| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 578 online users. » 0 Member(s) | 575 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,644
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,260
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,555
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| பாடசாலை மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்களுக்கு |
|
Posted by: Vaanampaadi - 02-28-2005, 02:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பாடசாலை மாணவிகளை கேலி செய்யும் இளைஞர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பணிப்பு
28.2.2005
வவுனியாவில் குறிப்பிட்ட முக்கிய சந்திகளில் கூடி நின்று பெண்கள் பாடசாலை மாணவிகளைக் கேலி செய்வதிலும் வீணான தொல்லை கொடுக்கும் செயல்களிலும் ஈடுபடும் இளைஞர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவைக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா தலைமையகப் பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.
தெருக்களில் காரணமின்றி வெறுமனே கூடி நின்று இயல்பு நிலைமைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட சந்திகளில் இளைஞர்கள் செயற்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் நீதிமன்றத்திற்குச் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நீதிபதி பொலிஸாருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அண்மையில் வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் இரு இளைஞர் குழுக்களிடையே நடைபெற்ற மோதலின் போது கத்திகள் பொல்லுகள் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டதனால் இளைஞர்கள் காயங்களுக்கு உள்ளாகிய இந்தச் சம்பவத்தையடுத்து நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் 6 பேர் உட்பட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் இவர்களில் 6 பேர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதையும் அவர்களின் பல்கலைக்கழக கல்வியில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதையும் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பண்டாரிகுளம் பாடசாலை மாணவர் குழுவிற்கும்இளைஞர் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் பாரதூரமான காயங்களுக்கு இளைஞர்கள் இலக்காகியுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் கொழும்பு வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நீதிபதி 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோஷ்டிகளுக்கிடையிலான தெருச்சண்டைகள் தொடர்ந்து செல்வதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வகையான தெருச் சண்டைகளையும் குழு மோதல்களையும் மேலும் அனுமதிக்க முடியாது என்பதால் சந்தேக நபர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் தெருக்களில் கூடி நின்று குழுக்களாகச் செயற்பட்டு வருவதுடன் தங்களுக்குள் மோதிக் கொள்வதையும் அநாவசியமான செயல்களில் ஈடுபட்டு அமைதிக்கும் இயல்பு நிலைமைக்கும் பங்கம் விளைவிப்பதனால் சந்தேகத்திற்கு உரியவர்களைக் கைது செய்து விசாரணை செய்வதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் எனவும் வவுனியா மாவட்ட நீதிபதி வவுனியா பொலி‑ஸாருக்குப் பணித்துள்ளார்.
|
|
|
| வெளிநாட்டுமோகத்தால் சீரழியும் இளைஞர்கள் |
|
Posted by: Vaanampaadi - 02-28-2005, 02:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வெளிநாட்டுமோகத்தால் சீரழியும் இளைஞர்கள்
வெளிநாட்டுமோகம் பிடித்து விமானம் ஏற்பவர்களும் வறுமையின் காரணமாக தொழில்தேடிச் செல்பவர்களும் எதிர்நோக்கும் அவலம் சொல்லில் அடங்காதவை.இவர்களில் சிலர் தாம் போகவேண்டிய இடத்திற்குச் சென்றுள்ளனர்.வேறு சிலர் உரிய இடத்திற்குச் செல்லாது வேறு இடங்களில் இறங்கி கடும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படுபவர்களே வேறு நாடுகளில் தரையிறக்கப்பட்டு அவை வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர்.ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்டு உரிய இடத்திற்குச் செல்ல முடியாமல் அவலப்பட்டு நாடு திரும்பிய அனுபவத்தையும் அங்கு மேலும் கஷ்டப்படுபவர்களை நேரில் கண்ட அனுபவங்களையும் பகிர்கின்றார்.
திருமலையைச் சேர்ந்த கந்தசாமி ஜெயசீலன்.-பிரித்தானியா கனடா பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்புவதாகக் கூறிய இலங்கை முகவர் என்னைப்போன்ற சிலரை விமானத்தில் ஏற்றனார்.தாய்லாந்தில்(பெங்கொங்)இறங்கியதும் விமான நிலையத்துக்கு வந்த முகவர் எங்களை அதை;துச்செல்கின்றார். பாங்கொக்கில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தார்.நல்ல உணவுப் பரிமாற்றம் வரவேற்பு என்பன வழங்கப்பட்டன.
இரண்டு வாரத்தினுள் அனுப்புவதாகக்கூறியதும் நாம் சந்தோசப் பட்டோம்.இரண்டு வாரம் முடிந்தபின்னர் ஹோட்டலிலிருந்து தமது பாதுகாப்பில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர்.அங்குபோன பிறகுதான் எம்மைப் போன்று ஏமாற்றப்பட்டவர்கள் பலர் அங்கு நிற்பதைக் காண முடிந்தது.ஒவ்வொரு அறையிலும் குறைந்தது ஏழு பேர் அடைக்கப்பட்டனர்.புதிதாக அந்த அறையில் விடப்பட்டவருடன் அடிக்கடி முகவர்கள் வந்து கதைப்பர்.இன்று நாளை விமானம் ஏற்றப்படும் என்ற ஆசை வார்த்தைகள் பேசுவர்.அவசரமாக அனுப்பமுடியும் அதற்கு ஆயிரத்து ஐந்நூறு(1500)ொலர் தயார்ப்படுத்தவேண்டும் எனவும் கூறுவர்.இதை நம்பி எப்படியும் ஆயிரத்து ஐந்நூறு டொலர் தயார் செய்து புறப்பட்டால் இறுதியில் மலேசியா கொரியா வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகளில் இறக்கிவிடப்படுகின்றனர்.அப்போது ஜெயில் வாழ்க்கை உட்பட மேலும் அவலம் தொடர்கின்றது.
யாங்கொங்கில் ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஏழுபேருக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கு "நுர்று வாத்"(இலங்கை ரூபா 235ஃஸ்ரீ)முகவர்களால் வழங்கப்படுகின்றது.இதில்தான் ஏழுபேரும் மூன்று வேளையும் சமாளிக்கவேண்டும். இப்பணம் ஒரு நாளைக்கு ஒருவருக்குக்கூட போதாது.காலையில் சாப்பிடாது மதியம் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதன் மீதியே இரவுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.இங்கு குடிதண்ணீர்கூட பத்து வாத் கொடுத்து (ஒரு வாத் 2.33சதம்)தான் குடிக்கவேண்டும்.அறை பத்து அடி அகலமும் 15அடி நீளமும் உடையது.இதில் படுக்கை அறை குளியல் அறை சமையலறை கழிப்பறை எல்லாம் அடங்கும்.ஏழு பேரில் நிலை எவ்வாறிருக்கும்?இது குளிரூட்டப்பட்ட அறை(யுஃஊசுழழஅ)னினும் ஒரு மணித்தியாலம் மாத்திரமே அது(யுஃஊ)அனுமதிக்கப்படும்.
எவரும் வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை. முன் கதவு பாவிக்க முடியாது. விஸா இருப்பவர் மாத்திரம் சந்தைக்குச் சென்றுவரமுடியும்.இங்கு தொலைபேசி இருந்தாலும் அதில் அழைப்பு எடுக்கவோ பேசவோ முடியாது.அதற்குரிய இலக்கமும் வழங்கப்படவில்லை.எந்தத் தொடர்பும் கையடக்கத்தொலைபேசி மூலம்தான்.விஸா இரண்டு மாதத்துக்குப்பிறகு காலாவதியாகிவிடும்.முகவர்கள் புதுப்பித்துக்கொடுக்கமாட்டார்கள்.அதனால் யாரும் பயத்தில் வீதியில் இறங்குவதில்லை.சிலர்தாம் அகதிகளாக இருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு என்.எச்.சி.என்.அலுவலகத்தில் முறையிட்டு புதுப்பிப்பதும் உண்டு.முகவர்களால் அழைத்துச்செல்லப்படுவபவர்களின் விஸா இரண்டு மாதங்களில் முடிவுறும் தறுவாயில் கடவுச்சீட்டை வாங்கிச் சென்றுவிடுவர்.இந்நிலையில் எமது பசியைப்போக்க அங்கிருக்கும் அம்மன் கோயிலை நாடுவதுமுண்டு.
இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லப்படுபவர்களிடம் குறிப்பிட்ட தொகைப்பணத்தையும் பெற்றுவிடுவார்கள்.தாய்லாந்தில் ஒரு தொகையையும் கூறிய நாட்டுக்குச்சென்றால் மீதியும் கொடுக்கவேண்டும்.உரிய நாட்டுக்கு அனுப்பப்படுவது அதிர்ஷ்டவசமான விடயம்.வேறுநாடுகளில் சிக்கித்தவிப்பதே அநேகமான உண்மை.மற்றும்படி சிறைவாழ்க்கைதான்.இவ்வாறு அவல வாழ்க்கையை அனுபவித்த வண்ணம் கடந்த இரண்டுவருடத்துக்கும் மேலாக 200பேர்வரை அங்குள்ளதாகத் தெரியவருகிறது.சில பெண்களும் இந்தக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.ஆறு ஆண்களுடன் ஒரு பெண்ணுமாக தனியறையில் காலம்தள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.தாயும் மகளும் என ஒரே குடும்பத்தவரும் இதற்கு ஆட்பட்டுள்ளனர்.
சில பெண்கள் கற்பையும் இழந்து நாடு திரும்பமுடியாமல் சீரழிந்து போவதாக நம்பப்படுகிறது.பாரிஸ் செல்ல எண்ணுபவர்களிடம் சுமார் 14இலட்சமும் லண்டன் செல்ல விரும்புபவர்களிடம் சுமார் 24லட்சமும் முகவர்களால் கோரப்படுகிறது.இந்த சீரழிந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டுவந்த ஜெயசீலன் ஒன்றரை வயது மகளின் தந்தை.இந்த வருடம் ஜூன் மாதம் 22ஆம் திகதி ஜேர்மன் செல்வதற்காக விமானம் ஏறினார்.பாங்கொங்கில் கிடைத்த அனுபவத்துடன் மற்றவர்கள் சொன்னதையும்கேட்டு சுத்துமாத்தைப் புரிந்துகொண்டவர்.விடாப்பிடியாக தாயகம் அனுப்பவேண்டும் என வற்புறுத்தி ஆகஸ்ட் மாதம் 28இல் இலங்கை திரும்பினார்.அதுவரை பட்ட அனுபவங்கள் அளப்பெரியது.
- மிதுஷன்
நன்றி:
வெப் தமிழன்
|
|
|
| சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த் |
|
Posted by: Vaanampaadi - 02-28-2005, 01:39 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த்
வர வர சினிமா மீது எனக்கு மோகம் குறைந்து கொண்டே வருகிறது என்கிறார் நடிகர் விஜயகாந்த்.
ஒரு வேளை தொடர் தோல்விகளால் இருக்குமோ என்று நாமெல்லாம் கரெக்ட்டாக சந்தேகப்பட்டால் அது தப்பு!.
அவருக்கு அரசியல் 'ஆஜை' வந்துவிட்டது. 24/7 நேரமும் அரசியல் கனவிலேயே லயிக்க ஆரம்பித்துவிட்டார் கேப்டன்.
இப்போது பரணில் இருந்து தனது கருப்பு ஜெர்க்கின், கிளவுஸை எல்லாம் தூசி தட்டி எடுத்து சிபிஐ அதிகாரி வேடத்தில் பேரரசு என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய்காந்த். வழக்கம்போல் இதிலும் அவருக்கு புதுமுகம் தான் ஹீரோயின். பெயர் தாமினி.
அவரோடு டூயட் பாடிக்கொண்டே மிச்ச மீதி நேரத்தில் தீவிரவாதிளை பந்தாடிக் கொண்டிருக்கும் விஜய்காந்த் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தனது அரசியல் பிரவேசத்துக்கு கிரஹப் பிரவேசம் நடத்துவார் பேசப்படும் நிலையில், ஊர் ஊராகச் சென்று ரசிகர்களை சந்தித்து குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் திருவண்ணாமலைக்கு சென்ர அவர், வழியில் வந்தவாசி பேருந்து நிலையத்தில் ரசிகர் மன்றக் கொடியை ஏற்றி வைத்து வேனில் இருந்தபடி ரசிகர்களிடையே பேசினார்.
அப்போது, எனக்கு வர வர சினிமா மீது மோகம் குறைந்து வருகிறது. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது நமது ரசிகர்களின் ஒற்றுமை தெரிய வருகிறது. இது நீடிக்க வேண்டும்.
நான் எப்போதுமே மனதில் பட்டதைத்தான் பேசுவேன், பேசுகிறேன். என்னை நம்பி வரும் ரசிகர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்.
நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும், நமக்குள் மோதல், பூசல் இருக்கக் கூடாது. கடந்த 50 வருடங்களாக தமிழக அரசியல்வாதிகள் தங்களது பைகளை மட்டுமே நிரப்பிக் கொண்டு வருகின்றனர். மக்களை அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.
எனது ரசிகர் மன்றக் கொடியில் உள்ள தீபம் புரட்சி தீபம், திருவண்ணாமலை கோவில் தீபம் போலத்தான் அதுவும் என்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பொது மக்களும் கூடியது குறிப்பிடத்தக்கது.
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/vijaykanth400.jpg' border='0' alt='user posted image'>
வந்தவாசிக்கு வரும் முன்பாக மும்னி, அம்மையப்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் ரசிகர் மன்றக் கொடிகளை விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.
பின்னர், ஆரணியில் அண்ணா சிலை அருகே வேனில் இருந்தபடி ரசிகர்களிடையே பேசிய விஜய்காந்த், உலகில் மொத்தமே இரண்டு ஜாதிகள்தான். ஒன்று ஏழை, இன்னொன்று பணக்காரன்.
இதைத் தவிர வேறு எந்த சாதியும் கிடையாது, இருக்கக் கூடாது, சாதியைப் பற்றிப் பேசுவதே தவறு என நினைப்பவன் நான். ஆனால் சிலரோ, சாதி வெறியைத் தூண்டி விட்டு, சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். (நம் நினைவுக்கு டாக்டர் ராமதாஸ் வருவது ஏனோ)
பெண் சிசுக் கொலையைத் தடுக்க வேண்டும், வரதட்சணையை ஒழிக்க வேண்டும். ஆண்கள் நினைத்தால் இவற்றை சாதிக்கலாம் என்று தெளிவாகவே பேசிக் கொண்டிருந்த விஜய்காந்த் திடீரென 'ரஜினி பாணி'க்கு மாறினார்.
மக்கள் ஆதரவும், கடவுள் ஆசியும் இருந்தால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். வர மாட்டேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. தப்பிச் செல்ல நான் நினைத்ததே இல்லை என்று ரஜினியை விடவும் 'தெளிவாகப்' பேசிவிட்டுப் போனார்.
விஜயகாந்த்தின் இந்த பயணத்தின்போது அவரது மனைவி, மைத்துனர் சுதீஷ், ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் ராமு வசந்தன் உள்ளிட்டோரும் சென்றனர்.
Thatstamil
படங்கள் நீக்கப்பட்டுள்ளன --யாழினி
|
|
|
| ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுக்கு மோசமான நடிகருக்கான விருது |
|
Posted by: Vaanampaadi - 02-28-2005, 01:32 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுக்கு
மோசமான நடிகருக்கான விருது
லாஸ் ஏஞ்சல்ஸ், பிப். 28-
மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது அமெரிக்க ஜனாதிபதி புஷ்சுக்கு வழங் கப்பட்டு உள்ளது. மைக்கேல் மூர் உருவாக்கிய ``பாரன்ஹீட் 9/11" என்ற செய்திப் படத்தில் புஷ் தோன்றினார்.
இதே படத்தில் நடித்ததற்காக நடிகை ஹல்லேபேரிக்கும் இதே விருது வழங்கப்பட்டது. 2002-ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற வர் ஹல்லேபேரி.
இந்தப்படத்தில் தோன்றிய ராணுவ மந்திரி டொனால்டு ரம்ஸ்பெல்டு நடிகை பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோருக்கு மோச மான துணை நடிகர்-நடிகை விருது வழங்கப்பட்டது.
ஜான்வில்சன் நிறுவிய கோல் டன் ராஸ்பெர்ரி விருது ஒவ் வொரு ஆண்டும் மோசமான நடிகர்களுக்காக வழங்கப்படு கிறது. ஆஸ்கார் விருது வழங்கு வதற்கு முதல் நாள் இந்த விருது வழங்கப்படுகிறது.
விருது பெற்றவர்களுக்கு `கோல்ப்' பந்து அளவிலான ராஸ்பெர்ரி தங்க வண்ணம் பூசப்பட்ட படச்சுருள் மீது இந்தப் பழம் வைக்கப்பட்டு இருக்கும். இதன் மதிப்பு 2 ஆயிரத்து 485 ரூபாய் ஆகும்.
Dailythanthi
|
|
|
| பொதுமன்னிப்பு சபை நிறுவனர் மரணம் |
|
Posted by: Vaanampaadi - 02-28-2005, 01:31 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பொதுமன்னிப்பு சபை நிறுவனர் மரணம்
லண்டன், பிப். 28-
பொது மன்னிப்பு சபையை (ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்) நிறுவியவரும் இங்கிலாந்து நாட்டு வக்கீலுமான பீட்டர் பெனன்சன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.
போர்ச்சுக்கீசிய மாணவர்கள் 2 பேரை ஜெயிலில் அடைத் ததை எதிர்த்து 1960-ம் ஆண்டு பொதுமன்னிப்பு சபையை அவர் தொடங்கினார்.
மனித உரிமைக்காகப் போராடி வரும் இந்த இயக்கத்துக்கு இப்போது உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள னர்.
இங்கிலாந்து முன்னாள் பிர தமர் திருமதி தாட்சர், ஈரானின் சுயதுல்லா கோமேனி சதாம் உசேன் ஆகியோரை இந்தச்சபை கடுமையாக விமர்சித்தது.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ் போர்டு நகரில் அவர் மரணம் அடைந்தார்.
dailythanthi
|
|
|
| உடல் நிலை மோசமானதன் எதிரொலியா? |
|
Posted by: Vaanampaadi - 02-28-2005, 01:30 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
26 ஆண்டுகளில் முதல் முறையாக போப் ஆண்டவருக்கு பதிலாக உதவியாளர் பிரார்த்தனை- உடல் நிலை மோசமானதன் எதிரொலியா?
ரோம், பிப். 28-
84 வயதான 2-ம் ஜான்பால், போப் ஆண்டவர் ஆனது முதல், கடந்த 26 ஆண்டுகளில் ஒரு முறைகூட தவறாமல் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டு வந்து இருக்கிறார்.
வெளிநாடுகளுக்குச் சென்ற போது கூட, அந்த அந்த இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
1981-ம் ஆண்டு மே மாதம் போப் ஆண்டவர் துப்பாக்கியால் சுடப்பட்டு சாவின் விளிம்பைத் தொட்ட 4-வது நாளில் கூட ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தபடி ரேடியோ மூலம் ஆசியுரை வழங்கினார்.
இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே ஒருமுறை ஆஸ்பத்திரியில் இருந்தபோதுகூட அவர் ஜன்னல் அருகே உட்கார்ந்து இருக்க, அவரது உதவியாளர் அவர் சார்பில் அருளுரையைப் படித்தார்.
நேற்று அவருக்குப் பதிலாக அவரது உதவியாளர் ஆர்ச் பிஷப் லியோனார்டோ சாண்ட்ரி புனித பீட்டர் சதுக்கத்தில் பிரார்த்தனை நடத்தினார். போப் ஆண்டவர் சார்பில் அருளுரை வழங்கினார்.
போப் ஆண்டவர் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே பிரார்த்தனையில் கலந்து கொள்வார் என்று வாடிகன் அறிவித்தது.
இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுவாசக் கோளாறை நீக்குவதற்காக தொண்டையில் ஆபரேஷன் நடந்ததால் அவரால் தற்காலிகமாகப் பேச முடியவில்லை. எனவே அவர் தன் அதிகாரத்தை உதவியாளரிடம் கொடுத்து இருக்கிறார். ஆஸ்பத்திரியில் உள்ள தன் அறை ஜன்னல் அருகேயும் பக்தர்களுக்கு காட்சி தரவும் மாட்டார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நேற்று ஜன்னல் அருகே நின்று பக்தர்களை ஆசீர்வாதம் வழங்கினார்.
போப் ஆண்டவரைத் தேர்ந்து எடுக்கும் உரிமை பெற்ற கார்டினால்களும், அரசியல்வாதிகளும் ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். அவர்கள் யாரும் போப் ஆண்டவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. போப் ஆண்டவரின் உதவியாளர்களையும், டாக்டர்களையும் மட்டுமே சந்தித்துப் பேச முடிந்தது.
போப் ஆண்டவர் உடல் தேறி வாடிகன் திரும்ப வேண்டும் என்று கோரி கத்தோலிக்க மக்கள் உலகம் முழுவதும் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள்.
போப் ஆண்டவர் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரியிலும் கத்தோலிக்க மாணவர்களும் பாதிரியார்களும் பிரார்த்தனை நடத்தினர்.
தொண்டையில் ஆபரேஷன் நடந்த 12 மணி நேரத்துக்குப் பிறகு போப் ஆண்டவர் காலை உணவு எடுத்துக் கொண்டார். இயந்திர உதவி இல்லாமல் சுவாசித்தார் என்று வாடிகன் தெரிவித்து உள்ளது.
போப் ஆண்டவரைப் போன்ற வயதானவர்களுக்கு ட்ராக் கியோடோமி (தொண்டை ஆபரேஷன்) செய்தால் நிமோனியா போன்ற விஷக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
10 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போப் ஆண்டவர் மேலும் சில வாரங்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும்.
உடல் நிலை மோசமானால் 2-ம் ஜான்பால் போப் ஆண்டவர் பதவியை ராஜினாமா செய்து விடுவாரா என்று சில பக்தர்கள் கேட்டபோது, அவர்தான் பொறுப்பில் இருக்கிறார். வாடிகன் எடுக்க வேண்டிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறார் என்று வாடிகன் அதிகாரிகள் கூறினர்.
Maalaimalar
|
|
|
| தமிழ்ப் பணி எது ? |
|
Posted by: Nitharsan - 02-28-2005, 09:02 AM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
தமிழ்ப்பணி என்பது பதனீரால் பனைவெல்லம் காய்ச்சுவது போன்றதா? என்று சுடுவினா எழுப்பினார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
யாரைப் பார்த்து என்றால், தமிழறிஞர்கள். தமிழரசியலார், கவிஞர்கள், இதழாளர்கள் போன்ற அனைவரையும் பார்த்து. தமிழறிஞர்கள் கூடி கம்பனையும், இளங்கோவையும் வள்ளுவரையும் போற்றிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
அரசியலார், தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! என்று கூட்டத்தில் முழங்கிவிட்டால் அது தமிழ்ப்பணியா ?
கவிஞர்கள் பெண்ணையும், பெணிணின் கண்ணையும்பாடி, கொஞ்சம் மரம் செடி கொடிகளைப் பாடி, பின்னர் ஏழையின் வயிற்றையும் பாடிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
பல மொழிகளைக் கலந்து, பெண்களின் ஆடைகளை நழுவவிட்ட, உதறிவிட்ட படங்களைப் போட்டு கோடி கோடியாகத் தினமும் இதழ்களை விற்றவிட்டால் அது தமிழ்ப்பணியா?
மடற்குழு ஒன்றைத் தொடங்கி அதில் தமிழிலும் எழுதிவிட்டால் அது தமிழ்ப்பணியா?
இணைய இதழ் ஒன்று தொடங்கி அதில் உல்லாசத்தையும், ஊருக்கொருவா¢ன் படைப்புகளைப் போட்டு, இலக்கியம், இலக்கணம், அரசியல், நகைச்சுவை, உளறல், பிதற்றல் என்று பலவற்றைப் போட்டு, தனிமனிதர்களின் சிறப்புகளை அரங்கேற்றவது தமிழ்ப்பணியா?
தமிழை நன்கு கற்று, பின்னர் மண்டைக் கிறுக்கெடுத்து, பகையை நக்கி, பல்லிளித்து பதவியின் உச்சியில் அமர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் செய்கிறேன் என்ற போர்வையில் மானங்கெட்டலைவது தமிழ்ப்பணியா? ஏழைத் தமிழர் சிலரைக் கூட்டி அவர்க்கு சொக்காய் வாங்கிக் கொடுத்து சோறு போட்டு அனுப்புதல் தமிழ்ப்பணியா?
இவையாவும் தமிழ்ப்பணிதான், இருந்தபோதும் இவையே போதுமா என்று ஒவ்வொருவரும் தம்மைத் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
இவையாவும் தமிழ்ப்பணிதான் ஆயினும் பெரும்பாலும் தன்னொழுக்கம் இல்லாததால் செய்யப்படும் தமிழ்ப்பணி. இவையாவும் தமிழ்ப்பணிதான் தமிழாண்மையும் நேர்மையும் குறைந்தோரால் பெரும்பாலும் செய்யப்படும் தமிழ்ப்பணி.
தமிழும் நிலமும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. இந்நாள் அல்ல அந்நாள் முதற்கொண்டு காலகாலமாய்த் திட்டமிடப்பட்டுத் தமிழ்க கொலை நிகழ்கின்றது.
மொழி தமிழாய் இல்லை. இறை தமிழாய் இல்லை. கல்வி தமிழாய் இல்லை. பண்பும் தமிழாய் இல்லை பேச்சும் எழுத்தும் தமிழாய் இல்லை. ஆக்கமும் தமிழில் இல்லை. அழிவே உள்ளது.
அரசும் தமிழில் இல்லை. அரசர்களும் தமிழுக்கில்லை, செடியொன்று இருந்தால் களை ஆங்கு பத்தாம். பகையைப் போற்றி பகையடி வருடும் தமிழர் ஆயிரமாயிரம். குச்சி மிட்டாய்க்கும் குலத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழர் ஆயிரமாயிரம்.
மூவாயிரமாண்டின் தமிழ் பேசுவான்! மூன்று சங்கங்களையும் மூச்சுவிடாமல் பேசுவான்! ஆனால் பகையின் செருப்பைத் தலையில் சுமப்பான்! அது தமிழ்தான் என்பான்.
இப்படியே இந்தச் சமுதாயம் தன்னை மறந்து தன் தேவையை மறந்து எத்தனை நாள் போகும்? போக முடியும்?
மறைமலையடிகளார், பாரதிதாசனார், பாவாணர், பொ¢யார், பெருஞ்சித்திரனார் போன்றோர் எத்தனை முறை தோன்றுவார்கள். இவர்கள் இத்தமிழகத்திற்கு தந்து போனவற்றை எத்தனை பேர் நடைமுறைப் படுத்துகிறார்கள்?
இவர்கள் யாவரையும் நாமறிவோம்! தமிழ்கூறும் நல்லுலகம் அறியும். ஆயினும் அன்னார் சொன்னவற்றை நாம் பயின்றும் பழக்கத்தில் கொண்டு வருவதில்தான் நாம் சோம்பிக் கிடக்கிறோம். அல்ல, அல்ல இன்னும் மாயைக்குள் கிடக்கிறோம்.
தமிழிலே களைகள். தமிழர்களிடையே பகைவரோடு களைகளும். தமிழர்களுக்கு இடையே களைகள். இறைவனுக்கும் தமிழனுக்கும் இடையே களைகள்.
தமிழுக்கு இருக்கும் இன்றைய சிக்கல்களை மேலோட்டமாக எதிர்ப்பதுவும் அலசுவதும், நுனிக்கிளையில் அமர்ந்து அடியை வெட்டுவது போன்றதாகும்.
இதோ நான் தமிழன்! தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று பேசுவதெல்லாம் போதாது. ஈராக்கிலே அமொ¢க்கா குண்டைப் போட்டால் அமொ¢க்கப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்று குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன.
பி¡¢த்தானியப் பொருள்களை வாங்காதே, பயனபடுத்தாதே என்று காந்தியார் சொன்னபோதுதான் பி¡¢த்தானுக்கு மிகவும் உரைத்தது.
எங்கே அடிக்க வேண்டுமோ அங்கே அடித்தால்தான் அகலவேண்டியது அகலும். அதுபோல, தமிழுக்கும் தமிழருக்கும் வேதனை தருவது யாது ? யாவர் ?
மொழியிலே, எழுத்திலும் பேச்சிலும் புரளும் மொழிக்கலப்பு ஒரு வேதனை! இறைவனுக்கு இடையே திரைபோடும் அயனமொழி ஒரு வேதனை !
நாமும் தமிழிலேயே இறைப் பாடல்கள் பாடவேண்டும் என்று கதறுகிறோம் ! கேட்பா¡¢ல்லை ! பகைவர் கேட்கமாட்டார் !
ஏன் கேட்கமாட்டார் என்றால், நம்மிடம் தன்னொழுக்கம் இல்லை. நமது எழுத்துகளில் பகைமையைப் புழங்கவிட்டு விட்டு, இறைவனடியில் மட்டும் அதைச் சேர்க்காதே என்றால் பகைவர் விடுவாரா ?
எப்படி காந்தியார் பி¡¢த்தானியப் பொருள்களை வாங்காதீர் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி வெற்றி கண்டாரோ, அதே பாங்கில்தான் மறைமலையாரும், பாரதிதாசனும், பெருஞ்சித்திரனாரும் - இன்னும் இவரைப் போன்று பலரும் எடுத்துச் சொன்னார்கள்.
தமிழ் எழுத்துகளில் பிறமொழி கலந்து எழுதுவது "மொழி ஊழல்" ஆகும்.
அந்த ஊழலை தமிழர் தவிர்த்து தமிழின் மானத்தையும் தன்மானத்தையும் காக்க §வ்ணடிய பொறுப்பு அனைவர்க்கும் உண்டு. அதுதான் தமிழ்ப்பணியும் கூட !
இந்த அடிப்படையை மறந்து செய்யும் எந்தத் தமிழ்ப் பணியும் தன்னொழுக்கம் இல்லாத தமிழ்ப் பணிதான் என்பதில் அய்யமில்லை.
நாக. இளங்கோவன் - சென்னை
நன்றி : அமீரகத் தமிழிணைய நண்பர்கள் ஆண்டுமலர் 2003
நேசமுடன நிதர்சன்
|
|
|
| PIZZA செய்யலாம் வாருங்கள்.. |
|
Posted by: vasisutha - 02-28-2005, 05:05 AM - Forum: சமையல்
- Replies (48)
|
 |
<b>PIZZA செய்யலாம் வாருங்கள்..</b> :wink:
<img src='http://www.vision.caltech.edu/feifeili/101_ObjectCategories/pizza/image_0024.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:30pt;line-height:100%'>PIZZA</span>
[b]தேவையான பொருட்கள்:</b>
மா (all-purpose flour) - கால்(1/4)கிலோ,
பேகிங்பவுடர் _ 2 தேக்கரண்டி,
fresh yeast (ஈஸ்ற்) - 20 கிராம்
வெதுவெதுப்பான பால் - 1கப்,
உப்பு - தேவையான அளவு.
சீனி -2 taple spoon
<b>செய்முறை: </b>
உயரமான கண்ணாடி குவளையில் அரை கப் வெதுவெதுப்பான பால்விட்டு அதில் இரண்டு தேக்கரண்டி சீனியையும், ஈஸ்ற்ரையும் சேர்த்து அப்படியே ஒருபக்கத்தில் வைத்து விடுங்கள்.
<i>{பால், மிதமான சூட்டில்தான் இருக்க வேண்டும். பாலில் சூடு அதிகமிருந்தால் ஈஸ்ற் இறந்துவிடும். சூடு குறைவாக இருந்தால், நொதிக்காது.} </i>
சிறிது நேரத்தில் ஈஸ்ரும் பாலும் நொதித்து குவளையின் மேல் விளிம்பு வரை நுரைவிட்டுப் பொங்கி வரும். பால் இப்படிப் பொங்குவதற்கு வசதியாகவும், வெளியில் தெரிவதற்காகவும்தான் உயரமான கண்ணாடி குவளையினை இதற்குப் பயன்படுத்துகிறோம்.
மாவையும், பேக்கிங் பவுடரையும் அரித்து, உப்பு போட்டு கலந்து பெரிய தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள்.
இதன் நடுவே பள்ளம் தோண்டி கண்ணாடி குவளையில் நுரைத்து நிற்கும் ஈஸ்ட்க் கலவையை பள்ளத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது மொத்தக் கலவையையும் ரொட்டிக்கு குழைப்பது போல நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்து தட்டில் வைத்த மாவை, குழியான பாத்திரத்தால் மூடி ஒரு மணிநேரம் ஊறவிடுங்கள்.
இப்படி மூடிவைப்பதால் மா இன்னும் மென்மையாகிறது பீட்ஸாவுக்கு தேவையான இழுவைத் தன்மையும், மிருதுத் தன்மையும் கிடைக்கிறது. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் மாவை நன்றாக அடித்துப் பிசையுங்கள்.
ஒன்றரை inch ஆழமுள்ள பரந்த (அலுமினிய) தட்டில் butter தடவி, அதில் மாவைப் பரப்பி சுமார் இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இப்போது மீண்டும் மாவிலுள்ள ஈஸ்ட் நொதித்து உப்பத் தொடங்கும்.. இந்த இடைவெளியில் பீட்சாவின் மேல் நிரப்பும் கலவைகளை தயாரித்துக் கொள்ளலாம்.
<i>பீட்சாவின் மேல் நிரப்பும் கலவை</i>
<b>தேவையான பொருட்கள் : </b>
பெரிய வெங்காயம் _ 2,
தக்காளி _ 2,
குடைமிளகாய் _ 2,
பட்டர் _ 2 தேக்கரண்டி,
சீஸ் (துருவியது) _ 50 கிராம் ,
பச்சை மிளகாய் _ 4,
மிளகாய்தூள் மற்றும் உப்பு _ தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, குடைமிளகாய் இவை எல்லாவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
சட்டியில் பட்டரை போட்டு உருகியதும் முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் வதக்கிக் கொண்டு, பிறகு தக்காளியையும், குடைமிளகாயையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் கலந்து தூள்வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இறக்கியதும் துருவிய சீஸை இந்தக் கலவையில் கலந்து கொள்ளுங்கள்.
இரண்டு மணி நேரம் ஊறி, உப்பியிருக்கும் மாவின் மீது இந்தக் கலவையைப் பரப்பி அதன் மேல் அங்கங்கே தக்காளி சோஸையும், மிளகாய் சோஸையும் ஊற்றி விடுங்கள். கடைசியாக துருவிய சீஸை மேற்புறம் தூவி விடுங்கள்.
இதை பேக்கிங் ஓவனில் 200டிகிரி வெப்பத்தில் வைத்து பேக் செய்யுங்கள். பதினைந்தே நிமிடம் தான்... கமகமவென்று பீட்ஸா வாசம் மூக்கைத் துளைக்கும். இதோ... ஒவனைத் திறந்தால் பொன்நிறத்தில் சுவையான பீட்ஸா தயார்!
<b>pizza joke:</b>
<img src='http://www.d.umn.edu/~mohs0025/funny/pizza.gif' border='0' alt='user posted image'>தமிழில்:
மன்னித்துக்கொள்ளுங்கள் ஈமெயிலில் எல்லாம் பிட்ஸாவை இணைத்து
அனுப்பமுடியாது..
|
|
|
| Songs |
|
Posted by: DV THAMILAN - 02-28-2005, 04:54 AM - Forum: சமையல்
- Replies (4)
|
 |
வணக்கம்..............எனக்கு ஒரு உதவி வேண்டும்.......................... உங்களுக்கு 'கெ" தொடங்கும் பாடல் எதுவும் தெரிந்தால் ....பாடலின் வரியை குறித்து விடுங்கள்..................உங்கள் உதவியை விரைவில் எதிர்பார்க்கிறேன்...............
|
|
|
|