![]() |
|
சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த் (/showthread.php?tid=4948) |
சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த் - Vaanampaadi - 02-28-2005 சினிமா போரடிக்கிறது: விஜயகாந்த் வர வர சினிமா மீது எனக்கு மோகம் குறைந்து கொண்டே வருகிறது என்கிறார் நடிகர் விஜயகாந்த். ஒரு வேளை தொடர் தோல்விகளால் இருக்குமோ என்று நாமெல்லாம் கரெக்ட்டாக சந்தேகப்பட்டால் அது தப்பு!. அவருக்கு அரசியல் 'ஆஜை' வந்துவிட்டது. 24/7 நேரமும் அரசியல் கனவிலேயே லயிக்க ஆரம்பித்துவிட்டார் கேப்டன். இப்போது பரணில் இருந்து தனது கருப்பு ஜெர்க்கின், கிளவுஸை எல்லாம் தூசி தட்டி எடுத்து சிபிஐ அதிகாரி வேடத்தில் பேரரசு என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய்காந்த். வழக்கம்போல் இதிலும் அவருக்கு புதுமுகம் தான் ஹீரோயின். பெயர் தாமினி. அவரோடு டூயட் பாடிக்கொண்டே மிச்ச மீதி நேரத்தில் தீவிரவாதிளை பந்தாடிக் கொண்டிருக்கும் விஜய்காந்த் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தனது அரசியல் பிரவேசத்துக்கு கிரஹப் பிரவேசம் நடத்துவார் பேசப்படும் நிலையில், ஊர் ஊராகச் சென்று ரசிகர்களை சந்தித்து குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருவண்ணாமலைக்கு சென்ர அவர், வழியில் வந்தவாசி பேருந்து நிலையத்தில் ரசிகர் மன்றக் கொடியை ஏற்றி வைத்து வேனில் இருந்தபடி ரசிகர்களிடையே பேசினார். அப்போது, எனக்கு வர வர சினிமா மீது மோகம் குறைந்து வருகிறது. இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது நமது ரசிகர்களின் ஒற்றுமை தெரிய வருகிறது. இது நீடிக்க வேண்டும். நான் எப்போதுமே மனதில் பட்டதைத்தான் பேசுவேன், பேசுகிறேன். என்னை நம்பி வரும் ரசிகர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும், நமக்குள் மோதல், பூசல் இருக்கக் கூடாது. கடந்த 50 வருடங்களாக தமிழக அரசியல்வாதிகள் தங்களது பைகளை மட்டுமே நிரப்பிக் கொண்டு வருகின்றனர். மக்களை அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. எனது ரசிகர் மன்றக் கொடியில் உள்ள தீபம் புரட்சி தீபம், திருவண்ணாமலை கோவில் தீபம் போலத்தான் அதுவும் என்றார் விஜயகாந்த். விஜயகாந்த்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பொது மக்களும் கூடியது குறிப்பிடத்தக்கது. <img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/vijaykanth400.jpg' border='0' alt='user posted image'> வந்தவாசிக்கு வரும் முன்பாக மும்னி, அம்மையப்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் ரசிகர் மன்றக் கொடிகளை விஜயகாந்த் ஏற்றி வைத்தார். பின்னர், ஆரணியில் அண்ணா சிலை அருகே வேனில் இருந்தபடி ரசிகர்களிடையே பேசிய விஜய்காந்த், உலகில் மொத்தமே இரண்டு ஜாதிகள்தான். ஒன்று ஏழை, இன்னொன்று பணக்காரன். இதைத் தவிர வேறு எந்த சாதியும் கிடையாது, இருக்கக் கூடாது, சாதியைப் பற்றிப் பேசுவதே தவறு என நினைப்பவன் நான். ஆனால் சிலரோ, சாதி வெறியைத் தூண்டி விட்டு, சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். (நம் நினைவுக்கு டாக்டர் ராமதாஸ் வருவது ஏனோ) பெண் சிசுக் கொலையைத் தடுக்க வேண்டும், வரதட்சணையை ஒழிக்க வேண்டும். ஆண்கள் நினைத்தால் இவற்றை சாதிக்கலாம் என்று தெளிவாகவே பேசிக் கொண்டிருந்த விஜய்காந்த் திடீரென 'ரஜினி பாணி'க்கு மாறினார். மக்கள் ஆதரவும், கடவுள் ஆசியும் இருந்தால் நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். வர மாட்டேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. தப்பிச் செல்ல நான் நினைத்ததே இல்லை என்று ரஜினியை விடவும் 'தெளிவாகப்' பேசிவிட்டுப் போனார். விஜயகாந்த்தின் இந்த பயணத்தின்போது அவரது மனைவி, மைத்துனர் சுதீஷ், ரசிகர் மன்ற மாநிலத் தலைவர் ராமு வசந்தன் உள்ளிட்டோரும் சென்றனர். Thatstamil படங்கள் நீக்கப்பட்டுள்ளன --யாழினி - hari - 02-28-2005 Quote:கடந்த 50 வருடங்களாக தமிழக அரசியல்வாதிகள் தங்களது பைகளை மட்டுமே நிரப்பிக் கொண்டு வருகின்றனர்.இவருக்கும் நிரப்ப ஆசைவந்துட்டு! - Vasampu - 02-28-2005 அரசியலுக்கு வரும்ரை எல்லோரும் நல்லவங்கதான். வந்த பின் பழைய கதைதான். விரும்பியோ விரும்பாமலோ கூட இருப்பவங்களுக்காக மாறித்தான் ஆகணும். அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|