Yarl Forum
அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை: ஜனாதிபதி குற - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை: ஜனாதிபதி குற (/showthread.php?tid=4916)



அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை: ஜனாதிபதி குற - வியாசன் - 03-02-2005

சுனாமி நிவாரண நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை: ஜனாதிபதி குற்றச்சாட்டு

அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகளில் 90 வீதமானோர் ஊழல்களுடன் செயற்படுவதாகவும்ää மீதி 10 வீதமானோரே உரிய முறையில் மக்களுக்கு சேவையாற்றி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று மகரகமவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

ஆசிய அபிவிருத்தி உலக வங்கி ஆகியன 16000 கோடி ரூபாவை வழங்கவுள்ளன. அவை சுனாமியின் பின்னர் நாட்டை புனரமைப்பதற்காக செலவிடப்படவுள்ளன.

இந்த நிலையில் கடற்கரையில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் கட்டிடங்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் திட்டத்தில் மாற்றங்கள் இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவராவது தகர்க்க நினைத்தால் அது இயலாத காரியமாகவே முடியும் என அவர் குறிப்பிட்டார். சுனாமியின் பின்னர் நிவாரண நடவடிக்கைகளில் அரசாங்க அதிகாரிகள் உரிய முறையில் செயற்படவில்லை என்றும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஏனைய கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர். இதில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான - அதேவேளை தமிழ் மக்களுக்காக போராடிய கட்சிகளும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஐக்க்pய தேசிய கட்சி ஒருபோதும் மக்கள் சார்பில் திட்டங்களை முன்வைத்ததில்லை எனக் குறிப்பிட்ட அவர் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் சிங்கள மொழிக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பாடுபட்டதாகவும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் யுத்தத்;தின் மூலமே பிரச்சினையை தீர்க்க முடியும் என நினைத்தவர்கள் இன்று ஜனநாயகத்துக்குத் திரும்பியுள்ளமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுட்டபழம்
நன்றி புதினம்


- MEERA - 03-03-2005

உவவே இப்படிச் சொன்னா சனங்களின்ர நிலமை என்ன மாதிரி...?