| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 523 online users. » 0 Member(s) | 520 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,261
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை: ஜனாதிபதி குற |
|
Posted by: வியாசன் - 03-02-2005, 11:48 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
சுனாமி நிவாரண நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை: ஜனாதிபதி குற்றச்சாட்டு
அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகளில் 90 வீதமானோர் ஊழல்களுடன் செயற்படுவதாகவும்ää மீதி 10 வீதமானோரே உரிய முறையில் மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று மகரகமவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.
ஆசிய அபிவிருத்தி உலக வங்கி ஆகியன 16000 கோடி ரூபாவை வழங்கவுள்ளன. அவை சுனாமியின் பின்னர் நாட்டை புனரமைப்பதற்காக செலவிடப்படவுள்ளன.
இந்த நிலையில் கடற்கரையில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கட்டிடங்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் திட்டத்தில் மாற்றங்கள் இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராவது தகர்க்க நினைத்தால் அது இயலாத காரியமாகவே முடியும் என அவர் குறிப்பிட்டார். சுனாமியின் பின்னர் நிவாரண நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை என்றும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஏனைய கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான - அதேவேளை தமிழ் மக்களுக்காக போராடிய கட்சிகளும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஐக்க்pய தேசிய கட்சி ஒருபோதும் மக்கள் சார்பில் திட்டங்களை முன்வைத்ததில்லை எனக் குறிப்பிட்ட அவர் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் சிங்கள மொழிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பாடுபட்டதாகவும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் யுத்தத்;தின் மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும் என நினைத்தவர்கள் இன்று ஜனநாயகத்துக்குத் திரும்பியுள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுட்டபழம்
நன்றி புதினம்
|
|
|
| ஜெயலலிதா யானை ஜெயித்தது நாடகமா? புது சர்ச்சை |
|
Posted by: Vaanampaadi - 03-02-2005, 07:35 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ஜெயலலிதா யானை ஜெயித்தது நாடகமா? புது சர்ச்சை
<img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/02/flash/C1124_elephant.jpg' border='0' alt='user posted image'>
ஜெயலலிதா தானம் அளித்த யானை
குருவாரூர், மார்ச் 2- குருவாயூர் கிருஷ்ணன் கோவில் யானைகளுக்கு நடந்த ஓட்டப்பந்தயத்தில் ஜெயலலிதா தானம் அளித்த யானை வெற்றி பெற்றதில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலுக்கு தமிழக முதன்மந்திரி ஜெயலலிதா ஒரு குட்டி யானை தானம் செய்தார். -கிருஷ்ணா என்று பெயரிடப்பட்ட அந்த யானையை குருவாயூர் தேவஸம் போர்டு நிர்வகித்து வந்தது. கடந்த வாரம் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் ஜெயலலிதா பரிசளித்த கிருஷ்ணன் யானைதான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இது உண்மையல்ல, அந்த யானை ஓட்டப்பந்தயம் உண்மையானதாக நடக்கவில்லை. கிருஷ்ணன் யானை வெற்றிபெறும் வகையில் மற்ற யானைகள் மெதுவாக ஓட வைக்கப்பட்டன என்ற சர்ச்சை கிளப்பப்பட்டு உள்ளது. பந்தயத்தில் கண்ணன் யானைதான் பாதி தூரம் வரை முதலிடத்தில் வந்தது. திடீரென முன்னுக்கு ஓடிய யானைகள் எல்லாம் மெதுவாக ஓடின. பிறகு கிருஷ்ணனுக்கு வழிவிட்டன. அதனால் கிருஷ்ணன் யானை வென்றதாக அறிவிக்கப்பட்டது என்கிறார் கோவில் ஊழியர் சங்கத் தலைவர் திருவிக்ரமன் நாயர். வழக்கமாக போட்டியில் கலந்து கொள்ளும் கோகுல், கிருஷ்ண நாராயணன் ஆகிய யானைகள் ஓட்டப்பந்தயத்துக்கு வரவில்லை. எனவே இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் பந்தயத்தை நேரில் கண்ட பரமேஸ்வரன் நாயர். இந்த பந்தயம் முடிந்த மறுநாள் தமிழக மந்திரி தளவாய்சுந்தரம் குருவாயூர் கோவிலுக்கு வந்து கிருஷ்ணன் யானையை தடவிக்கொடுத்தார், யானை பாகன்களையும் பாராட்டினார் என்று கோவில் பக்தர்கள் கூறுகிறார்கள். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகவும் அவர் தரும் கணிசமான பரிசுத்தொகைக்காகவும் கோவில் அதிகாரிகளும் யானை பாகன்களும் சேர்ந்து சதி செய்து விட்டதாகவும் குருவாயூர் பக்தர்கள் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். மாநிலம் விட்டு மாநிலத்திலும் பண பலம் இருந்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணமோ?
Dinakaran
|
|
|
| ஜோர்ஜின் பாரியார் காலமானார் |
|
Posted by: Vaanampaadi - 03-02-2005, 07:07 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (3)
|
 |
ஜோர்ஜின் பாரியார் காலமானார்
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பு உதவியாளர் ஜோர்ஜின் (எஸ்.பஞ்சரட்ணம்) மனைவி தர்மசரோஜினி (72 வயது) நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலமானார்.
வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த இவரது பூதவுடல் தற்போது கிளிநொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
புலிகளின் முக்கியஸ்தர்களுட்பட பலரும் இவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று புதன்கிழமை கிளிநொச்சியில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
Thinakural
|
|
|
| தான் வேண்டாமென நிராகரித்ததாலேயே |
|
Posted by: Vaanampaadi - 03-02-2005, 07:05 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
தான் வேண்டாமென நிராகரித்ததாலேயே மகிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி கிடைத்தது என்கிறார் அநுரா பண்டாரநாயக்க
பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி என்னிடம் கோரிக்கை விடுத்தார். நான் தான் வேண்டாமென்றேன். இதனாலேயே மகிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி கிடைத்தது எனத் தெரிவிக்கும் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க, சுதந்திர கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டமாக இதனைத் தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பஹாவில் இடம்பெற்ற மாகாண சபைகள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் அநுரா அங்கு பேசுகையில்,
பிரதமராக என்னையே ஜனாதிபதி நியமிக்க முயன்றார். நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் வரை அப்பதவி எனக்கு வேண்டாமென மறுத்து விட்டேன். எனவே தான் அப் பதவி மகிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்தது. ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி நேரடியாக இதனைத் தெரிவித்தார் இப் பதவிக்கு உரித்துடையவர் அநுரா தான் என்று.
நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை நீக்கி, வாழ்க்கைச் செலவை குறைத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் திடீரென வந்த கடல்கோளினால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் பன் மடங்காகி விட்டன. இந் நிலையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனைத் தடுத்து ஐ.தே.கட்சியின் தேவையை நிறைவேற்ற ஒரு சிலர் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியை மாற்றி பண்டாரநாயக்கர்களை ஓரங்கட்டவே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தனியார் அச்சு ஊடகங்களும் இலத்திரனியல் ஊடகங்களும் மேற்கொண்டு வருகின்றன. இதற்கு ரணில் விக்கிரமசிங்கவே ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
எமது கட்சியின் தலைவரை தனியார் ஊடகங்களால் தீர்மானிக்க முடியாது. அதேபோல், ஐ.தே.கட்சியின் தலைமையை அரச ஊடகங்களாலும் தீர்மானிக்க முடியாது.
ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் அவசியம் தற்போது ஏற்படவில்லை. ஆனால், ஒரு சில ஊடகங்களுக்குத் தான் தேவைப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பேசுவது கட்சிக்கு செய்யும் துரோகச் செயலாகும். அது மட்டுமல்ல ஐ.தே.கட்சிக்கு வழங்கும் ஆதரவாகும்.
தனியார் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஒரு தனிநபருக்கான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அந் நபர் ஏதாவது பகிர்ந்தளித்தாலும், வனாத்தமுல்லையில் மலசலகூடத்தை திறந்து வைத்தாலும், பத்திரிகைகளில் பெரியளவில் பிரசுரிக்கின்றார்கள். அனைத்து மக்களின் விருப்பதிற்கமைய ஜனாதிபதிக்கு ஜனநாயக ரீதியாக மேலும் பல வருடங்கள் பதவி வகிக்கலாம்.
கம்பஹா மாவட்ட மக்களுக்கு நான் ஒருபோதும் எனது பெயரை பிரதமர் பதவிக்கு பிரேரிக்குமாறு கோரிக்கை விடுத்ததில்லை. என்றாவது ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறுவாரானால் நானும் போட்டியிடுவேன். இதற்கு ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியின் ஜே.வி.பி.யின், தினேஷ், பேரியல் அனைவரினதும் ஆசீர்வாதங்கள் இருக்க வேண்டும்.
ஜே.வி.பி.யுடனான பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. நான், அமைச்சர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோர் விமல் வீரவன்சவுடன் பேச்சுகளை நடத்தி தீர்த்துள்ளோம்.
இந்த அரசாங்கத்தை வீழ்த்த இடமளிக்க மாட்டோம். அரசாங்கம் வீழ்ந்தால் என்ன நடக்கும்? மாகாண சபைகள் அனைத்தும் வீழ்ச்சியடையும். அடுத்த ஆண்டு பிரதேச சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. என்றுமில்லாதவாறு கம்பஹா மாவட்ட பிரதேச சபை அனைத்தும் தோல்வி கண்டன. அத்தனகலை, கம்பஹா, தொம்பேயில் தோற்றோம்.
அடுத்த வருடம் அனைத்து பிரதேச சபைகளையும் வெற்றி கொள்ள வேண்டும்.
இதற்கு பின்னரே ஜனாதிபதி தேர்தல், அதனை அப்போது பார்த்துக் கொள்வோம். சிலவேளை மக்கள் கருத்துக் கணிப்பு அடுத்த வருடம் வரக் கூடும். அதற்கும் நாம் தயாராக வேண்டும்.
முன்னணியை உடைக்க இடமளிக்க முடியாது. குறைகள் தீர்க்கப்பட வேண்டும். ஜே.வி.பி.விசேடமாக தமது பேச்சுகளில் கட்டுபாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இம் முன்னணியை அமைத்தது நான். என்னை விட அதிகளவில் விருப்பு வாக்கு பெற்றது யாருக்கும் பரீட்சயமில்லாத விலாசம் இல்லாத விஜித ஹேரத்தான். எனக்கு தேவைப்பட்டது ஐ.தே.கட்சியை தோல்வியடையச் செய்ய வேண்டுமென்பதேயாகும் என்றும் அமைச்சர் அநுர பண்டாரநாயக்க தெரிவித்தார்.
Thinakural
|
|
|
| ஒரு கையால் கொடுத்து மறுகரத்தால் எடுக்கப்படும் சர்வதேச உதவி' |
|
Posted by: Vaanampaadi - 03-02-2005, 07:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஒரு கையால் கொடுத்து மறுகரத்தால் எடுக்கப்படும் சர்வதேச உதவி'
உதவி தேவைப்படும் மக்களுக்கு சர்வதேசம் வழங்குகின்ற உதவியின் ஐந்திலொரு பகுதியே அந்த மக்களைச் சென்றடைவதாகவும் அதிகாரிகளின் கெடுபிடிகள், செயல்திறனின்மை, உறவினர்களை பணிக்கமர்த்தி சலுகை செய்தல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் உதவி வழங்கும் அமைப்புகளிடமிருந்து கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேசமயம், இந்த சர்வதேச உதவியின் 40 சதவீதமானது உதவியை வழங்கிய நாடுகளிடமிருந்து அதிக விலையில் பொருட்கள், சேவைகளைப் பெறுவதற்கே செலவிடப்படுவதாகவும் `அக்சன்எய்ட்', `ஒக்ஸ்பாம்' ஆகிய உதவி வழங்கும் நிறுவனங்கள் திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளன.
அரசியல் ரீதியான இணக்கப்பாட்டு முறைமையில் மறு சீரமைப்பை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்து இந்த இரு நிறுவனங்களும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
தத்தமது சொந்த ஆலோசனையை உள்வாங்கக்கூடிய இடங்களுக்கும் தமது கைத்தொழில் உள்சார் கட்டமைப்புக்கும் மற்றும் பூகோள அரசியல் நலன் சார்ந்த கூட்டாளிகளுக்கும் இந்த உதவிகள் சென்றடைவதிலும் பார்க்க வறுமை ஒழிப்புக்காக உதவி எங்கு? யாருக்கு? தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அதனை வழங்க வேண்டுமென அந்தக் கூட்டறிக்கையில் வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உதவிகள் சுற்றிச் சுழன்று உதவி வழங்கும் நாடுகளுக்கு சென்று சேர்வதில் மோசமான குற்றவாளிகளாக அமெரிக்காவும் இத்தாலியும் இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த நாடுகளின் உதவியில் 70 சதவீதமானவை அந்த நாடுகளின் கம்பனிகளையே சென்றடைகின்றன.
` தங்களின் தாராளத்தன்மையை விளம்பரப்படுத்திக்கொண்டு ஒரு கையால் கொடுத்து மறு கரத்தால் எடுப்பதே இந்த நடவடிக்கையெனவும் மற்றும் செயற்றிறனின்மையால் வருடமொன்று 7 பில்லியன் டொலர் விநியோகச் செலவு ஏற்படுவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதேவேளை, உதவி பெறும் நாடுகள் மீது நடைமுறைச் சாத்தியமற்ற நிபந்தனைகளை சர்வதேச நிதி நிறுவனங்கள் விதிப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழு நடவடிக்கைகளையும் அரச நிர்வாக சிக்கலுக்குள் பிணைக்கும் நிலமை உள்ளதாகவும் அறிக்கையில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெடுபிடி யுத்தம் நிலவிய காலகட்டத்தில் உதவி வழங்கும் நாடுகள் தமது உதவியை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தின. இப்போது, அந்த முறைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மிகவும் சிக்கல் நிறைந்ததாக உதவி வழங்கும் நடைமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன. ஊக்குவிப்புகள், உதவியில் தங்கியிருக்கும் நாடுகள், உள்நாட்டு ஆற்றலை உதாசீனம் செய்தல், ஒரு கையால் தடுத்து மறு கரத்தால் உதவுதல் போன்றதாக உதவி வழங்கும் முறைமைகள் இப்போது மாற்றம் கண்டிருக்கின்றன.
குறித்த ஒரு நாட்டின் அபிவிருத்தித் திட்டம் வெற்றியளிக்கிறதோ இல்லையா தங்கள் நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளிக்க வேண்டுமென்ற தன்மையே உதவி வழங்கும் நாடுகளிடம் காணப்படுகிறது.
மேலும், உதவி பெறும் நாடுகளின் உள்ளூர் விநியோக முறைமைகளை அடிக்கடி மீறிச் செயற்படும் தன்மையும் இந்த உதவி வழங்கும் அமைப்புகளிடம் காணப்படுகின்றன. இதன் மூலம் தமது சொந்தக் காலில் அந்த நாடுகளில் நிற்க முடியாத நிலைமையையும் இவை ஏற்படுத்தி விடுகின்றன.
உதவி வழங்கும் முறைமையில் காணப்படும் பாரிய சவால்கள் இவையாகும். வெளிப்படைத்தன்மை, பதிலளிக்கும் கடப்பாடு என்பன இந்த முறைமையில் ஏற்படுத்தப்பட வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
Thinakural
|
|
|
| பசுமாட்டு சிறுநீரில் "ஷேவிங் லோசன்"தயாரிப்பு |
|
Posted by: Vaanampaadi - 03-02-2005, 06:49 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/2-3-2005/02cow.jpg' border='0' alt='user posted image'>
பசுமாட்டு சிறுநீரில் "ஷேவிங் லோசன்"தயாரிப்பு: பா.ஜ.க. அலுவலகத்தில் விற்பனை
பசு மாட்டின் பால், தயிர், வெண்ணை, சிறுநீர், சாணம் ஆகிய ஐந்தும் "பஞ்சகவ்யம்" என்று அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அவற்றை முக்கிய நோய்களை தீர்க்கும் மருந்து, மாத்திரை, லோசன்களாக தயாரித்து பா.ஜ.க. விற்கத் தொடங்கி உள்ளது. இதற்கென டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஒரு தனிக்கடை திறக்கப் பட்டுள்ளது. இதில் பசுமாட்டு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் வகை வகையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கேன்சர், வழுக்கை தலை, மனநோய், மாதவிலக்கு கோளாறு போன்றவற்றை தீர்க்கவும் பசுமாட்டு மருந்து வைத்துள்ளனர்.
பசுமாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட லோசன் வைத்துள்ளனர். இந்த லோசன் முகச்சவரம் செய்தபிறகு பயன்படுத்தக்கூடியது. இந்த லோசன் வந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிடுவதாக கடைவைத்து இருக்கும் மனோஜ்குமார் கூறினார். அவர் கடையில் பசுமாட்டுப் பொருட்களில் இருந்து தயாராகும் டூத்-பேஸ்ட், சோப், சிவப்பழகு கிரீம்கள் போன்றவையும் விறுவிறுப்பாக விற்பனை ஆகின்றன. "கிராமத் தொழிலை மேம்படுத்த உற்சாகமூட்ட இந்த பசு மாட்டுப் பொருள் மருந்துக்கடை திறக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சித்தார்த்சிங் கூறினார்.
Maalaimalar
|
|
|
| இந்தோனேஷியாவை ஆட்டும் மூட நம்பிக்கைகள் ! |
|
Posted by: Vaanampaadi - 03-02-2005, 06:32 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
மார்ச் 02, 2005
இந்தோனேஷியாவை ஆட்டும் மூட நம்பிக்கைகள் !
பஞ்சார்பன்டி: (இந்தோனேஷியா)
இந்தோனேஷியாவிலுள்ள பாலி பகுதியில் திடீரென சில கோவில்களில் சிறு சிறு அடையாளக் குறியீடுகள் தோன்றியதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுனாமி போல ஏதும் அசம்பாவிதம் நேருமோ என்று பொதுமக்கள் மத்தியில் பீதி பரவியுள்ளது.
கடந்த டிசம்பர் 26ந்தேதி உலகையே உலுக்கிய சுனாமி பீதியிலிருந்து இந்தோனேஷிய மக்கள் இன்னும் மீளவில்லை. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.
அடுத்த சுனாமி எப்போது வருமோ என்ற அச்சத்தில் தான் இங்குள்ள மக்கள் இப்போதும் உள்ளனர்.
இதற்கிடையே இங்கு பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நில நடுக்கம் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரழிவுகளால் இங்கு தற்போது மக்களிடையே மூட நம்பிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.
இங்குள்ள பாலி பகுதியில் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் சில கோவில்களில் வெள்ளை நிறத்தில் சிறு சிறு கோடுகள் தோன்றியுள்ளன.
முதலில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பல கோவில்களில் இதுபோன்ற வெள்ளை நிற குறியீடுகள் தோன்றத் தொடங்கியதால் பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
சாக்பீசால் போடப்பட்டுள்ள இந்தக் குறியீடுகளை யாரோ விஷமிகள் தான் போட்டிருக்க வேண்டும் என போலீசார் கூறினாலும், மீண்டும் ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தான் இது என்று மக்களிடையே 'கிலி'யை பரப்பிவிட்டு வருகின்றனர் சிலர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் திடீர் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாம். நாய்களும் வித்தியாசமாக ஊளையிட்டதாம்.
இவற்றையெல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்து பார்த்த இப்பகுதி மக்கள், ஏதோ அபாயத்துக்கான அறிகுறி தான் இது என்று முடிவு செய்து விட்டனர்.
இதனால் சிலர் இங்குள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
Thatstamil
|
|
|
| தந்தையரை கண்டுபிடிக்க மரபணுப்பரீசோதனை |
|
Posted by: வியாசன் - 03-02-2005, 03:53 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (2)
|
 |
நான்கு தாபரிப்பு வழக்குகளில் மரபணு பரிசோதனைக்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவு!
பிள்ளைகளுக்கான ஏழு தாபரிப்பு வழக்குகளில் நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தந்தையரை சரியான முறையில் அடையாளம் காண்பதற்காக மரபணு பரிசோதனைக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் மூலமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நான்கு வௌ;வேறு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட நான்கு பெண்களும் திருமணமாகாமலேயே தாயாராகியுள்ளனர்.
தமது குழந்தைகளுக்கான தந்தையர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு ஆண்களும் இதுவரையில் திருமணமாகாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஆண்களே தந்தையாராவர் என தெரிவித்துள்ள இப்பெண்கள்ää தமது குழந்தைகளுக்குரிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைப் பெறுவதற்காக வழங்கப்பட வேண்டிய விபரங்களில் குழந்தையின் தந்தையார் யார் என்பதை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்க முடியவில்லை என்றும்ää குறிப்பிட்ட ஆண்களே தமது குழந்தைகளின் தந்தையர் என தெரிவித்து அக்குழந்தைகளுக்குரிய தாபரிப்பு செலவை அவர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்கும்படியும் தமது வழக்கு விண்ணப்பத்தில் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
தங்களுக்கும் இந்தப் பெண்கள்ää குழந்தைகளுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென இவர்கள் நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் இந்த குழந்தைகளுக்கான தந்தையாராக அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்;சாட்டிலிருந்து விடுபடுவதற்கு மரபணு பரிசோதனைக்கு உள்ளாகுவதே ஏற்ற வழியாகும் என நீதிமன்றம் தெரிவித்ததையடுத்துää சந்தேக நபர்கள் நால்வரும் மரபணு ஆய்வு பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று சம்பந்தப்பட்ட நான்கு பெண்களும் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்துää வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு ஜெனடிக்ஸ் டெக் என்ற நிறுவனத்தைச்; சேர்ந்த மரபணு பரிசோதனை நிபுணர் டாக்டர் திருமதி மாயா குணசேகர இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆண்கள்ää பெண்கள் மூன்று குழந்தைகள் ஆகியோர் மீது மரபணு பரிசோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொழும்பு நகரம் பரிச்;சயமில்லாத பட்டணம் என்பதனால்ää வவுனியா சட்ட உதவி மன்றத்தைச்; சேர்ந்த சட்டத்தரணி சுதர்சனை டாக்டர் மாயா குணசேகரவிடம் அழைத்துச்; சென்று ஆஜர் செய்வதற்காக வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் நியமித்துள்ளார்.
இவர்கள் மீதான மரபணு பரிசோதனையின் முடிவுகள் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இந்தப் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கொன்றிற்கு 9 ஆயிரம் ரூபா கட்டணமாகச்; செலுத்தவேண்டும் என்றும் டாக்டர் மாயா குணசேகர வவுனியா நீதிமன்றத்திற்கு அறிவித்தள்ளார்.
ஏனைய நான்கு தாபரிப்பு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட ஆண்கள் தங்களுக்கு மரபணு பரிசோதனையில் நம்பிக்கையில்லை என தெரிவித்துää அதற்கு உடன்பட மறுத்துள்ளதன் காரணமாக அவர்கள் தொடர்பான வழக்கில் உண்மை நிலைமையைக் கண்டறிவதற்காக மரபணு பரிசோதனையை மேற்கொள்ள முடியாதுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டபழம்
நன்றி புதினம்
|
|
|
| சர்வசதேசம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது... |
|
Posted by: வியாசன் - 03-02-2005, 12:43 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ஆசிரியர் தலையங்கம்
சர்வசதேசம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது...
சுனாமி ஆழிப் பேரனர்த்தமானது இலங்கையின் கரை யோரப் பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்வை நிர்மூலமாக்கிஇ எண்ணிப்பார்க்கவே முடியாத அளவுக்கு பன்முகப் பாதிப்புக் களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை - இலங்கையின் அரசி யலிலும் அது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.சுனாமி அழிவுகளை அரசியல் உள்நோக்கத்துடன் பயன் படுத்தும் வகையில் தீவிரமாக செயற்பட்ட அரசு அதற்காக கையாண்ட மூலோபாயத் தவறுகள் காரணமாக அது எதிர் பார்த்ததற்கு மாறான பல விளைவுகளை எதிர்கொள்ள வேண் டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இயற்கை ஏற்படுத்திய அழிவுகளுக்கு பெரிய அளவில் இரை யாகி நிற்கும் வடக்கு - கிழக்கு தமிழர் வாழ்விடப் பிரதேசங் களில்இ அத்தியாவசிய புனர்வாழ்வு மற்றும் நிவாரணம் வழங்கல் பணிகளில் காட்டிய மாற்றாந்தாய் அணுகுமுறையும் தமிழர் பகுதிகளுக்கு நேரடியாகக் கிடைக்கக் கூடியதான சர்வதேச நிவாரண உதவிகளை தடுக்க கையாண்ட வழிமுறைகள் - குறிப் பாக நிவாரணப் பணிகளை படைத் தரப்பிடம் ஒப்படைத்த தந்திரோபாய உத்தி - அரசினதும்இ ஜனாதிபதியினதும் பேரின வாத குணாம்சத்தை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்திவிட்ட தென்றே கூறவேண்டும்.
ஆரம்பத்தில் இத்தாலிய அரசாங்கம் ஒரு தொகுதி நிவா ரணப் பொருட்களையும்இ அதனை வழங்குவதற்கான இராஜ தந்திரிகளையும் மனிதநேய அக்கறையுடனும் உடனுதவும் மனோபவத்துடனும் சுனாமியினால் மிகவும் மோசமாகப் பாதிக் கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்க ளுக்கு அனுப்பியதையே மிகவும் குறுகிய மனிதாபிமானமற்ற - கலாசாரமற்ற - தன்மையில் அரசும் அதன் பிரதான பங்காளிக் கட்சியினரான ஜே.வி.பியினரும் கண்டித்த விதமானது தமிழர் பகுதிகளுக்கு எவரும் நேரடியாக மனிதாபிமான உதவிக ளையோ வேறு அத்தியாவசிய உதவிகளையோ வழங்குவதை சகித்துக்கொள்ளமுடியாத அவர்களின் குரூர மனத்தையே வெளிப்படுத்தியது.
எல்லாவற்றிலும் உச்சமான பேரினவாத நடவடிக்கையாக அமைந்தது - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கொபிஅனான் அவர்களை சுனாமியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வட பகுதிக்கு - அங்கு சுனாமி ஏற்படுத்திய அழிவு அனர்த்தங்களை நேரில் சென்று பார்வையிட ஜனாதி பதி அர்த்தமற்ற காரணங்களைக் கூறி தடுத்தமையே ஆகும். இப்போது பாதிக்கபட்ட மக்கள் பாதுகாப்புத்தேடி ஒதுங்கி யுள்ள நலன்புரி நிலையங்களை தமதுவசம் - தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கைகளும்இ அதனையடுத்து அச்சம் காரணமாக அந்த நிலையங்களை விட்டு அவல நிலையில் வெளியேறி அந்தரப்பட்டுஇ அச்சப்பட்டு நிற்கும் பரிதாபத்திற்குரிய வடக்கு - கிழக்கு வாழ் அப்பாவிப் பொதுமக்களின் நிலையும்இ இலங்கை அரசுமீதான சகல விதமான நம்பிக்கையையும் இழக்க வைத்துள்ளதென்றால் அது மிகை யில்லை.
இந்த நிலையில் இந்த காருண்யமற்றதும்இ ஏற்கனவே நிவா ரணப் பணிகளை சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட அடுத்த சில மணித்துளிகளுள் ஆரம்பித்த மனிதநேய அமைப்புகளின் சேவை களைப் புறந்தள்ளும் தன்மை கொண்டதுமான அரச படை களின் நலன்புரி நிலையங்களை தம்வசமாக்கி நிர்வாகத்தைப் பொறுப்பெடுக்கும் நடவடிக்கையின் நியாயமற்ற செயற்பாடுகளை இப்போது சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது என்றே தோன்றுகின்றது.
இலங்கை அரசு ஏற்கனவே சமாதானம் தொடர்பான முயற் சிகளில் காட்டும் பாசாங்குத் தனம் - சர்வதேச சமாதான விரும்பிகளால் நன்கு உணரப்பட்ட நிலையில் சுனாமி அனர்த் தங்களையும்இ அரசியல் இலாப நோக்குடன் கையாளும் அதன் போக்கையும் மௌனமாக ஆனால் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே உள்ளது என்பதை இவ்வாரம் வெளியான பிரபல மான சர்வதேச சஞ்சிகையான நியூஸ் வீக் ஆங்கில ஏடு தெரி வித்துள்ள செய்தி மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
இலங்கை அரசாங்கம் விரும்புகின்றதோஇ இல்லையோ இன் றைய சூழலை கவனிக்கும்போதுஇ சர்வதேச நாடுகள்இ தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உறவுகளை மேற்கொள்ளும் புதிய அனுகூலமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும்இ விடுத லைப் புலிகளை தடைசெய்துள்ள நாடுகளும்கூட தற்போது அவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயன்று வருவ தாகவும் - எழுதியுள்ள விடயமானது இலங்கை அரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தியே அல்ல.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப் பின் பிரதிநிதிகள் - தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர் என்பதை உறுதிசெய்துள்ள சுனாமி நிவாரணப் பணிகளை கையாளும் அமெரிக்க அதிகாரிகள் - விடுதலைப் புலிகள் தமது மனிதநேயப் பணிகளை தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளமை விடுதலைப் புலிகளுடன் இணங்கி பணி யாற்ற முனையும் அவர்களின் உள்நோக்கை வெளிப்படுத்துவ தாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்கப் படைகள் இலங்கை வருவதை தாம் எதிர்க்கவில்லையென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்கை யில்இ சர்வதேச மட்டத்திலான விடுதலைப் புலிகள் குறித்த இரு தசாப்தகால அரசின் பொய்ப்பிரசாரங்கள் பிசுபிசுத்துப் போகத் தொடங்கியுள்ளதென்பதை உணரக்கூடியதாகவுள்ளது.
சுனாமி அனர்த்தப் பரபரப்பில் சமாதானம் குறித்த விடயங் கள் ஓய்ந்துவிட்டதுபோல தோன்றினாலும் அரசு நினைப் பதைப் போன்று அது சர்வதேசத்தால் மறுக்கப்பட்டு போகும் விடயமாக இருக்கப்போவதில்லை. சமாதானம் குறித்த விடயம் மீண்டும் எழுச்சிகொள்ளும் போதுஇ அரசின் இன்றைய நேர்மையற்ற அரசியல் யுக்திகள் யாவும் அதற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தப் போவதை வரலாறு பதிவு செய்யக் காத்திருக்கிறது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.
சுட்டபழம்
நன்றி ஈழநாடு
|
|
|
|