Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 574 online users.
» 0 Member(s) | 572 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,260
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  ஆதியைத் தேடி ஆழியில் சயனம்
Posted by: Mathan - 03-02-2005, 12:38 PM - Forum: புலம் - Replies (23)

ஆதியைத் தேடி ஆழியில் சயனம் என்ற தலைப்பில் சோழியான் எழுதிய கதையை யாழ் முற்றம் பகுதியில் படித்தேன். அதில் புலத்தில் தத்து கொடுக்கப்பட்டு வாழும் தமிழ் பெண் ஒருவரின் மனநிலையும் அந்த பெண்ணின் நடவடிக்கைகளை பார்த்து கலாச்சார அதிர்ச்சிக்கு உள்ளாகும் புலம் பெயர்ந்த ஆணின் மனநிலையும் கூறப்பட்டிருக்கின்றது. அதன் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதோ கதை http://www.yarl.com/articles.php?articleId=478

கதையை தந்த சோழியானுக்கு பாராட்டுக்கள், புலப் பின்ணணியில் நிறைய கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

Print this item

  வட கிழக்குக்கென வந்த 5 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு
Posted by: வியாசன் - 03-02-2005, 12:20 PM - Forum: அரசியல் / பொருளாதாரம் - No Replies

வட கிழக்குக்கென வந்த 5 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு 10 ஆயிரம் டொலர் சுங்கவரி


கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களின் பயன்பாட்டிற்காக அமெரிக்க தேவாலயமொன்றில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அனுப்பப்பட்ட ஐந்து நீர் சுத்திகரிப்பு கருவிகளுக்கும் பத்தாயிரம் டொலர்களை வரியாகச் செலுத்திய பின்பே எடுத்துச் செல்ல இலங்கை சுங்கத் திணைக்களம் அனுமதியளித்திருக்கிறது.இந்த நீர் சுத்திகரிப்பு கருவிகள் முதலில் தென் பகுதிக்கு அனுப்பப்பட்ட போதும்ää பல்வேறு முயற்சிகளின் பின்பே அவை மீண்டும்ää கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு பெருந்தொகை வரி அறவிடப்பட்டபின் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது

அமெரிக்காவின் மேரிலாண்டிலுள்ள தேவாலயமொன்று ஐந்து நீர் சுத்திகரிப்பு கருவிகளை வடக்கு - கிழக்கு மக்களின் பாவனைக்கென தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அனுப்பி வைத்தது.எனினும்ää நிவாரணப் பொருட்களுக்கும் வரி செலுத்த வேண்டுமெனக் கூறி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முதல் இந்த நீர் சுத்திகரிப்புக் கருவிகளை சுங்க அதிகாரிகள் கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைத்தனர்.இந்த நிலையில் வரியை செலுத்தி கருவிகளை எடுத்துச் செல்வதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழக அதிகாரிகள் துறைமுகத்திற்குச் சென்ற போதுää சமூக சேவைகள் அமைச்சினூடாக ஐந்து கருவிகளும் தென் பகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும் இது பற்றி அமெரிக்க தேவாலயத்திற்கு அறிவிக்கப்படவே அவர்களும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு அந்தக் கருவிகளை கண்டுபிடித்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.எனினும் வரிப்பணமாக சுமார் பத்து இலட்சம் ரூபாவை (10ää000 டொலர்) செலுத்திய பின்பே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் ஐந்து சுத்திகரிப்பு கருவிகளும் ஒப்படைக்கப்பட்டன.பல இலட்சம் ரூபா பெறுமதியான இந்தக் கருவிகளை தேவாலயம் அன்பளிப்பாக வழங்கிய அதேநேரம் எதுவித கட்டணத்தையும் அறவிடாது அவற்றை ஹபெரல் எக்ஸ்பிரஸ்' மற்றும் கதே பசுபிக் விமான நிறுவனம் கொழும்புக்கு கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சுட்டபழம்
நன்றி தமிழோசை

Print this item

  தமிழ் வழிக் கல்வி, அவமானமா ?
Posted by: Vaanampaadi - 03-02-2005, 11:52 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (2)

தமிழ் வழிக் கல்வி, அவமானமா ?

பூங்குழலி

அண்மையில் புதுவையில் பிசியோதெரபி கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மாணவி தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தில், இனி யாரும் தமிழ் வழிக் கல்வியில் படிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது.


அந்த மாணவி தமிழ் வழிக் கல்வியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். மேற்படிப்பிற்காகப் பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்தது முதல், அவரையும், அவரைப் போல் தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களையும் துறைத் தலைவர் பலவாறு அவமானப்படுத்தியுள்ளார்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை மட்டம் தட்டுவதும், அவமானப்படுத்துவதும் தொடர்ந்துள்ளது. பல சமயங்களில் அதைப் பொறுக்க முடியாமல் இம் மாணவி வினா எழுப்பியுள்ளார். மருத்துவமனைத் தலைவரிடம் முறையிட்டுள்ளார். அதனால் தனிப்பட்ட முறையிலும் இம்மாணவி மீது துறைத் தலைவருக்குக் கோபம் எழுந்துள்ளது.

அவர்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏதேனும் ஒரு நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்த குறிப்பிட்ட மாணவிக்கு மிக அரிய நோய் ஒன்றைக் கொடுத்து ஆய்வு செய்ய துறைத் தலைவர் பணித்துள்ளார். 4 மாதங்கள் சிரமப்பட்டுப், பல ஆயிரங்கள் செலவு செய்து அந்த ஆய்வை படித்து அறிக்கையை ஒப்படைக்க இருந்த நேரத்தில், துறைத் தலைவர், அந்த அறிக்கையை ஒதுக்கிவிட்டு, புதிதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளுமாறு சொல்லியிருக்கிறார்.

ஒரு ஆய்வு செய்வதற்குக் கிட்டத்தட்ட 4 முதல் 5 ஆயிரங்கள் வரை செலவாகும் நிலையில், மீண்டும் புதிய ஆய்வை மேற்கொள்ளும் பொருளாதார நிலையில் அம் மாணவி இல்லை. எனினும், உடன்பயிலும் மாணவிகளின் உதவியோடு அதையும் சிரமப்பட்டு படித்து ஆய்வறிக்கையை ஒப்படைத்த நேரத்தில், துறைத் தலைவர் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அவரது ஆய்வு ஒப்புதல் தரப்படாத நிலையில், அந்த ஆண்டு அவர் தேறுவது என்பது இயலாத ஒன்று.

இதனால் மனமொடிந்த அந்த மாணவி தனது விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தப் பின்னணியை முழுவதும் அறிந்த மாணவிகள் வெகுண்டு எழுந்து போராட்டத்தில் குதித்தனர். அதன் விளைவாகத் துறைத் தலைவரும், மருத்துவமனைத் தலைவரும் மாற்றப்பட்டனர். இந்த பிரச்சினை இத்துடன் முடிந்ததா என்றால் நிச்சயமாக இல்லை.

இங்கு ஒரு மாணவி தனது உயிரைக் கொடுத்து உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால் தமிழகமெங்கும் பல கல்லூகளின் நிலை இதுதான்.

தமிழ் வழிக் கல்வியில் பயின்று பின்னர்க் கல்லூரியில் ஆங்கில வழிக் கல்வி மூலம் தொழில் கல்வி பயில வரும் மாணவர்களின் நிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இழிவாகவே இருக்கிறது.

உடன் பயிலும் மாணவர்களின் ஒதுக்குதல் ஒரு புறம், ஆசியர்களின் அவமானங்கள் மறுபுறம்.. இதற்கிடையே எத்தனை தொல்லைப்பட்டுப் படித்தாலும், புரியாத பாடங்களைக் கேட்டுத் தெளிவு பெற, உதவ யாரும் முன் வராத நிலையில், பாதியில் படிப்பை விட்டுச் செல்லும் மாணவர்கள் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

தமிழ் வழிக் கல்வி குறித்து மிகுந்த ஆர்வத்துடன் பேசும் நாம் இதற்கு என்ன செய்யப் போகிறோம்.?

புரிந்தாலும் புரியாவிட்டாலும் ஆங்கில வழியில் படிப்பதே கௌரவம் என்ற மனப்பாங்கில் இருந்து வரும் தலைமுறைகளை மீட்டாக வேண்டிய பெரும் பணி நம் முன் இருக்கிறது.

மிக நீண்ட காலமாகத் தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் வைக்கும் கோரிக்கைகள் இரண்டு..

1. தொழில் கல்விகளும் தமிழ் வழியில் வரவேண்டும்.
2. தமிழ் வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் ஒழிய, இது போன்று இளைஞர்களின் வாழ்வு வீணாவதைத் தடுக்க இயலாது.

பூங்குழலி

Thatstamil

Print this item

  நட்சத்திர கலை நிகழ்ச்சி 60 நடிகர்-நடிகைகள் பங்கேற்பு
Posted by: Vaanampaadi - 03-02-2005, 11:08 AM - Forum: சினிமா - Replies (6)

துபாய்-அபுதாபியில் 2 நட்சத்திர கலை நிகழ்ச்சி 60 நடிகர்-நடிகைகள் பங்கேற்பு


சென்னை, மார்ச். 2- துபாய்-அபுதாபியில் 2 நட்சத்திர கலை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 60 நடிகர்- நடிகைகள் பங்கேற்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில் ஏற்கனவே இருந்த விஜயகாந்த் தலைமையிலான அணியே மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளனர். சரத்குமார் பொதுச் செயலாளராகவும், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன் உப தலைவர்களாகவும், கே.என்.காளை பொருளாளராகவும் தேர்வு பெற்றுள்ளனர். செயற்குழுவில் சத்யராஜ், பிரபு, ராதாரவி, குஷ்பு, மனோரமா, ரேவதி போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நடிகர் சங்கத்திற்கு 5 அடுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக சங்க புதிய நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் விழா நடந்தது. அதன் மூலம் திரண்ட நிதியை கொண்டு நடிகர் சங்க கடன் அடைக்கப்பட்டது. தற்போது நடக்க உள்ள கலை நிகழ்ச்சியை கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இம்முறை நட்சத்திர கலை விழா துபாய் மற்றும் அபுதாபியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் துபாய், அபுதாபியில் இந்த 2 கலை நிகழ்ச்சிகளும் நடத்த எண்ணி உள்ளனர். அதற்கான அரங்கம் இன்னும் முடிவு செய்யப்படாததால் நடிகர், நடிகைகளுக்கும் இன்னும் தேதி பற்றி உறுதியாக தெரிவிக்கவில்லை. இம்முறை 60க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் செல்வார்கள் என்று தெரிகிறது. மேலும் சென்னையிலும் ஒரு நட்சத்திர கலை விழா நடத்தலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

கடந்த முறை சிங்கப்பூர், மலேசியாவில் நடத்திய நிகழ்ச்சிபோலவே துபாய், அபுதாபியில் நடக்க உள்ள கலை நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நட்சத்திர கலை குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக என்னென்ன புதிய நிகழ்ச்சிகளை இதில் வழங்குவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வெளிநாடு கலை நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பிறகு நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.

தினகரன்

Print this item

  பனிக்கட்டி இசைக்கச்சேரி
Posted by: Vaanampaadi - 03-02-2005, 11:07 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

பனிக்கட்டி இசைக்கச்சேரி
<img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/02/oddnews/C154_8ms-dkn.jpg' border='0' alt='user posted image'>

மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் டிம் லின்கார்ட். பனிக்கட்டியில் தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு வித் தியாசமான இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் டிம் லின்கார்ட். இவர் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் பனிக் கட்டியில் தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு வித் தியாசமான இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக கிதார் டிரம்ஸ் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் பனிக்கட்டியில தயாரிக்கப்பட்டன. ஆனால் டிம் லின்கார்ட் போன்று மற்ற இசைக் கலைஞர்களால் பனிக்கட்டி கருவிகளை வாசிக்க தெரியவில்லை. இதையடுத்து கடைசிநேரத்தில் அவர் தனது கச்சேரியை ரத்து செய்துவிட்டார். படத்தில் பனிக்கட்டியில் தயாரிக்கப்பட்ட கிதார் கருவியை காணலாம்.

தினகரன்

Print this item

  செயலகம் நோக்கி இன்று பேரணி!
Posted by: Vaanampaadi - 03-02-2005, 11:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பல்கலைக்கழக முன்றிலில் இருந்து
செயலகம் நோக்கி இன்று பேரணி!
பல்லாயிரக் கணக்கான மக்கள் அணி திரள்வர்
போரை ஓய்வுக்குக் கொண்டுவந்த புரிந் துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்றாண்டுகள் கடந்தபின்னரும் அதன் பயன்கள் தமிழ்மக்களுக்கு எட்டாமல் இருப் பதைச் சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் மாபெரும் மக்கள் பேரணி இன்று யாழ்ப் பாணத்தில் நடைபெறுகின்றது.
யாழ்.பல்கலைக்கழக முன்றிலில் இருந்து முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாக வுள்ள இந்தப் பேரணி, அங்கிருந்து நகர்ந்து யாழ். அரச செயலகம் வரை செல்லும்.
குடாநாட்டின் நாற்திசைகளிலும் இருந்தும் பேரணியில் கலந்துகொள்ள வருவோர் குறிக் கப்பட்ட உப வீதிகளூடாக வந்து பிரதான பேர ணியுடன் இணைந்துகொள்வர்.
இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகள் அனைத் தும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகப் பொது அமைப்புக்களின் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.
பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக் கள் அணிதிரள்வர் என்று எதிர்பார்க்கப்படு வதால் அவர்கள் பேரணி முடிந்ததும் சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு வாகன வசதி கள் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக் களின் ஒன்றியம் தெரிவிக்கிறது.
பல்கலைக்கழக முன்றிலில் ஆரம்பமாகும் பேரணி அங்கிருந்து பலாலி வீதி வழியாகக் கந்தர் மடம் சந்திக்கு வரும். பின்னர் அங்கி ருந்து அரசடி வீதி ஊடாக நல்லூர் பின் வீதியை அடைந்து கோவில் வீதியூடாக நகரும். அப் போது நல்லூரில் அமைந்திருக்கும் அகதிக ளுக்கான ஐ.நா.தூதரகத்தின் வதிவிடப் பிரதி நிதியிடம் மகஜர் கையளிக்கப்படும். தொடந்து கோவில் வீதிவழியே செல்லும் பேரணி அந்த வீதியில் உள்ள போர் நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் அலுவலகத்தில் தரிக்கும். பேரணி ஏற்பாட்டாளர்களால் அங்கு வைத்து கண்கா ணிப்புக் குழுவின் பிரதிநிதிகளிடம் மகஜர் ஒப் படைக்கப்படும். பேரணி செல்லும் வழியில் செஞ்சிலுவைச் சங்க சர்வதேசக் குழுவின் பணிமனையிலும் மகஜர் கையளிக்க ஏற்பாடாகி உள்ளது.
இறுதியாகப் பேரணி யாழ்.அரச செயல கத்தை அடைந்ததும் அரசுக்கான மகஜர் அங்கு வைத்து அரச அதிபரிடம் கையளிக்கப்படும். பேர ணியில் கலந்துகொண்டோர் சார்பில் கோரிக் கைகளை விளக்கும் பேரணிப் பிரகட னம் அங்கு வாசிக்கப்படும்.
இன்றைய பேரணியில் சகலதரப்பினரை யும் பங்கு கொள்ளுமாறு பொது அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாண வர் அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் விடு விக்கப்பட்டிருக்கின்றன.
பேரணி நடைபெறும் வேளையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படும். வர்த்த கர்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொள்வர் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித் திருக்கின்றன.
பொதுப் போக்குவரத்து சேவைகள் வழ மைபோல இடம்பெறும். பேரணியில் கலந்து கொள்வோர் நலன் கருதி விசேடவாகன சேவைகளும் இடம்பெறும்.

உதயன்

Print this item

  கண்காணிப்புக் குழுவினர் வவுனியாவில் அத்துமீறல்!
Posted by: Vaanampaadi - 03-02-2005, 11:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கண்காணிப்புக் குழுவினர்
வவுனியாவில் அத்துமீறல்!
வவுனியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அலுவலகத்திற்குள் புகுந்து சோதனையிடுவதாகக் கூறி நேற்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அத்து மீறி நடந்துகொண்டனர் என்று புலிகள் குற் றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட விடுத லைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பா ளர் ஞானவேல் தெரிவித்ததாவது-
நேற்று மாலை 2 மணியளவில் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வவு னியா மாவட்ட இணைப்பாளரும், அவருடைய உதவியாளரும் என்னைச் சந்திக்க வந்திருந்த னர். இன்று (நேற்று) மக்கள் சந்திப்பு தினம் என்பதால் நான் மக்களை சந்தித்துக்கொண்டி ருந்தேன். அவ்வேளையில் அங்கு வந்த போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் எங்களு டைய அனுமதி எதையும் பெற்றுக்கொள்ளாது போராளிகள் தங்குமிடத்துக்கு - மாவட்ட அரசி யல்துறை அலுவலகத்தின் பிற்பகுதிக்கு - அத்து மீறிச் சென்றனர்.
இச் செயற்பாடு ஓர் அநாகரிகமான நடவ டிக்கை. அப்போது எமது மொழிபெயர்ப்பாளர், இதுபோராளிகளின் தங்குமிடம். இவர்கள் சொந் தத் தேவைக்காகப் பயன்படுத்துமிடம். நீங்கள் அலுவலகத்தின்முன்பகுதியிலேயே பேசலாம் என்று கூறினார்.
அவ்வேளை, போர்நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் வவுனியா மாவட்ட இணைப்பாளர், இல்லை நாங்கள் பேசவந்த விடயம் முக் கியமானது. இந்த இடத்தில் வைத்தே அத னைப் பேசவேண்டும் - என்று கூறி வாக்கு வாதப்பட்டுள்ளார்.
பின்னர் நான் அவ்விடத்திற்கு விரைந்து உரிய முறைப்படி பேச்சுக்களை நடத்த ஒழுங்கு செய்யப்பட்ட இடத்திற்குச் செல்வோம் என்று கூறி னேன்.
ஆனால், அதற்கு அவர்கள் தாங்கள் எங்கு போவதற்கும் உரிமை உள்ளவர்கள், எந்த இடத் தில் வைத்தும் கதைக்கலாம் என்று என்னோடு வாதிட்டனர்.
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் எந்த நோக்கத்துடன் வந்தார்கள் என்பதும் - ஏன் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என் பதும் - எமக்குத் தெரியவில்லை.
அவர்களுடைய செயற்பாட்டை அநாகரிக மான - அத்துமீறிய - நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகின்றோம். - என்றார்.
இதேவேளை - இச்சம்பவம் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமைப் பரிசோதனை செய்யவில்லை. எனினும், அது தொடர்பான பேச்சுக்களை நடத்தவே எமது பிரதிநிதிகள் அங்கு சென்றிருந்தார்கள் - என்றார்.

உதயன்

Print this item

  புலிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் உடனடியாக பேச்சை
Posted by: வியாசன் - 03-02-2005, 10:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

புலிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் உடனடியாக பேச்சை ஆரம்பிக்க வேண்டும்'

பதுளை கருத்தரங்கில் கேட்டவை

விடுதலைப்புலிகள் அமைப்பினர் முன்வைத்திருக்கும் இடைக்கால தன்னாட்சி முறைமை தொடர்பான பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களில் பெரும்பாலானவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதனவாகும். ஆனாலும், ஒருசில விடயங்கள் நாட்டிற்கு நன்மை பயப்பனவையாக உள்ளன. ஆகவே, அரசு புலிகளின் கோரிக்கையினை ஏற்று, உடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும், பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பினரின் விட்டுக்கொடுப்புகளுக்கமைய நாட்டைப் பாதிக்கும் விடயங்களை அகற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்".

இவ்வாறு றுகுணு பல்கலைக்கழக விரிவுரையாளர் உபுல் அபேரட்ன, சமாதானம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பாக, ஊவா மாகாண தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், பதுளையில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபைத் தலைவரும், ஊவா பிரஜைகள் அபிவிருத்தி நிலையத் தலைவருமான மானெல் ரட்னாயக்கவின் தலைமையில் பதுளை கூல் ஸ்பிறிங் ரெஸ்ட் விடுதியில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற இச்செயலமர்வில் விரிவுரையாளர் உபுல் அபேரட்ன தொடர்ந்து கூறியதாவது;

"சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமானால், பேச்சுவார்த்தைகள் உடன் ஆரம்பிக்கப்பட்டு, சுமுகநிலை ஏற்படுத்தப்பட வேண்டும். புலிகள் அமைப்பினர் சமர்ப்பித்திருக்கும், இடைக்கால தன்னாட்சி முறை பிரேரணை யோசனை மட்டுமே. அது குறித்து தீர்மானிக்க வேண்டியது பேச்சுவார்த்தையின் போதாகும். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருக்கும் கருணா அம்மான், தற்போது எப்பக்கத்தில் இருந்தாலும் அவரது பலம் பெரியனவாக இல்லை. புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மான் பிரிந்திருந்த போதிலும் புலிகள் அமைப்பிற்கு அது பேரிழப்பாக இல்லை. குறிப்பாக பிரபாகரன் இல்லாதிருந்தாலும் கூட புலிகள் அமைப்பினரின் செயற்பாடுகளில் எத்தகைய பின்னடைவுகளும் ஏற்படுவதற்கில்லை.

ஆனால், வட - கிழக்குப் பகுதிகளில் பிரதேசவாதம் தலைதூக்கியிருப்பதை எம்மால் உணரமுடிகின்றது.

எமது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இனப்பிரச்சினை தீர்விற்கான முன்னேற்றகரமானதும் சிறப்பானதுமான அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான பிரேரணையொன்றை சமர்ப்பித்த போது, அவற்றை கிழித்தெறிந்து தீமூட்டி எரித்த சம்பவம் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்டது. தீமூட்டி எரிக்கப்பட்ட அப்பிரேரணையை புலிகள் அமைப்பினரும் ஏற்றிருந்தனர். இத்தகைய துரதிர்ஷ்ட நடவடிக்கைகளினால், இனப்பிரச்சினை தீர்வை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. இதேநிலையில், ஐ.தே.க. முன்னெடுத்த இனப்பிரச்சினை தீர்வுப் பிரேரணைகளை ஜனாதிபதி தலைமையிலான கட்சி நிராகரித்தது. இதுபோன்ற அரசியல் கலாசாரமே எமது நாட்டிலிருந்து வருகின்றது. இவ்விரு தரப்பினரிடையே உணர்வு ரீதியிலான ஏகோபித்த நிலைப்பாடு உருவாகு மட்டும் நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதென்பது கடினமேயாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியிலும் தமிழ்ப் பிரதேசங்களும், தமிழ் மக்களும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இவ்வரசின் மூலம் அமைக்கப்பட்டுவரும் 10 ஆயிரம் குளம் நிர்மாணிப்பு வேலைத்திட்டத்தின் போதும், தமிழ்ப் பிரதேசங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அரசின் வளப் பகிர்விலும் தமிழ் மக்களுக்கு பாரபட்சமே காட்டப்பட்டு வருகின்றது. கடல்கோள் அனர்த்தத்தின் போதும் தமிழ்ப் பகுதிகளின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் சென்றடையவில்லை. கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களின் நன்மை கருதி வெளிநாடுகளிடமிருந்து கிடைத்த உதவி நிதி மூலம் கொழும்புப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவில்லை.

மேலும், கிராமப்புற மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்படுகின்றது. வங்கியில் வைப்பிலிடும் அச் சேமிப்பு நிதி கொழும்பு அபிவிருத்திக்கும், பெரும் வர்த்தகர்களுக்கு கடன் வழங்கவுமே பயன்படுத்தப்படுகின்றது.

அத்துடன், எமது பகுதிகளிலிருந்து தேர்தலில் வெற்றியீட்டும் மக்கள் பிரதிநிதிகளும், தமது வெற்றிக்கு காரணமான மக்களிடமிருந்து கொழும்பு பகுதிக்கு இடம்பெயர்ந்து வசித்து வரும் நிலையைக் கண்டுவருகின்றோம்.

எமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் அமைப்புச் சட்டங்கள் அனைத்துமே மக்கள் மீது திணிக்கப்பட்டவைகளேயாகும். 1948 இல் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் பிறிதொரு நாட்டின் விருப்பிற்கமைய எமக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதாகும். அடுத்து 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் அமைப்புச்சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இத்திருத்தச் சட்டம் தமிழ் மக்களை பாதிக்கக்கூடியதாகவே அமைந்திருந்தது. அடுத்து 1978 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் அரசியல் திருத்தச் சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது. 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட அமைப்பு, இந்நாட்டின் ஏகாதிபத்திய நிலைக்கான அத்திவாரத்தை பதித்திருந்தது. 1978 இல் அரசியல் திருத்தச் சட்டமூலம் அந்த ஏகாதிபத்திய நிலையை, உறுதிப்படுத்தியதாகவே அமைந்திருந்தது.

கொண்டுவரப்பட்ட இச்சட்ட மூலங்களினால் பிரிவினை ஏற்பட வழிவகுத்தது. அத்துடன், இச்சட்டங்களில் பௌத்த கலாசாரத்தை மேன்மைப்படுத்தும் வகையில், சரத்துகள் இடம்பெற்றிருந்தன. இத்தகைய சரத்துகள், நாட்டின் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்த வழிவகுத்தன.

மேலும், ஒற்றையாட்சி முறை குறித்தும், நாம் மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது. எதிர்காலங்களில் "செனட்சபை" முறைமையும் எம் நாட்டில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இச்சபை மூலம் இனமுரண்பாடுகளைத் தவிர்க்கக்கூடியதாக இருக்கும். எது எப்படியிருந்த போதிலும், சிறுபான்மையின சமூகத்திற்கு முக்கிய இடமளிக்கும் வகையில் பெரும்பான்மை இன சமூகத் தலைவர்கள் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். எவ்வகையிலும், சிறுபான்மையின சமூகத்தினரை ஓரம் கட்டும் நிலையை இயன்றவரையில் தவிர்க்க வேண்டும்.

மொத்தத்தில் மக்களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும் அரசியல் நிலைமையே எமது நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்".


--------------------------------------------------------------------------------

சுட்டபழம் நன்றி தினக்குரல்

Print this item

  அண்ணைத்தமிழ்
Posted by: sayanthan - 03-02-2005, 04:46 AM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

அண்மையில் புலிகளின் குரலில் என்ணண்றே.. அண்ணேன்றேன்.. என்ற பாடலைக் கேட்டேன். அதைப் பாடியது சிறுவனா அல்லது யார் என்ற கேள்வி கொஞ்ச நாளாக இருந்து வந்தது. இப்போது அதைப் பாடியவர் யாரென்று தெரிந்து விட்டது..
அவர் மாலதி.. மன்மதராசா புகழ் மாலதியே தான்.. அட்டகாசமாய் இருக்கிறது பாடல்.. அண்ணைத்தமிழ் என்ற ஒலிநாடாவில் இடம் பெற்றிருக்கிறதாம் இந்த பாடல்.. கேட்டீர்களா?

Print this item

  மனங்கவரும் சூரிய உதய கோப்பி தயாரிப்பு........
Posted by: KULAKADDAN - 03-01-2005, 10:09 PM - Forum: சமையல் - Replies (144)

படம் மூலமான விளக்கம் மட்டும். :wink:
1,<img src='http://img26.exs.cx/img26/6259/cof11vz.jpg' border='0' alt='user posted image'>
2.<img src='http://img26.exs.cx/img26/2818/cof22fj.jpg' border='0' alt='user posted image'>
3.<img src='http://img26.exs.cx/img26/4338/cof39fx.jpg' border='0' alt='user posted image'>
4.<img src='http://img26.exs.cx/img26/728/cof48wn.jpg' border='0' alt='user posted image'>

5.<img src='http://img26.exs.cx/img26/5240/cof57og.jpg' border='0' alt='user posted image'>

6.<img src='http://img20.exs.cx/img20/5121/cof60om.jpg' border='0' alt='user posted image'>
7.<img src='http://img26.exs.cx/img26/1811/cof78xl.jpg' border='0' alt='user posted image'>
8.<img src='http://img20.exs.cx/img20/9907/cof83au.jpg' border='0' alt='user posted image'>
9.<img src='http://img20.exs.cx/img20/2945/cof94zj.jpg' border='0' alt='user posted image'>
10.<img src='http://img20.exs.cx/img20/7991/cof101gz.jpg' border='0' alt='user posted image'>

Print this item