![]() |
|
தமிழ் வெல்லும்! இது சத்தியம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தமிழ் வெல்லும்! இது சத்தியம்! (/showthread.php?tid=4885) |
தமிழ் வெல்லும்! இது சத்தியம்! - hari - 03-05-2005 <span style='font-size:23pt;line-height:100%'>தமிழ் வெல்லும்! இது சத்தியம்!! - தொ. சூசைமிக்கேல் ( tsmina2000@yahoo.com ) [size=14] எங்கள் அன்னையரும் இனிய தந்தையரும் ஏந்தி நின்றதொரு எண்ணமே - தமிழ் ஈழம் என்றதொரு சின்னமே! வெங்களத்தில் உயிர் வீழ்ந்த போதினிலும் வேட்கை வீழ்வதி(ல்)லை இன்னுமே - ஒரு விடிவு தோன்றும்!இது திண்ணமே! சொந்த மண்ணிலொரு குடிசை வேண்டுமெனச் சொல்வதிங்கு ஒரு குற்றமோ? - இந்தக் கொடுமை ஏதுவகைக் கொற்றமோ? வந்து சேர்ந்தவனின் ஓர வஞ்சனையை வாழ்ந்த தமிழன்இனம் ஏற்குமோ? - அவன் வாளும் கேடயமும் தோற்குமோ? நாணம் இன்றியெமை நண்ணி நின்றுசதி நாடகம் புரிய விடுவதோ? - எமை நச்சுமிகு நரிகள் தொடுவதோ? ஊனம் உள்ளவனின் ஊனும் உள்ளமதும் உறுதமிழ் மனதைச் சுடுவதோ? - எங்கள் உறவுகள் ஊறு படுவதோ? பொன்படைத்த புகழ் பூமி எங்களவர் பூமியென்று புஜம் கொட்டுவோம்! - இனி பொய்யர் கும்பலை விரட்டுவோம்! துன்புறுத்த வரும் துன்னலார் வரிசை துண்டுபட வியூகம் கட்டுவோம்! - ஒரு தூய வேற்படை திரட்டுவோம்! ஈழமே நமது ஞாலம் என்பதனை இடையறாது பறைசாற்றுவோம்! - அதன் இணையிலாத புகழ் போற்றுவோம்! வாழ வேண்டியவன் தமிழன் எனும் கொள்கை வையமெங்கும் நிலைநாட்டுவோம்! - யாம் வறியரில்லை எனக் காட்டுவோம்! அண்டி வந்த பதர் ஆட்சிபீடமதை அபகரித்த கதை மாறிடும்: - அதை அடுத்த தலைமுறைகள் கூறிடும்! எண்டிசை மருங்கும் வென்ற தமிழ்நெஞ்சில் ஈழ வேட்கைதான் வேரிடும்! - உயிர் இறுதிவரை நின்று போரிடும்! சொல்லொணாத துயர் தாங்குகின்ற தமிழ்ச் சோதரா! உறுதி பூணடா! - நம் சுதந்திரம் அருகில் தானடா! மெல்ல வந்து நமை மெல்ல எண்ணுபவன் மிருக ஜாதியினன்: காணடா! - அவன் மீட்சியின்றி மடிவானடா! சுத்தமற்ற மதி கொண்ட ரத்தவெறிச் சுற்றம் வீழுவது நிச்சயம்! - யாம் சொல்லும் சபதமிது சாட்சியம்! வித்தை கற்ற தமிழ் யுத்த புத்திரர்கள் வெற்றிதான் நமது லட்சியம்! - தமிழ் வெல்லும்: வெல்லும்! இது சத்தியம்!!</span> - vasanthan - 03-05-2005 நன்று - kavithan - 03-05-2005 நன்றி மன்னா - hari - 03-06-2005 கவிதன் உங்களால் இக்கவிதைக்கும் ஒலி வடிவம் கொடுக்கமுடியுமா? - tamilini - 03-06-2005 நன்றியண்ணா இணைப்புக்கு.. ஒலிவடிவம் ஒன்றையும் கேக்க முடியல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 03-06-2005 tamilini Wrote:நன்றியண்ணா இணைப்புக்கு.. ஒலிவடிவம் ஒன்றையும் கேக்க முடியல.. <!--emo&ஏன்........ :?: :roll: .செவிபறை செப்பு தகடா............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-06-2005 வேலை செய்யவில்லை.. என்ன லொள்ளா..?? :twisted: :twisted: :twisted: - KULAKADDAN - 03-06-2005 நாம கேட்டமே.............. ஓலியளவை உச்சத்தில்வைத்து கேட்டு பாருங்க.............
- tamilini - 03-06-2005 நம்மால முடியல ஒன்றும் தெரியல.. பிளே பண்ண.. அப்புறம் பாப்பம் :wink: - KULAKADDAN - 03-06-2005 பிளே ஒண்டுமில்ல தலைப்பில் அழுத்தினால் புதிய சாளரதம் வரும்.....கேட்கும் கேட்டுகொண்டிருக்கிறேன்.... - hari - 03-07-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin-->பிளே ஒண்டுமில்ல தலைப்பில் அழுத்தினால் புதிய சாளரதம் வரும்.....கேட்கும் கேட்டுகொண்டிருக்கிறேன்....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> குளக்கட்டான் எப்படி இருக்கிறது இசை ? ஏன் தமிழினிக்கு கேட்கவில்லை? - KULAKADDAN - 03-07-2005 நல்ல முயற்னசி.....இன்னும் மெருகேறவேண்டும்..... - tamilini - 03-07-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஏன் தமிழினிக்கு கேட்கவில்லை? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நீங் வேறை அண்ணா நம்ம ஸ்பீக்கர் கெட்போன் ஒன்றும் வேர்க்க பண்ணவில்லை.. நேற்றுத்தான் பாத்தன்.. ம் சவுண்காட் பிரச்சனையாம்.. பிறகு பாப்பம் என்று விட்டிட்னள்..
- shiyam - 03-07-2005 பாவம் தமிழினி நீங்கள் செவிப்புலன் அற்றவரா??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-07-2005 ஆ சியாயம் அண்ணா.. புதிசாய் கணணிக்கு வைத்தியம் பாத்தனா.. அதுக்குப்பிறகு.. அவைகளை பாவிக்கவில்லை என்று சொன்னன்.. காலை வாருறியள்.. :evil: :roll: - shiyam - 03-07-2005 இப்பவிளங்கிட்டுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 03-07-2005 சியாம் உங்களுக்கு கேட்குதுதானே? பாவம் தமிழினிக்குதான் கேட்கவில்லை!
- tamilini - 03-07-2005 ம் நான் கேட்டன் அண்ணா அதுக்கென்று.. பள்ளிக்கு}டத்திற்கு கெட்போன் கொண்டுவந்தன். வசியின் ஆக்கத்தின் குரலை எங்கையோ கேட்ட நினைவு என்று.. பாத்தால் பிறகு தான் அது அரவிந்த சாமியின் குரல் என்று எழுதியதை வாசித்தன். மதுரனின் பதிவு விளங்ஙகவில்லை.. தம்பியின்பதிவு சு}ப்பர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 03-07-2005 தமிழினி, சின்னப்புவையும் அவரின் மச்சானையும் கன நாளாக களத்தில் காணவில்லை, ஏதேனும் பிரச்சனையா? - tamilini - 03-07-2005 டக் அண்ணாவுக்கு என்ன நடந்தது தெரியல.. சின்னப்பு.. விடுமுறையில போட்டார் என்று கேள்வியண்ணா.. உங்கினைதான் வந்திருப்பார். :wink: |