Yarl Forum
ஜெர்மனியில் இருந்து கணவன் கடத்திய 2 குழந்தைகள் .... .... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஜெர்மனியில் இருந்து கணவன் கடத்திய 2 குழந்தைகள் .... .... (/showthread.php?tid=4940)



ஜெர்மனியில் இருந்து கணவன் கடத்திய 2 குழந்தைகள் .... .... - Vaanampaadi - 03-01-2005

ஜெர்மனியில் இருந்து கணவன் கடத்திய 2 குழந்தைகள் இருப்பிடத்தை கண்டுபிடியுங்கள் வெளிநாட்டு பெண் மனு மீதுமதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, மார்ச்.1- ஜெர்மனியில் இருந்து கணவர் கடத்திய 2 குழந்தைகள் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என மனைவி தொடர்ந்த வழக்கில் இருப்பிடத்தை கண்டுபிடிக்க போலீசாருக்கு நோட்டீசு அனுப்பும்படி மதுரை ஐகோர்;ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டில் மனு

ஜெர்மன் நாட்டு குடி உரிமை பெற்றவர் மாலினி ஜனராஜன் (வயது32). இவர் தற்போது சென்னை எழும்பூர் சூர்யா பணிப்பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது„-

நான் ஏற்கனவே இலங்கை குடி உரிமை பெற்று உள்ளேன். எனது அண்ணன்- தம்பி இரு வரும் ஜெர்மனி நாட்டு குடியுரிமை பெற்றவர்கள். அங்கு ரெஸ்டாரண்ட் வைத்து உள்ளார்கள். ஜனராஜன் எனது கணவர். அவரும் ஜெர்மன் நாட்டு குடி உரிமை பெற்றவர்.

காதல் திருமணம்

நான் எனது அண்ணன் - தம்பிகளுடன் ஜெர்மனியில் இருந்தபோது ஜனராஜனுடன் காதல் ஏற்பட்டது. கடந்த 1998-ல் நான் ஜனராஜனை ஜெர்மனியில் பதிவு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு மகிசாசினி, விதுசாசினி என்ற 2 பெண் குழந்தைகள் பிறந்தன. 2002-ல் எனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பள்ளிக்கூடத்திற்கு 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெர்மனி போலீசில் புகார் செய்தேன். போலீசார் விசாரித்து விட்டு, கணவர் ஜெர்மனியில் இருந்து லண்டன் வழியாக கொழும்பு நகருக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

நான் இலங்கை சென்றேன். அங்கிருந்து எனது கணவர் இந்தியாவிற்கு குழந்தைகளுடன் சென்றதை அறிந்து இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கணவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. கணவர் 2 பெண் குழந்தைகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. வளசர வாக்கம் போலீசில் புகார் செய்தேன். போலீசார் கணவருடைய தாய்- தந்தையை விசாரித்தபோது கணவர் 12-1-04-ல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சினிமாவிற்கு சென்றவர் காணவில்லை என கூறினர்.

மனு டிஸ்மிஸ்

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டபோது இந்த மனு ஜெர்மனி நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கூறி கடந்த 28-1-05-ல் டிஸ்மிஸ் ஆகி உள்ளது.

கணவர் ஜனராஜன் ராமேசுவரத்தில் இருந்து ஒரு கள்ளத்தோணியில் வந்த போது கணவர், 2-வது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் பாம்பன் போலீசார் கைது செய்து விசாரித்தபோது கணவர் தனது பெயரை கிருஷ்ணமுரளி என்றும், குழந்தைகள் பெயரை வைஸ்ணவி, வைசாலி என பொய்யாக கூறியும் பொய்யான இலங்கை பாஸ் போர்ட் கொடுத்து உள்ளார். 2-வது மனைவியை உண்மையான தாயார் என்றும் கூறி உள்ளார்.

இது குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கணவரின் 2-வது மனைவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். கணவர் சிறையில் இருந்து வருகிறார். 2 குழந்தைகளை மதுரை சிறார் நீதி வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த செல்லா என்ற பெண்மணி, கணவருடைய தங்கை என கூறி குழந்தைகளை சிறார் நீதி வாரியத்தில் இருந்து அழைத்து சென்று அவர்களை மாமனார், மாமியார் வசம் ஒப்படைத்து உள்ளார்.

இந்த நிலையில் ராமேசு வரத்திற்கும், சென்னைக்கும் குழந்தைகளை மாற்றி வருகிறார்கள். இதனால் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. அதனால் மதுரை சிறார் நீதி வாரியம் குழந்தைகளை ஒப்படைக்க வழங்கிய உத்தரவை ரத்து செய்யவேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி என். கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி மீண்டும் குழந்தைகளை சட்ட விரோதமாக இலங்கைக்கு அழைத்து செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதனால் பாம்பன் போலீஸ் இன்ஸ் பெக்டர் குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து வேறு எந்த இடத்திற்கும் அழைத்து சென்றுவிடாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி உத்தரவிட்டார்.

பாம்பன் போலீசார் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்ற செல்லா ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

தினகரன்


- Malalai - 03-01-2005

:evil: :twisted: :evil: :twisted:


- வியாசன் - 03-01-2005

மழலை எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள். பிறகு நாங்கள் உங்களை உப்படி தேடித்திரியமுடியாது. Cry Cry Cry


- Malalai - 03-02-2005

எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கிறது தான் நல்லது வியாசன் அண்ணா சொன்ன மாதிரி..... :mrgreen:


டிரைவ்_இன்' விபசார விடுதி - Vaanampaadi - 03-07-2005

டிரைவ்_இன்' விபசார விடுதி

ஜெர்மனி நகர தெருக்களில் ஆங்காங்கே கார்களை நிறுத்தி விபசாரம் நடைபெற்று வந்தது. இதை தடுப்பதற்காக, `டிரைவ்_இன்' ஓட்டல்கள், சினிமா தியேட்டர்களைப்போல் `டிரைவ் இன்_விபசார விடுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2001_ல் 8 தடுப்பு அறைகளுடன் கலோக்னே நகரில் `முதல் விடுதி' அமைக்கப்பட்டது. சொந்தமாக கார் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பெட்டக வசதி செய்து கொடுக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த `டிரைவ்_இன்' விடுதியில் விபசார பெண்கள் மிரட்டப்பட்டால் உதவி கோரி அபாய ஒலி எழுப்பும் கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த புதிய முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால், எஸ்ஸன், பான், டசல்டொர்ப் ஹானோவர் போன்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விபசார பெண்கள் தாக்கப்படும் சம்பவங்கள் `டிரைவ்_இன்' முறையினால் குறைந்து இருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.