Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 553 online users.
» 0 Member(s) | 550 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,644
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,260
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,555
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  ரொட்டி சாப்பிடலாம்..வாங்கோ
Posted by: தூயா - 02-28-2005, 03:48 AM - Forum: சமையல் - Replies (30)

கோதுமை ரொட்டி


எனக்கு தெரிந்ததை நானும் பகிர்ந்து கொள்ள போகின்றேன்.அப்புவே எழுதும் போது நான் எழுதினா என்ன என்கிற தைரியம் தான்.

கோதுமை மா 250 கிராம்
உப்பு கொஞ்சம்
தண்ணீர்

அனைத்தையும் ஒன்றாக ஒரு சட்டியில் போட்டு கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேறியதும், மாவை வார்த்து ரொட்டிகளை சுட்டு எடுக்கவும்.

வித்தியாசமா இருக்க வேண்டும் எனில், அரிந்த வெங்காயம், மிளகாய் சேருங்கள்.

நன்றாக இருக்கும். கருக விட்டு, உங்கள் அம்மாவின் சமையல் அறையை நாசம் செய்யாதீர்கள். செய்தாலும் என்னுடைய பெயரை உங்கள் அன்னைகளிடம் மாட்டி விடாதீர்கள். நன்றி.

Print this item

  :: சமாதானம்! ::
Posted by: Kurumpan - 02-28-2005, 03:17 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

அவசரமாய் பூசிய அரிதாரம்
கலையும் முன்னரே
மீண்டுமோர் அரங்கேற்றம்!

காட்சிகள் என்னவோ ஒன்றுதான்
கதா பாத்திரங்கள் மட்டுமே
முகம் மாற்றப்பட்டுள்ளது.
கதையறியாமலே கதாபாத்திரங்களாக்கப்பட்ட
கோமாளிகளே அங்கு அதிகம்

குரங்காட்டி ஒருவன்
சந்தை வந்தால்
கூட்டம் சேருவதும் - பின்
கலைவதும் புதிது அல்லவே
ஆட்டம் முடியும் வரை
கூட்டம் இருக்கும்
நட்டம் தனக்கென உணராத கூட்டம் அது!

வேடிக்கை காட்டியவனுக்கும்
வேசம் போட்டவனுக்கும்
வித்தியாசம் என்ன இருக்கு?
வந்தவரிடம் வாருவதே அவர் போக்கு
புரியாத ஜென்மங்கள்
புலம்புவதே இவர் போக்கு!

விடியாத இரவு ஒன்று இல்லை
முடியாத பொருள் எதுவும் இல்லை
பேசிப்பெற நாம் கோழை இல்லை
பறிபட்டுப்போக நாம் பரதேசிகளுமில்லை!

கெஞ்சிய போதெல்லாம் அவர் மிஞ்சுவதும்
நாம் மிஞ்சும் போதெல்லாம் அவர் துஞ்சுவதும்
காலம் கற்றுத் தந்த பாடம் - இன்னும்
கண்முடிக் கிடப்பதேனோ நீயும்?!

உளியோடு போரிட்டுத்தான்
சிலை பிறக்கிறது
மண்ணோடு போரிட்டுத்தான்
விதை முளைக்கிறது

புரியாது போனது ஏனோ??

Print this item

  அஜீனோ மோட்டோ... என்றால் என்ன...?
Posted by: shanmuhi - 02-28-2005, 01:44 AM - Forum: சமையல் - Replies (8)

<b>அஜீனோ மோட்டோ... என்றால் என்ன...?</b>

அதனை பாவிப்பதால்
ஏற்படும் நன்மை என்ன...? பாதிப்பு என்ன....?

Print this item

  ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் ஈழத்தின் குரல்...!
Posted by: வியாசன் - 02-28-2005, 01:30 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (12)

ஐ.நா சபையில் ஒலித்த தமிழ் ஈழத்தின் குரல்...!

1978 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 05 ஆம் திகதி (05-10-1978) வியாழக்கிழமை தமிழர் வரலாற் றில் இலகுவில் மறக்கப்பட முடி யாத தினமாகும். அன்றுதான் முதன் முதலாக உலகப் பெரும் சபையான ஐக்கிய நாடுகள் சபைக் குள் தமிழீழம் என்ற சொல் முதன் முதலாக உச்சரிக்கப்பட்டதாகும். உச்சரித்தவர் முன்னாள் நீதிபதியும் அண்மையில் காலமானவருமான கிரு~;ணா வைகுந்தவாசன்.

அவர் ஆங்கில மொழியில் ஆற் றிய உரையின் வாசகம் இது தான்

கிரு~;ணா வைகுந்தவாசன் ஆற்றிய இந்த உரையின் தமி ழாக்கம் பின்வருமாறு - எனது பெயர் கிரு~;ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந் திய தமிழீழத்திலிருந்து வந்திருக் கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியா தென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரேஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனு மதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக் கொலைக் கொள்கை யைத் தொடருகின்றது....

இவ்வளவும் பேசி முடித்ததும் தான் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.

உலகச் செய்திச் சேவை

இந்தச் சம்பவம் பற்றிராய்ட்டர் உலக சேவையினர் உலகம் பூரா வும் உள்ள ஊடகங்களுக்கு வழங் கிய செய்தித் தொகுப்பில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்.ஐ.நா. சபையின் பாதுகாவல் அதிகாரிகளின் கண்களில் மண் ணைத் து}விவிட்டு எப்படியோ ஐ.நா. கூட்டத் தொடர் நடைபெறும் மண்ட பத்துக்குள் புகுந்துகொண்ட முன் னாள் நீதிவான் கே.கே. வைகுந்த வாசன் அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். அங்கு மேடையை நோக்கி விரைந்த வைகுந்தவாசன் இலங்கை அரசின் இன ஒழிப்புக் கொள்கையைக் காரசாரமாகக் கண்ட னம் செய்தார்.

மேலும் வைகுந்தவாசன் ஜ.நா. சபையில் பேசிக் கொண்டிருந்த போது ஒலிவாங்கி துண்டிக்கப்பட்ட தோடு அவரைப் பாதுகாப்பு அதி காரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப்பெரும் எண்ணிக் கையிலான தொலைக்காட்சி ஊடக வியலாளர்களும் பத்திரிகையாளர் களும் சூழ்ந்து கொண்டார்கள்.அமெரிக்க நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் நிருபர்தான் முத லில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். நீங்கள் உங்கள் பேச் சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட் டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது? எனக் கேட்டார். அங்கு இருந்த வைகுந்த வாசன் பின்வருமாறு பதில் கொடுத் தார்.

நான் குறிப்பிடும் தமிழீழம் இந்து மகா சமுத்திரத்தில் தென் னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங் கைக்கு வடக்கேயும் பாக்கு நீரி ணையை அண்மித்ததாகவும் வங் காள விரிகுடா கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக் கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர் களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது||.இதைத் தொடர்ந்து மேலும் பல ஊடகவியலாளர்கள் அவரைப் பேட்டிகண்டு அவரது செவ்வியைப் பிரசுரித்தார்கள். இது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பில் நல்ல பிரச்சாரமாக அமைந்தது. ஆயிரம் கருத்தரங்கு கள் நடத்துவதைவிட இது ஈழப் போராட்டம் பற்றிய பிரசாரத்தைச் சர்வதேசமயப்படுத்தியது.சந்தர்ப்பத்தை உருவாக்கினார்

கிருஸ்ணா வைகுந்த வாசன் ஒரு வழக்கறிஞர். தென் னாபிரிக்க நாடான சாம்பியாவில் நீதிபதியாகக் கடமையாற்றினார். இதன் பின் ஓய்வு பெற்று லண்டன் சென்றுஇ வழக்கறிஞராகத் தமது தொழி லைச் செய்யும்போது அமெரி க்காவில் நியூயோர்க் நகரில் இடம் பெற்ற அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க வருடாந்த மாநாடு இடம் பெற்றமையால் அவர் அமெரிக் காவுக்குச் சென்றார். இவர் அமெரிக் காவுக்குச் சென்ற காலகட்டத்திலே ஐக்கிய நாடுகள் சபை கூட்டத் தொடர் இடம்பெற்றது. இந்தக் கால கட்டத்தில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியக் குழுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமிழீழத்தின் குரலை ஐ.நா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப் பத்தை அவர் உருவாக்கினார்.1978 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 05 ஆம் திகதி நண்பகலாகிக் கொண்டிருந்தவேளை - சைப்பிரஸ் ஜனாதிபதியின் ஒரு மணித்தியால பேச்சையும் அதைத் தொடர்ந்து சுரினாம் நாட்டின் பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள்வரை கேட்டுக் கொண்டி ருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் - ஜனாதிபதி பிரதமர் வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார் கள்.

இந்த வேளையில் அப்போ தைய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிரு ஸ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட் டினார்

இந்தியா எப்றோட் தரும் தகவல்

கிருஸ்ணா வைகுந்தவாசன் இந்தச் சந்தர்ப்பத்தை எவ்வாறு உருவாக்கினார் என்பதை அந்தக் காலகட்டத்தில் நியூயோர்க் கிலிருந்து வெளிவந்த இந்தியா எப்றோட் (ஐயெனயை யுடிசழயன) என்ற ஆங்கில ஏட்டின் 1978 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி இதழில் பி.பி.கூப்பர் கிருஸ்ணா வைகுந்த வாசனைப் பேட்டிகண்டு டுயமெய டுயறலநச வுசiஉமள ரு.N in pரளாiபெ ஊயரளந என்ற தலைப்பிட்டு பின் வருமாறு எழுதினார் இந்த வருடம் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்ற போது உலகப் பேராளர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கிய அந்த நிகழ்ச்சி இடம் பெற்றது.

உலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச் சர் எப்படி இருப்பார் என்று எவ ருக்குமே தெரியாத சூழ்நிலை யில்இ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தலைவர் இலங் கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை நரைத்துக்கொண் டிருந்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங் கையின் பிரதிநிதிகளைத்தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் முதியவரான கொலம்பியா நாட் டைச் சேர்ந்த இன்டேல்சியோ லிலி யானோ என்பவராகும். அவரும் வைகுந்தவாசனை இலங்கைநாட்டு வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேக மாக மேடையில் ஏறிய வைகுந்த வாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார். இப்படி ஒரு சூழ்நிலையை எப்படி வைகுந்தவாசன் உருவாக்கி னார் என்பதை இந்தியா எப்றோட் (ஐயெனயை யுடிசழயன) பின்வருமாறு வர் ணிக்கிறது.

சாம்பியாவின் முன்னாள் மாவட்ட நீதிபதி வைகுந்தவாசன் பலகிழ மைகளாக அனுபவப்பட்ட ஒரு வங்கிக்கொள்ளைக்காரன் வங்கிச் செயற்பாடுகளை மிக அவதான மாக நோட்டம் விடுவதுபோல ஐக் கிய நாடுகள் சபையின் உள்ளே நடைபெறும் செயற்பாடுகளை மிக அவதானமாக 1978 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முழுவதும் மிகத் துல்லியமாக றெக்கி எடுத்தார். ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் ஒழுங்காக அங்கு வந்து போவார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் வைகுந்தவாசன் மிக ஒழுங்காக உள்ளே போய்வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் பார்க்கும் போது தனது கையில் கட்டியி ருந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துத் தன்னை ஒரு படுபிச| யான பேர்வழியாகக் காட்டிக் கொண்டார். அவரது செயற்பாடுகள் பாதுகாப்பு அதிகாரிகள் மனதில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பிசியான பேர்வழி என்ற படிமத்தை உருவாக்குவதில் வைகுந்தவாசன் பெருவெற்றியும் பெற்றார்.

1978 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் தனது கைப்பெட்டியுடன் வியர்க்க வியர்க்க விறுவிறுக்க அவசர அவசரமாகப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கடந்து உள்ளே சென்றார்.அதி முக்கியமான கமிட்டிக் கூட்டம் ஒன்றுக்குத் தாம் பிந்தி விட்ட ஒருவித பரபரப்பு அவரது முகத்தில் காணப்படும். இதை உறு திப்படுத்துவதுபோல வாசலை நெருங்கிய நேரத்தில் தமது கடி காரத்தை எடுத்து ஏதோ நேரம் பிந்திவிட்டதோ என்று கவலைப் படும் பாவனையுடன் அடிக்கடி பார்த் துக்கொள்வார்.இவ்வாறு அவர் செல்லும்போது ஒருபோதும் பாதுகாப்பு அதிகாரிக ளால் அவர் தடுக்கப்படவே இல்லை. இவ்வாறு செயற்பட இரும்புபோன்ற நரம்பு தேவை என வைகுந்தவாசன் பத்திரிகையாளர் மத்தியில் குறிப் பிட்டார்.

சந்தர்ப்பத்தை உருவாக்கல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல்

இலங்கைத் தமிழர் பிரச்சினையை சர்வதேசசபை ஒன்றின் ஊடாக சர்வதேச மயப்படுத்த வேண்டும் என்ற தணியாத வேட்கை கொண் டிருந்த கிருஸ்ணா வைகுந்தவாசன் சரியான சந்தர்ப்பத்தை உருவாக்கி யதோடு சரியான முறையில் தனக் குக்கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தினார். ஆனபடியால்தான் 05.10.1978 அன்று இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நா.சபையில் பேசு வதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஸ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனி யில் உலக சபையில் சொல்ல வேண்டியதைச் சொல்லி ஒரு உலக சாதனையையே நிகழ்த்தி விட்டு இன்று மறைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை உள்ள வரை அவரது செயல் பதிவாகி அவரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.


வெப்தமிழனிலிருந்து களஉறுப்பினர்களுக்காக சுடப்பட்டது

Print this item

  þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡?
Posted by: Hariny - 02-28-2005, 12:55 AM - Forum: கவிதை/பாடல் - Replies (39)

<b><span style='font-size:25pt;line-height:100%'>¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð?
þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ?
¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ.</b></span>

PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.

Print this item

  கோர்ட் சுட் அணியா ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம் - தயா ஜிப்ரான்
Posted by: Thaya Jibbrahn - 02-28-2005, 12:03 AM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

வாருங்கள் இளவரசே!
வாருங்கள்!!

இன்னமும் உயிரோடுதான்
இருக்கிறோம்.

சோல்பரியும் கோல்புறூக்கும்
செய்யாததை
சுனாமி செய்திருக்கும்
என்பது உங்கள் எண்ணம்

ஆனாலும்
இன்னமும் உயிரோடுதான்
இருக்கிறோம்

How is possiblie
என ஏங்கி விடாதீர்கள்

ஆழவேரோடிய ஆலமரமாய்
விழுதுகளிழந்தும்
நிமிர்ந்து நிற்கின்றோம்.

நாளைவரும் நாளைவரும்
விடியலென
விழிகளெல்லாம் நம்பிக்கை தேக்கி
காத்திருக்கின்றோம்.

பேயைகலைத்து
பிசாசைக் கட்டிக்கொண்டதாய்
ஆகிவிட்டது
உங்களிடம் பெற்ற
சுதந்திரம்.

நீங்கள் விரும்பியதும்
இதைத் தானே

காகம்திட்டி மாடுசாவதில்லை
இளவரசே!!

நீங்களென்ன -இனிவரும்
உங்கள் சந்ததிகளையும்
அனுப்புங்கள்.

அப்போதும் எங்கள் சந்ததி
இப்படித்தான்
மிடுக்குடன் வாழும்.
இது
அடிபணியா தமிழ்ச் சாதி!

கோர்ட் சுட் அணியா
ஜென்ரில்மன்ஸ் வாழும் தேசம்-


- தயா ஜிப்ரான் -

Print this item

  கணணி பாதுகாப்பு
Posted by: Mathan - 02-27-2005, 11:11 PM - Forum: கணினி - Replies (4)

பிரிட்டிஷ் அரசின் வைரஸ் அறிவிப்புகள்

பிரிட்டிஷ் அரசு கணினி, செல்பேசி போன்ற தகவல் சாதனங்களில் வைரஸ்கள் பற்றிய அறிவிப்புகளை (அதிகார்வபூர்வமாக) வெளியிடத் துவங்கியிருப்பதாக இன்றைக்கு பிபிஸி செய்தி வெளியிட்டிருக்கிறது. IT Safe என்று பெயரிடப்பட்ட இந்தச் சேவை வைரஸ் தொந்தரவுகள் தலையெடுக்கும்பொழுது IT Safe இணைய தளத்தின் வழியாகவும், பதிவு செய்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கைகளை வெளியிடப் போகிறது.

தளத்திற்குப் போய்ப் பார்த்தபொழுது அங்கே மைக்ரோஸாப்ட் சம்பந்தமான சமாச்சாரங்கள் மாத்திரமே இருக்கின்றன. ஆப்பிள், லினக்ஸ் உள்ளிட்ட பிற இயக்குதளங்களுக்கும் இந்தச் சேவை நீட்டிக்கப்படுமா என்று தெரியவில்லை. அப்படி நீட்டிக்கப்பட்டால் பொதுவில் எந்த இயக்குதளம் பாதுகாப்பானது என்று குடிமக்கள் அறிந்துகொள்ள அரசாங்கமே வழி செய்வதாக இருக்கும்.

இதைக் கேட்டவுடன் என் மூளையில் ஒரு பொறி தட்டியது (ஆமாங்க, நம்ம துப்பறியும் கதைல தட்ற அதே பொறிதான்!) இந்த அமைப்பிலிருந்து வெளிவருவதைப் போலவே ஏமாற்றி (உதாரணமாக IT's Safe என்று பெயரை வைத்துக் கொண்டு) வழக்கமான எரிதர்கள் பொதுஜனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் அபாயம் இருக்கிறது. (இதன் உச்ச கட்டமாக அரசாங்க தளத்தையே அவர்கள் கைப்பற்றி ஜனங்களை பீதியில் ஆழ்த்தவும் முடியும்). இதை எல்லாம் எப்படித் தடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

* * *

இந்தச் சேவை;

However no software patches or programs will actually be dispensed through the site. The alerts will tell people how to go about getting hold of patches from security firms.

The NISCC spokesman said the site and alerting service would stay in existence for as long as there were security bugs on home computers and other gadgets.

அப்படின்னு சொல்லியிருக்காங்க. இதைப் படித்தவுடன் அதே மூளையில் இன்னொரு பொறி தட்டியது (ஹி.. ஹி..). அப்பப்ப எச்சரிக்கை உட்டுக்கிட்டு இருப்போம், ஆனா அபாயத்தைத் தடுக்க ஒன்னும் செய்யமாட்டோம். இதை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே. ஹ்ம்.. டோனி ப்ளேர் இதை அவரோட தோஸ்துக்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டு இருக்கார். ஹோம்லாண்ட் செக்யூரிட்டின்னு பெருசு இதேதான செஞ்சுகிட்டு இருக்கு.

venkat

Print this item

  நகச்சுவை பலவிதம்
Posted by: Mathuran - 02-27-2005, 10:14 PM - Forum: நகைச்சுவை - Replies (22)

ஒருவர்: என்னால் முடியாததை என் மனைவியும், மனைவியால் முடியாததை நானும் செய்திடுவோம்.

மற்றவர்: அப்படியா?

ஒருவர்: சமைக்கிறது, துணி துவைப்பது இதுகளுக்கு எல்லாம் மனைவிக்கு பொறுமை கிடையாது.
தொலைக்காட்சி தொடர் தொடந்து பார்ப்பது என்னால் முடியாது. இப்ப புரிகின்றதா?
---------------------------------------------------------------------

பிச்சைக்காறன்: அம்மா நேற்று நீங்க செய்த பிரியாணி மிகவும் நல்லாக இருந்தது.

பிச்சை போடுபவர்: அப்படியா?

பிச்சைக்காறன்: ஆமாம்! இன்றைக்கும் அதே பிரியாணி செய்யமுடியுமா என்மனைவி சாப்பிடணுமாம்
--------------------------------------------------------------------

ஒருவர்: நம்ம கட்சி தலைவருக்கு குழந்தை மனசு.

மற்றவர்: இருக்கட்டும்..... கட்சியை விட்டு ஒதுக்கினதுக்காக, தரையில் படுத்து தன் தலையில் தானே மண்ணைப்போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணுவது நல்லாகவா இருக்குது?


நன்றி தேவி வார இதழ்

Print this item

  இரக்கமேயில்லாமல் பூச்சியமென்றே உரைக்கிறது மின்னஞ்சல்
Posted by: Thaya Jibbrahn - 02-27-2005, 09:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (6)

நலமாய் இருப்பாய் என்றே
உள்மனது துடிக்கிறது.

ஆனாலும்
நீ பிரிந்ததைவிட ...
சொல்லாமல் பிரிந்தது
அதிகம் அதிகமாய்
வலிக்கின்றது.

இரக்கமேயில்லாமல்
பூச்சியமென்றே உரைக்கிறது
மின்னஞ்சலின்
உள்ளகம்

இந்த
சைபர் உலகம்
சுனியமாய் தோன்றுகின்றது.

என்நிலை குலைத்து
கவிவரம் தந்து
பிரிந்து போனாய்

எஜமானிழந்த நாய்க்குட்டியாய்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகள் தேடியலைகிறது

நானும்
என் கவிதைகளும்.


-தயா ஜிப்ரான் -

Print this item

  பொறுப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
Posted by: வியாசன் - 02-27-2005, 07:18 PM - Forum: களம் பற்றி - Replies (9)

இங்குள்ள பல உறவுகளுக்குபாடல்கள்(ஒலிவடிவம்) தேவைப்படுகிறது .களத்திலும் பலரிடம் இருக்கும் அல்லது தரவிறக்கம் செய்யக்கூடிய தளத்தை தெரிந்து வைத்திருப்பார்கள. தகவல் (செய்தி)பரிமாற்றம் செய்யக்கூடியதாக ஒரு நிரந்தர பகுதியை உருவாக்கித் தந்தால் அதுபலருக்கு உதவியாக இருக்கும்.அதனால் பல களஉறவுகள் பயன்பெறுவார்கள் இதை கவனத்தில் பொறுப்பாளர்கள் எடுத்தால் பியோசனமாக இருக்கும்.

Print this item