![]() |
|
'மாந்திரீகம் செய்வதற்காக மண்டை ஓட்டை தோண்டியெடுத்தார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: 'மாந்திரீகம் செய்வதற்காக மண்டை ஓட்டை தோண்டியெடுத்தார் (/showthread.php?tid=4881) |
'மாந்திரீகம் செய்வதற்காக மண்டை ஓட்டை தோண்டியெடுத்தார் - eelapirean - 03-06-2005 'மாந்திரீகம் செய்வதற்காக மண்டை ஓட்டை தோண்டியெடுத்தார் ராணுவச் சிப்பாய்'; புல்மூட்டையில் ஆர்ப்பாட்டம் திருகோணமலையை அடுத்த புல்மூட்டைப் பிரதேசத்தில் இசுலாமிய இடுகாடு ஒன்றிலிருந்து மண்டை ஓடுகள் எலும்புகள் போன்றவற்றை ராணுவ சிப்பாய் ஒருவர் தோண்டியெடுத்ததாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மாந்திரீகம் செய்வதற்காக இச்சிப்பாய் மண்டை ஓடு எலும்புகளை தோண்டியெடுத்தார் என்று உள்ளூர்வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட சிப்பாய் இனங்காணப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கம் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். இதனிடையில், ஜெர்மன் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் வேலூர் மற்றும் நிலாவெளி கிராமங்களைச் சேர்ந்த சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில்சார் உபகரணங்களையும் மிதிவண்டிகளையும் இலவசமாக வழங்கியுள்ளனர். நன்றி பிபிசி |