| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 552 online users. » 0 Member(s) | 549 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,440
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,288
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,644
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,313
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,678
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,260
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,478
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,555
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,057
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,256
|
|
|
| ஜேவிபியும் ஹெல உறுமயவும் - இனவாதம் |
|
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
ஜே.வி.பி. எம்.பிக்களின் உயிருக்கு
விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்!
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் அச்சு றுத்தல் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
- இப்படித் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பி. அமைப்பின் ஊடகப் பேச்சாளர் பண்டார.
கடந்த வாரம் ஜே.வி.பியினர் கூட்டிய செய்தியாளர் மாநாடு ஒன்றுக்குச் சென்றிருந்த ஊடக வியலாளர்களும் படப்பிடிப்பாளர்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களது கருவிகளும் அடையாள அட்டைகளும் சோதிக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஜே.வி.பியின் ஊடகத்துறைக்குப் பொறுப்பான பண்டார என்பவரிடம் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர் கூறியதாவது:-
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளால் கொலை அச்சுறுத்தல் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக செய்தியா ளர்களைச் சோதனையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இதனைப் பெரிதுபடுத்தி விமர்சிக்கத் தேவையில்லை - என்று பதிலளித்தார்.
உதயன்
|
|
|
| நோர்வே முடிவுசெய்ய இயலாது! |
|
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
முஸ்லிம்களின் தனித்தரப்புக் கோரிக்கை;
நோர்வே முடிவுசெய்ய இயலாது!
அம்பாறையில் சொல்யஹய்ம் தெரிவிப்பு
சமாதானப் பேச்சுக்களில் முஸ்லிம்கள் தனித்தரப்பாகப் பங்குபற்றும் கோரிக்கையைப் பொறுத்தவரை நோர்வே எந்த முடிவையும் எடுக்கமுடியாது. பேச்சுக்களுடன் தொடர்புடைய ஏனைய இரு தரப்பினருமே இது தொடர்பாக முடிவுசெய்யலாம்.
இப்படிக் கூறியிருக்கின்றார் நோர்வேயின் விசேட தூதர் எரிக் சொல்யஹய்ம்.
நேற்று அம்பாறைக்கு விஜயம் செய்த எரிக் சொல்யஹய்ம் அங்கு சாய்ந்தமருதுவில் முஸ் லிம் சமய, சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அங்கு உரையாற்றுகையில் எரிக் சொல் யஹய்ம் தெரிவித்ததாவது:-
சமாதான முன்னெடுப்புகளும், ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளும் ஒரே சம யத்தில் முன்னெடுக்கப்படவேண்டியவை.
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட பிரதேசங்களில் மூன்று உடனடித் தேவை கள் உள்ளன.
தொழில் வாய்ப்பு, மக்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மாணவர்களின் கல்வி நிலைமைகளை வழமைக்குக் கொண்டு வருதல் ஆகிய முக்கிய தேவைகளை நிறை வேற்றுவதற்கு நோர்வே உதவும்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அரசு - விடுதலைப் புலிகளை உள்ளடக்கிய கட்டமைப் பொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டமைப்பில் முஸ்லிம்களின் எதிர் பார்ப்புகளிற்கும் இடமளிக்கப்படும் என்றும் - சொல்யஹய்ம் தெரிவித்தார்.
உதயன்
|
|
|
| என்ன செய்யப் போகிறார் ஜனாதிபதி சந்திரிகா? |
|
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
என்ன செய்யப் போகிறார் ஜனாதிபதி சந்திரிகா?
பேச்சுவார்த்தை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியிருப்பதன் மூலம், சமாதானத்தின் மீது வை க்கக் கூடிய நம்பிக்கையை ஜே.வி.பி. மீண்டும் ஒரு தடவை சிதறடித்திருக்கின்றது. இடைக்கால நிர்வாக சபை ஒன்றை அமைப்பது தொடர்பாக, விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என அறிவிக்கப்பட்டு இருபத்தினான்கு மணி நேரத்துக்குள் தம்முடைய கடுமையான எதிர்ப்பை ஜே.வி.பி. வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், அவ்விதம் பேச்சுகள் முன்னெடுக்கப்படுமாயின் அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாகவும் ஜே.வி.பி. அச்சுறுத்தியிருக்கின்றது.
`வெளியேறப் போவதாகக் கூறிக் கொண்டிருப்பவர்கள் வெளியேறலாம்- யாரையும் நாம் கட்டாயப்படுத்தி வைத்திருக்கவில்லை' என்ற பாணியில் ஜே.வி.பி. க்கு எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பதிலடியாக இந்த அறிவித்தல் வந்திருக்கின்றது. இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும் சமாதான முயற்சிகளை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்திருக்கும் நிலையிலேயே இந்தச் சம்பவங்கள் அரங்கேறி வருவது கவனிக்கத்தக்கது.
சமாதானத்துக்கான தடை எது என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலாவது சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்! ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை `கொள்கை' அடிப்படையில் உருவான ஒன்றல்ல. அதிகாரத்தை இலக்காகக் கொண்டே இந்தக் கூட்டு உருக்கொண்டது என்பதில் சந்தேகமில்லை!
அதாவது தனித்துச் செயற்பட்டு ஐ.தே.க.வை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நிலையிலேயே ஜே.வி.பி.க்கு நேசக்கரம் நீட்டியது ஷ்ரீல.சு.க.தலைமை. அதேபோல தனித்திருந்தால் எப்போதும் எதிரணியில் தான் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு `அதிகாரத்தில் பங்கு' கொள்ளும் நோக்குடன் தான் இந்த நேசக்கரத்தை ஜே.வி.பி.யும் பற்றிக் கொண்டது என்பது வரலாறு.
அதிகாரத்தில் பங்காளிகளாக இருந்தாலும் இரு கட்சிகளினதும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களும் முரண்பாடானவை. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவைப் பொறுத்தவரையில், சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டிய ஒரு தேவை அவருக்கு இருக்கின்றது. அவ்வாறு திருப்திப்படுத்தினால் மட்டும்தான் வெளிநாட்டு நிதி உவிகளை அவர் எதிர்பார்க்க முடியும். புனரமைப்பு, புனர்வாழ்வுப் பணிகளுக்கென விடுதலைப் புலிகளுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என சர்வதேச சமூகம் விரும்புகின்றது. அதனைச் செய்யாமல் சர்வதேச உதவிகளை எதிர்பார்க்க முடியாத நிலையில் ஜனாதிபதி உள்ளார்.
இது ஜனாதிபதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஒரு புறம். மறுபுறத்தில், இனவாத அடிப்படையிலான தனது வாக்கு வங்கிகளைப் பேணிக் கொள்ள வேண்டிய தேவை ஒன்றும் ஜனாதிபதிக்குள்ளது. அதனால்தான், ஜனாதிபதி நேரடியாக அறிவிக்காமல் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் மூலமாக அந்த அறிவித்தல் வெளியிடப்பட்டது. அரசாங்க சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபாலவும் இது தொடர்பாக அறிவித்திருந்தார். இருந்த போதிலும் ஜனாதிபதியோ முக்கிய அமைச்சர்களோ இது தொடர்பாக வாய் திறக்கவேயில்லை!
`வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம்' என்ற அறிவிப்பின் மூலம் ஜே.வி.பி.யினரை மௌனமாக்கி விடலாம் என்று ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், அரசின் பங்காளிகளாகவும் இருந்து கொண்டு, இதற்கு அனுமதிப்பது தமது அரசியல் அத்திவாரத்தையே ஆட்டம் காணச் செய்துவிடும் என்பது ஜே.வி.பி.யினருக்குத் தெரியும். ஹெல உறுமய போன்றன இடைக்கால நிர்வாகத்துக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட முற்பட்டால் தமது வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதையும் ஜே.வி.பி. உணர்கிறது. அதேவேளையில், ஜே.வி.பி. வெளியேறினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என்பதும் ஜே.வி.பி.யின் எதிர்பார்ப்பு..
இவை அனைத்தையும் சரியாகக் கணிப்பிட்டுள்ளதன் அடிப்படையிலேயே அரசுக்கு எதிரான பலமான தாக்குதல் ஒன்றை ஜே.வி.பி. இப்போது நடத்திக் கொண்டுள்ளது. இதன் மூலம் இனவாத அடிப்படையில் உள்ள தம்முடைய ஆதரவுத் தளத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
அதேவேளையில், அரசாங்கத்திலிருந்து தம்மை வெளியேற நிர்ப்பந்திக்கும் செயற்பாடு ஒன்றிற்கு ஜனாதிபதி துனியமாட்டார் எனவும் அவர்கள் மதிப்பிடுகின்றார்கள். அதனால்தான் ஜனாதிபதியின் எச்சரிக்கையின் பின்னரும் `துணிவாக' தமது கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்!
இப்போது பந்து ஜனாதிபதியின் பக்கத்தில்!
ஜனாதிபதியிடம் இரண்டு தெரிவுகளே உள்ளன. ஜே.வி.பி. வெளியேறினாலும் பரவாயில்லை என இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் அவர் பேச்சுகளை ஆரம்பிக்கலாம். இவ்வாறான நிலையில், அரசாங்கம் கவிழ்ந்து வடும் என ஜனாதிபதி அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இடைக்கால நிர்வாக சபையின் அடிப்படையில் ஜனாதிபதி பேச்சுகளை ஆரம்பித்தால் 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவு அவருக்கு கிடைக்கும். அதனை விட, அவ்வாறான ஒரு நிலைமையில் தம்முடைய ஆதரவும் கிடைக்கும் என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜே.வி.பி.யின் ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் முன்வைத்த கால்களை பின்னால் எடுக்க வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை என்பது நிச்சயம்!
நித்தம்புவ கூட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிவித்தலில் சொல்லியிருந்தாலாவது, ஜனாதிபதி மிகவும் உறுதியாக இருப்பார் என நாம் நம்புகின்றோம். அவ்வாறிருப்பதன் மூலமாகவே தமிழ் மக்களின் நல்லெண்ணத்தையும், சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் அவரால் பெற்றுக்கொள்ள முடியும். ஜே.வி.பி. யை அருகே வைத்துக்கொண்டு சமாதானத்தை செய்ய முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்திலாவது அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி என்ன செய்யப் போகின்றார் என்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்!
தினக்குரல்
|
|
|
| இந்தியாவும் இலங்கையும் |
|
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்நேரமும் கைச்சாத்தாகலாம்
<img src='http://www.sundaytimes.lk/050227/images/ftont.jpg' border='0' alt='user posted image'>
- புதுடில்லியில் கதிர்காமர்
அவ்வாறு நடந்தால் அது தமிழ் மக்களுக்கு எதிரான இந்தியாவின் ஒரு பகைமை நடவடிக்கை
27 02 2005
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முக்கர்ஜியை சந்தித்து பேசினார். சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். சுனாமி தாக்கிய பின்னர் இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறீலங்கா ஜனாதிபதியின் கடிதம் ஒன்றையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் வழங்கினார்.
இதன் பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த கதிர்காமர் இருநாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள இணக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் இப்போது எந்த நேரத்திலும் அந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகலாம் என்றும் சொன்னார்.
இவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்வது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பகைமை நடவடிக்கையாக இருக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்த்து வருவது தெரிந்ததே. கடந்த வருட இறுதியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகி இருந்த போதிலும் தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை அடுத்தும் குறிப்பாக மதிமுக செயலர் வைகோ புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியதை தொடர்ந்தும் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. தமிழ் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்க மாட்டாது என்று அப்போது வைகோவிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்திருந்தார்.
இப்போது இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டும் என்று கதிர்காமர் புதுடில்லியில் வலியுறுத்தி உள்ளார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை புனரமைப்பது சிறீலங்கா பாதுகாப்பு படைகளுடன் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வது பயிற்சிகளை வழங்குவது உள்ளிட்ட மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயங்களுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் சமபலத்துடன் இருப்பதே சிறீலங்கா அரசு போர்நிறுத்தம் செய்ய முன்வரவும் மூன்று வருடங்களாக அது நீடிக்கவும் காரணமாக இருந்தது. இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் அது சிறீலங்காவின் சிங்கள மேலாதிக்கவாதிகள் தாம் கூடுதல் பலத்துடன் இருப்பதாக எண்ணத் தூண்டுவதாகும். அது அவர்களை மீண்டும் யுத்தம் செய்ய தூண்டுவதாகவும் ஏற்கனவே இழுபறியில் இருக்கும் சமாதான முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுப்பதாகவும் அமையும். இதனாலேயே இத்தகைய ஒப்பந்தம் தமக்கு எதிரான ஒரு பகைமை நடவடிக்கை என்று தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
செய்திகோவை
|
|
|
| தேசிய தலைவரின் உறவினர்கள் இலங்கை வந்துள்ளனர் |
|
Posted by: Vaanampaadi - 02-27-2005, 09:16 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
நமது தேசிய தலைவர் பிரபாகரனின் மிக நெருங்கிய உறவினர்கள் 10 பேர் நேற்று மலேசியாவிலிருந்து இலங்கை வந்தடைந்து பின்னர் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு சென்று அடைந்துள்ளார்கள்.....
அந்த 10 பேரும் தலைவரின் துணைவியார் மதிவதனியின் தந்தையாரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காகவே இலங்கைக்கு வந்துள்ளனர்..........
Sri Lanka Tiger chief gets relatives flown in for funeral:
[World News]: Colombo, Feb 26 : Sri Lanka today "facilitated" the return to the island of a large number of relatives of Tiger supremo Velupillai Prabhakaran to attend a family funeral.
Ten close relatives of Prabhakaran, 50, arrived at Sri Lanka's only international airport today from Malaysia and travelled to the rebel-held north of the island, officials said.
They said the family members were in the country to attend the funeral of V K Arambu master, the father of Prabhakaran's wife, Mathiwathani.
Prabhakaran has dismissed reports of his own death after the December 26 tsunamis and held a meeting last month with Norway's Foreign Minister Jan Petersen.
PTI செய்தி நிறுவனம்
|
|
|
| பத்து தலைகளும் இருபது கைகளுமாய் ஓர் உருவம்.- தயா ஜிப்ரான் - |
|
Posted by: Thaya Jibbrahn - 02-27-2005, 04:49 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
நேற்றென் கனவிலோர்
அசரீரி!
பத்து தலைகளும்
இருபது கைகளுமாய் - ஓர்
உருவம்.
வாஞ்சசையுடன் வாரியணைத்து
வார்த்தையொன்று பகர்ந்த பின்
மறைந்திற்று
"நீயென்னை புரிந்தவன்
ஆனாலும்
என்பெயரால் கலகமொன்றை
தொடக்கிவைத்தாய் போ!!
பார்ப்பனீயர்கள் போலவே
நீயுமெந்தன்
பெயருக்கு களங்கம் செய்தாய்.
திராவிடத் தோன்றல்கள்
தசாவதானியாய்
திறன்செய்து பகை வென்றோம்.
பொறுக்க முடியாப் பகை
பத்துதலை ராட்சதனாய்
என்னை
உருவகம் செய்திற்று.
வழி வழிவந்த
தலைமுறையும்
செவிவழிக் கதையை
சரியென நம்பிற்று
நீயாகிலும் உண்மையுரை!
காக்காகுருவிகளின்
கலகங்களுக்கு
கதிகலங்கிப் போகாதே!!
களங்களில்
கண்ணியம் காத்து - நம்
திறன் நிறுத்து
புதியதலைமுறைக்கு
புரியும்படி - நம்
பழையகதை உரை
வாழும்வரை
வல்ல தமிழ் வாழ உழை!! "
சொல்லி மறைந்தது
சொப்பனத்தில் வந்த சுடர்.
-தயா ஜிப்ரான் -
|
|
|
| பேசாப் பொருள் - பால் உறவுகள் |
|
Posted by: Mathan - 02-27-2005, 02:31 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (18)
|
 |
பேசாப் பொருள் - பால் உறவுகள்
ஹோமோ செக்ஷ¥வல்/ லெஸ்பியன் ?????
பெண்ணாய் மாற விரும்பும் ஆண்களின் கதைகள்- சு.சமுத்திரத்தின் வாடாமல்லி, குஷ்வந்த் சிங்கின் " நியூ டெல்லி" மற்றும் கி.ராவின் ஒரு சிறுகதையைப் படிக்கும் பொழுது, மனதில் பரிதாப உணர்வுதான் ஏற்பட்டது. வட இந்தியாவில் வசித்தப்பொழுது,இத்தகைய ஆண்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், ரிக்ஷாவில் கும்பலாய் வந்து பாடி விட்டு காசு வாங்கிப் போவார்கள். ஏதோ பிறப்பு மற்றும் ஹார்மோன் கோளாறு என்று இந்த அர்த்தநாரீஸ்வரர்களை சொல்வார்கள். சின்ன பையன்கள் கொஞ்சம் இடுப்பை ஆட்டி நடந்தால், கீச்சு குரல், மீசை இல்லாத முகம் என்றால் ஒன்பதாம் எண் பட்டம் சூட்டப்படும். இவர்களைப் பற்றி பழைய நாகரீகங்களில், கல்வெட்டுகளில் சான்று உண்டு என்று சொல்லப்பட்டது.
ஆனால் கா.நா.சு வின் "பசித்த மானுடம்" மற்றும் சு. சமுத்திரம் அவர்களின் ஒரு மாத நாவல், ஆதவனின் சிறுகதையொன்றிலும் (அ) காமம் அருவருப்பையே உண்டாக்கின. உடலில் கழிவுக்கு என்று ஒதுக்கப்பட்ட துளைகளை வேறு பிரயோகமும் செய்யலாம் என்று இலக்கியம் என்று சொல்ல கூடிய கதைகளில் கண்ணில் விழும் இத்தகைய கதா பாத்திரங்கள் மனபிறழ்வு மனிதர்களாகவே காட்சியளிக்கிறார்கள். ஆனால் தமிழில் லெஸ்பியன்களைப் பற்றி இதுவரை எதுவும் படித்ததில்லை.
என்னுடன் படித்த மாணவி நாங்கள் பார்க்க, பார்க்க ஆணாய் மாறி வந்தாள். முகத்தில் ரோமமும், குரல் கனத்தும் போக ஆரம்பித்தது. ஆபரேஷன் செய்துக் கொண்டு முழு ஆணாய் மாறி விடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தவள், கூட படிக்கும் இன்னொரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்ததும், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டாள். அவளால் ஒரு ஆணை மணந்து குடும்பம் நடத்த முடியாது என்பது பார்க்கும் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடலாம்.
சிறு வயதில் ஆண் பிள்ளைகள், பெண் போல் நடந்துக் கொண்டால் யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அதே ஒரு பெண் குழந்தை ஆணைப் போல நடந்துக்கொண்டால், பெற்றவர்களுக்கு பெருமை பிடிப்படாது.
அடுத்து ஒரு நாள், சயின்ஸ் லேப்பில் டெஸ்ட் டூயூப்கள் காணவில்லை என்று லாப் அசிஸ்டெண்ட் ஆயா வந்து கூப்பாடுப் போட ஆரம்பித்தாள். கடைசியில் அது யார் எடுத்தார்கள் என்று கண்டும் பிடிக்கப்பட்டது. காரணம் ..... ஆயா கத்தியது, அப்பொழுது புரியவில்லை. பிறகு அவைகளை " வேகமாய் ஒருவருக்கு ஒருவர் செலுத்திக் கொள்வார்கள்" என்று சொல்லப்பட்டது. இந்த பெண்கள், லெஸ்பியனா? எனக்கு தெரியவில்லை. "ப்யர்" என்று ஒரு படம் வந்ததே அதைப் போலதானே இதுவும். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டார்கள். இன்றைய நாட்களில், ஆணுடன் பழகுவதால் ஏற்படும் பின் விளைவுகள் இல்லை என்பதால், மாணவிகளில் இத்தகைய செயல் பாடுகள் அதிகரித்து வருகின்றன என்று ஆசிரியை ஒருவர் கூறினார்.
இயற்கையின் குளறுபடியாய் ஆணின் உடல், பெண் மனது அல்லது பெண்ணின் உடலில் ஆண் மனமாய் இருப்பதால், அவர்கள் செய்வது தவறில்லை. தினத்தந்தி, ஜூவி போன்ற பத்திரிக்கையில் இவர்களைப் பற்றிய கட்டுரைகள் வரும். ஆனால் அங்கும் ஒருவர் ஆணாகவும், மற்றொருவர் பெண்ணாகவும்தான் காட்சியளிப்பார். ஓரே குறை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லுவார்கள்.
ஆனால் உடல் திமிர் பிடித்து ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூடி வாழ்வது எவ்வகையில் சரி? பத்திரிக்கைகளும், திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் இப்படியும் இருக்கலாம் என்று தெரியாதவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கின்றன. இவை சமூக சீரழிவு என்று குற்றம் சாட்டுகிறேன். அந்நேர அரிப்புக்கு ஒருவரை ஒருவர் உபயோகப்படுத்திக் கொண்டு விட்டு, நாளை ஊர் முன்னால் சாதாரணமாக திருமணமும் செய்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளும் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்க்கை கொஞ்சம் சலித்ததும், ஒரு சேஞ்சுக்கு பழைய அசிங்கத்தைத் தொடர்ந்து, தன் துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.
ஆனால் படித்தவர்கள், சமூகத்தில் அறிவாளிகள் என்று புகழப்படுபவர்கள் இத்தகைய சீரழிகளை தவறில்லை என்று சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது. சரி என்று சொல்பவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி செய்தால் தவறு என்று எடுத்து சொல்வார்களா அல்லது அப்படி வாழ்வது ரொம்ப நல்லது என்று ஊர் அறிய ஊக்குவிப்பார்களா?
இங்கு நான் ஆணாய் மாறிய பெண்ணையோ அல்லது பெண்ணாய் மாறிய ஆணையோ சொல்லவில்லை என்று மீண்டும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.
ராமச்சந்திரன் உஷா
|
|
|
| உலகம் சுற்றும் நாடுகள் |
|
Posted by: Malalai - 02-26-2005, 11:05 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
இன்றைய உலகம் பல்வேறு நாடுகளாக பிhpந்து இருக்கின்றன. ஆனால் முன்னர் எப்படி இருந்தது என பார்போமா?
25 கோடி வருடங்களுக்கு முன்
அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து பாங்கியா எனப்படும் ஒருங்கிணைந்த ஒரே கண்டமாக இருந்தது. அப்போது இந்தியா ஆசியாவுடன் ஒட்டி இல்லை. தெந்துருவத்;தை ஒட்டி அண்டார்டிகாவோடு இணைந் திருந்தது.
22 கோடி வருடங்களுக்கு முன்
ஆசியா, ஐரோப்பா, வட அமொpக்கா ஆகிய கண்டங்கள் ஒன்று சேர்ந்து லாரேசியா என்ற பெருங்கண்டமாகவும், இந்தியா, அண் டார்டிகா, ஆஸ்திரேலியா, ஆப்பிhpக்கா, தென் அமொpக்கா ஆகிய கண்டங்கள் ஒன்று சேர்ந்து கோண்டுவானா என்ற பெருங்கண்ட மாகவும் பிhpந்திருந்தன.
20 கோடி வருடங்களுக்கு முன்
ஆசிய ஐரோப்ப கண்டங்களிடமிருந்து வட அமொpக்காவும், ஆப்பிhpக்காவிடமிருந்து தென்னமொpக்காவும் பிளவுபட்டு பிhpய ஆரம்பித்தன. இந்தியாவும், கொஞ்சம் கொஞ் சமாக வடக்கு பக்கம் நகர ஆரம்பித்தது.
1 கோடி வருடங்களுக்கு முன்
இந்தியா ஆசிய கண்டத்துடன் மோதிய தில் தற்போதைய உலகின் மிகப்பொpய மலைத்தொடரான இமயமலை தோன்றியது.
இதை எப்படி நம்புவது, என்ன ஆதாரம்?
கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றhக இருந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளன. தென் அமொpக்க வரை படத்தையும், ஆப்பிhpக்க வரைபடத்தையும் தனித் தனியாக வெட்டி எடுத்து அருகருகே வைத்து பாருங்கள். இரு கண்டங் களின் வரைபடமும் பொருந்தி வருவதை பாருங்கள். தென்னமொpக்காவின் கிழக்கு பகுதியிலும் ஆப்பிhpக்கா வின் மேற்கு பகுதியிலும் இருக்கும் மண்ணையும் பாசில் படிமங்களையும், அங்கு வாழும் மிருகங்களை யும் ஆராய்ந்ததில் அவை அனைத்தும் ஒத்துப்போய் இருப்பதை அறிய முடியும். இமயமலைகளில் கடலில் வாழ்ந்த உயிhpனங்களின் பாசில் படிமங்களும் எலும்புகளும் கண்டெடுக்கப் பட்டதால் ஓங்கி உயர்ந்த இமயமலை இருக்கும் இடம் ஒரு காலத்தில் கடலுக்குள் இருந்தது புலப்படும்.
இந்தியாவுக்கு தென்புறம் குமாpக்கண்டம் என்ற மாபெரும் கண்டம் இருந்து அது கடலில் மூழ்கியதாக கூறுகிறhர்களே, அது உண்மையா?
இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிhpக்கா, தென்னமொpக்கா, அண்டார்டிகா ஆகியவை ஒன்றhக சேர்ந்திருந்த கோண்டுவானா கண்டமே குமாpக்கண்டமாக இருந்திருக்கக் கூடும். 30 கோடி வருடங்களுக்கு முன் கோண்டுவானா பெருங்கண்டத்தின் பல பகுதிகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்த தாக பல ஆதாரங்கள் உள்ளன. கோண்டு வானாவின் பல பகுதிகள் அன்றைய காலத்தில் தென் துருவத்தினருகே இருந்ததே இதற்கு காரணம்.
வருங்காலத்தில் என்ன ஆகும்?
இன்னும் 5 கோடி ஆண்டுகளுக்கு பின், வட அமொpக்காவும், தென்னமொpக்காவும் தனியாக பிhpந்துவிடும், ஆஸ்திரேலியா மேலும் வடக்கே நகர்ந்து தெற்காசியாவின் அருகே வந்து நிற்கும், ஆப்பிhpக்க கண்டம் வளைகுடா நாடுகளிடமிருந்து பிhpந்து மேற்கு புறமாக திரும்பி ஐரோப்பாவுடன் மோதி இணையும், இதனால் ஐரோப்பாவில் புதிய மலைத்தொடர்கள் ஏற்படும். தற்போதைய கிhPன்லாந்து தீவு வட அமொpக்காவுடன் சேர்ந்துவிடும். இந்தியாவை பொறுத்தவரை ஆசியாவுடன் மோதியதால் ஏற்பட்ட இமய மலையின் உயரம் உயர்ந்து கொண்டே செல்லும், தட்டுகளிடையேயான அழுத்தம் கூடிக்கொண்டே வரும். பின்னர் அழுத்தம் தாங்கமுடியாமல் பெரும் கம்பமும், எhpமலைகளும் இமயமலையில் ஏற்படும், இந்த களேபரத்தில் இந்தியா ஆசியாவிடமிருந்து மீண்டும் பிhpயக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.
பாலாஜி
நன்றி: தினகரன்
|
|
|
|