![]() |
|
தந்தையரை கண்டுபிடிக்க மரபணுப்பரீசோதனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தந்தையரை கண்டுபிடிக்க மரபணுப்பரீசோதனை (/showthread.php?tid=4923) |
தந்தையரை கண்டுபிடிக்க மரபணுப்பரீசோதனை - வியாசன் - 03-02-2005 நான்கு தாபரிப்பு வழக்குகளில் மரபணு பரிசோதனைக்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவு! பிள்ளைகளுக்கான ஏழு தாபரிப்பு வழக்குகளில் நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தந்தையரை சரியான முறையில் அடையாளம் காண்பதற்காக மரபணு பரிசோதனைக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். சட்டத்தரணிகள் மூலமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நான்கு வௌ;வேறு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட நான்கு பெண்களும் திருமணமாகாமலேயே தாயாராகியுள்ளனர். தமது குழந்தைகளுக்கான தந்தையர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு ஆண்களும் இதுவரையில் திருமணமாகாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஆண்களே தந்தையாராவர் என தெரிவித்துள்ள இப்பெண்கள்ää தமது குழந்தைகளுக்குரிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தைப் பெறுவதற்காக வழங்கப்பட வேண்டிய விபரங்களில் குழந்தையின் தந்தையார் யார் என்பதை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்க முடியவில்லை என்றும்ää குறிப்பிட்ட ஆண்களே தமது குழந்தைகளின் தந்தையர் என தெரிவித்து அக்குழந்தைகளுக்குரிய தாபரிப்பு செலவை அவர்களிடமிருந்து பெற்றுக் கொடுக்கும்படியும் தமது வழக்கு விண்ணப்பத்தில் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர். தங்களுக்கும் இந்தப் பெண்கள்ää குழந்தைகளுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையென இவர்கள் நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். ஆயினும் இந்த குழந்தைகளுக்கான தந்தையாராக அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்;சாட்டிலிருந்து விடுபடுவதற்கு மரபணு பரிசோதனைக்கு உள்ளாகுவதே ஏற்ற வழியாகும் என நீதிமன்றம் தெரிவித்ததையடுத்துää சந்தேக நபர்கள் நால்வரும் மரபணு ஆய்வு பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சம்பந்தப்பட்ட நான்கு பெண்களும் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்துää வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு ஜெனடிக்ஸ் டெக் என்ற நிறுவனத்தைச்; சேர்ந்த மரபணு பரிசோதனை நிபுணர் டாக்டர் திருமதி மாயா குணசேகர இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆண்கள்ää பெண்கள் மூன்று குழந்தைகள் ஆகியோர் மீது மரபணு பரிசோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்த நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொழும்பு நகரம் பரிச்;சயமில்லாத பட்டணம் என்பதனால்ää வவுனியா சட்ட உதவி மன்றத்தைச்; சேர்ந்த சட்டத்தரணி சுதர்சனை டாக்டர் மாயா குணசேகரவிடம் அழைத்துச்; சென்று ஆஜர் செய்வதற்காக வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் நியமித்துள்ளார். இவர்கள் மீதான மரபணு பரிசோதனையின் முடிவுகள் இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இந்தப் பரிசோதனைக்காக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கொன்றிற்கு 9 ஆயிரம் ரூபா கட்டணமாகச்; செலுத்தவேண்டும் என்றும் டாக்டர் மாயா குணசேகர வவுனியா நீதிமன்றத்திற்கு அறிவித்தள்ளார். ஏனைய நான்கு தாபரிப்பு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட ஆண்கள் தங்களுக்கு மரபணு பரிசோதனையில் நம்பிக்கையில்லை என தெரிவித்துää அதற்கு உடன்பட மறுத்துள்ளதன் காரணமாக அவர்கள் தொடர்பான வழக்கில் உண்மை நிலைமையைக் கண்டறிவதற்காக மரபணு பரிசோதனையை மேற்கொள்ள முடியாதுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டபழம் நன்றி புதினம் - eelapirean - 03-02-2005 ஏற்கனவே DNA TEST செய்த BABY81 இப்போ தான் GOOD MORNING AMERICA இல் காட்டினார்கள்.தங்கள் பிள்ளையை BABY 81என்று அழைப்பதை வரும்பவில்லையாம் - shobana - 03-02-2005 அது சரிதானே எல்லாப்பெற்றோரும் பிள்ளைகளுக்கு தாங்கள் வைத்த பெயரைத்தான் மற்றவர்கள் கூப்பிடவேண்டும் என்று விரும்புவினம்.. ஆனால் அது ஆண் பிள்ளையாக இருந்தால் வர்ற மருமகள் மட்டும் விதிவிலக்கு... |