| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 173 online users. » 0 Member(s) | 171 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,074
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| சிந்தனைக்கு சில துளிகள் |
|
Posted by: vasisutha - 12-11-2004, 06:29 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (1)
|
 |
<b>சிந்தனைக்கு சில துளிகள்....
<span style='font-size:20pt;line-height:100%'>* தலைவனாயிரு; இல்லையெனில் ஒரு தலைமையைப் பின்பற்று. இயலாவிட்டால் விலகிப் போ; மற்றவர் முன்னேறட்டும்.
* அடிபடுமுன் அழாதே;
அன்பெனத் தெரியுமுன் மயங்காதே.
* கல்லா, ரொட்டியா எனத்தெரியுமுன் அதனைக்
கடிக்க முற்படாதே.
* ஒரு முட்டாளூடன் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் ஒரு புத்திமானுடன் சிறையில் இருப்பதே நல்லது.
* தன் வாழ்நாளில் பிறருக்கு உதவாதவன் விலங்காக இறக்கிறான்.
*நேரத்தில் செய்யும் உதவியின் மதிப்பு
இரண்டு மடங்காகிறது.
* தலையில்லாதவன் தொப்பி அணிய முடியாது
தகுதியில்லாதவன் தலைவனாக முடியாது
* நீ மீனைத் தேடுவதாக இருந்தால் ஏன் மரத்தில்
ஏறுகிறாய். நீர் இருக்கும் இடத்திற்குப் போ </b></span>
|
|
|
| ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அதிரடி டியூஷன் |
|
Posted by: vasisutha - 12-11-2004, 05:32 AM - Forum: நகைச்சுவை
- Replies (2)
|
 |
<b>ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அதிரடி டியூஷன்!</b><img src='http://www.vikatan.com/av/2004/dec/19122004/p137.jpg' border='0' alt='user posted image'>
வி.சி.டி. ஒழித்தது, விருதுகள் வழங்கியது என அடுத்தடுத்து அன்பு மழை பொழிவதால் கோடம்பாக்கத்துக்கு, அம்மாதான் இப்போ இஷ்டதெய்வம்! அதே சமயம், அரசு விருதுகள் வழங்கும் விழாவில்,''எப்படியெல்லாம் சினிமா எடுக்கக்கூடாது' என முதல்வர் அள்ளி வீசிய அட்வைஸ் மழையில் ஆடிப்போயிருக்கிறது கோடம்பாக்கம். அட்வைஸோடு நின்றுவிடாமல், இதை அழுத்தமாக டியூஷன் எடுத்து அமல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு ஆசை. உடனடி ஆக்ஷனில் மந்திரிகள் இறங்க, விஜயகாந்த் தலைமையில், நடிகர் படைக்கு அதிரடி டியூஷன் ஆரம்பம்...
<b>விஜயகாந்த்</b> (எடுத்த எடுப் பில்): 'நேத்துக் கூட தண்ட்ராம்பட்டு பக்கத்துல, ஒரு குக்கிராமத்துல ''நெறஞ்ச மனசு'' படத்தை கேபிள் டி.வி|யில போட்டுப் பாத்திருக் கானுங்க. போலீஸ் பொறப்பட்டுப் போயி, அவனுங்கள வளைச்சுப் பிடிச்சு செவுட்டுல போட்ருக்கு. அம்மா எடுத்த ஆக்ஷன்லதான் எங்களுக்குச் சோறு போட்டு மோரு ஊத்தற சினிமாவே இன்னிக்குப் பொழச்சு இருக்கு!''
<b>சிம்பு </b>(மெதுவாக): 'அட... அப்பிடி யாச்சும் உங்க படத்தை ஜனங்க பார்க்க றாங்களேனு பெருமைப்படுங்க!''
<b>விஜயகாந்த்:</b> ''ஆனா, இந்த டி.வி|க் காரனுங்க தொல்லைதான் தாங்கமுடிய லீங்க. நாங்க செத்துச் சுண்ணாம்பாகிப் படமெடுக்கிறோம். இவனுங்க கடப்பாறையை முழுங்கின மாதிரி, குஷன் சோபாவுல உட்காந்துக்கிட்டு 'நெறஞ்ச மனசு | கொறஞ்ச மனசு'னு எதுகை மோனையில எகனை மொகனையாப் பேசறானுங்க. அம்மா அவனுங்களுக்கும் ஆக்ஷன் ஆப்பு அடிக்கணும்ங்க!''
<b>ஜெ:</b> ''மிஸ்டர் விஜயகாந்த்! அப்படி நாலு பேர் பேசிடக்கூடாதேனுதான் இந்த டியூஷனே! என்ன இருந்தாலும் சினிமா என் தாய்வீடு இல்லையா... அதனால நான் சொல்ற மாதிரி சமத்தா நல்ல படம் எடுத்தீங்கன்னா, யாரும் உங்களைப் பத்தித் தப்பா பேசமாட்டாங்க. என்ன, சரியா?''
''ஓகே மேடம்!'' என கோரஸ் குரல்கள்...
<b>சிம்பு</b> (மனசுக்குள்): ''ஆகா, நாமெல் லாம் நடிகருங்களா இல்லே நர்ஸரி ஸ்கூல் பிள்ளைங்களானு தெரியலையே''
<b>ஜெ:</b> ''முதல்ல, படத்துல வன்முறை இருக்கக்கூடாது!''
<b>ஓ.பன்னீர்:</b> ''ஆமாம்மா! இப்பல்லாம் எவனைப் பார்த்தாலும் 'ஏய்...ஏய்'னு குரல்வளையைக் கடிச்சுத் துப்புற மாதிரியே பேசிட்டு அலையறானுங்க. சத்தம் தாங்க முடியலீங்க!''
<b>பொன்னையன்:</b> ''ஆமா ஸ்டூடண்ட்ஸ்! இனிமே படத்துலகூடச் சண்டை போடாம நீங்கள்லாம் ஒத்துமையா இருக்கணும். குறிப்பா, காய்கறி மார்க்கெட் செட்டுக்குள்ளே யாருமே சண்டை போடக்கூடாது!''
<b>விஜய்</b> (பதறி): ''அய்யய்யோ... அஸ்தி வாரத்தையே ஆட்டிப் பார்க்கறீங்களே! ஆக்ஸிஜன் இல்லாமக்கூட வாழ்ந்துரு வோம். ஆனா, ஆக்ஷன் இல்லாம வாழ முடியாதுங்களேம்மா!''
<b>பொன்:</b> ''அப்புறம், இந்தப் பாழாப் போன பஞ்ச் டயலாக்கு! 'ஏய்... வெளியில வந்தா வெளி மூலம், உள்ளே வந்தா உள் மூலம், உன் பேரு ஆதிமூலம், உன் சாவு என் மூலம்!'னு நாராசமா பேசறானுங்கம்மா! அதனால, இனிமே யாரும் பஞ்ச் டயலாக்கே பேசக்கூடாது. குண்டர் சட்டம் மாதிரி பஞ்ச்சர் சட்டம்னு ஒண்ணு போட்டு, பஞ்ச் டயலாக் பேசறவங்களையெல்லாம் பிடிச்சு உள்ளே தள்ளி, லாடம் கட்ட ஏற்பாடு செய்யுங்கம்மா!''
<b>அஜீத் </b>(அலறி): ''இத்துல எனக்கு இஸ்டமில்ல! நான் நம்பர் ஒன்னா வர்றது, யார்க்கோ பிடிக்ல! அதான் இப்டிச் சட்டம் போட்டுச் சதி பண்றாங்க. ஆனா, நான் நம்பர் ஒன்னா வர்றதை ஆராலும் தடுக்க முடியாது!''
<b>ஓ.பன்னீர் </b>(அவசரமாகக் குறுக்கிட்டு): ''யம்மா! முதல்ல இவர் பேட்டி கொடுக் கறதுக்கு ஒரு தடைச் சட்டம் போடணும்மா! நாட்டுக்குள்ள அவனவன் அடுத்தவேளை நாஷ்டாவுக்கு வழி இல்லாம அலையறானுங்க. இவரோட நம்பர் ஒன் டார்ச்சர் தாங்க முடியலை!''
<b>விஜய்:</b> ''கலக்கிட்டீங்ணா!
<b>அஜீத்</b> (ஆவேசமாகச் சுவரைப் பார்த்து): ''ஏய்... தல இர்க்கும்போது வால் ஆடக்கூடாது!''
<b>விஜய்:</b> ''ஊய்... நான் வால் இல்லீங்ணா, வாளு!''
<b>பொன்</b> (மெதுவாக): ''பார்த்தீங்களாம்மா, இதெல்லாம் அடுத்த படத்துல டயலாக்கா வெச்சிருவானுங்க!''
<b>ஓ.பன்னீர்:</b> ஆமா! இந்த அடிதடி, பஞ்ச் டயலாக் இதுக்கெல்லாம் இனிமே தடா! மீறி, எவனாவது கைய, காலைத் தூக்கிப் பேசினா, மிட்நைட் அரெஸ்ட் தான். ஜாக்கிரதை!''
<b>சத்யராஜ்:</b> ''அட, பார்றா ஒரு சிக்ஸர! கெரகம் கௌப்பிட்டீங்க!''
<b>பொன்:</b> ''வாங்கய்யா கோயம்புத்தூர குசும்பரே! அம்மா, இந்தாளு மேடையில தான் வெள்ளைச் சட்டை போட்டுட்டு பகுத்தறிவு பேசறாரு. திரையில பார்த்தா தக்கனூண்டு பொண்ணுகூட உம்மா... உம்மம்மானு செம டான்ஸைப் போடறாரும்மா! இவரு புள்ள சிபிராஜு ஆடவேண்டிய ஆட்டத்தையெல்லாம், இந்த வயசுல இவரு போட்டுட்டிருக் காரும்மா!''
<b>ஜெ:</b> ''ம்... கேள்விப்பட்டேன். மிஸ்டர் சத்யராஜ்! நீங்க எல்லோரையும் ஓவரா நக்கலடிக்கறீங்களாமே..?''
<b>ஓ.பன்னீர்:</b> ''இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா, இனிமே நீங்க ஊமைப் படம்தான் எடுக்கணும்னு சட்டம் போட்ருவோம். ஜாக்கிரதை!''
<b>சத்யராஜ்</b> (மெதுவாக): ''ஆஹா... திரும்ப நம்மளத் தெருக்கூத்துக்கு அனுப்பிடுவானுங்க போலயிருக்கே! பேசாம 'அமைதிப்படை' அமாவாசையா மாறிட வேண்டியதுதான்! (சத்தமாக) நக்கல் எல்லாம் ச்சும்மாம்மா! நமக்கு ரோல்மாடலே வாத்தியாரும் அம்மா நீங்களும் தான். நீங்க சமூகநீதி காத்த வீராங்கனை. பெண் பெரியார்! மங்கையாகப் பிறந்த மார்க்ஸ்!''
<b>ஓ.பன்னீர்:</b> ''விட்டா, இந்தாளு இன்னிக்கே மந்திரியாகிடுவாரு போல இருக்கே!''
அப்போது தனது அந்நியன் ஜடா முடியை விக்ரம் உலுக்க... அது, பொன் னையன் மூக்கில்பட்டு, அவர் அடுத்தடுத்து தும்முகிறார்.
<b>பொன்</b> (கடுப்பாகி): ''முதல்ல இந்தாளைக் குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போய், சலூன்ல வெச்சு முடி வெட்டி விடுங்கப்பா..!''
<b>விக்ரம்:</b> ''ஹேய்... ஸாரிய்யா! ஸோ ஸாரி!''
<b>ஓ.பன்னீர்:</b> ''என்னா ஸாரி பூரினு! யம்மா, இவங்க அடிக்கிற கெட்\அப் கூத்தை முதல்ல ஒழிக்கணும். தலைக்கு கலர் டை அடிக்கறது, பல்லுக்கு பெயிண்ட் அடிக்கிறதுனு பயமுறுத்து றாங்க!''
<b>விக்ரம்:</b> ''நான் மட்டுமா கெட்\அப் மாத்தறேன். சூர்யாகூடத்தான் டிஸைன் டிஸைனா அலையறாரு... அவரைக் கேட்கமாட்டீங் களா?''
<b>சூர்யா</b>(மனசுக்குள்): ''ஆகா! மாட்டிவிட்டுட்டாரே!''
<b>ஓ.பன்னீர்:</b> ''அதே மாதிரி, இந்த சிம்பு இனிமே தலையில ஒரு பேண்டு கட்டறதை விடச் சொல்லுங்கம்மா. 'ஆ... ஊÕனா நெத்திக் கட்டைப் போட்டுக்கிட்டு சண்டை போடறது, பஞ்ச் டயலாக் பேசறது, ட்ரம்ஸ் வாசிக்கறதுனு இவர் அட்டூழியம் தாங்கமுடியலைம்மா''
<b>சிம்பு:</b> ''அதாவது சார், ஃபிலிம் ரோல் இல்லாமக்கூட படம் எடுத்துரலாம். ஆனா ஸ்டைல் இல்லாம, இந்த சிம்பு என்ன சார் செய்வான்?''எனப் பதற, அதைப் பார்த்துச் சிரிக்கிறார் தனுஷ்.
<b>பொன்:</b> ''என்ன தனுஷ சிரிக்கிறே? உங்க குடும்பத்துக்குத்தான் பெரிய லிஸ்ட்டே இருக்கு!''
<b>ஓ.பன்னீர்:</b> ''ஆமாம்மா! நடுராத்திரியில சுவரேறிக் குதிச்சு, ஹீரோயினோட பெட்ரூமுக்குள்ள ஹீரோ போறது மாதிரி இனிமே எடுக்கட்டும்... கஸ்தூரி ராஜாவைக் குடும்பத்தோட அரெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்!''
<b>ஓ.பன்னீர்:</b> ''கேப்டன்! உங்களுக்கும் தனியா சில கண்டிஷன் இருக்கு. நீங்க எத்தனை தீவிரவாதிங்களை வேணும்னாலும் பிடிச்சுக்குங்க... சுட்டுக்கங்க. ஆனா, அரசியல்வாதிகளைச் சுட்டுக்கொல்றது, அரசு ஊழியர்களைக் கடத்தறதுங்கறதெல்லாம் இனிமே கூடாது! அப்புறம் அஞ்சு இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு, கலர் கலர் சட்டையில மழையில ஆடக்கூடாது. அது சட்டம் |ஒழுங்கைப் பாதிக்கிற செயல். ஆமா, சொல்லிப்புட்டோம்!''
<b>பொன்</b>: ''ஏம்மா, இவங்களைத் திருத்தணும்னா... நாமளே களத்துல குதிச்சாத்தாம்மா உண்டு. நாமளே ஒரு கதை இலாகா உருவாக்கி, அதுக்கு ஒரு அமைச்சரைப் போட்டு, தமிழ் சினிமாவுக்குக் கதைகள் சப்ளை பண்ணினா என்ன? பாட்டி வடை சுட்ட கதை, நரி திராட்சைப் பழம் தின்ன கதை, சிங்கமும் மாடும் கதைகளையெல்லாம் கொஞ்சம் மாடர்னாக்கி இவங்களை நடிக்க வெச்சோம்னா, பிள்ளைகளுக்கும் அது படமா இல்லாம பாடமா இருக்கும்ல?''
<b>தனுஷ்</b> (மெதுவாக): ''ஐயையோ! ஏ சர்டிஃபிகேட் படமெடுக்கிற எங்களை, 'ஏ ஃபார் ஆப்பிள்' படம் எடுக்க வெச்சிடுவாங்க போலிருக்கே!''
<b>ஓ.பன்னீர்:</b> ''அப்படியே 'சந்திரமுகி'யிலே இருந்து 'சச்சின்' வரைக்கும் இருக்கிற கதையையெல்லாம் மாத்திட்டு, நாம தர்ற கதையைத்தான் இனிமே படமா எடுக்கணும்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிருவோம். 'சந்திரமுகி'க்கு வேணும்னா இந்த மரவெட்டி, கோடாலி, தேவதை கதையைத் தந்துருவோம். ரஜினி தம்பி கொஞ்சம் மந்திர தந்திரக் கதைனா விரும்புவாப்ல!''
<b>பொன்</b>: ''அதேமாதிரி, குத்துப் பாட்டுங்கதாம்மா இப்ப கோடம்பாக் கத்தைப் பிடிச்சிருக்கிற பெரிய வியாதி. ஆளாளுக்கு அலப்பறை பண்றாங்க. அதனால 'போடாங்கோ', 'அப்படிப் போடு'னெல்லாம் எழுதற கவிஞருங்களையெல்லாம் மடக்கிப் பிடிச்சு வேலூர், கடலூர், பாளையங் கோட்டைனு அனுப்பினாத்தாம்மா சரிப்படும். அதுக்கும்கூட இந்த நர்ஸரி ரைம்ஸ்களையே கொஞ்சம் மாத்தி எழுதிப் பாட விட்ருவோம்!''
<b>விஜய்:</b> ''ண்ணா, என்னங்ணா! நானும் த்ரிஷாவும் கட்டிப்பிடிச்சு 'அம்மா இங்கே வா வா, ரெயின் ரெயின் கோ அவே!'னெல்லாம் பாடினா நல்லா இருக்காதுங்ணா!''
<b>பொன்:</b> ''சூ... சும்மா இருங்க! அம்மா, இந்த கலைஞர் வேற திரும்ப கதை, வசனம்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. அதனால, ஒரு நல்ல படம் எப்படி இருக்கணும்னு நீங்களே ஒரு படம் எடுத்தா என்ன? 'கண்ணம்மா' மாதிரி 'அம்மம்மா'னு டைட்டில் வெச்சுக்குவோம். நீங்கதான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். ரஜினி, கமல், விஜயகாந்து, விக்ரம், விஜய், சிம்பு, தனுஷ்னு அத்தனை பேரையும் பிடிச்சுப் போட்ருவோம். வீரப்பன் என்கௌண்டர், ஜெயேந்திரர் கைதுனு அத்தனை சாதனைகளையும் போட்டுத் தூவி விட்டோம்னா, தேர்தல் நேரத்துல அடிச்சுத் தூக்கிர லாம்ல?''
<b>ஜெ:</b> ''ஓகே! இந்த ரூட்லயே மேற்கொண்டு பேசி முடிவு பண்ணுங்க. மிஸ்டர் விஜயகாந்த்! நீங்கதான் முன்னாடி நின்னு எல்லார் கால்ஷீட்டும் வாங்கணும், புரியுதா? ஓகே, கேரி ஆன்!'' என்றபடி ஜெயலலிதா எழுந்து உள்ளே போக...
''அடடா! அப்படி இப்படிப் பேசி அரசியலுக்கு வரலாம்னு பார்த்தா நம்மளை இப்படி 'ஆர்கனைஸிங்' வேலை பார்க்கவெச்சே காலி பண்ணிருவாங்க போலிருக்கே!'' என அதிர்ச்சியில் உறைகிறார் விஜயகாந்த்.
சுட்டது: (வேற எங்க இங்கதான்..) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> www.vikatan.com
|
|
|
| இப்படியும் நடக்குது |
|
Posted by: ஊமை - 12-11-2004, 04:16 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (6)
|
 |
உண்ண உணவில்லை உடுக்கத் துணியில்லை
3 கோடியில் ஆஞ்சநேயர் கோயில்!
-நக்கீரன் (கனடா)-
இந்துக்களுக்கு எந்தக் கடவுளைக் கும்பிட வேண்டும் கும்பிடக் கூடாது என்ற நியதியே இல்லை. கல்ää எலிää நாய்ää மண்ää பாம்புää குரங்கு.... இப்படி எதனையும் கும்பிடலாம்.
சைவ ஆகமங்கள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆகமங்களில் கூறப்படும் கோயில் வழிபாட்டு முறைபற்றி சைவர்கள் சிந்திப்பதில்லை. அவை அவர்களுக்குத் தெரியவும் மாட்டாது.
காஞ்சி ஜெயேந்திர சங்கராச்சியார் சீனாவுக்குப் போக இருந்தார். அதனை எதிர்த்து அண்மையில் கொலையுண்ட வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் நீதிமன்றம் போனார். வழக்கு விசாரணைக்கு வருமுன் சங்கராச்சாரியார் தனது சீனப் பயணத்தை நிறுத்திவிட்டார். சங்கரராமன் கொலை செய்யப்பட்டதற்கு இந்த எதிர்ப்பும் ஒரு காரணம்.
அண்மைக்காலமாக தமிழர்கள் மத்தியில் அய்யப்பன் வழிபாடு பிரபல்யமாகி வருகிறது. சபரிமலைக்கு இருமுடி தாங்கி மாலை போட்டு மலையேறும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டு போகிறது. அதற்கேற்ப கோயில் வருமானமும் ஏறிக் கொண்டு போகிறது.
ஆனால் அயய்யப்பன் வழிபாடு சைவ ஆகமத்துக்கு முரணானது.
அய்யப்பன் தோற்றம் பற்றி; வௌ;வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.
மோகினி வடிவெடுத்த திருமாலை சிவனார் கூடிப் பெற்ற குழந்தை அய்யப்பன் என்பது அதில் ஒன்று.
காவல் தெய்வமான அய்யனார்தான் அய்யப்பன் என்பது இன்னொன்று.
மதுரையில் வாழ்ந்து வந்த பாண்டிய மன்னர்கள்ää திருமலை நாயக்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சொந்த நாட்டை விட்டு இன்றைய கேரநாட்டில் உள்ள தென்காசிää இந்;தூர்ää மணியம் ஆகிய இடங்களை பிடித்த இவர்கள் ஆறுகால் மன்னர்ää தெக்குங்கூர் மன்னர்களின் வசமிருந்த பந்தளம் இராச்சியத்தையும் கைப்பற்றினர். பின்னர் அங்கு நிரந்தர ஆட்சி ஒன்றை நிறுவினர்.
பந்தளம் இராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்த காலத்தில்தான் காட்டில் பகவான் அய்யப்பனை குழந்தையாக கண்டெடுத்தனர். அதன் பின்னர்ää பந்தளம் குடும்பத்தின் பெயர் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. கொல்லம் ஆண்டு 400ல் சபரிமலை கோயில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.
பந்தளம் திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டதால் சபரிமலைää அச்சன் கோயில்ää ஆரியங்காவுää குளத்துப்புழாää அறக்குளம் உள்ளிட்ட 4 பெரிய கோயில்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் வசம் ஆனது. பந்தளம் மன்னர் குடும்பம் பதவி இழந்தாலும் இன்றும் சபரிமலையிலும்ää ஐயப்ப பக்தர்கள் மனதிலும் அவர் 'அரசர்" ஆகவே திகழ்கிறார்.
இப்போது அய்யப்பனுக்குப் போட்டியாக ஆஞ்சநேயர் (அனுமான்) கோயில்கள் ஆங்காங்கு முளைவிட ஆரம்பித்துள்ளன. கனடாவுக்கும் ஒரு ஆஞ்சநேய பக்தர் கொழும்பில் இருந்து அவ்வப்போது வந்து பணம் திரட்டிக் கொண்டு போகிறார். அடுத்து இங்கேயும் ஆஞ்சநேயருக்கு கோயில் உருவாகலாம்!
இந்த ஆஞ்சநேயர் வேறு யாருமல்ல. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இராமனால் அனுப்பப்பட்ட முதல் றோ உளவாளி!
யாழ்ப்பாணம்ää இணுவில் காங்கேசன்துறை வீதிää மருதனார் மடச் சந்தியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயில் மிகக் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்துள்ளது.
அற்புத ஆஞ்சநேயர்ää நீங்கள் நினைப்பதைத் தருவார்!
உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் நிறைவேறும்!!
நீங்கள் பர்Pட்சையில் இலகுவாக சித்தி பெறுவீர்கள்;!!
இது போன்ற கவர்ச்சிகரமான துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் வழங்கப்பட்டு வருகிறது.
சனிää ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூசைகள்ää குறி அல்லது அருள்வாக்கு சொல்லுதல்ää அப்படி இப்படி என்றுää பல பந்தாக்கள். இங்கு எடுத்து விடப்படுகின்றன.
எதையும் கேட்டுக் கேள்வியின்றி எளிதாக நம்பிவிடும் இழித்தவாய்த் தமிழர்களுக்குத்தான் எந்த நாட்டிலும் பஞ்சம் இல்லையே!
ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் வெளியூர் மக்களும்ää வெளிநாட்டு மக்களும் அதிகரித்துள்ளது.
குறுகிய காலத்தில் காணி வாங்கப்பட்டுää இரட்டைத்தட்டுக் கொண்ட (நிலப்பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்) கீழே மண்டபம்ää மேலே கோவில்ää முன்னால் தோட்டம் என கோயில் காட்சி அளிக்கிறது.
கோயில் கட்டப்பட்ட காலத்தில் ஏ-9 நெடுஞ்சாலை திறக்கப்படவில்லை. அனைத்துக் கட்டிடப் பொருட்களும் கடல் மார்க்கமாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தன.
ஆஞ்சநேய அடியார்களின் உதவியுடன் கோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அப்படித் தீர்மானித்த சில நாட்களில் கோபுரமும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
புத்தம் புதிய கார்ää கணனிää இணைய வசதிகள் போன்ற சகல வசதிகளுடன் கூடிய நவீனää குளிரூட்டப்பட்ட அலுவலகம் கோயில் உள்ளேயே இயங்குகிறது.
இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க ஒட்டுமொத்தத்தில்ää ரூபா 300 இலட்சம் (3 கோடி) வரை செலவு செய்யப் பட்டிருக்கிறதாகச் சொல்லப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தனியார் கோயில்கள் மிகக் குறைவு. ஆனால் ஆஞ்சநேயர் கோயில் தனியாருக்கு சொந்தமானது. மூன்று கோடி ரூபாயை முதலீடு செய்த முதலாளி ஒரு அர்ச்சகர்!
இந்தத் தகவல்களை இணுவிலில் இருந்து குரு என்பவர் 'தமிழ்ச் சமூகம்" என்ற இணையதள வாயிலாக வெளியிட்டுள்ளார். (றறற.வயஅடைளழஉநைவல.உழஅ)
பிராமணர்களை ஏழைப் பிராமணர்கள் என்று சொல்வது போய் கோடீசுவரப் பிராமணர்கள் என்று இனிமேல் சொல்ல வேண்டும். இது கனடாவிற்கும் பொருந்தும்!
தமிழீழத்தில் உண்ண உணவுää உடுக்க உடைää படுக்கப் பாய் இல்லாமல் இலட்சக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.
இவர்களுக்கு கடவுள் ஒரு கோப்பை சோற்று வடிவில்தான் தினமும் காட்சி கொடுக்கிறார்!
கர்ப்பிணித் தாய்மார்கள்ää குழந்தைகள்ää பள்ளிப் பிள்ளைகள் ஆகியோருக்கு போதிய சத்துணவு இல்லை. படிக்க பள்ளிக் கூடங்கள் இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை.
இவர்களுக்கு உதவுவதற்கு இங்குள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ää பழைய மாணவர் சங்கங்கள்ää ஊர்ச் சங்கங்கள் குருவிகள் நெல்மணிகளைப் பொறுக்கிற மாதிரி பணம் திரட்டி அனுப்பிக் கொண்டிருக்கின்றன.
அங்கே என்னவென்றால் அர்ச்சகர் ஒருவர் 3 கோடி ரூபாய் செலவில் நவீன வசதியுடன் ஆஞ்சநேயர் கோயில் கட்டி பக்தி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்! வியாபாரமும் ஓகோ ஓகோ என்று நடக்கிறது!
தமிழர்களுடைய நேரம் நினைப்புää உழைப்புää பொருள் மூடத்தனத்தையும் மூடபக்தியையும் வளர்ப்பதில்தான் செலவாகிறது.
பணக்காரர்கள் மேலும் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் கோயிலுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.
ஏழைகள் இந்தக் கடவுளரைக் கும்பிட்டால் தங்கள் ஏழ்மை வறுமை நோய் போகும் என நம்பி இந்தக் கோயில்களுக்குச் சென்று காசைக் கரியாக்குகிறார்கள்.
கோயில்களும் நல்ல தருணம் இது நழுவ விடக்கூடாது என்ற அவாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆற்றாமையைää இயலாமையைää மனவுளைச்சலைää மனவழுத்தங்களை பயன்படுத்தி அவர்களை சுரண்டுகின்றன.
கனடாவில் வேலை இல்லாத சிக்கல் இருக்கிறது. எனவே நோய்ää தோசம் இவற்றோடு உங்கள் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் அம்பாள் தீர்த்து வைப்பாள் வாருங்கள் வந்து அர்ச்சனை அபிசேகம் செய்யுங்கள் என வானொலி மூலம் கோயில்கள் விளம்பரம் செய்கின்றன.
அறிவியல் கண்டுபிடித்த வானொலிகள் பணத்துக்காக இப்படியான விளம்பரங்களை எந்த வெட்கமோ துக்கமோ இன்றி ஒலிபரப்புகின்றன.
தமிழீழத்தில் நடந்த யுத்தத்தில் கிட்டத்தட்ட 500 சைவக் கோயில்கள் எதிரி படையால் குண்டு போட்டுத் தகர்க்கப்பட்டன. பாடல்பெற்ற தலங்களான திருக்கேதீசுவரம் கோணேசுவரம் சேதப்படுத்தப்பட்டன.
சக்தி வாய்ந்த தெய்வங்களால் தங்களையே காப்பாற்ற முடியவில்லை. மற்றவர்களை எப்படிக் காப்பாற்றப் போகின்றன?
காலைää மதியம்ää மாலை என்று மூன்று நேரமும் சந்திரசேகர மவுலீஸ்வர பூசை செய்த காஞ்சி சங்கராச்சாரியாரே இப்போது கொலைää கொலைமுயற்சி போன்ற கடும் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சிவலோகம் வைகுண்டம் போக தனது பக்தர்களுக்கு விசா வழங்கிக் கொண்டிருந்த சங்கராச்சாரியாரால் நீதிமன்றத்தில் ஒரு 'பெயில்" கூட எடுக்க முடியவில்லை!
லோககுருää நடமாடும் தெய்வம்ää வாழும் கடவுள் எனப் போற்றப்படும் சங்கராச்சாரியாருக்கே இந்தக் கதி என்றால் மற்றவர்கள் எந்த மூலைக்கு?
இவற்றைப் பார்த்தாவது படித்த தமிழர்கள் திருந்த வேண்டாமா?
கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது எத்தன்மையான கடவுள் என்பதை முடிவு செய்யுங்கள்.
திருமூலரின் அன்பே சிவம்;;;; பாரதியாரின் அறிவே கடவுள் என்றால் அது எமக்கும் சம்மதமே!
கோயில் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் கோயில் கொடியவர்களின் சுரண்டல் மடமாக இருக்கக் கூடாது. மாறாக கோயில்கள் சமுதாய மையங்களாக இருக்க வேண்டும். அப்படியான கோயில்கள் எமக்கும் சம்மதமே.
'கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே ஆவதும் அழிவதூம் இல்லை இல்லை இல்லையே! (சிவவாக்கியார்)
கோயிலுக்குச் சென்று வணங்குவதே வழிபாடு. தெப்பக் குளத்தில் குளிப்பதே குளிப்பு என்று எண்ணுவது வீண் என்பதையும் உள்ளத்தில் ஆழ்ந்த ஈடுபாடின்றி புறத்தே வழிபடும் வழிபாட்டினால் எந்தப் பயுனும் இல்லை என்பதையும் பதிணெண் சித்தர்களில் ஒருவராகிய சிவவாக்கியார் எல்லோருக்கும உறைக்குமாறு; எடுத்துச் சொல்கிறார்.
யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்கு பஞ்சமா? இல்லையே. இடிந்தவை போக எஞ்சியவை நூற்றுக் கணக்கில் இருக்கின்றனவே.
பின் எதற்காக 3 கோடி ரூபாயில் அனுமானுக்கு ஒரு கோயில்? இந்தப் பணத்தில் நாலு தொழிற்சாலைகளைத் தொடக்கி இருந்தால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பிழைக்க முடியுமே!
|
|
|
| மனம் திறக்கிறார் சிம்பு |
|
Posted by: vasisutha - 12-11-2004, 12:13 AM - Forum: சினிமா
- Replies (11)
|
 |
தனுஷ்\ஐஸ்வர்யா
<b>""எங்கிருந்தாலும் வாழ்க!""</b>
மனம் திறக்கிறார் சிம்பு
மன்மதன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சிம்பு. தாடி, மீசையுடன் ரொம்பப் புதுசாக இருக்கிறார். சந்திப்பில் மனம் திறந்து பேசினார்...
<img src='http://www.vikatan.com/av/2004/dec/19122004/p5.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:green'>மன்மதன் சக்சஸ் எப்படிச் சாத்தியமாச்சு?
ப்ளேபாய் காரெக்டர்! ஆனா, சும்மா பொண்ணுங்களை வெச்சுக்கிட்டு ஜாலி பண்ணாம, த்ரில்லர் பண்ண ஆசைப்பட்டேன். வரிசையாக கொலைகள். அதுக்கு ஒரு சரியான காரணம் வேணும். இந்தியன் தாத்தா கொலை பண்ணி னார்னா அதுக்கு ஒரு வலுவான காரணம் இருந்ததே... அப்படி வேணும்! இப்போதான் நியூஸ் பேப்பரைப் புரட்டினாலே கள்ளக் காதல் விவகாரங்கள் நிறைய வருதே... அதைப் பின்னணியா வெச்சு ஒரு கதை. திடுக்குனு அதில் ஒரு திருப்பம் கொடுத்தேன். க்ளிக் ஆயிடுச்சு. இவன் என்ன பண்ணியிருக்கப்போறான்?னு தியேட்டருக்கு வந்தவங்க, அசந்துட்டாங்க. அதான் சக்சஸ்!
சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்தில் என்ன தாடியோட இருக்கீங்க, எதுனா பிரச்னையா?
ஹலோ, இது தொட்டி ஜெயா படத்துக்கான கெட்&அப் பிரதர்! என்மேல் ஒரு சின்ன வெளிச்சம் விழுந்திருக்கு. ஏதோ டிரை பண்றான்யா!னு கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க. Ôதொட்டி ஜெயாÕவில் நான் வேற சிம்பு. பிறந்ததில் இருந்தே அடிதடியில் ஊறிப் போன ரௌடி காரெக்டர். அழுக்கான ஆளு. ஆனா, அழகான மனசு. படம் வரும், பாருங்க!
நீங்களும் தனுஷ§ம முறுக்கிக்கிட்ட மாதிரியே இருக்கீங்களே! இணக்கமான சூழ்நிலை இல்லையே, ஏன்?
நல்லாத்தான் இருந்தார். காதல் கொண்டேன் படம் பார்க்கப் போனப்பகூட நல்லாப் பேசிட்டிருந்தோம். அன்னிக்குதான் தனுஷ் ஐஸ்வர்யா சந்திச்சாங்க. அதே டைமில் என் படம் அலை வந்தது. அவர் படம் ஹிட்... என் படம் ஃப்ளாப். அவ்ளோதான், என்ன நடந்ததோ... தனுஷ் அப்புறம் என்னோட பேசற தில்லை. ஓகே. உலகம் சின்னது. அதைவிட கோடம்பாக்கம் ரொம்பச் சின்னது. எங்கேயாவது சந்திக் காமலா போயிடப் போறோம்னு விட்டுட்டேன்!
தனுஷ் & ஐஸ்வர்யா கல்யாணத்துக்கு நீங்க ஏன் போகலை? அவங்க உங்க பழைய தோழிதானே..?
போயிருக்கலாம்! பப்பு (ஐஸ்வர்யா) கூட எனக்கு நல்ல நட்பு இருந்தது. ஒரே ஸ்கூல்ல படிச்சோம். கிட்டத்தட்ட அவங்க வீட்டுப் பையன் மாதிரியே இருந்திருக்கேன். ரஜினி சார், லதா மேடம் ரெண்டு பேரையும் நல்லாத் தெரியும். மிட்டு(சௌந்தர்யா)வும் என் ஃப்ரெண்டுதான். ஆனா, இவங்க யாருமே நேர்ல வந்து அழைக்காம, ஒரு பி.ஆர்.ஓ. மூலம் ஏதோ சினிமா பூஜை இன்விடேஷன் போல பத்திரிகை வந்ததுனா, அது என்ன மரியாதை? அதான் போகலை!
ஒண்ணு தெரியுமா... எனக்கு இந்த தனுஷ்\ஐஸ்வர்யா காதல் விஷயம் ரொம்ப முன்னாடியே தெரியும். அது மத்தவங்களுக்கு வேணும்னா ஷாக்கா இருந்திருக்கலாம். எனக்கு அப்படியில்லை!
ஐஸ்வர்யாகூட எப்ப ஆரம்பிச்சுது நட்பு. ஆஷ்ரம் ஸ்கூல்ல படிச்சபோதுதானா?
இல்ல... அதுக்கும் ரொம்ப முன்னாடியே! நான் பப்புவைச் சந்திச்சது சினிமாவில் எல்லாம் வர்ற மாதிரி ஒரு கல்ச்சுரல் மீட்டிங்கில்! லெப்பார்க்னு பேரு... அந்த விழாவில், நான் ஒரு டான்ஸ் ஆடினேன். ஆனா, பரிசு கிடைக்கலை. அப்போ ஹலோ, நல்லா ஆடினீங்க! பிரைஸ் கிடைக்கலைனு வருத்தப்படாதீங்க. அடுத்த தடவை நிச்சயம் ஜெயிப்பீங்க!னு ஒரு குரல். திரும்பிப் பார்த்தால், சிரிச்ச முகமா ஒரு பொண்ணு. தாங்க்ஸ்னு சொல்லிட்டு வந்துட்டேன். என்னோட ஃப்ரெண்ட்ஸ்தான், டேய், அது யார் தெரியுமா... ரஜினி பொண்ணுடா!Õன்னாங்க. ஆச்சரியம்... மறுபடியும் அந்தப் பொண்ணே என்னை போன்ல கூப்பிட்டாங்க. எப்படியோ எங்க ஸ்கூலுக்குப் பேசி, என் நம்பரைப் பிடிச்சாங்களாம். ஆஷ்ரம் ஸ்கூல் ஃபங்ஷனுக்கு வாங்கனு கூப்பிட்டாங்க.
அப்போ நான் சாந்தோம் ஸ்கூல் பையன். அப்புறம் ஒரு கட்டத்தில், ஆஷ்ரம் ஸ்கூல்ல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். அந்த நாட்கள்தான் நானும் பப்புவும் பழக ஆரம்பிச்ச டைம். பிரமாதமான ஸ்கூல். பப்புவை ஒரே ஒரு விஷயத்துக்காக எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறையச் சொல்லிக் கொடுப்பாங்க... உற்சாகப்படுத்துவாங்க. இந்த மாதிரி டான்ஸ் ஆடணும்னு ஆடிக் காட்டுவாங்க. ரொம்ப அக்கறை எடுத்துப்பாங்க. அவங்களும் நானும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். ஒரு தடவை என் பர்த்டேக்கு, பப்பு, மிட்டு ரெண்டு பேரும் வாழ்த்த வந்தாங்க. அவ்வளவு க்ளோஸா இருந்தோம். பொதுவா எங்கேயும் வராதவங்க என்னை வாழ்த்த வந்ததும், பத்திரிகைகள் அடி பின்ன ஆரம்பிச்சிட்டாங்க. இன்னொரு பக்கம் சினிமா வேலைகள் என்னை இழுக்க ஆரம்பிச்சது. அப்பிடியே வேற வேற திசைல போயிட்டோம்!
இன்னும் வருத்தம் இருக்கோ?
பின்னே என்னங்க! எனக்கு பழசை மறக்கிற மனசு இல்லை. நேரில் வந்து இன்விடேஷன் தரலைனாகூடப் பரவாயில்லை. அட்லீஸ்ட்... கல்யாணத்துக்கு வா, சிம்புனு ஒரு வார்த்தை போனிலாவது சொல்லியிருக் கலாம். அதுகூட இல்லைனா, அப்புறம் அது என்ன நட்பு? ஒருவேளை அவங்க விரும்பலை யோனு நினைச்சேன். அழைப்பு இல்லாம, நான் போய் நின்னா அதுவே தேவையில்லாதமனக் கஷ்டத்தை கொடுக்குமேனுதான் நான் போகலை.மத்தபடி அவங்க எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்கணும். எங்கிருந்தாலும் வாழ்க!னு மனப்பூர்வமா வாழ்த்தறேன். என்னை ஒரு நண்பனா, பப்புவால் மறக்க முடியாது. மறக்க மாட்டாங்க. என் டான்ஸ், என் காரெக்டர் அவங்களுக்குப் பிடிக்கும். என்மேல் மரியாதை இருக்கும். இப்பக் கேட்டீங்கனாகூடச் சொல்வாங்க. ஏன்... மன்மதன் சக்சஸ்ஃபுல்லா ஓடறதில் அவங்க சந்தோஷப்படுவாங்க!
தனுஷ்\ஐஸ் ஜோடிப் பொருத்தம் எப்படி?
சூப்பர்! லவ் என்ற வார்த்தைக்கு முன்னாடி எல்லாமே அடிபட்டுப் போயிடும். உயரம், குள்ளம், கலர் எதுவுமே லவ்வுக்கு முன்னாடி நிக்காது. மனசுதான் முக்கியம். ரெண்டு பேர் மனசும் ஒண்ணா இருந்தா, அதான் சொர்க்கம்!
<img src='http://www.vikatan.com/av/2004/dec/19122004/p3.jpg' border='0' alt='user posted image'>
உங்க கல்யாணம் எப்போ?
திடீர்னு நாளைக்கே ஒரு பொண்ணை எனக்குப் பிடிக்கலாம். ஏன்னா... உலகம் ரொம்பப் பெரிசு!</span>
vikatan.com
|
|
|
| நிலக்கடலை திருவிழா |
|
Posted by: aathipan - 12-10-2004, 06:57 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
தசரா பண்டிகைக்கு அடுத்தபடியாக வெகுவிமர்சையாக கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்படுவது டிசம்பர் முதல் வாரத்தில் நடக்கும் "நிலக்கடலை திருவிழா'தான். கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை நடக்கும் இவ்விழா, பெங்களூரின் புறப்பகுதியில் அமைந்துள்ள "பசவங்குடி தொட்ட பசவண்ண' கோவிலில் நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் "கடேல்காய் பர்சி' எனும் இவ்விழாவுக்கு, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிலக்கடலை சாகுபடியாளர்கள் ஒன்று சேர்வர். தங்களது நிலத்தில் விளைந்த நிலக்கடலையை, அறுவடை செய்த முதல் பகுதியை பசவங்குடி தொட்ட பசவண்ண கோவிலின் "பாசாவா' எனும் மிகப் பெரிய நந்தி சிலைக்கு படைக்கின்றனர். அன்றைய தினம் "தொட்ட பசவண்ண கோவில்' விழாக் கோலம் பூண்டிருக்கும்.
தங்களது விளைச்சலின் ஒரு பகுதியை எடுத்து வந்து, நந்தி சிலையின் இரு ஓரங்களில் கொட்டி காட்சிக்கு வைத்திருப்பர் நிலக்கடலை சாகுபடியாளர்கள். அன்று அந்த பகுதியில் நிலக்கடலையின் மீதுதான் நடக்கும்படி இருக்கும். நிலக்கடலை பல வடிவங்களில், அவித்தது, வெல்லத்துடன் கலந்தது, வறுத்தது என ரகவாரியாகவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
"கடேல் காய் பர்சி' எனும் கடலை திருவிழா பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், அது எப்போது தொடங்கியது என தெரியவில்லை. கர்நாடகாவின் பூர்வீக பழங்குடியினருக்கு விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. இதன் காரணமாகவே இன்றும் கர்நாடக மாநில விவசாயிகள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதன் விளைவாக கொண்டாடப்படுவது தான் மார்கழி பவுர்ணமியில் நடக்கும் "அறுவடை திருநாள்' மற்றும் நிலக்கடலை திருவிழா.
தற்போது பசவங்குடி உள்ள பகுதி, அந்நாளில் நிலக்கடலை சாகுபடியாகும் விளைநிலமாக இருந்ததை சுற்றி மாஹள்ளி, குட்டநெல்லி, பைரசந்த்ரா போன்ற பகுதிகளிலும் நிலக்கடலையே விளைந்தது. பசவங்குடி உள்ள பகுதிக்கு "சங்கன ஹள்ளி' என்று அப்போது பெயர். இப்பகுதியிலுள்ள விவசாயிகள் அந்நாளில் நிலக்கடலையை சாகுபடி செய்து வந்தனர்.
அப்போது ஒரு சமயம் ஒரு பெரிய காளை மாடு அவர்கள் பயிர் செய்த நிலக்கடலை பயிர்களை சாப்பிட்டு நாசம் செய்து வந்தது. அதை எப்படியாவது விரட்டி விட வேண்டும் என்று அங்குள்ள விவசாயிகள் ஒன்று கூடி ஒரு முறை அந்த காளையை விரட்டி சென்றனர்.
ஆனால், அந்த காளை குறிப்பிட்ட துõரம் சென்றவுடன் திடீரென்று கல்லாகி விட்டது. இதை பார்த்து பரவசமான விவசாயிகள், காளை உருவத்தில் வந்தது சிவபெருமான் தான் என்று அந்த காளை சிலைக்கு கோவில் கட்டி வணங்கி வந்தனர். அத்தோடு அந்த காளை மறைந்த தினத்தன்று அக்கோவிலுக்கு வந்த தங்களது வயலில் விளையும் முதல் சாகுபடி நிலக்கடலையை கடவுளுக்கு படைப்பதாக வேண்டி கொண்டனர். அதுதான் நிலக்கடலை திருவிழாவாக இன்றும் தொடர்கிறது. கிட்டத்தட்ட அன்றைய தினம் 50 ஆயிரம் பேர்களாவது கலந்து கொள்வர்.
நான்கு, ஐந்து மாதங்கள் பூமியின் உள்ளே வளரும் கடலை, அதன் பின்பே வெளியே எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. நிலக்கடலையை அதிகளவு சாப்பிட முடியாது. ஏனெனில், அது குறைந்தளவு சாப்பிட்டாலேயே வயிறு நிறைந்தது போன்ற உணர்வை தரும். காரணம், அதிலுள்ள புரோட்டீன் சத்து. நிலக்கடலையை வெல்லத்துடன் சாப்பிட நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும். "அனிமியா' நோய் வருவது தடுக்கப்படும். ஆனால், நிலக்கடலையை அதிகளவு சாப்பிட கூடாது. அதனால் ஈரல் பாதிக்கப்படும்.
-கோ.வீ.ராஜேந்திரன்
|
|
|
| செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது |
|
Posted by: Vaanampaadi - 12-10-2004, 06:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
சற்று நேரத்திற்கு முன்னர் BBC Worlservice "Asia Today" டிவி செய்தியில் தினேஸ ராஜரட்ணமும் அவரது பங்களாதேஸ் கூட்டாளியும் விடுதலையான செய்தியை உறுதிப்படுத்தியதோடு அவர்கள் இருவரினதும் விடுதலையான பின்னர் எடுக்கப்பட்ட வீடியோ படங்களையும் காண்பித்ததார்கள்.
|
|
|
| கன்னியவள் கனவானால்(ள்)...! |
|
Posted by: kuruvikal - 12-10-2004, 01:32 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<img src='http://kuruvikal.yarl.net/archives/goodone.jpg' border='0' alt='user posted image'>
<b>அற்புத வர்ணம்
மலர்களாய் வாசம் பரப்ப
வசந்தமும் வந்தது
தென்றலும் தூது சொன்னது
அவை கண்டு
கனிவால் கனிந்த உள்ளம்
கன்னியுன்
இதயக்கதவு திறக்க காவலிருக்க....
கண்ணோடு வந்து கதை பேசி
கண்ணோடு மறைந்தாய்....!
கண்ட"தேன்" உன்னை காணாது
கலங்கி அருகிரு கடலையில் தேட
அலையெங்கும் நீயானாய்
ஐயகோ.. பேரலை ஒன்று
சீதையுன்னைச் சீரழிக்க
சிந்தை கலங்கி
அருகில் தேடினேன்...!
அம்மா வந்து விடிந்த சேதி சொல்ல...
அட... கன்னியவள் கனவானால்...!</b>
நன்றி --- http://kuruvikal.yarl.net/ (வலைப்பூப் பதிவுக்கான மீள்பிரசுரம்...!)
|
|
|
| நாங்கள் எங்கே போகிறோம்?????? |
|
Posted by: Haran - 12-10-2004, 01:37 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (20)
|
 |
சுவிஸில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கைது!
இது நடந்தது சுமா÷ 3வாரங்களுக்கு முன்பு.ஆனால் நேற்றும் ஒரு
44வயது இலங்கைய÷ கைது!!காரணம் ஒரு ஆட்டை பாலியல் வல்லுறவு
கொண்டதற்காக!!!!!!!!!இவ÷கள் தமிழ÷கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
|
|
|
|