| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 558 online users. » 0 Member(s) | 556 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,074
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| உண்ண உணவில்லை உடுக்கத் துணியில்லை |
|
Posted by: Nada - 12-12-2004, 12:42 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (3)
|
 |
உண்ண உணவில்லை உடுக்கத் துணியில்லை
3 கோடியில் ஆஞ்சநேயர் கோயில்!
-நக்கீரன் (கனடா)-
இந்துக்களுக்கு எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும் கும்பிடக் கூடாது என்ற நியதியே இல்லை. கல், எலி, நாய், மண், பாம்பு, குரங்கு.... இப்படி எதனையும் கும்பிடலாம்.
சைவ ஆகமங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆகமங்களில் கூறப்படும் கோயில் வழிபாட்டு முறைபற்றி சைவர்கள் சிந்திப்பதில்லை. அவை அவர்களுக்குத் தெரியவும் மாட்டாது.
காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சியார் சீனாவுக்குப் போக இருந்தார். அதனை எதிர்த்து அண்மையில் கொலையுண்ட வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் நீதிமன்றம் போனார். வழக்கு விசாரணைக்கு வருமுன் சங்கராச்சாரியார் தனது சீனப் பயணத்தை நிறுத்திவிட்டார். சங்கரராமன் கொலை செய்யப்பட்டதற்கு இந்த எதிர்ப்பும் ஒரு காரணம்.
அண்மைக்காலமாக தமிழர்கள் மத்தியில் அய்யப்பன் வழிபாடு பிரபல்யமாகி வருகிறது. சபரிமலைக்கு இருமுடி தாங்கி மாலை போட்டு மலையேறும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டு போகிறது. அதற்கேற்ப கோயில் வருமானமும் ஏறிக் கொண்டு போகிறது.
ஆனால் அயய்யப்பன் வழிபாடு சைவ ஆகமத்துக்கு முரணானது.
அய்யப்பன் தோற்றம் பற்றி; வௌ;வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.
மோகினி வடிவெடுத்த திருமாலை சிவனார் கூடிப் பெற்ற குழந்தை அய்யப்பன் என்பது அதில் ஒன்று.
காவல் தெய்வமான அய்யனார்தான் அய்யப்பன் என்பது இன்னொன்று.
மதுரையில் வாழ்ந்து வந்த பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சொந்த நாட்டை விட்டு இன்றைய கேரநாட்டில் உள்ள தென்காசி, இந்;தூர், மணியம் ஆகிய இடங்களை பிடித்த இவர்கள் ஆறுகால் மன்னர், தெக்குங்கூர் மன்னர்களின் வசமிருந்த பந்தளம் இராச்சியத்தையும் கைப்பற்றினர். பின்னர் அங்கு நிரந்தர ஆட்சி ஒன்றை நிறுவினர்.
பந்தளம் இராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்த காலத்தில்தான் காட்டில் பகவான் அய்யப்பனை குழந்தையாக கண்டெடுத்தனர். அதன் பின்னர், பந்தளம் குடும்பத்தின் பெயர் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கொல்லம் ஆண்டு 400ல் சபரிமலை கோயில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
பந்தளம் திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டதால் சபரிமலை, அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா, அறக்குளம் உள்ளிட்ட 4 பெரிய கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் வசம் ஆனது. பந்தளம் மன்னர் குடும்பம் பதவி இழந்தாலும் இன்றும் சபரிமலையிலும், ஐயப்ப பக்தர்கள் மனதிலும் அவர் 'அரசர்" ஆகவே திகழ்கிறார்.
இப்போது அய்யப்பனுக்குப் போட்டியாக ஆஞ்சநேயர் (அனுமான்) கோயில்கள் ஆங்காங்கு முளைவிட ஆரம்பித்துள்ளன. கனடாவுக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தர் கொழும்பில் இருந்து அவ்வப்போது வந்து பணம் திரட்டிக் கொண்டு போகிறார். அடுத்து இங்கேயும் ஆஞ்சநேயருக்கு கோயில் உருவாகலாம்!
இந்த ஆஞ்சநேயர் வேறு யாருமல்ல. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இராமனால் அனுப்பப்பட்ட முதல் றோ உளவாளி!
யாழ்ப்பாணம், இணுவில் காங்கேசன்துறை வீதி, மருதனார் மடச் சந்தியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது.
அற்புத ஆஞ்சநேயர், நீங்கள் நினைப்பதைத் தருவார்!
உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் நிறைவேறும்!!
நீங்கள் பர்Pட்சையில் இலகுவாக சித்தி பெறுவீர்கள்;!!
இது போன்ற கவர்ச்சிகரமான துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் வழங்கப்பட்டு வருகிறது.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு புூசைகள், குறி அல்லது அருள்வாக்கு சொல்லுதல், அப்படி இப்படி என்று, பல பந்தாக்கள். இங்கு எடுத்து விடப்படுகின்றன.
எதையும் கேட்டுக் கேள்வியின்றி எளிதாக நம்பிவிடும் இழித்தவாய்த் தமிழர்களுக்குத்தான் எந்த நாட்டிலும் பஞ்சம் இல்லையே!
ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் வெளியுூர் மக்களும், வெளிநாட்டு மக்களும் அதிகரித்துள்ளது.
குறுகிய காலத்தில் காணி வாங்கப்பட்டு, இரட்டைத்தட்டுக் கொண்ட (நிலப்பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்) கீழே மண்டபம், மேலே கோவில், முன்னால் தோட்டம் என கோயில் காட்சி அளிக்கிறது.
கோயில் கட்டப்பட்ட காலத்தில் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்படவில்லை. அனைத்துக் கட்டிடப் பொருட்களும் கடல் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தன.
ஆஞ்சநேய அடியார்களின் உதவியுடன் கோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அப்படித் தீர்மானித்த சில நாட்களில் கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
புத்தம் புதிய கார், கணனி, இணைய வசதிகள் போன்ற சகல வசதிகளுடன் கூடிய நவீன, குளிரூட்டப்பட்ட அலுவலகம் கோயில் உள்ளேயே இயங்குகிறது.
இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க ஒட்டுமொத்தத்தில், ரூபா 300 இலட்சம் (3 கோடி) வரை செலவு செய்யப் பட்டிருக்கிறதாகச் சொல்லப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தனியார் கோயில்கள் மிகக் குறைவு. ஆனால் ஆஞ்சநேயர் கோயில் தனியாருக்கு சொந்தமானது. மூன்று கோடி ரூபாயை முதலீடு செய்த முதலாளி ஒரு அர்ச்சகர்! இந்தத் தகவல்களை இணுவிலில் இருந்து குரு என்பவர் 'தமிழ்ச் சமூகம்" என்ற இணையதள வாயிலாக வெளியிட்டுள்ளார். (றறற.வயஅடைளழஉநைவல.உழஅ)
பிராமணர்களை ஏழைப் பிராமணர்கள் என்று சொல்வது போய் கோடீசுவரப் பிராமணர்கள் என்று இனிமேல் சொல்ல வேண்டும். இது கனடாவிற்கும் பொருந்தும்!
தமிழீழத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, படுக்கப் பாய் இல்லாமல் இலட்சக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.
இவர்களுக்கு கடவுள் ஒரு கோப்பை சோற்று வடிவில்தான் தினமும் காட்சி கொடுக்கிறார்!
கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள் ஆகியோருக்கு போதிய சத்துணவு இல்லை. படிக்க பள்ளிக் கூடங்கள் இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை.
இவர்களுக்கு உதவுவதற்கு இங்குள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள் குருவிகள் நெல்மணிகளைப் பொறுக்கிற மாதிரி பணம் திரட்டி அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
அங்கே என்னவென்றால் அர்ச்சகர் ஒருவர் 3 கோடி ரூபாய் செலவில் நவீன வசதியுடன் ஆஞ்சநேயர் கோயில் கட்டி பக்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்! வியாபாரமும் ஓகோ ஓகோ என்று நடக்கிறது!
தமிழர்களுடைய நேரம் நினைப்பு, உழைப்பு, பொருள் மூடத்தனத்தையும் மூடபக்தியையும் வளர்ப்பதில்தான் செலவாகிறது.
பணக்காரர்கள் மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் கோயிலுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.
ஏழைகள் இந்தக் கடவுளரைக் கும்பிட்டால் தங்கள் ஏழ்மை வறுமை நோய் போகும் என நம்பி இந்தக் கோயில்களுக்குச் சென்று காசைக் கரியாக்குகிறார்கள்.
கோயில்களும் நல்ல தருணம் இது நழுவ விடக்கூடாது என்ற அவாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றாமையை, இயலாமையை, மனவுளைச்சலை, மனவழுத்தங்களை பயன்படுத்தி அவர்களை சுரண்டுகின்றன.
கனடாவில் வேலை இல்லாத சிக்கல் இருக்கிறது. எனவே நோய், தோசம் இவற்றோடு உங்கள் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் அம்பாள் தீர்த்து வைப்பாள் வாருங்கள் வந்து அர்ச்சனை அபிசேகம் செய்யுங்கள் என வானொலி மூலம் கோயில்கள் விளம்பரம் செய்கின்றன.
[size=18]அறிவியல் கண்டுபிடித்த வானொலிகள் பணத்துக்காக இப்படியான விளம்பரங்களை எந்த வெட்கமோ துக்கமோ இன்றி ஒலிபரப்புகின்றன.
தமிழீழத்தில் நடந்த யுத்தத்தில் கிட்டத்தட்ட 500 சைவக் கோயில்கள் எதிரி படையால் குண்டு போட்டுத் தகர்க்கப்பட்டன. பாடல்பெற்ற தலங்களான திருக்கேதீசுவரம் கோணேசுவரம் சேதப்படுத்தப்பட்டன.
சக்தி வாய்ந்த தெய்வங்களால் தங்களையே காப்பாற்ற முடியவில்லை. மற்றவர்களை எப்படிக் காப்பாற்றப் போகின்றன?
காலை, மதியம், மாலை என்று மூன்று நேரமும் சந்திரசேகர மவுலீஸ்வர புூசை செய்த காஞ்சி சங்கராச்சாரியாரே இப்போது கொலை, கொலைமுயற்சி போன்ற கடும் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சிவலோகம் வைகுண்டம் போக தனது பக்தர்களுக்கு விசா வழங்கிக் கொண்டிருந்த சங்கராச்சாரியாரால் நீதிமன்றத்தில் ஒரு 'பெயில்" கூட எடுக்க முடியவில்லை!
லோககுரு, நடமாடும் தெய்வம், வாழும் கடவுள் எனப் போற்றப்படும் சங்கராச்சாரியாருக்கே இந்தக் கதி என்றால் மற்றவர்கள் எந்த மூலைக்கு?
இவற்றைப் பார்த்தாவது படித்த தமிழர்கள் திருந்த வேண்டாமா?
கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது எத்தன்மையான கடவுள் என்பதை முடிவு செய்யுங்கள்.
திருமூலரின் அன்பே சிவம்;;;; பாரதியாரின் அறிவே கடவுள் என்றால் அது எமக்கும் சம்மதமே!
கோயில் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் கோயில் கொடியவர்களின் சுரண்டல் மடமாக இருக்கக் கூடாது. மாறாக கோயில்கள் சமுதாய மையங்களாக இருக்க வேண்டும். அப்படியான கோயில்கள் எமக்கும் சம்மதமே.
'கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே ஆவதும் அழிவதூம் இல்லை இல்லை இல்லையே! (சிவவாக்கியார்)
கோயிலுக்குச் சென்று வணங்குவதே வழிபாடு. தெப்பக் குளத்தில் குளிப்பதே குளிப்பு என்று எண்ணுவது வீண் என்பதையும் உள்ளத்தில் ஆழ்ந்த ஈடுபாடின்றி புறத்தே வழிபடும் வழிபாட்டினால் எந்தப் பயுனும் இல்லை என்பதையும் பதிணெண் சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியார் எல்லோருக்கும உறைக்குமாறு; எடுத்துச் சொல்கிறார்.
யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்கு பஞ்சமா? இல்லையே. இடிந்தவை போக எஞ்சியவை நு}ற்றுக் கணக்கில் இருக்கின்றனவே.
பின் எதற்காக 3 கோடி ரூபாயில் அனுமானுக்கு ஒரு கோயில்? இந்தப் பணத்தில் நாலு தொழிற்சாலைகளைத் தொடக்கி இருந்தால் நு}ற்றுக்கணக்கான குடும்பங்கள் பிழைக்க முடியுமே!
நன்றி தமிழ்நாதம்
|
|
|
| மன்னிப்பு கேட்ட ஷாருக்கான் |
|
Posted by: Vaanampaadi - 12-11-2004, 06:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
இலங்கை: மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்
கொழும்பு:
இலங்கையில் மறைந்த புத்த மத துறவி கங்கோதவிலா சோமாவின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று, கொழும்பு நகரில் நடைபெறும் இந்தி திரைப்பட விழாவை ஒத்திவைக்காவிட்டால் தீக்குளித்து இறப்போம் என்று புத்த மத துறவிகள் (பிட்சுகள்) மிரட்டல் விடுத்தனர்.
நினைவு தினம் என்று தெரியாமல் விழா தேதியை முடிவு செய்துவிட்டதாக அவர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரினார். இதையடுத்து புத்த பிட்சுக்கள் மிரட்டலை கைவிட்டு கலைந்து சென்றனர். புத்தத் துறவிகளின் இந்தப் போராட்டத்துக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதும் மிரட்டலைக் கைவிட ஒரு காரணமாகும்.
நடிகர் ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா, சைப் அலிகான் உள்ளிட்ட இந்திப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் டெம்ப்டஷேன்2004 என்ற திரை விழா இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது.
புத்த மதத் துறவி கங்கோதவிலா சோமாவின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே திரைப்பட விழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று புத்த மத துறவிகள் நிகழ்ச்சி அமைப்பாளர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து நேற்று விழா அமைப்பாளர்களை சந்தித்த சில புத்த மதத் துறவிகள், எங்களது உணர்வுகளை மீறி இன்று விழா நடந்தால் விழா அரங்கம் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்னர்.
இதன் தொடர்ச்சியாக இன்று விழா நடக்கும் பகுதியில் புத்த துறவிகள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் ராணுவத்தினரும் அப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து இன்று அவர்களிடம் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் சார்பில் நடிகர் ஷாருக்கான் மன்னிப்பு கோரினார். நினைவு தினம் என்பது தெரியாமல் நாள் குறிக்கப்பட்டுவிட்டதாகவும், விழாவைத் தொடங்கும் முன் மறைந்த துறவிக்காக அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து போராட்டத்தை புத்த பிட்சுக்கள் கைவிட்டனர்.
|
|
|
| ÀÄÅ£ÉÁ¡¸ ±É ¿¢¨ÉìÌõ§À¡Ð ÀÄÁ¡¸ þÕìÌõ ¾Á¢Æ¢Æ þáÏÅõ... |
|
Posted by: selvanNL - 12-11-2004, 04:10 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
விடுதலைப்புலிகளின் அதிர்ச்சிகரமான எழுச்சிகளின் வரலாற்றைப் போராட்டம் உருப்பெற்ற ஆரம்ப காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமானதாய் இருக்கும்.
1970களின் பிற்பகுதியில் மன்னார் முருங்கன் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சிறு பாசறை ஒன்றில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான செல்லக்கிளி அம்மானின் தலைமையிலான குழு தங்கியிருந்தது. அதனை மோப்பம் பிடித்தறிந்த சிறிலங்கா காவல்துறையின் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான அணியொன்று அவர்களைக் கைது செய்வதற்கான தங்கள் திட்டத்தின் சுமார் 90சத வீதத்தை நிறைவு செய்தனர். அடுத்த கட்டமாகக் கைது செய்தவர்களை தங்கள் வாகனத்தில் ஏற்றுவதே மீதி 10சதவீத நடவடிக்கையாக இருந்தது. இந்தப் பொழுதில் செல்லக்கிளி அம்மானின் சமயோசிதபுத்தி தீவிரமாக வேலை செய்தது.
இதன் பயனாக அதிவேகச் செயற்பாடொன்றின் முலம் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிகள் பறித்தெடுக்கப்பட்டது. பறிக்கப்பட்ட அவர்களின் துப்பாக்கிகளாலேயே அவர்களின் கதை முடிக்கப்பட்டது. சற்றுமுன் கைதிகளாய் நோக்கப்பட்ட புலிகள் அடுத்த நிமிடங்களில். புலிப்படைக்கு புதிய ஆயுதங்களையும் சேர்த்து எதிரிகளையும் அழித்த பெருமையோடு எழுந்து நின்றனர். இது விடுதலைப்புலிகள் வீழ்கின்ற தாய் நினைக்கின்றபோது எழுகின்ற வரலாற்றின் முதலாவது சம்பவமென்று குறிப்பிடலாம்.
1987 யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைப்பும் மக்கள் தொகையும் விடுதலைப்புலிகளின் அரசியல் இராணுவ நடவடிக்கைகளை அதிகம் வேரூன்றிச் செயற்படுவதற்கு வாய்ப்பானதாக அமைந்திருந்தது. ஆகவே அதனைப் புலிகளிடம் இருந்து பிரிப்பதன் மூலம் புலிகளின் கணிசமான அளவு செயற்பாட்டை முடக்கலாம் என எண்ணிய ஜெயவர்த்தன அரசு வடமராட்சிப்பகுதியை 'ஒப்பிரேசன் லிபரேசன்" நடவடிக்கை முலம் கைப்பற்றியது.
புலிகளிற்கும் தமிழகத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு புலிகளின் கடலாதிக்கம் குறைக்கப்பட்டதாலும். விடுதலைக்கு பெரும் பலம் சேர்த்த வடமராட்சி மண்ணும் துணையான மக்களும் தனது ஆதிக்கத்துள் அடக்கப்பட்டதாலும். வடமராட்சியைத் தக்கவைக்க முடியாத புலிகளால் யாழ் குடாவின் எந்தப்பகுதியையும் தக்கவைக்கமுடியாதென ஒரு தவறான இராணுவ மதிப்பீட்டைச் செய்து புலிகள் அழியப் போகிறார்கள் என ஜே. ஆர் ஜெயவர்த்தனா அரசும் படைகளும் எண்ணின. இந்தப் பொழுதில்தான் பிரபாகரனின் போரியல் தொடர்பான நுண்அறிவுக் கரும்புலி வடிவம் பெற்று நெல்லியடிக்குள் புகுந்த போது புலிகள் விழவில்லை என்பதை ஜெயவர்த்தனா அரசு புரிந்து கொண்டு இந்தியாவின் காலடியிற் போய் விழுந்தது.
இதே ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தயாரித்து போலியான போர்த்தணிவை உருவாக்கி, மக்கள் மனங்களில் விடுதலை உணர்வைத் தணித்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில், புலிகளின் ஆயுத ஒப்படைப்பும் சில தெளிவற்ற போராளிகளின் அமைப்பை விட்டான வெளியேற்றமும், தாங்கள் வல்லரசு என்ற இறுமாப்பும் புலிகளைப் பலவீனமானவர்கள் என நினைக்க வைத்தது. இதுவே இந்திய புலிகள் போருக்கு அத்திவாரம் ஆனது.
ஆனாலும் 'சில ஆயிரம் சாரம் கட்டிய பெடியன்களை ஒரு சிகரெட் புகைப்பதற்குள் முடித்து விடுவோம்" என்று மதிப்பீடு செய்த இந்தியச் சிப்பாய்களிற்கு கால்கள் இழந்த உயிர்கள் இழந்த தங்கள் சகாக்களின் தொகையை மதிப்பீடு செய்ய முடியாத சோகமயமான வெளியேற்றமே மிஞ்சியது. இந்தியாவுடன் சண்டையிட்டு புலிகள் அழியப்போகின்றார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிறிலங்கா, இந்திய அரசுகளிற்கும் எம்மவர்கள் சிலருக்கும் அசடு வழிந்ததுதான் மிச்சம்.
1995 மீண்டும் யாழ்ப்பாணம் மீதான சூரியக்கதிர் நடவடிக்கையில் புலிகளின் பின்வாங்கல்கள், பெருந்தொகையான மக்களைச் தம்வசப்படுத்தியது., யாழ் போதனா வைத்தியசாலையைக் கைப்பற்றியதன்
மூலம் புலிகளிற்குப் பெரும் மருத்துவச் சிக்கல் உண்டாகுமென்ற கணிப்பீடு, யாழ்ப்பாணத்தைப் புலிகள் தக்கவைக்க முடியாது தப்பியோடி விட்டனர் என்ற புலிகளின் இராணுவ பலம் மீதான மதிப்பீடு என்பன அப்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தையை 94 வீதப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறிக்கை விடச்செய்தது.
யாழ் பிடிப்பிற்கான சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒயமுன்னர் அதை எங்கு எப்போது எப்படித் தட்டினால் உடையும் என்ற தலைவர் பிரபாகரனின் போரியல் மூளை தான் சிந்தித்து வைத்ததைச் செயற்படுத்தியது.
ஓயாத அலைகளாய் முல்லைத்தீவுக்குள் புலிகள் புகுந்தபோது சிங்கள தேசத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளில் இழவு வீட்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த தோல்வியை மறைப்பதற்காய் இறந்தத் சிப்பாய்களின் உடல்களை ஏற்கமறுத்தது ஒருபுறமிருக்க, பலவீனமாகக் கருதப்பட்ட புலிகளிற்கு 122 மிமீ ஆட்லறிகள் இரண்டுடன் பலகோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களும் வழங்கி புலிகளைப் பலப்படுத்தினர்.
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள பெருந்தொகைப் படையினருக்கான வழங்கல்களை மேற்கொள்வதற்கும். வன்னியில் மையங் கொண்ட புலிகளின் பலத்தைச் சிதைப்பதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட கண்டி வீதியுூடாக யாழ்ப்பாணம் நோக்கிய ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் புலிகளை தற்காப்புச் சமரிற்கு இழுத்து புலிகளின் ஆள், ஆயுதபலங்களைச் சிதைக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த போதே ஓயாத அலைகள் இரண்டாகி புலிகள் கிளிநொச்சி நகரை மீட்டு n;ஜசிக்குறு என்ற சிங்களப் படையினரின் வலிந்து தாக்குதலிற்கும் முற்றுப் புள்ளி வைத்தனர்.
ஜெயசிக்குறு நடவடிக்கை முலம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து சிறிய சிறிய இராணுவ நடவடிக்கைகள் முலம் வன்னியின் பல பகுதிகளிற்கும் பரந்து வன்னியை கூறுபோடும் அளவிற்கு இராணுவம் தங்களது படைகளைப் பரப்பியிருந்த காலம். எந்த இடத்திலும் இராணுவத்தின் எறிகணை விழக்கூடிய தூரத்தில் வன்னிமண் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அந்த விதத்தில் புலிகளின் கணிசமான அசைவுகளையும் நடவடிக்கைகளையும் மந்தப்படுத்தியதாகச் சிங்களப் படைத்துறை மார்தட்டிய போதுதான்.
'அகலக்கால் வைப்பவன் அழிவான்" என்ற தலைவர் பிரபாகரனின் படைத்தத்துவம் வேலை செய்யத் தொடங்கியது. ஓயாத அலைகள்-3 ஒட்டுசுட்டானுள் ஊடுருவி மன்னார் வரை பரந்து ஆனையிறவுள் புகுந்து பளையைத் தழுவியபோது, உலகமே மூக்கில் விரலை வைத்து அழிவதாய் நினைக்கப்பட்ட புலிகள் அலைகளாய் மீண்டும் எழுந்தனர்.
பின்னர் ஒயாத அலைகள் 3ல் மீட்கப்பட்ட தென்மராட்சிப் பகுதியில் அமைந்திருந்த முன்னரங்கப் பகுதியின் மீது இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளால் புலிகளிற்கு ஏற்பட்ட சிறுசிறு இழப்புக்கள், தனங்கிளப்பு, அறுகு வெளிப்பகுதியில் இருந்து புலிகளின் தந்திரோபாயப் பின்வாங்கல்கள், அமைதியை வரவேற்பதற்கான விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த நடவடிக்கைகள் என்பவற்றைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடாகக் கருதி உசாரடைந்த சிறிலங்கா அரசினதும் படைகளினதும் சிந்தனை 'தீச்சு வாலையாய்" மிளாசி எரிய ஆரம்பித்த போது, நீராறாய்ப் படர்ந்து புலிகள் அதை அணைத்து நிமிர்ந்தபோது அதிர்ந்து போனது சிங்களதேசம்.
இப்போது மீண்டும் இவ்வாறான தப்புக் கணிப்பீடுகளைச் சிங்கள அரசு மேற்கொள்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஆடம்பர மோகத்தினுள் வாழ்க்கையைப் புதைத்திருக்கும் மக்களின் விடுதலை உணர்வு மழுங்கடிக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணப்பாடும், நீண்ட போர் ஒய்வில் உள்ள போராளிகளின் போர்க் குணம் மங்கி பொதுவாழ்வு நோக்கி அவர்களின் பாதை திரும்புகின்றதென்ற நப்பாசையும், கிழக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் புலிகளிற்கு எற்பட்ட படை இழப்பும், அங்கு ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையும், கருணா மீதான குருட்டு நம்பிக்கையும், சர்வதேசத்தின் பார்வைக்கு புலிகள் கொடுக்கும் மதிப்பும், இயக்கத்தின் பலவீனமாகக் கருதப்பட்டே சிங்கள அரசு சமாதானத்தின் மீதான அக்கறையைத் தளர்த்தியுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.
இக்கணிப்பீட்டின்படி சிங்கள அரசு சமாதானத்தைப் புறம் தள்ளிப் போரை தொடக்குமானால் இன்னுமொரு எழுச்சிமிகு வரலாறு பதியப்படும் என்பதற்கு வரலாறே சாட்சி.
---------------------------------------------------------------------------------------------------------------------
¿ýÈ¢ ¾Á¢ú¿¡¾õ §ÁÖõ ®Æ¿¡¾õ...
|
|
|
| கொலஸ்ட்ரால் குறையணுமா? பார்லி சாப்பிடுங்க. |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:22 PM - Forum: மருத்துவம்
- Replies (2)
|
 |
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு பார்லி ஒரு கண்கண்ட மருந்தாகும். அதில் காணப்படும் பீட்டா குளுக்கான் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து கொலஸ்;ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதேப் போன்ற நார்ச்சத்து மற்ற வகை முழு தானியங்களிலும், பழங்கள் மற்றும் காய்கறி களிலும் காணப்படுகிறது. இருப்பினும் மற்ற முழு தானியங்களைக் காட்டிலும் பார்லியில் தான் பீ;ட்டா குளுக்கான் அதிகமாக உள்ளது. இதயத்துக்கு கெடுதல் செய்யும் எல்.டி.எல். என்ற கொழுப்பை பார்லியானது 8 முதல் 17.4 சதவீதம் வரை குறைக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர்.
ஆனால் பார்லியின் இந்த அதீத் சக்தி நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதனால் மற்ற முழு தானியங்களுடன் ஒப்பிடும் போது பார்லியின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. ஆகையால் கொலஸ்ட்ரால் குறைய விரும்புபவர்கள் பார்லியை அதிகமாக பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
|
|
|
| பச்சைத் தேயிலை புற்றுநோயை தடுக்கும் |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:19 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
பச்சைத் தேயிலையில் காணப்படும் பாலிபெனால்ஸ் என்ற பொருட்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பரவுவதை வெற்றிகரமாக தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். முதலில் புற்றுநோய் கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்த நாளங்களுக்கு செல்லும் சப்ளையை தடுக்கும், இந்த உட் பொருள்கள், அதன்மூலம் புற்றுநோய் கட்டிகள் வேகமாக பரவுவதை தடுத்து நிறுத்துகிறது. இதுதவிர ஐழுகு-1 என்ற புரோட்டீன் அளவு அதிகமாகமால் பார்த்துக் கொள்கிறது.
இந்த குறிப்பிட்ட புரோட்டீன் அதிகரித்தால் புரோஸ்டேட், மார்பக புற்றுநோய், நுரையீரல் மற்றும் பெருங்குடல் ஆகிய புற்றுநோய் ஆபத்துக்களும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
|
|
|
| காரீயம் கண்ணுக்கும் ஆபத்து தான்.. |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:16 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
காசோலின் மற்றும் பெயிண்ட் கலவைகள் இன்னும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் காணப்படும் காரீயம் மனிதர்களின் உடல் நலனுக்கு ஆபத்தானவை. மனித உடம்புக்குள் ஊடுருவும் காhPயம் எலும்புகளில் சேர்த்து வைக்கப்படும். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை இதுபோன்று காரீயம் சேரும் போது, அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெளியாக ஆரம்பிக்கும். இப்படி வெளியாகும் காரீயம் மற்ற உறுப்புகளுக்கு ஆபத்தாக மாறும். ரத்த ஓட்டத்தில் காரீயம் கலக்கும் போது உயர் ரத்த அழுத்த சிக்கல்கள், நினைவாற்றல் குறைவு, கண் பார்வை கோளாறு போன்ற சிக்கல்கள் உண்டாகும்.
காரீயம் வெளிப்பாடு வெவ்வேறு அளவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். கண் லென்சுகளில் காரீயம் சேரத் தொடங்கும். இன்னொருபுறம் கல்சியம் ஈர்ப்பு தன்மையில் குறுக்கீடுகள் தோன்றும். கால்சியம் ஈர்ப்பு ஒழுங்காக இருந்தால் தான் கண் லென்ஸ் ஆரோக்கியமாக இருக்கும். காட்ராக்ட் காரணமாக அகற்றப்பட்ட கண்களை சோதனை செய்து பார்த்த போது அதில் காhPயம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| பெண்களுக்கான வயகரா |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:11 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
ஆண்மை சக்தியை அதிகாpக்க செய்யும் வயகரா மாத்திரை உலகம் முழுவதும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது அல்லவா?. இதே போன்று பெண் களுக்கான வயகரா ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பேண்ட்- எய்ட் வடிவில் இருக்கும் இதனை அடிவயிற்றில் ஒட்டி வைத்துக் கொண்டால் செக்ஸ் உணர்வு அதிகாpக்குமாம். கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்தவர்கள், வயதான பெண்கள் உள்பட 2200 பேரிடம் முதற்கட்ட சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அவர்கள் அனைவரும் புதிய சிகிச்சை செக்ஸ் ஆசையை அளவுக்கு அதிகமாக தூண்டுவதாக தொpவித்துள்ளனர். பக்க விளைவுகளும் மிக மிக குறைவு என்று கூறப்படுகிறது. எனவே புதிய பெண்கள் வயகரா விற்பனைக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி விட்டது.
|
|
|
| முட்டை சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும் புது தகவல் |
|
Posted by: ஊமை - 12-11-2004, 03:08 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
காலையில் முட்டை சாப்பிட்டால் ஊளைச் சதை குறையுமா? குறையும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. வழக்கமான காலை உணவுக்கு பதிலாக முட்டை சாப்பிட்டால் ஏற்படும் திருப்தி மதியம் வரை நீடிக்கிறது. அதனால் மதியம் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. காலை உணவாக முட்டை எடுத்துக் கொண்டவர் களையும் மற்ற வகை உணவு எடுத்துக் கொண்டவர் களிடமும் ஆய்வு நடத்தியதில் வேறு வகை காலை உணவு உட் கொண்ட வர்கள் அதிக அளவில் மதிய உணவு எடுத்துக் கொண்டது தொpய வந்துள்ளது. ஆனால் இந்த ஆய்வில் உடலில் கொலஸ்டரால்; அளவு அதிகாpக்கிறதா என்பதை ஆய்வு செய்யவில்லை. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்த உள்ளதாக உடல் பருமன் ஆய்வுக்கான ரோசெஸ்டர் மைய செயல் இயக்குநர் நிகில் துரந்தர் தெருவித்துள்ளார்.
|
|
|
|