Yarl Forum
பச்சைத் தேயிலை புற்றுநோயை தடுக்கும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: பச்சைத் தேயிலை புற்றுநோயை தடுக்கும் (/showthread.php?tid=6212)



பச்சைத் தேயிலை புற்றுநோயை தடுக்கும் - ஊமை - 12-11-2004

பச்சைத் தேயிலையில் காணப்படும் பாலிபெனால்ஸ் என்ற பொருட்கள் புரோஸ்டேட் புற்றுநோய் பரவுவதை வெற்றிகரமாக தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். முதலில் புற்றுநோய் கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்த நாளங்களுக்கு செல்லும் சப்ளையை தடுக்கும், இந்த உட் பொருள்கள், அதன்மூலம் புற்றுநோய் கட்டிகள் வேகமாக பரவுவதை தடுத்து நிறுத்துகிறது. இதுதவிர ஐழுகு-1 என்ற புரோட்டீன் அளவு அதிகமாகமால் பார்த்துக் கொள்கிறது.
இந்த குறிப்பிட்ட புரோட்டீன் அதிகரித்தால் புரோஸ்டேட், மார்பக புற்றுநோய், நுரையீரல் மற்றும் பெருங்குடல் ஆகிய புற்றுநோய் ஆபத்துக்களும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது