Yarl Forum
'உள்ளம் கேட்குமே' - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: 'உள்ளம் கேட்குமே' (/showthread.php?tid=4894)



'உள்ளம் கேட்குமே' - Vaanampaadi - 03-04-2005

'உள்ளம் கேட்குமே'

ஷாம், லைலா, பூஜா, ஆசின் நடித்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் முடங்கியிருக்கும் உள்ளம் கேட்குமே படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மறைந்த தயாரிப்பாளரின் ஜி.வியின் பட நிறுவனமான ஜிவி பிலிம்ஸ் தயாரித்த கடைசிப் படம் தான் உள்ளம் கேட்குமே. படத்தில் நடித்த பலருக்கும் சம்பளப் பாக்கி இருந்ததால் படத்தைத் திரையிட அவர்கள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து படத்தை திரையிட முடியாமல் ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் தவித்தது. இந்நிலையில் படத்தைத் திரையிடுவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜிவி பிலிம்ஸ் இயக்குனர் பி.ரகுநாதன் வழக்கு தொடர்ந்தார்.

தனது மனுவில், நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். படத்தை திரையிட தாமதமானால் மதிப்பு குறைந்து விடும். இப் படத்தைத் திரையிட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, பின்னர், யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், படத்தை திரையிட தயாரிப்பாளருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாத் படநிறுவனம் வழக்கறிஞர் ஜெரோம் புஷ்பராஜ் ஆகியோர் 8 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். படத்துக்கான விளம்பரத்துக்காக மனுதாரர் ரூ. 10 லட்சம் செலவிடலாம்.

படத்தின் மூலம் வசூலாகும் பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதன் மூலம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த உள்ளம் கேட்குமே ஒரு வழியாக தியேட்டர்களுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


- vasisutha - 03-04-2005

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- KULAKADDAN - 03-04-2005

இதுக்கேன் வசி இப்படி.......


- vasisutha - 03-04-2005

இதெல்லாம் எனக்கு தேவையா என்றுதான் :x :wink: