Yarl Forum
உண்ண உணவில்லை உடுக்கத் துணியில்லை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: உண்ண உணவில்லை உடுக்கத் துணியில்லை (/showthread.php?tid=6206)



உண்ண உணவில்லை உடுக்கத் துணியில்லை - Nada - 12-12-2004

உண்ண உணவில்லை உடுக்கத் துணியில்லை
3 கோடியில் ஆஞ்சநேயர் கோயில்!
-நக்கீரன் (கனடா)-


இந்துக்களுக்கு எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும் கும்பிடக் கூடாது என்ற நியதியே இல்லை. கல், எலி, நாய், மண், பாம்பு, குரங்கு.... இப்படி எதனையும் கும்பிடலாம்.

சைவ ஆகமங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆகமங்களில் கூறப்படும் கோயில் வழிபாட்டு முறைபற்றி சைவர்கள் சிந்திப்பதில்லை. அவை அவர்களுக்குத் தெரியவும் மாட்டாது.

காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சியார் சீனாவுக்குப் போக இருந்தார். அதனை எதிர்த்து அண்மையில் கொலையுண்ட வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் நீதிமன்றம் போனார். வழக்கு விசாரணைக்கு வருமுன் சங்கராச்சாரியார் தனது சீனப் பயணத்தை நிறுத்திவிட்டார். சங்கரராமன் கொலை செய்யப்பட்டதற்கு இந்த எதிர்ப்பும் ஒரு காரணம்.

அண்மைக்காலமாக தமிழர்கள் மத்தியில் அய்யப்பன் வழிபாடு பிரபல்யமாகி வருகிறது. சபரிமலைக்கு இருமுடி தாங்கி மாலை போட்டு மலையேறும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டு போகிறது. அதற்கேற்ப கோயில் வருமானமும் ஏறிக் கொண்டு போகிறது.

ஆனால் அயய்யப்பன் வழிபாடு சைவ ஆகமத்துக்கு முரணானது.

அய்யப்பன் தோற்றம் பற்றி; வௌ;வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.

மோகினி வடிவெடுத்த திருமாலை சிவனார் கூடிப் பெற்ற குழந்தை அய்யப்பன் என்பது அதில் ஒன்று.

காவல் தெய்வமான அய்யனார்தான் அய்யப்பன் என்பது இன்னொன்று.

மதுரையில் வாழ்ந்து வந்த பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சொந்த நாட்டை விட்டு இன்றைய கேரநாட்டில் உள்ள தென்காசி, இந்;தூர், மணியம் ஆகிய இடங்களை பிடித்த இவர்கள் ஆறுகால் மன்னர், தெக்குங்கூர் மன்னர்களின் வசமிருந்த பந்தளம் இராச்சியத்தையும் கைப்பற்றினர். பின்னர் அங்கு நிரந்தர ஆட்சி ஒன்றை நிறுவினர்.

பந்தளம் இராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்த காலத்தில்தான் காட்டில் பகவான் அய்யப்பனை குழந்தையாக கண்டெடுத்தனர். அதன் பின்னர், பந்தளம் குடும்பத்தின் பெயர் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கொல்லம் ஆண்டு 400ல் சபரிமலை கோயில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

பந்தளம் திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டதால் சபரிமலை, அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா, அறக்குளம் உள்ளிட்ட 4 பெரிய கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் வசம் ஆனது. பந்தளம் மன்னர் குடும்பம் பதவி இழந்தாலும் இன்றும் சபரிமலையிலும், ஐயப்ப பக்தர்கள் மனதிலும் அவர் 'அரசர்" ஆகவே திகழ்கிறார்.

இப்போது அய்யப்பனுக்குப் போட்டியாக ஆஞ்சநேயர் (அனுமான்) கோயில்கள் ஆங்காங்கு முளைவிட ஆரம்பித்துள்ளன. கனடாவுக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தர் கொழும்பில் இருந்து அவ்வப்போது வந்து பணம் திரட்டிக் கொண்டு போகிறார். அடுத்து இங்கேயும் ஆஞ்சநேயருக்கு கோயில் உருவாகலாம்!

இந்த ஆஞ்சநேயர் வேறு யாருமல்ல. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இராமனால் அனுப்பப்பட்ட முதல் றோ உளவாளி!

யாழ்ப்பாணம், இணுவில் காங்கேசன்துறை வீதி, மருதனார் மடச் சந்தியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது.

அற்புத ஆஞ்சநேயர், நீங்கள் நினைப்பதைத் தருவார்!

உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் நிறைவேறும்!!

நீங்கள் பர்Pட்சையில் இலகுவாக சித்தி பெறுவீர்கள்;!!

இது போன்ற கவர்ச்சிகரமான துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் வழங்கப்பட்டு வருகிறது.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு புூசைகள், குறி அல்லது அருள்வாக்கு சொல்லுதல், அப்படி இப்படி என்று, பல பந்தாக்கள். இங்கு எடுத்து விடப்படுகின்றன.

எதையும் கேட்டுக் கேள்வியின்றி எளிதாக நம்பிவிடும் இழித்தவாய்த் தமிழர்களுக்குத்தான் எந்த நாட்டிலும் பஞ்சம் இல்லையே!

ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் வெளியுூர் மக்களும், வெளிநாட்டு மக்களும் அதிகரித்துள்ளது.

குறுகிய காலத்தில் காணி வாங்கப்பட்டு, இரட்டைத்தட்டுக் கொண்ட (நிலப்பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்) கீழே மண்டபம், மேலே கோவில், முன்னால் தோட்டம் என கோயில் காட்சி அளிக்கிறது.

கோயில் கட்டப்பட்ட காலத்தில் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்படவில்லை. அனைத்துக் கட்டிடப் பொருட்களும் கடல் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தன.

ஆஞ்சநேய அடியார்களின் உதவியுடன் கோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அப்படித் தீர்மானித்த சில நாட்களில் கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.

புத்தம் புதிய கார், கணனி, இணைய வசதிகள் போன்ற சகல வசதிகளுடன் கூடிய நவீன, குளிரூட்டப்பட்ட அலுவலகம் கோயில் உள்ளேயே இயங்குகிறது.

இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க ஒட்டுமொத்தத்தில், ரூபா 300 இலட்சம் (3 கோடி) வரை செலவு செய்யப் பட்டிருக்கிறதாகச் சொல்லப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தனியார் கோயில்கள் மிகக் குறைவு. ஆனால் ஆஞ்சநேயர் கோயில் தனியாருக்கு சொந்தமானது. மூன்று கோடி ரூபாயை முதலீடு செய்த முதலாளி ஒரு அர்ச்சகர்! இந்தத் தகவல்களை இணுவிலில் இருந்து குரு என்பவர் 'தமிழ்ச் சமூகம்" என்ற இணையதள வாயிலாக வெளியிட்டுள்ளார். (றறற.வயஅடைளழஉநைவல.உழஅ)

பிராமணர்களை ஏழைப் பிராமணர்கள் என்று சொல்வது போய் கோடீசுவரப் பிராமணர்கள் என்று இனிமேல் சொல்ல வேண்டும். இது கனடாவிற்கும் பொருந்தும்!

தமிழீழத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, படுக்கப் பாய் இல்லாமல் இலட்சக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.

இவர்களுக்கு கடவுள் ஒரு கோப்பை சோற்று வடிவில்தான் தினமும் காட்சி கொடுக்கிறார்!

கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள் ஆகியோருக்கு போதிய சத்துணவு இல்லை. படிக்க பள்ளிக் கூடங்கள் இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை.

இவர்களுக்கு உதவுவதற்கு இங்குள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள் குருவிகள் நெல்மணிகளைப் பொறுக்கிற மாதிரி பணம் திரட்டி அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

அங்கே என்னவென்றால் அர்ச்சகர் ஒருவர் 3 கோடி ரூபாய் செலவில் நவீன வசதியுடன் ஆஞ்சநேயர் கோயில் கட்டி பக்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்! வியாபாரமும் ஓகோ ஓகோ என்று நடக்கிறது!

தமிழர்களுடைய நேரம் நினைப்பு, உழைப்பு, பொருள் மூடத்தனத்தையும் மூடபக்தியையும் வளர்ப்பதில்தான் செலவாகிறது.

பணக்காரர்கள் மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் கோயிலுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.

ஏழைகள் இந்தக் கடவுளரைக் கும்பிட்டால் தங்கள் ஏழ்மை வறுமை நோய் போகும் என நம்பி இந்தக் கோயில்களுக்குச் சென்று காசைக் கரியாக்குகிறார்கள்.

கோயில்களும் நல்ல தருணம் இது நழுவ விடக்கூடாது என்ற அவாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றாமையை, இயலாமையை, மனவுளைச்சலை, மனவழுத்தங்களை பயன்படுத்தி அவர்களை சுரண்டுகின்றன.

கனடாவில் வேலை இல்லாத சிக்கல் இருக்கிறது. எனவே நோய், தோசம் இவற்றோடு உங்கள் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் அம்பாள் தீர்த்து வைப்பாள் வாருங்கள் வந்து அர்ச்சனை அபிசேகம் செய்யுங்கள் என வானொலி மூலம் கோயில்கள் விளம்பரம் செய்கின்றன.

[size=18]அறிவியல் கண்டுபிடித்த வானொலிகள் பணத்துக்காக இப்படியான விளம்பரங்களை எந்த வெட்கமோ துக்கமோ இன்றி ஒலிபரப்புகின்றன.

தமிழீழத்தில் நடந்த யுத்தத்தில் கிட்டத்தட்ட 500 சைவக் கோயில்கள் எதிரி படையால் குண்டு போட்டுத் தகர்க்கப்பட்டன. பாடல்பெற்ற தலங்களான திருக்கேதீசுவரம் கோணேசுவரம் சேதப்படுத்தப்பட்டன.

சக்தி வாய்ந்த தெய்வங்களால் தங்களையே காப்பாற்ற முடியவில்லை. மற்றவர்களை எப்படிக் காப்பாற்றப் போகின்றன?

காலை, மதியம், மாலை என்று மூன்று நேரமும் சந்திரசேகர மவுலீஸ்வர புூசை செய்த காஞ்சி சங்கராச்சாரியாரே இப்போது கொலை, கொலைமுயற்சி போன்ற கடும் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சிவலோகம் வைகுண்டம் போக தனது பக்தர்களுக்கு விசா வழங்கிக் கொண்டிருந்த சங்கராச்சாரியாரால் நீதிமன்றத்தில் ஒரு 'பெயில்" கூட எடுக்க முடியவில்லை!

லோககுரு, நடமாடும் தெய்வம், வாழும் கடவுள் எனப் போற்றப்படும் சங்கராச்சாரியாருக்கே இந்தக் கதி என்றால் மற்றவர்கள் எந்த மூலைக்கு?

இவற்றைப் பார்த்தாவது படித்த தமிழர்கள் திருந்த வேண்டாமா?

கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது எத்தன்மையான கடவுள் என்பதை முடிவு செய்யுங்கள்.

திருமூலரின் அன்பே சிவம்;;;; பாரதியாரின் அறிவே கடவுள் என்றால் அது எமக்கும் சம்மதமே!

கோயில் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் கோயில் கொடியவர்களின் சுரண்டல் மடமாக இருக்கக் கூடாது. மாறாக கோயில்கள் சமுதாய மையங்களாக இருக்க வேண்டும். அப்படியான கோயில்கள் எமக்கும் சம்மதமே.

'கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே ஆவதும் அழிவதூம் இல்லை இல்லை இல்லையே! (சிவவாக்கியார்)

கோயிலுக்குச் சென்று வணங்குவதே வழிபாடு. தெப்பக் குளத்தில் குளிப்பதே குளிப்பு என்று எண்ணுவது வீண் என்பதையும் உள்ளத்தில் ஆழ்ந்த ஈடுபாடின்றி புறத்தே வழிபடும் வழிபாட்டினால் எந்தப் பயுனும் இல்லை என்பதையும் பதிணெண் சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியார் எல்லோருக்கும உறைக்குமாறு; எடுத்துச் சொல்கிறார்.

யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்கு பஞ்சமா? இல்லையே. இடிந்தவை போக எஞ்சியவை நு}ற்றுக் கணக்கில் இருக்கின்றனவே.

பின் எதற்காக 3 கோடி ரூபாயில் அனுமானுக்கு ஒரு கோயில்? இந்தப் பணத்தில் நாலு தொழிற்சாலைகளைத் தொடக்கி இருந்தால் நு}ற்றுக்கணக்கான குடும்பங்கள் பிழைக்க முடியுமே!

நன்றி தமிழ்நாதம்


- selvanNL - 12-12-2004

§À¡È §À¡ì¸ À¡÷ò¾¡ø ¾Á¢Æ¢Æò¨¾Ôõ ã¼ ¿õÀ¢ì¨¸ ¯ûÇ þó¾¢Â¡ Á¡¾¢Ã¢ ¦¸¡ñÎ ÅóÐÎÅ¡í¸û §À¡Ä?? ±ýÉõ «ôÀ ¦ºö¾¢ §À¡ö §ºÃÅ¢ø¨Ä §À¡¸ §ÅñÊ þ¼òÐìÌ??
«Ð ºÃ¢ ¯ó¾ ¬ïº¢§ÉÂ÷ ¾¡§É ¡úôÀ¡½ò¾¢Ä 5.5 Äðºõ ºÉõ ¦ÅÇ¢§ÂÈ ¸ôÀø ãÄõ ÅýÉ¢ìÌ ¦¸¡ñ§¼ §º÷ò¾Å÷...

Arrow Idea Arrow Ó¾øÄ ÁÉ¢¾ ¦¾öÅí¸ÙìÌ ²¾¡ÅÐ ¯ÕôÀÊ¡ ¦ºö ¦º¡øÖí¸Çö¡..
¸ÕõÒÄ¢¸ÙìÌõ Á¡Å¢Ã÷¸ÙìÌõ ÀÄ §¸¡Â¢ø ¸ð¼î¦º¡øÖí¸Çö ӾøÄ..
:evil: :evil: :evil:

¾Á¢Æ¢Æò¾¢Ä ¯ûÇ Áì¸¨Ç Ì¨È ¦º¡ø§ÄġР±øÄõ þí¸ ÒÐÅ¡ú쨸 ¿¼ò¾¢ÈÁì¸éìÌ ¾¡ý þ¨¾ Å¢Çí¸ÀÎò§¾¡Ûõ..


- Haran - 12-12-2004

நடாவுக்கு நன்றிகள்.


- Nada - 12-12-2004

மெதுவாகச்சொல்கிறேன் இவையள் வியாபாரத்துக்காக ஆஞ்சநேயாின்
அவதாரம் நமது----------- என்றும் சொல்வினம். யாழிலை இனிமேல்
ாியூசனுக்கு போறதொல்லை மாணவ÷களுகக்கு கிடையாது .ஆஞ்சநேய÷ கோவிலுக்கு மாணவ÷கள் தினசாி போய்வந்தால் காணும். பிறகென்ன பாீட்சையில் சித்திதான். பாீட்சையில் சித்திநிச்சயம் என்று விளம்பரம்வேறு. யாழ்ப்பாணம் நாசமாகப்போகுது. ஒருபக்கம் போின்பவியாபாரம்,மறுபக்கம் சிற்றின்ப வியாபாரம். நல்ல வள÷ச்சிதான்.
காலத்துக்கு காலம் ஒரு கோவிலை பிரசித்தப்படுத்த ஒவ்வொரு கதைகளை கூறுவது சம்மந்தப்பட்டவ÷களின் வியாபார தந்திரம்.