![]() |
|
ÀÄÅ£ÉÁ¡¸ ±É ¿¢¨ÉìÌõ§À¡Ð ÀÄÁ¡¸ þÕìÌõ ¾Á¢Æ¢Æ þáÏÅõ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: ÀÄÅ£ÉÁ¡¸ ±É ¿¢¨ÉìÌõ§À¡Ð ÀÄÁ¡¸ þÕìÌõ ¾Á¢Æ¢Æ þáÏÅõ... (/showthread.php?tid=6209) |
ÀÄÅ£ÉÁ¡¸ ±É ¿¢¨ÉìÌõ§À¡Ð ÀÄÁ¡¸ þÕìÌõ ¾Á¢Æ¢Æ þáÏÅõ... - selvanNL - 12-11-2004 விடுதலைப்புலிகளின் அதிர்ச்சிகரமான எழுச்சிகளின் வரலாற்றைப் போராட்டம் உருப்பெற்ற ஆரம்ப காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமானதாய் இருக்கும். 1970களின் பிற்பகுதியில் மன்னார் முருங்கன் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சிறு பாசறை ஒன்றில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான செல்லக்கிளி அம்மானின் தலைமையிலான குழு தங்கியிருந்தது. அதனை மோப்பம் பிடித்தறிந்த சிறிலங்கா காவல்துறையின் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான அணியொன்று அவர்களைக் கைது செய்வதற்கான தங்கள் திட்டத்தின் சுமார் 90சத வீதத்தை நிறைவு செய்தனர். அடுத்த கட்டமாகக் கைது செய்தவர்களை தங்கள் வாகனத்தில் ஏற்றுவதே மீதி 10சதவீத நடவடிக்கையாக இருந்தது. இந்தப் பொழுதில் செல்லக்கிளி அம்மானின் சமயோசிதபுத்தி தீவிரமாக வேலை செய்தது. இதன் பயனாக அதிவேகச் செயற்பாடொன்றின் முலம் சிறிலங்கா காவல்துறையின் துப்பாக்கிகள் பறித்தெடுக்கப்பட்டது. பறிக்கப்பட்ட அவர்களின் துப்பாக்கிகளாலேயே அவர்களின் கதை முடிக்கப்பட்டது. சற்றுமுன் கைதிகளாய் நோக்கப்பட்ட புலிகள் அடுத்த நிமிடங்களில். புலிப்படைக்கு புதிய ஆயுதங்களையும் சேர்த்து எதிரிகளையும் அழித்த பெருமையோடு எழுந்து நின்றனர். இது விடுதலைப்புலிகள் வீழ்கின்ற தாய் நினைக்கின்றபோது எழுகின்ற வரலாற்றின் முதலாவது சம்பவமென்று குறிப்பிடலாம். 1987 யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைப்பும் மக்கள் தொகையும் விடுதலைப்புலிகளின் அரசியல் இராணுவ நடவடிக்கைகளை அதிகம் வேரூன்றிச் செயற்படுவதற்கு வாய்ப்பானதாக அமைந்திருந்தது. ஆகவே அதனைப் புலிகளிடம் இருந்து பிரிப்பதன் மூலம் புலிகளின் கணிசமான அளவு செயற்பாட்டை முடக்கலாம் என எண்ணிய ஜெயவர்த்தன அரசு வடமராட்சிப்பகுதியை 'ஒப்பிரேசன் லிபரேசன்" நடவடிக்கை முலம் கைப்பற்றியது. புலிகளிற்கும் தமிழகத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு புலிகளின் கடலாதிக்கம் குறைக்கப்பட்டதாலும். விடுதலைக்கு பெரும் பலம் சேர்த்த வடமராட்சி மண்ணும் துணையான மக்களும் தனது ஆதிக்கத்துள் அடக்கப்பட்டதாலும். வடமராட்சியைத் தக்கவைக்க முடியாத புலிகளால் யாழ் குடாவின் எந்தப்பகுதியையும் தக்கவைக்கமுடியாதென ஒரு தவறான இராணுவ மதிப்பீட்டைச் செய்து புலிகள் அழியப் போகிறார்கள் என ஜே. ஆர் ஜெயவர்த்தனா அரசும் படைகளும் எண்ணின. இந்தப் பொழுதில்தான் பிரபாகரனின் போரியல் தொடர்பான நுண்அறிவுக் கரும்புலி வடிவம் பெற்று நெல்லியடிக்குள் புகுந்த போது புலிகள் விழவில்லை என்பதை ஜெயவர்த்தனா அரசு புரிந்து கொண்டு இந்தியாவின் காலடியிற் போய் விழுந்தது. இதே ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தயாரித்து போலியான போர்த்தணிவை உருவாக்கி, மக்கள் மனங்களில் விடுதலை உணர்வைத் தணித்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில், புலிகளின் ஆயுத ஒப்படைப்பும் சில தெளிவற்ற போராளிகளின் அமைப்பை விட்டான வெளியேற்றமும், தாங்கள் வல்லரசு என்ற இறுமாப்பும் புலிகளைப் பலவீனமானவர்கள் என நினைக்க வைத்தது. இதுவே இந்திய புலிகள் போருக்கு அத்திவாரம் ஆனது. ஆனாலும் 'சில ஆயிரம் சாரம் கட்டிய பெடியன்களை ஒரு சிகரெட் புகைப்பதற்குள் முடித்து விடுவோம்" என்று மதிப்பீடு செய்த இந்தியச் சிப்பாய்களிற்கு கால்கள் இழந்த உயிர்கள் இழந்த தங்கள் சகாக்களின் தொகையை மதிப்பீடு செய்ய முடியாத சோகமயமான வெளியேற்றமே மிஞ்சியது. இந்தியாவுடன் சண்டையிட்டு புலிகள் அழியப்போகின்றார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த சிறிலங்கா, இந்திய அரசுகளிற்கும் எம்மவர்கள் சிலருக்கும் அசடு வழிந்ததுதான் மிச்சம். 1995 மீண்டும் யாழ்ப்பாணம் மீதான சூரியக்கதிர் நடவடிக்கையில் புலிகளின் பின்வாங்கல்கள், பெருந்தொகையான மக்களைச் தம்வசப்படுத்தியது., யாழ் போதனா வைத்தியசாலையைக் கைப்பற்றியதன் மூலம் புலிகளிற்குப் பெரும் மருத்துவச் சிக்கல் உண்டாகுமென்ற கணிப்பீடு, யாழ்ப்பாணத்தைப் புலிகள் தக்கவைக்க முடியாது தப்பியோடி விட்டனர் என்ற புலிகளின் இராணுவ பலம் மீதான மதிப்பீடு என்பன அப்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்தையை 94 வீதப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறிக்கை விடச்செய்தது. யாழ் பிடிப்பிற்கான சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒயமுன்னர் அதை எங்கு எப்போது எப்படித் தட்டினால் உடையும் என்ற தலைவர் பிரபாகரனின் போரியல் மூளை தான் சிந்தித்து வைத்ததைச் செயற்படுத்தியது. ஓயாத அலைகளாய் முல்லைத்தீவுக்குள் புலிகள் புகுந்தபோது சிங்கள தேசத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளில் இழவு வீட்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த தோல்வியை மறைப்பதற்காய் இறந்தத் சிப்பாய்களின் உடல்களை ஏற்கமறுத்தது ஒருபுறமிருக்க, பலவீனமாகக் கருதப்பட்ட புலிகளிற்கு 122 மிமீ ஆட்லறிகள் இரண்டுடன் பலகோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களும் வழங்கி புலிகளைப் பலப்படுத்தினர். யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள பெருந்தொகைப் படையினருக்கான வழங்கல்களை மேற்கொள்வதற்கும். வன்னியில் மையங் கொண்ட புலிகளின் பலத்தைச் சிதைப்பதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட கண்டி வீதியுூடாக யாழ்ப்பாணம் நோக்கிய ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் புலிகளை தற்காப்புச் சமரிற்கு இழுத்து புலிகளின் ஆள், ஆயுதபலங்களைச் சிதைக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த போதே ஓயாத அலைகள் இரண்டாகி புலிகள் கிளிநொச்சி நகரை மீட்டு n;ஜசிக்குறு என்ற சிங்களப் படையினரின் வலிந்து தாக்குதலிற்கும் முற்றுப் புள்ளி வைத்தனர். ஜெயசிக்குறு நடவடிக்கை முலம் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து சிறிய சிறிய இராணுவ நடவடிக்கைகள் முலம் வன்னியின் பல பகுதிகளிற்கும் பரந்து வன்னியை கூறுபோடும் அளவிற்கு இராணுவம் தங்களது படைகளைப் பரப்பியிருந்த காலம். எந்த இடத்திலும் இராணுவத்தின் எறிகணை விழக்கூடிய தூரத்தில் வன்னிமண் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அந்த விதத்தில் புலிகளின் கணிசமான அசைவுகளையும் நடவடிக்கைகளையும் மந்தப்படுத்தியதாகச் சிங்களப் படைத்துறை மார்தட்டிய போதுதான். 'அகலக்கால் வைப்பவன் அழிவான்" என்ற தலைவர் பிரபாகரனின் படைத்தத்துவம் வேலை செய்யத் தொடங்கியது. ஓயாத அலைகள்-3 ஒட்டுசுட்டானுள் ஊடுருவி மன்னார் வரை பரந்து ஆனையிறவுள் புகுந்து பளையைத் தழுவியபோது, உலகமே மூக்கில் விரலை வைத்து அழிவதாய் நினைக்கப்பட்ட புலிகள் அலைகளாய் மீண்டும் எழுந்தனர். பின்னர் ஒயாத அலைகள் 3ல் மீட்கப்பட்ட தென்மராட்சிப் பகுதியில் அமைந்திருந்த முன்னரங்கப் பகுதியின் மீது இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளால் புலிகளிற்கு ஏற்பட்ட சிறுசிறு இழப்புக்கள், தனங்கிளப்பு, அறுகு வெளிப்பகுதியில் இருந்து புலிகளின் தந்திரோபாயப் பின்வாங்கல்கள், அமைதியை வரவேற்பதற்கான விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த நடவடிக்கைகள் என்பவற்றைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடாகக் கருதி உசாரடைந்த சிறிலங்கா அரசினதும் படைகளினதும் சிந்தனை 'தீச்சு வாலையாய்" மிளாசி எரிய ஆரம்பித்த போது, நீராறாய்ப் படர்ந்து புலிகள் அதை அணைத்து நிமிர்ந்தபோது அதிர்ந்து போனது சிங்களதேசம். இப்போது மீண்டும் இவ்வாறான தப்புக் கணிப்பீடுகளைச் சிங்கள அரசு மேற்கொள்வதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஆடம்பர மோகத்தினுள் வாழ்க்கையைப் புதைத்திருக்கும் மக்களின் விடுதலை உணர்வு மழுங்கடிக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணப்பாடும், நீண்ட போர் ஒய்வில் உள்ள போராளிகளின் போர்க் குணம் மங்கி பொதுவாழ்வு நோக்கி அவர்களின் பாதை திரும்புகின்றதென்ற நப்பாசையும், கிழக்கில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் புலிகளிற்கு எற்பட்ட படை இழப்பும், அங்கு ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையும், கருணா மீதான குருட்டு நம்பிக்கையும், சர்வதேசத்தின் பார்வைக்கு புலிகள் கொடுக்கும் மதிப்பும், இயக்கத்தின் பலவீனமாகக் கருதப்பட்டே சிங்கள அரசு சமாதானத்தின் மீதான அக்கறையைத் தளர்த்தியுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. இக்கணிப்பீட்டின்படி சிங்கள அரசு சமாதானத்தைப் புறம் தள்ளிப் போரை தொடக்குமானால் இன்னுமொரு எழுச்சிமிகு வரலாறு பதியப்படும் என்பதற்கு வரலாறே சாட்சி. --------------------------------------------------------------------------------------------------------------------- ¿ýÈ¢ ¾Á¢ú¿¡¾õ §ÁÖõ ®Æ¿¡¾õ... |