![]() |
|
வெளிநாட்டுமோகத்தால் சீரழியும் இளைஞர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வெளிநாட்டுமோகத்தால் சீரழியும் இளைஞர்கள் (/showthread.php?tid=4947) |
வெளிநாட்டுமோகத்தால் சீரழியும் இளைஞர்கள் - Vaanampaadi - 02-28-2005 வெளிநாட்டுமோகத்தால் சீரழியும் இளைஞர்கள் வெளிநாட்டுமோகம் பிடித்து விமானம் ஏற்பவர்களும் வறுமையின் காரணமாக தொழில்தேடிச் செல்பவர்களும் எதிர்நோக்கும் அவலம் சொல்லில் அடங்காதவை.இவர்களில் சிலர் தாம் போகவேண்டிய இடத்திற்குச் சென்றுள்ளனர்.வேறு சிலர் உரிய இடத்திற்குச் செல்லாது வேறு இடங்களில் இறங்கி கடும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்படுபவர்களே வேறு நாடுகளில் தரையிறக்கப்பட்டு அவை வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர்.ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்டு உரிய இடத்திற்குச் செல்ல முடியாமல் அவலப்பட்டு நாடு திரும்பிய அனுபவத்தையும் அங்கு மேலும் கஷ்டப்படுபவர்களை நேரில் கண்ட அனுபவங்களையும் பகிர்கின்றார். திருமலையைச் சேர்ந்த கந்தசாமி ஜெயசீலன்.-பிரித்தானியா கனடா பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்புவதாகக் கூறிய இலங்கை முகவர் என்னைப்போன்ற சிலரை விமானத்தில் ஏற்றனார்.தாய்லாந்தில்(பெங்கொங்)இறங்கியதும் விமான நிலையத்துக்கு வந்த முகவர் எங்களை அதை;துச்செல்கின்றார். பாங்கொக்கில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கவைத்தார்.நல்ல உணவுப் பரிமாற்றம் வரவேற்பு என்பன வழங்கப்பட்டன. இரண்டு வாரத்தினுள் அனுப்புவதாகக்கூறியதும் நாம் சந்தோசப் பட்டோம்.இரண்டு வாரம் முடிந்தபின்னர் ஹோட்டலிலிருந்து தமது பாதுகாப்பில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றனர்.அங்குபோன பிறகுதான் எம்மைப் போன்று ஏமாற்றப்பட்டவர்கள் பலர் அங்கு நிற்பதைக் காண முடிந்தது.ஒவ்வொரு அறையிலும் குறைந்தது ஏழு பேர் அடைக்கப்பட்டனர்.புதிதாக அந்த அறையில் விடப்பட்டவருடன் அடிக்கடி முகவர்கள் வந்து கதைப்பர்.இன்று நாளை விமானம் ஏற்றப்படும் என்ற ஆசை வார்த்தைகள் பேசுவர்.அவசரமாக அனுப்பமுடியும் அதற்கு ஆயிரத்து ஐந்நூறு(1500)ொலர் தயார்ப்படுத்தவேண்டும் எனவும் கூறுவர்.இதை நம்பி எப்படியும் ஆயிரத்து ஐந்நூறு டொலர் தயார் செய்து புறப்பட்டால் இறுதியில் மலேசியா கொரியா வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகளில் இறக்கிவிடப்படுகின்றனர்.அப்போது ஜெயில் வாழ்க்கை உட்பட மேலும் அவலம் தொடர்கின்றது. யாங்கொங்கில் ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஏழுபேருக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கு "நுர்று வாத்"(இலங்கை ரூபா 235ஃஸ்ரீ)முகவர்களால் வழங்கப்படுகின்றது.இதில்தான் ஏழுபேரும் மூன்று வேளையும் சமாளிக்கவேண்டும். இப்பணம் ஒரு நாளைக்கு ஒருவருக்குக்கூட போதாது.காலையில் சாப்பிடாது மதியம் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதன் மீதியே இரவுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.இங்கு குடிதண்ணீர்கூட பத்து வாத் கொடுத்து (ஒரு வாத் 2.33சதம்)தான் குடிக்கவேண்டும்.அறை பத்து அடி அகலமும் 15அடி நீளமும் உடையது.இதில் படுக்கை அறை குளியல் அறை சமையலறை கழிப்பறை எல்லாம் அடங்கும்.ஏழு பேரில் நிலை எவ்வாறிருக்கும்?இது குளிரூட்டப்பட்ட அறை(யுஃஊசுழழஅ)னினும் ஒரு மணித்தியாலம் மாத்திரமே அது(யுஃஊ)அனுமதிக்கப்படும். எவரும் வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை. முன் கதவு பாவிக்க முடியாது. விஸா இருப்பவர் மாத்திரம் சந்தைக்குச் சென்றுவரமுடியும்.இங்கு தொலைபேசி இருந்தாலும் அதில் அழைப்பு எடுக்கவோ பேசவோ முடியாது.அதற்குரிய இலக்கமும் வழங்கப்படவில்லை.எந்தத் தொடர்பும் கையடக்கத்தொலைபேசி மூலம்தான்.விஸா இரண்டு மாதத்துக்குப்பிறகு காலாவதியாகிவிடும்.முகவர்கள் புதுப்பித்துக்கொடுக்கமாட்டார்கள்.அதனால் யாரும் பயத்தில் வீதியில் இறங்குவதில்லை.சிலர்தாம் அகதிகளாக இருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு என்.எச்.சி.என்.அலுவலகத்தில் முறையிட்டு புதுப்பிப்பதும் உண்டு.முகவர்களால் அழைத்துச்செல்லப்படுவபவர்களின் விஸா இரண்டு மாதங்களில் முடிவுறும் தறுவாயில் கடவுச்சீட்டை வாங்கிச் சென்றுவிடுவர்.இந்நிலையில் எமது பசியைப்போக்க அங்கிருக்கும் அம்மன் கோயிலை நாடுவதுமுண்டு. இலங்கையிலிருந்து அழைத்துச் செல்லப்படுபவர்களிடம் குறிப்பிட்ட தொகைப்பணத்தையும் பெற்றுவிடுவார்கள்.தாய்லாந்தில் ஒரு தொகையையும் கூறிய நாட்டுக்குச்சென்றால் மீதியும் கொடுக்கவேண்டும்.உரிய நாட்டுக்கு அனுப்பப்படுவது அதிர்ஷ்டவசமான விடயம்.வேறுநாடுகளில் சிக்கித்தவிப்பதே அநேகமான உண்மை.மற்றும்படி சிறைவாழ்க்கைதான்.இவ்வாறு அவல வாழ்க்கையை அனுபவித்த வண்ணம் கடந்த இரண்டுவருடத்துக்கும் மேலாக 200பேர்வரை அங்குள்ளதாகத் தெரியவருகிறது.சில பெண்களும் இந்தக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.ஆறு ஆண்களுடன் ஒரு பெண்ணுமாக தனியறையில் காலம்தள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.தாயும் மகளும் என ஒரே குடும்பத்தவரும் இதற்கு ஆட்பட்டுள்ளனர். சில பெண்கள் கற்பையும் இழந்து நாடு திரும்பமுடியாமல் சீரழிந்து போவதாக நம்பப்படுகிறது.பாரிஸ் செல்ல எண்ணுபவர்களிடம் சுமார் 14இலட்சமும் லண்டன் செல்ல விரும்புபவர்களிடம் சுமார் 24லட்சமும் முகவர்களால் கோரப்படுகிறது.இந்த சீரழிந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டுவந்த ஜெயசீலன் ஒன்றரை வயது மகளின் தந்தை.இந்த வருடம் ஜூன் மாதம் 22ஆம் திகதி ஜேர்மன் செல்வதற்காக விமானம் ஏறினார்.பாங்கொங்கில் கிடைத்த அனுபவத்துடன் மற்றவர்கள் சொன்னதையும்கேட்டு சுத்துமாத்தைப் புரிந்துகொண்டவர்.விடாப்பிடியாக தாயகம் அனுப்பவேண்டும் என வற்புறுத்தி ஆகஸ்ட் மாதம் 28இல் இலங்கை திரும்பினார்.அதுவரை பட்ட அனுபவங்கள் அளப்பெரியது. - மிதுஷன் நன்றி: வெப் தமிழன் |