![]() |
|
வட கிழக்குக்கென வந்த 5 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: வட கிழக்குக்கென வந்த 5 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு (/showthread.php?tid=4926) |
வட கிழக்குக்கென வந்த 5 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு - வியாசன் - 03-02-2005 வட கிழக்குக்கென வந்த 5 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு 10 ஆயிரம் டொலர் சுங்கவரி கடல்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களின் பயன்பாட்டிற்காக அமெரிக்க தேவாலயமொன்றில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அனுப்பப்பட்ட ஐந்து நீர் சுத்திகரிப்பு கருவிகளுக்கும் பத்தாயிரம் டொலர்களை வரியாகச் செலுத்திய பின்பே எடுத்துச் செல்ல இலங்கை சுங்கத் திணைக்களம் அனுமதியளித்திருக்கிறது.இந்த நீர் சுத்திகரிப்பு கருவிகள் முதலில் தென் பகுதிக்கு அனுப்பப்பட்ட போதும்ää பல்வேறு முயற்சிகளின் பின்பே அவை மீண்டும்ää கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு பெருந்தொகை வரி அறவிடப்பட்டபின் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது அமெரிக்காவின் மேரிலாண்டிலுள்ள தேவாலயமொன்று ஐந்து நீர் சுத்திகரிப்பு கருவிகளை வடக்கு - கிழக்கு மக்களின் பாவனைக்கென தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு அனுப்பி வைத்தது.எனினும்ää நிவாரணப் பொருட்களுக்கும் வரி செலுத்த வேண்டுமெனக் கூறி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முதல் இந்த நீர் சுத்திகரிப்புக் கருவிகளை சுங்க அதிகாரிகள் கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைத்தனர்.இந்த நிலையில் வரியை செலுத்தி கருவிகளை எடுத்துச் செல்வதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழக அதிகாரிகள் துறைமுகத்திற்குச் சென்ற போதுää சமூக சேவைகள் அமைச்சினூடாக ஐந்து கருவிகளும் தென் பகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் இது பற்றி அமெரிக்க தேவாலயத்திற்கு அறிவிக்கப்படவே அவர்களும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு அந்தக் கருவிகளை கண்டுபிடித்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.எனினும் வரிப்பணமாக சுமார் பத்து இலட்சம் ரூபாவை (10ää000 டொலர்) செலுத்திய பின்பே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் ஐந்து சுத்திகரிப்பு கருவிகளும் ஒப்படைக்கப்பட்டன.பல இலட்சம் ரூபா பெறுமதியான இந்தக் கருவிகளை தேவாலயம் அன்பளிப்பாக வழங்கிய அதேநேரம் எதுவித கட்டணத்தையும் அறவிடாது அவற்றை ஹபெரல் எக்ஸ்பிரஸ்' மற்றும் கதே பசுபிக் விமான நிறுவனம் கொழும்புக்கு கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. சுட்டபழம் நன்றி தமிழோசை |