Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 576 online users.
» 0 Member(s) | 574 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,645
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,260
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,556
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256

 
  ganna carry
Posted by: Rajan - 03-01-2005, 09:17 PM - Forum: சமையல் - Replies (6)

எப்பட்டி கானா கறி செய்யலாம்
வெங்காயம் மிளகாய் கடுகு சிரகம் வெந்தயம் கருவேப்பிலை
இஞிசி உள்ளி எல்லாத்தையும்போட்டு தாளித்துவட்டு
களுவிய பருப்பை பொட்டு அவிய விடவேண்டும்.முக்கால்வாசி
அவிந்தவுடன் கிரையை போடடு அவிக்கணே;டும் அதுதான் கானாகறி
நல்ல சுவையாய் இருக்கும் செய்து பார்த்துவிட்டு செல்லவும்

Print this item

  மொழிபெயர்ப்பு இயந்திரம்
Posted by: Vaanampaadi - 03-01-2005, 08:41 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (8)

மொழிபெயர்ப்பு இயந்திரம்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/03/20040304151211robot_papero66.jpg' border='0' alt='user posted image'>


புதியதொரு நாட்டுக்கு - இடத்துக்குச் செல்கிறீர்களா, மொழி புரியவில்லையா, கவலையை விடுங்கள், மொழிபெயர்ப்பு இயந்திரம் - அதாவது மொழிமாற்றி என்பது தயார் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

அதாவது புதிய மொழியில் ஒரு வாசகத்தைக் கண்டீர்கள் என்றால், அதை அப்படியே அந்த இயந்திரத்தில் டைப் செய்து கொண்டால், உங்களுக்கு வேண்டிய மொழியில் - அதாவது தமிழ் அல்லது ஆங்கிலத்தில் - அதன் மொழிபெயர்ப்பு அப்படியே அச்சாகிவிடும் என்கிறார்கள் இவர்கள்.

இதைப்போன்ற மொழிமாற்றிகள் சில ஏற்கனவே இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

ஆனால் வேறு சில விஞ்ஞானிகள் இதுபற்றி சந்தேகங்களை எழுப்புகிறார்கள்.

உதாரணமாக, அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்ற கம்பராமாயண வரிகளை, இந்த மொழிமாற்றியில் இட்டால், ராம பிரானும் சீதையும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள் என்கிற தொனிப்பொருள் மொழிபெயர்ப்பில் வருமா என்பது சந்தேகம்தான்.

ஆக, தமிழைப்போன்றே எந்த ஒரு மொழிக்கும் சிறப்பு அம்சங்கள் என்று சில இருப்பதால் அவற்றை எந்திர கதியில் மொழிமாற்ற முடியாது என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

BBC Thamiloosai

Print this item

  சொந்த மாவட்டத்தில் அகதிகளாக வாழும் அலஸ்தோட்ட முகாம் மக்கள்
Posted by: Vaanampaadi - 03-01-2005, 08:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சொந்த மாவட்டத்தில் அகதிகளாக வாழும் அலஸ்தோட்ட முகாம் மக்கள்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050129164639ratna-29th-jan-203.gif' border='0' alt='user posted image'>


திருகோணமலை அலஸ்தோட்டம் முகாமில் இருக்கும் சுமார் 3000 பேரும் இன்று நேற்றல்ல சுமார் 23 வருடங்களாக அகதிகளாக இருக்கின்றனர்.

இலங்கையிலும், இந்தியாவிலும் மாறிமாறி பல தடவைகள் இவர்கள் அகதிகளாக அலைந்து வருகின்றனர்.

அங்கு சென்ற எமது செய்தியாளர் ஜெகதீசனிடம் இவர்கள் கூறிய கதைகள் கண்ணீரை வரவழைகின்றன.

1983 ஆம் ஆண்டு முதல் போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளான இவர்கள் தற்போது சுனாமியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிய துணியோடு எஞ்சியிருக்கும் இவர்கள் கேட்பதெல்லாம் தமக்கு வாழ ஒரு இடத்தை அரசு தரவேண்டும் என்பதாகும்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தமது வீடுகள் இருப்பதால் தமக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர்.

BBC தமிழோசை

Print this item

  வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும்
Posted by: pahi300 - 03-01-2005, 08:17 PM - Forum: அறிமுகம் - Replies (63)

வணக்கம் மோகன் மாமா மற்றும் யாழ்கள மாமா மாமிமாருக்கும்
எனது பெயர் பகிர்த்தனா வயது 8 எனது தம்பி பெயர் விஸ்வா
வயது 4 நான் உங்களுடனும் என்னைபோல் சிறுவர்களுடனும்
எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் என்னை வரவேற்பிர்களா
நன்றி
பகிர்த்தனா

Print this item

  கேள்விகள்
Posted by: eelapirean - 03-01-2005, 05:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

http://www.eelamweb.com/quiz/ க்கு போனால் தமிழீழத்தைப் பற்றிய கேள்விகள் இருக்கின்றன.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.[

Print this item

  ஜெர்மனியில் இருந்து கணவன் கடத்திய 2 குழந்தைகள் .... ....
Posted by: Vaanampaadi - 03-01-2005, 11:51 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (4)

ஜெர்மனியில் இருந்து கணவன் கடத்திய 2 குழந்தைகள் இருப்பிடத்தை கண்டுபிடியுங்கள் வெளிநாட்டு பெண் மனு மீதுமதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, மார்ச்.1- ஜெர்மனியில் இருந்து கணவர் கடத்திய 2 குழந்தைகள் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என மனைவி தொடர்ந்த வழக்கில் இருப்பிடத்தை கண்டுபிடிக்க போலீசாருக்கு நோட்டீசு அனுப்பும்படி மதுரை ஐகோர்;ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டில் மனு

ஜெர்மன் நாட்டு குடி உரிமை பெற்றவர் மாலினி ஜனராஜன் (வயது32). இவர் தற்போது சென்னை எழும்பூர் சூர்யா பணிப்பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது„-

நான் ஏற்கனவே இலங்கை குடி உரிமை பெற்று உள்ளேன். எனது அண்ணன்- தம்பி இரு வரும் ஜெர்மனி நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். அங்கு ரெஸ்டாரண்ட் வைத்து உள்ளார்கள். ஜனராஜன் எனது கணவர். அவரும் ஜெர்மன் நாட்டு குடி உரிமை பெற்றவர்.

காதல் திருமணம்

நான் எனது அண்ணன் - தம்பிகளுடன் ஜெர்மனியில் இருந்தபோது ஜனராஜனுடன் காதல் ஏற்பட்டது. கடந்த 1998-ல் நான் ஜனராஜனை ஜெர்மனியில் பதிவு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு மகிசாசினி, விதுசாசினி என்ற 2 பெண் குழந்தைகள் பிறந்தன. 2002-ல் எனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பள்ளிக்கூடத்திற்கு 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெர்மனி போலீசில் புகார் செய்தேன். போலீசார் விசாரித்து விட்டு, கணவர் ஜெர்மனியில் இருந்து லண்டன் வழியாக கொழும்பு நகருக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

நான் இலங்கை சென்றேன். அங்கிருந்து எனது கணவர் இந்தியாவிற்கு குழந்தைகளுடன் சென்றதை அறிந்து இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கணவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. கணவர் 2 பெண் குழந்தைகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. வளசர வாக்கம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் கணவருடைய தாய்- தந்தையை விசாரித்தபோது கணவர் 12-1-04-ல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சினிமாவிற்கு சென்றவர் காணவில்லை என கூறினர்.

மனு டிஸ்மிஸ்

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டபோது இந்த மனு ஜெர்மனி நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கூறி கடந்த 28-1-05-ல் டிஸ்மிஸ் ஆகி உள்ளது.

கணவர் ஜனராஜன் ராமேசுவரத்தில் இருந்து ஒரு கள்ளத்தோணியில் வந்த போது கணவர், 2-வது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் பாம்பன் போலீசார் கைது செய்து விசாரித்தபோது கணவர் தனது பெயரை கிருஷ்ணமுரளி என்றும், குழந்தைகள் பெயரை வைஸ்ணவி, வைசாலி என பொய்யாக கூறியும் பொய்யான இலங்கை பாஸ் போர்ட் கொடுத்து உள்ளார். 2-வது மனைவியை உண்மையான தாயார் என்றும் கூறி உள்ளார்.

இது குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கணவரின் 2-வது மனைவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். கணவர் சிறையில் இருந்து வருகிறார். 2 குழந்தைகளை மதுரை சிறார் நீதி வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த செல்லா என்ற பெண்மணி, கணவருடைய தங்கை என கூறி குழந்தைகளை சிறார் நீதி வாரியத்தில் இருந்து அழைத்து சென்று அவர்களை மாமனார், மாமியார் வசம் ஒப்படைத்து உள்ளார்.

இந்த நிலையில் ராமேசு வரத்திற்கும், சென்னைக்கும் குழந்தைகளை மாற்றி வருகிறார்கள். இதனால் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. அதனால் மதுரை சிறார் நீதி வாரியம் குழந்தைகளை ஒப்படைக்க வழங்கிய உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி என். கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி மீண்டும் குழந்தைகளை சட்ட விரோதமாக இலங்கைக்கு அழைத்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதனால் பாம்பன் போலீஸ் இன்ஸ் பெக்டர் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து வேறு எந்த இடத்திற்கும் அழைத்து சென்றுவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி உத்தரவிட்டார்.

பாம்பன் போலீசார் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்ற செல்லா ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

தினகரன்

Print this item

  சினிமா இசையமைப்பாளர் டி.கே.புகழேந்தி மரணம்
Posted by: Vaanampaadi - 03-01-2005, 11:50 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - No Replies

சினிமா இசையமைப்பாளர்
டி.கே.புகழேந்தி மரணம்


சென்னை, மார்ச். 1-

பிரபல சினிமா இசையமைப்பா ளர் கே.வி. மகாதேவனிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த வர், டி.கே. புகழேந்தி. இவர் திரு வனந்தபுரத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.

குருதட்சணை, முதலாளி உள் பட சில தமிழ் படங்களுக்கும், ஏராளமான மலையாள படங் களுக்கும் அவர் இசையமைத்து இருந்தார்.

டி.கே. புகழேந்தியின் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராள மான பிரமுகர்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் கள். உடல் தகனம் இன்று (செவ் வாய்க்கிழமை) பகல் 2 மணிக்கு, பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது.

மரணம் அடைந்த டி.கே. புகழேந்திக்கு சேதுலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்கள் - ஒரு மகளும் இருக்கிறார்கள்.

Dailythanthi

Print this item

  விலைமாதரின் குழந்தைகளின் விவரணப்படத்துக்கு
Posted by: Vaanampaadi - 02-28-2005, 08:56 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

இந்திய விலைமாதரின் குழந்தைகளின் விவரணப்படத்துக்கு ஆஸ்கார் விருது

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40858000/jpg/_40858785_brothels_203.jpg' border='0' alt='user posted image'>

இந்தியாவின் கொல்கொத்தா நகரில், விலைமாதர்கள் வாழும் பகுதியொன்றில், விலைமாதர்களின் குழந்தைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்றிற்கு, ஹாலிவூட்டின் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளில், மிகச் சிறந்த விவரணச் சித்திரத்திற்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

விபச்சார விடுதிகளுக்குள் பிறந்தவர்கள் என்ற இந்தத் திரைப்படத்தை, இந்த சிவப்பு விளக்குப் பகுதியில் வாழும் சிறார்களே எடுத்தார்கள்.

இத்திரைப்படத்தின் இயக்குனர்களான ஸானா பிரிஸ்கியும், ராப் காப்மனும் இந்தச் சிறார்களிடம் காமராக்களைக் கொடுத்தனர்.

இந்த சிறார்கள் தாங்கள் வாழும் ஓர் துன்பமான உலகை, மிகத் துல்லியமாகவும், தனித்தன்மையுடனும் மிகச் சிறப்பாகக் கண்முன் நிறுத்தியதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுபவர்கள் அடையாளங் காணப்படக்கூடாது என்பதற்காகவும், இந்தத் திரைப்படம் காட்டப்பட்டால்,பிரச்சனைகள் உருவாகலாம் என்பதாலும் இந்தியாவில் இது திரையிடப்படவில்லை என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.


தமிழோசை

Print this item

  சினிமா ஹீரோக்களின் இன்னொரு முகம்..!
Posted by: vasisutha - 02-28-2005, 06:40 PM - Forum: சினிமா - Replies (22)

<img src='http://www.kumudam.com/reporter/030305/pg1t.jpg' border='0' alt='user posted image'>

ஜூலை 16 _ 2004. இந்தத் தேதியை யாருமே மறக்க முடியாது. காரணம், அன்றுதான் கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் தொண்ணூற்று நான்கு குழந்தைகள் குவியல் குவியலாய் எரிந்து மடிந்தார்கள். இந்தியாவே குலுங்கிப்போன அந்தக் கோர விபத்தில் சிக்கிய பதினெட்டுக் குழந்தைகள் தீக்காயத்தோடு, அந்தத் தேதியின் நினைவுச் சின்னமாய் இன்றும் இருக்கிறார்கள்.

அந்தத் துயரச் சம்பவத்தால் மனிதநேயமிருந்த ஒவ்வொருவரும் நெஞ்சுருகிப் போனார்கள். ஒவ்வொரு வகையிலும் நேசக்கரம் நீட்டினார்கள். குழந்தைகளை இழந்த குடும்பத்தாருக்கு அவரவரும் முடிந்த வரையில் உதவி செய்தார்கள்.

ஆயிற்று. அந்த வரலாற்றுச் சோகம் நடந்து ஏழு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தநிலையில், பத்திரிகையாளர் சுந்தரவடிவேலு உதிர்ந்த மொட்டுகள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சித் தலைவர், தாசில்தார் மற்றும் உள்ளூர்ப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்தித்து பாதிப்பின் நிஜங்களையும் மடிந்த குழந்தைகளின் கனவுகளையும் அப்படியே பதிவு செய்துள்ளார்.

அந்தப் புத்தகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கியவர்களின் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்தப் பட்டியலில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அறிவித்த உதவித் தொகைகள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இது என்ன அபத்தம்? தீவிபத்து நடந்தபோது கும்பகோணம் பகுதியிலேயே படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித், ஓடோடி வந்து அந்த கோரக் காட்சியைக் கண்டு நெஞ்சு துடித்துப் பதறி, பாதிக்கப்பட்டோருக்கு இரண்டு லட்ச ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக முதன் முதலில் அறிவித்திருந்தாரே! அது என்ன ஆயிற்று?

நடிகர் கமல், பன்னிரண்டு லட்ச ரூபாய் உதவித் தொகை தருவதாகவும், நேரில் சென்று நெஞ்சுருகிய விஜயகாந்த் பத்து லட்ச ரூபாய் உதவித் தொகை தருவதாகவும் அறிவித்தாரே... அவையெல்லாம் என்னவாயிற்று?

சூப்பர் ஸ்டார் ரஜினி சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் தனது மனைவி லதாவை அங்கு அனுப்பி வைத்தார். அதற்கு முதல்நாளே தன் சார்பாக இரண்டு லட்ச ரூபாய் உதவித் தொகை தருவதாக அறிவித்திருந்தாரே... அதுவும் என்னவாயிற்று?

இப்படி பல நடிகர்களும் முன் வந்து பரபரப்பாக அறிவித்த உதவித் தொகை மொத்தமும் சுமார் எழுபது லட்சத்தைத் தாண்டியது. ஆனால் பத்திரிகையாளர் தொகுத்திருந்த புத்தகத்தில் அப்படி எதுவுமே பதிவாகவில்லை. ஏன் என்ற குடைச்சல் கேள்விகளுடன் அவரையே நேரில் சந்தித்தோம். அதன் பிறகுதான் அந்த விஷயமே விளங்கியது.

என்னுடைய நோக்கம் நடிகர்கள் தாங்கள் அறிவித்தபடி உதவித் தொகை கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுவதல்ல. எனது நோக்கமே வேறு. கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இப்படியரு கோரச் சம்பவம் நடந்திருக்கிறதா என்று அலசியபோதுதான், அதற்கு முன்பே 1964_ல் மதுரை பாடசாலையில் முப்பத்தொன்பது குழந்தைகள் எரிந்து போனதும், 1995_ல் அரியானாவிலுள்ள பள்ளியன்றின் ஆண்டு விழாவில் முந்நூறு பிள்ளைகள் மடிந்து போனதும் தெரிய வந்தது. ஆனால், அவைபற்றிய முழுமையான தகவல்கள் ஏதுமில்லை. கும்பகோணச் சம்பவமும் எதிர்காலத்தில் அப்படி இருந்துவிடக் கூடாது என்றுதான் இறந்துபோன குழந்தைகள் தொண்ணூற்று நான்கு பேரின் புகைப்படங்களோடு அவர்களது பெற்றோர்களின் படங்களையும் திரட்டினேன்.

அந்த வகையில் அவர்கள் அனைவரிடமும் பலமுறை சந்தித்துப் பேசினேன். அதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குமேல் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அப்போது விசாரித்ததில் எந்தக் குடும்பமும் நடிகர்களிடமிருந்து உதவித் தொகை கிடைத்ததாகச் சொல்லவில்லை. வற்புறுத்திக் கேட்டபோதுதான் நடிகர்கள் உதவி பற்றிப் பேசவே மறுத்தார்கள்.

ஏதோ பரபரப்பிற்காக பத்து லட்சம் உதவி, ஐந்து லட்சம் உதவி என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அதை வைத்து, எங்களைச் சுற்றியுள்ள பலரும், நடிகர்கள் மூலம் ஏதோ பெரிய தொகையை நாங்கள் வாங்கி வைத்துக் கொண்டதாகப் பேசிக் கொண்டது வருத்தமாக இருந்தது. அதற்காக அவர்கள் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அவர்கள் கொடுப்பார்கள் என்பதற்காகவா எங்கள் குழந்தைகளை இழந்தோம்... என்று கண்ணீர் வடித்தவர்கள், அதுபற்றி எதுவுமே பேசாதீர்கள் என்று உண்மையிலேயே உதவியவர்களின் பட்டியலைச் சொன்னார்கள்.

அவர்கள் சொல்வதை உறுதிப்படுத்திக்கொள்ள அந்தப் பட்டியலோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தாசில்தார் ஆகியோரையும் சந்தித்தேன்.

அவர்கள், மாநில அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய், மத்திய அரசு ஐம்பதாயிரம், உ.பி. அரசு (சமாஜ்வாடி கட்சி) நாற்பத்தொராயிரம் என்று உதவியது உள்பட, மேலும் சில விவரங்களையும் கொடுத்தார்கள். அதோடு ஊர்ப் பிரமுகர்கள் போன்ற பலரையும் சந்தித்து ஒருமுறைக்குப் பலமுறை விசாரணை செய்த பிறகே உதவியவர்களின் பட்டியலை என் புத்தகத்தில் பதிவு செய்தேன். (பட்டியல் உள்ளது.)

எந்த இடத்திலும் யாரும் நடிகர்கள் உதவி செய்தார்கள் என்று கூறவேயில்லை. ஒருவேளை மறந்திருக்கலாமோ என்ற நோக்கில், புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவர்களை அழைத்து, அதன் மூலம் அந்த உதவித் தொகை பற்றி நினைவூட்டலாமே என்கிற நோக்கில் அவர்களை அழைக்கும் முயற்சியிலும் இறங்கினேன்.

நடிகர் ரஜினிக்காக அவரது ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணாவைச் சந்திக்கச் சென்றேன். ஒன்றுமில்லை. அணிந்துரை எழுத வேண்டும். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி எடுத்துச் சென்றிருந்தேன். படிக்க நேரமில்லை... விஷயத்தைச் சொல்லு என்று அவரது அலுவலக வாசலிலேயே எனது கடிதத்தை வாங்கிக் கொண்டு சென்றார். பிறகு பதிலே இல்லை.

நடிகர் கமலின் பி.ஆர்.ஓ. மூலம் புத்தகத்தையும் ஒரு கடிதத்தையும் மும்பையிலிருந்த கமலுக்கு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்தும் பதில் இல்லை. பிறகு நடிகர் விஜயகாந்தை அணுகியபோது, அணிந்துரை அளிப்பதாகச் சொன்னார். பிறகு ஏனோ மறுத்துவிட்டார். யாரிடமும் அறிவித்த உதவித் தொகையை நீங்கள் ஏன் வழங்கவில்லை? என்று நான் கேட்கவேயில்லை.

ஏனோ அனைவருமே தவிர்த்து விட்டார்கள். இவற்றைத்தான் என் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேனே தவிர, மற்றபடி எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. தீவிபத்து சம்பவத்தை முழுமையாகப் பதிவு செய்வது மட்டும்தான் என் நோக்கமாக இருந்தது! என்று முடித்துக் கொண்டார் அவர்.

நமக்கு மேலும் தலை சுற்றியது. பிரபலமான நமது ஹீரோக்கள், தாங்களாகவே அறிவித்த உதவித் தொகையை எப்படிக் கொடுக்காமல் இருந்திருப்பார்கள்?

ஒருவேளை முதல்வரிடம் அளித்திருப்பார்களோ? அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்திருப்பார்களோ என்கிற சந்தேகத்தோடு அந்த சமயத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டராக (இப்போது நாகை மாவட்ட கலெக்டர்) இருந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். அப்படி யாரும் என்னிடம் கொடுக்கவில்லையே என்றார். அடுத்து தற்போதைய தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டோம். அங்கிருந்தும் இல்லை என்ற பதில்தான்.

தொடர்ந்து முதல்வர் அலுவலக பி.ஆர்.ஓ. பிரிவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக எந்த நடிகரும் முதல்வரிடம் நிதியுதவி அளிக்கவில்லை என்றவர்கள் எதற்கும் தமிழக அரசு செய்திப் பிரிவு தலைமையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்களேன் என்றார்கள்.

உடனடியாகச் செய்திப் பிரிவு பி.ஆர்.ஓ. அலுவலகத்துடன் பேசினோம். சுனாமி நிதி கொடுக்க வந்த பட்டியல் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக எந்த நடிகரும் நிதியுதவி அளிக்கவில்லை என்று கூறினார்கள்.

அப்படியானால் நடிகர்கள் அறிவித்த நிதியுதவி எங்கேதான் சென்றது? என்ற கேள்விகளுடன் சம்பந்தப்பட்ட நடிகர்களையே தொடர்பு கொண்டோம்.

நடிகர் அஜித் சார்பாக அவரது பி.ஆர்.ஓ. சுந்தர் பேசும்போது, உங்கள் தகவலை தலைவரிடம் (அஜித்) தெரிவித்தேன். அந்தச் சமயத்தில் அவர் இரண்டு லட்ச ரூபாய் நிதி கொடுப்பதாகச் சொன்னது உண்மைதான். ஆனால் கொடுக்கவில்லை. அப்போது அவருடைய அட்டகாசம் படத்திற்கு சொந்தப் பணம் ஒன்றரைக் கோடியைச் செலவிட்டுத்தான் ரிலீஸ் செய்திருந்தார். அதனால் கொஞ்சம் பண நெருக்கடி ஏற்பட்டது. அதன்பிறகு, அந்தத் தொகையையும் சேர்த்து, சுனாமி நிதிக்காக முதல்வரிடம் பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டார்! என்று கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பி.ஆர்.ஓ.விடம் பேசியபோது, ரஜினியின் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். ரஜினி வீட்டிற்குத் தொடர்பு கொண்டோம். மறுமுனையில் பேசிய ஆண் குரல், என்ன ஏது என்கிற தகவலைக் கேட்டது. விஷயத்தைச் சொன்ன நாம், ரஜினியின் பதில் வேண்டும் என்றோம்.

நீங்கள் சொன்னதை அவரிடம் தெரிவித்துவிடுகின்றோம் என்ற பதில்தான் கிடைத்தது. இதே போல் எத்தனை முயன்றும் கமலின் பதிலையும் பெற முடியவில்லை.

இறுதியில் இரண்டு நாட்கள் முயற்சிக்குப் பிறகு பேசிய நடிகர் விஜயகாந்த், நான் உதவித் தொகை அறிவித்தது உண்மைதான். அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டிக் கொடுப்பதாக இருந்தார்கள். அதனால் அவர்களிடம் பணத்தைக் கொடுத்தேன். அதில் சின்னத் தடங்கல். அதனால் திருப்பி என்னிடமே பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டார்கள். வாங்கிக் கொண்டேன். அது இன்னமும் என்னிடமேதான் இருக்கிறது! சம்பவத்திற்குப் பிறகு நெறைஞ்ச மனசு படப்பிடிப்பு வேலை வந்துவிட்டது. தொடர்ந்து வேலைகள். இப்போதும் படப்பிடிப்பில்தான் இருக்கிறேன். விரைவில், எனது ரசிகர் மன்றத் தலைமை மூலமாக இறந்தவர்களின் குடும்ப முகவரிகளை எல்லாம் விசாரித்து உதவிப் பணத்தைக் கொடுக்க இருக்கிறேன்! என்றார்.

நமது நோக்கம் ஹீரோக்களைப் புண்படுத்துவதல்ல. அவர்களாகவே அறிவித்த தொகையை அவர்கள் வழங்காமல் போனதை நினைவூட்டுவதுதான். இல்லையெனில் நமது ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையிலும் நன்றாக நடிக்கிறார்கள் என்கிற அவச் சொல் வந்துவிடுமே என்கிற கவலைதான் நமக்கு.

[size=9]நன்றி: குமுதம்.கொம்

Print this item

  பெண் போராளிகள் மீது தாக்குதல்
Posted by: hari - 02-28-2005, 05:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (36)

<b>Senior LTTE political official shot</b>

[TamilNet, February 28, 2005 13:54 GMT]

A senior political official and two of her colleagues were shot and seriously wounded around 6 p.m.Monday near Akkaraipattu by gunmen suspected to be from a paramilitary working with a Sri Lankan armed forces, LTTE sources in Batticaloa said.

Ms. Kuveni, head of LTTE's political division (women) for Batticaloa-Amparai was traveling in a auto rickshaw with two of her colleagues in Thambattai, about six kilometres south of Akkaraipattu when gunmen riding a motorbike opened fire on them, LTTE sources said.

The three were rushed to Kalmunai hospital.

tamilnet

Print this item