Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புறக்கணிப்பிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை: அமெரிக்கா தெரிவிப
#1
தமிழர் கூட்டமைப்பு புறக்கணிப்பிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை: அமெரிக்கா தெரிவிப்பு

சமீபத்தில் சிறீலங்காவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பில் கிளின்டன் மற்றும் ஜோர்ச் புஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட அரச இராப்போசன விருந்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமைக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

'எமக்கு இதில் எவ்வித சம்பந்தமுமில்லை. அழைப்பிதழ் பட்டியல் சிறீலங்கா அரசினாலேயே முழுமையாக தயாரிக்கப்பட்டது" - என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் குரல் தரவல்ல அதிகாரி பிலிப் கிரானி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

சிறீலங்கா ஜனாதிபதியே அவர் நடத்திய இவ் இராப்போசன விருந்திற்கு யாரை அழைப்பது குறித்து தீர்மானித்தார் எனவும் யாரை அழைப்பது குறித்து தமது தூதரகத்துடன் எத்தகைய ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்ää அமெரிக்க ஜனாதிபதிகளிற்கான இராப்போசன விருந்தை புறக்கணித்தனர் என கொழும்பு ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை மறுதலித்த கூட்டமைப்பினர் தமக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டதிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என அமெரிக்காவும் தெரிவித்து விட்ட நிலையில் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்காவே புறக்கணிப்பிற்கு முழுமையான காரணமென கொழுப்பு அரசியல் மட்டங்களில் பேச்சடிபடுகின்றது.

அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்டுவரும் சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி இவ் இராப்போசன விருந்திற்கு அழைக்கப்பட்டதும் ஆச்சரியப்படும் வகையில் அதன் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவங்ச அதில் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)