Yarl Forum
இரக்கமேயில்லாமல் பூச்சியமென்றே உரைக்கிறது மின்னஞ்சல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இரக்கமேயில்லாமல் பூச்சியமென்றே உரைக்கிறது மின்னஞ்சல் (/showthread.php?tid=4963)



இரக்கமேயில்லாமல் பூச்சியமென்றே உரைக்கிறது மின்னஞ்சல் - Thaya Jibbrahn - 02-27-2005

நலமாய் இருப்பாய் என்றே
உள்மனது துடிக்கிறது.

ஆனாலும்
நீ பிரிந்ததைவிட ...
சொல்லாமல் பிரிந்தது
அதிகம் அதிகமாய்
வலிக்கின்றது.

இரக்கமேயில்லாமல்
பூச்சியமென்றே உரைக்கிறது
மின்னஞ்சலின்
உள்ளகம்

இந்த
சைபர் உலகம்
சுனியமாய் தோன்றுகின்றது.

என்நிலை குலைத்து
கவிவரம் தந்து
பிரிந்து போனாய்

எஜமானிழந்த நாய்க்குட்டியாய்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகள் தேடியலைகிறது

நானும்
என் கவிதைகளும்.


-தயா ஜிப்ரான் -


- tamilini - 02-27-2005

என்ன தயா பிரிஞ்சிட்டீங்களா.. என்ன நடந்தது.. சோகம் தழுவுது..? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 02-27-2005

Quote:இரக்கமேயில்லாமல்
பூச்சியமென்றே உரைக்கிறது
மின்னஞ்சலின்
உள்ளகம்

பூச்சியத்தைப்
பார்க்கும் போது எல்லாம்
பைத்தியம் பிடிப்பதே
மேல் என தோன்ற வைக்கும்
வேதனையை
சிரமமின்றி தரும்
காமதேனுவே காதல்....
பார்த்துக் காதல் செய்யுங்கள்
பைத்தியம் பிடிப்பதைத்
தடுப்பதற்கதகவே..... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 02-27-2005

கவிதை நனறு பாராட்டுகள்



ஆமா பூச்சியத்துக்குள் இராச்சியமமைக்க முடியாதா...........


- shanmuhi - 02-27-2005

கவிதை அருமை... வாழ்த்துக்கள்.


- shanmuhi - 02-27-2005

Quote:ஆமா பூச்சியத்துக்குள் இராச்சியமமைக்க முடியாதா...........

பூச்சியத்துக்கள் இராச்சியம் அமைக்க முடியாது. வேண்டுமானால் அதற்கு முன் ஒன்றை போட்டு கொள்ளுங்கள். அதன் மதிப்பு கூடும்.


- KULAKADDAN - 02-27-2005

shanmuhi Wrote:
Quote:ஆமா பூச்சியத்துக்குள் இராச்சியமமைக்க முடியாதா...........

பூச்சியத்துக்கள் இராச்சியம் அமைக்க முடியாது. வேண்டுமானால் அதற்கு முன் ஒன்றை போட்டு கொள்ளுங்கள். அதன் மதிப்பு கூடும்.
அப்ப அதன் பின் அமைக்கலாமோ :wink: