Yarl Forum
குறைந்த ரத்த அழுத்தம் தீர தண்ணீர் உதவும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: குறைந்த ரத்த அழுத்தம் தீர தண்ணீர் உதவும் (/showthread.php?tid=6219)



குறைந்த ரத்த அழுத்தம் தீர தண்ணீர் உதவும் - ஊமை - 12-11-2004

மனித உடலில் தன்னிச்சையாக செயல்படும் நரம்பு மண்டலம் உள்ளது. ரத்த அழுத்தம், இருதய துடிப்பு மற்றும் வியர்வை உண்டாகுதல் போன்ற செயல்பாடு களை இந்த தன்னிச்சையான நரம்பு மண்டலம் தூண்டுகிறது. இந்த நரம்பு மண்டல செயல்பாட்டில் பாதிப்பு உண்டானவர்கள் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் ஒரு பாpசோதனை நடத்தப்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டவுடன் அல்லது சிறிதளவு உடல்வேலையில் ஈடுபட்டவுடன் நேராக எழுந்து நிற்கும்போது அவர்களுக்கு மயக்கம் ஏற்படும். இதை; தவிர்க்க உடனடியாக 2 டம்ளர் சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி குடித்த வுடன் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடலில் 5 மடங்கு ரத்த அழுத்தம் கூடும். எனவே நல்ல தண்ணீர் சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை அவர்கள் அதிகாpத்துக் கொள்ளலாம் என்று ஆய்வு நடத்தியவர்கள் தெருவித்தனர்.