![]() |
|
லாப்-டாப் கம்ப்யூட்டர்களால் ஆண்களுக்கு ஆபத்து? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: லாப்-டாப் கம்ப்யூட்டர்களால் ஆண்களுக்கு ஆபத்து? (/showthread.php?tid=6221) |
லாப்-டாப் கம்ப்யூட்டர்களால் ஆண்களுக்கு ஆபத்து? - ஊமை - 12-11-2004 ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது விதைப்பை வெப்பநிலை. சமீப காலமாக விதைப்பை வெப்பநிலை உயர்வினால் கணிசமான சதவீத ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாவதாக ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. சூடான வெந்நீர் குளியல், இறுக்கமான உள்ளாடைகள் , வெப்பமான சூழ்நிலை, இரவு நேரப் பணி ஆகியவையும் விதைப்பை வெப்பநிலை உயருவதற்கான காரணங்களில் சில. இந்நிலையில் இந்த வாpசையில் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும் அடங்கும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. லாப்-டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் ஆண்கள் பெரும்பாலும் வசதி கருதி மடியில் வைத்து பயன்படுத்துவதால் விதைப்பை வெப்பநிலை உயர்ந்து விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் அத்தகைய உயிரணுக்களால் கருவை உண்டாக்க முடியாது என்று அந்த செய்தி கூறுகிறது. நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சிறுநீரகவியல் துறை பேராசிhpயர்கள் லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தினர். அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்களை அறை வெப்பநிலை உள்ள ஒரு அறையில் வைத்தனர். பிறகு அவர்களில் கொஞ்சம் பேருக்கு இயங்கும் லாப்-டாப் கம்ப்யூட்டர்களும், மீதிப் பேருக்கு இணைப்பு எதுவும் இல்லாத வெறும் லாப்-டாப் கம்ப்யூட்டரும் தரப்பட்டன. இதன்பின்னர் ஒவ்வொரு 3 நிமிடத்துக்கு ஒருமுறை விதைப்பையின் வெப்பநிலையை குறித்துக் கொண்டனர். பின்னர் குறிப்பிட்ட நேரம்; கழித்து இரு பிhpவு ஆண்களின் விதைப்பை வெப்ப நிலையை சோதனை செய்து பார்த்த போது லாப்-டாப் கம்ப்யூட்டர்களை மடியில் வைத்து இயக்கிய ஆண்களுக்கு வெப்பநிலை கணிசமாக உயர்ந்து இருந்தது. இதற்கு லாப்-டாப் கம்ப்யூட்டரை மட்டும் குறை சொல்ல முடியாது. லாப்-டாப் கம்ப்யூட்டர் தவறி விழுந்து விடாமல் இருக்க இரண்டு தொடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொள்ளும் போது, அவற்றின் வெப்பம் அப்படியே விதைப்பைக்கும் பரவுகிறது. இதுதான் இங்கு முக்கிய விஷயம். அடுத்து, லாப்-டாப் கம்ப்யூட்டர்கள் மூலம் உண்டாகும் வெப்பம், விதைப்பை வெப்பத்தை மேலும் அதிகாpக்கிறது. இந்த வெப்பநிலை உயர்வு ஒரு ஆணை மலட்டுத்தன்மை வாய்ந்தவராக மாற்றுமா? என்று கேட்டால், ஆராய்ச்சியாளர்கள் எதையும் உறுதியாக சொல்ல மறுக்கிறhர்கள். இருப்பினும் விதைப்பை வெப்பநிலை 1 டிகிhp செல்சியஸ் கூடும் போது அந்த இடத்தில் விதைப்பையில் உற்பத்தி ஆகும் உயிரணுக்களின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறைகிறதாம். லாப்-டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தற்போது வேகமாக அதிகாpத்து வருகிறது. இப்போது 6 கோடி லாப் கம்;ப்யூட்டர்கள் பயன்பட்டு வரும் நிலையில் அடுத்த 2005ம் ஆண்டு வாக்கில் மேலும் 9 கோடி லாப்-கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப் படும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் லாப்- கம்ப்யூட்டர்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய்ச்சி நடத்த வேண்டியது அவசியம் ஆகிறது. இருப்பினும் தற்போது லாப்-டாப் பயன்படுத்துபவர்கள் முடிந்தவரை அவைகளை மடியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. - கறுணா - 12-15-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! ஊமைஸ்ஸ்ஸ்ஸ்... உந்தப் பிரட்சனை உமக்கிறுந்தால் வெட்கத்தை விட்டுட்டு! கொச்ச வேப்பிலையை சூடக்கிப் போட்டு குந்திக் கொண்டிரும்! எல்லாம் பறந்து பதினாறும் பெறுவீர்!!!!! onionkaruna@hotmail.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் |