Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 367 online users.
» 0 Member(s) | 364 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,262
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  தமிழ் "வசூல் ராஜா" கைது
Posted by: Vaanampaadi - 03-04-2005, 06:38 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

தமிழ் "வசூல் ராஜா" கைது

பெங்களூர்,மார்ச். 4- வசூல்ராஜா பாணியில் மருத்துவக்கல்லூரி தேர்வு எழுதிய வாலிபர் பிடிபட்டார்.

கமல் ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஒருகாட்சி வரும். அதில் கமல்ஹாசன் செல்போன் மூலம் வெளியில் உள்ள டாக்டர் ஒருவரிடம் கேள்விகளுக்கு பதில் கேட்டு தேர்வு எழுதி வெற்றி பெறுவார். நிஜ வாழ்க்கையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. கமல்ஹாசன் போலீசில் சிக்க மாட்டார். நிஜம் சிக்கிக் கொண்டது.

பெங்களூரைச் சேர்ந்த ரவிகுமார் பூர்வீகத்தில் தமிழர். வயது 29. இவர் வீலர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். இவரது பெற்றோர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள். இவர் ஒரு எம்.பி.பி.எஸ். மாணவர். அங்குள்ள எம்.எஸ்.ராமையா கல்லூரியில் படித்து வருகிறார். படிப்பு ஏறாததால் ஒவ்வொரு வருடத்தையும் பலமுறை தோல்விகண்ட பின் தாண்டி வந்தவர். இன்னும் முடிக்க வில்லை. இந்த நிலையில் கடந்த புதன் கிழமை வசூல்ராஜா படத்தில் வருவது போல் செல்போன் மூலம் வெளியிலிருந்து பதில் வாங்கி தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். மைக்ரோ போன் காதில் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக தாடி வளர்த்திருந்தார். இருப்பினும் திடீரென்று அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால் காப்பி அடித்ததற்காக அவரை போலீசார் சுற்றி வளைக்க வில்லை. வேறு ஒரு குற்றத்திற்காக அவரை தேடிவந்தனர். கடைசியில் கல்லூரியில் வைத்து பிடிக்கும் போது காப்பி அடித்த குட்டும் வெளிப்பட்டுவிட்டது. அலியா வாகித் என்ற பெண் கொடுத்த மோசடி குற்றச் சாட்டிற்காக இவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது„-

இண்டர்நெட் மூலம் -லேப்டாப் கம்ப்யூட்டர் விற்பனை என விளம்பரம் செய்துள்ளார் ரவி. அதைப் பார்த்த அலியா இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். ரூ28 ஆயிரத்தை வங்கியில் தனது பெயரில் டெபாசிட் செய்தால் கம்ப்யூட்டர் வீடு தேடி வரும் என ரவி தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அலியாவும் அதை நம்பி பணத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். ஆனால் ரவி சொன்னபடி கம்ப்யூட்டர் அனுப்பி வைக்காமல் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். அதற்கு பிறகு ரவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து அலியா போலீசில் புகார் செய்தார். ரவியை தேடிய போலீசார் கடைசியில் கல்லூரியில் வைத்து அவரை கைது செய்தனர். அப்போது தான் வசூல்ராஜா ஸ்டைலில் அவர் காப்பியடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinakaran

Print this item

  எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்: பிரபுதேவா அதிரடி!
Posted by: Vaanampaadi - 03-04-2005, 06:36 PM - Forum: சினிமா - Replies (7)

எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்: பிரபுதேவா அதிரடி!


எனக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்று நடிகர் பிரபுதேவா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் இரண்டாவது மகன் பிரபு தேவா. இதயம், அக்னி நட்சத்திரம், ஜென்டில்மேன் உள்ளிட்ட சில படங்களில் குரூப் டான்ஸர்களில் ஒருவராக வந்து தனது புதுமையான நடனத்தால் அனைவரையும் கவர்ந்த பிரபு தேவா, காதலன் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர்.

பிரபுதேவாவின் "ராசய்யா' படம் வெளிவந்தபோது அவருடன் நடனமாடிய ஒருபெண்ணை பிரபுதேவா ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் இதை பிரபுதேவா மறுத்தார்.

இருப்பினும் அந்தப் பெண்ணுடன் பிரபுதேவா ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்பட்டுவந்தது. இந் நிலையில் மீனாவுடனும் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இதை பிரபு தேவாவும், மீனாவும் மறுக்கவில்லை.

தமிழில் வாய்ப்பு மங்கத் தொடங்கியதால் தெலுங்குப் பக்கம் போனார் பிரபு தேவா. அங்கு பாய்ஸ் சித்தார்த், த்ரிஷாவை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அது சூப்பர் ஹிட் ஆனதால் பிரபு தேவாவுக்கு நிறைய படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்துள்ளன.

இந்தச் சூழ்நலையில் தனக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பதாக பிரபு தேவா தெரிவித்து புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளார். ஒரு வார இதழுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் இதுகுறித்து விலாவாரியாக தெரிவித்துள்ளார்.


ராசய்யா படம் வெளியானபோது ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட அதே ரமலத் தான் பிரபு தேவாவின் மனைவி.

பிரபுதேவாவின் பேட்டியிலிருந்து சில துளிகள் ...

எனக்கு திருமணமாகி விட்டது. இதை பத்திரிகையாளர்களிடம்நான் தெரிவிக்கவில்லை. ஒரு இடைவெளி விழுந்து விட்டது. அது நானாக ஏற்படுத்திக் கொண்டதுதான்.

எனது மனைவி பெயர் ரமலத். என்னுடன் நடனமாடியபோது ஏற்பட்ட சினேகம், மனசுக்குள் ஏற்பட்ட வசந்தம். எங்களுக்கு ராஜு, ரிஷி என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஒருவன் பள்ளிக்கூடத்துக்கு (?) போய்க்கொண்டுள்ளான். இன்னொருவன் போகத் தயாராகிக் கொண்டிருக்கிறான். நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரபு தேவா.

பிரபு தேவாவின் பேட்டி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினாலும் இன்னொரு கேள்வியும் எழுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது என்றாலும் தனக்கு வாழ்வளித்த ரசிகர்களுக்குக் கூட அதைத் தெரிவிக்காமல் மறைத்து, 2 குழந்தைகள் பெற்று, அவர்கள் பள்ளிக் கூடத்திற்குப் போகும் வரை அதை தெரிவிக்காமல் இருந்ததது அவர்களை ஏமாற்றுவது போலல்லவா?

Thatstamil

Print this item

  இலங்கையில் சிறுவர் உரிமை
Posted by: Mathan - 03-04-2005, 05:47 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (7)

சிறுவர்களா இவர்கள் இல்லை குழந்தைகள்

இன்றைய இலங்கை அரசியல் சூழ்நிலையைஇழிநிலைக்கு கொண்டுவந்ததில் பெரும்பங்காற்றிய சிங்கள பௌத்த சித்தாந்தங்களையும் அதனை தொடர்ந்தும் நிலைநிறுத்த செயற்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கடும்போக்குகளையும் கருத்தில்கொண்டு சில விடயங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தபோதும் நேற்றய தமிழ்நெற் செய்தியில் வெளிவந்த சில ஒளிப்படங்களே இப்பத்தியை எழுத தூண்டியது.

<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_01_38283_200.jpg' border='0' alt='user posted image'>

இளம் சிங்களசிறார்கள் மதம், போதனை என்றபெயரில் ஏன் இவ்வாறு இனவாத மதவாத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றார்கள்? ஒரு சமூகத்துக்கு நெறியை போதிக்கவேண்டிய மதம் ஏனிந்த இழிநிலைக்கு சென்றது? வீடுகளில் தாய் தந்தை சகோதரர்களுடன் வாழவேண்டிய சிறுவர்கள் ஏன் இவ்வாறு மஞ்சள் காவியுடைகளுக்குள் உள் நுழைக்கப்பட்டார்கள்? 18 வயது அடைவதற்கு ஒருமாதம் இருந்தாலே சிறுவர் என்றும் சிறுவர் படையினர் என்றும் கூச்சலிடும் இந்த உலகம் இந்த பத்து வயதினரை பார்க்காமல் கண்ணை மூடுவதேன்?

கடந்த இரண்டாம் திகதி சிறிலங்காவின் தேசாபிமான இயக்கம் என அழைக்கப்படும் அமைப்பால் நடாத்தப்பட்ட பெரியளவிலான பேரணியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் "எதிர்கால பெளத்தபோதகர்களையே" இங்கு காண்கிறீர்கள்.

<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/col_02_03_05_03_38291_435.jpg' border='0' alt='user posted image'>

இவ்வாறு சிறுவர்களை மதம் என்ற பெயரில் சூனியமான வாழ்வியலுக்குள் இட்டுச்செல்வது குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிப்போக்கற்ற நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. எந்த மதமானாலும் மதம் என்ற பெயரில் நடாத்தப்படும் சிறுவர் சிறை வாழ்க்கையை உடைப்பதற்கான குரல்கள் எழவேண்டும். இந்துமதத்தில் இவ்வாறான குறைபாடுகளை சிறுவர் மட்டத்தில் நான் இதுவரை அறியவில்லை. ஆனால் கிறிஸ்தவமதத்தில் குறிப்பிட்ட மார்க்கத்தை தழுவிய சிறுவர்களை பெரியவர்களாகும் வரை சாதாரண கல்விமுறைக்குள் உள்வாங்கி பின்னர்தான் மதபோதகர்களாக்கும் கல்விநெறிக்குள் உட்படுத்தப்படுவதாக எனது நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன். அனைத்து மதநடைமுறைகளை நான் அறிந்திராதபோதும் பௌத்தமதத்தில் இவ்வாறு சிறுவர்களை இவர்களை சிறுவர்கள் என சொல்லமுடியாது, குழந்தைகள் என்பதே பொருத்தம் - அவர்களது இளமை வாழ்க்கையை சிறைப்படுத்தும் இந்நடைமுறை சரியானதா?

<img src='http://www.geocities.com/selvazero/webpotoes/monks-protest_1_231202.jpg' border='0' alt='user posted image'>

இவ்வாறான நடைமுறைகளினுடாக வளர்த்தெடுக்கப்படும் மதபோதகர்கள் சமூகத்துக்கு என்ன வழிகாட்டலை செய்யப்போகின்றார்கள்? அறம் அன்பு போன்ற நல்ல சமூகப்பண்புகளை உருவாக்கவேண்டிய மதம் ன்னசெய்யப்போகின்றது. அதற்கான விடையை இப்படம் தெளிவாக எடுத்துக்காட்டும்.

நன்றி - தமிழ்ச்சங்கமம்

Print this item

  இலங்கை அரசுக்கு தேன்னிலவு அமெரிக்காவுடனா அல்லது..........
Posted by: வியாசன் - 03-04-2005, 01:25 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (4)

தென்னிலங்கை அரசுக்கு தேன்னிலவு அமெரிக்காவுடனா அல்லது இந்தியாவுடன்தானா ?
யாழில் இருந்து குரு


சில வாரங்களாகச் சேது சமுத்திரத்திட்டம் பற்றிää பலர் பேசுவதையும்ää எழுதுவதையும் வாசகர் எல்லோரும் அறிந்ததே. பல ஊடகங்களும் ஆய்வு அமைப்புக்களும்; சேது சமுத்திர திட்டத்தின் வரலாறு பற்றியும்@ பௌதீக காலநிலை மாற்றங்கள் பற்றியும்;@ மற்றும் பொருளாதார அரசியல் தாக்கங்கள் பற்றியும் பலவித ஆய்வுகளையுமää; கட்டுரைகளையும் எழுதியுள்ளன நடாத்தியுள்ளன. அதுமட்டுமல்ல. அறிஞர்கள் என்று சொல்லப்படுவர்கள் பலரும் கருத்தரங்குகளை நடாத்தியும் 'சுஎஸ்" (Suez) கால்வாய் போன்ற கடல் இணைப்புத் திட்டங்களோடு இதை ஒப்பிட்டும் எதிர் காலத்தில் தமிழ்த் தேசம் அனுபவிக்கப்போகும் அனுகூலங்கள் பற்றியும் எதிர்கூறல்களையும் செய்து வருகின்றனர்.

இந்தியா இலங்கை போன்ற நாடுகளை காலனித்துவ ஆட்சியில் வைத்திருக்கும் போதுதே இங்கிலாந்தானது சேது சமுத்திரத்தை ஆழமாக்குவது என்ற எண்ணக்கருவைக் கொண்டிருந்தது என அறிக்கைகள்; தெரிவிக்கின்றன.

அதேவேளையில் ரணில் விக்கிரமசிங்க அரசு ஆட்சியிலிருந்தபோது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்க முற்பட்டிருந்த இந்தியா இப்பொழுது ஏன் சேது சமுத்திரத்தைக் கிண்டி ஆழமாக்கும் திட்டத்திற்குப் பாய்ச்சல் செய்துள்ளது?

இது இந்திய ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதாரத்திட்ட விடயம் மாத்திரம்தானா? அல்லது அரசியல் மாற்றத்தால் ஏற்பட்டவொரு விடயமா?

சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டமானது ஓரிரு வருடங்களில் முடிக்கக்கூடிய திட்டமும் அல்ல@ பொருளாதார அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அது இடையில் கைவிடப்படக்கூடிய ஒரு திட்டமும் அல்ல.

இந்தநிலையில் சேது சமுத்திரத்தை ஆழமாக்கப் போவதாக இந்தியா இன்று தீவிரமாக நிற்பது ஆராயப்படவேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

இலங்கை அரசுகள் இனப்பிரச்சனை விடயத்தில் தமிழர்களுக்கு இதுவரை நியாயமான தீர்வு எதனையும் கொடுக்கவும் இல்லை@ மறுபுறத்தே தனிநாட்டினை தமிழர்கள் அமைப்பதையும் தனித்துத் தடுக்கவும் வல்லமையற்ற நிலையில்தான் உள்ளன.

அப்படியானால் எந்த நாட்டின் உதவியுடன் தமது குறிக்கோளை இவை அடைவது?

முன்னர் ரணில் அரசுää ஒரு தந்திரோபாயம். இப்போது சந்திரிக்கா அரசு எந்தத் தந்திரோபாயம்? இது ஒரு பக்கம். மறுபக்கத்தில் பொருளாதாரப் பிரச்சனை அரசியல் ஸ்திரமற்ற பிரச்சனை!

இலங்கையின் இன்றைய அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகளைப் பயன்படுத்தி தத்தமது பொருளாதார மற்றும் இலாபங்களைத் தேடும் அமெரிக்கா மற்றும் கைத்தொழில் நாடுகள் இலங்கைக்கு உதவுவது போல் காட்டித் தமக்கு தேவையான காரியங்களை ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவும் அதனது “செல்வாக்கைச் செலுத்தி” அதனது பங்கு இலாபங்களைப் பெறத்தானே வேண்டும்? முன்னைய காலப்பகுதிகளில் (ராஜீவ் மரணத்திற்கு முன்) தமிழர்களின் விடுதலைக ;குழுக்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கை அரசை மிரட்டி இந்தியா தன்னுடைய நலனைக் பேணிவந்துள்ளது. ஆனால் இன்று அப்படியான சந்தர்ப்பங்கள் அருகிவிட்டன. இந்தநிலையில் இந்தியா கைத்தொழில் நாடுகளுடன் போட்டிபோட்டுப் பண உதவி செய்யமுடியாது. அது வேறு வழிகளையே கையாளவேண்டும். இங்குதான் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்திய - இலங்கை கிழக்குப் பகுதிக் கூட்டு றோந்து ஏனையவைகள் உதவுகின்றன.

தென்னாசியப் பிராந்தியத்தியமூடாக அமெரிக்கா அதனுடைய பூகோள வல்லாதிக்கத்தை இன்றைய தொழில் நுட்ப முன்னேற்ற நிலையிலும் பூகோள அரசியல் நிலையிலும் பேணுவதற்கு இலங்கை போன்று வாய்ப்பான வேறு நாடு கிடைக்கமாட்டாது. அந்த வகையில் அமெரிக்கா தன்னுடைய நலன்களுக்காக இன்றைய திகதி வரை பல வேலைத்திட்டங்களை இலங்கையில் மேற்கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் இலங்கை மீதான தலையீடு அண்மைக்காலங்களில் அதிகரித்திருப்பது திஸ்ஸமஹறவில் உள்ள அப்புஹாமியும் அறிந்த விடயமாகும். இலங்கையில் அமெரிக்காவின் தலையீட்டை தற்காலிக முறையில் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியாவிடம் இருக்கின்ற ஒரேயொரு நவீன மிரட்டல் ஆயுதம்தான் சேது சமுத்திரத்திட்டம்!

இந்தநிலையில் தமிழர் பிரச்சனையை ஏதோவொரு வகையில் முடிவுற்றால்; தென்னிலங்கை அரசுகளுக்கு இந்தியா அதிகம் பயனானதல்ல.

இலங்கைக்கு அமெரிக்கா உதவலாம் வேறு நாடுகளும் உதவலாம். ஆனால் இந்தியா சேது சமுத்திரத்திட்டத்தை அமுல்படுத்தினால் எதிர்காலத்தில் இலங்கையின் தென்பகுதித் துறைமுகங்களுடாகவும் நவீன மயப்படுத்தப்படும் கொழும்பு துறைமுகமூடாகவும் கப்பல் போக்குவரத்து வருமானமும் ஏனைய சேவைகள் ஊடாகப் பெறப்படும் வருமானமும் பெருமளவிற்குக் குறையவே செய்யும். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை அடுத்த மாதத்தில் இலங்கை அரசு ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் சேது சமுத்திரத்திட்டமானது இலங்கையின் தென்பகுதி மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக: jvP யின் ஆதரவுப் பகுதி மக்கள். ஆகவே சேது சமுத்திர திட்டமானதுää இலங்கை அரசுக்கு JVP ஊடாக அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு திட்டமுமாகும்.

அமெரிக்கவோ அல்லது எந்த ஐரோப்பிய நாடோ தங்களுடைய நாட்டிற்கு நீண்டகால இலாபமும் இல்லாமல் தங்களுடைய மக்களின் வரிப் பணத்தை இலங்கைக்கு வாரி வழங்கமாட்டாது. இதற்கு உதாரணமாக அண்மையில் அமெரிக்காவுக்கு இலங்கை கொடுக்கவேண்டியிருந்த சில மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக இலங்கையின் வனங்களைப் பராமரிப்பதற்கு அமெரிக்கா இலங்கை அரசிடம் உத்தியோக பூர்வமாக எழுதித்தரும்படி கேட்டிருந்தது!

இன்று உள்ள அரசியல் நெருக்கடியுடன் சந்திரிக்கா அரசானது பண மற்றும் நெருக்கடிகளுக்கு என்ன செய்யப்போகின்றது என்பதை பார்த்திருப்பது இரசனை கலந்த விடயமாகும். அமெரிக்காவின் எண்ணத்திற்கு நடந்து நாட்டையே முழுமையாக அமெரிக்காவிடம் கொடுப்பதா? இல்லை இந்தியாவுடன் மாத்திரம் நட்பை பேணி நாடு எதிர்நோக்கிவரும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதா?

செயற்கைக்கோளின் உதவியுடன் நாசா (NASA) எடுத்தாக கூறி வெளியிட்ட இராமர் அணை படம் பற்றி அனைத்து வாசகர்களும் அறிந்திருபார்கள். இப்படியான சற்றலைற் படமானது உண்மையில் ஒருசில வருடங்களுக்கு முன்னரே நாசாவினால் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த இராமர் அணைப் படமானது இந்துக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப்படத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் இந்துத்திவிரவாதிகள் கிறீஸ்த்துவிற்கு முன் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வடஇந்திய ஆரிய இராமன் இலங்கையில் தனது ஆதிகத்தினை செலுத்தியதாக கூறி இலங்கை மீதான இந்திய ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அன்று வாஜ்பாய் அரசு சேது சமுத்திரத்திட்டத்தை மேற்கொள்ளாது ரணில் விக்கிரமசிங்க அரசுடன் பாரதி கனவுகண்ட சிங்களத்தீவிற்குப் பாலம் அமைக்க முற்பட்டிருந்தது. இத்திட்டத்தை தமிழகத்தின் ஜெயலலிதா அரசு தீவிரமாக எதிர்த்தும் இருந்தது.

சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டமானது இந்தியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் பொருளாதார இலாபத்தினைக் குறுகியகால நீண்டகால கண்ணேட்டங்களில் கொடுக்கும். ஆனால் சேது பாலத்திட்டம் மாத்திரம் இலங்கைக்கே கூடிய இலாபத்தைக் கொடுக்கும். இந்தியா இன்னும் கூடிய இலாபத்தினை எடுப்பதாயின் சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டம் இலங்கை - இந்திய பாலத்திட்டம் ஆகிய இரண்டையும் செய்யவேண்டும்.

இப்படி இரண்டு திட்டங்களையும் நடைமுறைப்படுத்துமேயாயின் இலங்கை நீண்டகாலக்கண்ணோட்டத்தில் பாரிய பொருளாதாரப்பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டியும் இருக்கும்@ இலங்கையின் இறைமை பற்றியும் சிந்திக்கவேண்டியிருக்கும்.

கைத்தொழில் நாடுகள் தமக்கு இலாபங்களை நீண்டகாலக்கண்ணேட்டத்தில் எடுப்பதில் தான் ஈடுபடுகின்றன. தொடர்ந்தும் இலங்கைக்கு பெருமளவு நிதியுதவிகளைச் செய்வது அவர்களின் நோக்கமல்ல.

இப்பொழுது சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டு இருக்கும் இந்தியா எதிர்காலத்தில் இந்திய - இலங்கை பாலத்திட்டத்தையும் அமுல்படுத்தபோவதாகக் கூறலாம்!

இவைகள் அனைத்தையும் பார்க்கும்போது சேது சமுத்திரத்தை ஆழமாக்கும் இந்தியத் திட்ட அறிவிப்பானது உண்மையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிராந்திய பூகோள வல்லரசுகளுக்கிடையில் பெரும் அரசியல் - தந்திரோபாயப் போர் ஆரம்ப அறிவிப்பாகவே உள்ளது.

இந்த நிலையில் இலங்கையினதும் இந்து சமுத்திரத்தினதும் எதிர்காலமானது இலங்கைத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டம் தொடர்பாக எப்படியான நிலைப்பாட்டை கொள்ளவுள்ளனர் என்பதில் தான் பெரிதும் தங்கியுள்ளது. ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம்.

யாழில் இருந்து குரு

சுட்டபழம்

இதுபோன்ற பல கட்டுரைகள் கீழேயுள்ள இணையத்திலிருக்கின்றது.

http://www.tamilresearchandnews.com/

Print this item

  யாழில் சிங்கள இராணுவ வாகனம் மோதி மாணவி பலி:
Posted by: வியாசன் - 03-04-2005, 12:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (47)

யாழில் சிங்கள இராணுவ வாகனம் மோதி மாணவி பலி: மக்கள் ஆவேசம்! பொலிசார் கண்ணீர் புகை வீச்;சு-தடியடி!!

யாழ். நகரில் இன்று காலை இடம்பெற்ற இராணுவ வாகன விபத்தில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி பலியானார். இதையடுத்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்த மாணவ மாணவியர்ää மக்கள் மீது சிறீலங்கா பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகம் நடத்தினர். கூடுதலாக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பலியான மாணவி நல்லூரைச்; சேர்ந்த நாகேந்திரன் துளசிகா வயது 12 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வேம்படி மகளிர் கல்லூரியில் தரம் ஏழில் கல்வி பயின்று வந்தார்.

தனது வீட்டிலிருந்து காலை 8.15 மணியளவில் துவிச்;சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வைத்தியசாலை வீதியில் வேகமாக வந்த இராணுவ வாகனம் மாணவியின் துவிச்;சக்கர வண்டி மீது மோதியது.

கடுங்காயங்களுக்குள்ளான மாணவி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்; செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். ஆனால் சில நிமிடங்களிலேயே மாணவி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற நகரிலுள்ள அனைத்து பாடசாலை மாணவää மாணவியர் திரண்டு படையினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். படையினரின் வாகனத்தையும் அடித்துச்; சேதப்படுத்தினர். பொது மக்களும் அங்கு திரண்டு இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் சிங்களப் பொலிசார் கண்ணீர் புகையடித்து தடியடிப் பிரயோகமும் செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது அவ் வழியாக வந்த சிங்கள விமானப் படைக்குச்; சொந்தமான வாகனத்திற்கு தீயிடப்பட்டது.

அனைத்து பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் சிங்களப் படையினருக்கு எதிராக வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எமது செய்தியாளரின் தகவலின்படி மக்கள் போராட்டம் தொடர்கின்றது. பதட்டமும் நீடிக்கின்றது. பிரதான வீதிகள் ஊடான போக்குவரவுகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டு நகரின் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சுட்டபழம்
நன்றி புதினம்

Print this item

  விடியல்...
Posted by: shanmuhi - 03-04-2005, 01:02 AM - Forum: கவிதை/பாடல் - Replies (78)

<span style='font-size:25pt;line-height:100%'><b>விடியல்...</b></span>

கண்வழி புகுந்து காதல்மொழி பேசி
கண்ணே கண்மணி கற்கண்டே என்றே
காதோரம் கவிபல சொல்லி சொல்லியே
கவிழ்த்துவிட்ட கள்வன்

உதடுகள் தினம் உன்பெயர் சொல்ல
உன் நினைவுகள் என் மனதை வருட
நெஞ்சம் முழுவதும் நீ நிறைந்திருக்க
நித்திரையிலும் மீட்டெடுத்தேன் உன்னை

பூப்போன்ற மனதை பொக்கிஷமாய்
பூப்போல் வைத்திருப்பேன் என்றும்
முள்ளாய் நானிருந்து மலரே உன்னை
முழுவதுமாய் காத்திடுவேன் என்றான்

தொடர்ந்த காதல் படந்தது
ஊடலாய் கூடலாய் ஊர்ந்தன
எட்டு மாதங்கள் கடந்தபின்னும் நீ
எட்டத்திலும் நீ எட்டவில்லை

இரவுநேர ஒத்திகைக்கு பின்னே
இருள் சூழ்ந்தது என் வாழ்க்கையில்
விடியல் இல்லை ஒரு
விடியலும் இல்லை

Print this item

  இதயத்தைத் தொட்ட காதல்...
Posted by: shanmuhi - 03-04-2005, 12:59 AM - Forum: நகைச்சுவை - Replies (26)

[size=18]<b>இதயத்தைத் தொட்ட காதல்...</b>

கொழும்பில் உன்னை நேருக்கு நேராக பார்த்தேனோ… அன்று கண்களில் தொடங்கிய காதல் இதயத்தை தொட்டு, தொட்டு சென்றதை இன்னும் மறக்கத்தான் முடியுமா...? விடுமுறைக்காக லண்டன் நாட்டிலிருந்து வந்தபோது தான் என் கண்களை கைது செய்தாய்.

காதல் தேசம் அதில் அகதியாய் இருப்பதாய் கூறி,
என் சம்மதம் கேட்டு... என் விழி வாசல் தேடி நீ கேட்டபோது என் மௌனங்கள் சம்மதங்களாக தந்தபோது என்னையே உன்னுள் தொலைத்து நின்றேன்.

உன் தோள் அளவு வளர்ந்திருந்த முடி, ஒற்றைக்காதில் நீ அணிந்தருந்த அந்த ஒற்றை கடுக்கன், வெய்யிலின் கொடுமையை தகிப்பதற்காக அணிந்திருந்த அந்த கருப்புக் கண்ணாடியில் உண்மையில் என் கண்களுக்கு நீ மன்மதனாகத்தான் இருந்தாய்.

என் மனதில் சலனமே இல்லாமல் நானும் என் வேலையுமாக இருந்த வேளையில்தான் சுள்ளானாக வந்து என் மனதை சுண்டி இழுத்து காதல் சுகமானது என்பதை எனக்குள் ஏற்படுத்திவிட்டாய்.

ஆட்டோகிராப் நினைவுகளாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டு என்னை லண்டன் அழைப்பதாய் கூறி, நீயும் லண்டன் பறந்தாய்.
காதல் பிரிவின் வேதனை அன்று உணர்ந்தேன். உன் புகைப்படம் பார்த்து, உன்னுடன் தொலைபேசியில் கதைத்து, என் வேதனை தீர நீ மருந்தாய் இருந்தாய்.

சில மாதங்களின் பின்னே லண்டன் நோக்கிய என் பயணம் ஆரம்பமாகியது.

விமானநிலையத்தில் உன்னைக்கண்டபோது... கொழும்பில் பார்த்தமாதிரியே நீ இருந்தாய்.
ஆனால் நான் தான் மெலிந்து விட்டேன் என்றாய்.
உன்னை பிரியாத வரம் வேண்டும் என்றே கோயில் கோயிலாக ஏறி ஏறி சாமிக்கு அர்ச்சனை செய்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்தேன் என்றேன்.
நீயும் தலையை அழகாக சிலிர்த்து விட்டு "ஆஹா எல்லாம் இறைவன் தந்த வரம்" என்று தலை அசைத்தபோது என் உடம்பில் மின்சார அலைகள் ஊற்றெடுத்தன.

வீடு வந்த போது, வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டு அதிசயித்துவிட்டேன். ஆஹா எத்தணை அழகு. வைக்கவேண்டிய பொருட்களையெல்லாம் என்ன லாவகமாக அடுக்கி வைத்திருக்கும் ஓவ்வொன்றையும் பார்த்தேன் ரசித்தேன்.

மெய்மறந்து நின்றதில் சிறது நேரம் உன்னைக் காணமால் துடித்து அறையேங்கும் தேடினேன்.

உன்னைக் காணவில்லையே என்ற ஏக்கத்துடன் நின்றபோதுதான் அங்கே மேசைமீது இருந்த டோபை க் கண்டு துடித்துப்போனேன்.
ஆ... என்ன இது இதைக் கண்டு மயங்கிவிட்டேனா... என் துடிப்பு அடங்குவதற்குள் நீயும் என்முன்னே வந்தாய் மொட்டையாக… காதல் கிறுக்கனே... திருட்டு ராஸ்கல்... என்னை ஏமாற்றி விட்டாயே
என்று நாலுவார்த்தை வாய்க்கு வந்தபடி பேச வார்த்தைகளைத் தான் தேடிக் கொண்டு இருந்தேன்.

ஆனால்... சொல்லத் துடித்த வார்த்தைகள் வர மறுத்தன.
காதல் கண்களில் தோன்றி இதயத்;தைத் தொட்ட காதலாயிற்றே...
இந்த டோப் முடியை விட இந்த மொட்டை தான் உனக்கு ஜோர் என்று கூறி என் மனதைக் கவர்ந்த அந்த டோபாவை எடுத்து குப்பைத்தொட்டிக்குள் எறிந்தேன்.

(யாழ்களத்தில் சிறுகதை பதிவினை தேடினேன். கிடைக்கவில்லை. நகைச்சுவை பதிவில் பதிந்து விட்டேன்.)

Print this item

  கோடலும் ஐன்ஸ்டைனும்
Posted by: Ba.Vanniyan - 03-04-2005, 12:16 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - No Replies

கோடலும் ஐன்ஸ்டைனும்

பால் யூர்க்கார்

தமிழில் ராமன் ராஜா

1942 ன் கோடைக் காலம்; மைன் கடற்கரையெங்கும் ஜெர்மனியின் போர்ப்படகுகள் ஓநாய்க் கூட்டம் போல் வெறி பிடித்து உலவிக் கொண்டிருந்த நேரம். இடம் : நீலமலைப் (Blue Hill) பட்டினம். நடு இரவில் கடற்கரையில் ஒரு தன்னந் தனியான உருவம் பின் கை கட்டிக் கொண்டு, கொக்கி போல் வளைந்த முதுகுடன் தரையை வெறித்தபடி முன்னும் பின்னும் நடை போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட ஊர் மக்கள் பயந்தார்கள். அருகில் போய்ப் பார்த்தவர்கள், அந்த ஆளுடைய கடுகடு முகத்தையும் ஜெர்மானிய உச்சரிப்பையும் கண்டுவிட்டு, ஏதோ அந்நிய உளவாளி என்றே முடிவு கட்டிவிட்டார்கள். இங்கிருந்து எதிரிப் படைகளுக்கு ரகசிய சிக்னல் அனுப்புவதாகவும் வதந்திகள் புறப்பட்டன.

உண்மை என்னவென்றால், அவருடைய மனதை அரித்துக்கொண்டிருந்த சிந்தனை எதுவும் அமெரிக்கக் கப்பல்களைப் பற்றியதே அல்ல. உயர் கணிதத்தின் தொடர்ச்சித் தத்துவத்தையும் ஒரு கோட்டிலுள்ள புள்ளிகளின் எண்ணிக்கையையும் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டே நடை போட்ட அவர், குர்த் கோடெல் (Kurt Godel) - கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பிறந்த மிகச்சிறந்த தர்க்கவியலாளர்.

கோடெல் அந்த நீலமலை ஹோட்டலில் விடுமுறைக்காகத் தங்கிருந்தார். அவரோ அவர் மனைவியோ அதிகம் வெளியே வருவதில்லை. அவர்கள் ஏதாவது சாப்பிடுகிறார்களா என்பது கூட சந்தேகம். கிட்டப் போனால் ஒரே சிடுசிடுப்பு ! அறையைக் காலி பண்ணிவிட்டுப் போன பிறகும் ஹோட்டல்காரருக்கு ‘என் பெட்டி சாவியைக் காணவில்லை, நீதான் திருடியிருப்பாய்’ என்று காரமான கடிதம் வந்தது.

கோடை விடுமுறை முடிந்து நியூஜெர்ஸியிலுள்ள ப்ரின்ஸ்டன் கல்விக் கழகத்திற்குத் திரும்பினார் கோடெல். இங்கே அவர் சந்தேகங்களைத் தூண்டும் விதத்தில் தனியாக உலாவப் போக வேண்டியதில்லை; ஏனெனில் பேசிக் கொண்டே கூட வருவதற்கு ஒரு நண்பர் இருந்தார். இவரும் ஒரு ஜெர்மானிய அகதி, கணிதம் தெரிந்தவர், குருட்டு யோசனையில் நடை போடும் பழக்கமுள்ளவர், பெரிய விஞ்ஞானி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்தான்!

அமெரிக்கர்கள் அதிகம் நடப்பதில்லை. ஐன்ஸ்டைனோ ஒரு ஐஸ்கிரீமை நக்கிக்கொண்டே மைல் கணக்காகக் கூட சளைக்காமல் நடந்தே போவார். வயதான காலத்தில் கிட்டத்தட்ட ரிடையர் ஆன பிறகும் தொடர்ந்து பல்கலைக் கழகத்திற்குப் போய் வந்ததற்கு அவர் சொன்ன ஒரே காரணம் : “இனி என் வேலையில் எனக்கு ஒன்றும் பிடிப்பு இல்லை; கோடெல்லுடன் பேசிக்கொண்டே வீடு திரும்பும் சந்தோஷத்திற்காகத்தான் அலுவலகம் போகிறேன்”.

வேடிக்கை என்னவென்றால், ஜெர்மனியின் கடற்படைக்கு ஐன்ஸ்டைன் ஒரு காலத்தில் உதவி செய்தது உண்டு. முதல் உலகப்போரின் போது நீர்மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட ஜைரோ திசைகாட்டிகளைத் திருத்தியமைக்க அவர் உதவினார். கோடெல்லும் ஜைரோ சுழல்மானிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்தான் - ஆனால் பிரபஞ்சம் என்னும் மாபெரும் கருவி எப்படிச் சுழல்கிறது என்பதில் சென்றது அவர் சிந்தனை.

ஐன்ஸ்டைன், கோடெல் இரண்டு பேருமே முப்பதுகளில் நிலவிய நாஜி இனவெறிப் புயலிலிருந்து தப்பிப் பிழைத்து அமெரிக்கக் கரையில் ஒதுங்கினார்கள். அவர்கள் தஞ்சம் புகுந்த இடம், உலகின் மிகச் சிறந்த மூளைகளின் சங்கமமான ப்ரின்ஸ்டன் உயர் கல்விக் கழகம். இங்கே வேலை செய்தவர்களுக்கு ஒரே ஒரு கடமைதான் : சிந்திப்பது.

அதிலும் ஐன்ஸ்டைன், கோடெல், ஹெய்சன்பர்க் ஆகியோர் பிரத்தியேகமானவர்கள். இவர்கள் மூவரும் நூற்றாண்டின் மூன்று மாபெரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர்கள். மூன்று கண்டுபிடிப்புகளுக்கும் ஒரு ஒற்றுமை : அவை ஒவ்வொன்றும் ஆதாரமான, மீற முடியாத மட்டுப்பாடுகளைப் பற்றிப் பேசுபவை. ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம், செய்திகள் அனுப்பக் கூடிய வேகத்திற்கு ஒரு உச்சவரம்பை விதித்தது. நேரம் என்பது அதை அளக்கும் கடிகாரத்தினால்தான் தீர்மானிக்கப் படுகிறது என்று சொல்லி, அவர் காலத்தையே ஒரு கட்டுக்குள் அடக்கினார். க்வாண்டம் இயலில் ஒரு துகளின் இடம், வேகம் இரண்டையும் ஒரே நேரத்தில் அளவிட முடியாது என்பது ஹெய்சன்பர்க்கின் நிச்சயமின்மை விதி. இவை இரண்டும், நாம் எவ்வளவு தூரம் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் என்பதைப் பற்றிய மட்டுப்பாடுகள் அல்ல - உண்மை எது என்பதையே வறையறுக்கும் விதிகள் இவை.

கோடெல் கண்டு பிடித்த ‘முழுமை அடையாமை’ விதி (incompleteness theorem) நூற்றாண்டின் மிக முக்கியமான கணிதவியல் தத்துவம் என்று கருதப் படுகிறது. கணிதத்தின் எல்லா உண்மைகளையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அடிப்படை அநுமானங்களுக்குள் அடக்கிவிட முடியாது. எனவே எந்த கம்ப்யூட்டராலும், எக்காலத்திலும் கணிதத்தின் முழு உண்மைகளையும் கண்டுபிடித்துவிட முடியாது என்றார் கோடெல். இதையே இன்னொரு கோணத்திலும் சொல்லலாம் : என்றைக்காவது ஒரு நாள் நாம் எல்லா உண்மைகளையும் கண்டுபிடித்துவிட்டோம் என்று வைத்துக் கொண்டால், நம் மூளை கம்ப்யூட்டரோ இயந்திரமோ அல்ல என்பது நிரூபிக்கப்படும் !

செயற்கை அறிவு (artificial intelligence) ஆராய்ச்சியாளர்கள் மட்டும் இதை ரசிக்கவில்லை.

மனித சிந்தனையின் எல்லைக் கோடுகளை வரைந்த ஐன்ஸ்டைன், கோடெல், ஹெய்சன்பர்க் மூவரின் தத்துவங்களும் அந்த எல்லைகளை விரிவாக்கவே உதவியது ஒரு சுவாரசியமான முரண். இவர்கள் ஒவ்வொருவரும், அறிவின் எல்லைகளைப் பற்றிய சிந்தனையிலிருந்து ஆரம்பித்து உண்மையைப் பற்றிய முடிவுக்கு வந்து சேர்ந்தவர்கள். உண்மை-அறிவு, எல்லை-எல்லையின்மைகளின் தாண்டவமே இருபதாம் நூற்றாண்டின் சிந்தனைப் போக்காக ஆயிற்று. இருந்தும் ஐன்ஸ்டைன் கோடெல் இருவரும் ஹெய்சன்பர்க் அளவுக்குத் தங்கள் நூற்றாண்டுடன் ஒத்துப் பயணிக்க முடியவில்லை.

இந்தப் புதிய சிந்தனை க்வாண்டம் இயலில் நன்றாக வேர் பிடித்தது. இதில் ஐன்ஸ்டைன் கோடெல் இருவரும் ஒரு அணியிலும், ஹெய்சன்பர்க் எதிரணியிலும் களமிறங்கினார்கள். ஹெய்சன்பர்க்கின் கோபன்ஹேகன் தத்துவம்தான் ஜெயிக்கும் அணியாக இருந்தது. மனிதனின் அறிவை வைத்துக் கொண்டு எதுவரை அடைய முடியுமோ, அது வரைதான் உண்மை என்பது ஐன்ஸ்டைனைப் பொறுத்தவரை ஒரு ஆரம்பக் கருத்து மட்டுமே. ஹெய்சன்பர்க்குக்கோ, கடவுளே அதுதான். அந்த மதத்தில் சேருவதற்கு ஐன்ஸ்டைனும் கோடெல்லும் தயாராக இல்லை. (கோடெல்லின் விதிக்குள்ளேயே ஹெய்சன்பர்க்கின் நிச்சயமின்மைத் தத்துவமும் அடக்கம் என்று கூட ஒரு கோஷ்டி விவாதித்தது. இதை கோடெல்லே ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.)

1911 ஆம் வருடம் ப்ரேக் நகரின் புகழ் பெற்ற மனநோய் விடுதியைப் பார்வையிட்ட ஐன்ஸ்டைன் சொன்னது : “உலகில் இரண்டு விதமான பைத்தியங்கள் உள்ளன. இந்த மாதிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், க்வாண்டம் தியரியின் பின்னால் அலைபவர்கள் !” இந்த இரண்டாவது கூட்டத்தில் இணைவதற்கு ஹெய்சன்பர்க் வந்து சேர்ந்தபிறகு நிலைமை இன்னும் மோசமாக ஆகிவிட்டது என்பது அவருடைய புகார்.

இத்தனைக்கும் க்வாண்டம் இயலை முதன் முதலில் பேணி வளர்த்தவர்களில் ஐன்ஸ்டைனும் முக்கியமான ஒருவர். அவர் ஜெர்மனியிலிருந்தபோதே ஹெய்சன்பர்க்குடன் பழகி அவருடைய சிந்தனைப் போக்கைச் செதுக்கியவர்.

ஐன்ஸ்டைனுடன் வாதாடிப் பார்த்தார் ஹெய்சன்பர்க் : “நீங்கள்தானே சார்பியல் தத்துவத்தில் இந்த மாதிரி கருத்தை முதலில் ஆரம்பித்து வைத்தீர்கள் ?…”

“ஆமாம், பேசினேன், எழுதினேன். ஆனால் நானே சொன்னதாக இருந்தாலும் முட்டாள்தனம், முட்டாள்தனம்தான்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார் ஐன்ஸ்டைன்.

உலகப் போருக்கு முன் இருவரும் பிரிந்துவிட்டார்கள். ஐன்ஸ்டைன் அமெரிக்காவுக்குச் சென்றார்; ஹெய்சன்பர்க் தாய் நாட்டிலேயே தங்கி ஆராய்ச்சியைத் தொடர்ந்து, கடைசி வரை ஜெர்மனிக்கு விசுவாசமாக இருந்தார். ப்ரின்ஸ்டனில் பொதுவுடமை வாதம் பேசும் யூதரான ஐன்ஸ்டைன் மற்றக் கூட்டத்திலிருந்து விலகித் தனியாகத் தெரிந்தார். அவருக்குத்துணையாக இருந்தது கோடெல் ஒருவர்தான். பிரச்னை என்னவென்றால், மற்ற பல விஞ்ஞானிகளைப் போன்று இவர்கள் வெறும் அறிவைச் செதுக்கிச் செதுக்கி அழகு பார்க்கும் இஞ்சினியர்களாக இல்லாமல், அதையெல்லாம் கடந்த தத்துவ சிந்தனையாளர்களாக இருந்தனர். ஏற்கனவே புகழின் உச்சிக்கு ஏறியிருந்ததால் அந்த உயரத்தில் சென்று ஐன்ஸ்டைனுடன் சரி சமமாக உரையாட முடிந்தவர் கோடெல் மட்டுமே. இருவரும் அங்கே தனிமைப் படுத்தப்பட்டு, கடைசியில் ஒளி மங்கிப் போக ஆரம்பித்தனர்.

நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இருவருக்கும் வெவ்வேறு டேஸ்ட். ஐன்ஸ்டைன் நன்றாக வயலின் வாசிப்பார். கோடெல்லுக்கோ, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாலும் சங்கீதத்தை ரசிக்க முடியாது. கோடெல், சினிமாப் பிரியர்; அதிலும் மாயா ஜாலக் கதைகள் என்றால் உயிர். ‘ஸ்னோ ஒயிட்டும் ஏழு சித்திரக் குள்ளர்களும்’ என்ற படத்தைப் பார்க்க ஐன்ஸ்டைனைக் கட்டி இழுத்துப் போக முயன்றும் முடியவில்லை. “நம் வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதாவது இருக்கிறதா?.. இருந்தால், அதைச் சரியாகச் சொல்வது இந்த மாதிரி குழந்தைக் கதைகள்தான்” என்பார் கோடெல். (வாழ்க்கையின் அர்த்தம் என்பதற்கு இருட்டான மறு பக்கமும் உண்டு. ஜெர்மன் படைகளின் ரகசியக் குறியீட்டை உடைத்து சாதனை படைத்த ஆலன் டூரிங், ஸ்னோ ஒயிட் கதையைப் படித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவருடைய ஓரினச் சேர்க்கையைக் ‘குணப் படுத்துவதற்காக’ பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டாயமாக ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ளச் சொன்ன போது மனம் நொந்து போன டூரிங், ஸ்னோ ஒயிட் கதையில் வருவது போலவே விஷம் கலந்த ஆப்பிளைத் தின்று தற்கொலை செய்து கொண்டார்.)

கோடெல் எப்போதும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் டைப்; ஐன்ஸ்டைனோ குதூகலமே வடிவானவர். இருவரும் நீள நடைபோடும் போது ஐன்ஸ்டைன் நண்பரை உற்சாகப் படுத்துவதற்காக சார்பியலில் தன் லேட்டஸ்ட் கண்டுபிடிப்புகளைச் சொல்லிக் கொண்டே வருவார். ஆனாலும் கோடெல்லின் மனப் புழுக்கம் நாளடைவில் நோயாகவே முற்றிவிட்டது. எதைக் கண்டாலும் மனப் பிராந்தியில் நடுங்க ஆரம்பித்தார். பொருளியல் வல்லுநர் ஆஸ்கார் ஒருமுறை கோடெல்லைச் சந்திக்க வந்தபோது, தன் பழைய நண்பர் பயத்துடன் அலமாரிக்குப் பின்னால் ஒளிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

என்னதான் விஞ்ஞானியாக இருந்தாலும் ஐன்ஸ்டைனுக்குக் கணிதத்தில் பிடிப்பு ஏற்படவில்லை. அதனால் அவர் இயற்பியலுக்குப் போய்விட்டார். “அறிவியல் தோட்டத்தில் கிளை கிளையாய்ப் படர்ந்துள்ள ஏராளமான பாதைகளில், கணிதத்திற்குப் போகும் அடிப்படையான பாதை மட்டும் எனக்குப் பிடிபடவில்லை” என்பார் ஐன்ஸ்டைன். பள்ளிக்கூடத்திலேயே அவருக்குச் சோம்பேறிக் கழுதை என்று பெயர் வைத்தார் ஆசிரியர் மின்கௌஸ்கி. (இதே ஆசிரியரே பின்னொரு நாளில் ஐன்ஸ்டைனுடைய தத்துவத்தால் கவரப்பட்டு அதில் ஈடுபாட்டுடன் வேலை செய்ய முன்வந்தார்.) “கணக்கு மட்டும் போட ஆரம்பித்துவிட்டோமோனால், எல்லா வேலையும் பாழ் !” என்பது ஐன்ஸ்டைனின் பொன் மொழி.

கோடெல் சென்றதோ, இதற்கு நேர் எதிர்த்திசை. கோடெல்லுடன் பழக ஆரம்பித்த பிறகு ஐன்ஸ்டைனே கூட, உண்மையை அடைவதற்குக் கணிதமும் ஒரு வழிதான் என்று ஒத்துக் கொள்ள ஆரம்பித்தார். ஐன்ஸ்டைனுடைய சகவாசத்தால் கோடெல்லுக்கு இயல்பியலில் மறுபடியும் சுவாரசியம் ஏற்பட ஆரம்பித்தது.

“இந்த ஊர்ப் பள்ளியில் படிக்கும் எந்தப் பொடியனுக்கும் ஐன்ஸ்டைனை விட ஜியாமெட்ரி நன்றாக வரும்” என்றார் ஹில்பர்ட். “இருந்தும் காலம்-இடம் பற்றி அவர் புரிந்துகொண்டது போல் எந்தக் கணிதவியல் வல்லுநரும் செய்ததில்லை”. நூற்றாண்டுகளாக ப்ளேட்டோ முதல் கான்ட் வரை எவ்வளவோ பேருக்குச் சிக்காமல் நழுவி வந்த காலம், கடைசியாக ஐன்ஸ்டைனிடம் பணிந்தது. அவர் காலம்-இடம் இரண்டையும் பிணைத்து ஒரு நான்கு பரிமாண உலகத்தைப் படைத்தார்.

கோடெல்-ஐன்ஸ்டைன் நட்பினால் அழகானதொரு புதிய தத்துவம் பிறந்தது. தன் நாற்பரிமாண உலகத்தைப் பற்றிய கருத்துக்களை, ஒரு சிந்தனையாளரின் மனத்தில் விதைத்தார் ஐன்ஸ்டைன். அதை வைத்துக்கொண்டு ஒரு செப்பிடு வித்தையே காட்டிவிட்டார் கொடெல். ஐன்ஸ்டைன் காலத்தை இடமாக மாற்றினார்; கொடெல் காலத்தையே மாயமாக மறையச் செய்துவிட்டார். முழுமை அடையாமை விதியின் மூலம் கணித உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கியிருந்த கோடெல், அடுத்துக் குறிவைத்தது ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தை ! நேரத்தை வீணாக்காமல் செயலில் இறங்கிய கோடெல், ஐன்ஸ்டைனின் திசைவெளிச் சமன்பாடுகளுக்கு யாருமே எதிர்பாராத தீர்வுகளைக் கொடுத்தார்.

கொடெல்லுடைய முடிவுகளின் கணிதம், இயற்பியல், தத்துவம் எல்லாமே மிகவும் புதுமையாக இருந்தன. அவர் காண்பித்த பிரபஞ்சம், சுழலும் மகா விண்வெளி. இந்த கொடெல் வெளியில் பொருள்கள் விரவி இருப்பதனால் கால-வெளி வளைக்கப்பட்டு வக்கிரமடைந்து ஏராளமான பாதைகள் சாத்தியமாகின்றன. இந்தக் காலப் பாதைகளப் பிடித்துக் கொண்டு சரியான வேகத்தில் சென்றால், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் எல்லாவற்றிலும் பயணம் செய்யலாம். கோடெல் இந்தப் பயணிகள் ராக்கெட்டின் வேகம், திசை, எரிபொருள் செலவு உட்பட எல்லாவற்றையும் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னார். பயணிகள் சாப்பிடும் மெனு மட்டும்தான் பாக்கி. காலப் பயணம் என்பது பொழுது போகாத தத்துவ வாதிகளின் சுவாரசியமான கற்பனையாக இருந்தது போய், அறிவியல் சாத்தியமாக ஆனது.

கோடெல் வீசிய இந்தக் கணக்கு வெடி குண்டின் தாக்கம், முந்தைய நிச்சயமின்மைத் தத்துவத்தை விடப் பயங்கரமாக இருந்தது. நம்மால் கடந்த காலத்திற்குப் போய் வர முடியும் என்றால், அது கடக்கவே இல்லை என்று ஆகிறது. காலம் முன்னே செல்லவில்லை என்றாலோ, அது காலமே அல்ல. கோடெல் காலத்தை அடக்கினார் என்று சொல்லமுடியாது; அதைக் கொன்றே விட்டார். மர்மங்களின், முரண்பாடுகளின் மூட்டையாக இருந்தாலும் நம் தினசரி வாழ்க்கையின் அடி நாதமாக இருந்த காலம், கடைசியில் ஒரு வெறும் பொய்த்தோற்றமே என்பதை உடனே உணர்ந்துகொண்டார் ஐன்ஸ்டைன். சார்பியலின் தந்தைக்கு அதிர்ச்சி; மறுபடி அவர் கைப்பிடியிலிருந்து நழுவிப் போய் விட்டது காலம்.

இதற்குப் பிறகு நடந்ததுதான் புரியாத புதிர் : ஒன்றுமே நடக்கவில்லை ! விஞ்ஞானிகள் சமுதாயம் கோடெல்லின் முடிவுகளைக் கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. முதலில் கோடெல்லை மறுப்பதற்குச் சிலர் முனைப்பாக இறங்கினார்கள். அது தோல்வியடைந்தது. பிறகு அவருடைய கண்டுபிடிப்புகளை அலசி ஆராய்ந்து பொதுப் படுத்தப் பார்த்தார்கள். எல்லாம் கொஞ்ச நாள்தான். மௌனமாக இருந்தே கூட சதி செய்ய முடியும் என்று நிரூபித்தார்கள் எதிர்க் கூடாரத்தைச் சேர்ந்தவர்கள். கோடெல்-ஐன்ஸ்டைனின் அறிவியல் காலடித்தடங்கள், வறட்டுத் தத்துவங்களின் முரட்டுப் பிடிவாதத்தில் கலைந்தே போய்விட்டன.

மைக்கேல் ஆஞ்செலோவும் லியனார்டோவும் சேர்ந்து படைத்தது போன்ற ஒரு அருமையான ஓவியம், கோடெல்-ஐன்ஸ்டைனின் கூட்டு மூளையால் உருவானது. காலப் புயலில் மறைந்து போன இந்தப் படைப்பைப் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியாது. அவர்களுடய நட்பைப் பற்றியே கூட ஐன்ஸ்டைனின் வாழ்க்கை வரலாறுகளில் இரண்டொரு வாக்கியங்களுக்கு மேல் யாரும் எழுதவில்லை. ஆனால் ஐன்ஸ்டைனுடைய முதல் காதலில் பிறந்த குழந்தையைப் பற்றியெல்லாம் ஒரு கோஷ்டியே ஆராய்ச்சி செய்து புத்தகங்கள் எழுதியிருக்கிறது.

கடந்த சில வருஷங்களாகத்தான் கோடெல் பிரபஞ்சத்திற்கு மறுபடி ஒரு கீற்று வெளிச்சம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் நாயகர் வேறு யாருமல்ல, நம் ஸ்டீபன் ஹாக்கிங். எமன் !… கோடெல் பிரபஞ்சத்தின் பயங்கரங்களைக் கண்டு பிரமித்துப் போய், அதற்கு நேர் எதிரான தத்துவம் ஒன்றைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். காலத்தை மறுபடி சீரான ஓடை போல் ஓடவைக்கும் அவர் முயற்சி வெற்றி பெற்றால், கோடெல்லின் தத்துவம் தலை கீழாகக் கவிழும். கொடெல் முடிவுகள் ஜீரணிக்க மிகவும் கஷ்டமாக இருப்பதால், அவற்றை ரத்து செய்ய இயற்கையின் விதிகளையே அங்கங்கே சற்று வளைத்து ஒப்பேற்ற வேண்டியதாயிருக்கிறது.

ஹாக்கிங்கின் இத்தகைய சிரமமான முயற்சிகள், மௌனச் சதிகளை உடைப்பதில் உள்ள அபாயங்களைக் காட்டுகிறது. ஒரு கூட்டத்தின் புதிரான மௌனத்தினால் ஒரு மகத்தான நட்பு மட்டும் மறைக்கப் படவில்லை; ஐன்ஸ்டைன் புரட்சியின் முழு அர்த்த்தையும் உலகம் உணர்ந்துகொள்ள முடியாமலே போய்விட்டது. காலமும் இடமும் வெவ்வேறு பொருட்கள் என்று நூற்றாண்டுக் கணக்காக நிலவி வந்த நியூட்டனின் கருத்துக்களை உடைப்பது ஒரு புரட்சி என்றால், காலம் என்பது சார்புடையது மட்டுமல்ல - கற்பனையானது என்று நிரூபிப்பது அதைவிடப் பெரிய சாதனை.

ஐன்ஸ்டைன் கொஞ்சம் சனாதனி. பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைக்க முயற்சி செய்துகொண்டே இருப்பார். கோடெல் அராஜகவாதி; எல்லாவற்றையும் கவிழ்த்துப் புரட்டிப் போடத் துடிப்பவர். அவரால் கலவரப் பட்டுப் போன ஹில்பர்ட் (இவரும் பெரிய கணித மேதைதான்) கொடெல்லின் தத்துவங்களைப் பொய்யாக்குவதற்காகவே புதுப் புது தர்க்க விதிகளையெல்லாம் படைக்க முற்பட்டார். கோடெல் பிரபஞ்சத்தை சரியாகப் புரிந்து கொண்டால், அதற்கும் முழுமை அடையாமை விதிக்கும் ஒரு பொதுவான அணுகுமுறை, ஒரு நோக்கம் இருப்பது புரியும். இயற்பியலின் அஸ்திவாரத்தின் மீது வீசப்பட்ட வெடி குண்டுகள் இவை.

கோடெல், ஐன்ஸ்டைன் போன்றவர்களின் காலடிகள் பதிந்ததனால், பதினேழாம் நூற்றாண்டைப் போலவே இருபதாம் நூற்றாண்டையும் அறிவு ஜீவிகளின் காலம் என்று சொல்லலாம். ஆனால் போரினால் பாதிக்கப் பட்டுக் கவனம் கலைந்திருந்த நீலமலைப் பட்டினத்தின் மக்கள், தங்களிடையே இருந்த அறிவு ஜீவியின் பெருமையை உணரவே இல்லை.

(17-டிசம்பர்-2004 க்ரானிகில் ரிவ்யூ இதழில் வெளியான கட்டுரை. கட்டுரை ஆசிரியர் Palle Yourgrau, Brandeis பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியாகப் பணிபுரிபவர். பாலி யூர்க்ரா எழுதி விரைவில் வெளிவர இருக்கும் A World Without Time: The Forgotten Legacy of Godel and Einstein என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கட்டுரை இது.)

நன்றி திண்ணை

Print this item

  மென்பொருட்களுக்கு நுழைவுச்சொல் பெற்றுக்கொள்ள..........
Posted by: வியாசன் - 03-03-2005, 11:35 PM - Forum: இணையம் - Replies (10)

உங்களிடம் பலமென்பொருட்கள் இருக்கலாம் நுழைவுச்சொற்கள் இருக்காது. இணையத்தில் பல பரீட்சாத்தப் பதிப்புக்களை வெளியிடுகின்றார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை செயலிழந்துவிடுகின்றது. அவற்றை நீங்கள் பதிவுசெய்து அதற்குரிய நுழைவுச்சொல்லை இட்டால் அவை தொடர்ந்தும் செயற்படும். அதனால் நீங்கள் பணத்தை மீதப்படுத்தமுடியும். பெரும்பான்மையான நுழைவுச்சொற்களை எடுத்துக்கொள்வதற்கு ஒரு தளம் இயங்குகிறது. அதன் முகவரி உங்களுக்கு தேவையா?
உங்கள் கருத்துக்களை பார்த்தபின் நான் அதை கொடுக்கும் வழிபற்றி யோசிக்கிறேன். இதில் இணைத்து பொறுப்பாளர்களுக்கு சிக்கல் ஏற்படுத்த விரும்பவில்லை

Print this item

  மன்மதன் விமரிசனத்தில் விசம்........
Posted by: KULAKADDAN - 03-03-2005, 10:48 PM - Forum: சினிமா - Replies (13)

நான் அனேகமாக எல்லாத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பேன். (சரத்குமார் விஜயகாந்த்?? சத்தியமாய் இல்லை - அஜித் விஜெய் சிம்பு படங்கள் இயக்குனர்கள் கதாநாயகிகளைப் பொறுத்து தெரிவிற்கு வரும்) தரமான படம் எண்டு பேசப்பட வேண்டும் எண்ட கட்டாயம் எனக்கில்லை. உடுப்பு பாட்டு நடிப்பு காட்சியமைப்பு எண்டதுக்காகப் பாப்பதும் உண்டு. வார இறுதி நாட்களில செய்வதற்கு ஒண்டும் இல்லாத பட்சத்தில பல தரமற்ற படங்களை நண்பர்களோட போய்ப் பார்த்திருக்கிறேன்.
திரைப்படம் பாக்கிறது அறிவை வளர்த்துக் கொள்ளுறதுக்கு?? இல்லா விட்டால் நல்ல ஒரு செய்தியைச் சமூகத்திற்குச் சொல்லுது அதைப் பார்ப்பம் எண்டு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை (முக்கியமாக தமிழ் திரைப்படங்கள்) முற்று முழுசா ஒரு பொழுது போக்குக்காக எண்டு எடுத்துக் கொள்ளுறதால திரைப்படங்களின்ர தரம் என்னை ஒரு நாளும் bother பண்ணினது கிடையாது. தரமான திரைப்படங்களைப் பார்க்க வேணும் எண்ட எனது ஆர்வத்தை பல தேடல்களால திரைப்படவிழாக்களிலையும் விடுபடுறதுகள் DVD யிலும் பாத்து ரசித்து அதிர்ந்து நிறைவாய் உணர்ந்து

மன்மதன் திரைப்படம் திரையரங்கில் “பொப்கோன” கோப்பி சகிதம் நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழ்ந்து வந்தேன் (Jothika is one of my favorite) சிம்புவின் திரைப்படத்தில் சேரன் மணிரத்தினத்திடம் கிடைக்கும் அந்தக் கொஞ்சத்தையேனும் நான் எதிர்பார்த்துப் போயிருந்தேன் எண்டால் தவறு சிம்புவினுடையது (அல்லது சிம்புவை வைத்து இயக்கியவரிடம்) அல்ல. என்னுடையதே. (மிருணாள் சென்னின் படம் அளவிற்கு சிம்புவின் இல்லை என்று அழுதவர்களும் உள்ளார்கள்)

சிம்பு வயதில் இளையவராக இருப்பதால் பாடல் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு bore அடிக்காமல் நடனம் ஆடுகின்றார். அவரின் உடைகளின் தெரிவு நன்றாக உள்ளது. கொஞ்சம் நடிக்கவும் செய்கின்றார். இதை விட ராஜேந்திரனின் மகனிடம் எதைத் தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

“விருமாண்டி” கனடாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட போது பலர் தமது குழந்தைகளுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். (ஒரு வேளை தெனாலி போல் இருக்கும் என்ற எண்ணமோ என்னவோ) நேரடி வெட்டுக் கொத்துக்களைக் காட்டும் இது போன்ற திரைப்படங்களை விட “மன்மதன்” எந்த விதத்தில் குழந்தைகளுக்குப் பாதிப்பைத் தரப்போகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.

“மன்மதன்” திரைப்படத்தின் முக்கிய கரு தவறு செய்யும் பெண்கள்??? (கெட்ட) கொலை செய்யப்படுகின்றார்கள். இது நாயகனின் தீர்ப்பு. புலம்பெயர்ந்து வாழும் எமது பிள்ளைகளுக்கு இக் கரு எந்த அளவிற்குப் புரியப் போகின்றது. (ஒரு வேளை இந்தியா போன்ற நாடுகளின் வாழும் குழந்தைகள் உளவியல் ரீதியான கேள்விக்கு ஆளாகலாம்) ஆனால்; புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளின் அகராதியில் “தவறு செய்யும் பெண்கள்?’ என்று ஒன்று இடம்பெறப் போகின்றதா? “This is my mom’s boy friend” என்று அறிமுகம் செய்யும் கலாச்சாரத்தோடு இணைந்து வாழும் எம் குழந்தைகள் “மன்மதன்” திரைப்படத்தில் பார்த்து ரசிக்கப் போவது சிம்பு ஜோதிகாவின் பாடல் காட்சிகளையும் நடனத்தையும் தான்.

கடந்து வந்த தமிழ் சினிமா எமக்குப் புகட்டிப் போனதெல்லாம் என்ன?
ஒரு பெண் பாலியல் வற்புறுத்தலுக்குள்ளானால் அவள் (அவன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும்) தன்னைத் தொட்டவனைத்தான் திருமணம் செய்வாள் இல்லையேல் தற்கொலை செய்து விடுவாள்.
பெண் வீட்டுக்கு அடக்கமாக இருந்து கொண்டு கணவனுக்கு தனது கடமைகளைச் செய்து இன்புறுவாள். கணவன் தவறு செய்தால் பொறுத்துக் கொண்டு அவனைத் திருத்தி நல்லவனாக்குவாள்.

நான் சின்ன வயதில் பார்த்த திரைப்படம் பெயர் மறந்து போனேன். சிவாஜி எஸ்.எஸ் ஆர் விஜயகுமாரி தேவிகா நடித்த திரைப்படம் இது. கண்பார்வை அற்ற பெண்ணிற்கு சிகிச்சை நடக்கின்றது. திருமண நாள் அன்றே அவளை விட்டுச் சென்ற கணவன் விபத்தில் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. சிகிச்சையின் பின்னர் முதல் முதலில் முகம் காணாத தனது கணவனைத் தான் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசையை நிறைவு செய்ய பின் விளைவுகளை யோசிக்காமல். கணவனின் நண்பனை முன்னே நிறுத்துகிறார் பெண்ணின் தந்தை. நண்பன் பல வழிகளில் அவள் தன்னோடு. தனித்திருப்பதைத் தவிர்க்கின்றான். தனது கணவன் அவன் தான் என்று நம்பி இருந்தவளின் கைகளின் திருமணப் புகைப்படம் ஒன்று கிடைக்கின்றது. தான் மனதால் கணவன் என்று வரிந்து வாழ்பவன் உண்மையில் தனது கணவன் இல்லை என்று தெரிந்த போது கன்னி கழியாத அந்தப் பெண் தற்கொலை செய்கின்றாள். இப்படிப் பட்ட திரைப்படங்கள் கூறாத எந்த விதமான கோழைத் தனத்தை “மன்மதன்” கூறிவிட்டான்?

இப்படியான பெண்களின் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான திரைப்படங்களையும் இன்னும் தவறு செய்தால் தண்டிக்கலாம் கை காலை வெட்டலாம் பாணிப் படங்களை தானே இந்திய தமிழ் சினிமா காலம் காலமாகத் தந்து கொண்டிருக்கின்றது. இவற்றோடு ஒப்பிடும் போது “மன்மதன்” தரமற்ற திரைப்படமாக இருப்பினும் குரூரமான காட்சிகள் இடம் பெறவில்லை. மாறாக அழகியலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து.


<span style='font-size:25pt;line-height:100%'>நாம் இப்போது – அதாவது ஈழத்தமிழர்களாகிய புலம்பெயர்ந்த நாம் இப்போது இங்கே வாழும் எமது எதிர்காலச் சந்ததிக்காக முக்கியமாக சிந்திக்க வேண்டியது என்னவெனின் பகைவரை அழிப்போம், துப்பாக்கி தூக்குவோம், எதிரிகளை வெட்டுவோம், கொத்துவோம் போன்ற எமது ஈழத்துப் போராட்டப் பாடல்களை முக்கியமாகத் தடைசெய்ய முயற்சித்தல் வேண்டும். – அதிலும் இப்படியான பாடல்களை தமது குழந்தைகளுக்குப் மனனம் செய்யப் பண்ணி அதனைப் பெருமையாக கலை நிகழ்ச்சிகளிலும் வானொலிகளிலும் பாட வைப்பதும். இப்படியான பாடல்களுக்குச் சிறுமியர் நடனம் ஆடுவதும். (ஒரு வேளை மொழி தெரிந்திருப்பின் கனேடிய சட்டம் இவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கும்) தடை செய்யப்படல் வேண்டும். எவ்வளவு தான் நாட்டுப் பிரச்சனையை எமது குழந்தைகளுக்கு ஊட்டினாலும் அவர்கள் வாழும் தளம் இங்குதான். பெற்றோர்கள் துவக்குத் தூக்கக் கற்றுக்கொள் எனின் அவர்கள் தூக்கப் போவது இங்குதான் ஊரில் அல்ல </span>

நன்றி கறுப்பி........

தங்கள் கருத்து......

Print this item