![]() |
|
பொறுப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: பொறுப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் (/showthread.php?tid=4964) |
பொறுப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் - வியாசன் - 02-27-2005 இங்குள்ள பல உறவுகளுக்குபாடல்கள்(ஒலிவடிவம்) தேவைப்படுகிறது .களத்திலும் பலரிடம் இருக்கும் அல்லது தரவிறக்கம் செய்யக்கூடிய தளத்தை தெரிந்து வைத்திருப்பார்கள. தகவல் (செய்தி)பரிமாற்றம் செய்யக்கூடியதாக ஒரு நிரந்தர பகுதியை உருவாக்கித் தந்தால் அதுபலருக்கு உதவியாக இருக்கும்.அதனால் பல களஉறவுகள் பயன்பெறுவார்கள் இதை கவனத்தில் பொறுப்பாளர்கள் எடுத்தால் பியோசனமாக இருக்கும். பொறுப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் - eelapirean - 02-27-2005 வியாசனின் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. - Mathan - 02-27-2005 வியாசன், அங்கத்தவர் பகுதியில் பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். உங்கள் கருத்து என்ன? - yalini - 02-27-2005 நகர்த்தப்பட்டுள்ளது _ யாழினி - வியாசன் - 02-27-2005 மதன் அங்கத்துவர் பகுதியில் என்றால் அது பின்னுக்கு போய்கொண்டிணருக்கும். தனிப்பகுதியாக இருந்தால் தேவைப்பட்டவர்கள் அது அங்கத்துவராக இல்லாவிட்டாலும் பார்க்கமுடியும். அதனால் பலருக்கு பிரயோசனமாக இருக்கும். பல அபூர்வமான பாடல்களை பலர் பெற்றுக்கொள்ளமுடியும்.. என்று நினைக்கிறேன். மற்றவர்களும் பொறுப்பாளர்களும் தங்கள் கருத்தை கூறினால் வசதியாக இருக்கும். சமையல் பகுதிபோல இதுவும் தனியாக இருந்தால் வசதியாக இருக்கும். - shanmuhi - 02-27-2005 ஆஹா.... சங்கடமான சமையலை விட்டு சங்கீதம் பாடவா...? ? ? - KULAKADDAN - 02-28-2005 முற்றம் பகுதியில் பாடல்கள் தரவிறக்கம் செய்ய கூடிய இணைப்புக்கள் உண்டே........ - Mathan - 02-28-2005 பாடல்களை அறிமுகப்படுத்தவும் பகிர்ந்துகொள்வும் இளைப்பாறும் களம் சரியான இடம். அதில் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மற்றும் பாடல் இணைப்பை பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி மட்டுமா அல்லது தரவேற்றகூடியவசதியுமா? தரவேற்றவேண்டுய தேவை இருந்தால் பாடலை வேறு இலவச தளங்களில் தரவேற்றிவிட்டு இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் யாழ் களத்தில் தரவேற்றும் வசதி என்றால் அதற்கு நிறைய இடம் தேவை, அத்துடன் அது களத்தை நடாத்துபவருக்கு பொருட் செலவையும் ஏற்படுத்தும். - shanmuhi - 02-28-2005 Quote:இங்குள்ள பல உறவுகளுக்குபாடல்கள்(ஒலிவடிவம்) தேவைப்படுகிறது .களத்திலும் பலரிடம் இருக்கும் அல்லது தரவிறக்கம் செய்யக்கூடிய தளத்தை தெரிந்து வைத்திருப்பார்கள. தகவல் (செய்தி)பரிமாற்றம் செய்யக்கூடியதாக ஒரு நிரந்தர பகுதியை உருவாக்கித் தந்தால் அதுபலருக்கு உதவியாக இருக்கும்.அதனால் பல களஉறவுகள் பயன்பெறுவார்கள் இதை கவனத்தில் பொறுப்பாளர்கள் எடுத்தால் பியோசனமாக இருக்கும்.நிச்சயம் யாழ்கள உறவுகள் பயன் பெறுவார்கள். களபொறுப்பாளர் கவனத்தில் எடுத்து அதற்குறிய வழிவகைகள் செய்வார் என்றே நம்புகிறேன். - வியாசன் - 02-28-2005 மதன் எங்கு என்பது முக்கியமல்ல சுலபமாக கையாளக்கூடியதாக இருந்தால் சரி. ஒரு பிரிவாக இருந்தால் எவருக்கும் தேவைப்படும்போது உதாரணமாக இன்று சணமுகி ஒரு பாடலை கேட்டிருந்தார். அது கவிதைப்பகுதியில் கேட்கப்பட்டிருப்பதால் வெகுவிரைவில் நீண்டதுாரம் போய்விடும். ஏனென்றால் களத்தில் திறமையான கவிஞர்கள் நாள்தோறும் அற்புதமான கவிதைகளை எழுதுவதால். ஒரு மாதத்தின் பின் வேறொருவருக்கு இதேபாடல்தேவையாயின் தேடுவது சிரமம் மதன் நீங்கள் குறிப்பிட்டதுபோல இளைப்பாறுங்களத்தில் ஒரு பிரிவை இதற்காக உருவாக்கித்தந்தால் நன்று |