Yarl Forum
கணணி பாதுகாப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணணி பாதுகாப்பு (/showthread.php?tid=4961)



கணணி பாதுகாப்பு - Mathan - 02-27-2005

பிரிட்டிஷ் அரசின் வைரஸ் அறிவிப்புகள்

பிரிட்டிஷ் அரசு கணினி, செல்பேசி போன்ற தகவல் சாதனங்களில் வைரஸ்கள் பற்றிய அறிவிப்புகளை (அதிகார்வபூர்வமாக) வெளியிடத் துவங்கியிருப்பதாக இன்றைக்கு பிபிஸி செய்தி வெளியிட்டிருக்கிறது. IT Safe என்று பெயரிடப்பட்ட இந்தச் சேவை வைரஸ் தொந்தரவுகள் தலையெடுக்கும்பொழுது IT Safe இணைய தளத்தின் வழியாகவும், பதிவு செய்து கொண்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கைகளை வெளியிடப் போகிறது.

தளத்திற்குப் போய்ப் பார்த்தபொழுது அங்கே மைக்ரோஸாப்ட் சம்பந்தமான சமாச்சாரங்கள் மாத்திரமே இருக்கின்றன. ஆப்பிள், லினக்ஸ் உள்ளிட்ட பிற இயக்குதளங்களுக்கும் இந்தச் சேவை நீட்டிக்கப்படுமா என்று தெரியவில்லை. அப்படி நீட்டிக்கப்பட்டால் பொதுவில் எந்த இயக்குதளம் பாதுகாப்பானது என்று குடிமக்கள் அறிந்துகொள்ள அரசாங்கமே வழி செய்வதாக இருக்கும்.

இதைக் கேட்டவுடன் என் மூளையில் ஒரு பொறி தட்டியது (ஆமாங்க, நம்ம துப்பறியும் கதைல தட்ற அதே பொறிதான்!) இந்த அமைப்பிலிருந்து வெளிவருவதைப் போலவே ஏமாற்றி (உதாரணமாக IT's Safe என்று பெயரை வைத்துக் கொண்டு) வழக்கமான எரிதர்கள் பொதுஜனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் அபாயம் இருக்கிறது. (இதன் உச்ச கட்டமாக அரசாங்க தளத்தையே அவர்கள் கைப்பற்றி ஜனங்களை பீதியில் ஆழ்த்தவும் முடியும்). இதை எல்லாம் எப்படித் தடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

* * *

இந்தச் சேவை;

However no software patches or programs will actually be dispensed through the site. The alerts will tell people how to go about getting hold of patches from security firms.

The NISCC spokesman said the site and alerting service would stay in existence for as long as there were security bugs on home computers and other gadgets.

அப்படின்னு சொல்லியிருக்காங்க. இதைப் படித்தவுடன் அதே மூளையில் இன்னொரு பொறி தட்டியது (ஹி.. ஹி..). அப்பப்ப எச்சரிக்கை உட்டுக்கிட்டு இருப்போம், ஆனா அபாயத்தைத் தடுக்க ஒன்னும் செய்யமாட்டோம். இதை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே. ஹ்ம்.. டோனி ப்ளேர் இதை அவரோட தோஸ்துக்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டு இருக்கார். ஹோம்லாண்ட் செக்யூரிட்டின்னு பெருசு இதேதான செஞ்சுகிட்டு இருக்கு.

venkat


- Mathan - 02-27-2005

பிரிட்டிஸ் அரசின் கணணி பாதுகாப்பிற்கான இணையத்தள முகவரி

http://www.itsafe.gov.uk/


- tamilini - 02-27-2005

நன்றி மதன் தகவலுக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 02-27-2005

மதன் உங்கள் பயனுள்ள தகவலக்கு நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 03-01-2005

நன்றி மதன்.. இது பிரிட்டனில் மட்டும் தானா..