Yarl Forum
இந்தோனேஷியாவை ஆட்டும் மூட நம்பிக்கைகள் ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இந்தோனேஷியாவை ஆட்டும் மூட நம்பிக்கைகள் ! (/showthread.php?tid=4922)



இந்தோனேஷியாவை ஆட்டும் மூட நம்பிக்கைகள் ! - Vaanampaadi - 03-02-2005

மார்ச் 02, 2005

இந்தோனேஷியாவை ஆட்டும் மூட நம்பிக்கைகள் !

பஞ்சார்பன்டி: (இந்தோனேஷியா)

இந்தோனேஷியாவிலுள்ள பாலி பகுதியில் திடீரென சில கோவில்களில் சிறு சிறு அடையாளக் குறியீடுகள் தோன்றியதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் சுனாமி போல ஏதும் அசம்பாவிதம் நேருமோ என்று பொதுமக்கள் மத்தியில் பீதி பரவியுள்ளது.


கடந்த டிசம்பர் 26ந்தேதி உலகையே உலுக்கிய சுனாமி பீதியிலிருந்து இந்தோனேஷிய மக்கள் இன்னும் மீளவில்லை. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர்.

அடுத்த சுனாமி எப்போது வருமோ என்ற அச்சத்தில் தான் இங்குள்ள மக்கள் இப்போதும் உள்ளனர்.

இதற்கிடையே இங்கு பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நில நடுக்கம் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

அடிக்கடி ஏற்படும் இயற்கை பேரழிவுகளால் இங்கு தற்போது மக்களிடையே மூட நம்பிக்கைகளும் அதிகரித்து வருகின்றன.

இங்குள்ள பாலி பகுதியில் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் சில கோவில்களில் வெள்ளை நிறத்தில் சிறு சிறு கோடுகள் தோன்றியுள்ளன.

முதலில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்லச்செல்ல பல கோவில்களில் இதுபோன்ற வெள்ளை நிற குறியீடுகள் தோன்றத் தொடங்கியதால் பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

சாக்பீசால் போடப்பட்டுள்ள இந்தக் குறியீடுகளை யாரோ விஷமிகள் தான் போட்டிருக்க வேண்டும் என போலீசார் கூறினாலும், மீண்டும் ஏதேனும் இயற்கை சீற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தான் இது என்று மக்களிடையே 'கிலி'யை பரப்பிவிட்டு வருகின்றனர் சிலர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் திடீர் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாம். நாய்களும் வித்தியாசமாக ஊளையிட்டதாம்.

இவற்றையெல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்து பார்த்த இப்பகுதி மக்கள், ஏதோ அபாயத்துக்கான அறிகுறி தான் இது என்று முடிவு செய்து விட்டனர்.

இதனால் சிலர் இங்குள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளை நடத்தி வருகின்றனர்.


Thatstamil


- hari - 03-03-2005

கோயில் வருமானத்தை அதிகரிக்க செய்யும் சுத்துமாத்துக்களில் இதுவும் ஒன்று!