| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 456 online users. » 0 Member(s) | 453 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,263
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| சந்திரமுகி |
|
Posted by: Mathan - 03-06-2005, 10:39 AM - Forum: சினிமா
- Replies (150)
|
 |
சந்திரமுகி பாடல்கள்
சமீப காலங்களில் தப்பட்டைராயனாக அவதாரம் எடுத்திருக்கும் வித்யாசாகர் இசை என்பதால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமலேதான் கேட்கத் தொடங்கினேன். வித்யாசாகர் மிகத்திறமையான இசையமைப்பாளர்தான். வித்தியாசமாகவும் சிறப்பாகவும் பல படங்களில் பாடல்களும் பின்னணி இசையும் தந்திருந்தாலும் (உதாரணம் அன்பே சிவம்) இப்போதெல்லாம் வித்யாசாகர் பெயரைக் கேட்டாலே பயமாக இருக்கிறது. 'டண்டணக்கர டண்டணக்கர' என்று சராகமாகத் தொடங்கி காதுகளைப் பிளந்துபோடாமல் விடமாட்டேன் என்று படுத்துகிறார். சில காலத்துக்கு அவர் விஜய் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தால் தேவலை. உருப்பட வழியுண்டு.
சந்திரமுகி அந்த வரிசையில் முழுமையாகச் சேரவில்லை என்பது நல்ல சேதி. 'டண்டணக்கர' component இருக்கிறது. ஆனால் ஒரு பாடல்தான் ('அண்ணனோட பாட்டு'). மற்றபடி மெலடி என்று கணக்கு சொல்லத்தக்க வகையில் நான்கு பாடல்கள்! இன்றைய தமிழ் சினிமா நிலைமையில் இதுவே ஒரு ஆச்சரியமான விஷயம்.
தேவுடா தேவுடா என்று தலைவரின் ஒப்பனிங் சாங். கற்பூரம், ஆரத்தி சாமான்களுக்கு வேலைவைக்கும் நேரம். எனவே, அதற்கேற்ப தலையின் சூப்பர் சல்யூட், ட்ரேட்மார்க் சிரிப்பு, சமுதாய சிந்தனை வரிகள், நல்ல பளிச்சென்ற வெயிலில் அவுட்டோரில் பெருங்கூட்டம் புடைசூழ தலைவர் வேகமாக நடந்து வருவது, தாவணி (அப்படி ஒரு ஆடை உண்டு, நினைவிருக்கிறதா?!) உடுத்தி ஆடும் பெண்கள், ஏழைத் தொழிலாளியைக் கட்டியணைக்கும் தலைவர் என்று அத்தனைக்கும் ஸ்கோப் உள்ள பாடல். அத்தனையும் எதிர்பார்க்கிறேன். இதுகூட இல்லையென்றால் என்ன தலைவர் படம்? பாபா போல் தப்புத்தப்பாக யோசிக்காமல் ஒழுங்காக மன்னன், அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா மாதிரி படமெடுத்தால் ஒரு வருடம் ஓடும். கியாரண்டி. இன்னொரு விஷயம். இந்தப் பாடலைப் பாடியிருப்பது எஸ்.பி.பி. தலைவரின் ஓப்பனிங் பாடலை இவர் பாடுவது ஒரு சென்டிமெண்ட். அதை உடைத்ததால்தான் (ஷங்கர் மகாதேவன் - பாபா) போன படம் ஊத்தியது என்று ஒரு எண்ணம் உண்டு. இந்த முறை எதிலும் கோட்டை விடுவதில்லை என்று முடிவோடு இருக்கிறார் வாசு. பாம்பு சீன், அம்மா ச்£ன் எல்லாம் எதிர்பார்க்கலாம்.
வரவர ஆஷா போஸ்லே, உதித் நாராயண், சாத்னா சர்கம் இவர்களெல்லாம் தமிழ் பாடக்கேட்டாலே அவர்கள் வாயில் சல்ப்யூரிக் அமிலம் ஊற்றவேண்டும் போல ஆசை வருகிறது. நம்மவர்களிடம் இல்லாமல் இவர்களிடம் என்ன இழவு இருக்கிறது என்று திரும்பத்திரும்ப இவர்கள் மேல் விழுகிறார்கள்? உதித், சாத்னா இருவரும் கிட்டத்தட்ட இப்போது வருகிற எல்லா தமிழ்ப்படங்களிலும் பாடுகின்றனர். ஆஷா எவ்வளவோ காலமாகத் தமிழில் பாடுகிறார். கொஞ்சம் சிரத்தை எடுத்து தமிழ் உச்சரிக்கக் கற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவார்கள்? அதுசரி. எ·ப். எம்மில் சுத்தத் தமிழச்சிகளே "நிகச்சியை இணாயிந்து வழங்குவவர்கள்" என்று தமிழ் பினாத்தும்போது இவர்களை எங்கே போய்ச் சொல்வது?
ஆஷா இந்தப்படத்தில் 'கொஞ்ச நேரம்' என்ற பாடல் பாடியிருக்கிறார். உடன் பாடுவது மது பாலகிருஷ்ணன் (பிதாமகன் 'பிறையே' புகழ்). அழகான மெலடி. இதமாக இருக்கிறது. தலைவர் படமாக இருந்தாலும் தம்மடிக்கப் போக வேண்டாமா? அதற்கேற்ற பாடல்.
"அத்திந்தோம்" என்று தொடங்கும் பாடல் எஸ்.பி.பி. குரலில் இனிமையாக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து எஸ்.பி.பி இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். இவரிடம் தமிழ் இசையமைப்பாளர்களுக்கு என்ன பிரச்னை? இவர் பாட மறுக்கிறாரா, அல்லது போரடித்துவிட்டது என்று இவரை ஒதுக்கிவிட்டார்களா? போரடிக்கும் குரலா அது!
"கொக்கு பறபற கோழி பறபற" என்றபடி ஒரு ஜாலியான பாடல். 'ரா ரா' என்று ஒரு தெலுங்கு கர்நாடக சங்கீதம் இருக்கிறது. கேட்க நன்றாக இருக்கிறது.
பாடல்களை ஒரு முறை கேட்டிருக்கிறேன். சந்திரமுகி பரவாயில்லை. தலைவர் படத்துக்கென்று ஸ்பெஷலாக ஏதுமில்லை. ஆனால் குப்பையும் இல்லை. நான்கைந்து முறை கேட்டால் பிடித்துப்போய், நான்கைந்து மாதங்களுக்குப் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, பிறகு காணாமற்போகும் வரிசையில் சேரப்போகும் பாடல்களைக் கேட்க ராகா இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் (இத்தளத்திலுள்ள பாடல்கள் அனுமதி பெற்று வெளியிடப்படுபவை என்று கேள்வி).
Shankar
|
|
|
| மைதானத்தை அரசியல் இலாபத்துக்காக சுவீகரிப்பதா? |
|
Posted by: வியாசன் - 03-06-2005, 10:24 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
பொதுமக்கள் பயன்படுத்தும் மைதானத்தை அரசியல் இலாபத்துக்காக சுவீகரிப்பதா?
மட்டக்குளியில் ஜே.வி.பி.க்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம்
கொழும்பு வடக்கு பிரதேச மக்களால் கடந்த 50 வருட காலத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் முகத்துவாரம் விஸ்வைர்க் பொது விளையாட்டு மைதானத்தை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தனது சொந்த அரசியல் நலனுக்கு சுவீகரித்துக் கொள்வதாக ஆட்சேபனை தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை பெரும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விஸ்வைர்க் பொது விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக குழுமிய வட கொழும்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்இ கொழும்பு மாநகர சபையின் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் லாகீர்இ நிஸ்தார்இ ஐ.தே.கட்சி உறுப்பினர் ஸ்ரான்லி கிறிஸ்தோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிங்களஇ தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஜே.வி.பி.க்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
அத்துடன் ஹதமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை மோதவிட்டு அரசியல் இலாபம் தேடாதே' ஹபாதிக்கப்பட்ட மக்களை மோதவிட்டு அரசியல் வளர்க்காதே' ஹவேண்டாம் வேண்டாம் ஜே.வி.பி.யின் அரசியல் வேண்டாம்' போன்ற கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக விஸ்வைர்க் பொது விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பெருமளவு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடமைப்பு திட்டங்களை அமைத்துக் கொடுப்பதை நாம் வரவேற்கின்றோம். ஆனால்இ சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக இப் பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பொது விளையாட்டு மைதானத்தை ஜே.வி.பி. தனது அரசியல் இருப்புக்கு பயன்படுத்துவதையே நாம் எதிர்க்கின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இந்த விளையாட்டு மைதானத்தில் கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லை கொழும்பு மாநகர பிதா பிரசன்ன குணவர்த்தன நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாட்டி வைத்ததையடுத்து இப் பகுதியில் முறுகல் நிலை தோன்றியுள்ளமையால் பொலிஸ்இ இராணுவ பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்த மனோ கணேசன் உரையாற்றுகையில் கூறியதாவது;
கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை அமைத்துக் கொடுப்பதை நாம் முழுமையாக வரவேற்கின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் பிழையானது.
வட கொழும்பைச் சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் கடந்த 50 வருட காலத்திற்கும் மேலாக பயன்படுத்தி வரும் இந்த பொது விளையாட்டு மைதானத்தை ஜே.வி.பி. தனது சுயநல அரசியலுக்காகவே பயன்படுத்துகின்றது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஜே.வி.பி.யின் சுயநல அரசியலுக்கு கொழும்பு மாநகர மேயர் பிரசன்ன குணவர்த்தனவும் துணை போவது மிகவும் வெட்கப் பட வேண்டியதோர் விடயமாகும்.
இது தொடர்பாக ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
பிரதி மேயர் ஆசாத் சாலிஇ ரவி கருணாநாயக்க எம்.பி. ஆகியோரும் இதனை ஒரு அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையென்றே குற்றஞ் சாட்டியுள்ளனர்.
துறைமுக அதிகார சபை நகர அபிவிருத்தி அதிகார சபைஇ வீடமைப்பு அதிகார சபை போன்றவற்றுக்கான அரச நிலங்கள் பல வட கொழும்பில் உள்ள நிலையில் விஸ்வைர்க் மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஜே.வி.பி.யின் இலாபம் தேடும் ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.
இன்னும் இரண்டொரு தினங்களில் இதற்கு மாற்றுத் தீர்வு காணப்படாவிட்டால் வட கொழும்பு மக்கள் அனைவரையும் திரட்டி தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.
சுட்டபழம்
நன்றி தினக்குரல்
|
|
|
| புறக்கணிப்பிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை: அமெரிக்கா தெரிவிப |
|
Posted by: வியாசன் - 03-06-2005, 10:13 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- No Replies
|
 |
தமிழர் கூட்டமைப்பு புறக்கணிப்பிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை: அமெரிக்கா தெரிவிப்பு
சமீபத்தில் சிறீலங்காவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்டன் மற்றும் ஜோர்ச் புஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அரச இராப்போசன விருந்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமைக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
'எமக்கு இதில் எவ்வித சம்பந்தமுமில்லை. அழைப்பிதழ் பட்டியல் சிறீலங்கா அரசினாலேயே முழுமையாக தயாரிக்கப்பட்டது" - என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் குரல் தரவல்ல அதிகாரி பிலிப் கிரானி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
சிறீலங்கா ஜனாதிபதியே அவர் நடத்திய இவ் இராப்போசன விருந்திற்கு யாரை அழைப்பது குறித்து தீர்மானித்தார் எனவும் யாரை அழைப்பது குறித்து தமது தூதரகத்துடன் எத்தகைய ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்ää அமெரிக்க ஜனாதிபதிகளிற்கான இராப்போசன விருந்தை புறக்கணித்தனர் என கொழும்பு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை மறுதலித்த கூட்டமைப்பினர் தமக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டதிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என அமெரிக்காவும் தெரிவித்து விட்ட நிலையில் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்காவே புறக்கணிப்பிற்கு முழுமையான காரணமென கொழுப்பு அரசியல் மட்டங்களில் பேச்சடிபடுகின்றது.
அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டுவரும் சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி இவ் இராப்போசன விருந்திற்கு அழைக்கப்பட்டதும் ஆச்சரியப்படும் வகையில் அதன் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவங்ச அதில் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சுட்டபழம்
நன்றி புதினம்
|
|
|
| கிழக்கில் தாக்குதல் |
|
Posted by: eelapirean - 03-06-2005, 04:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 6 பேர் பலிவெலிக்கந்தை பகுதியில் !
ஜ வாழைச்சேனை நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 06 மார்ச் 2005ää 6:28 ஈழம் ஸ
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பிரதேசத்திலுள்ள கெக்குராவவெளியில் நேற்றிரவு இரண்டு வீடுகள் மீது இனந் தெரியாத ஆயுதக் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு 9.30 மணியளவில் குறிப்பிட்ட வீடுகளை முற்றுகையிட்ட பத்துப்பேர் கொண்ட ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் நான்கு முஸ்லிம்களும்ää தமிழர் ஒருவரும்ää சிங்களவர் ஒருவரும் அடங்குகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சமும் பீதியும் நிலவுவதாகவும் அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
|
|
|
| சின்னச்சிட்டு |
|
Posted by: Mathan - 03-06-2005, 02:12 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
சின்னச்சிட்டு
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/nagendram_dushika_140.jpg' border='0' alt='user posted image'>
இவள் வேறு யாருமல்ல
சிங்களப்பேய்களின் வேகத்தில்
அழிக்கப்பட்ட சின்னச்சிட்டு.
விபத்துக்கள் வழமைதான்
ஆனால் எண்ணிக்கொள்ளுங்கள்
எத்தனைமொட்டுக்கள்
இழக்கப்பட்டப்பட்டது
இந்த வல்லூறுகளின் வேகத்தால்.
எத்தனை பேரை இடித்துக் கொன்றாய்.
தட்டிக்கேட்டது தவறென சொல்லி
சுட்டாயாம்.
காலுக்கு கீழேதான் சுட்டோம்
எனக்கதைவேறு.
எத்தனை திமிர் உனக்கு
நன்றி - தமிழ்ச்சங்கமம்
|
|
|
| 'மாந்திரீகம் செய்வதற்காக மண்டை ஓட்டை தோண்டியெடுத்தார் |
|
Posted by: eelapirean - 03-06-2005, 01:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
'மாந்திரீகம் செய்வதற்காக மண்டை ஓட்டை தோண்டியெடுத்தார் ராணுவச் சிப்பாய்'; புல்மூட்டையில் ஆர்ப்பாட்டம்
திருகோணமலையை அடுத்த புல்மூட்டைப் பிரதேசத்தில் இசுலாமிய இடுகாடு ஒன்றிலிருந்து மண்டை ஓடுகள் எலும்புகள் போன்றவற்றை ராணுவ சிப்பாய் ஒருவர் தோண்டியெடுத்ததாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
மாந்திரீகம் செய்வதற்காக இச்சிப்பாய் மண்டை ஓடு எலும்புகளை தோண்டியெடுத்தார் என்று உள்ளூர்வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட சிப்பாய் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கம் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதனிடையில், ஜெர்மன் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் வேலூர் மற்றும் நிலாவெளி கிராமங்களைச் சேர்ந்த சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்சார் உபகரணங்களையும் மிதிவண்டிகளையும் இலவசமாக வழங்கியுள்ளனர்.
நன்றி பிபிசி
|
|
|
| வணக்கம் என்னை வரவேற்றமைக்கு நன்றி |
|
Posted by: ரோபட் - 03-06-2005, 12:27 AM - Forum: அறிமுகம்
- Replies (12)
|
 |
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்.என்னையும் வரவேற்றுக்குக்
கொள்வீர்கள் என நம்புகிறேன்.
|
|
|
| நிதர்'சனம்.கொம்மின் நிர்வாகிகள் பதில் தரவும்.... |
|
Posted by: Nitharsan - 03-05-2005, 11:32 PM - Forum: இணையம்
- Replies (8)
|
 |
வணக்கம்!
நேற்று முதல் நிதர்சனத்தின் பிரிந்து சென்றோர் இணையம் என்று ஒரு இணையம் வெளிவருகிறது. அது தமிழ் தேசியத்துக் கெதிரான (நடுநிலமை என்ற பதத்தை) செய்திகளை தாங்கி வருகின்றது. தாம் அதிப்தி அடைந்ததாலே நிதர்சனத்தில் இருந்து விலகியதாகவும் அறிவித்துள்ளனர். இவ்விணையத்தை ஒரு தேச விரோத இணையமே அறிமுகப்படுத்தி உள்ளது. இது பற்றி நிதர்சனமே அதன் நிர்வாகிகளே எந்த வித அறிவித்தல்களையும் விடவில்லை. எனவே இதை தெளிவு படுத்துமாறு அன்பாக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டு நிற்கிறேன்...
குறிப்பு:
நிதர்சனம் இணையத்தை போன்ற வடிவமைப்பில் தான் மற்றைய இணையமும் வெளிவருகின்றது....
நேசமுடன் நிதர்சன்
|
|
|
|