Yarl Forum
விலைமாதரின் குழந்தைகளின் விவரணப்படத்துக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: விலைமாதரின் குழந்தைகளின் விவரணப்படத்துக்கு (/showthread.php?tid=4942)



விலைமாதரின் குழந்தைகளின் விவரணப்படத்துக்கு - Vaanampaadi - 02-28-2005

இந்திய விலைமாதரின் குழந்தைகளின் விவரணப்படத்துக்கு ஆஸ்கார் விருது

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40858000/jpg/_40858785_brothels_203.jpg' border='0' alt='user posted image'>

இந்தியாவின் கொல்கொத்தா நகரில், விலைமாதர்கள் வாழும் பகுதியொன்றில், விலைமாதர்களின் குழந்தைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் ஒன்றிற்கு, ஹாலிவூட்டின் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகளில், மிகச் சிறந்த விவரணச் சித்திரத்திற்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

விபச்சார விடுதிகளுக்குள் பிறந்தவர்கள் என்ற இந்தத் திரைப்படத்தை, இந்த சிவப்பு விளக்குப் பகுதியில் வாழும் சிறார்களே எடுத்தார்கள்.

இத்திரைப்படத்தின் இயக்குனர்களான ஸானா பிரிஸ்கியும், ராப் காப்மனும் இந்தச் சிறார்களிடம் காமராக்களைக் கொடுத்தனர்.

இந்த சிறார்கள் தாங்கள் வாழும் ஓர் துன்பமான உலகை, மிகத் துல்லியமாகவும், தனித்தன்மையுடனும் மிகச் சிறப்பாகக் கண்முன் நிறுத்தியதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுபவர்கள் அடையாளங் காணப்படக்கூடாது என்பதற்காகவும், இந்தத் திரைப்படம் காட்டப்பட்டால்,பிரச்சனைகள் உருவாகலாம் என்பதாலும் இந்தியாவில் இது திரையிடப்படவில்லை என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.


தமிழோசை