| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 371 online users. » 0 Member(s) | 368 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,262
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| தமிழ் வெல்லும்! இது சத்தியம்! |
|
Posted by: hari - 03-05-2005, 07:12 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (19)
|
 |
<span style='font-size:23pt;line-height:100%'>தமிழ் வெல்லும்! இது சத்தியம்!!
- தொ. சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com )
[size=14]
எங்கள் அன்னையரும் இனிய தந்தையரும்
ஏந்தி நின்றதொரு எண்ணமே - தமிழ்
ஈழம் என்றதொரு சின்னமே!
வெங்களத்தில் உயிர் வீழ்ந்த போதினிலும்
வேட்கை வீழ்வதி(ல்)லை இன்னுமே - ஒரு
விடிவு தோன்றும்!இது திண்ணமே!
சொந்த மண்ணிலொரு குடிசை வேண்டுமெனச்
சொல்வதிங்கு ஒரு குற்றமோ? - இந்தக்
கொடுமை ஏதுவகைக் கொற்றமோ?
வந்து சேர்ந்தவனின் ஓர வஞ்சனையை
வாழ்ந்த தமிழன்இனம் ஏற்குமோ? - அவன்
வாளும் கேடயமும் தோற்குமோ?
நாணம் இன்றியெமை நண்ணி நின்றுசதி
நாடகம் புரிய விடுவதோ? - எமை
நச்சுமிகு நரிகள் தொடுவதோ?
ஊனம் உள்ளவனின் ஊனும் உள்ளமதும்
உறுதமிழ் மனதைச் சுடுவதோ? - எங்கள்
உறவுகள் ஊறு படுவதோ?
பொன்படைத்த புகழ் பூமி எங்களவர்
பூமியென்று புஜம் கொட்டுவோம்! - இனி
பொய்யர் கும்பலை விரட்டுவோம்!
துன்புறுத்த வரும் துன்னலார் வரிசை
துண்டுபட வியூகம் கட்டுவோம்! - ஒரு
தூய வேற்படை திரட்டுவோம்!
ஈழமே நமது ஞாலம் என்பதனை
இடையறாது பறைசாற்றுவோம்! - அதன்
இணையிலாத புகழ் போற்றுவோம்!
வாழ வேண்டியவன் தமிழன் எனும் கொள்கை
வையமெங்கும் நிலைநாட்டுவோம்! - யாம்
வறியரில்லை எனக் காட்டுவோம்!
அண்டி வந்த பதர் ஆட்சிபீடமதை
அபகரித்த கதை மாறிடும்: - அதை
அடுத்த தலைமுறைகள் கூறிடும்!
எண்டிசை மருங்கும் வென்ற தமிழ்நெஞ்சில்
ஈழ வேட்கைதான் வேரிடும்! - உயிர்
இறுதிவரை நின்று போரிடும்!
சொல்லொணாத துயர் தாங்குகின்ற தமிழ்ச்
சோதரா! உறுதி பூணடா! - நம்
சுதந்திரம் அருகில் தானடா!
மெல்ல வந்து நமை மெல்ல எண்ணுபவன்
மிருக ஜாதியினன்: காணடா! - அவன்
மீட்சியின்றி மடிவானடா!
சுத்தமற்ற மதி கொண்ட ரத்தவெறிச்
சுற்றம் வீழுவது நிச்சயம்! - யாம்
சொல்லும் சபதமிது சாட்சியம்!
வித்தை கற்ற தமிழ் யுத்த புத்திரர்கள்
வெற்றிதான் நமது லட்சியம்! - தமிழ்
வெல்லும்: வெல்லும்! இது சத்தியம்!!</span>
|
|
|
| சவூதி அரேபியாவில் ஓர் தமிழ் இலக்கிய விழா |
|
Posted by: hari - 03-05-2005, 07:03 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (11)
|
 |
[size=16]"சவூதி அரேபியாவில் ஓர் தமிழ் இலக்கிய விழா" - நெல்லை சுதன்
<img src='http://img185.exs.cx/img185/948/80ye.jpg' border='0' alt='user posted image'>
கவிஞருக்குப் பாராட்டு விழா :
சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியான அல்கோபார் நகரில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள் மற்றும் தமிழ்க் கவிஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ்ப்புலமை மிக்கவரும், சக கவிஞருமான திரு. தொ. சூசை மிக்கேல் அவர்களுக்கு 24-01-2005 திங்கள் கிழமையன்று ஒரு பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
<img src='http://img185.exs.cx/img185/8577/untitled17fg.jpg' border='0' alt='user posted image'>
கடந்த 2004 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட "பட்டுமணல் மொட்டுக்கள்" என்ற கவிதைத் தொகுப்பிற்காகக் கவிஞரைப் பாராட்டும் வகையிலும், அத்தொகுப்பில் அடங்கிய கவிதைகளை ஆய்வு செய்கின்ற வகையிலும் இவ்விழா அமைந்திருந்தது. குறிப்பாக சவூதி அரேபியாவில் வெளிவந்த முதன்முதல் தமிழ்க் கவிதை நூல் என்ற பெருமையும் இந்நூலுக்கு உண்டு. அன்றைய தினம் கவிஞரின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, "வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்" என்னும் பாரதி பாடலைத் திரு. தொ. சூசைமிக்கேல் அவர்கள் பாட, விழா ஆரம்பமானது. திரு. மு. காளியப்பன் (நெல்லை சுதன்) வரவேற்புரையாற்ற, அதனைத் தொடர்ந்து விழாவிற்குத் தலைமை வகித்து, இலக்கிய ஆர்வலரும், சமுதாயச் சிந்தனையாளருமான திரு. இரா. வீரசேகரன் (மன்னை மாதேவன்) அவர்கள் தலைமை உரையாற்றினார்.
<img src='http://img79.exs.cx/img79/4446/untitled20ak.jpg' border='0' alt='user posted image'>
அதன்பின் திரு. முகமது ஜாபர்ää திருமதி. ஜானகி கண்ணன், திரு. மை. மாத்யூ, திரு. அந்தோனி ஜார்ஜ், திருமதி. அல்லி ராஜன், திரு. மு. காளியப்பன் போன்ற இலக்கியச் சிந்தனையாளர்களும், கவிஞர்களும் பட்டுமணல் மொட்டுக்களின் ஆசிரியர் திரு. சூசைமிக்கேல் அவர்களைப் பாராட்டிப் பேசினர். அதனைத் தொடர்ந்து திரு. இரா. வீரசேகரன் அவர்கள் கவிதைத் தொகுப்பைப் பற்றிய மிகச் சிறந்த ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். அதனையடுத்து, பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒலி பரப்பாகும் டி.ஆர்.டி வானலையில் ஒலிபரப்பப் பட்ட திரு. சூசை மிக்கேல் அவர்களின் "என்ன செய்யும்! என்ன செய்யும்!" என்ற கவிதையை ஈழத்தமிழர் திரு. உதயகுமார் அவர்கள் வாசிக்க, பாராட்டு நிகழ்ச்சி இனிது நிறைவு பெற்றது.
<img src='http://img79.exs.cx/img79/3716/untitled39el.jpg' border='0' alt='user posted image'>
கவியரங்கம் :
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறப்புக் கவியரங்கம் ஒன்றும் நடைபெற்றது. இக்கவியரங்கிற்குää கவிஞர் சூசைமிக்கேல் அவர்கள் தலைமைக் கவிஞராகப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தினார். கீழ்க்கண்ட கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் தங்களின் சிறப்பான கவிதையை வழங்கியது ஓர் இனிய இலக்கிய விருந்தாகவே அமைந்தது.
பங்குபெற்ற கவிஞர்கள்: தலைப்பு:
திரு. இரா. வீரசேகரன் - விழியோரம் ஓர் நீதி
திருமதி. ஜானகி கண்ணன் - பாரதியும் நானும்
திரு. மாரியப்பன் - படிப்பினை
திருமதி. வசந்தி உதயகுமார் - கண்ணீர் கடலானது
திரு. மை. மாத்யூ - மழலைக் குரல்
திரு. மரிய சூசை - தனிமை
திரு. சசிகுமார் - தன்னையே விற்றவன்
திருமதி. அல்லி ராஜன் - பன்னீர்த் துளிகள்
திரு. மு. காளியப்பன் - கிழக்கு திசை
கவியரங்க நிகழ்ச்சியின் நிறைவாக, தலைமைக் கவிஞர் திரு. சூசைமிக்கேல் அவர்கள் தனது "எழுத்தாளனே, எழுந்திடு!" என்ற கவிதையை வழங்கினார். கவியரங்கம் முடிவடைந்ததும், திருமதி. வசந்தி உதயகுமார் அவர்கள் நன்றி நவில, விழா இனிது நிறைவு பெற்றது.
இவ் விழாவிற்கு முன்னதாக, டிசம்பர் 31, 2004 வெள்ளியன்று நள்ளிரவில், அல்கோபார் நகரின் அனைத்துத் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் ஓர் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. சுனாமியின் துயர்மண்டிய சூழ்நிலையில், அந்தப் புத்தாண்டு தினம் ஓர் அஞ்சலி தினமாகவே நினைவுகூரப் பட்டு, சர்வ மதப் பிரார்த்தனையுடன் உணர்வுகள் ஒருமுகப்படுத்தப் பட்டு, ஓர் அமைதியான ஆண்டுப் பயணம் தொடங்கப் பட்டது.
நன்றி
<img src='http://img240.exs.cx/img240/4811/untitled49bs.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| கிழக்கில் இராணுவம் தாக்குதல் |
|
Posted by: Thusi - 03-05-2005, 04:54 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
மட்டக்களப்பில் விடுதலைப்புலிப் போராளியொருவர் சிங்கள இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இன்னொரு போராளி காயமடைந்துள்ளார்.
LTTE member killed in Batticaloa ambush
[TamilNet, March 05, 2005 12:07 GMT]
A member of the Liberation Tigers was killed in an ambush near Kirumichchai, 48 kilometres north of Batticaloa, Saturday morning around 10. "He was killed in an ambush by the Sri Lanka army (SLA) in an area that is under our control. It about three kilometres from the SLA's Cadjuwatte camp", said an LTTE official in Batticaloa. "A Sri Lanka army helmet was found at the scene of the ambush," he said.
The ambush party escaped to the SLA camp in Mankerni, according to the LTTE official.
Tamilnet.
|
|
|
| கவிதையும் கானமும் |
|
Posted by: kavithan - 03-05-2005, 12:10 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (29)
|
 |
கவிதைத்தோட்டத்தில் கவிதையும் கானமும் என்ற புது விடயம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள். இது இன்னும் தெளிவாக இணைக்கவில்லை ஆனாலும் வெகு விரைவில்தெளிவாக இணைக்க முயல்கிறேன். இந்த திட்டம் யாழிலும் வர இருக்கிறது .. எனவே உங்கள் கருத்தை கூறுங்கள்.
இதோ கவிதையும் கானமும் [ ஒலிவடிவம்]
|
|
|
| ஒலியும் ஒளியும் - ஆக்கங்கள் |
|
Posted by: yarlmohan - 03-05-2005, 10:39 AM - Forum: களம் பற்றி
- Replies (50)
|
 |
<b>படங்கள் தரவேற்றம்</b>
களத்தில் உள்நுழைந்தவர்கள் அதில் இருந்து வெளியேறிக் கொள்ளாத பட்சத்தில் நேரடியாக விம்பகம் பகுதிக்கு உள்நுழைந்து உங்களுக்கான albumத்தினை உருவாக்கி உங்களுக்கு பிடித்தமான அல்லது உங்கள் படங்களைத் தரவேற்றம் செய்து கொள்ளலாம். தரவேற்றப்படும் படங்களுக்கு நீங்களே முழுப்பொறுப்பாளிகள். தவறாகப் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் எதுவித மறு சந்தர்ப்பமும் வழங்கப்படாது, உடனடியாகவே அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.
<b>ஒலி,ஒளி இணைப்பு</b>
களத்தில் ஒலி, ஒளிவடிவில் உங்கள் ஆக்கங்களை தரவேற்றம் செய்து கொள்வதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நீங்கள் வாசித்த ஒரு ஆக்கத்தினை உங்கள் குரலில் ஒலிப்பதிவு செய்தோ அல்லது நீங்கள் சொந்தமாக எழுதியோ ஒலியாக, ஒளியாக இணைத்துக் கொள்ள முடியும்.
ஆகக்கூடியது 2MB மட்டுமே தரவேற்றம் செய்யலாம்.
இவைகள் உங்கள் சொந்த ஆக்கமாக இல்லாத பட்சத்தில் அவற்றிக் மூலம் எதுவெனக் குறிப்பிடப்படல் வேண்டும்.
அனுப்பக்கூடிய வடிவங்கள் (format) mp3, wma, wmv, midi, ram, au, mpeg, avi,rm
இதற்கான முகவரி: http://www.yarl.com/forum/music.php
இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சியே
|
|
|
| இளைஞர்கள் கவனம் !! |
|
Posted by: shanxp - 03-04-2005, 11:11 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (37)
|
 |
இலங்கையிலிருந்து சில பெண்கள் சாட் (chat) ல் வந்து ஐரோப்பாவில் இருக்கும் இளைஞர்களிடம் பணம் கெட்பதாக தெரிய வந்துள்ளது .
தங்களுக்கு அம்மா அப்பா இல்லை எனவும் தங்களுக்கு உதவி செய்யும் படி கேட்டு ஏமாற்றுவதாக தெரிகிறது
இளைஞர்களே !!!! கவனம் !!!!!!
உல்லாச வாழக்கைக்கு உதவி செய்ய வேண்டாம் !!!
|
|
|
| புரிந்தால் சொல்லுங்களேன்...! |
|
Posted by: Vaanampaadi - 03-04-2005, 06:51 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
புரிந்தால் சொல்லுங்களேன்...!
அனந்த்
என்னை மீறிய, எல்லை மீறிய
ப்ரபஞ்சம் பற்றிய ப்ரக்ஞை
எனக்குள் எங்கோ ஊற்று கண்ணாய்...
எத்தனை முறைதான் தோற்க
"நான்" அறியும் முயற்சியில் என்னிடமே
மீண்டும்...மீண்டும்
பிறப்பிற்கு முன்
"நான்" எங்கிருந்தது?
இறப்பிற்கு பின்
"நான்" என்னவாகப்போகிறது?
இடைப்பட்ட காலங்களில்
"நான்" ஐ உருவாக்கியவர்கள்
"நான்" ல் உருவானவர்கள்
"நான்" உடன் பிறந்தவர்கள்
"நான்" உடன் கலந்து பழகுகிறவர்கள்
இவர்களுக்கெல்லாம் என்ன சம்மந்தம்?
சாங்கிய யோகம், சனாதன தர்மம்
த்வைத, அத்வைத மற்றும் புருஷ, ப்ரக்ருதி
எதுவும் புரியவில்லை....அல்லது
புரிவதற்கு அதில் எதுவுமில்லை.
இறந்து கிடக்கயிலும் சரி
பிறந்து கிடக்கயிலும் சரி
என்ன வித்தியாசம் பெரிதாய்....
எனக்கும் எருமைக்கும்?
படைத்தவனின்றி படைக்கப்பட்ட பொருளில்லை
இறைவன் இருப்புக்கு இவர்கள் சொன்ன வியாக்யானம்.
எங்கிருக்கிறான் (மனிதனை தவிர்த்த) அந்த இறைவனை படைத்தவன்?
எவர்க்கும் தெரியவில்லை.
இரண்டாய் படைத்தானாம் எல்லாவற்றையும் இறைவன்
இரவு பகல்
இன்பம் துன்பம்
வெப்பம் குளிர்ச்சி
உற்று நோக்குகையில் உண்மை ஒன்று உருப்பெருகிறது
ஒன்றின் இன்மையே இன்னொன்றின் இருப்பாய் உணரப்படுகிறது எனில்
எதுதான் உண்மையில் உண்மையாய் இருக்கிறது?
இம்மாதிரியான கேள்விகள் தவிர்த்த
இறப்பிற்கான காத்திருத்தலையும் தவிர்த்த
உருப்படியான செயல் ஏதெனும் இருப்பின்
சொல்லியனுப்புங்களேன் எனக்கும் சேர்த்து
காலம் சொட்டிக்கொண்டே இருக்க
கவலை விஷமாய் பற்றி ஏரிக்கொண்டே இருக்க
கடக்க வேண்டிய தூரம் பற்றிய ப்ரக்ஞையும் இன்றி
பயனற்ற பாரங்களை சுமந்தவாறு....
இவ்வாறாய் கழியும் இவர்களின் வாழ்க்கை பற்றி
புரிந்தால் சொல்லுங்களேன்...!
அனந்த்
|
|
|
| 'உள்ளம் கேட்குமே' |
|
Posted by: Vaanampaadi - 03-04-2005, 06:48 PM - Forum: சினிமா
- Replies (3)
|
 |
'உள்ளம் கேட்குமே'
ஷாம், லைலா, பூஜா, ஆசின் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் முடங்கியிருக்கும் உள்ளம் கேட்குமே படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மறைந்த தயாரிப்பாளரின் ஜி.வியின் பட நிறுவனமான ஜிவி பிலிம்ஸ் தயாரித்த கடைசிப் படம் தான் உள்ளம் கேட்குமே. படத்தில் நடித்த பலருக்கும் சம்பளப் பாக்கி இருந்ததால் படத்தைத் திரையிட அவர்கள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து படத்தை திரையிட முடியாமல் ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் தவித்தது. இந்நிலையில் படத்தைத் திரையிடுவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிவி பிலிம்ஸ் இயக்குனர் பி.ரகுநாதன் வழக்கு தொடர்ந்தார்.
தனது மனுவில், நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். படத்தை திரையிட தாமதமானால் மதிப்பு குறைந்து விடும். இப் படத்தைத் திரையிட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பின்னர், யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், படத்தை திரையிட தயாரிப்பாளருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாத் படநிறுவனம் வழக்கறிஞர் ஜெரோம் புஷ்பராஜ் ஆகியோர் 8 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். படத்துக்கான விளம்பரத்துக்காக மனுதாரர் ரூ. 10 லட்சம் செலவிடலாம்.
படத்தின் மூலம் வசூலாகும் பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதன் மூலம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த உள்ளம் கேட்குமே ஒரு வழியாக தியேட்டர்களுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
|
|
|
|