![]() |
|
துறவைத் துறந்த துறவிகள் கங்கணம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: துறவைத் துறந்த துறவிகள் கங்கணம்...! (/showthread.php?tid=6224) |
துறவைத் துறந்த துறவிகள் கங்கணம்...! - kuruvikal - 12-11-2004 [b]இலங்கை: இந்தி பட விழாவுக்கு பிக்குகள் எதிர்ப்பு கொழும்பு நகரில் இன்று நடைபெறுவதாக உள்ள ஷாருக்கான் உள்ளிட்ட இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் திரைப்பட விழாவை ஒத்திவைக்காவிட்டால் தீக்குளித்து இறப்போம் என்று புத்த மத துறவிகள் (பிக்குகள் - பிட்சுகள்) மிரட்டல் விடுத்துள்ளனர். நடிகர் ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா, சைப் அலிகான் உள்ளிட்ட இந்திப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் டெம்ப்டஷேன் 2004 என்ற திரை விழா இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இலங்கையில் மறைந்த புத்த மத துறவி கங்கோதவிலா சோமாவின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே திரைப்பட விழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று புத்த மத துறவிகள் நிகழ்ச்சி அமைப்பாளர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து நேற்று விழா அமைப்பாளர்களை சந்தித்த சில புத்த மதத் துறவிகள், எங்களது உணர்வுகளை மீறி இன்று விழா நடந்தால் விழா அரங்கம் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக விழா நடக்கும் பகுதியில் புத்த மத துறவிகள் குவிந்து வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. புத்த மதத் துறவிகளின் மிரட்டலையும் மீறி விழா நடத்தப்பட்டால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க போலீஸாரைத் தவிர ராணுவம் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது. thatstamil.com |