகளில் காணப்படும் நுண் கிருமிகள் இதய நோய்களுக்கும் காரணமாக இருப்பதாக ஏற்கனவே நிரூபிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| புற்றுநோய்க்கு மருந்தாகும் தேன் |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:02 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
குரோஷியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் குழு எலிகள் உடலில் மருத்துவ ஆராய்ச்சி நடத்தியது. இதில் தேன் மற்றும் தேனில் தயாரித்த பொருட்களுக்கு புற்று கட்டிகள் வளராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் மனிதர்களுக்கும் தேன் மருந்து பயன்படும் என்று இந்த குழு அறிவித்தது. ஆனால் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கெமோதெரப்பி சிகிச்சையுடன் சேர்த்து இந்த மருந்தும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது
|
|
|
| குறைந்த ரத்த அழுத்தம் தீர தண்ணீர் உதவும் |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:00 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
மனித உடலில் தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலம் உள்ளது. ரத்த அழுத்தம், இருதய துடிப்பு மற்றும் வியர்வை உண்டாகுதல் போன்ற செயல்பாடு களை இந்த தன்னிச்சையான நரம்பு மண்டலம் தூண்டுகிறது. இந்த நரம்பு மண்டல செயல்பாட்டில் பாதிப்பு உண்டானவர்கள் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் ஒரு பாpசோதனை நடத்தப்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டவுடன் அல்லது சிறிதளவு உடல்வேலையில் ஈடுபட்டவுடன் நேராக எழுந்து நிற்கும்போது அவர்களுக்கு மயக்கம் ஏற்படும். இதை; தவிர்க்க உடனடியாக 2 டம்ளர் சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி குடித்த வுடன் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடலில் 5 மடங்கு ரத்த அழுத்தம் கூடும். எனவே நல்ல தண்ணீர் சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை அவர்கள் அதிகாpத்துக் கொள்ளலாம் என்று ஆய்வு நடத்தியவர்கள் தெருவித்தனர்.
|
|
|
| சிகரெட் பிடித்தால் புண் ஆறுவது தாமதமாகும் |
|
Posted by: ஊமை - 12-11-2004, 02:55 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
சிகரெட் பிடித்தால் காசநோய் வரும், கேன்சர் வரும், விரைவில் மரணம் வரும் என்று தான் கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போது புதிதாக புண் ஆறுவது தாமதமாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இதனைக்; கண்டு பிடித்துள்ளார்கள். உடலில் காயம் ஏற்பட்டால் அது குணமாக நான்கு வகை செயல் பாடுகள் முக்கியம். முதலாவது காயம் பட்ட இடத்தில் இரத்தம் உறைய வேண்டும். அடுத்தது சீழ் பிடிக்காமல் இருக்க வேண்டும். புதிய செல்கள் பெருக வேண்டும். திசுக்கள் மறுபடியும் அந்த இடத்தில் முறையாக கூட வேண்டும். இந்த நான்கு செயல்பாடுகளும் சிகரெட்; பிடிப்பதானால் பாதிக்கப் படுவதாக ஆய்வுகள் தொpவிக்கின்றன. இதனால் காயம் ஆறுவது தாமதமாவதுடன்; அந்த இடத்தில் பொpய அளவில் தழும்பு ஏற்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
|
|
|
| லாப்-டாப் கம்ப்யூட்டர்களால் ஆண்களுக்கு ஆபத்து? |
|
Posted by: ஊமை - 12-11-2004, 02:52 PM - Forum: கணினி
- Replies (1)
|
 |
ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது விதைப்பை வெப்பநிலை. சமீப காலமாக விதைப்பை வெப்பநிலை உயர்வினால் கணிசமான சதவீத ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சூடான வெந்நீர் குளியல், இறுக்கமான உள்ளாடைகள் , வெப்பமான சூழ்நிலை, இரவு நேரப் பணி ஆகியவையும் விதைப்பை வெப்பநிலை உயருவதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் இந்த வாpசையில் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும் அடங்கும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. லாப்-டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் ஆண்கள் பெரும்பாலும் வசதி கருதி மடியில் வைத்து பயன்படுத்துவதால் விதைப்பை வெப்பநிலை உயர்ந்து விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் அத்தகைய உயிரணுக்களால் கருவை உண்டாக்க முடியாது என்று அந்த செய்தி கூறுகிறது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சிறுநீரகவியல் துறை பேராசிhpயர்கள் லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தினர். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்களை அறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில் வைத்தனர். பிறகு அவர்களில் கொஞ்சம் பேருக்கு இயங்கும் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும், மீதிப் பேருக்கு இணைப்பு எதுவும் இல்லாத வெறும் லாப்-டாப் கம்ப்யூட்டரும் தரப்பட்டன. இதன்பின்னர் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கு ஒருமுறை விதைப்பையின் வெப்பநிலையை குறித்துக் கொண்டனர்.
பின்னர் குறிப்பிட்ட நேரம்; கழித்து இரு பிhpவு ஆண்களின் விதைப்பை வெப்ப நிலையை சோதனை செய்து பார்த்த போது லாப்-டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்கிய ஆண்களுக்கு வெப்பநிலை கணிசமாக உயர்ந்து இருந்தது. இதற்கு லாப்-டாப் கம்ப்யூட்டரை மட்டும் குறை சொல்ல முடியாது. லாப்-டாப் கம்ப்யூட்டர் தவறி விழுந்து விடாமல் இருக்க இரண்டு தொடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொள்ளும் போது, அவற்றின் வெப்பம் அப்படியே விதைப்பைக்கும் பரவுகிறது. இதுதான் இங்கு முக்கிய விஷயம். அடுத்து, லாப்-டாப் கம்ப்யூட்டர்கள் மூலம் உண்டாகும் வெப்பம், விதைப்பை வெப்பத்தை மேலும் அதிகாpக்கிறது.
இந்த வெப்பநிலை உயர்வு ஒரு ஆணை மலட்டுத்தன்மை வாய்ந்தவராக மாற்றுமா? என்று கேட்டால், ஆராய்ச்சியாளர்கள் எதையும் உறுதியாக சொல்ல மறுக்கிறhர்கள். இருப்பினும் விதைப்பை வெப்பநிலை 1 டிகிhp செல்சியஸ் கூடும் போது அந்த இடத்தில் விதைப்பையில் உற்பத்தி ஆகும் உயிரணுக்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைகிறதாம்.
லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தற்போது வேகமாக அதிகாpத்து வருகிறது. இப்போது 6 கோடி லாப் கம்;ப்யூட்டர்கள் பயன்பட்டு வரும் நிலையில் அடுத்த 2005ம் ஆண்டு வாக்கில் மேலும் 9 கோடி லாப்-கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப் படும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் லாப்- கம்ப்யூட்டர்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டியது அவசியம் ஆகிறது. இருப்பினும் தற்போது லாப்-டாப் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை அவைகளை மடியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
|
|
|
| மனித மூளை சக்தியால் கம்ப்யூட்டரை இயக்கலாம |
|
Posted by: ஊமை - 12-11-2004, 02:48 PM - Forum: கணினி
- No Replies
|
 |
மனித மூளை சக்தியால் கம்ப்யூட்டரை இயக்கலாம்
--------------------------------------------------------------------------------
அமொpக்காவில் ஆராய்ச்சி குழு ஒரு பாpசோதனை செய்தது. எலக்ட்ரோடுகள் பொருத்தப்பட்ட தொப்பியை தலையில் அணிந்துகொள்ளவேண்டும். அதை அணிந்தவாpன் மூளை செய்யச்சொல்லும் பணிகளை இந்த எலக்ட்ரோடுகள் கிரகித்து அவற்றை உத்தரவுகளாக பிறப்பிக்கும். உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் திரையில் குறியீடு (கர்சர்) எந்த திசையில் நகர வேண்டும் என்று மூளை எலக்ட்ரோடுகளுக்கு சொல்லி அதை அவை கம்ப்யூட்டருக்கு உத்தரவாக பிறப்பிக்க முடியும். கம்ப்யூட்டரை மட்டும் அல்லாமல் சக்கர நாற்காலி அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களையும் இந்தமுறையில் இயங்கச் செய்யலாம். எனவே மனதில் நினைப்பதை இந்த முறை மூலம் செயல்படுத்தும் பாணி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது
|
|
|
| நத்தார் நல்வாழ்த்துக்கள்....! |
|
Posted by: tamilini - 12-11-2004, 01:36 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (21)
|
 |
<img src='http://img71.exs.cx/img71/6168/christmas_03b.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]கள உறவுகள் அனைவருக்கும் எனது நத்தார் நல்வாழ்த்துக்கள்....!
<img src='http://img123.exs.cx/img123/8553/rosesareredthumbnail9by.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| துறவைத் துறந்த துறவிகள் கங்கணம்...! |
|
Posted by: kuruvikal - 12-11-2004, 11:43 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
[b]இலங்கை: இந்தி பட விழாவுக்கு பிக்குகள் எதிர்ப்பு
கொழும்பு நகரில் இன்று நடைபெறுவதாக உள்ள ஷாருக்கான் உள்ளிட்ட இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் திரைப்பட விழாவை ஒத்திவைக்காவிட்டால் தீக்குளித்து இறப்போம் என்று புத்த மத துறவிகள் (பிக்குகள் - பிட்சுகள்) மிரட்டல் விடுத்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா, சைப் அலிகான் உள்ளிட்ட இந்திப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் டெம்ப்டஷேன் 2004 என்ற திரை விழா இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் மறைந்த புத்த மத துறவி கங்கோதவிலா சோமாவின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே திரைப்பட விழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று புத்த மத துறவிகள் நிகழ்ச்சி அமைப்பாளர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து நேற்று விழா அமைப்பாளர்களை சந்தித்த சில புத்த மதத் துறவிகள், எங்களது உணர்வுகளை மீறி இன்று விழா நடந்தால் விழா அரங்கம் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக விழா நடக்கும் பகுதியில் புத்த மத துறவிகள் குவிந்து வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. புத்த மதத் துறவிகளின் மிரட்டலையும் மீறி விழா நடத்தப்பட்டால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க போலீஸாரைத் தவிர ராணுவம் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.
thatstamil.com
|
|
|
|