Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சர்வசதேசம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது...
#1
ஆசிரியர் தலையங்கம்

சர்வசதேசம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது...

சுனாமி ஆழிப் பேரனர்த்தமானது இலங்கையின் கரை யோரப் பகுதி வாழ் மக்களின் இயல்பு வாழ்வை நிர்மூலமாக்கிஇ எண்ணிப்பார்க்கவே முடியாத அளவுக்கு பன்முகப் பாதிப்புக் களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை - இலங்கையின் அரசி யலிலும் அது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.சுனாமி அழிவுகளை அரசியல் உள்நோக்கத்துடன் பயன் படுத்தும் வகையில் தீவிரமாக செயற்பட்ட அரசு அதற்காக கையாண்ட மூலோபாயத் தவறுகள் காரணமாக அது எதிர் பார்த்ததற்கு மாறான பல விளைவுகளை எதிர்கொள்ள வேண் டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

இயற்கை ஏற்படுத்திய அழிவுகளுக்கு பெரிய அளவில் இரை யாகி நிற்கும் வடக்கு - கிழக்கு தமிழர் வாழ்விடப் பிரதேசங் களில்இ அத்தியாவசிய புனர்வாழ்வு மற்றும் நிவாரணம் வழங்கல் பணிகளில் காட்டிய மாற்றாந்தாய் அணுகுமுறையும் தமிழர் பகுதிகளுக்கு நேரடியாகக் கிடைக்கக் கூடியதான சர்வதேச நிவாரண உதவிகளை தடுக்க கையாண்ட வழிமுறைகள் - குறிப் பாக நிவாரணப் பணிகளை படைத் தரப்பிடம் ஒப்படைத்த தந்திரோபாய உத்தி - அரசினதும்இ ஜனாதிபதியினதும் பேரின வாத குணாம்சத்தை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்திவிட்ட தென்றே கூறவேண்டும்.

ஆரம்பத்தில் இத்தாலிய அரசாங்கம் ஒரு தொகுதி நிவா ரணப் பொருட்களையும்இ அதனை வழங்குவதற்கான இராஜ தந்திரிகளையும் மனிதநேய அக்கறையுடனும் உடனுதவும் மனோபவத்துடனும் சுனாமியினால் மிகவும் மோசமாகப் பாதிக் கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்க ளுக்கு அனுப்பியதையே மிகவும் குறுகிய மனிதாபிமானமற்ற - கலாசாரமற்ற - தன்மையில் அரசும் அதன் பிரதான பங்காளிக் கட்சியினரான ஜே.வி.பியினரும் கண்டித்த விதமானது தமிழர் பகுதிகளுக்கு எவரும் நேரடியாக மனிதாபிமான உதவிக ளையோ வேறு அத்தியாவசிய உதவிகளையோ வழங்குவதை சகித்துக்கொள்ளமுடியாத அவர்களின் குரூர மனத்தையே வெளிப்படுத்தியது.

எல்லாவற்றிலும் உச்சமான பேரினவாத நடவடிக்கையாக அமைந்தது - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கொபிஅனான் அவர்களை சுனாமியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வட பகுதிக்கு - அங்கு சுனாமி ஏற்படுத்திய அழிவு அனர்த்தங்களை நேரில் சென்று பார்வையிட ஜனாதி பதி அர்த்தமற்ற காரணங்களைக் கூறி தடுத்தமையே ஆகும். இப்போது பாதிக்கபட்ட மக்கள் பாதுகாப்புத்தேடி ஒதுங்கி யுள்ள நலன்புரி நிலையங்களை தமதுவசம் - தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கைகளும்இ அதனையடுத்து அச்சம் காரணமாக அந்த நிலையங்களை விட்டு அவல நிலையில் வெளியேறி அந்தரப்பட்டுஇ அச்சப்பட்டு நிற்கும் பரிதாபத்திற்குரிய வடக்கு - கிழக்கு வாழ் அப்பாவிப் பொதுமக்களின் நிலையும்இ இலங்கை அரசுமீதான சகல விதமான நம்பிக்கையையும் இழக்க வைத்துள்ளதென்றால் அது மிகை யில்லை.

இந்த நிலையில் இந்த காருண்யமற்றதும்இ ஏற்கனவே நிவா ரணப் பணிகளை சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட அடுத்த சில மணித்துளிகளுள் ஆரம்பித்த மனிதநேய அமைப்புகளின் சேவை களைப் புறந்தள்ளும் தன்மை கொண்டதுமான அரச படை களின் நலன்புரி நிலையங்களை தம்வசமாக்கி நிர்வாகத்தைப் பொறுப்பெடுக்கும் நடவடிக்கையின் நியாயமற்ற செயற்பாடுகளை இப்போது சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது என்றே தோன்றுகின்றது.

இலங்கை அரசு ஏற்கனவே சமாதானம் தொடர்பான முயற் சிகளில் காட்டும் பாசாங்குத் தனம் - சர்வதேச சமாதான விரும்பிகளால் நன்கு உணரப்பட்ட நிலையில் சுனாமி அனர்த் தங்களையும்இ அரசியல் இலாப நோக்குடன் கையாளும் அதன் போக்கையும் மௌனமாக ஆனால் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே உள்ளது என்பதை இவ்வாரம் வெளியான பிரபல மான சர்வதேச சஞ்சிகையான நியூஸ் வீக் ஆங்கில ஏடு தெரி வித்துள்ள செய்தி மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.

இலங்கை அரசாங்கம் விரும்புகின்றதோஇ இல்லையோ இன் றைய சூழலை கவனிக்கும்போதுஇ சர்வதேச நாடுகள்இ தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உறவுகளை மேற்கொள்ளும் புதிய அனுகூலமான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும்இ விடுத லைப் புலிகளை தடைசெய்துள்ள நாடுகளும்கூட தற்போது அவர்களுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயன்று வருவ தாகவும் - எழுதியுள்ள விடயமானது இலங்கை அரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தியே அல்ல.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப் பின் பிரதிநிதிகள் - தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர் என்பதை உறுதிசெய்துள்ள சுனாமி நிவாரணப் பணிகளை கையாளும் அமெரிக்க அதிகாரிகள் - விடுதலைப் புலிகள் தமது மனிதநேயப் பணிகளை தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளமை விடுதலைப் புலிகளுடன் இணங்கி பணி யாற்ற முனையும் அவர்களின் உள்நோக்கை வெளிப்படுத்துவ தாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்கப் படைகள் இலங்கை வருவதை தாம் எதிர்க்கவில்லையென விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதையும் கவனத்தில் கொள்கை யில்இ சர்வதேச மட்டத்திலான விடுதலைப் புலிகள் குறித்த இரு தசாப்தகால அரசின் பொய்ப்பிரசாரங்கள் பிசுபிசுத்துப் போகத் தொடங்கியுள்ளதென்பதை உணரக்கூடியதாகவுள்ளது.

சுனாமி அனர்த்தப் பரபரப்பில் சமாதானம் குறித்த விடயங் கள் ஓய்ந்துவிட்டதுபோல தோன்றினாலும் அரசு நினைப் பதைப் போன்று அது சர்வதேசத்தால் மறுக்கப்பட்டு போகும் விடயமாக இருக்கப்போவதில்லை. சமாதானம் குறித்த விடயம் மீண்டும் எழுச்சிகொள்ளும் போதுஇ அரசின் இன்றைய நேர்மையற்ற அரசியல் யுக்திகள் யாவும் அதற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தப் போவதை வரலாறு பதிவு செய்யக் காத்திருக்கிறது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.

சுட்டபழம்

நன்றி ஈழநாடு
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)