Yarl Forum
சினிமா ஹீரோக்களின் இன்னொரு முகம்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: சினிமா ஹீரோக்களின் இன்னொரு முகம்..! (/showthread.php?tid=4943)

Pages: 1 2


சினிமா ஹீரோக்களின் இன்னொரு முகம்..! - vasisutha - 02-28-2005

<img src='http://www.kumudam.com/reporter/030305/pg1t.jpg' border='0' alt='user posted image'>

ஜூலை 16 _ 2004. இந்தத் தேதியை யாருமே மறக்க முடியாது. காரணம், அன்றுதான் கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் தொண்ணூற்று நான்கு குழந்தைகள் குவியல் குவியலாய் எரிந்து மடிந்தார்கள். இந்தியாவே குலுங்கிப்போன அந்தக் கோர விபத்தில் சிக்கிய பதினெட்டுக் குழந்தைகள் தீக்காயத்தோடு, அந்தத் தேதியின் நினைவுச் சின்னமாய் இன்றும் இருக்கிறார்கள்.

அந்தத் துயரச் சம்பவத்தால் மனிதநேயமிருந்த ஒவ்வொருவரும் நெஞ்சுருகிப் போனார்கள். ஒவ்வொரு வகையிலும் நேசக்கரம் நீட்டினார்கள். குழந்தைகளை இழந்த குடும்பத்தாருக்கு அவரவரும் முடிந்த வரையில் உதவி செய்தார்கள்.

ஆயிற்று. அந்த வரலாற்றுச் சோகம் நடந்து ஏழு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தநிலையில், பத்திரிகையாளர் சுந்தரவடிவேலு உதிர்ந்த மொட்டுகள் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சித் தலைவர், தாசில்தார் மற்றும் உள்ளூர்ப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்தித்து பாதிப்பின் நிஜங்களையும் மடிந்த குழந்தைகளின் கனவுகளையும் அப்படியே பதிவு செய்துள்ளார்.

அந்தப் புத்தகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கியவர்களின் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்தப் பட்டியலில் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அறிவித்த உதவித் தொகைகள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இது என்ன அபத்தம்? தீவிபத்து நடந்தபோது கும்பகோணம் பகுதியிலேயே படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித், ஓடோடி வந்து அந்த கோரக் காட்சியைக் கண்டு நெஞ்சு துடித்துப் பதறி, பாதிக்கப்பட்டோருக்கு இரண்டு லட்ச ரூபாய் உதவித் தொகை அளிப்பதாக முதன் முதலில் அறிவித்திருந்தாரே! அது என்ன ஆயிற்று?

நடிகர் கமல், பன்னிரண்டு லட்ச ரூபாய் உதவித் தொகை தருவதாகவும், நேரில் சென்று நெஞ்சுருகிய விஜயகாந்த் பத்து லட்ச ரூபாய் உதவித் தொகை தருவதாகவும் அறிவித்தாரே... அவையெல்லாம் என்னவாயிற்று?

சூப்பர் ஸ்டார் ரஜினி சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் தனது மனைவி லதாவை அங்கு அனுப்பி வைத்தார். அதற்கு முதல்நாளே தன் சார்பாக இரண்டு லட்ச ரூபாய் உதவித் தொகை தருவதாக அறிவித்திருந்தாரே... அதுவும் என்னவாயிற்று?

இப்படி பல நடிகர்களும் முன் வந்து பரபரப்பாக அறிவித்த உதவித் தொகை மொத்தமும் சுமார் எழுபது லட்சத்தைத் தாண்டியது. ஆனால் பத்திரிகையாளர் தொகுத்திருந்த புத்தகத்தில் அப்படி எதுவுமே பதிவாகவில்லை. ஏன் என்ற குடைச்சல் கேள்விகளுடன் அவரையே நேரில் சந்தித்தோம். அதன் பிறகுதான் அந்த விஷயமே விளங்கியது.

என்னுடைய நோக்கம் நடிகர்கள் தாங்கள் அறிவித்தபடி உதவித் தொகை கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுவதல்ல. எனது நோக்கமே வேறு. கும்பகோணம் தீ விபத்துக்கு முன்பு இப்படியரு கோரச் சம்பவம் நடந்திருக்கிறதா என்று அலசியபோதுதான், அதற்கு முன்பே 1964_ல் மதுரை பாடசாலையில் முப்பத்தொன்பது குழந்தைகள் எரிந்து போனதும், 1995_ல் அரியானாவிலுள்ள பள்ளியன்றின் ஆண்டு விழாவில் முந்நூறு பிள்ளைகள் மடிந்து போனதும் தெரிய வந்தது. ஆனால், அவைபற்றிய முழுமையான தகவல்கள் ஏதுமில்லை. கும்பகோணச் சம்பவமும் எதிர்காலத்தில் அப்படி இருந்துவிடக் கூடாது என்றுதான் இறந்துபோன குழந்தைகள் தொண்ணூற்று நான்கு பேரின் புகைப்படங்களோடு அவர்களது பெற்றோர்களின் படங்களையும் திரட்டினேன்.

அந்த வகையில் அவர்கள் அனைவரிடமும் பலமுறை சந்தித்துப் பேசினேன். அதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குமேல் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அப்போது விசாரித்ததில் எந்தக் குடும்பமும் நடிகர்களிடமிருந்து உதவித் தொகை கிடைத்ததாகச் சொல்லவில்லை. வற்புறுத்திக் கேட்டபோதுதான் நடிகர்கள் உதவி பற்றிப் பேசவே மறுத்தார்கள்.

ஏதோ பரபரப்பிற்காக பத்து லட்சம் உதவி, ஐந்து லட்சம் உதவி என்று அவர்கள் கூறிவிட்டார்கள். அதை வைத்து, எங்களைச் சுற்றியுள்ள பலரும், நடிகர்கள் மூலம் ஏதோ பெரிய தொகையை நாங்கள் வாங்கி வைத்துக் கொண்டதாகப் பேசிக் கொண்டது வருத்தமாக இருந்தது. அதற்காக அவர்கள் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அவர்கள் கொடுப்பார்கள் என்பதற்காகவா எங்கள் குழந்தைகளை இழந்தோம்... என்று கண்ணீர் வடித்தவர்கள், அதுபற்றி எதுவுமே பேசாதீர்கள் என்று உண்மையிலேயே உதவியவர்களின் பட்டியலைச் சொன்னார்கள்.

அவர்கள் சொல்வதை உறுதிப்படுத்திக்கொள்ள அந்தப் பட்டியலோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தாசில்தார் ஆகியோரையும் சந்தித்தேன்.

அவர்கள், மாநில அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய், மத்திய அரசு ஐம்பதாயிரம், உ.பி. அரசு (சமாஜ்வாடி கட்சி) நாற்பத்தொராயிரம் என்று உதவியது உள்பட, மேலும் சில விவரங்களையும் கொடுத்தார்கள். அதோடு ஊர்ப் பிரமுகர்கள் போன்ற பலரையும் சந்தித்து ஒருமுறைக்குப் பலமுறை விசாரணை செய்த பிறகே உதவியவர்களின் பட்டியலை என் புத்தகத்தில் பதிவு செய்தேன். (பட்டியல் உள்ளது.)

எந்த இடத்திலும் யாரும் நடிகர்கள் உதவி செய்தார்கள் என்று கூறவேயில்லை. ஒருவேளை மறந்திருக்கலாமோ என்ற நோக்கில், புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவர்களை அழைத்து, அதன் மூலம் அந்த உதவித் தொகை பற்றி நினைவூட்டலாமே என்கிற நோக்கில் அவர்களை அழைக்கும் முயற்சியிலும் இறங்கினேன்.

நடிகர் ரஜினிக்காக அவரது ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணாவைச் சந்திக்கச் சென்றேன். ஒன்றுமில்லை. அணிந்துரை எழுத வேண்டும். புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி எடுத்துச் சென்றிருந்தேன். படிக்க நேரமில்லை... விஷயத்தைச் சொல்லு என்று அவரது அலுவலக வாசலிலேயே எனது கடிதத்தை வாங்கிக் கொண்டு சென்றார். பிறகு பதிலே இல்லை.

நடிகர் கமலின் பி.ஆர்.ஓ. மூலம் புத்தகத்தையும் ஒரு கடிதத்தையும் மும்பையிலிருந்த கமலுக்கு அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்தும் பதில் இல்லை. பிறகு நடிகர் விஜயகாந்தை அணுகியபோது, அணிந்துரை அளிப்பதாகச் சொன்னார். பிறகு ஏனோ மறுத்துவிட்டார். யாரிடமும் அறிவித்த உதவித் தொகையை நீங்கள் ஏன் வழங்கவில்லை? என்று நான் கேட்கவேயில்லை.

ஏனோ அனைவருமே தவிர்த்து விட்டார்கள். இவற்றைத்தான் என் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேனே தவிர, மற்றபடி எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. தீவிபத்து சம்பவத்தை முழுமையாகப் பதிவு செய்வது மட்டும்தான் என் நோக்கமாக இருந்தது! என்று முடித்துக் கொண்டார் அவர்.

நமக்கு மேலும் தலை சுற்றியது. பிரபலமான நமது ஹீரோக்கள், தாங்களாகவே அறிவித்த உதவித் தொகையை எப்படிக் கொடுக்காமல் இருந்திருப்பார்கள்?

ஒருவேளை முதல்வரிடம் அளித்திருப்பார்களோ? அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்திருப்பார்களோ என்கிற சந்தேகத்தோடு அந்த சமயத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டராக (இப்போது நாகை மாவட்ட கலெக்டர்) இருந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். அப்படி யாரும் என்னிடம் கொடுக்கவில்லையே என்றார். அடுத்து தற்போதைய தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டோம். அங்கிருந்தும் இல்லை என்ற பதில்தான்.

தொடர்ந்து முதல்வர் அலுவலக பி.ஆர்.ஓ. பிரிவைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக எந்த நடிகரும் முதல்வரிடம் நிதியுதவி அளிக்கவில்லை என்றவர்கள் எதற்கும் தமிழக அரசு செய்திப் பிரிவு தலைமையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்களேன் என்றார்கள்.

உடனடியாகச் செய்திப் பிரிவு பி.ஆர்.ஓ. அலுவலகத்துடன் பேசினோம். சுனாமி நிதி கொடுக்க வந்த பட்டியல் மட்டும்தான் இருக்கிறது. மற்றபடி கும்பகோணம் தீ விபத்து தொடர்பாக எந்த நடிகரும் நிதியுதவி அளிக்கவில்லை என்று கூறினார்கள்.

அப்படியானால் நடிகர்கள் அறிவித்த நிதியுதவி எங்கேதான் சென்றது? என்ற கேள்விகளுடன் சம்பந்தப்பட்ட நடிகர்களையே தொடர்பு கொண்டோம்.

நடிகர் அஜித் சார்பாக அவரது பி.ஆர்.ஓ. சுந்தர் பேசும்போது, உங்கள் தகவலை தலைவரிடம் (அஜித்) தெரிவித்தேன். அந்தச் சமயத்தில் அவர் இரண்டு லட்ச ரூபாய் நிதி கொடுப்பதாகச் சொன்னது உண்மைதான். ஆனால் கொடுக்கவில்லை. அப்போது அவருடைய அட்டகாசம் படத்திற்கு சொந்தப் பணம் ஒன்றரைக் கோடியைச் செலவிட்டுத்தான் ரிலீஸ் செய்திருந்தார். அதனால் கொஞ்சம் பண நெருக்கடி ஏற்பட்டது. அதன்பிறகு, அந்தத் தொகையையும் சேர்த்து, சுனாமி நிதிக்காக முதல்வரிடம் பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டார்! என்று கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பி.ஆர்.ஓ.விடம் பேசியபோது, ரஜினியின் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். ரஜினி வீட்டிற்குத் தொடர்பு கொண்டோம். மறுமுனையில் பேசிய ஆண் குரல், என்ன ஏது என்கிற தகவலைக் கேட்டது. விஷயத்தைச் சொன்ன நாம், ரஜினியின் பதில் வேண்டும் என்றோம்.

நீங்கள் சொன்னதை அவரிடம் தெரிவித்துவிடுகின்றோம் என்ற பதில்தான் கிடைத்தது. இதே போல் எத்தனை முயன்றும் கமலின் பதிலையும் பெற முடியவில்லை.

இறுதியில் இரண்டு நாட்கள் முயற்சிக்குப் பிறகு பேசிய நடிகர் விஜயகாந்த், நான் உதவித் தொகை அறிவித்தது உண்மைதான். அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டிக் கொடுப்பதாக இருந்தார்கள். அதனால் அவர்களிடம் பணத்தைக் கொடுத்தேன். அதில் சின்னத் தடங்கல். அதனால் திருப்பி என்னிடமே பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டார்கள். வாங்கிக் கொண்டேன். அது இன்னமும் என்னிடமேதான் இருக்கிறது! சம்பவத்திற்குப் பிறகு நெறைஞ்ச மனசு படப்பிடிப்பு வேலை வந்துவிட்டது. தொடர்ந்து வேலைகள். இப்போதும் படப்பிடிப்பில்தான் இருக்கிறேன். விரைவில், எனது ரசிகர் மன்றத் தலைமை மூலமாக இறந்தவர்களின் குடும்ப முகவரிகளை எல்லாம் விசாரித்து உதவிப் பணத்தைக் கொடுக்க இருக்கிறேன்! என்றார்.

நமது நோக்கம் ஹீரோக்களைப் புண்படுத்துவதல்ல. அவர்களாகவே அறிவித்த தொகையை அவர்கள் வழங்காமல் போனதை நினைவூட்டுவதுதான். இல்லையெனில் நமது ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையிலும் நன்றாக நடிக்கிறார்கள் என்கிற அவச் சொல் வந்துவிடுமே என்கிற கவலைதான் நமக்கு.

[size=9]நன்றி: குமுதம்.கொம்


- tamilini - 02-28-2005

அடப்பாவிகளா..?? இதுவும் ஒரு யுக்தியா.. என்ன..?? அறிவித்தவுடன்.. பாவம் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்று எல்லோ நினைச்சம். அது சரி சுனாமி நிதியாயவது வரியாய் போய்ச்சேந்திச்சா இல்லையா..?? :oops: :oops: :oops:


- KULAKADDAN - 02-28-2005

நீங்கள் எல்லாம் என்ன இந்த கீரோக்கள் எல்லம் உத்தம புத்திரர்கள் என்ன நினைத்தீர்கள்..நடிப்பு நிஜவாழ்க்கை அனைத்தும் ஒன்று தான் அவர்களுக்கு.


- eelapirean - 02-28-2005

இவர்கள் எல்லாம் நடிகர்கள் அங்கேயும் நன்றாக நடித்துள்ளனர்.நாங்கள் ஏமாளிகள்.எப்போதும் ஏமாறுகிறோம்.


- Mathan - 02-28-2005

நடிகர் நடிகைகளை அவர்களின் நடிப்பு திறமை, அழகு, நடனம் என்பவற்றிற்காக ரசிக்கலாமே தவிர அவர்களை தலைவர்களாவோ வழிகாட்டியாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அது நமது தவறுதான். மற்றய தொழில்களை போல் நடிப்பும் ஒரு தொழில். திரையில் அவர்கள் நடிப்பதற்கும் அவர்களின் சொந்த வாழ்க்கைக்கும் தொடர்பு ஏதுமில்லை. இது போன்ற செய்திகள் வெளிவரும் போதுதான் நடிகர்கள் ஆதர்ச புருஷர்களாக நினைப்பவர்களுக்கு அவர்களின் சுயரூபம் தெரிகின்றது.


- கறுணா - 02-28-2005

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

அப்புமாரே!

உந்த உவங்களை விடுங்கோ? தினமும் கலைச்சேவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செய்து (எக்ஸ்ரா ஓவர்ரைம்?) செய்யுறவளல் எங்கே போயுட்டாளள்? அவயள் கொடுக்க மாட்டினமோ?

தொடர் கலைச்சேவைகலாளை பிசி போலை?

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- Thaya Jibbrahn - 02-28-2005

அவர்கள் உதவித்தொகை அறிவித்த போது கூட போஸ்ரர் ஒட்டாத விளம்பரம் ஒன்றிற்காக செய்யும் செலவு என்பதாய்த் தான் குறித்துக்கொண்டேன் ஆனால் பாவிகள் அந்த விளம்பரத்திற்கான பணத்துக்கு கூட போட்டுவிட்டார்கள் நாமம்.


- tamilini - 02-28-2005

Confusedhock: Confusedhock: Confusedhock: அரசியலில் இவர்கள் வந்தால்.. படத்தில அரசியல் வாதிகள் என்ன செய்வதாய் சொல்லுகிறார்களோ அதை எல்லாம் இவர்கள் செய்வார்கள். போல.. :mrgreen:


- vasisutha - 02-28-2005

Quote:உந்த உவங்களை விடுங்கோ? தினமும் கலைச்சேவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செய்து (எக்ஸ்ரா ஓவர்ரைம்?) செய்யுறவளல் எங்கே போயுட்டாளள்? அவயள் கொடுக்க மாட்டினமோ?
தொடர் கலைச்சேவைகலாளை பிசி போலை?

கறுணா என்ன சொல்ல வருகிறீர்கள்???
:?: கொஞ்சம் தெளிவாய் சொல்லுங்கள். :roll:


- hari - 03-01-2005

தயவுசெய்து நம்ம தலைவர்களை பற்றி தப்பாக பேசவேண்டாம்! அதுவும் நம்ப ரஜனி சாரை பற்றி பேசவேண்டாம் அவர் ஒரு கடவுள் பாபா படம் பார்த்தவர்களுக்குதான் தெரியும்,தமிழினி அப்படி பேசவேண்டாம் அது கடவுள் குற்றம்! :evil: வாழ்க நம்மட தலைவர்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 03-01-2005

Quote:தமிழினி அப்படி பேசவேண்டாம் அது கடவுள் குற்றம்! வாழ்க நம்மட தலைவர்!
மன்னா.. அப்ரோல் ஒரு நடிகனை தலைவன் என்றால்.. அப்புறம் நாங்க.. உங்கள் அரச சபையில் இருந்து வெளிநடப்பு செய்திடுவம்.. :wink:


- hari - 03-01-2005

தமிழினி அப்படி எல்லாம் செய்திடாதீர்கள்,! ரஜனி சாரு ஏதோ ஏழு மந்திரம் தெரியும் என்று தமிழ் நாட்டில கதைக்கினம் , அதுதான் அப்படி சொன்னனான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 03-01-2005

இந்த மந்திர தந்திரத்திற்காக ஒரு தலைவர் போட்டியளா...?? மந்திரமாவது தந்திரமாவது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 03-01-2005

அவையள் தெருத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு கொடுப்பினம். தங்கடையை செலவுபண்ணமாட்டினம். இவையளை நீங்கள் கூப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தினால் அதற்கு வருவினம் .அதிலை வாற காசை வேணுமெண்டால் குடுப்பினம். நடிகர்சங்க கடனுக்கு கலைநிகழ்ச்சி நடத்தி அதாலைவந்த காசைக்கொண்டு கடனை அழித்தவையாம். தங்கடை ஒவ்வொரு படத்தாலை வாற காசைக்கொடுத்து அழித்திருக்கலாம். அவையள் ஊர்க்காசிலை எல்லாம் செய்வினம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 03-01-2005

சரி சரி திட்டித்தீர்க்காதீங்கோ.. என்ன செய்ய.. கவுஸ் புல்லாக்கத்தான் நம்ம ரசிகர்கள் இருக்கிறார்கள் பிறகு ஏன் அவர்கள் கவலைப்படவேண்டும். சொல்லுங்கோ...?? :wink:


- வியாசன் - 03-01-2005

நம்மில் சிலரும் சில ஆணடுகளுக்கு முன்னர் குஷ்புவுக்கு சங்கிலிபோட அலைஞ்சவை. தாய்மார் காணிபூமிகளைவித்து அனுப்ப அதுகளைப்பற்றி யோசியாமல் சிலர் உவையளுக்கு சங்கிலி வாங்க அலைஞ்சவை. எங்களுக்கு இரவு 12 மணிக்கு படம் போட்டாலும் கைக்குழந்தையுடன் போக தயார்


- tamilini - 03-01-2005

நடிகர் நடிகைகளிடம் இருக்கிற மாயை நம்மாக்களிடம் இருந்து விலகவேணும் அதுவில்லாட்டால் சரிவராது. :mrgreen:


- வியாசன் - 03-01-2005

எப்படி விலகும் .அவர்களுக்கு கோவில்கட்டப்பட்டது .அவர்களுடைய கட்அவுட்டுக்களுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது ஒரு காலத்தில்..
அவர்களுடைய பெருந்தவறுகள் கூட இவர்களால் ஜீரணிக்கமுடிகிறது.


- tamilini - 03-01-2005

அவர்கள் கட்டினால்.. நீங்கள் இடிக்கலாம் எல்லோ..??? :wink:


- வியாசன் - 03-01-2005

ஏன் தமிழ்ஸ் இன்னொரு அயோத்திப் பிரச்சனை தேவையா?