12-11-2004, 02:55 PM
சிகரெட் பிடித்தால் காசநோய் வரும், கேன்சர் வரும், விரைவில் மரணம் வரும் என்று தான் கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போது புதிதாக புண் ஆறுவது தாமதமாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இதனைக்; கண்டு பிடித்துள்ளார்கள். உடலில் காயம் ஏற்பட்டால் அது குணமாக நான்கு வகை செயல் பாடுகள் முக்கியம். முதலாவது காயம் பட்ட இடத்தில் இரத்தம் உறைய வேண்டும். அடுத்தது சீழ் பிடிக்காமல் இருக்க வேண்டும். புதிய செல்கள் பெருக வேண்டும். திசுக்கள் மறுபடியும் அந்த இடத்தில் முறையாக கூட வேண்டும். இந்த நான்கு செயல்பாடுகளும் சிகரெட்; பிடிப்பதானால் பாதிக்கப் படுவதாக ஆய்வுகள் தொpவிக்கின்றன. இதனால் காயம் ஆறுவது தாமதமாவதுடன்; அந்த இடத்தில் பொpய அளவில் தழும்பு ஏற்படக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

